திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Monday, August 27, 2007

என் கவிதைகள்

கவிதைத் தொகுப்பு



1. " பொதுக் கவி "
காலச்சக்கரம் சுழலும் வகையை
கண்டு பிடிக்க முடியுமா?
அதன் கோலம் வரையும்
கோடுகளைத்தான் அறிய நம்மால் முடியுமா
ஞாலச் சக்கரம் சுழலும் வகையை
கண்டு பிடிக்க முடியுமா?
வட்டச் சக்கரம் -இறைவன் விட்ட சக்கரம்
சக்கரத்தை சுழற்றிவிட முடியுமா
இறைவனையே கழற்றிவிட முடியுமா?
ஆரம்ப புள்ளி அறிந்துவிட்டால் போதுமே
முடிவுப் புள்ளி தெறிந்து போகுமே

புள்ளிகளை அறியத்தான் முடியுமா
அதன் பூதாகார வடிவம்தான் தெரியுமா
ஆன்ம யோகச்சக்கரம்
சுழலவைக்காமல் அன்றிஇயலுமா
இவையெல்லாம் நாம் உணர
முடியுமா?













. புரட்சி

அசை, புரளு, கவிழாதே, நிமிரு, இயங்கு,
இயக்கம் கொள், பேரியக்கம் கொள்,
பெரு மலை பிளக்கும், சிறு உளி நீ,
முடங்காதே, முயற்சி செய், செயல்படு,
துள்ளு, துடி, துயில்நீக்கு ,விழி, எழு,
போரிடு , தலையை நிமிர்த்து,
புறப்படு ,சாதிக்க வேண்டியது நிறைய
இருக்கு ,கருவரை உன் கல்லரையல்ல,
முழங்கிப் புறப்படு , தடைகளை தகர்த்து
இயக்கம் கொள், அப்போதுதான்
நீ கருவரையிலிருந்தே வெளிவர முடியும்.!


9. நாயகன்

மணக்கும் சந்தனம்,மயக்கும் பூவாசம்,
சொந்தம் எல்லாம் சந்தோஷம்,ஆசீர்வாதம்
குழந்தைகளின் குதூகலம்,குளிர் பானம்,
நண்பர்களின் கும்மாளம் நாதஸ்வரம்
மங்கள வாத்யம், மலர்கள் அலங்கரித்த
மணமேடை,வாழைமரம், வாண்டுகள் அட்டகாசம்,
ஜாதகத்தில் அதிசயமாய் பத்துப் பொருத்தம்
மந்திரகோஷம் மனதெங்கும் உல்லாசம்
அள்ளித் தெளித்த,அட்ஷதையும்,
மலர் மாரியும்,
அத்தனை நடுவிலே நாயகனாய் நானிருக்க
அவள் பார்வை....... அடுத்தவன் மேல் ???




10. கனவு

கவிதைகள் படைக்கிறேன் ப்ரசுரிக்க யாருமில்லை
கண்டுபிடிப்புகள் கழ்த்துகிறேன் அங்கீகரிக்க நாதி இல்லை
ஓவியங்கள் எழுதுகிறேன் வாங்க ஆட்களில்லை
சிற்பம் வடிக்கிறேன் கர்பக் க்ரஹம் கிடைக்கவில்லை

நடிப்பு நாட்டியம் பாட்டு தெரியும்
அரங்கேற்ற யாருமில்லை
உதவி செய்கிறேன் நன்றி சொல்ல யாருமில்லை
கர்பமாயிருக்கிறேன் கழுத்திலே தாலியில்லை
காலையில் விழித்துப் பார்த்தேன்
எல்லாம் எதிர்மறையாய்.......
யாரோ பெண் பார்க்க வருகிரார்களாம்

13. சந்தேகம்

குயிலின் கூவலில் ஒரு சோகம் கிளியின் அழைப்பில்
ஒரு மருகல்
புறாவின் குரலில் ஒரு குமுறல் ,மைனாவின் குரலில் ஒரு பயம்
மயிலின் அகவலில் ஒரு துக்கம், ஆந்தையின் அலறலில்
ஒரு கடூரம்
கழுகின் குரலில் ஒரு கொடூரம் ,கோழியின் கூவலில்
ஒரு எதிர்பார்ப்பு
பருந்தின் குரலில் ஒரு பரிதவிப்பு
ஆனால் இந்த சிட்டுக் குருவியின்
கிசுகிசுப்பில் மட்டும் !!!!
ஆனந்தம்,குதூகலம்,!!!!!!
இப்படிஎல்லாம் எனக்கு மட்டும்தான்
தோன்றுகிறதா !! ? அல்லது
உங்களுக்குமா!!!!!!!!!! ?






14. சிவப்பு

ஹோமாக்னி வளர்க்க வேண்டியவர்கள்
காமாக்னி வளர்க்கிறார்கள்
பால்ய ஸ்னேகிதர்கள்
பாலியல் ஸ்னேகிதர்களாகின்றனர்
வித்தைகள் விபசாரம் செய்கிறது
குழந்தைகள் குரூரமாய் விட்டன
அழகு நிலயங்கள் ஆபத்தாகிவிட்டன

மரம் செடி கொடி மிருகங்கள் இயல்பு நிலை
கெடாமல்
மனிதம் மட்டும் ஏன் இப்படி சிவப்பாய் ?


11. த்ருப்தி

பிறந்து மூன்று஖ மாதம் ஆகிறது
முகம் பார்த்து சிரிக்கிறேனாம் நான்
பல குரல் காதிலே கேட்குது
நான் மாமா டா என்னை பார்
நான் அத்தை டா என்னை பார்
நான் சித்தி டா என்னை பார்
நான் பெரியப்பாடா என்னை பார்
அடாடா யாரை திருப்தி படுத்த
இவர்களீடம் எப்படி காலம் தள்ளூவது
கண்ணை மூடிக்கொண்டேன்.









15. சுமை

மணப்பெண் கோலத்தில் என் மகள்
என் மடியில்
மாப்பிள்ளை மஹா விஷ்ணுவின் அம்சமாம்
திருமாங்கல்ய தாரணம் செய்து
கன்னிகா தானம் செய்ய வேண்டும்

அப்பப்பா என் மகள் இவ்வளவு கனமா?

மாங்கல்ய தாரணம் முடிந்தது மங்கள
வாத்யம் முழங்க என் மகள்
மஹாலக்ஷ்மி ஆனாள்
இப் போது என் மகள் கனமாக தெரியவில்லை

16. புயல்

வெற்றிடம் நோக்கி தான் எல்லா காற்றும்
போகின்றன அதுதான் புயல்

நம்மை வெற்றிடமாக ஆக்குவோம்
எல்லோரும் நம்மை நோக்கி
வருவர்
நாம் நம்மை உணர்வோம்
பிறர் தானாகவே நம்மை
உணர்வார்கள்



17. ஞ்நானோதயம்


ஈக்களோடு ஈக்களாய் குப்பை தொட்டியில் வாசம்
ஒரு திடீர் ஞ்நானோதயம்
தேனீயாய் மாரி பூக்களோடு வாசம்
தமிழ்த் தேனீயய் மாரி தமிழ்ப் பூக்களோடு வாசம்
தமிழ்தான் என் ஸ்வாசம்




18. பஞ்ச பூதம்


நகர்ந்து நகர்ந்து நழுவிப் போகும்
மேகங்கள் தான் நாமெல்லாரும்
கூடியவரை உரசாமல் நகர்ந்து செல்வோம்,
இடிக்காமல் நழுவிச் செல்வோம்

உரசினாலும் இடித்தாலும் மழைதான்
கண்ணீர் மழை......................
படர்ந்து பரவி தவழ்ந்து செல்லும்
தென்றல் காற்று தான் நாமெல்லாரும்
கூடியவரை சீறாமல் தவழ்ந்து செல்வோம்
மீறாமல் அமைதி காப்போம்
சீறினாலும் மீறினாலும் புயல்தான்
துயரப் புயல்...................


19. சூரியன்

சூரியனை சிறைப்பிடிக்க முடியுமா?
அதைச் சுற்றிவர கூட நம்மால் முடியுமா?
சந்திரனின் ஒளி மறைக்க முடியுமா?
அதை ஈடுசெய்ய நம்மால் முடியுமா?
சூரியனும் சந்திரனும் மோதிக் கொள்ளலாமா?
அவை மோதிக் கொண்டால் நட்ஷத்திரம் ஒளிருமா?
அவை சேர்ந்துவிட்டால் நட்ஷத்திரம் பிழைக்குமா?










20. விடுமுறை


பள்ளியில் படித்த போதும்,
பணியில் இருந்த போதும்,
விடுமுறை எனும் வார்த்தை
செய்தது எத்தனையோ மாயம்

அதிகமாகனது விடுமுறை ஆசை,
ஆசை முற்றின நிலையில்
படிப்பும்,பணியும் போதும்,போதுமென்று
விருப்ப ஓய்வு கொண்டேன்
அதிகமானது விடுமுறை
ஆசையை விடும் முறை-
ஆசையும் விடுமுறையும்
போதும் போதும்!!!!!! விடுமுறை !
இப்போது தண்டனையாய்!!!!!

21. ஏன்..?

சமாதானப் புறாக்களூக்கு இடையே கூட
சண்டை உண்டு
பருந்துகளூக்கு இடையே கூட பாசம் உண்டு
கழுகுகளூக்கு இடையே கூட நேசம் உண்டு
புலிகளூக்கு இடையே கூட கருணை உண்டு
பாம்புகளூக்கு இடையே கூட இணக்கம் உண்டு
நரிகளூக்கு இடையே கூட ஞ்யாயம் உண்டு
நாய்களூக்கு இடையே கூட இரக்கம் உண்டு
இந்த மனிதர்களூக்கு இடையே மட்டும் ஏன்....???????

. நீதி

போலீஸ்காரர்களுக்கு அரசாங்கம் சம்பளம்
கொடுக்கிறது, அதனால் அரசாங்கம் முதலாளி
ஆனால் நாங்கள் தான் வேலை கொடுக்கிறோம்
அதனால் நாங்கள்தான் அவர்களுக்கு அதிகாரிகள்"
இப்படிக்கு குற்றவாளிகள்!!!!!!

அசை
துள்ளிக் குதித்து ஓடுவேனாம் நான்
குழந்தையாய் இருந்தபோது
வாலிபப் பருவத்தில் பார்த்தவர்
மேலெல்லாம் பாய்வேனாம்
இப்போது இயலாமல் உட்கார்ந்திருக்கிறேன்
எண்ணங்களையும் உணவையும்
அசை போட்டபடி
எல்லாரும் மாடு தானோ ?

தளை
தத்தித் தத்தித் தவழும் போது
அன்னையின் ஜாக்கிறதை உணர்வு
துள்ளிக் குதித்து ஓடும் வயதில்
பயம் என்னும் உணர்வு
வாழ்க்கையில் உயர நினைக்கும் போது
நேர்மை என்னும் உணர்வு
சுயநலமாய் வாழ்ந்த்துவிட்டுப்
போய்விடலாம் என்று முடிவுக்கு
வந்த போது அடுத்தவர்
வாழ்க்கை ஒரு பாடமாய்
என்னதான் செய்வது எல்லாமே
தாமதமாய் வந்த விழிப்புணர்வுகள்
எல்லாமே ஒரு தளை தான்

22. பேச்சுத் திறமை

எதைப் பற்றி வேண்டுமானாலும்
பேசும் திறமை எனக்குண்டு
பேச அழையுங்களேன்
கடைப் பிடிக்க என்னால் முடியாது
அழைக்காதீர்கள்












23. பட்டாம்பூச்சிகள்


பட்டாம் பூச்சி கடித்தது-அதன் பல் பட்ட
இடம் வலித்தது
பூவால் அடித்தால் வலிக்குமா?
புண்ணாகி உடல் துடிக்குமா?
மேகக் கூட்டம் இடிக்குமா?
என் தேகம் எங்கும் வலிக்குமா?
சிறு பறவை ஒன்று பறந்ததால்
சில மலைகள் உடைந்து தெறிக்குமா?
சின்னச் சின்ன விஷயம் தான்
இந்த உலகை ஆட்டும் விஷயம்தான்
பட்டாம் பூச்சி கடிக்கையில்
நாம் பூவாய் இருந்தால் வலிக்குமே!!!






24. காதல்


அவளுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ
என நானும்
எனக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ
என்று அவளும்

பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதிப்பதாக
எண்ணி
உண்மையாக காதலிப்பதாக எண்ணி
சொல்லாமலே இருந்தோம்
கடைசீவரை
அங்கு மனித நேயம் பிழைத்தது

ஆமாம் அவள் கணவனிடம்
அவளும்
என் மனைவியிடம் நானும்!!!!


24. பிறந்த நாள்

தினம், தினம், தினத்துக்கு
பிறந்த நாள்!!
வாரா வாரம் வாரத்துக்குப்
பிறந்த நாள்!!
மாதம் தவறாமல் ஒருமுறை
மாதத்துக்கு பிறந்த நாள்!!
வருடத்துக்கு கூட வருடா வருடம்
தமிழ்ப் புத்தாண்டு,ஆங்கிலப் புத்தாண்டு
என்று இரு முறை
பிறந்த நாள்!!!
இது என்ன ஓரவஞ்சனை?
எனக்கு மட்டும் , நான்கு வருடத்துக்கு,
ஒரு முறை தான், பிறந்த நாள்
நான் பிறந்தது லீப் வருடமாம்!!!!!


25. குப்பைத்தொட்டி

கதை, கவிதை,
எச்சில்கள், குப்பைகள்கழிவுகள்
விவாகரத்து கடிதம்
கல்யாணப் பத்திரிகை
வேர்க்கடலை மடித்த காகிதம்
வேறு சில வேண்டாத பொருட்களும்
எல்லாம் விழுகிறது
சலனமே இல்லாமல் ஜடமாய் நான்!!!!



26. மர்மம்

வெகு நாட்களாக பேசிக் கொண்டிருந்தனர்
அப்படி என்னதான் பேசுவார்களோ?
பல முறை கேட் டிருக்கிறேன் தோழியிடம்
அவனிடமும் தான் ,
இருவரும் ஒற்றுமையாய் ஒரே பதில்,
ஒன்றுமில்லை சும்மாதான்......
இந்த ஒன்றுமில்லை சும்மாதான்...
இதற்குள்ளே...
எத்தனையொ பொதிந்திருக்கும்
ஆனாலும் இது ஒரு வெளி வராத
காவியம்.....







27. த்யாகம்

அப்பா நீங்கள் த்யாகம் செய்து
என்னை ஆளாக்கினீர்கள்
நான் நன்றி மறக்கவில்லை
நானும் த்யாகம் செய்து என் மகனை
ஆளாக்குவேன்
என் கடமை நான் செய்ய
நீங்கள் உதவுங்கள் தயவு செய்து
இருங்கள் முதியோர் இல்லத்தில்






28 கடவுள்


சிற்றெரும்பின் காலடி சத்தம் கூட
உனக்குக் கேட்குமாம்
என் சித்தத்தின் மனவெளிக் குகையில்
நான் செய்யும் ப்ரார்த்தனைகள்
உன் காதில் விழவில்லையா?
மனதிற்குள்ளே மருகி மருகி
நான் மயங்கும் வேளையிலும்
மருபடி மருபடி உன்னிடமே அடைக்கலம்


நீ தெய்வம், மஹா சக்தி, உலகரட்ஷகன்
உனக்கு நேர்ந்து கொண்ட நேர்த்திக் கடன்
நிறைவேற்றாவிட்டால் தண்டிப்பாயாம்
மனிதனே மன்னித்தால் மஹாத்மாவாகிறான்
நீ தண்டித்தால் கடவுளா?


29. இரசாயனம்-

மனதுக்குள்ளே ஒத்திகை பார்க்கும் நாடகம்
மணம் ஆனபின்னே தினந்தோறும் மோகனம்
கண்ணுக்குள்ளே கண் கலக்கும் சாகசம்-இளம்
பெண்ணுக்குள்ளே எத்தனையெத்தனை காவியம்
உடலுக்குள்ளே உருவாகும் காமரசம்
உயிருக்குள்ளே உயிராகும் இரசாயனம்
கருவுக்குள்ளே திரு வாகும் வாத்சாயனம்
சிறு அணுவுக்குள்ளே பள்ளி கொள்ளும்
அனந்த சயனம் !






30. மரியாதை

அம்மா கண்ணன் வந்துட்டான்
கண்ணா ஷூவை அது எடத்துலெ வையி
ஹெல்மெட்டை பத்திரமா வையி
இந்தா டிபன் சாப்பிடு
நாளைக்கு என்னா வெணுமோ
இப்பவே எடுத்து வெச்சுக்கோ
காத்தாலெ என் உயிர எடுக்காதே
நேரத்தோட படுத்து சீக்கிரமா
எழுந்துக்கோ
என்றாள் கண்ணனின் மனைவி
எல்லாம் சரி இந்த ஷூவை மட்டும்
அது எடத்துலெ வையீ அப்பிடீன்னான்
கண்ணன்




31. கல்வி

சீக்கிரம் டிரஸ் போட்டுக்கோ நேரமாச்சு
ஸாக்ஸ் போடுநேரமாச்சு ஷூ போடு நேரமாச்சு
டை கட்டிக்கோ நேரமாச்சு
டிபன் சாப்பிடு நேரமாச்சு
ஒருவாட்டி சொல்லும்போதே மனப்பாடம்
பண்ணிக்கோ புரியுதா?
கிளம்பு கிளம்பு நேரமாச்சு
ஷாட் ரெடி இயக்குனர் வந்துட்டார்









32. சிரிப்பெனும் நெருப்பு

ராவணன் ராமணைப் பகைத்தான்
அனுமன் சிரித்தான்
ப்ரகலாதனை ஹிரண்யன் பகைத்தான்
நரசிம்மம் சிரித்தது
சக்தியை மகிஷன் பகைத்தான்
அகிலமே சிரித்தது
பச்மாசுரன் சிவனைப் பகைத்தான்
சக்தி சிரித்தாள்
நரகாசுரன் க்ருஷ்ணனை பகைத்தான்

தேவர்கள் சிரித்தனர்
பாஞ்சாலி சிரித்தாள் பாரதம் முளைத்தது
மனிதர்கள் நியாயத்தை பகைத்தனர்
விதி சிரித்தது




33. தேக்கம்-

பள்ளிகள் வேண்டாம், கோவில்கள் கட்டவேண்டாம்,
பாலங்கள் வேண்டாம்,அணைகள் கட்டவேண்டாம்,
தொழிற்சாலைகள் வேண்டாம்,மருத்துவ மனை வேண்டாம்,
கப்பல்கள் கட்டவேண்டாம் ,விமானம் வேண்டாம்,
அவை கட்டிடங்களைஇடித்து, மூண்றாம்
உலக யுத்தத்துக்குவழி வகுக்கும்,
வானளாவும் கட்டிடங்கள் வேண்டாம்,
அவை பூமியிலே மறையும்,
நிறைய,...... நீதி மன்றங்கள் கட்டுங்கள்,
வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன!...
கூவத்தை சுத்தம் செய்யுங்கள்
கொசுக்களை ஒழியுங்கள்
மக்கள் பிழைத்துக் கொள்வார்கள்


34. ஞானம்

என்னை ஞானியாக்கியவர்கள்
என் அம்மாவும், என் மனைவியும்
இன்னும் இருவரும் புரிந்து
கொள்ளவில்லை- நான் ஞானியென்று
ஆம் ஒவ்வொரு வெற்றி பெற்றவர்
பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்
புரிந்து கொள்ளாமல்

35. சுனாமி

தண்ணி அடிச்சு தண்ணி விலகாது
நல்ல பழமொழி ,
தண்ணி அடிச்சா எல்லாமே விலகிடும்
அதுதான் சுனாமி
தண்ணி அடிக்காதீங்கோ


37. தைரியம்

காவல்காரன் தூங்காமல் காவல் செய்யும்
முதலாளி நான்
அரசாங்கம் தவறும் நேர்மை அவ்வப்போது
சுட்டிக் காட்டும் குடிமகன் நான்
அதிகாரியின் தவறு அதட்டிக் கேட்கும்
தொழிலாளி நான்
பூசாரி தவறும் நியமங்கள்
உணர்த்துகின்ற பக்தன் நான்
ஞானிகளின் வர்ண பேதம்
உணர்த்துகின்ற அடியவன் நான்
மேதைகளின் சருக்கல்கள்
கண்டுபிடிக்கும் பேதை நான்
என்னைத் தட்டிக் கேட்க
மறந்துவிட்ட நான் !!!!
38. கண் தானம்


பிறப்பும் இறப்பும் இயற்கைதான் தடுக்கமுடியுமா
ப்ரபஞ்சத்தில் இயற்கை தனை மாற்றமுடியுமா
பிறந்ததனால் என்ன பயன் நமக்குத் தெரியுமா
இறந்த பின்னும் வாழும் வகை செய்ய முடியுமா


இறந்த பின்னும் வாழுகின்ற சிரஞ்ஜீவிகள்
முத்து முத்தாய் வழிகள் பல உறைத்தார்
செத்தும் கொடுத்தவன் சீதக்காதி,
தானம் கொடுத்தான் தன் தலையையே

தானத்தில் பலவுண்டு பலனடைய
தலையான தானமது கண்தானம்
பஞ்ச பூதம் ப்ரம்மத்தில் இணைவதுதான்
ப்ரபஞ்ச விதி தடுக்க முடியுமா?

சாகா வரம் பெற்றவர்தாம் யாரோ
தம் உறுப்பு தானம் அளிப்பவர்தானோ
சிறந்த தானம் அன்னதானம்,அறிவுதானம்
அதனினினும் சிறந்தது கண் தானம்
சாகா வரம் பெற சிரஞ்சீவியாய் நாம் வாழ
கருணை மனம் கொண்டிடுவோம்
கண்தானம் செய்திடுவோம்

39. காலம்


காலச்சக்கரம் சுழலும் வகையை
கண்டு பிடிக்க முடியுமா?
அதன் கோலம் வரையும்
கோடுகளைத்தான் அறிய நம்மால் முடியுமா
ஞாலச் சக்கரம் சுழலும் வகையை
கண்டு பிடிக்க முடியுமா?
வட்டச் சக்கரம் -இறைவன் விட்ட சக்கரம்
சக்கரத்தை சுழற்றிவிட முடியுமா
இறைவனையே கழற்றிவிட முடியுமா?
ஆரம்ப புள்ளி அறிந்துவிட்டால் போதுமே
முடிவுப் புள்ளி தெறிந்து போகுமே

புள்ளிகளை அறியத்தான் முடியுமா
அதன் பூதாகார வடிவம்தான் தெரியுமா
ஆன்ம யோகச்சக்கரம்
சுழலவைக்காமல் அன்றிஇயலுமா
இவையெல்லாம் நாம் உணர
முடியுமா?
40. குண்டலினி


குண்டலினி யோகம் கற்க -திருவருளும்
குரு அருளும் வேண்டுமென்பர்
அதி தேவதை- வினாயகர்,
அருளும் வேண்டுமென்பார்
யமம்,நியமம்,ஆசனம்,பூரகம்,கும்பகம்,
ரேசகம்,எனும் ப்ராணாயாமம்
,ப்ரயத்யாகாரம்,தாரணை,
த்யானம்,எனும் அஷ்டாங்க யோகமும்-
மந்த்திர, லய, ஷட, ராஜ எனும்
சிவயோகமும் வேண்டுமென்பார்
ஞான யோகம்,கர்மயோகம்,பக்தியோகம்,
எனும் த்ரியோகமும் வேண்டுமென்பார்
தாடாசனம்,திரிகோண ஆசனம்,கருடாசனம்
பச்சிமோத்தாசனம்,பத்மாசனம்,
உத்தானபாதாசனம்,பவனமுக்தாசனம்
சிரசாசனம்,விருட்சாசனம் ,ஸ்வஸ்திகாசனம்
சுகாசனம்,எனும் ,ஆசனங்கள்
அத்தனையும் வேண்டுமென்பர்


அதல,விதல, சதல ,தலாதல,ரசாதல,
மஹாதல,பாதாள,ஏழுலக தொடர்பும்
இடை,பிங்கலை,சுஷும்னை-ஹஸ்தகிஹ்வை,குஹு
காந்தாரி,ஸரஸ்வதி பூசை,சங்கினி,பயஸ்வினி,வாருணி
அலம்பூசை,விச்வோதரை,யஸவினி,வஜ்ரை,இட,பிங்கலை,
நாடிகள் கட்டுப்பட வேண்டுமென்பார்
மூலபந்தம்,ஜலந்தர பந்தம்,,உட்டீயண பந்தம்
மஹா,மஹாபந்தம்,மஹாதேவதை,,யோக
விபரீதகரணி ,கேசரி ,வஜ்ரோலி
ஸக்திசீலன்,யோனி, பந்தங்களும் ,முத்திரைகளும்
கட்டுப் படவேண்டுமென்பர்
அணிமா,மஹிமா,வகிமா,கரிமா,ப்ராப்தி,ப்ராகாம்யம்,
வஸித்துவம், ஈஸத்துவம், எனும்
அஷ்ட மஹா ஸித்திகளும் கிட்டுமென்பார்
கோபம்,காமம்,த்வேஷம்,பற்று விலகுமென்பார்
மூலாதாரம்-ஸ்வாதிஷ்டானம்,மணிபூரகம்
அனாஹதம்,விசுத்தி,ஆக்ஞா
பிர்ம ரந்திரம்- ஸஹஸ்ராரசக்கரம்
நம்மை நாமறியும் நற் குணமும்
,யாகமும்,ப்ராணாயாமமும்,
நேமமும், நிஷ்டையும், தவமும்-அருளும்
உட்ப்ரயாணமும் வேண்டுமென்பர்

இத்தனயும் வேண்டுமென்றால்
உன்னை அறி


41. வேஷதாரிகள்

வேஷம் கலைத்து வாருங்கள்
வெகுளியாகப் பேசலாம்
ரோஷம் கலைத்து வாருங்கள்
வினயமாகப் பேசலாம்
கோபம் தவிர்த்து வாருங்கள்
ஆசையாகப் பேசலாம்
த்ரோகம் தவிர்த்து வாருங்கள்
பாசமாக பேசலாம்
மோகம் தவிர்த்து வாருங்கள்
காதலாகப் பேசலாம்
வன்மம் தவிர்த்து வாருங்கள்
அன்பாகப் பேசலாம்
பொய்மை தவிர்த்து வாருங்கள்
உண்மையாகப் பேசலாம்
சந்தத் தமிழ்க் கவிதைத் தரணியாண்ட
தமிழ்ப் பாட்டி அவ்வை அவள்-கந்தன்
கருணையால் கயிலாயமும் ஆண்டாள்
தமிழ் ஆண்டாள் ,தமிழ் மண்ணாண்டாள்

கருங்காலிக் கட்டைக்கு ,கோணாத கட்டாரி
கதலித்தண்டுக்கு உருகுமாம் என்றுரைத்து
மூவேந்த்தருக்கும் ,ஈரேழுலகுக்கும்
கட்டுப்படாத தமிழ் ஆண்டாள், தமிழ்

மண்ணாண்டாள்,கந்தன் கருணைக்கு
உருகி கயிலாயமும் ஆண்டாள்
வாலிபமே வயோதிகமாய்,த்மிழே மூச்சாய்,
தமிழ்க் கம்பூன்றி இந்த மண்ணூன்றி

தமிழ்க் கரும்பு தரணி ஆண்டது
அருமையாய் ஆத்திச்சூடித் தமிழ் ஆத்தி
தமிழ் மகுடம் சூடி தமிழாண்ட தரணி மாது
கொன்றை வேந்தன் தனை ,இன்றை வேந்தன்

வரை சொல்லி சந்தத் தமிழாண்ட
தமிழ்ப் பாட்டி திருப்பாதம்
பணிந்து தமிழ் வழி நடக்க வந்த
புதுக் கவி ,அல்ல ,அல்ல,
பொதுக்கவி நான்

வார்த்தெடுத்த கவிதைகளில்
வார்த்தைகளை விதைக்க வேண்டும்,
செதுக்கிய சிலைகளெல்லாம்
சிற்பமாக மாற வேண்டும்

எழுதிய எழுத்துக்களெல்லாம்
கவிதையாக மலர வேண்டும்
விற்பன்னர் உள்ள அறையில்
விருதுகள் பெற வேண்டும்

விலாசம் வேண்டும் எனக்கொரு
விலாசம் வேண்டும்

விருதுகளை ருதுவாக்கும் தகுதி
வேண்டும்
யாப்பெடுத்து சீர் அமைத்து ,
அசை தளை தொடை என்னும்
இலக்கணம் சமைத்து,
பா புனைய வந்த கவி அல்ல நான்
மனதின் பாதிப்பு அப்படியே
வெளிச்சொல்ல வார்த்தைகளைக்
கோர்த்து ,கருத்துக்களை அளிக்க வந்த
புதுக் கவி ,புதுக்கவி படைக்க வந்த
புதுக் கவி ,,அல்ல அல்ல
பொதுக் கவி நான்

அன்புடன்
தமிழ்த் தேனீ







2. வேள்வி
உள்ளுக்குள்ளே எழுந்த கேள்வித் தீ,

தீயில் எழுந்த வேள்வித் தீ,என்னை உணர,

என் உள்ளே தொடங்கினேன்-ஒரு உட்ப்ரயாணம்,

அதன் ஆரம்பம் ப்ராணாயாமம்!! உன்னதமான

உணர்வின் உள் சுற்றுலா,உணர்வுப் ப்ரயாணம்,

உணர உணர, உள்ளுக்குள்ளே ப்ரளயம்,பூகம்பம்,

எரி மலை,உணர்வு வெள்ளம்,உடைத்து வெளியேற

இயலாததடுப்புச் சுவர்,உடைத்து சீறீப் படமெடுத்த பாம்பு ,

தொடங்கியது ப்ரயாணம் பரவசமாய்,
உள்ளுக்குள்ளே மோதி மோதி ,சீறீச் சீறீ,படமெடுத்து,

விஷம் கக்கி,அமுதம் கக்கி,மாணிக்கம் கக்கி,

சுருண்டு எழுந்து, அமைதியுற்று , பின் மீண்டும்

சீறீ எழுந்து, அழிந்து, மீண்டும் இணைந்து,

முடிவில் ஒரு ப்ரயோஜனம் ,
மூலாதாரம்-ஸ்வாதிஷ்டானம்-மணிபூரகம்-

அனாஹதம்-விசுத்தி-ஆக்ஞா - பிர்ம ரந்திரம்-

அடைந்து, ஸஹஸ்ராரசக்கரம்-சுற்றி ,

மணிப்ரவாளமாய் மூலாதாரம் எழுந்தும் !!!!!!!!
உள்ளுக்குள்ளே எழுந்த கேள்வித் தீ,

தீயில் எழுந்த வேள்வித் தீ,

என்னைப் புடம் போட்டு எடுத்துப் பார்த்தேன்,

எடுக்க எடுக்க வெறும் சாம்பல்-

திரு நீறா , எரிந்து போன என்னின் மிச்சமா?

என் உயிரின் எச்சமா?எரிதழல் அணைந்தால்

சாம்பல்தான் மிஞ்சுமா?மீண்டும் உயிர்த்து

என்னில் இணையுமா?எரிந்ததும் நானே-

எரித்ததும் நானே- சாம்பலாய் உதிர்ந்ததும்

நானே எனில்,உணர்ந்தது என்ன?

சூனியமா- ஞான சூனியமா?-

மீண்டும் கேள்வித் தீ,வேள்வித் தீயில்

புடம் போட்டு எடுத்த,கேள்வித் தீ"!

உள்ளுக்குள்ளே எழுந்தகேள்வித் தீ, -

தீயில் எழுந்த வேள்வித் தீ,



அன்புடன்

தமிழ்த்தேனீ





3. " அம்மா "



தேவதை போல் அவள் அம்மா
நம் தேவை அறிந்தவள் அம்மா
வாழ்வை நமக்களித்த அம்மா
நம் ஊழ்வினை போக்கிய அம்மா

ஊரும் உறவும் நம் பேர் சொல்லி
வாழ்த்திட நம் பேரை வைத்தவள்-அம்மா
யாவரும் போற்றிட தேவரும் வாழ்த்திட
உயிரை அளித்தவள் அம்மா
எந்தப் பிறப்புக்கும் பெற்றவள் தானே அம்மா
அழுவதை வைத்தே நம் குறை அறிந்தே
நம்மை வளர்த்தவள் அம்மா
எழுவதை விழுவதை ரசித்தவள் இருந்தும்
விழுவதைத் தடுத்து எழுவதில் இன்பம்
கண்ட ஞானி அம்மா
இடைக்கலசம் தனில் தாங்கி
தொப்புள் கொடி வழியே உணவூட்டி
இடி போன்ற வலி தாங்கி
முலைக்கலசப் பால் ஊட்டி
அடைக்கலம் தந்து அன்பாய்
அடைகாத்து மலைக்க வைத்த
ஒரு உன்னதப் படைப்பாளி அம்மா

மாயப்பிறப்பெடுக்கும் நம் பாவ வினை
அறுக்க நேயமாய்க் கறுவிலே சுமந்து
நல்வினை நாம் பெற தூய வேள்வி
நடத்திய அம்மா
இறப்பெனும் தூக்கம் பிறப்பெனும்
விழிப்பு இடையிலே மலர்ந்த மெய் எனும்
உடம்பு- அதில் உள்ளொளி பெருக்கி
உள்ளுக்குள்ளே ஊறும் ஞானம்
அளித்து காத்தவள் அம்மா
கற்பெனும் தரத்தை கண்ணியமாய்க்
காத்து-அப்பனின் விந்தை அற்புத பந்தில்
அடைத்து கருவாக்கி உருவாக்கி
கை கால் முளைக்க வைத்து
கவனமாய்க் காத்து ஐம்புலன் சேர்த்து
ஆன்மாவை உள்ளே வைத்து
அறிவும் ஞானமும் ஆயுளும் அழகும்
நிறைவாய் சேர்த்த அற்புதப் படைப்பாளி
அம்மா.......
அம்மையாய் அப்பனாய் அரவணைத்து
அம்புலி காட்டி அமுதும் ஊட்டி
அப்பனையும் அடயாளம் காட்டிய
அந்த அம்மாவுக்கு நன்றிக் கடனாய்
ஒரு முதியோர் இல்லம்





4. ஜா தீ-


விழாக்களில் மெழுகுவர்த்தி குத்துவிளக்கேற்றுது,

வீதிகளில் ஜாதிகள் வெட்டிக்கொண்டுமடியுது

,மசூதிகளில், சர்வ மதக் குழந்தைகளுக்கும்மந்திரித்து ,

தோஷம் நீக்குகிறார்கள், தேவாலயங்களில் ,

சர்வ மதப்ப்ரார்த்தனைகள் நடக்கின்றன,

கோவில்களில், சர்வச் ஷேம யாகங்கள்நடக்கின்றன,

ஓம் பூர்ப்புவஹ ச்வாஹா:

உலகம்!!!!ஷேமமாய் இருக்க இந்து மதம்

ப்ரார்த்தனை செய்கிறது,
ஆனால், அரசியல்வாத ஜாதீ ஏற்றி

விட்ட,தூண்டிவிட்ட, ஜாதித்தீ கொழுந்துவிட்டு

எறிகிறது, உணருங்கள்- நமக்குள்-பேதமில்லை

......ஜாதித்தீயை எண்ணை விட்டு வளர்த்தீர்கள்,

என்ன விட்டு அணைப்பது?தண்ணீர்? கண்ணீர்?

அமிலம்? எதை விட்டால் அழியும்?
உன்னை உணர்ந்தால், அகம் அழியும்,

அகம் அழிந்தால், உண்மை புரியும்,

உண்மை புரிந்தால், பேதம் அழியும்,பேதம் அழிந்தால்

, ஜாதி வெறி அழியும்,வேதியல் படித்தால் தெரியும்,

வேதம் படித்தாலும் புரியும்,வேதியல் விந்தை, -

வேதம் தான்வேதியலின் தந்தை,வேதம்,

வேதியலின் வர்க மூலம்,ஜாதியை

அழிக்க வேண்டாம்,-மதியுங்கள்,ஜாதி வெறியை வளர்க்கவேண்டாம்,அழியுங்கள், -

ஜாதி பேதம் மறையும்,அவர் அவரை,

அப்பப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்,
எட்டின் வர்கம் அறுபத்தினாலு,

அறுபத்தி நாலின் வர்கமூலம் எட்டு,

எப்படி மாறும் வர்கமும், மூலமும்?

கணித மேதை ராமனுஜம் சொன்னால் தான் புரியும்,
வர்கத்தையும், வர்கமூலத்தையும்,அப்பப்படியே

ஏற்போம்,கலப்படம் செய்ய, இது என்னகடலைப் பருப்பா?

அல்ல,வம்சம், வம்சாவளி, வழித்தோன்றல்,
ஆறின் ஜாதியும் , நாலின் ஜாதியும்,

காதலித்தால்,கடிமணம் புரிந்தால்,

அறுபத்தி நாலாகும்,அதன் வர்கம் ஆறாகுமா?

நாலாகுமா?நிச்சயமாய் எட்டுதான்,
ஆறின் ஜாதியும், எட்டின் ஜாதியும்,-

மனதால்அடிப்படை பகை மறந்து, கலந்து,

இணைந்து,பிணைந்து , மாபெரும் இயக்கம் மலரட்டும்,

எம்மதமும், மும்மதமும், சம்மதமே!!!!!

மதமும் ஜாதியும்..... வம்சாவளி, -

வழித்தோன்றல்களின்முகவரி, -

ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள,

அருவாளால் அரிந்து கொள்ள அல்ல,
ஆயிரம் உண்டிங்கு ஜாதி ,

அது அத்தனையும் எங்கள்,வம்சத்தின் மீதி,

நாட்டைத் துண்டாடும் மதவெறியர்களுக்கு,

இது........ஒரு எச்சரிக்கை சேதி......



5. காமம்-

காமம் களவியல் அல்ல அது ஜீவராஸிகளின்
உளவியல் -உடலியல்
காமம் அது தவறல்ல தேடலின் முதல்படி
காதலின் வட்டி -அன்பின் தேடல் -
ஆசையின் கூடல் பள்ளியறைப் பாடல்
ஏக்கம் கறுவறையிலிருந்து வெளியேற்றப்
பட்டதனால் வந்த ஏக்கம்-மீண்டும்
கருவறையைப் பார்க்கத் தூண்டும்
ஏக்கம் -குடியிருந்த கோயிலைப்
பார்க்க வேண்டுமென்கிர தாகம்
கருவரையின் தேடல்
மருபடி குடிபுக நாம் என்ன கங்காருவா?
காமம் ஆத்மாவின் ஸங்கமம்
ஜீவாத்மா பரமாத்மாவின்
இருக்கைப் பரிமாற்றம்
இது காமம் அல்ல
காதல் !!!!!!!!!!!

6. . தீபாவளி

தீப ஒளி நிறைந்த தீபாவளி,
பாவ இருள் நீக்கும் தீபாவளி,
மாய அரக்கன் தீய நரகாசுரனை
வேயுங் குழல் ஊதும் ஆயன்கண்ணன்
மாய்த்தனால் கொண்டாடும் தீபாவளி

கட்டுக்கட்டாய் பட்டாசு,-பட்டுச் சொக்காய்
பாவாடை, திட்டுத் திட்டாய் உடலெங்கும்
சரிகை நிறைந்த மேலாடை,
பிட்டுப் பிட்டு அருந்திடவே, பற்சுவையோடு
பலகாரம்,-அறுசுவையோடு ஆகாரம்,
அண்டை வீட்டுப் பலகாரமும் அன்பாய்
நமக்கு ச்வீகாரம்,

அனைத்து உறவும் உள்ளதனால்,
அகமும் முகமும் மகிழ்கின்றாய்,
அறவே சுற்றம் இல்லாத,
அனாதைக்கு மகிழ்வேது?
அதனால் தான் சொல்கின்றேன்,
அவர்களுக்கும் விருந்து கொடு,
ஆடைகள், இனிப்பு பட்டாசு அத்தனையும்
அவர்களுக்கும் கொடுத்துவிட்டு

அந்தக் குழந்தை முகத்தினிலே
அவர் சிரிக்கும் சிரிப்பினிலே,
அழகாய் மலரும் மத்தாப்பூ,
அதுதான் தீப ஒளீ தீபாவளீ
ஏழ்மை அரக்கனை நாம் ஒழித்து
மகிழும் நாள்தான் தீபாவளி

அன்பாய் அணைத்து மகிழவிடு,
ஆண்டவனை நீ நெருங்கிவிடு!!!

7.தம்பிப்பாப்பா பொறந்தாச்சு தங்கத் தொட்டிலில்
வெச்சுத் தாலாட்ட,-தங்க வட்டிலில்
எடுத்து சோறு஖ட்ட,
தம்பிப் பயலே அக்கா நானு, அம்மாவுக்கு
முதல் செல்லம்,
இனி செல்லம் எல்லாம் நீதானே, -உன்னைக்
கொஞ்சி மகிழ நான் இருக்கேன்,
அக்கா சொல்றதை கேட்டுக்கணும்,
பட்டு சொக்கா பழங்கள் பலகாரம்,
பொம்மை மற்றும் அலங்காரம்,
எல்லாம் குடுப்பேன் நான் உனக்கு,
அம்மா எல்லாம் குடுத்துருக்கு,
பாடம் பாட்டு, கதைகளையும்,
சொல்லித் தருவேன் நான் உனக்கு,
சொன்னதைக் கேட்டு படிச்சுக்கணும்,
சொல்லும் போதே புடிச்சுக்கணும்,
அட! அப்பா வீட்டுக்கு வந்தாச்சு.
நல்ல சேதி ஒண்ணு தந்தாச்சு.
உனக்கு செல்லம் கொடுத்தது போதும்,போதும்,
நமக்கு தங்கச்சி பாப்பா பொறந்தாச்சு!








8. "கலிகாலம்"

பருவம் மாறிப் போச்சு மச்சான்,
பருவம் மாறிப் போச்சு!
பட்டணத்துக் கோழி, பகலில் கூவுது........
எட்டடுடுக்கு மாடியா, ஏரி குளமெல்லாம் ,
உருவம் மாறிப்போச்சு ,....
_ பருவம்
பத்து வயசுப் பொண்ணு, கள்ளப் பார்வையா ,
எட்டி எட்டி பாக்குது, - எதிர் வீட்டுக் காளைய
எட்டி எட்டி பாக்குது,.......
படிக்கிற வயசுலெ , காதல் காதல்னு-
புத்தி கெட்டு போயி அலையுது
_ பருவம்

படிக்கிற படிப்ப , கூவி விக்கிறான்...
குடிக்கிற தண்ணீயை, காசுக்கு விக்கிறான்....
அடிக்கு மட்டும்தான், மனுஷன் பதுங்குறான்,
மனசாட்சிய எப்பவோ, மண்ணுலெ புதைச்சுட்டான் _ பருவம்

ஆம்பளை யெல்லாம், வீரம் தொலைச்சாச்சு...
பொம்பளை யெல்லாம், மானம் தொலைச்சாச்சு....
மனுஷத்தன்மையே , மறைஞ்சு போச்சுது,
மிருக வெறி தான் அதிகமாச்சுது.... _ பருவம்

அப்பனும் பிள்ளையும், அதுக்கு அலையுறான்,
தப்பா வந்து பொறந்து தொலைச்சுட்டான்,
உப்பக் கூட, இப்போ கவரில் விக்கிறான்,
தப்ப மட்டும்தான், பணம் பண்ணுறான்... _ பருவம்

சாதி ஜனங்க, ஓட்டு போடுது-கவர்மென்ட்டு
புள்ளி வைக்குது , -மையிலெ
புள்ளி வைக்குது,.....-
ஆதி மூலமும், வேடிக்கை பாக்குது,
அதுவும் கூடதான், லஞ்சம் கேட்குது..... _ பருவம்


பனிக் காலத்திலெ , காத்தடிக்குது.....
வரண்ட காத்தடிக்குது...
மழை காலத்துலெ . பூமி காயுது-.
தண்ணயிலாமெ பூமி காயுது..... _ பருவம்

பசுமாடல்லாம் , போஸ்டர் தின்னுது..-
பசும்பாலைக்கூட, இப்பொ- மிஷினு கறக்குது,
வேலிகளெல்லாம் பயிர மேயுது,
புனித தாலிகளெல்லாம் கொடியில் தொங்குது, - பருவம் மாறிப்

ஆப்த நண்பனும் அடுத்துக் கெடுக்குறான்
ப்ராப்தம் இதுதான்னு கதைய அளக்குறான்
பரிகாரம் செய்யவே நம்மைத் தூண்டுறான்
பணம் பண்ணவே வழியத் தேடுறான் - பருவம்

பருவம் மாறவேணும் மச்சான் பருவம் மாறவேணும்
நல்ல பருவத்திலெயே மழையும் பெய்யவேணும்
பச்சை வயலும் விளையவேணும்
பஞ்சம் தீர வேணும் பசுமைப் புரட்ச்சி
மலரவேணும்
பட்டிக்காட்டுக் கோழிகூட கருக்கலில் கூவோணும்
வேலியே பயிர மேய்ஞ்சுட்டு போற
வக்கரிப்பும் தீரவேணும்
அதுக்கு மனசுலெ ஈவு இரக்கம் வேணும்
நியாயம் தர்மம் வேணும்,
நாடு நிச்சயம் நல்லா வளரும்
பழைபடி இப்போ சந்தோஷம் மலரும்
பட்டிக்காட்டுக் கோழியும் கருக்கலில் கூவும் -
பருவம் மாறிப்போகும் மச்சான் பருவம் மாறிப்போகும்







9 . அங்கீகாரம்

அதுக்குதான் ,அதுக்குதான், எல்லாம் அதுக்குதான்,
கண்ணாலே கவ்வுரதும், கையாலே உரசுரதும்,...
எல்லாம் அதுக்குதான்,
கண்டவுடன் கொஞ்சறதும், காணாட்டா வெம்புறதும்
அன்னம்விடும் தூதும்,ஆன் லைனில் ஈ மெயிலும்
செல்போனில் மெஸேஜும் ... எல்லாம் அதுக்குதான்

கடற்கரையும் சினிமாவும் தனித்தனியா ஒதுங்குறதும்
சிணுங்கலும் ஊடல்களும் ஜாதகம் பாக்குறதும்
மந்திரங்கள் ஓதுரதும் .... எல்லாம் அதுக்குதான்,

தாலிக் கொடி பட்டுப்புடவை முதலிரவு பாலு பழம்
ஆடைகள் உடுத்துறதும் யோகிகளூம் அரசர்களும்
அம்மி மிதிக்கிறதும் அருந்ததி பாக்குறதும்
கையோடு கை சேர்த்து ஏழு அடி நடக்கிறதும்
குறை எல்லாம் மழூந்துபுட்டு குளிச்சு குளிச்சு பொரளுறதும்
அழுது பொரண்டு மயக்குறதும்.....
எல்லாம் அதுக்குதான்,


வாக்குறுதி அளிக்கிறதும் வாங்கி வாங்கிபூட்டுறதும்
இலக்கியத்தை பேசுறதும் பத்தினி இலக்கணத்தை
சொல்லுறதும் கற்புக்கு உருவகமும்
வாழ்க்கைக்கு நெறி முறையும்.....
எல்லாம் அதுக்குதான்,












10 . பொறுப்பு-

எத்தனை பொறுப்புகள் எனக்கு?

மூத்த பெண்ணிற்கேற்ற வரன் தேடிட வேணும்
சம்பந்தி கேட்ட சீர் செய்திட வேணும்

பையனுக்கு ஒரு நல்ல வேலை வேணும் -அதற்காக
மேல் படிப்பு படிக்கவைக்கணும்

பத்தினியின் பிறந்த நாள் பரிசு கொடுத்திடவேணும்
அன்பாக மண நாளை கழித்திடவேணும்
அடிக்கடி பட்ஜட்டில் குறையும் பணம் கொடுத்திட
வேணும்
கடைகுட்டியை கல்லூரிக்கு அனுப்பிடவேணும்
அதற்காக அன்பளிப்பு கொடுத்திடவேணும்

மனசோடு உடலும் சேர்ந்து சோர்ந்து போன
நேரம்
அட அழகான பெண்ணொருத்தி வருகிறாள் !!!!!!-
என்னையும் மயக்குது அவள் அழகு
அவள் பருவம் , அவள் வயது,
பொல்லாதது என் மனது
அவள் பின்னால் போனது
எத்தனை பொறுப்புகள் எனக்கு ?











11 . வெகுளி-

வயது பதினாலு கையிருப்பு ஒரு தாவணி
மனதில் எப்போதும் ஒரு குருகுருப்பு
பக்கத்து வீட்டு மாமா ஏண்டி நல்லா
படிக்கறயான்னு முதுகு தடவிக் கேட்கும்போது
உடலில் ஒரு சிலிர்ப்பு-மனதில் ஒரு குறு குறுப்பு
வெகுளிப்பெண்ணாம் நான்

பள்ளிக்கூடம் போகயிலெ பர்வதம்மா மகன்
மருது பார்க்கும் பார்வை திரும்பிப்
பார்க்காமலே தெரியும் எனக்கு
கழுத்துப் பின்புறம் ஏனோ ஒரு சிலிர்ப்பு
மனதிலே ஒரு குறு குறுப்பு
திரும்பிப்பார்க்கச் சொல்லும் மனது
வெகுளியாம் நான்

அக்கா புருஷன் அடிக்கடி வரும்போதெல்லாம்
அதீதப் பாசம் பொழிவார் - நான் அக்காவை
விட அழகாம் சிவப்பாம் -மச்சினி உறவுமுறை
கொடுத்த உரிமை
சினிமா கொட்டகையில் நடுவில் அவர்
இரு பக்கமும் நானும் அக்காவும்
அவர் அக்கா பக்கம் சாயும் போது
கண்டும் காணாதது போல் இருந்தாலும்
மனதில் ஒரு குறு குறுப்பு
வெகுளியாம் நான்

சினிமாக் காதலன் சிங்காரமாய் நடிகையுடன்
ஆடும் நடனம், பின் இருக்கையிலிருந்து
ஏதோ ஒரு உறசல்- காலை எடுடா
பல்லை உடைப்ப்பேன் - மனதுக்குள்
சொல்லிக்கொள்வேன் -அத்தான் கோபம்
உலகப் ப்ரசித்தம்- ஆனலும் மனதுக்குள்
ஒரு குறு குறுப்பு -வெகுளியாம் நான்

அக்காவுக்கு சுகப் ப்ரஸவம் !!!!!!!!!
அக்கா குழந்தயை அள்ளி எடுத்துக்
கொஞ்சி தொட்டிலில் விட்டு விட்டு
ஆஸ்பத்திரியை விட்டுவிட்டுக் கிளம்பி
வீடு வந்து சேர்ந்தோம் நானும் அத்தானும்
அத்தான் அயர்வாய் கட்டிலில் கண்ணயர்ந்தார்
நானும் பாய் விரித்து ஒருக்களித்தேன்
யாரோ என்னைப் பார்க்கிறார்கள்
கண் திறக்காமலே திரும்பாமலே தெரியும்
பார்ப்பது யார் என்று - அக்கா வீட்டில்
இல்லாத ஏக்கம் அத்தானும் ஆண்தானே
வெகுளியாம் நான்

அத்தானும் அழகாய்த்தான் இருக்கிறார்..
சாந்த்தமான அக்காவின் ஆங்காரமான குமூல்
வாடீ என் சக்களத்தி
அவளும் பெண் தானே.......................

அக்கா என் முடியைப் பிடித்து சுவரிலே
மோதினாள்.........ஆஆஆ !!!!!!!!
திடுக்கிட்டு கண் விழித்தேன் !!!!!!!!!!!!
அத்தனையும் கனவா- நல்ல வேளை
நான் த்ரோகி அல்ல
வெகுளிப் பெண் தான்














12. எய்ட்ஸ்-

சீறும் சிறுத்தை நீ- உன்னை சின்ன நூல்
கண்டா சிறைப்படுத்தும்?
சீறும் புயல் நீ -உன்னை சின்னக்கல்லா
வழிமறிக்கும் ?
குமுறும் எரிமலை நீ- உன்னை மேகமா
வாய் அடைக்கும்?
காட்டாற்று வெள்ளம் நீ- உன்னை
கயிற்றுப் பாலமா அணை போடும்?
நினைப்பவன் நீ முடிப்பவன் நீ
வினைப்பயன் மாற்றுமா உன் விதியை
கொந்தளிக்கும் கடல் நீ -உன்னைப்
பாய் மரமா அமிழ்த்தி வைக்கும்?
எரியும் காட்டுத் தீ நீ -உன்னை
சிரிய ஊற்றா அணைத்துவிடும்?
வைரம் நீ உன்னைக் கூர் வாளா
வெட்டிவிடும்?-

விஷம், புகை,மது,மாது எதுவும்
உன்னைச் சாய்க்காது
ஆனால் எயிட்ஸ் மாய்க்கும்









13 . அரசுத்தொட்டில் -

வானத்து நக்ஷத்திரங்களை வாரி எடுத்து
வைரத்தோடு-
விடிவெள்ளியை வடித்து எடுத்து
மூக்குக்குத்தி -
முழுமதியை எடுத்து வந்து ஸூடாமணி
ஸூரியனைத் துணிந்தெடுத்து ராக்கொடி
மேகக் கூட்டங்களை வழித்தெடுத்து
திண்டு மெத்தை -மலர்களை கூட்டி
எடுத்து மலரணை
வெட்ட வெளியில் வளர்ந்த ஸந்தன மரம்
வெட்டி எடுத்து வந்து செய்த கட்டில்
வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு
ஊட்டுகின்ற அன்னை -தங்கத்தொட்டிலில்
வைத்து தாலாட்ட தந்தை
அது சரி -சொற் சிலம்பம் எனக்கு
அத்துப்படி - ஆகாய விமானத்தில்
ஆனந்தமாய்ப் பயணம்- திடீரென்று
கோளாறு ஜனனம்- அந்தரத்தில்
கா கா வென்று கோளறு பதிகம்
கந்த ஸஷ்டி கவஸம் -பந்தாவாய்
பார சூட்டில் பயணம்
கண் விழித்துப் பார்த்தேன் -நான்
கிடந்தது அரசுத் தொட்டிலில்







14 . " மழை"

மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?
மன்னன் கேட்டான்?
மந்திரி சொன்னார்......மன்னா!!
பழைய ஞாபகத்தில் நீர் கேட்கிறீர்!
மன்னர்கள் ராஜ்ஜியம் போய் விட்டது
இப்போது நீர் மந்திரி !!!!!!!!!!!

அநியாயதேவதையாய் நீர் மாரி
மாதமும் மாரி ,வருடமும் மாரி,
மழை இன்றி , நீரின்ரி வறண்டு
மக்கள் வாடுகின்ற-காலமாய் மாறியது

"வானம் பார்த்த நிலம் நீரின்றிப் போனதனால்
ஊனம் அடைந்து வெடித்துக் காய்ந்ததுவே"
"அனியாயம் வளர்ந்தது மனிதநேயம் வரண்டது
"மழை" நியாயம் கேட்கு திங்கே"

வேத விற்பன்னர்கள் மழை வேண்டி யாகம்,
இசை விற்பன்னர்கள் இடுப்பளவு நீரிலே,
நின்று அமிர்தவர்ஷணி ராக முழக்கம்,
அகாயத்திலே ரசாயனப் பொடி தூவல்,

ஆண்டவனிடம் யாசகம், வேண்டுதல் ,
அனைத்து ஆலயங்களிலும்,
பாரபட்ஷம் பாராமல், சர்வ மதப் ப்ரார்த்தனைகள்,
ஆடுகள், கோழிகள் பலிகள்,

யாக குண்டத்தின் வழியாக , தேவர்களுக்கு,
பட்டுப்புடவை,பழம் ,பணியாரம், சந்தனம் ,
அகில், நவரத்தினம் அனைத்தும் ,
அக்னி தேவனின் வழியாக கையூட்டு,




வருண பகவானுக்கு பறிமாற்றம்,
வேண்டுதல் நிறைவேற்றம்
அருகிலேயே பசியோடு கையேந்தும்
பராரிச் சிறுவர்கள்,பஞ்சம். பட்டினி


வாஸ்த்துப்படி எல்லாம் அமைத்தால்
வளமாகுமாம் எல்லாம்
ப்ரபஞ்சத்தின் பெயரை மாற்றி
வாஸ்த்துப்படி அமைப்பை மாற்றி
முயற்சி செய்வோம் மழை வேண்டி

பச்சிளம் பாலகனை மஹா சக்தி பெற
பலி கொடுத்த சாமியார்,
ஈரம் , அது மனதிலும் ,பூமியிலும்
வரண்டது,

வானிலை அறிவுப்பு :இன்றும் நாளையும்
ஈரப்பதம் இல்லாத வரண்ட வானிலயே
இருக்கும் வெப்பம் அதிகரிக்கும்

ஏரிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள்,
குளங்களில் விளையாட்டு மைதானம்,
அணைக்கட்டுகளில் எல்லைச் சண்டை
காவிரி , க்ருஷ்ணா விடம் கையேந்தல்,

லாரிகளில், புகை வண்டிகளில்
தண்ணீர் வினியோகம், சிறுநீரகம், ரத்தம்
இதயம் ,மனித உறுப்புகள் ,போதை மருந்துகள்,
இவற்றுடன் தண்ணீணரும் விற்பனைக்கு
பெருச்சாளிகள் பணம் பண்ண பட்டயம்,

இடுப்புகளிலும் தண்ணீர்க் குடங்கள்,
அடுப்புகளில் சாராயப் பானைகள், ரதயாத்திரை,
மாநாடுகள்,மகாமகம்,தெப்போற்சவம், படகுப் போட்டிகள்,
சிலைகள் அமைக்கப் போராட்டம் ,
நாட்டை சீரழிக்க உண்ணாவிரதம்
கடல் நீர் சுத்திகரிப்பு, நதிநீர் இணைப்பு
இலவச இனாம் ,இத்தனையும் ,
தூண்டில் புழுக்கள் !!!!!
நீரை வீட்டு வெளியே
வீசப்பட்ட மீன்களாய் மக்கள்




மழை நிச்சயம் வேண்டுமென்றால்
மனிதாபிமானம் வளருங்கள்,
மனதிலே ஈரம் பெருகட்டும்
மண்ணிலே தண்ணீர் சுரக்கும்
வானம் பொய்க்காது வளமும் குறையாது
பருவம் தவறாது .,
மாதம் மும்மாரி மழை பொழியும்
வாழ்க விவசாயி!!!! வாழ்க மந்திரி !!!!






















15 . துண்டு-

காலையில் குளிக்கும்போது வாய் தவறிக்
கேட்டேன் துடைத்துக்கொள்ள ஒரு துண்டு
வந்தது வினை
தேதி இருபது மளிகைச் சாமான்கள் காலி
மளிகைக் கடைக்கு பாக்கி கொடுக்கவேணும்

காலைச் சிற்றுண்டியில் விழுந்தது துண்டு
மாலையில் மனைவியைக் காக்காய் பிடிக்க
மல்லிகைப்பூ வாங்கணும் - நோட்டு ,
சில்லரை எதுவும் இல்லை-மாலையில்
வீட்டுக்கு நடைப்பயணம்தான்
பேருந்துப் பயணத்தில் விழுந்தது துண்டு

செய்திகள் வாசிப்பது இளமாரன் - பணம்
பற்றாக்குறை - வரிகள் ஏற்றம் -
எரிவாயு அரிசி அத்தியவசியப் பொருட்கள்
எல்லாம் விலை ஏற்றம் -அன்னியச் செலாவணி
பணவீக்கம்- புட்ஜெட்டிலெ துண்டு

அலுவலக விதிமுறைகளில் அனேக மாற்றம்
சம்பளத்திலே விழுந்தது துண்டு
அதிகப் படி சம்பளம் இனிமேல் கிடையாதாம்
வியாபாரம் மந்தமாம் -போட்டியாளர்
நெருக்கடியாம் -லாபத்தில் பாதிப்பாம்
அதிரடி நடவடிக்கை ஆள் குறைப்பு
அடியேன் தப்பிப் பிழைத்தேன்
விசுவாச ஊழியன் நான் -ஆனாலும்
போனசில் விழுந்தது துண்டு


பத்தினியை கோவிலுக்கு அழைத்தேன்
வாசல்ல செருப்பு வெக்க காசில்லெ
கோயில் ஒரு கேடு-முகவாய்க்கட்டை
அவள் தோளில் இடித்தது
பக்தியில் விழுந்தது துண்டு

கேபிள் டீ வீ பணம் கட்டாததால்
தொடர்பு அறுந்து போனதாம்
கேளிக்கையில் விழுந்தது துண்டு
சலித்துப் போனதென் மனது
சரி இருக்கவே இருக்கிறது இலவச

இல்லறம், அணைத்தேன் மனைவியை
அண்ணாந்து வெறித்துப் பார்த்துவிட்டு
அந்தப்புரம் திரும்பிப் படுத்தாள்
ஏற்கெனெவே மூன்றும் பெண்கள்
அடியேனுக்கு அந்தப்புரத்திலும்
அதிர்ஷ்ட்டமில்லை-

அண்ணாந்து பார்த்தால்
வானத்திலே ஒரு நிலா துண்டு-நாலாம்
பிரையாம் -அதைப் பார்த்தால்
நாய் படாத பாடு படுவாராம்
இது வேறா -இத்தனைக்கும்
காரணம் இந்த அரசியல்வாதிகளின்
தோளிலே இருக்கும் அந்தத் துண்டு ... !!!!











16. கற்பு -

ஆண்:

கன்னி உன்னைக் கண்டவுடன் கவிதைதானே வரும்
கவிதை தானே வரும்
உன் கண்கள் அதைக் கண்டவுடன் மோகம்தானே வரும்
மோகம் தானே வரும்
பத்திரமாய் நீ இரு பணம் சேர்த்து திரும்பி வாரேன்
வரும் வரையில் காத்திரு
அக்கரைக்குப் போனாலும் அக்கறையாய்
திரும்பி வாரேன்
பட்டணம் தான் போனாலும் பவித்திரமாய்த்
திரும்பி வாரேன்
பத்தியமாய் நீ இரூ பத்திரமாய் நான் வாரேன்

பெண்:

கற்போடு நான் இருப்பேன் உனக்காகக்
காத்திருப்பேன்
காலம் கடந்து விட்டால் -இளமை
உதிர்ந்து விட்டால் அப்போதும்
மனதில் இளமையுடன் நிச்சயமாய்
நானிருப்பேன் வயதை மறந்துவிட்டு
மனதில் ஆசையுடன் நீயே வா

கற்பெனும் கவிதை தனை எடை போட
சங்கப் பலகையுடன் காத்திருப்பேன்
சங்கடங்கள் வந்தாலும் சத்தியமாய்த்
தாங்கிக்கொண்டு தான் இரூப்பேன்
நிச்சயமாய் மனமொப்பித் திரும்ப வா
சக்களத்தி இல்லாமல் தனியாகத்
திரும்பி வா!


17. சின்னப் பெண் -

சின்னப் பெண் அவள் வளர்கிறாள்-வண்ணச்
சித்திரம் போல் அவள் மலர்கிறாள்
எண்ணக் குவியலில் அவள் மிதக்கிறாள்-என்
எண்ணத்தைக் கொள்ளை அடிக்கிராள்

அன்னம் போல் அவள் நடக்கிறாள்
பொற்கிண்ணம் போல் அவள் மிளிர்கிறாள்
என்னைத் தேர்ந்து அவள் எடுத்தாள்-என்
கண்ணைப் பொத்தி அவள் காண்கிறாள்

முன்னைப் புண்யம் போல இன்றவள்
என்னில் இணைந்து அவள் சுகிக்கிறாள்
பொன் வண்டு வந்துறங்கும் வண்ணப்
பூக்கள் போல் அவள் மயங்கினாள்

மான் கொண்ட கண்ணைத் தான்
கொண்ட மங்கை தேன் உண்ட
வண்டுக்கு நன்றிப் பரிசாக மகரந்த்தச்
சூல் கொண்டு கருவைச் சுமக்கிறாள்


தாய்மை தானே பெரியது -அதை
தானும் உணற இறைவன் தாயை
முதலில் படைத்து பின் அவள்
கருவில் சிசுவாக தானே வந்தான்


பிள்ளை தாலிக்கு உறவா -வெறும்
தாம்பத்ய வரவா? பெற்றவர்
செய்த பாவம் ! பிள்ளைகள்
தானே பாவம் -ஜன்னலை மூட
இத்தனை பின்னலா -இடையில்
இந்தப் பிள்ளைகள் தான் ஊஞ்சலா?

18. காதல்-

பார்த்த பார்வை கண்ணுக்குள் பாயும்
படம் விரித்து-விரித்து நெஞ்சுக்குள் மோதும்
தேர்ந்த சிற்பியின் கைச்சிலையாய்த் தெரியும்
வேய்ந்த கூரையிலும் ஒளியாய்ப் பரவும்

மனதைப் பிசையும் மனனப் பாடம்
நீரில் தெரியும் நிலவாய் ஒளிரும்
நினைவால் நிறையும் நெஞ்சம் குளிரும்
மலராய் மலரும் மனதும் மகிழும்

அத்தனை அழகும் புறந்தள்ளி -அவளின்
மதிவதனம் விஸ்வ ரூபம் எடுக்கும்
பாலும் படுக்கையும் விஷமாய்த் தெரியும்
நூலிடையாள் அவள் நினைவே வளரும்

மனதைத் திறந்து உள்ளே சென்று
மருபடி மருபடி அவள் மலர் முகம்-தெரியும்
நிலைக்கன்னாடியிலும் அவள்பிம்பம் தோன்றும்
இதுதான் காதலா ?

கடிமணம் கழ்ந்த பின் ஒரு கணப்
பிரிவிலும் மனம் கனமாய்க் கனக்கும்
கனவிலும் நினைவிலும் அவள் முகமே
தெரியும் -கண்டதும் காதல் கொண்டது
மாரி பிரிவிலும் அவளின் நினைவே
நிறையும் - இதுதான் காதல்
இதுதான் காதல்








19. கிராமம்

கண்மாய்க் கரை ஓரம் காத்திருக்கும்
நேரம்-காதலுக்குப் பச்சைக்கொடி காட்டு
வாய்க்கா கரை ஓரம் வயலு கொஞ்சம்
ஊறும் வாழைத் தண்டுக் காலைக்
கொஞ்சம் நீட்டு

மச்சான் வரும் நேரம் மனசு கொஞ்சம்
மாறும் - காதலுக்குப் பச்சைக்கொடி காட்டு
பச்சைக் கொடி காட்ட பலபேருக்குப் போட்டி
பரிசம் போட்ட மாமனுக்கு மட்டும் -தானே பாட்டு

வானம் பார்த்த நிலம் வெய்யிலுக்கு தான் காயும்
மானம் உள்ள பொண்ணு மச்சான் பக்கம் சாயும்
வேற பக்கம் சாயணும்னா மானம் தானபோகும்
அதனாலே முறைப்பொண்ணுக்கு உயிரு -தானே போகும்

உள்ளம் மட்டும் சொந்த மில்லெ உயிரும் தானே
சொந்தம் உடலுமட்டுமில்லே கற்புந்தானேசொந்தம்
பள்ளம் மேடு பார்த்து பக்குவமா வந்தோம்
வழிவழியா வந்த முறை எங்க போகும்















20. தாசன்

கோரஸ்:
தாசன் இவன் பொண்டாட்டி தாஸன்
இவன் பேரு ஸ்ரீனிவாசன்
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்குவான்
அதைக் கேக்காட்டி இவன் தான் மாட்டிக்குவான்

பொண்டாட்டி ஆத்தா பெரியாத்தா-சண்டை
போடாமெ இருந்தா என்னாத்தா?
கண்கண்ட புருஷன் நான் உனக்கு
என்கிட்ட ஏண்டி இந்தப் பிணக்கு?

என்னாத்தை வெச்சான் குறை உனக்கு
வேண்டாண்டி எப்பவும் இந்த முறுக்கு
தவறாகிப்போச்சு என் கணக்கு
உன்னக் கட்டிக்கிட்டு என்ன சுகம் எனக்கு ?


அடக்கமா இருக்க சொன்னேன் உனக்கு - இது
அடங்காமெ போனதாலே வந்த வழக்கு

புரியுது புரியுது புரியுது புரியுது இப்பொ என்னக்கு
அடங்காமெ போனேன் தண்டிச்சுருங்க
அடங்கி நடக்குரேன் மன்னிச்சுடுங்க
வருங்காலம் நமக்கு வளமாகுங்க

அட இப்போத்தான் வந்த நம்ம வழிக்கு
இனி சந்தோஷம் தானே என்றும் நமக்கு









21. அன்புள்ள விரோதி

அவனும் நானும் எப்போதும் எதிர்வாதம்
செய்யும் எதிர் மறை நாயகர்கள்
மறுத்துப் பேசியே மகிழும் அன்புள்ள
விரோதிகள் -எதிர்வாதத்திலே தான்
விவரம் புரியும் அறிவு வளரும்
என்ரெண்ணும் எதிர்மறைக் கல்விமான்கள்
எப்போதும் எதிர்வாதம் இடக்குத் தனம்
ஆனாலும் நான் நினைப்பேன் அவன் சொல்வது
தான்சரியென்று தான் சரியென்று
அவன் நினைப்பான் நான் சொல்வது
தான்சரியென்று தான் சரியென்று
இருவர் மனதுக்கும் தெரியும் இருந்தாலும்
அதற்காகவே வாதம் செய்வோம்
அவனுக்குப் பிடித்தால் எனக்குப்
பிடிக்காது-எனக்குப் பிடித்தால்
அவனுக்குப் பிடிக்காது
அது எப்படியோ எனக்குப் பிடித்த
பெண்ணே அவனுக்கும் பிடித்தது
அங்கே தான்துளிர் விட்டது க்ரோதம்
ஆரம்பித்தது விரோதம்
ஆனலும் இன்று வரை
இருவர் மனதும்
ஏங்கிக்கொண்டிருக்கிறது
அந்த நாளைய தூய நட்புக்காய்
ஏனென்றால் அவன் அன்பான விரோதி
எனக்கு. என் நட்புக்கு அல்ல








22. வித்தியாசம்

அதிரூப சுந்தரிக்கும், அழகில்லாப் பெண்களுக்கும்
அமைப்பெல்லாம் ஒன்றேதான், அளவில்தான்
வேறுபாடு,
வெறுக்கின்றார் , வெறுக்கின்றார் அழகில்லாப்
பெண்களைத்தான், வெறிக்கின்றார், வெறிக்கின்றார்
அதிரூப சுந்தரியை -அமைப்பெல்லாம் ஒன்றேதான்,
அளவில்தான் வேறுபாடு,

கற்றறிந்த புலவர்களூம் , கல்வியில்லா மூடர்களும்
தன் அடக்கம் தான் உணர்ந்தே,
தான் வணங்கி இருக்கின்றார்,
அமைப்பெல்லாம் ஒன்றேதான்
உள் அடக்கம் தான் வேறுபாடு,

முழு நிலவோ, மறை நிலவோ,
அலைகடல்தான் ஆர்ப்பரிக்கும்
அமைப்பெல்லாம் ஒன்றேதான்
உள் அடக்கம் தான் வேறுபாடு,
















23. இயலாமை

கட்டிப் பிடிச்சுத் தூங்க ஒரு கரடி பொம்மை
கேட்டேன் -அப்புறமா வாங்கித் தாரேன்
இப்போ பணம் இல்லை
கூடக்கூட விளையாட ஒரு கொரங்கு பொம்மை
கேட்டேன் -அப்புறமா வாங்கித் தாரேன்
இப்போ பணம் இல்லை
தாவித் தாவி விளையாட ஒரு தவளை பொம்மை
கேட்டேன் -அப்புறமா வாங்கித் தாரேன்
இப்போ பணம் இல்லை
பதுங்கிப் பதுங்கி விளையாடஒரு பூனை பொம்மை
கேட்டேன் -அப்புறமா வாங்கித் தாரேன்
இப்போ பணம் இல்லை
பந்து போட்டு விளையாட ஒரு நாய் பொம்மை
கேட்டேன் -அப்புறமா வாங்கித் தாரேன்
இப்போ பணம் இல்லை
கண்ணா மூச்சி ஆடஒரு கண்ணன் பொம்மை
கேட்டேன் - அப்புறமா வாங்கித் தாரேன்
இப்போ பணம் இல்லை
வயசாகிப் போச்சாம் கடன் வாங்கி அப்பா கல்யாணம்
செய்து வைத்தார்!!!!

நியாயம்
காது கொடுத்துக் கேட்டேன்-இது
பூமித் தாயின் கர்ப்பம்- உள்ளே உள்ளக்குமுறல்
குழந்தை உதைக்கும் உதைதான் ,இங்கே வெளியில் கேட்கும் பூகம்ப
முழக்கம்,


இது உலகமெங்கும் எட்டும்
இயற்கைத் தாயின் சீற்றம்
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும்
நியாயம் நிகழவில்லை எங்கும்

இது பொங்கி எழுந்து வந்த
பூமித்தாயின் கோபம்
ஒரு பகுதி எங்கும் வெள்ளம்
மறு பகுதி எங்கும் வறட்சி

மலை பொங்கி எழுந்து உருகி
தீ வெள்ளமாகப் பாயும்
பூமி பாளமாக வெடித்துச் சிதறி
இயற்க்கை உள்ளே சென்று மறையும்

தீ உயர்ந்து எழுந்து வளர்ந்து
மழலை யாவும் தீய்க்கும்
புயல் சுழன்று சுழன்று அடித்து
உலகமெங்கும் மாய்க்கும்

ப்ரளயம் மொத்தமாக வந்து
ப்ரபஞ்சம் சுத்தமாக அழியும்
பூமித்தாயின் கர்ப்பம் மீண்டும்
தரித்து செழித்து வளர்ந்து
இயற்க்கை யாவும் மலரும்
இது மீண்டும் மீண்டும் நடக்கும்

வல்லரசு நாடுகளின் அதிபர்கள்
உலக நாடுகளின் உதவி கேட்டு
உருகிக் கொண்டிருக்கிறார்கள்
இயற்கையின் சீற்றம்
காது கொடுத்து கேட்போம்
இந்த இயற்கை தாயின் வருத்தம்
முடிந்தால் ந்யாயமாக வாழ்ந்து
அவள் சீற்றம் கொஞ்சம் தணித்து
இங்கே ந்யாய தேவதைகள்
வளர்ப்போம்














25. பிரியாதவரம்

பாசம் புரியவில்லை நேசம்புரியவில்லை
பந்தம்புரியவில்லை,சொந்தம்புரியவில்லை
பிரிதலின் சோகம்புரியவில்லை
உறவின் த்யாகம்புரியவில்லை

காதல் புரிந்தனர் ஊடல் புரிந்தனர்
கடிமணம் புரிந்தனர், சரசம்புரிந்தனர்
கலவிபுரிந்தனர் வாதம் புரிந்தனர்
விவாதம் புரிந்தனர், சண்டை புரிந்தனர்

சமரசம் புரிந்தனர், சாகசம்புரிந்தனர்
சேர்க்கைபுரிந்தனர் கலகம்புரிந்தனர்

த்ரோகம் புரிந்தனர்

எறும்புகள் வாய் தவறி
கடித்தால்சாகவேண்டும் வரம் கேட்டதுபோல்
கும்பகர்ணன் வாய்தவறி நித்யத்துவம்
என்பதற்கு நித்ரத்துவம் என்று கேட்டதுபோல்
பிரியாத வரம் கேட்கப்போய்
புரியாத வரம் கேட்டனரோ?
வித்து சரியில்லை அதனால்
விவாக ரத்து புரிந்தனரோ?












26. பத்தியம்

காதல் என்பது காவியமா?
கண்கள் வரைந்த ஓவியமா?
காதல் என்பது முகவுரையா?
காமம்தான் அதன் முடிவுரையா?

காமம்இல்லா காதல் என்பது சாத்தியமா?
காதல்இல்லா காமம் என்பது யோக்கியமா?
காதல்கூடிய காமம் என்பது தாம்பத்யமா?
காமம் இல்லாக் காதல் என்பது பத்தியமா?
இலக்கியமா?

காதல் என்பது கற்பனையானால்
காமம் என்பது விற்பனையா?
இதனுள் சென்று தேடினால்
விடை வருமா? விடைகிடைத்துவிட்டால்
ஜென்மம் கடைதேறுமா?
காமம் இல்லா காதல் என்பது
ப்ரும்மம் என்றால்

உயிர்கள்
இங்கு முளைத்தெழுமா?














27. உயர்ந்த நாடு

நம் நாடு உயர்ந்த நாடு
விஷச் சாராயம் அருந்தி சாவு எண்ணிக்கை
உயர்ந்த நாடு
வாகனங்கள் நேருக்கு நேர் மோதி
சாவு எண்ணிக்கை உயர்ந்த நாடு
சத்துணவுக் கூடத்தில் சாப்பாட்டில்
விஷம் சாவு எண்ணிக்கை உயர்ந்த நாடு
தீவிரவாதிகளும் போலீசாரும் மோதி
சாவு எண்ணிக்கை உயர்ந்த நாடு
மருந்துப் பொருட்களில் கலப்படம்
சாவு எண்ணிக்கை உயர்ந்த நாடு
கள்ள வோட்டு போடும் அரசியல்வாதிகள்
உயர்ந்த நாடு
கடலில் மீனவர்கள் இலங்கை சுட்டது
காணாமல் போனவர்கள் எண்ணிக்கை
உயர்ந்த நாடு
ஊழல் மலிந்தால் பண வீக்கம்
உயர்ந்த நாடு
நிலநடுக்கம் மக்கள் நடுத்தெருவில்
வெள்ளம் மக்கள் மொட்டை மாடியில்
வரட்சி மக்கள் காலி குடத்துடன்
கோயில்களில் கொலை கொள்ளை
குற்றவாளிக் கூண்டுகளில் மஹான்கள்
எல்லையில் யுத்தம்
தேர்தல் வருகிறதாம் வேட்பாளர்கள்
வாக்கு சேகரிக்க வந்துகொண்டிருக்கிறார்கள்
நம் நாடு உயர்ந்த நாடு.......







28. தாம்பத்யம்

பல விதமான கருத்து வேறுபாடுகள்,
மனக்கசப்புகள், பல சமயத்தில்
சண்டைகள் ,சச்சரவுகள், வாக்குவாதங்கள்,
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாத புலம்பல்கள்,
எதிர் எதிர் அணுகுமுறைகள்

உறவுக்காரர்கள் அனைவருக்கும் பொறாமை
நாங்கள் வெகு அன்னியோன்னியமாம்,
ஆதர்ச தம்பதிகளாம் ,
ஒருவரை ஒருவர் விட்டுக்
கொடுக்க மாட்டோ மாம்
ஆமாம் நாங்கள் விட்டுக்
கொடுப்பதே இல்லை எதற்க்கும்

இன்னும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள
இயலவில்லை
கல்யாணம் ஆகி முப்பது வருடம்
ஆகிவிட்டது
இப்போது எல்லோரும் புத்திசாலிகள்
மூன்று நாட்கள் மூன்று மாதம் பழகியே
இணயத்தில் சாட்டிலும் மெயிலிலும் பேசியே
நன்றாக புரிந்து கொண்டு

ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு
வாழ்க்கை ஒப்பந்தம் ,கல்யாணம் செய்து
கொள்கிறார்கள்,
அனால் ஆறே மாதத்தில் விவாக ரத்து
புரிகிறார்கள் பிரிகிறார்கள்
இது என்ன புரிதல்? பிரிதல்

ஆனால் நாங்கள் இன்னும் புரிந்த்து
கொள்ள முயற்ச்சிக்கிறோம்
எங்களுக்கு அறுபதாம் கல்யாணம்
அனவரும் வாருங்கள்
29. மக்கள்

கலப்படமில்லாத தூய்மையான பொருட்கள்,கறந்த பாலைப் போல

சரியான விலையில் தரமான பொருட்கள்
மக்ககளூக்கு சேவை செய்வதற்காகவே நிருவனங்கள்

தியாக மனப்பான்மையுடன் நாட்டுக்கு
உழைக்கவே அரசியல்வாதிகள்

நாட்டின் வளம் பெருக்க
மக்களின் நலம் காக்க
எப்போதும் தயாராக அரசாங்கம்

தேனடை த் தேன் போல்
சுத்தமானஉணவுப் பொருட்கள்
தயாரிக்க தொழிற்சாலைகள்

இவை அத்தனையும் எங்கள் நாட்டுக்கே சொந்தம்

தொலைக் காட்சிப் பெட்டியின்
விளம்பரப் படங்களில் .... மட்டுமே..

பாவம் நாங்கள் எப்போதும் அதன் முன்னால்












30. காதல்

ஒரு கூரையின் கீழ் இருந்துவாழும்போதுதான்
ஒத்துப்போகிறதா இல்லையாவென்று
உண்மையாய்த் தெரியும்
இணைய தளத்தில் யதேச்சையாய் சந்தித்து
தொடர் சந்திப்பாய் வழியும் போதும்

கடற்கரையில் படகின் மறைவில் மடியில் படுத்து
காதலைப் பகிர்ந்து கொள்ளும் போதும்

இரு சக்கர ஊர்தியில் ஒட்டிக்கொண்டே
ஊரெல்லாம் சுற்றும்போதும்

திரைஅரங்கின் இருட்டிலே திரைப்படம்
பார்த்து நாயக நாயகியாய் மாறும் போதும்

அடுக்கு மாடி உணவகத்தில் அருசுவை உணவு
குளீர்சாதன அறையில் ஒரு நாள் பகிர்தல்

உயிரே நீதானென்று உடன் வரும் வாழ்க்கைத்
துணை கடைசீ வரை நீதானென்றும்
வாய்க்கு வாய் பொய்யாய் சத்தியங்கள்

அத்தனையும் என்னவென்று

ஒரு கூரையின் கீழ் இருந்து நீ நீயாய் அவன் அவனாய்
வாழும்போதுதான் ,
ஒத்துப்போகிறதா இல்லையாவென்று
உண்மையாய்த் தெரியும்






31. அனுகூலம்

சிறு திரியில் எரியும் குத்து விளக்குத்
தீபங்கள் தான் நாமெல்லாரும்
கூடியவரை வேறெங்கும் பற்றாமல்
பதமாய் எரிவோம் சன்னதியில்
பற்றினாலும் படர்ந்தாலும் நெருப்புதான்
அழிவுதான் பேரழிவுதான்........

மீண்டும் மீண்டும் வந்து போகும்
கடலோரஅலை தான் நாமெல்லாரும்
நடுக்கடல்போல் சலனமின்றி அடங்கி
இருக்க முயல்வோம் இணங்கி
பொங்கினாலும் ஆர்ப்பரித்தாலும் சுனாமிதான்
அழிவுதான் பேரழிவுதான்

பஞ்சபூதம் சேர்ந்த இயற்கை அன்னை
அளித்த பரிசுதான், படைப்புதான் நாமெல்லாரும்
வஞ்சனைகள் நீக்கி பாவச் செயல் போக்கி
பரிசுத்தமாய் வாழ்வோம் மனிதநேயம் தேக்கி

இதை மறந்து வாழ்ந்தால் பூகம்பம்தான்
இயல்புப் பொறுமை இழந்து
பொங்கிவரும் மாற்றம்
பூமித்தாயின் சீற்றம்












32. தில்லுமுல்லு ( inaimathi tsc)

எத்தனையோ பித்தலாட்டம் ஏகப்பட்ட தில்லுமுல்லு
ஏமாத்தி திட்டம் போட்டு பதுக்கி பதுக்கியே
சேர்த்து வெச்சோம் பணத்தை வாழ்விலே
அத்தனை பணமிருந்தும் ஆயிரந்தான் உறவிருந்தும்
ஒருத்தன் கூட உதவல தாழ்விலே-
இப்போ ஒத்தன்கூட உதவல தாழ்விலே

மடியிலே கட்டிகிட்டு மானம் பாக்க ஒடிகிட்டு
எங்கு போயி ஒளிஞ்சாலும் விடவில்லே
துரத்தி துரத்தியே பிடிக்கிறான்
பணத்தை குடுக்க சொல்லியே அடிக்கிறான்

நாலு பேருக்கும் உதவி நல்லவழி போயிருந்தா
வந்திருக்குமா இந்த நாரப் பொழைப்பு
அப்போ பட்டுக் கோட்டை சொன்னதெ-
காதுலே வாங்காமே கோட்டை விட்டுடோ ம் காத்துலே
இப்போ சேத்து வெச்ச பணம் கூட நமக்கு -
உதவல நாரிப் போச்சுலேய்
நம்ம பேருலேய்-இந்த ஊரிலே















33. சுருட்டு

சுருட்டு,அகப்பட்டதெல்லாம் சுருட்டு
அடிவயிறுவரை எரியும் சுருட்டு
அதனாலென்ன சுருட்டு
இருப்பவனோ இல்லாதவனோ
பாகுபாடில்லாமெ சுருட்டு
முனையிலெ நெருப்பு வெச்சா
அடிவரை புகையும் சுருட்டு
சுருட்டி சுருட்டியே பழக்கப் பட்டாச்சு
அகப்பட்டதெல்லாம் சுருட்டு
வீட்டைச் சுருட்டு ,நாட்டைச் சுருட்டு
உலகம் சுருட்டு,உள்ளதெல்லாம் சுருட்டு
கேள்வி கேட்க நாதியே இல்லை சுருட்டு
பயப்படாமெ சுருட்டு
கள்ளப் பணமோ நல்ல பணமோ சுருட்டு
நாய் வித்த பணம் குரைக்காது
வாய் விட்டுக் கேட்டுசுருட்டு
நன்றி இல்லாமெ சுருட்டு
கள்ளத்தனமோ நல்லதனமோ சுருட்டு
சினிமா எடுத்து சுருட்டு,நாடகமாடி சுருட்டு
பூடகமாகவே சுருட்டு ,வெளிப்படையாகவே சுருட்டு
உடல் உள்ளவரை சுருட்டு,உயிர் உள்ளவரை சுருட்டு
கடல் உள்ளவரை சுருட்டு, சுனாமியா சுருட்டு
பூகம்பமா சுருட்டு,மழையா சுருட்டு ,வெள்ளமா சுருட்டு சூறாவளியா சுருட்டு ,
மக்களைப் பத்தி கவலைப்படாமெ சுருட்டு
நல்லவனாக சுருட்டு ,வல்லவனாக சுருட்டு
பணம் உள்ளவனாக சுருட்டு
நாடு வேண்டுமா, பதவி வேண்டுமா
பட்டம் வேண்டுமா, பதக்கம் வேண்டுமா
நிலம் வேண்டுமா,நிலவு வேண்டுமா,
உறவு வேண்டுமா,காதல் வேண்டுமா
காமம் வேண்டுமா,எல்லாம் வேண்டுமா
பணம் தானடா பலமே பலம் தானடா பணமே
சுருட்டு, சுருட்டு,சுருட்டு,சுருட்டு,சுருட்டு .........


உலகம்

அடேய் செல்லப் பயலே
இப்பதான் பொறந்தா மாதிரி இருக்கு
அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப் போச்சா
குட்டிப் பையா இன்னிக்கு நீ பொறந்து
ஒரு வருஷம் ஆயிடிச்சு

எதேதோ ம‌ந்திர‌ச‌ப்த‌ங்க‌ள் நாதஸ்வ‌ர‌இனிமை
ஒரே சிரிப்பு ,கும்மாளம் ,கொண்டாட்டம்
எல்லாம் காதில் விழுகிறது


நானும் பதில் சொன்னேன்

அவர்களுக்கு என் மொழி புரியவில்லை



முதல் வருஷ கொண்டாட்டங்களின்
சப்தங்கள் மீண்டும் காதில் ஒலிக்கிறது

ஒரு பிரியமான முத்தத்தில் கண் விழித்தேன்
க‌ண்விழித்து எழுந்தேன் ,
என் ம‌னைவி, என் குழ‌ந்தைக‌ள்
என் பேர‌ப் பிள்ளைக‌ள் அனைவரும்
பிற‌ந்த‌நாள் வாழ்த்துக்க‌ள் சொல்கிறார்க‌ள்
பல கவிதைக் குயில்களும் ,தமிழ்க் குயில்களும்
அன்புடன் வாழ்த்து சொல்கின்றன‌
இன்று காலை அறுபது வயது ஆரம்பம்

உல‌க‌ம் உருண்டைதான்

தமிழ்த் தேனீ


உயர்ந்த நாடு

நம் நாடு உயர்ந்த நாடு
விஷச் சாராயம் அருந்தி
இறப்பு எண்ணிக்கை உயர்ந்த நாடு
வாகனங்கள் நேருக்கு நேர் மோதி
இறப்பு எண்ணிக்கை உயர்ந்த நாடு
ம‌‌ருந்துப் பொருட்களில் க‌ல‌ப்ப‌ட‌ம்
ச‌த்துண‌வுக் கூடத்தில் சாப்பாடில் விஷ‌ம்
இறப்பு எண்ணிக்கை உயர்ந்த நாடு
தீவிர‌வாதிக‌ளும் ,காவ‌ல் துறையும்,அடியாட்க‌ளும்
தாதாக்களும் சொந்த‌லாப‌த்துக்காக‌வெட்டிகொண்டு
ம‌க்க‌ளை ஏமாற்றும் செய்கைக‌ளில் உய‌ர்ந்த‌நாடு
க‌ள்ள‌ஓட்டுக்க‌ள் போட்டாகிலும் ப‌த‌விக்கு வ‌ரும்
அர‌சிய‌ல் வாதிக‌ளின் எண்ணிக்கை உய‌ர்ந்த‌நாடு
க‌ட‌லில் மீன‌வ‌ர்க‌ளை இல‌ங்கை சுழ‌ல் ப‌டை சுட்ட‌து
த‌மிழ‌க‌மீன‌வ‌ர்க‌ளின் இற‌ப்பு எண்ணிக்கை உய‌ர்ந்த‌நாடு
காணாம‌ல் போன‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை உய‌ர்ந்த‌நாடு
ஊழ‌ல் ம‌லிந்த‌தால் ப‌ண‌வீக்க‌ம் உய‌ர்ந்த‌நாடு
கோயில்க‌ளில் கொலை கொள்ளை,
குற்றவாளிக் கூண்டுகளில் மஹான்கள்
பதவிகளில் அரசியல் வாதிகள், தவறான கொள்கைகள்
மக்களின் நலம் மறந்தே போனது
கள்ளப் பணம் குவிப்பில் உயர்ந்த நாடு
குற்றப் பத்திரிகை எண்ணிக்கை உயர்ந்த நாடு
ஊழல் பட்டியலில் 8 வது இடமாம்
அதிலும் முதல் இடமில்லையாஆனாலும் ப‌ரவாயில்லை ,இளைஞ்ஞ‌ர்க‌ள் காத‌லிக்கிறார்க‌ள் ,க‌டிம‌ண‌ம் புறிகிறார்க‌ள்
சிரிது நாளிலேயே பிறிகிறார்க‌ள்
புரித‌லை விட‌பிரித‌ல் எண்ணிக்கை உய‌ர்ந்த‌நா சாலை மறியல்கள் , விலை வாசிகள் , கபட நாடகங்கள்
மக்களை ஏமாற்றும் உத்திகள், எல்லாம் உயர்ந்த்த நாடு
தேர்தல் வருகிறதாம் வாக்காளர்கள் வாக்கு சேகரிக்க‌
வந்து கொண்டிருக்கிறார்கள் ஐம்பது வருடமாக்
நமக்கு கிடைக்காத அனைத்து வசதிகளையும்
மறந்து விட்டு மீண்டும் ஓட்டுப் போடுங்கள்
ஓட்டுப் போடுவது நம் கடமை போடாமல்
இருப்பது சட்டப்படி குற்றம்
நாமாவது நம் கடமை சரிவரச் செய்வோம்
நம் நாடு உயர்ந்த நாடு ஓட்டுப் போடுவோம்

வ‌ந்தே மாத‌ர‌ம்
பார‌த‌மாதா வாழ்க‌
ஜெய்ஹிந்


அன்புட‌ன்

தமிழ்த் தேனீ









காதல்





ஒரு கூறையின் கீழ் இருந்து வாழும் போது தான் தெரியும்
ஒத்துப் போகிறதா இல்லையா என்று
உண்மையாய்த் தெரியும்
இணைய தளத்தில் யதேச்சையாய் சந்தித்து
தொடர் சந்திப்பாய் வழியும் போதும்

கடற்கரையில் படகின் மறைவில் மடியில் படுத்து
காதலைப் பகிர்ந்து கொள்ளும் போதும்
இரு சக்கர விசை ஊர்தியில் ஒட்டிக்கொண்டே
ஊரெல்லாம் சுத்தும் போதும்
திரை அரங்கின் இருட்டிலே திரப் படம் பார்த்து
நாயக நாகியாய் மாறும் போதும்

அடுக்கு மாடி உணவகத்தில் அறுசுவை உணவு
குளிர் சாதன அறையில் ஒரு நாள் பகர்தல்

உயிரே நீ தானென்றும் உடன் வரும்
வாழ்க்கைத் துணை க‌டைசீவ‌ரை நீதானென்றும்
வாய்க்கு வாய் பொய்யாய் ச‌த்திய‌ங்க‌ள்
ப‌றிமாரும் போதும்

அத்த‌னையும் என்ன‌வென்று
ஒரு கூறையின் கீழ் இருந்து
நீ உண்மையான நீயாய், அவ‌ன் உண்மையான அவனாய்
நிதர்சனங்களை புரிந்து விட்டுக் கொடுத்து வாழும் போதுதான்

ஒரு கூறையின் கீழே இருந்து வாழும் போது தான்
ஒத்துப் போகிறதா,உண்மையான காதல் தானா ?
அத்தனையும் புரியும்
புரிகிறதா

புரிகிறதா காதல் என்ன‌வென்று....?
வான வேடிக்கை


தேவ லோகத்திலிருந்து தேவர்கள்
வேடிக்கை பார்க்க பூலோகம் வந்தனர்

பூமியிலே


பாலத்திலிருந்து ஒரு வாகனம் ஆற்றில் விழுந்தது

கபடமறியா சிறுமியை ஏமாற்றி கற்பழித்தனர் நால்வர்

குடிசைக‌ள் ப‌ற்றி எறிகின்ற‌ன‌,
வெள்ள‌த்தில் ப‌ல‌பேர் அடித்துச் செல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்
வித்தைக் கூடம் பணப் பற்றாக் குறையால்
மூடப் பட்டது
வேடிக்கை காட்டிப் பிழைக்கும் கோமாளி
பசியால் சுருண்டு கிடக்கிறான்
ஆளில்லா போக்குவரத்தில் அலட்சியத்தால்
பேருந்தும் புகை வண்டியும் மோதிக் கொண்டன‌

மக்கள் வேடிக்கை பார்த்தனர்
துவிச் சக்கர விசை வாக‌ன‌த்திலிருந்து
தூக்கி எறியப்பட்டான் ஒருவன்
முதலுதவி தேவை அவனுக்கு
செய்தால் பிழைத்துக் கொள்ளுவான்
குருதி ஆறாய்ப் பெருகியது
மக்கள் வேடிக்கை பார்த்தனர்
நியாயம்
காது கொடுத்துக் கேட்டேன்-இது
பூமித் தாயின் கர்ப்பம்- உள்ளே உள்ளக்குமுறல்
குழந்தை உதைக்கும் உதைதான் ,இங்கே வெளியில் கேட்கும் பூகம்ப
முழக்கம்,


இது உலகமெங்கும் எட்டும்
இயற்கைத் தாயின் சீற்றம்
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும்
நியாயம் நிகழவில்லை எங்கும்

இது பொங்கி எழுந்து வந்த
பூமித்தாயின் கோபம்
ஒரு பகுதி எங்கும் வெள்ளம்
மறு பகுதி எங்கும் வறட்சி

மலை பொங்கி எழுந்து உருகி
தீ வெள்ளமாகப் பாயும்
பூமி பாளமாக வெடித்துச் சிதறி
இயற்க்கை உள்ளே சென்று மறையும்

தீ உயர்ந்து எழுந்து வளர்ந்து
மழலை யாவும் தீய்க்கும்
புயல் சுழன்று சுழன்று அடித்து
உலகமெங்கும் மாய்க்கும்

ப்ரளயம் மொத்தமாக வந்து
ப்ரபஞ்சம் சுத்தமாக அழியும்
பூமித்தாயின் கர்ப்பம் மீண்டும்
தரித்து செழித்து வளர்ந்து
இயற்க்கை யாவும் மலரும்
இது மீண்டும் மீண்டும் நடக்கும்

வல்லரசு நாடுகளின் அதிபர்கள்
உலக நாடுகளின் உதவி கேட்டு
உருகிக் கொண்டிருக்கிறார்கள்
இயற்கையின் சீற்றம்
காது கொடுத்து கேட்போம்
இந்த இயற்கை தாயின் வருத்தம்
முடிந்தால் ந்யாயமாக வாழ்ந்து
அவள் சீற்றம் கொஞ்சம் தணித்து
இங்கே ந்யாய தேவதைகள்
வளர்ப்போம்














25. பிரியாதவரம்

பாசம் புரியவில்லை நேசம்புரியவில்லை
பந்தம்புரியவில்லை,சொந்தம்புரியவில்லை
பிரிதலின் சோகம்புரியவில்லை
உறவின் த்யாகம்புரியவில்லை

காதல் புரிந்தனர் ஊடல் புரிந்தனர்
கடிமணம் புரிந்தனர், சரசம்புரிந்தனர்
கலவிபுரிந்தனர் வாதம் புரிந்தனர்
விவாதம் புரிந்தனர், சண்டை புரிந்தனர்

சமரசம் புரிந்தனர், சாகசம்புரிந்தனர்
சேர்க்கைபுரிந்தனர் கலகம்புரிந்தனர்

த்ரோகம் புரிந்தனர்

எறும்புகள் வாய் தவறி
கடித்தால்சாகவேண்டும் வரம் கேட்டதுபோல்
கும்பகர்ணன் வாய்தவறி நித்யத்துவம்
என்பதற்கு நித்ரத்துவம் என்று கேட்டதுபோல்
பிரியாத வரம் கேட்கப்போய்
புரியாத வரம் கேட்டனரோ?
வித்து சரியில்லை அதனால்
விவாக ரத்து புரிந்தனரோ?












26. பத்தியம்

காதல் என்பது காவியமா?
கண்கள் வரைந்த ஓவியமா?
காதல் என்பது முகவுரையா?
காமம்தான் அதன் முடிவுரையா?

காமம்இல்லா காதல் என்பது சாத்தியமா?
காதல்இல்லா காமம் என்பது யோக்கியமா?
காதல்கூடிய காமம் என்பது தாம்பத்யமா?
காமம் இல்லாக் காதல் என்பது பத்தியமா?
இலக்கியமா?

காதல் என்பது கற்பனையானால்
காமம் என்பது விற்பனையா?
இதனுள் சென்று தேடினால்
விடை வருமா? விடைகிடைத்துவிட்டால்
ஜென்மம் கடைதேறுமா?
காமம் இல்லா காதல் என்பது
ப்ரும்மம் என்றால்

உயிர்கள்
இங்கு முளைத்தெழுமா?














27. உயர்ந்த நாடு

நம் நாடு உயர்ந்த நாடு
விஷச் சாராயம் அருந்தி சாவு எண்ணிக்கை
உயர்ந்த நாடு
வாகனங்கள் நேருக்கு நேர் மோதி
சாவு எண்ணிக்கை உயர்ந்த நாடு
சத்துணவுக் கூடத்தில் சாப்பாட்டில்
விஷம் சாவு எண்ணிக்கை உயர்ந்த நாடு
தீவிரவாதிகளும் போலீசாரும் மோதி
சாவு எண்ணிக்கை உயர்ந்த நாடு
மருந்துப் பொருட்களில் கலப்படம்
சாவு எண்ணிக்கை உயர்ந்த நாடு
கள்ள வோட்டு போடும் அரசியல்வாதிகள்
உயர்ந்த நாடு
கடலில் மீனவர்கள் இலங்கை சுட்டது
காணாமல் போனவர்கள் எண்ணிக்கை
உயர்ந்த நாடு
ஊழல் மலிந்தால் பண வீக்கம்
உயர்ந்த நாடு
நிலநடுக்கம் மக்கள் நடுத்தெருவில்
வெள்ளம் மக்கள் மொட்டை மாடியில்
வரட்சி மக்கள் காலி குடத்துடன்
கோயில்களில் கொலை கொள்ளை
குற்றவாளிக் கூண்டுகளில் மஹான்கள்
எல்லையில் யுத்தம்
தேர்தல் வருகிறதாம் வேட்பாளர்கள்
வாக்கு சேகரிக்க வந்துகொண்டிருக்கிறார்கள்
நம் நாடு உயர்ந்த நாடு.......







28. தாம்பத்யம்

பல விதமான கருத்து வேறுபாடுகள்,
மனக்கசப்புகள், பல சமயத்தில்
சண்டைகள் ,சச்சரவுகள், வாக்குவாதங்கள்,
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாத புலம்பல்கள்,
எதிர் எதிர் அணுகுமுறைகள்

உறவுக்காரர்கள் அனைவருக்கும் பொறாமை
நாங்கள் வெகு அன்னியோன்னியமாம்,
ஆதர்ச தம்பதிகளாம் ,
ஒருவரை ஒருவர் விட்டுக்
கொடுக்க மாட்டோ மாம்
ஆமாம் நாங்கள் விட்டுக்
கொடுப்பதே இல்லை எதற்க்கும்

இன்னும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள
இயலவில்லை
கல்யாணம் ஆகி முப்பது வருடம்
ஆகிவிட்டது
இப்போது எல்லோரும் புத்திசாலிகள்
மூன்று நாட்கள் மூன்று மாதம் பழகியே
இணயத்தில் சாட்டிலும் மெயிலிலும் பேசியே
நன்றாக புரிந்து கொண்டு

ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு
வாழ்க்கை ஒப்பந்தம் ,கல்யாணம் செய்து
கொள்கிறார்கள்,
அனால் ஆறே மாதத்தில் விவாக ரத்து
புரிகிறார்கள் பிரிகிறார்கள்
இது என்ன புரிதல்? பிரிதல்

ஆனால் நாங்கள் இன்னும் புரிந்த்து
கொள்ள முயற்ச்சிக்கிறோம்
எங்களுக்கு அறுபதாம் கல்யாணம்
அனவரும் வாருங்கள்
29. மக்கள்

கலப்படமில்லாத தூய்மையான பொருட்கள்,கறந்த பாலைப் போல

சரியான விலையில் தரமான பொருட்கள்
மக்ககளூக்கு சேவை செய்வதற்காகவே நிருவனங்கள்

தியாக மனப்பான்மையுடன் நாட்டுக்கு
உழைக்கவே அரசியல்வாதிகள்

நாட்டின் வளம் பெருக்க
மக்களின் நலம் காக்க
எப்போதும் தயாராக அரசாங்கம்

தேனடை த் தேன் போல்
சுத்தமானஉணவுப் பொருட்கள்
தயாரிக்க தொழிற்சாலைகள்

இவை அத்தனையும் எங்கள் நாட்டுக்கே சொந்தம்

தொலைக் காட்சிப் பெட்டியின்
விளம்பரப் படங்களில் .... மட்டுமே..

பாவம் நாங்கள் எப்போதும் அதன் முன்னால்












30. காதல்

ஒரு கூரையின் கீழ் இருந்துவாழும்போதுதான்
ஒத்துப்போகிறதா இல்லையாவென்று
உண்மையாய்த் தெரியும்
இணைய தளத்தில் யதேச்சையாய் சந்தித்து
தொடர் சந்திப்பாய் வழியும் போதும்

கடற்கரையில் படகின் மறைவில் மடியில் படுத்து
காதலைப் பகிர்ந்து கொள்ளும் போதும்

இரு சக்கர ஊர்தியில் ஒட்டிக்கொண்டே
ஊரெல்லாம் சுற்றும்போதும்

திரைஅரங்கின் இருட்டிலே திரைப்படம்
பார்த்து நாயக நாயகியாய் மாறும் போதும்

அடுக்கு மாடி உணவகத்தில் அருசுவை உணவு
குளீர்சாதன அறையில் ஒரு நாள் பகிர்தல்

உயிரே நீதானென்று உடன் வரும் வாழ்க்கைத்
துணை கடைசீ வரை நீதானென்றும்
வாய்க்கு வாய் பொய்யாய் சத்தியங்கள்

அத்தனையும் என்னவென்று

ஒரு கூரையின் கீழ் இருந்து நீ நீயாய் அவன் அவனாய்
வாழும்போதுதான் ,
ஒத்துப்போகிறதா இல்லையாவென்று
உண்மையாய்த் தெரியும்






31. அனுகூலம்

சிறு திரியில் எரியும் குத்து விளக்குத்
தீபங்கள் தான் நாமெல்லாரும்
கூடியவரை வேறெங்கும் பற்றாமல்
பதமாய் எரிவோம் சன்னதியில்
பற்றினாலும் படர்ந்தாலும் நெருப்புதான்
அழிவுதான் பேரழிவுதான்........

மீண்டும் மீண்டும் வந்து போகும்
கடலோரஅலை தான் நாமெல்லாரும்
நடுக்கடல்போல் சலனமின்றி அடங்கி
இருக்க முயல்வோம் இணங்கி
பொங்கினாலும் ஆர்ப்பரித்தாலும் சுனாமிதான்
அழிவுதான் பேரழிவுதான்

பஞ்சபூதம் சேர்ந்த இயற்கை அன்னை
அளித்த பரிசுதான், படைப்புதான் நாமெல்லாரும்
வஞ்சனைகள் நீக்கி பாவச் செயல் போக்கி
பரிசுத்தமாய் வாழ்வோம் மனிதநேயம் தேக்கி

இதை மறந்து வாழ்ந்தால் பூகம்பம்தான்
இயல்புப் பொறுமை இழந்து
பொங்கிவரும் மாற்றம்
பூமித்தாயின் சீற்றம்












32. தில்லுமுல்லு ( inaimathi tsc)

எத்தனையோ பித்தலாட்டம் ஏகப்பட்ட தில்லுமுல்லு
ஏமாத்தி திட்டம் போட்டு பதுக்கி பதுக்கியே
சேர்த்து வெச்சோம் பணத்தை வாழ்விலே
அத்தனை பணமிருந்தும் ஆயிரந்தான் உறவிருந்தும்
ஒருத்தன் கூட உதவல தாழ்விலே-
இப்போ ஒத்தன்கூட உதவல தாழ்விலே

மடியிலே கட்டிகிட்டு மானம் பாக்க ஒடிகிட்டு
எங்கு போயி ஒளிஞ்சாலும் விடவில்லே
துரத்தி துரத்தியே பிடிக்கிறான்
பணத்தை குடுக்க சொல்லியே அடிக்கிறான்

நாலு பேருக்கும் உதவி நல்லவழி போயிருந்தா
வந்திருக்குமா இந்த நாரப் பொழைப்பு
அப்போ பட்டுக் கோட்டை சொன்னதெ-
காதுலே வாங்காமே கோட்டை விட்டுடோ ம் காத்துலே
இப்போ சேத்து வெச்ச பணம் கூட நமக்கு -
உதவல நாரிப் போச்சுலேய்
நம்ம பேருலேய்-இந்த ஊரிலே















33. சுருட்டு

சுருட்டு,அகப்பட்டதெல்லாம் சுருட்டு
அடிவயிறுவரை எரியும் சுருட்டு
அதனாலென்ன சுருட்டு
இருப்பவனோ இல்லாதவனோ
பாகுபாடில்லாமெ சுருட்டு
முனையிலெ நெருப்பு வெச்சா
அடிவரை புகையும் சுருட்டு
சுருட்டி சுருட்டியே பழக்கப் பட்டாச்சு
அகப்பட்டதெல்லாம் சுருட்டு
வீட்டைச் சுருட்டு ,நாட்டைச் சுருட்டு
உலகம் சுருட்டு,உள்ளதெல்லாம் சுருட்டு
கேள்வி கேட்க நாதியே இல்லை சுருட்டு
பயப்படாமெ சுருட்டு
கள்ளப் பணமோ நல்ல பணமோ சுருட்டு
நாய் வித்த பணம் குரைக்காது
வாய் விட்டுக் கேட்டுசுருட்டு
நன்றி இல்லாமெ சுருட்டு
கள்ளத்தனமோ நல்லதனமோ சுருட்டு
சினிமா எடுத்து சுருட்டு,நாடகமாடி சுருட்டு
பூடகமாகவே சுருட்டு ,வெளிப்படையாகவே சுருட்டு
உடல் உள்ளவரை சுருட்டு,உயிர் உள்ளவரை சுருட்டு
கடல் உள்ளவரை சுருட்டு, சுனாமியா சுருட்டு
பூகம்பமா சுருட்டு,மழையா சுருட்டு ,வெள்ளமா சுருட்டு சூறாவளியா சுருட்டு ,
மக்களைப் பத்தி கவலைப்படாமெ சுருட்டு
நல்லவனாக சுருட்டு ,வல்லவனாக சுருட்டு
பணம் உள்ளவனாக சுருட்டு
நாடு வேண்டுமா, பதவி வேண்டுமா
பட்டம் வேண்டுமா, பதக்கம் வேண்டுமா
நிலம் வேண்டுமா,நிலவு வேண்டுமா,
உறவு வேண்டுமா,காதல் வேண்டுமா
காமம் வேண்டுமா,எல்லாம் வேண்டுமா
பணம் தானடா பலமே பலம் தானடா பணமே
சுருட்டு, சுருட்டு,சுருட்டு,சுருட்டு,சுருட்டு .........


உலகம்

அடேய் செல்லப் பயலே
இப்பதான் பொறந்தா மாதிரி இருக்கு
அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப் போச்சா
குட்டிப் பையா இன்னிக்கு நீ பொறந்து
ஒரு வருஷம் ஆயிடிச்சு

எதேதோ ம‌ந்திர‌ச‌ப்த‌ங்க‌ள் நாதஸ்வ‌ர‌இனிமை
ஒரே சிரிப்பு ,கும்மாளம் ,கொண்டாட்டம்
எல்லாம் காதில் விழுகிறது


நானும் பதில் சொன்னேன்

அவர்களுக்கு என் மொழி புரியவில்லை



முதல் வருஷ கொண்டாட்டங்களின்
சப்தங்கள் மீண்டும் காதில் ஒலிக்கிறது

ஒரு பிரியமான முத்தத்தில் கண் விழித்தேன்
க‌ண்விழித்து எழுந்தேன் ,
என் ம‌னைவி, என் குழ‌ந்தைக‌ள்
என் பேர‌ப் பிள்ளைக‌ள் அனைவரும்
பிற‌ந்த‌நாள் வாழ்த்துக்க‌ள் சொல்கிறார்க‌ள்
பல கவிதைக் குயில்களும் ,தமிழ்க் குயில்களும்
அன்புடன் வாழ்த்து சொல்கின்றன‌
இன்று காலை அறுபது வயது ஆரம்பம்

உல‌க‌ம் உருண்டைதான்

தமிழ்த் தேனீ


உயர்ந்த நாடு

நம் நாடு உயர்ந்த நாடு
விஷச் சாராயம் அருந்தி
இறப்பு எண்ணிக்கை உயர்ந்த நாடு
வாகனங்கள் நேருக்கு நேர் மோதி
இறப்பு எண்ணிக்கை உயர்ந்த நாடு
ம‌‌ருந்துப் பொருட்களில் க‌ல‌ப்ப‌ட‌ம்
ச‌த்துண‌வுக் கூடத்தில் சாப்பாடில் விஷ‌ம்
இறப்பு எண்ணிக்கை உயர்ந்த நாடு
தீவிர‌வாதிக‌ளும் ,காவ‌ல் துறையும்,அடியாட்க‌ளும்
தாதாக்களும் சொந்த‌லாப‌த்துக்காக‌வெட்டிகொண்டு
ம‌க்க‌ளை ஏமாற்றும் செய்கைக‌ளில் உய‌ர்ந்த‌நாடு
க‌ள்ள‌ஓட்டுக்க‌ள் போட்டாகிலும் ப‌த‌விக்கு வ‌ரும்
அர‌சிய‌ல் வாதிக‌ளின் எண்ணிக்கை உய‌ர்ந்த‌நாடு
க‌ட‌லில் மீன‌வ‌ர்க‌ளை இல‌ங்கை சுழ‌ல் ப‌டை சுட்ட‌து
த‌மிழ‌க‌மீன‌வ‌ர்க‌ளின் இற‌ப்பு எண்ணிக்கை உய‌ர்ந்த‌நாடு
காணாம‌ல் போன‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை உய‌ர்ந்த‌நாடு
ஊழ‌ல் ம‌லிந்த‌தால் ப‌ண‌வீக்க‌ம் உய‌ர்ந்த‌நாடு
கோயில்க‌ளில் கொலை கொள்ளை,
குற்றவாளிக் கூண்டுகளில் மஹான்கள்
பதவிகளில் அரசியல் வாதிகள், தவறான கொள்கைகள்
மக்களின் நலம் மறந்தே போனது
கள்ளப் பணம் குவிப்பில் உயர்ந்த நாடு
குற்றப் பத்திரிகை எண்ணிக்கை உயர்ந்த நாடு
ஊழல் பட்டியலில் 8 வது இடமாம்
அதிலும் முதல் இடமில்லையாஆனாலும் ப‌ரவாயில்லை ,இளைஞ்ஞ‌ர்க‌ள் காத‌லிக்கிறார்க‌ள் ,க‌டிம‌ண‌ம் புறிகிறார்க‌ள்
சிரிது நாளிலேயே பிறிகிறார்க‌ள்
புரித‌லை விட‌பிரித‌ல் எண்ணிக்கை உய‌ர்ந்த‌நா சாலை மறியல்கள் , விலை வாசிகள் , கபட நாடகங்கள்
மக்களை ஏமாற்றும் உத்திகள், எல்லாம் உயர்ந்த்த நாடு
தேர்தல் வருகிறதாம் வாக்காளர்கள் வாக்கு சேகரிக்க‌
வந்து கொண்டிருக்கிறார்கள் ஐம்பது வருடமாக்
நமக்கு கிடைக்காத அனைத்து வசதிகளையும்
மறந்து விட்டு மீண்டும் ஓட்டுப் போடுங்கள்
ஓட்டுப் போடுவது நம் கடமை போடாமல்
இருப்பது சட்டப்படி குற்றம்
நாமாவது நம் கடமை சரிவரச் செய்வோம்
நம் நாடு உயர்ந்த நாடு ஓட்டுப் போடுவோம்

வ‌ந்தே மாத‌ர‌ம்
பார‌த‌மாதா வாழ்க‌
ஜெய்ஹிந்


அன்புட‌ன்

தமிழ்த் தேனீ









காதல்





ஒரு கூறையின் கீழ் இருந்து வாழும் போது தான் தெரியும்
ஒத்துப் போகிறதா இல்லையா என்று
உண்மையாய்த் தெரியும்
இணைய தளத்தில் யதேச்சையாய் சந்தித்து
தொடர் சந்திப்பாய் வழியும் போதும்

கடற்கரையில் படகின் மறைவில் மடியில் படுத்து
காதலைப் பகிர்ந்து கொள்ளும் போதும்
இரு சக்கர விசை ஊர்தியில் ஒட்டிக்கொண்டே
ஊரெல்லாம் சுத்தும் போதும்
திரை அரங்கின் இருட்டிலே திரப் படம் பார்த்து
நாயக நாகியாய் மாறும் போதும்

அடுக்கு மாடி உணவகத்தில் அறுசுவை உணவு
குளிர் சாதன அறையில் ஒரு நாள் பகர்தல்

உயிரே நீ தானென்றும் உடன் வரும்
வாழ்க்கைத் துணை க‌டைசீவ‌ரை நீதானென்றும்
வாய்க்கு வாய் பொய்யாய் ச‌த்திய‌ங்க‌ள்
ப‌றிமாரும் போதும்

அத்த‌னையும் என்ன‌வென்று
ஒரு கூறையின் கீழ் இருந்து
நீ உண்மையான நீயாய், அவ‌ன் உண்மையான அவனாய்
நிதர்சனங்களை புரிந்து விட்டுக் கொடுத்து வாழும் போதுதான்

ஒரு கூறையின் கீழே இருந்து வாழும் போது தான்
ஒத்துப் போகிறதா,உண்மையான காதல் தானா ?
அத்தனையும் புரியும்
புரிகிறதா

புரிகிறதா காதல் என்ன‌வென்று....?
வான வேடிக்கை


தேவ லோகத்திலிருந்து தேவர்கள்
வேடிக்கை பார்க்க பூலோகம் வந்தனர்

பூமியிலே


பாலத்திலிருந்து ஒரு வாகனம் ஆற்றில் விழுந்தது

கபடமறியா சிறுமியை ஏமாற்றி கற்பழித்தனர் நால்வர்

குடிசைக‌ள் ப‌ற்றி எறிகின்ற‌ன‌,
வெள்ள‌த்தில் ப‌ல‌பேர் அடித்துச் செல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்
வித்தைக் கூடம் பணப் பற்றாக் குறையால்
மூடப் பட்டது
வேடிக்கை காட்டிப் பிழைக்கும் கோமாளி
பசியால் சுருண்டு கிடக்கிறான்
ஆளில்லா போக்குவரத்தில் அலட்சியத்தால்
பேருந்தும் புகை வண்டியும் மோதிக் கொண்டன‌

மக்கள் வேடிக்கை பார்த்தனர்
துவிச் சக்கர விசை வாக‌ன‌த்திலிருந்து
தூக்கி எறியப்பட்டான் ஒருவன்
முதலுதவி தேவை அவனுக்கு
செய்தால் பிழைத்துக் கொள்ளுவான்
குருதி ஆறாய்ப் பெருகியது
மக்கள் வேடிக்கை பார்த்தனர்

தேவ‌ர்க‌ள் ம‌ன‌ம் ப‌தைத்த‌ன‌ர்
தேவ‌ர்க‌ளில் ஒருவ‌ன் விப‌த்துக் குள்ளான‌வ‌னை
ம‌டியிலே கிட‌த்தி முத‌ல் உத‌வி செய்தான்



காவ‌ல் கார‌ர்க‌ள் வ‌ந்த‌ன‌ர் உத‌வி செய்த‌ தேவ‌னை
காவ‌ல் நிலைய‌த்துக்கு வ‌ந்து புகார் எழுதிக் கொடுத்துவிட்டுப்
போக‌ச் சொல்லி காவ‌ல் நிலைய‌த்துக்கு அழைத்துப் போனார்க‌ள்
வெகு நேரமாகியும் புகார் கொடுக்கப் போன
தேவன் திரும்பி வரவில்லை
தேவ‌ர்க‌ள் தேடிப் பார்த்துவிட்டு
காணாம‌ல் ம‌ன‌ம் ப‌தைத்த‌ன‌ர்

காவ‌ல் நிலைய‌த்தில் புகார் ப‌திவு செய்த‌ன‌ர்
காவ‌ல் நிலைய‌த்துக்கு சென்ற‌ அந்த‌ தேவ‌ன் இது வ‌ரை திரும்ப‌வில்ல‌யாம்
யாராவ‌து வேடிக்கை பார்க்கும் போது அவ‌னைப் பார்த்தால்
விவ‌ர‌ம் சொல்ல‌வும்
த‌குந்த‌ ச‌ன்மான‌ம் கிடைக்கும்
தேவ‌ர்க‌ள் காத்திருக்கிறார்க‌ள்
ம‌க்க‌ள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்க‌ள்

" உன்னை உணர்"

"எதுவாக நினைக்கிறோமோ அதாக ஆகிறோம்"
எல்லோரும் சொல்கிறார்கள்-எனக்கும் ஒரு நம்பிக்கை
என் சிந்தை முழுவதும் சிறகுகளின் ஆக்ரமிப்பு
எனக்கு சீக்கிரம் சிறகு முளைக்க வேண்டும்
சிட்டுக்குருவி போல் வானில் பறக்கவேண்டும்


எனக்கு எப்போது சிறகு முளைக்கும்?
சீறிப் பாய்ந்து இப் ப்ரபஞ்சம் சுற்றுவேன்?
என்பதுதானே என் கவலை
கண்களை மூடி இறைவனைப் ப்ரார்த்தனை
செய்துகொண்டிருக்கிறேன்

எனக்கும் சிறகுகள் முளைத்திருக்கின்றன
என்னலும் பறக்க முடியும் !!!
நான் அது புரியாமல் கவலையாய்
உட்கார்ந்து இருக்கிரேன் சுமை தாங்கியில்!

அனுமாருக்கு அவர் பலம் உணர்த்தியது போல்
எனக்கும் என் பலம் உணர்த்த யாராவது
வராமலா போய்விடுவார்கள்
காத்திருக்கிறேன் அந்த ஞானியைத் தேடி
யார் அந்த ஜாம்பவான் ?

ஏணி
சூரியனுக்கு ஒரு ஏணி அமைத்தேன்
ஓர் சுற்றுலா வரலாமென்று
ஒப்பற்ற ஏணி,உத்தமமான ஏணி
உதவப் போகும் ஏணி, உயரமான ஏணி

நினைத்தவுடன் ஏறிப்போக
ஏணியா இரூக்கிறது
என்ற எத்தனையோ பேர்
ஏக்கத்துக்கு வடிகாலாய்
அத்தனைபேரின் துயர் துடைக்க
முத்தான வழி கண்டேன்
முடிவு செய்தேன் ஓர் ஏணி அமைக்க

தம்மையே நம்பாதவர்கள்கால் ஏணி ஏறினர்
அடுத்தவரை நம்பாதவர்கள் அரை ஏணி ஏறினர்
அரைமனதுக் காரர்கள்
முக்கால் ஏணி ஏறினர்
முழுவதும் ஏறியவர்கள் கெட்டிக்காரர்கள்
திரும்ப வந்து
பதில் சொல்லவில்லை

இப்போது என்ன செய்வது
ஏணியை எடுத்து விடலாமா ?
இருக்கட்டுமென்று விட்டுவிடலாமா?
அரைகுறை கண்டுபிடிப்பாளனா நான்
இல்லை இல்லை........
ஏணியிருந்தாலும் தோணியிருந்தாலும்
முறையாய் உபயோகிக்க


தேவை ஞானத் தோணி
ஞான ஏணி,
உணர்த்துவதற்கு ஒரு ஞானி...........
. மோதிரம்

மானுடர்க்கு வாழ்க்கை தரும் மோதிரம் ,
கல்யாண மோதிரம் ஒரு போதிமரம்
கொல்லர்கள் தயாரித்த மோதிரம்-பல
முத்திரைகள் பதித்து வைத்த மோதிரம்
அரசாங்க முத்திரை மோதிரம்
உண்டா ஆட்டிவைக்காத ராஜ்ஜியம்
கணையாழி என்கின்ற மோதிரம்,
ராம காதையையே ,படைத்திட்ட மோதிரம்
சீதையையே நம்பவைத்த மோதிரம்
வானில் மாருதியை எழும்ப வைத்த

பல கலைஞர்களை வளர்த்துவிட்ட மோதிரம்
எழுத்து வித்தகரை படைத்திட்ட மோதிரம்
மாயக் கண்னனவன் தவற விட்ட மோதிரம்
விதுரரயே பதற வைத்த மோதிரம்
கவுரவரை வீழ வைத்த மோதிரம்

கற்பனைக்கு -எட்டாத பல வடிவ மோதிரம்
விற்பனைக்கு எளிதான மோதிரம்
காதலுக்கு அடயாள மோதிரம்
காலத்தால் அழியாத மோதிரம்
மோதிரம் ஒரு போதி மரம்



. ஆசை

அய்யா புத்தரே!!!
ஆசையே துன்பத்துக்கு காரணம் ,
அருமையாய் சொல்லிவிட்டீர்,
ஆயிரம் வணக்கம்.
ஆசை ,ஆரம்பம் அம்மாவிடம், அப்புறம் அப்பாவிடம்,
அடுக்கடுக்காய் ஆயிரம் உறவினிடம் ,
ஆடை அலங்காரம் , ஆபரணம், - அடுக்கு மாடியில்
ஒரு இடம், சொகுசாய் பயணம் செய்ய கார்,
காதலுக்கு ஒரு மனைவி, - கண்ணியமாய் மழலைகள்,
அத்தனையிலும் ஆசை,
ஆண்டவா பற்றற்ற நிலை வேண்டும்,- பற்றும் வேண்டாம்,
வரவும் வேண்டாம்-
பற்றிக்கொள்ள ஒரு பாதம் வேண்டும்,
இறைவன் மேல் ஆசை கொண்டேன் ,
என்னை பண்படுத்த , இறைவனுக்கு ஒரு ஆசை,
இந்த ஆசைக்கொரு முற்றுப்புள்ளி வைக்கத்தான்
ஆசை, . ஆனால் இது முடிவுக்கு வராத
முற்றுப்புள்ளி,,,,,,,,,,,,,,,,,,,,,..............................!

. சுனாமி (tsc gomathy)


அன்னை என்னும் உறவும் தொப்புள் கொடி உறவும்
இணைத்தது நம்மை, முதன் முதலாய் நம்மைப்
பிரித்தது ப்ரசவம், அடுத்ததாய் நம்மை மேலும்
பிரித்தது சகோதர உறவு
அடுக்கடுக்காய் நம்மைப் பிரிக்கவே
அத்தனை உறவுகளும்,புயலாய்,வெள்ளமாய்
ஆயத்தமாய் இருந்தன
ஆயிரம் சூழ்நிலை நம்மைப் பிரிக்க
அத்தனையிலும் தாக்குப் பிடித்தோம்
இருக்கமாய் பாசமாய் அணைத்தபடி
ஆனாலும் இந்த மனைவி எனும்
தாலிக் கொடி உறவு நம்மைப் பிரித்தபோது
நாம் பிரிந்தோம்
தாக்குப் பிடிக்க முடியவில்லை
...............................இது சுனாமி

விசிறி

நான் உங்கள் விசிறி ,என் விதி உங்கள் கையில்
உங்களுக்கு வியர்க்கும் போதெல்லாம் விசுருவேன்
உங்களுக்கு தருவேன் காற்றை , அப்படியே
உலகத்துக்கு உங்கள் புகழை,

நான் உங்கள் விசிறி, உங்கள் கைகளால்
உங்களுக்கு வீசும்போதெல்லாம்
பாதுகாப்பாக, சந்தோஷமாக உணருகிரேன்
உங்களுக்கு சேவை செய்யும் பெருமையுடன்

உணர்கிறேன் நான், என் உடல் பொருள் ஆவி
எல்லாம் உங்களுக்காக படைக்கப்பட்டதே ,
அதனால் உங்களுக்காகவே உழைக்கிறேன்
மகிழ்ச்சிதான் !!!!!!!!!!!
பலமுறை எனக்கு வியர்த்திருக்கிறது
அப்போதும் உங்களுக்காக விசிரியிருக்கிறேன்
எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா
என் புழுக்கத்தை !!!!!!!!! ?????????????





dokavithai@yahoogroups.com
From: kris_chary
Date: Wed Oct 5, 2005 8:57 am )

பக்தி


மூஞ்சூரைப் பார்த்தாலும் , யானையைப் பார்த்தாலும்
வினாயகர் ஞாபகம் எனக்கு வருகிறது
மீனப் பார்த்தாலும் ,வராகத்தைப் பார்த்தாலும்
பெருமாள் ஞாபகம் எனக்கு வருகிறது
புலியைப் பார்த்தாலும் அய்யப்பனும், அம்பாளும்
ஞாபகம் எனக்கு வருகிறது
சிங்கத்தைப் பார்த்தலும் நரசிம்மனும் நாராயணனும்
எனக்கு ஞாபகம் வருகிறது
பசுவைப் பார்த்தால் காமதேனு,காளையைப்
பார்த்தாலும் , நாகத்தைப் பார்த்தாலும் பரமசிவன்
ஞாபகம் எனக்கு வருகிறது

அவைகளூக்கு என்னைப்,பார்த்தால் என்ன ஞாபகம்
வருகிறதென்று எனக்குத் தெரியவில்லை
கொஞ்சம் தள்ளியே இருக்கிறேன்


56. சிட்டுக் குருவி

பாரதி ரசித்த சிட்டுக் குருவி
சிங்காரமாய்ச் சிணுங்கும் சிட்டுக் குருவி
ஆனந்தம் எனும் இலக்கணத்தின்
ஆதாரம் சிட்டுக்குருவி
கிசுகிசுப்பு, குதூகலம், எப்போதும்
நாம் உணரும் சிட்டுக் குருவி
இப்போதெல்லாம் இந்த இனம் இல்லவே இல்லை
பார்க்கும் எந்த மனிதரிடமும் கலகலப்பு,சந்தோஷம்
குதூகலம், எதுவுமே இல்லை '
ஏதொ ஒரு கவலை சிட்டுக் குருவியைப் போல
மனிதரிடமும் சந்தோஷச் சிட்டுக்
குருவிகள் மறைந்து விட்டன























Thursday, August 16, 2007

சாரமுள்ள பழையது

(அழகி.காம் இணையதளத்துக்கு எழுதியது)

என் தாயார் ஆர் கமலம்மாள் அவர்கள்
ஒரு தமிழ் எழுத்தாளர்
அவர்கள் எழுதிய "க்ருஷ்ணதீர்த்தம் " என்னும் சிறுகதை
உயர் திரு சங்கராச்சரியார் அவகளின் ஜன் கல்யாண்
என்னும் அமைப்பும் ,அமுத சுரபி பத்திரிகை ,மற்றும்
பாரத ஸ்டேட் வங்கியும் , இணைந்து நடத்திய கதைப் போட்டியில் முதற் பரிசு பெற்று
திரு சங்கராச்சாரியார் அவர்களால் பாராட்டப் பட்டு
அவருடைய திருக் கரங்களால்
தங்கக் காசு பரிசு பெற்றது,
அவர்கள் எழுதிய பாடல்கள்

" தெய்வீகப் பாமாலை "என்னும் பெயரில்;
மும்பை சகோதரிகளால் பாடப் பட்டு,
திரு எல் கிருஷ்ணன் அவர்களால் இசையமைக்கப் பட்டு
சங்கீதா ஒலி இழை அமைப்பாளர்களால்
வெளியிடப் பட்டது
என் தாயார் ஆர் . கமலம்மாள் அவர்களின்
திருவருளால் நானும் இணையத்தில் பல் கவிதைகள்,
கட்டுரைகள் ,புதினங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன்
மேலும் பல திரைப் படங்கலிலும் ,தொலைக்காட்ச்சி
தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்


அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com




அன்புள்ள விஸ்வநாதன் அவர்களே

எனக்கு என்னுடைய தாயார் தான் நண்பன்,
மந்திரி, நல்லாசிரியன்,குரு எல்லாமே

என் தாயார் அடிக்கடி சொன்ன விஷயங்களை
என் மன அடித்தளத்தில் அசை போட்டுக்
கொண்டிருக்கும் கன்று நான்
மன மடி கனத்ததால் சுறக்கும் தமிழ்ப் பால்
தனை சுவைப் பாலாக அளிக்க விரும்பும்
தமிழ்த்தேனீ நான்

என்னுடைய இயற் பெயர் ஆர்.கிருஷ்ணமாச்சாரி
கண்ணன் என்று என் தாயாரால் யசோதையின் பாசத்தோடு அழைக்கப் பட்ட நான் என்
பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தேன்,
அதனால் க்ருஷ்ணன் என்று பெயரிட்டனர் ,

என் தந்தையார் ஆர் ரங்கஸ்வாமி அய்யங்கார்
மிகுந்த பொது நலமும் நேர்மையும்
சக மனிதர்களிடையே நேசமும் கொண்ட
மனித நேயம் உணர்ந்த ஒரு மஹா மனிதர்

அவர் எனக்கு ஞான குருவாய் இருந்து
சொல்லிக் கொடுத்த பல விஷயங்கள்
எனக்கு மனதில் மிக ஆழமாய்ப் பதிந்தது
அவர் சொல்லிக் கொடுக்கும் முறையின்
விசேஷம் அது





" சொல்வதெல்லாம் கீதை என்று
நினைப்பவன் அல்ல
ஆனால் கீதையை சொல்ல வேண்டும்
என்று நினைப்பவன் "

நல்லது இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள்
தவறு இருந்தால் திருத்துங்கள்
கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது
கற்றுக் கொள்ள தயாராய் இருக்கும்

நிரந்தர " மாணவன் " நான்


பெரியோர்கள் ஏற்படுத்தி வைத்த பல நல்ல விஷயங்கள்
அவைகளின் தாத்பரியங்கள் நம்மால் புறிந்துகொள்ள
முடியாமையினால் புறக்கணிக்கப் படுகின்றன
என்பது என் எண்ணம்

1. நாம் எதை அதிகமாக உபயோகிக்கிறோமோ
அது தான் நமக்குப் ப்ரச்சனையாக ஆகிறது
அது எதுவாயிருந்தாலும் சரி ,அன்பு ,பாசம், நேசம்,
"அளவுக்கு மிஞ்ஜினால் அமிர்தமும் விஷம் "

இறைவன் நம்முடைய உடலிலும்,உள்ளத்திலும்
என்ன தகுதிகள் வேண்டுமோ அத்தனையும்
சரியான விகிதாசரத்திலே வைத்து
தரப் பரிசோதனை செய்து தான் அனுப்புகிறான்
இறைவன் என்றுமே தன்னுடைய படைப்பில்
குறையான படைப்புகளை தயாரிப்பதில்லை

நாம் செய்யும் காரியங்களினாலோ,
பாவ புண்ணியங்களினாலோ
நம்முடைய தரத்தின் விகிதாசாரம்
மாறு படுகிறது என்பது என்னுடிய
தாயார் ஆர் .கமலம்மாள் அவர்களின்
பொன் மொழிகளில் ஒன்று

அதைப் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்
அதில் எதைப் பற்றி முதலில் எழுதலாம்
என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்

ஆரம்பித்து வையுங்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ


அன்புள்ளங்களே

எவ்வளவு வேண்டினாலும் எத்தனை
வேண்டுதல்களைப் பரிகாரம் என்று செய்தாலும்
தீராத கர்மா ,அனுபவித்துத் தீர்க்கவேண்டியதே ,
கர்மா அப்படி இல்லையெனில்
ஏன் பிறக்கப் போகிறோம்...?
மறு பிறப்பில்லாத முக்தி என்பது
எல்லோருக்கும் கிடைத்துவிடக் கூடியது அல்ல,
காலம் காலமாய் எல்லாவித நிகழ்வுகளும், சுழற்ச்சிதான், மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கிறது.
எதையுமே மாற்ற முடியவில்லை, நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் எல்லாமே மாறிவிட்டதாய் ,
இல்லை எதுவுமே மாறவில்லை,
ஒவ்வொரு யுகத்திலும் என்னென்ன
நிகழ்ச்சிகள் நடந்ததோ அதே நிகழ்ச்சிகள்
ஒவ்வொரு யுகத்திலும் தொடர்ந்து கொண்டே
இருக்கிறது ,யுகங்கள் மாறுகிறது,
நிகழ்ச்சிகளின் வடிவமும் மாறுகிறது
ஆனால் நிகழ்ச்சிகள் மாறுவதே இல்லை

என் சிந்தனையில் எப்போதுமே இறைவன் என்பவன்
நாம் நினைதுக் கொண்டிருப்பது போல உருவமாகவோ ,
அரூபமாகவோ,கற்பனைச் சொரூபமாகவோ இருக்கிறானா,? இல்லை நம் நினைப்புக்கு
கொஞ்ஜமும் சம்பந்தமில்லாதவனாக
இருக்கிறானா...?
என்பது என்னுடைய முதல் கேள்வி...?

கண்டவர் விண்டிலர்,விண்டவர் கண்டிலர்
இதுதான் இன்றுவரை நடை முறை உண்மை

நான் இறைவனிடம் ஒரு கவிஞ்ஜன் என்கிற
முறையிலே ஒரு விண்ணப்பம் வைத்தேன்

இறைவா ஒரே ஒரு முறை தரிசனம் கொடு
யாரிடமும் நீ இருக்கிறாய் என்று
நிரூபிக்க முடியவில்லை என்று

அதற்கு இறைவன் நான் இருக்கிறேன் என்று
நிரூபிக்க வேண்டிய அவசியம் உனக்கில்லை
முதலில் நீ உணர் ,உன்னை உணர்
என்றான் (சூசகமாய் )

அன்புடன்
தமிழ்த்தேனீ
உயர் திரு வெங்கட்ராமன் அவர்களே
சகோதரி திரு விசாலம் அவர்கள் ஏற்கெனவே
என பால் அன்பு கொண்டவர்கள்
இப்போது (உயர் திரு விஸ்வநாதன்,ஆசிரியர், 'அழகி' தமிழ் மென்பொருள்)
அவருடைய தகப்பனார்,மேலும் அன்புள்ளம் கொண்ட நீங்கள்
இத்தனை பேர் எனக்கு முகமன் கூறி வரவேற்பது
எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது
சாதாரணமாக வாலிபப் பருவத்தில் திருமணம் நிச்சயமானவுடன்

"எவ்வளவு தகுதிகள் இருந்தாலும் தன்னை மதித்து பெண் கொடுக்கிறாகளா,
திருமணம் நிச்சயமாகிவிட்டதா தன்க்கும், என்று ஒரு முறையேனும் தன்னையே
கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் வாலிபனின் மன நிலையில் நான் இருக்கிறேன் "

எனக்குத் தகுதிகள் இருக்கிறதோ இல்லையோ எனக்குத் தெரியாது
அப்படி ஏதேனும் தகுதிகள் இருக்குமானால் அது அந்தப்
பரப்ரும்மத்தின் அருளே தவிற வேரு ஒன்றுமில்லை
எனறு நான் பரி பூரணமாக உணர்ந்திருக்கிறேன்
அவன் பணிக்கிறான் நான் இயங்குகிறேன்
நானும் ஒரு சாயீராம் பக்தன் தான்
இதை நான் எந்த வித இச்சகத்துக்கும் ,
அல்லது உங்களை த்ருப்திப் படுதவும் சொல்லவில்லை
நான் பிறப்பால் வைஷ்ணவன் , அடிப்படையில் சைவத்தையும் விரும்புபவன், ஏனென்றால் சைவம் ,வைணவம் ,சாக்தம் ,
எதுவாக இருந்தாலும் அவைகள் அனைத்துமே
நாம் ப்ரும்த்தை அடையும் வாகனங்களே
என்று தெளிவாக இருக்கிறேன்
மனதால் சாக்தம் என்று சொல்லக் கூடிய
சக்தி வழிபாடு மிகவும் விரும்புபவன்
எனக்கு அன்னை என்றால் மிகவும் பிடிக்கும்
நான் வாயைத் திறந்தால் முருகா என்பேன்

திருவண்ணாமலை என்னும் ஒரு கிராமம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது
அங்கு மலைமேல் குடிகொண்டிருக்கும்
ஸ்ரீனிவாசன் தான்,என் குல தெய்வம்
வருடத்துக்கு ஒரு முறை அங்கு போய்
அவரை தரிசிப்பது என் வழக்கம்,

எனக்கு எந்த ஒரு ப்ரச்சனை என்றாலும்
நேராக அம்மன் கோயிலுக்குப் போய்
அவள் எதிரில் நின்று கொண்டு
மானசீகமாக அவளிடம் என் குறைகளை
கூறிவிட்டு ஆத்ம சமர்ப்பணம் செய்துவிட்டு
வந்துவிடுவேன்
அவ்வளவுதான் மற்ற எல்லாவற்றையும்
அவள் என் அன்னை எனக்கு என் தாயாரின்
ஆர் .கமலம்மாள் ரூபமாவே காட்சி அளித்து
என் ப்ரச்சனைகளை சரி செய்துவிடுவாள்
வேறு என்ன வேண்டும் எனக்கு...?
உங்களுடன் சேர்ந்து நானும் கொஞ்ஜம்
ஆன்மீகம் கற்றுக் கொள்ளும் முயற்சியாக
இங்கு எழுத வந்தேன்
அன்புடன்
தமிழ்த்தேனீ

Sunday, August 12, 2007

துளசிப் பாவை

" துளசிப் பாவை "

துளசி வனத்தில் உதித்த,
தபசி திருவரங்கன் உபாசி
பெரியாழ்வார் கண்டெடுத்த
இளவரசி

திருவாடிப்பூர திரு நாளில் தேடி
எடுத்த அவதார லக்ஷ்மி இவள்
கோபால விலாசம் தேடிய திருப்பாவை
பகல் பத்து ராப்பத்து ,முப்பத்து நாளும்
முப்போதும் எப்போதும் முழுமையாய்த்
தவமிருந்தாள் விழித்திருந்தாள்
இப்பாவை நோன்பிருந்தாள் பாவை நோன்பிருந்தாள்
திரு பாவை நோன்பிருந்து திருப்பாவை தானெழுதி
முன்னைப் பயன் பெற விரதமிருந்தாள்

திருவரங்கன் அணைப்பாவை ,
என்றென்றும் துணைப்பாவை தானாக
விண்ணவர் போற்றும் திருவரங்கனை
அவ்வரங்கனை தான் மாலை சூட
தான் சூடிய பூமாலையை பாமாலையாய் அவனுக்களித்தாள், அவனும் களித்தான்
கிளி கொஞ்ஜும் தோள்கள் கொண்ட
கோதை திருமாலைத் தானடைந்து
தவழ்ந்த மாலை தவழும் மாலை
அவ்வரங்கனுக்கே தோள் கொஞ்ஜும்
கிளியானாள் துளசி மாலை போலானாள்

பெரியாழ்வார் விதிர் விதிர்த்தார் –
அடியாராய் தான் நினைத்த தன் மகள்
கோதை அரங்கனின் திரு அடியாளாய்
ஆனகதை அறியாரோ பெரியாழ்வார்


அபசார மென்ரெண்ணி அவர் துடித்தார்
அலைமேலே பள்ளி கொண்ட
திருமாலின் தாரமிவள் என்றவர் அறியாரோ?
அதனால்தான் தான் சூடிக் கொடுத்தாள்
சுடர்கொடி யாள் ஆண்டாள்
அரங்கனையும் ஆண்டாள்
அறியாரோ பெரியாழ்வார் அறியாரோ
ஆனாலும் அளவில்லா பக்தியது
அரங்கன்மேல்

திருப்பாவை தனை ஆண்ட
திருவரங்கன் தாரமிவள்
தனக்கேயாம் என்றுரைத்தான் திருமாலே
இவள் தொடுத்து தானணிந்த
ஒருமாலை தினமும் தன்
தோளின் திருமாலை என்றுறைத்தான்

தெளிந்தாண்டார் பெரியாழ்வார்
பெற்றெடுத்த பெண்பிள்ளை
இல்லை இவள் கண்டெடுத்த
துளசிக் கிள்ளை
பெரியாழ்வார் கண்டெடுத்த
பெண்ணாழ்வார் சின்னாழ்வார்


அன்புடன்

தமிழ்த்தேனீ

குழந்தைகள் ஜாக்கிறதை

" குழந்தை வளர்ப்பு "




குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கடினமான ஒரு காரியம்
அதிக கவனம் தேவை தாய்மார்களுக்கு


இது போல ஒரு சம்பவம் நடந்த்தது
அதை என் வருத்தம் சேர்த்து எழுத ஆரம்ப்பித்தேன்
அது கவிதையாய் த் தான் வந்தது
அப்படியே அளித்துள்ளேன்

ஒரு வயதுக் குழந்தை
அன்பாக தூளி கட்டி
ஆரிரோ பாடி தூங்கவைத்து
அலுப்பினால் கண்ணயர்ந்த்தாள்
அந்தத் தாயும்
அழுகை சத்தம் கேட்டது
அயர்வான தூக்கத்திலும்
எழுந்து வந்து தாய்மையுடன்
மேலும் கொஞ்ஜம் தாலாட்டி
கொஞ்ஜம் பாலுமூட்டி
தூங்கவைத்தாள் தாயவளும்
தானும் சேர்ந்த்து சோர்ந்து
தூங்கிப் போனாள்

தூக்கம் என்னும் கொடிய காலன்
துக்கத்தை அளித்தறியாமல்
துயில் கலைந்து தெழுந்து பார்த்தால்
தூளியிலே காலனவன் தேள் வடிவில்
குழந்தையினை தீண்டித் தீண்டி
குழந்தையின் அழுகைக் காரணம் புரியாமல்
தூங்கியதென்றெண்ணிக் துயில் கொள்ளப் போனாளே
குழந்தை மூச்சடக்கி விஷமேரி
நீங்காத் துயில் கொள்ள காரணமானாளே
அல்ட்ஷியமென்று சொல்ல மாட்டேன்
இறந்த்தை துயிலென்றெண்ணி

சேயதனைத் தவற விட்ட தாய்தானே
விதியின் மேல் பழி போட்டு பயனென்ன
வருமுன் காப்பதற்கு வழி கண்டு
காத்திடுவீர் குழவிகளை
ஜாக்கிறதை ஜாக்கிறதை ஜாக்கிறதை


அன்புடன்
தமிழ்த்தேனீ

மழையின் குழப்பம்

" மழையின் குழப்பம் "

மழைக்கு ஒரு குழப்பம்
பெய்வதா வேண்டாமா...?
பெய்தால் எப்போது பெய்வது
எங்கு பெய்வது ?
ஒருவன் வேண்டிக் கொள்கிறான்
இறைவா இன்று மழை பெய்யக் கூடாது
குப்பை அள்ளிப் பிழைப்பவன் நான்
குப்பைகள் நனைந்து விட்டால்
வயிறு காய்ந்துவிடும்

மற்றொருவன் வேண்டுதல்
இறைவா இன்றாவது மழை பெய்ய வேண்டும்
குடைகள் விற்கவே இல்லை
குடை தயாரிப்பவர் பட்டினி கிடக்கிறார்

விவசாயி வேண்டிக் கொள்கிறார்
நட்ட விதை முளைக்க மழை வேண்டும்

பயிர்கள் முற்றி வளர்ந்தவுடன்
மழை பெய்ய வேண்டாம் கதிர் அறுக்கும் வரை
விற்றால்தான் பிழைக்க முடியும்
குழ்ந்தை இன்னிக்கு மழை பெய்தால்
பள்ளிக்கூடம் விடுமுரை மழை பெய்யணும்

மாரி மாரி மக்கள் வேண்டுதல்
குழம்பிப் போனது மழை

வேண்டாத இடத்தில் மழை
வெள்ளப் பெருக்கு
வேண்டிய இடத்தில் இல்லை மழை
தன்ணீஈப் பஞ்ஜம்

என்னதான் செய்யும் மழை
எப்போது பெய்யும் மழை
மழைக்கு ஒரு குழப்பம்
அன்புடன்
தமிழ்த்தேனீ

அணைக்கட்டு

அணைக்கட்டு

மூளை அணைக் கட்டில்
முழுவதுமாய் நிரம்பி
வெளியேறத்துடி துடிக்கும்
கருத்து மழை
வான வெளியினிலே
வலம் வரும் பேறரிவு
பெய்திட்ட பெரு மழையால்
மூளை அணைக்கட்டில்
முழுவதுமாய் நிரம்பி
வெளியேறத் துடி துடிக்கும்
கருத்து மழை

இன்னுமோர் சொட்டு வீழ்ந்த்தாலு ம்
உடைத்துக் கொள்ளும் பக்க சுவர்
வெடித்து சிதறும் கனம் மிக்க
பக்க சுவர்
மடை திறக்க வழியில்லை
ஏற்கெனவே பெய்த மழை
வெள்ளம் நிரம்பிய ஊர்
வெளியேற்றியே ஆகவேண்டிய
அபாய நிலை அணைக் கட்டில்

தானமளிக்க தயார் நானென்றாலும்
தாங்குதற்கு தகுதியான தருமிகளை
தானம் வாங்தற்கு தகுதியான
தமிழ் விரும்பிகளை
தேடித் தேடி அலைகின்றேன்
சீக்கிறம் வாருங்கள்
அபாய அறிவிப்பு
கன அடி அளவு கோல்
காட்டுதிந்த்த பயங்கரத்தை
அணைக்கட்டு
அன்புடன்
தமிழ்த்தேனீ

மனோ கரம்

மனோ கரம்

மின்சாரம் தடைப் பட்டது
இருட்டிலும் எழுதிக் கொண்டிருந்தேன்
என் சாரம் தடைப்படவில்லையே
எண்ண வேகத்துக்கு ஈடு கொடுத்து
இருட்டிலும் எழுதிக் கொண்டே இருந்தேன்
எத்தனை வருட எழுத்துப் பழக்கம்
பார்த்து விடுவோம் ஒரு கை
இருட்டிலும் பிசகாது என் கையெழுத்து
ஒரு அசாத்ய தன்னம்பிக் கைதான்
இருட்டிலும் எழுதிக் கொண்டிருந்தேன்
எத்தனை தடைகள் வந்தாலும்
அத்தனையும் தகர்த்தெறிந்து
நான் சொல்ல வந்த ரகசியத்தை
நேரில் சொல்ல இயலாமையினால்
எழுதியே ஆகவேண்டுமென்ற
கட்டாயம் எனக்குண்டு
இருட்டிலும் எழுதிக் கொண்டிருந்தேன்
மின்சாரமென்ன யார் ,எவை,
தடுத்தாலும் சொல்லாமல்,
எழுதாமல் விடப் போவதில்லை
எத்தனை இடர்கள் எதிர்ப் பட்டாலும்
எடுத்த காரியம் முடித்தே தீருவேன்
என் மனவுறுதி யாருக்கும் தெரியாது
புறிந்து கொள்ள வேண்டும் எல்லோரும்
அதற்காகவே நிருத்தாமல்
இருட்டிலும் எழுதிக் கொண்டே இருக்கிறேன்
புறிந்து போனதோ என் உறுதி
மின்சாரம் தானாய் வந்தது
அதற்குள் எழுதி முடித்துவிட்டேன் நான்
பாராட்டு தமிழ்த்தேனீ மனவுறுதி
அதிகம்தான் உனக்கு பலமான குரலொன்று
எனக்குக் கேட்டது யாரது
என்னைப் புறிந்து கொண்டு பாராட்டுவது
வேறுயார் புறிந்து கொள்ளப் போகிறார்
பாராட்டப் போகிறார் அடேடே நானேதான்
,என் மனக் குரல்தான்
அது சரி மின்சார வெளிச்சத்தில்
எழுதியதை மீண்டும் படித்து சரிபார்க்க
படிக்க ஆரம்பித்தேன்
என்ன இது ஒரு எழுத்தும் தெளிவாக
புரியவில்லை எழுத்துரு மாறிவிட்டதா
என் கையெழுத்து எனக்கே புரியவில்லை
ஆமாம் நான் என்ன ரகசியம்
சொல்லவேண்டுமென்றிருந்தேன்
அதுவும் மறந்துவிட்டதே என் செய்வேன்…?

அன்புடன்
தமிழ்த்தேனீ

Thursday, August 9, 2007

சிறந்த பக்தன்

ஞானி என்பவன் யார்...?
முற்றும் துறந்தால்தான் முனிவனா...?
இதற்க்கும் ஒரு கதை உண்டு

நாரதர் தன்னைவிட பக்திமான் உலகிலே
யாருமில்லை என்று கர்வம் கொண்டு
நாராயணனிடம் போய் சொன்னாராம்
சதா சர்வ காலமும் நாராயணா நாராயணா
என்று உன் திருநாமம் உச்சரிக்கும் என்னைவிட
பக்திமான் யாராவது உல்கில் இருக்கிறார்களா?
என்று கேட்டாராம்
அதற்கு நாராயணனும் பூலோகத்தில் சென்று பார்ப்போம்
என்று கூறி அழைத்து வந்தாராம்

ஒரு ஏழை விவசாயி காலையில் கலப்பையை
எடுத்து கன்ணில் ஒற்றிக் கொண்டு
இறைவா அனைவரையும் காப்பாற்று
என்று சொல்லி விட்டு வயலுக்குப் போய் உழுதுவிட்டு
மதிய உணவுக்கு முன் அதே மாதிரி ஒரு முறை
இறைவனைத் தொழுதுவிட்டு பின் மீண்டும்
இரவு படுக்கப் போகும் போதும் அதே மாதிரி
தொழுதுவிட்டு படுத்துக் கொண்டானாம்

நாராயணன் நாரதரிடம்

இவர்தான் உம்மைவிட உயர்ந்த பக்தன்
என்று கூற நாரதர் எப்படி என்று வினவினாராம்
அதற்க்கு நாராயணன்
ஒரு கின்ணத்தில் தளும்பத் தளும்ப
எண்ணையை ஊற்றி ஒரு சொட்டு கூட
கீழே விழாமல்
மூவுலகமும் சுற்றி வா நாரதா அப்போது உன்னை
உயர்ந்த பக்தன் என்று ஒத்துக் கொள்கிறேன் என்றாராம்

நாரதரும் ஒரு சொட்டு எண்ணை கூட கீழே விழாமல்
மூவுலகும் சுற்றிவிட்டு நாராயணனிடம்
வந்து இப்போது ஒத்துக் கொள்கிறீரா என்று வினவ
நாராயணன் ஆமாம் இந்த மூவுலகப்
ப்ரயாணத்தில் எத்தனை முறை நாராயண நாமம்
உறைத்தீர் என்று கேட்க ஒருமுறைகூட
நாராயண நாமம் சொல்லாமலே மூவுலகும் சுற்றி வந்ததை
எண்ணி வெட்கப்பட்டாராம்
இப்போது சொல்லுங்கள்
எவ்வளவோ ப்ரச்சனைகள் இருக்கும் போதும்
அந்த மனிதன் மூன்று முறை
என்னை நினைத்தானே சிறந்த பக்திமான்
நீரா அல்லது அவனா ....?
என்று
நாரதர் வெட்கித் தலை குனிந்தாராம்

அதனால் சூழ்நிலைக் கைதிகளாய் நாம் இருந்தாலும்
அதற்கு நடுவே நம்மை சமன்ப் படுத்திக் கொண்டு வாழுகிறோமே
நாம் எவ்வளவோ பரவாயில்லை
என்பது என் கருத்து

அன்புடன்
தமிழ்த்தேனீ

ஆதி சங்கரர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி

ஆதி சங்கரர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி

அவர் ஒரு மண்டபத்தில் த்யானத்தில்
ஆழ்ந்திருந்தார்

நிஷ்டை கலைந்து அவர் பார்க்கும் போது
ஒரு பல்லி தலைகீழாக விழுந்து துடித்துக்
கொண்டிருந்த்தை அவர் பார்த்து விட்டு
அப் பல்லியை எடுத்து சரியாக
விட்டு விட்டு மீண்டும் நிஷ்டையில்
ஆழ்ந்தாராம்

மீண்டும் ஒரு முறை நிஷ்டை கலைந்து
அவர் பார்க்கும்போது
அப் பல்லி சிறிய பூச்சிகளை உணவாக
உட்கொண்டிருந்ததைப் பார்த்தாராம்
அப்போது அவர் புறிந்து கொண்டதாகச் சொன்ன விஷயம்

"எந்த ஒரு நல்ல செயலிலும் தீமை உண்டு
எந்த ஒரு தீய செயலிலும் ஒரு நன்மை உண்டு "

ஆக நன்மையில்லாமல் தீமை இல்லை
தீமை இல்லாமல் நன்மை இல்லை

ஒரு சொல் உண்டு ஸமஸ்க்ருதத்தில்

" யதா ராஜா ததா ப்ரஜா "
என்று

ஆளுபவர்கள் அனியாயம் செய்யும்போது
அப் பாவங்கள் மக்களின் மேல் தான் விழும் என்று
சொல்வார்கள்

அதனால்தான்

ராம் ராஜ்யம் என்று கம்பர் வர்ணிக்கிறார்

விதி வலியது அதை மீற
அதை எழுதிய ப்ரம்மனே சக்தியற்றவன்
இதைத்தான்

உபநிஷத்துக்களும், வேதங்களும்,
சொல்கின்றன
ஆகவே ஆண்டவன் நம்மை சோதிக்கும் போதெல்லாம்

" ஆண்டவன் நம்மைப் படுத்துகிறான்
என்று எடுத்துக் கொள்வதைவிட
ஆண்டவன் நம்மைப் பண்படுத்துகிரான்
என்று எடுத்துக் கொள்வோமானால் "


ஓரளவு நமக்கு மன சாந்தி கிடைக்கும்


அன்புடன்

தமிழ்த்தேனீ

http.thamizthenee.blogspot.com

Monday, August 6, 2007

தமிழ் வலைபதிவர் பட்டறை

அன்புடன் நண்பர்களே கடந்த 5ம் தேதி ஞாயிற்றுக் கிழமை
சென்னை பல்கலக் கழக வளாகத்தில்
தமிழ்த்துறை அரங்கில் நடந்த
தமிழ் வலைப் பதிவுபட்டறை
விழாவுக்கு சென்றிருந்தேன்
அங்கு இணையத்தில் ஏற்படும் சந்தேகங்களை மிகத் தெளிவாக விளக்கினர்
புதிய மென்பொருட்களை உருவாக்கியவர்கள் அவர்களுடைய மென் பொருள்
பற்றிய செய்திகளுடன் .செய்முறை,விளக்கப் படங்களுடன் காட்டினர்
வந்திருந்த அனைவருக்கும் பேச விருப்பப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்கப்
பட்டது
அடியேனும் 2 நிமிடம் பேச் அனுமதி பெற்று
ஒரு வாழ்த்துபா படித்தேன்

மாயத் திரை

சாயப் பட்டறை கேள்விப் பட்டிருக்கிறேன்

தமிழ் நேயப் பட்டறை இங்குண்டு

என்று பறை அறிவித்தனர்

இக் குழாமின் நடத்துனர்கள்

ஆயுதப் பட்டறையிலே சாணை தீட்டுவார்கள்

இது மூளையை சாணை தீட்ட

வந்த தமிழ் நேயப் பட்டறை



வலைப் பூக்கள்,வலைக் குழுமம்

வலைத் தளம் ,வலைஇணையம்

வலைத் தொடர்பு

எல்லாமே தெரிந்து கொள்ள

வலைப் பட்டறை நாடி வந்தோம்



கையிலும் கொண்டு வரவில்லை

பையிலும் ஏதுமில்லை

மையிலும் எழுதவில்லை

பொய்யிலே வாழுகின்றோம்

பொய்யென்றால் கற்பனை

கற்பனைஎன்றால் பொய்

மெய்யைப் பொய்யாக்கி

பொய்யை மெய்யாக்கி

மொத்தமும் கணிணிக்குள்

ஏற்றி வைத்துவிட்டோம்

மறந்து போன மூளையின்

மறு அவதாரம் இந்தக் கணிணி

மாலிக்யூலில் உள்ள செய்தி

நினைவுக்கு வரமறுக்கிறது

கணிணியில் மொத்தமிருப்பதால்

சொந்த மூளைதனை அடகு வைத்தோம்

கணிணிப் பெட்டியிலும்

சின்னத் தொலை பேசியிலும்

மனக் கணக்கு மறந்துபோனது

கையெழுத்து மறந்துபோனது

மொழி பற்றிக் கவலையில்லை

எம்மொழியில் அடித்தாலும்

நம் மொழியில் மாற்று மிந்த

கணிணிப் பெட்டி

செய்யும் மாயத்தாலே

விலாசங்கள் தொலைதொடர்பு எண்கள்

நினைவுக்கு வரவில்லை

அத்தனையும் கணிணியிலே

நம் மூளைக்கு வேலை இல்லை

அது மட்டும் காலை வாராமலிருந்தால்

கணிணியே நம் கையில்

உலகமே நம் பையில்



நாமெல்லாம் அதன் கையில்



இது கணிணி யுகம்

அதனால் நாம் சுகம்

அன்புடன்

தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com

Saturday, August 4, 2007

நிழல் துரத்தும் நிஜங்கள்

“ நிழல் துரத்தும் நிஜங்கள் “

பூக்கடையில் கால் வைத்தேன்
சாக்கடை வாசம்
சாக்கடை ஓரம் பூக்கடை உபயத்தால்
சாக்கடை மீறிய பூக்கடை வாசம்
சுயநலம் ஒரு நாறும் மலம்
நாற்றமென்றால் மணம்
மணம் என்றால் நாற்றமா ?
நல் நாற்றமா..? துர் நாற்றமா..?
நாரோடு கூடி பூக்களும் மாலையாகும்,
இறையின் தோளுக்கு சேலையாகும்
பொதுநலத்தோடு கூடினால்
மனிதற்க்கு விடிவுகாலம்


ஒவ்வொரு ஜனனமும் மலம் தானே
தன் மலத்தை தானே அள்ளும்- த்யாகம்

என்றால் அது தாய்மை ஒன்றுதானே
தன்னலமில்லாத தாய்மைக்கு மட்டும்
தானது கிட்டுமென்றால் நாமும்
ஏன் விடக்கூடாது தன்னலத்தை…?

மலம் உண்ணும் பன்றியதை.
குளிர்சாதன அறையில் வைத்து
பக்குவமாய் பரிந்தூட்டி
கொழுக்க வைத்து தாமுண்ணும்
சாகசங்கள் புறிகின்ற மானுடரே

நமக்காய் வேண்டுமென்றால்
வராக அவதாரமென்போம்
தானெடுத்த வாந்தியை தானே உண்ணுகின்ற
நாயினையும் பைரவர் என்போம்
பரிமேலமர்ந்து பயணிக்கும் மனிதர்
பக்தி வந்தால் ஹயக்ரீவரென்பார்
வளைஎலி, கடும் புலி,கொடுஞ் சிங்கம்,
அத்தனையும் கடவுள்களின் வாகனமென்போம்
கடலிலே வாழுகின்ற கொழுத்த
கொழுமீன் கொடு மீனை நாமுண்போம்
வலை போட்டு வளைத்தெடுத்து
வற்றவைத்து பொறிய வைத்து
வகை வகையாய் நாமுண்போம்
மச்சாவதாரமும் அது தானென்போம்,
மனிதரையே குரங்குகளின்
மாறு கால வளர்ச்சியென்போம்
பால் கொடுக்கும் பசுவினையும்
கொடுக்கும் வரை லக்ஷ்மியென்போம்
குலம் காக்க வந்த கோமாதா
குலமாதா வென்போம்
மடி பால் வற்றிப் போனால் அடிமாடென்போம்

நடப்பன ,ஊர்வன ,பறப்பன
அத்தனையும் நாமுண்போம்
நம்பிக்கை எனும் விதையை
நயமாய் நாம் தூவி நாடகமாய்
தெய்வமென்போம், வாகனமென்போம்

இனி இல்லை உபயோகம் என்றுணர்ந்தால்
அன்னையென்ன ,தந்தையென்ன,அண்ணனென்ன
தம்பியென்ன, மனைவியென்ன,கணவனென்ன
மக்களென்ன ,பாசமென்ன ,நேசமென்ன
அன்பு என்ன பண்பு என்ன
அத்தனையும் பட்டுப் போகும்
அடிமாடாய் ஆகிப் போகும்


ஆக மனிதன் தனக்கு உபயோகப் படும் என்று
தெரிந்தால்தான் வைத்துக் கொள்வான்
என்பது எழுதப் படாத விதி
சுயநலம் அது மட்டுமே மேலோங்கிக் கிடக்கும்
மனித அவலம் இச் சிறுகதையில்
மீண்டும் ஒருமுறை உணர்த்தப் பட்டிருக்கிறது
எத்தனை முறை உணர்த்தினாலும்,
உணர்ந்தும் உணராதவர் போல் இருப்பவர் மனிதர்,
உணர்ந்ததை காட்டிக் கொண்டால்
தானும் கஷ்டப் படவேண்டுமே

மனிதன் என்றுமே சுயநலவாதிதான்
மாற்றமுடியாதவன்
மனிதனின் நிழல் கூட சுயநலத்தோடு தான்விழுகிறது
மனிதனின் நிழல்கூட மற்றவரைத் துரத்தும்
பேய்கள்தான்
மனிதம் வீழ்கிறது அதனால் நிழல் துரத்துகிறது

அன்புடன்

தமிழ்த்தேனீ