திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Sunday, August 12, 2007

மனோ கரம்

மனோ கரம்

மின்சாரம் தடைப் பட்டது
இருட்டிலும் எழுதிக் கொண்டிருந்தேன்
என் சாரம் தடைப்படவில்லையே
எண்ண வேகத்துக்கு ஈடு கொடுத்து
இருட்டிலும் எழுதிக் கொண்டே இருந்தேன்
எத்தனை வருட எழுத்துப் பழக்கம்
பார்த்து விடுவோம் ஒரு கை
இருட்டிலும் பிசகாது என் கையெழுத்து
ஒரு அசாத்ய தன்னம்பிக் கைதான்
இருட்டிலும் எழுதிக் கொண்டிருந்தேன்
எத்தனை தடைகள் வந்தாலும்
அத்தனையும் தகர்த்தெறிந்து
நான் சொல்ல வந்த ரகசியத்தை
நேரில் சொல்ல இயலாமையினால்
எழுதியே ஆகவேண்டுமென்ற
கட்டாயம் எனக்குண்டு
இருட்டிலும் எழுதிக் கொண்டிருந்தேன்
மின்சாரமென்ன யார் ,எவை,
தடுத்தாலும் சொல்லாமல்,
எழுதாமல் விடப் போவதில்லை
எத்தனை இடர்கள் எதிர்ப் பட்டாலும்
எடுத்த காரியம் முடித்தே தீருவேன்
என் மனவுறுதி யாருக்கும் தெரியாது
புறிந்து கொள்ள வேண்டும் எல்லோரும்
அதற்காகவே நிருத்தாமல்
இருட்டிலும் எழுதிக் கொண்டே இருக்கிறேன்
புறிந்து போனதோ என் உறுதி
மின்சாரம் தானாய் வந்தது
அதற்குள் எழுதி முடித்துவிட்டேன் நான்
பாராட்டு தமிழ்த்தேனீ மனவுறுதி
அதிகம்தான் உனக்கு பலமான குரலொன்று
எனக்குக் கேட்டது யாரது
என்னைப் புறிந்து கொண்டு பாராட்டுவது
வேறுயார் புறிந்து கொள்ளப் போகிறார்
பாராட்டப் போகிறார் அடேடே நானேதான்
,என் மனக் குரல்தான்
அது சரி மின்சார வெளிச்சத்தில்
எழுதியதை மீண்டும் படித்து சரிபார்க்க
படிக்க ஆரம்பித்தேன்
என்ன இது ஒரு எழுத்தும் தெளிவாக
புரியவில்லை எழுத்துரு மாறிவிட்டதா
என் கையெழுத்து எனக்கே புரியவில்லை
ஆமாம் நான் என்ன ரகசியம்
சொல்லவேண்டுமென்றிருந்தேன்
அதுவும் மறந்துவிட்டதே என் செய்வேன்…?

அன்புடன்
தமிழ்த்தேனீ
Post a Comment