திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Saturday, July 28, 2007

நாகரீகம்

உணர்ச்சி வசப் படுதல் என்பது மனிதர்க்கு
மட்டுமல்ல எல்லா விலங்கினங்களுக்கும் உண்டு,
உணர்ச்சி இருக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும்
உணர்ச்சி வசப்படுதல் பொதுவானது
,இதில் தமிழன் என்ன , ?,வேற்று மாநிலத்தவர் என்ன?,
வேற்று நாட்டவர் என்ன....?

ஒரு யானையை துன்புறுத்தும் போது
அந்த பெரிய உருவம் கொண்ட யானை
நம் கண் முன்னால் எப்படி துடிக்கிறதோ
அதே போலத்தான் நம் கண்ணுக்குத்
தெரியாத எத்தனையோ பூச்சிகள்,
ஓரளவுக்கு கண்ணுக்குத் தெரியக் கூடிய
எறும்பு போன்றவையும் துடிக்கும்
ஆனால் அந்த எறும்பு துடிப்பது நம்
கண்ணுக்குத் தெரியவில்லை அவ்வளவுதான்

உணர்ச்சிவயப் படுதல் ஒவ்வொரு
ஜீவ ராசிக்கும் ஏற்றவாறு அமைகிறது
நம் ரத்தத்தை உரிஞ்ஜிக் குடிக்கும் கொசு
அப்போது நமக்கு கோபம் வருகிறது ,
எரிச்சல் வருகிறது,
சரி ஆனால் நம் ரத்தத்தை அதாவது
அதன் உணவை உண்ணவிடாமல் நாம்
சில வாசனைப் பொருட்களாலேயோ,
வேரு சில உபகரணங்களாலேயோ
தடுக்கும் போது அந்தக் கொசுவுக்கு
எப்படி கோபம் வருகிறது என்று
நமக்கு புரியுமா? அதன் கோபம் நம்
கண்ணுக்குத் தெரியவில்லை என்கிற
ஒரே காரணத்தால் அது உணர்ச்சி
வயப் படவில்லை,கோபப் படவில்லை
என்று நாம் நினைக்க முடியுமா....?

அது போலதான் மனிதன் உணர்ச்சி வயப் படுகிறான்
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும்
உணர்ச்சி வயப் படுகிறார் என்பதே உண்மை
ஆனால் பக்குவப் பட்ட மனிதர் உணர்ச்சி வயப் பட்டாலும் அதை வெளிக் காட்டும் முறையும் பக்குவமாக இருக்கும்

சிரித்துக் கொண்டே கழுத்தறுப்பவரையும்
கோபமாகப் பேசிக் கொண்டே நல்லது
செய்பவர்களையும் நாம் கண்டிருக்கிறோம்

ஒரு கதை நினைவிற்கு வருகிறது

ஒரு சாது ,மிகவும் சாது ,அவரிடம் போய்
ஒரு பாமரன் மிக ஆச்சரியமாக ,
சாமீ உங்களூக்கு கோபமே வராதா..?என்று கேட்டான்
அவரும் மிக இனிமையாக வராது அன்பனே என்றார்,
ஆனால் அந்தப் பாமரனுக்கு சந்தேகம் தெளியவில்லை
அது எப்படி சாமி ,உண்மையிலேயே உங்களுக்கு
கோபம் வராதா என்றான்
இல்லையப்பா வராது என்றார் சாது,
இது போல மாற்றி மாற்றி பலமுறை கேட்டவுடன்
அந்த சாது அடேய் போகிறாயா இல்லை உன்னைக் கொன்றுவிடட்டுமா? என்று ஆக்ரோஷமாகப் பாய்ந்தார்....
இப்போது புறிகிறதா எதற்கும் ஒரு அளவு உண்டு
உணர்ச்சி வயப் படுதலும் அவ்வாறே

மிகைப் படுத்துதல் ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு அளவு கோலைக் கொண்டது
ஒவ்வொரு மனிதற்கும் மாறுபடும்

சிலர் ஒரு திறமையான நடிப்பை கண்டு ரசித்து,
அல்லது ஒரு நல்ல கவிதையைப் படித்து
ரசித்து உணர்ச்சி வயப் பட்டு பாராட்டுவதுண்டு
அப்படிப் பாராட்டுதல் ஒவ்வொருவருக்கு
ஒவ்வொரு பாணி ,வழக்கமாக இருக்கும்
என் நண்பன் ஒருவன் ஏதாவதொரு கதை,
அல்லது கவிதை , எழுதிக் காண்பித்தாலே
அவன் மனதுக்கு பிடித்துவிட்டால்
உடனே ஓடி வந்து என்னக் கட்டிப்பிடித்து
கண்களில் நீர் ததும்ப ஆஹா
ஆஹா ரொம்ப நல்லாருக்கு என்று
என்னைப் பாராட்டிவிட்டு எல்லோரிடமும்
போய் அடடா என்னமா எழுதறான்,
இதெல்லாம் ஒரு அருள்தான் என்று
சொல்லி மற்றவர்களையும்
அதைப் படிக்கச் சொல்லி மகிழ்வான்
இது அவன் பாணீ

இன்னொருவன் இருக்கிறான் இதே
நிகழ்வு ஏற்படும் போது அவன் என்
அருகில் வந்து முதுகிலே ஓங்கி
ஒரு அறை விடுவான் ,
இது அவனுடைய பாராட்டும் பாணி
வலித்தாலும் அவன் பாராட்டுகிறான்
என்னும் உணர்வு அவனைக் கடிந்து
கொள்ள இடம் கொடுக்காது

என்ன செய்வது அது போல, சில ரசனைகள்
தேவையான அளவு இருக்கும்
சில ரசனைகள் தேவைக்கு அதிகமாக இருக்கும்

உலகில் உள்ள எல்லா மொழிப் படங்களையும்
பாருங்கள் எல்லாமொழிப் படங்களிலும்
உணர்ச்சி வயப் பட்டு கத்தியை ,,
அல்லது துப்பாக்கியை அல்லது ஏதாவதொரு
ஆயுதம் ஏந்தாமல் இருக்கிறார்களா...?

பிறகென்ன

தமிழன் மிகைப் படுத்துவான் ,
எளிதில்உணர்ச்சி வயப் படுவான்
என்று எடுத்துக் கொள்ள வேண்டும்
எல்லா மனிதர்களும் உணர்ச்சிவயப் படுபவர்களே, மிகைப்படுத்துபவர்களே
மற்றவரைப் பார்க்கும் போது தமிழன் எவ்வளவோ
பண்பட்டவன் என்றுதான் சொல்ல வேண்டும்

ஆனால் இந்த தனிமனித வழிபாடு (HeroWorship)
என்பதுதான் எல்லா நாட்டிலும் கேடு விளைவிக்கிறது ,
குறிப்பாக மனிதர்க்கு கற்பூரம் காட்டுதல்,
மலர் தூவுதல், கோயில் கட்டுதல் ,
இவையெல்லாம் அநாகரீகத்தின்
உச்சகட்டம் என்றுதான் நான் சொல்லுவேன்

சிந்து நதிக்கரையில் தோன்றிய நம்
நாகரீகம் இப்போது கூவம் நதிக் கரையில்
அடுக்கு மாடிக் குடியிருப்புகளாக
மாறி விட்டது
அதுதான் என் வருத்தமும் கூட
நாகரீகம் என்பது ,மாறலாம் ,ஆனால் வளரவேண்டும்
உண்மையாகப் பார்த்தால் நம் நாகரீகம்
ஒரு மாயப் போர்வையை போர்த்துக் கொண்டு
அழிந்து கொண்டிருக்கிறது
இதுதான் உண்மை

அன்புடன்

தமிழ்த் தேனீ