திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, April 12, 2012

நந்தன வருடப் பிறப்பு


நாளை 13/04/2012 அன்று சித்திரை மாதத்தில் வெள்ளிக்கிழமை

உத்திராட நக்ஷத்திரத்தில் சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு ப்ரவேசம் செய்கிறார். இந்த நேரம் சுத்தவாக்கிய பஞ்சாங்கப்படியும் , திருக்கணிதப் பஞ்சாங்கப்படியும் நந்தன வருஷ பிறப்பு.

நேரங்கள் சற்றே மாறுபடும். நந்தன வருடம் பிறக்கும் இதே நன்நாளில்தான் விஷுக்கனியும் கொண்டாடுகிறார்கள்



 “ஆநந்ததா நித்யம் ப்ரஜாப்ய:பலசஞ்சயை:

நந்தனாப்தே அஸ்வஹானி:

ச்யாத் கோஸ தான்ய வினாஸக்ருத்”

  என்பது நந்தன வருடப் பிறப்புக்குரிய பலச்ருதி


ராஜா , மந்திரி, சேனாதிபதி, அர்க்காதிபதி,மேகாதிபதி  எல்லாவற்றிற்கும் சுக்கிரன்தான்   அதிபதி. சஸ்யாதிபதி சந்திரன், தான்யாதிபதி சூர்யன்,ரசாதிபதி புதன்,நீரசாதிபதி சந்திரன்

நாம் பொதுவாகவே சூரியனின் சுழற்சியைக் கொண்டுதான் காலங்களைக் கணிக்கிறோம், சூரியனின் தேர்ச்சக்கரம் சம்வத்திர ரூபம் என்று சொல்லுவார்கள், காலை ,நடுப்பகல், பிற்பகல், என்கிற தினப் பிரிவுகளாகிய மூன்றும் இருசுக் கோர்த்திருக்கும், இடமாயிருக்கும்,


சம்வத்திரம். பரிவத்சரம், இடா வஸ்திரம், அனுவஸ்தரம்,இத்வத்ஸரம்
ஆகி ஐவகை வருஷங்கள் அந்தச் சக்கரத்தின் ஆரக் கால்கள் ஆகும்
இளவேனில்,(வசந்தருது) ருதுவேனில் (க்ரீஷ்மருது),கார்காலம்(வர்ஷ ருது), குளிர்காலம் (சரத்ருது), முன்பனிக்காலம் (ஹேமந்த ருது), பின்பனிக்காலம் (சிசிர ருது) , ருதுக்கள் ஆறும் வட்டக் கால்கள், , காயத்ரீ,ப்ருஹ்ருதி,உஷ்ணிக், ஜகதீ,த்ருஷ்டுப்,அனுஷ்டுப்,பங்க்தி, ஆகிய ஸப்த சந்தஸ்ஸூகள் எழு குதிரைகளாகும்,, அவற்றை அடிப்படையாக க் கொண்டுதான் வாரத்தின் ஏழு நாட்கள் பெயரிடப்பட்டன,


துருவனை ஆதாரமாகக் கொண்ட சிறிய அச்சு தேரின் பெரிய அச்சுடன் இணைக்கப்பட்டிருக்கிறது,சூரியனே தேவயான மார்கம் ”” “ அது அர்ச்சராதி மார்கம் எனவும் சொல்லப்படும், புண்ணிய கர்மாக்கள் செய்பவர் சொர்கம் செல்லப் பயன்படும் வழி ””” “’’””பித்ருயாணம்” “என்றும் தூமாதி மார்கம் என்றும் அழைக்கபடும்,


வராஹமிஹிரர் என்னும் வானியல் நிபுணர்" ப்ருஹத்சம்ஹிதையில்“   மேஷ சங்க்ரமண காலத்திலே சூரிய பகவானை நமஸ்காரம் செய்வது மிகவும் விசேஷம் என்று சொல்லுகிறார். சைத்ர விஷு புண்ணியகாலம் என்பது சித்திரை மாதப் பிறப்பைக் குறிக்கும், அதாவது சூரியன் முதல் ராசியான மேஷத்தில் ப்ரவேசிப்பது. சித்திரை முதல் நாள்தான் ராமபிரான் ராவணனை வெல்ல அகஸ்திய முனிவரிடம் உபதேசம் பெற்று, ஆதித்ய ஹ்ருதயம் படித்தார். ஆகவே இந்தப் புனித சித்திரை நன்நாளில் காலையில் எழுந்து நீராடி, சுத்தமான மனதுடன் இறைவனைப் ப்ரார்த்தித்து, ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது மிகுந்த பலனைத் தரும்.


சித்திரை மாதத்து உதய சூரியனின் கதிர்கள் தொடர்ந்து பனிரெண்டு நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பா சமுத்திரம் பாபநாசம் கோயிலில் உள்ள பாபநாச ஸ்வாமியின் மீது படுவதால், அந்த நேரத்தில் அங்கு வந்து வணங்கும் பக்தர்களின் பாபங்களையெல்லாம் தீர்க்கிறார் என்பது ஐதீகம்.


இந்த தினத்தைக் கேரள மக்கள் விஷுக்கனிஎன்று கொண்டாடுகிறார்கள். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற எந்த பேதமுமில்லாமல், முதல் நாள் இரவே குருவாயூர் கோயிலுக்குச் சென்று, அங்கேயே தங்கி, நள்ளிரவுக்குப் பின் சித்திரை மாதப் பிறப்பன்று விஷுக்கனி காணல் என்று வருஷ ஆரம்பத்திலே குருவாயூர் கிருஷ்ணனைக் கண்குளிரத் தரிசித்து, வருடம் முழுவதும் இனியதாக இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் மகிழ்வார்கள்.


நாமும் இந்த நந்தன வருஷப் பிறப்பன்று நந்த நந்தன நந்த லஹரீ”  என்று உளமுருகப் பாடி இறைவனைத் தரிசித்து இந்த வருஷம் நம் எல்லோருக்கும்  இனியதாக இருக்க, உலகமே மகிழ்ச்சியாக இருக்கப் ப்ரார்த்தனை செய்வோம்.


அன்புடன்
தமிழ்த்தேனீ