திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Saturday, September 1, 2007

தாயின் பெருமை

நம்முடைய தாய் தமிழ் ,
தாயை வணங்கிவிட்டு மற்ற அனைவரையும்
வணங்குவோம்
நம் தாயை அம்மா என்று அழைத்துவிட்டு
உலகில் உள்ள அனைத்து பெண்மணிகளையும்
தாய் என்னு அழைக்கலாம் தவறில்லை
ஆனால் ந்ம் தாயை அம்மா என்று அழைக்காமல்,
மதிக்காமல் இருப்பது தவறல்லவா?


சிரு வயது துறவி ஒருவர் ஒரு பாதையில்
நடந்து வந்து கொண்டிருந்தார்
எதிரே இந்தத் துறவியின் தாயும் தகப்பனும்
வந்து கொண்டிருந்தனர்
உடனே அந்த தகப்பனார் அச் சிறு துறவி
தன்னுடைய மகன் என்றும் பாராமல்

அச் சிறு துறவியின் காலில் விழுந்து வணங்கினார்

ஆனால் அச் சிறு துறவி தன்

தாயின் கால்களில் விழுந்து வணங்கினார்
இதுதான் முறை,தாயின் பெருமை

ஆகவே துறவு பூண்ட பின்னாலும்

அப்படிப்பட்ட உறவு உள்ளவள் தாய்
தாயிற்க்கு உள்ள மதிப்பு தான் உண்மை நிலை
அப்படிப்பட்ட தாயின் மதிப்பு தெரியாமல்
நாம் எல்லோருமே தற்காலத்தில்
மதிப்பு கொடுக்காமல் நடந்து வருகிறோம்
நாம் தாயையும் தமிழையும் எக்காலத்திலும்
மதிக்காமலோ ,அறிந்து கொள்ளாமலோ
இருக்கக் கூடாது

என்னுடைய வாலிபப் பருவத்தில்,திருமண வயதில்
ஒரு பெண் வீட்டார் எனக்கு பெண் கொடுக்க முன் வந்தனர்
மிக அதிகமான சொத்து, என்னை விட
அவர்களின் குடும்ப அந்தஸ்திலும்
மிகப் பெரிய வித்யாசம்,அந்தப் பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டிருந்தால்
காலத்திற்கும் உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கலாம்
அவர்கள் போட்ட ஒரு நிபந்தனை என்ன தெரியுமா...?
நான் என் தாயை விட்டு விட்டு அவர்களின் வீட்டு மாப்பிள்ளையாக வேண்டும் என்பதுதான்
என்னுடைய தாயாரும் இதற்கு சம்மதித்தார்,
என்னுடைய நலன் கருதி ,
நம்பினால் நம்புங்கள்,நான் அவர்களிடம்
சொன்ன ஒரே வார்த்தை
" என்னால் உலகில் உள்ள அனைத்துப்
பெண்களையும் தாயாய் மதிக்க முடியும் ,
ஆனால் என் தாயை மதிக்காமல்
இருக்க முடியாது, என் அம்மாவை
அம்மா என்றழைக்காமல்
இருக்க ,கவனிக்காமல் இருக்க நீங்கள்
கொடுக்கும் இந்த அந்தஸ்த்து
எனக்குத் தேவை இல்லை என்பதுதான் "

என்னை 'சரியான முட்டாள் " என்று
உங்கள் மனதில்
கூறுவது என் காதில் விழுகிறது

ஆயினும் இது போன்ற முட்டாளாகவே
இருக்க ஆசைப் படுகிறேன்

ஆகவே தமிழர்களே தாய் மொழி தமிழுக்கு
நாம் செய்யும் நன்றியே தமிழில் பேசுவது ,எழுதுவது,சிந்திப்பது
எந்தத் தாயுமே ப்ரதிபலன் எதிர் பார்ப்பதில்லை
அப்படிப் பார்த்தால் அவள் தாயுமில்லை
அது போல,
தமிழ் நம்மிடம் எதையும் எதிர் பார்ப்பதில்லை
ஆனால் நாம் தாயை மதிக்க வேண்டும்
அல்லவா,அதற்காகவாவது முயற்ச்சி செய்து
தமிழிலே, எழுதுங்கள்
இது உங்களின் அன்பான தமிழ்த்தேனி
என்னும் 60 வயது சிறுவனின் அன்பான
வேண்டுகோள்

அன்புடன்
தமிழ்த்தேனீ