திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Monday, July 30, 2007

குரு

குரு
குரு என்பவர் எந்த தோற்றத்தில் வருகிறார்
என்பது முக்கியமே அல்ல
அவர் எப்படிப் பட்டவர் என்பதும் முக்கியமல்ல
ஒரு சரியான தருணத்தில் நம் அகக் கண்களைத் திறந்து
ஒரு சரியான வழிகாட்டுதல் மூலம் நம்மை ஆட் கொள்ளுபவர்கள் அனைவருமே குருஸ்தானத்தை அடைகிறார்கள்

ஒரு கதை ஞாபகம் வருகிறது

ஒரு பாமரன் கர்ப்பிணியாய் இருக்கும்
தன் மனைவியை விட்டுவிட்டு ஒரு ஆற்றின் அக்கரைக்குச் சென்று ,தன்னுடைய பணியை முடித்துவிட்டு திரும்பும் போது ,ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது
அக்கரையிலிருந்து அவசரச் செய்தி ,
கர்ப்பிணி மனைவிக்கு ப்ரசவ வலி
எடுத்து விட்டதாக.
இறைவா என் மனைவியையும்
குழந்தையையும் காப்பாற்று ,
என்னை எப்ப்டியாவது அக்கரைக்கு
அழைத்துப் போ என்று வேண்டிக் கொண்டிருந்தான்

ஆனால் ஆற்றின் சுழல் வேகத்தில் அக்கரைக்கு
செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த போது
ஆபத் பாந்தவன் போல்
ஒரு சிறுவன்அங்கு வந்து ...என்ன அக்கரைக்குப் போக வேண்டுமா...? வாருங்கள்
என்று அக்கரையோடு அழைத்தான் சிறுவன்

நம்மாலேயே இந்த வெள்ளப் பெருக்கில்
அக்கரை போக முடியாதே
இந்தச் சின்னஞ்சிறுவன் எப்படி அழைத்துப் போவான் ...?
நம்பிக்கை இல்லாவிடினும் நேர அவசரம்
கருதி ஆமாம் உதவி செய்ய முடியுமா?
என்று கேட்டான் பாமரன்

அதற்கு அச்ச் சிறுவன் வாருங்கள் அழைத்துப் போகிறேன்
என்று கன கம்பீரமாய் கூறிவிட்டு
என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்,
என் பெயர் ஆயன் ,ஆயன் ,ஆயன் என்று
என் பெயரைச் சொல்லியபடியே வாருங்கள்
என்று சொல்லி நாராயணா நாராயணா
என்று கூறிக் கொண்டே
ஆற்றின் மேல் நடக்க்த் துவங்கினான்,இருவரும்
பாமரன் ஆயன் ,ஆயன் என்று கூறிக் கொண்டே
அந்த வெள்ளப் பெருக்கில் தன்ணீரின்
மேல் நடந்து போகத் துவங்கினர் மூழ்காமலே
முதலில் ஆச்சரியப் பட்ட பாமரன் பாதி வழியில்
திடீரென்று ,,யோசித்தான் சின்னஞ் சிறு இப்பாலகனே
நாராயணா ,நாராயணா என்று சொல்லும் போது தண்ணீரின் மேல் நடக்க முடிகிறதே ,
ஏன் நாமும் நாராயணா என்றே
சொல்லிக் கொண்டு நடக்கலாமே என்று எண்ணி
நாராயணா என்றான் ,உடனே தன்ணீரில் மூழ்கினான்
அப் பாமரனைப் பிடித்து தூக்கிய ஆயன்
என் பெயரை விட்டு விட்டு ஏன்
நாராயணன் பெயரைச் சொன்னீர்கள்
என்று கேட்க பாமரன் பதில் சொல்லத்
தெரியாமல் விழித்தான்

உடனே ஆயன் என்னும் அச்சிறுவன்

"எனக்கு நாராயணனைத் தெரியும்"
நான் அவன் பெயரைச் சொன்னேன்
உங்களுக்கு என்னைத் தானே தெரியும் ,
நான் தானே காப்பாற்றி
அழைத்துப் போகிறேன்
ஆகவே என் பெயரையே சொல்லுங்கள்
என்று சொல்ல பாமரன் ஆயன் ,ஆயன்
என்று சொல்லி அக்கரையை அடைந்தனர்
அவன் மனவிக்கு சுகப் ப்ரசவம் தாயும் சேயும் நலம்
அச்சிறுவன் அவர்களை ஆசீர்வதித்து

,யார் உனக்கு உதவி செய்கிறார்களோ அவர்களை நம்பு
அவரைத் தாண்டி அவருக்கு மூலம் எது என்று பாராதே
என்று சொல்லி விடை பெற்றான் ஆயன்

ரிஷி மூலம் நதி மூலம் பார்க்கக் கூடாது
என்பதன் அர்த்தமும் இதுதான்
குரு எப்படி இருக்க் வேண்டும் என்று
நீ முடிவு செய்யாதே
உருவு கண்டு எள்ளாதே
உன்னை மாணவனாக ஏற்றுக் கொள்ள நீ பக்குவப் படு

குருப் ப்ரம்மா ,குரு விஷ்ணு, குரு தேவோ
மஹேச்வரஹ:குருஸ் சாஷ்ஷாத் பரப் ப்ரும்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ:

அன்புடன்
தமிழ்த்தேனீ

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு திருவண்ணாமலை

என்னுடைய ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்


சென்னையிலுள்ள திருவண்ணாமலை சிவத் தலம்
ஸ்ரீவில்லி புத்துரிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்குள்
இருக்கும் இன்னொரு திருவண்ணாமலையைப் பற்றி
சொல்கிறேன் ,இது வைணவத் தலம்
இங்கு அருமையான ஒரு கோயில் உள்ளது
கீழே ஒரு அருமையான பெரிய குளம் உள்ளது
அதன் அருகே கரையில் ஒரு வினாயகர் உள்ளார்
அவருக்கு ஆதி வினாயகர் என்று பெயர்
அந்த வினாயகர் மிகப் பெரிய சிலா ரூபம்,
அதன் பக்கத்திலேயே, அருமையான மிகப் பெரும்
ஆலமரமும் வேம்பும் பலவருடங்களுக்கு முந்தையது இருக்கிறது
அந்த மரத்தின் கீழே நாகம் ப்ரதிஷ்டை செய்யப் பட்டு
இருக்கிறது, மேலே படிகளேறிப் போனால் மலை மீது
ஸ்ரீனிவாசர் ஆலயம் இருக்கிறது ,
அங்கு திருவண்ணாமலை ஸ்ரீனிவாசன் குடிகொண்டிருக்கிறான்
,மிகவும் தொன்மை வாய்ந்த அருமையான தலம்
அந்தக் கோயிலில் நின்று கொண்டு பார்த்தால்
ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் இயற்கயோடு ரசிக்கலாம்

ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அக் கோயிலுக்கு
மோட்டார் வாகனத்திலும், எல்லா வாகனங்களிலும் செல்லலாம் ,
செல்லும் வழியை இன்னும் சீரமைத்தால்
இயற்கயை ரசிப்பதற்க்கும், ஆன்மீக வாசிகளுக்கு
மிகவும் நிறைவான ஒரு திருத்தலம்,இந்த
திருவண்ணாமலை

அங்கு குளத்தின் கரையில் இருக்கும்
ஆதிவினாயகரின்
தோறறம் மிக அற்புதமாக இருக்கும்
அந்த ஆதி வினாகயகரை தரிசித்து விட்டு
பக்கத்திலேயே இருக்கும் வேம்பும் அரசும் பின்னி வளர்ந்த
பெரிய மரத்தின்கீழ் இருக்கும் நாக விக்ரகங்களை
வணங்கிவிட்டு,
அண்ணாந்ந்து பார்த்தால் ஸ்ரீனிவாசனின் கோயில்,
மலை மேல் தெரியும்,அங்கு பூக்கடைகள்,அதிலிருக்கும்
இன்னும் க்ராமீய வாடை போகாத பூக்காரிகள்
அவர்களிடம் சென்று மாலை வாங்கிக் கொண்டு
படி ஏறலாம்,மொத்தம்250 படிகள், 200 படிகள் ஏறியவுடன்
மங்கம்மா கோயில்,பத்மாவதி தாயாரை தரிசனம் செய்யலாம் அங்கு கைங்கரியம் செய்யும் ஒருவர் நமக்கு ஸ்ரீசுவர்ணம் இட்டுவிடுவார்
அன்னையன் தரிசனம் முடித்து ,அப்ப்டியே

- Show quoted text -

பாடங்கள்

என்வாழ்வில்
என்னை நெகிழ் வைத்த சம்பவங்கள்

சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் நடந்த
ஒரு நிகழ்ச்சி
நான் அடிக்கடி புரசைவாக்கத்திலிருந்த உணவு விடுதிக்கு
சென்று சுவையான சிற்றுண்டி சாப்பிடுவது என் வழக்கம்
இப்போது அந்தச் சுவை இல்லை அதனால்
அவர்களுடைய நலன் கருதி அந்த சிற்றுண்டி
விடுதியின் பெயரைத் தெரிவிக்காது
சம்பவத்துக்கு நேரிடையாக வருகிறேன்

அதே போல் ஒருநாள் அச்சிற்றுண்டி விடுதிக்கு
சென்று என்னுடைய ராஜ்தூத் துவிச்சக்கர வண்டியை
நிருத்திவிட்டு உள்ளே செல்ல முயலும் போது
யதேச்சையாக திரும்பிப் பார்த்தேன்
என்னுடைய ராஜ்தூத்தை ஒரு சிறுவன்
சுமார் 12 வயதிருக்கலாம்
ஒரு துணியை வைத்து நன்றாகத் துடைக்க
ஆரம்பித்தான், நான் அவன் என்னைப்
பார்க்கமுடியாத ஓரிடத்திலிருந்து
அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்
இருக்கும் ஒரு வண்டியையும் யாராவது
எடுத்துப் போய்விட்டால்...?
மனிதனுக்கு சந்தேக புத்திதானே...?

அந்தச் சிறுவன் மிக நன்றாக என்னுடைய
வண்டியைத் துடைத்துவிட்டு
நான்கூட அவ்வளவு நன்றாகத் துடைத்திருப்பேனா
என்பது சந்தேகமே..
ஒரு ஓரமாகப் போய் நின்று கொண்டான்
அவனையே பார்த்துக் கொண்டிருந்த நான்
வேண்டுமென்றே என்னுடைய வண்டியின் பக்கத்தில்
போய் நின்றேன்,உடனே அச்சிறுவன் ஓடிவந்து
அய்யா உங்கள் வண்டியை நன்றாகத் துடைத்திருக்கிறேன்
எனக்கு எதாவது பணம் இருந்தால் கொடுங்கள்
என்றான்
எனக்கு வேலையைச் செய்துவிட்டு கூலி கேட்கும்
அவன் குணம் பிடித்திருந்தது ,
(இப்படிப் பட்டவர்களை ஆராயும்போது சில விஷயங்கள்
கிடைக்கும் என்பது என் அனுபவ பூர்வமான உண்மை )
எந்த மனிதரை ஆராய்ந்தாலும் ஏதாவதொரு
அனுபவம் கிடைக்கும் அது நம் வாழ்க்கைக்கு
உபயோகமாகவும் இருக்கும்

அதனால் அவனை மேலும் ஆராய எண்ணி
முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு
என்னுடைய வண்டியை என் அனுமதி இல்லாமல்
துடைத்துவிட்டு ,பணம் வேறு கேட்கிறாயா?என்றேன் மிறட்டும் தொனியில்,
அதற்கு அவன் முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு அய்யா முடிந்தால் பணம் கொடுங்கள் ,
இல்லையானால் பரவாயில்லை ,
என்னை மன்னித்துவிடுங்கள்,உங்கள் அனுமதி
இல்லாமல் உங்கள் வாகனத்தை
நான் தொட்டது தவறுதான் என்றான்,
அவனுடைய அணுகு முறை மிகவும்
ரசிக்கத்தக்கதாகவும்
யோசிக்கத்தக்கதாகவும் இருந்தது
நான் அவனை மேலும் சோதிக்க
நான் உனக்கு பணம் தர முடியாது,
வேண்டுமானால் என்னுடன்வா உனக்கு
உணவு வாங்கித் தருகிறேன்
(இது என்னுடைய நெடுநாளைய பழக்கம்,)
என் தந்தையாரும் தாயாரும் அடிக்கடி
சொல்வார்கள்,
பணம் எவ்வளவு கொடுத்தாலும்,
இன்னும் கொடுக்க மாட்டார்களா
என்றுதான் நினைப்பார்கள்,உணவு கொடுத்தால்
வயிரு நிறைந்தவுடன் போதும் போதும்,
நீங்க நல்லாஇருக்கணும் அப்பிடீன்னு
வாழ்த்துவார்கள் அதனால்
கல்விக்கு உதவி செய் ,பணம் கொடுக்காதே என்பார்கள்

ஆதலினால் அவனை உணவு விடுதிக்கு
உள்ளே அழைத்தேன்
அவன் வர மறுத்தான்,பணம்தான்
வேண்டுமென்று மன்றாடினான்
நான் என்னுடைய கொள்கையைக் கூறியவுடன்
அரை மனதோடு என்னுடன் உணவு விடுதிக்குள்
வந்து நான் சொன்னவுடன் உட்கார்ந்தான்,
அவனுக்கு ஆறு இட்டிலிகளையும்,
எனக்கு தோசையையும்
கொண்டு வரச் சொல்லி அனுப்பினேன்
நான் ருசிக்கு சாப்பிடுபவன்,
அவன் பசிக்கு சாப்பிடுபவன்

எல்லாம் வந்தது,நான் அவனையும் சாப்பிடச்
சொல்லிவிட்டு
நானும் சாப்பிட ஆரம்ப்பித்தேன்
திடீரென்று அவனைப் பார்த்தேன்
அவன் ஒரு வாய் கூட சாப்பிடவில்லை
அவனுடைய அடம் ,அழிச்சாட்டியம்
எனக்குப் பொறுக்கவில்லை
என்னை அறியாது கோபம் வந்தது
டேய் என்ன நினைச்சிட்டிருக்கே மனசிலே
சாப்புடுடா,பணம் நிச்சயமாக தரமாட்டேன்
என்று கத்தினேன்

அனைவரும் என்னை திரும்பிப் பார்த்தனர்
என்னை சுதாரித்துக் கொண்டு
(அந்த உணவகத்தின் பணியாளர் என்னையே
கேலியாகப் பார்ப்பது போல் உணர்ந்தேன்)
என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு
என்னடா சாப்பிடேன் என்றேன்
அதற்கு அச்சிறுவன் அய்யா என்னை மன்னிக்க வேண்டும்
நான் இதை வீட்டுக்கு எடுத்துப் போய் சாப்பிடுகிறேன்
என்றான்,ஓ வெளியே எடுத்துப் போய் விற்றுவிட்டு
பணமாக மாற்றலாம் என்று பார்க்கிறாயா
அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்
என்றேன்

அச்சிறுவன் கூறிய பதில் என்னை
திடுக்கிட வைத்தது

அய்யா வீட்டில் என் தம்பி தங்கைகள்
பட்டினியாக இருக்கிறார்கள்
அவர்களுக்கும் கொடுத்து நானும்சாப்பிடுவேன்
நான் மட்டும் எப்படி அய்யா சாப்பிடுவது ..?
என்றான்.எனக்குப் பொட்டில் அறைந்தது போல்
இருந்தது,, ஆமாம் என் வீட்டில் இருப்பவர்கள்
சாப்பிட்டிருப்பார்களா..? இப்போதுதான்
அந்த நினைவே வருகிறது,உள்ளுக்குள்ளே
அவமான உணர்ச்சி, அத்தனை சிறிய வயதில்
அச்சிறுவனுக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சி
அன்பு பாசம்,நேசம் ,கடமை, அடடா


என்னுடைய கலவையான அதிர்ச்சியான ,சந்தோஷமான
அத்தனை உணர்ச்சிகளையும் மறைத்துக் கொண்டு
நான் அவர்களுக்கும் வாங்கித் தருகிறேன், என்றுசொல்லி
நிறைய உணவுப் பண்டங்கள் கட்டி எடுத்துக் கொண்டு
என்னுடைய மேஜையில் வைத்தபிறகு
அவன் சாப்பிட ஆரம்பித்தான்
நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்

என் கண்களில் கண்ணீர் மழை
பொழிந்து கொண்டே இருந்தது
எல்லோரும் என்னை வேடிக்கை பார்த்தனர்
நான் கவலைப்படவே இல்லை

அந்த ,சிறுவன் எனக்கு ஞானோபதேசம் செய்யவந்த
அச்சிறுவனை,கடவுள்,தீர்க்கதரிசி,ஞானி, எப்படி
வேண்டுமானாலும் கொள்ளலாம்
என்னுடைய அத்தனை உணர்ச்சிகளும்
, வெட்கித் தலை குனிந்திருந்தது

அன்புடன்
தமிழ்த்தேனீ

நெகிழ வைத்த சம்பவங்கள் 1.

திரு ஆண்டாளின் தோள்களிலே
கொஞ்ஜும் கிளிகள்
ரங்கா,ரங்கா,என்று கொஞ்ஜும்
ஸ்ரீரங்கம் ,திருவரங்கன் திருக் கோயில்
அமுதமான காவிரியால் சூழப்பட்ட
பொன்னி சூழ் திருவரங்கன் திருக் கோயிலின்,.
ராஜ கோபுரத்தை

பல வருடங்களாக , பலமுறை பல பேர்
நிர்மாணிக்க முயன்றும் , முடியாமல் நின்ற
ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை கட்டுவதற்காக
அப்போது இருந்த ஜீயர் 44வது பட்டம்,
ஸ்ரீவண் ஸடகோபஸ்ரீ வேதாந்த மஹா தேசிகன்
மிகவும் மிகவும் ப்ரயாசைப் பட்டு ,பலவிதமான
,முயற்சிகளை மேற்கொண்டார், அவருக்கு
வயது 70 க்கு மேல்
அந்த வயதிலும் அவர் பல பாடு பட்டு
நம்முடைய புராதனமான,
அமுதமான காவிரியால் சூழப்பட்ட
பொன்னி சூழ் திருவரங்கன் திருக் கோயிலின்
ராஜ கோபுரத்தை நிர்மாணித்தே ஆகவேண்டும்
என்று தீர்மானமாக முடிவெடுத்து
அதற்காக மொத்த தொகை எவ்வளவு
ஆகும் என்று தோராயமாக ஒரு திட்டமிட்டு
அத்தொகை பல நல்ல வழிகளில்
ஈட்டிவந்தார்,
இயல்பாகவே மிகவும் இரக்க மனம் கொண்ட
எடுத்த உன்னதமான பணியை
முடிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தினால்
மடத்தின் அனாவசிய சிலவுகளைக் குறைத்து
சிக்கனத்தை மேற்கொண்டு ஒவ்வொரு பைசாவையும்
ஒரு கோடி போல் எண்ணி சேர்த்துக் கொண்டே
தைரியமாக திருப் பணியை ஆரம்ப்பித்தும் விட்டார்

அப்போது ஆட்சியிலிருந்த திரு எம் ஜீஆர்
என்று அழைக்கப் படும் திரு எம் ஜீ ராமச்சந்திரன்
அவர்கள் ஒரு லக்க்ஷ ரூபாய் நன் கொடை
கொடுத்தார்,திரு இளைய ராஜா இன்னும்
பல நல்ல உள்ளங்கள், இந்த நல்ல திருப் பணிக்கு
பொருளுதவி செய்தனர்,
அப்படியும் பணம் போதாமல் இன்னும்
பணம்சேர்ப்பதற்கு பல நல்ல வழிகளில்
முயன்று கொண்டிருந்தார் ஜீயர் அவர்கள்

திருப்பணிகளும் நடந்து கொண்டே இருந்தது
சிக்கனத்தை மேற்கொண்டாரே தவிர
தினம் வரும் அன்பர்களுக்கு
திருவரங்கன்நாச்சியாரின் ப்ரசாதம் அளிப்பது,
உணவளிப்பது எதையும் நிறுத்தவில்லை

அந்த நேரத்தில்
ஒரு வயதான மூதாட்டி அங்கு வந்து
அவரிடம் ,
ஆச்சாரியனே எனக்கு ஒரு பத்து ரூபாய்
கொடுங்கள்,என்று கேட்டார்,
அச்சாரியனும் அந்த மூதாட்டியிடம்
ராஜ கோபுரம் கட்டுதற்க்கே
பொருள் போதாமையால் இன்னும்
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
என்னிடம் வந்து பணம் கேட்கிறாயே
இல்லை என்று பல முறை வற்புறுத்தி
சொல்லியும்
அந்த மூதாட்டி அங்கேயே நின்றுகொண்டு
மீண்டும் மீண்டும் அவரைத் தொந்தரவு
செய்து கொண்டிருந்தாள் பத்து ரூபாய்
கொடுக்கும் படி
அவளுடைய தொந்தரவு பொறுக்க முடியாமல்
உதவியாளரை அழைத்து அந்த மூதாட்டிக்கு
ஒரு பத்து ரூபாய் கொடுத்து அனுப்பும்படி
சொல்ல ,அவளுக்கு பத்து ரூபாய் கொடுக்கப் பட்டது

அந்த மூதாட்டி ஆசாரியனை மேலும் நெருங்கி வந்து
தன் தளர்ந்த குரலில் என்னை மன்னிக்க வேண்டும்
இந்த வயதிலும் நீங்கள் ராஜ கோபுர திருப்பணி செய்யும்
மகத்தான காரியத்துக்கு பல பெரிய மனிதர்கள்
பண உதவி செய்திருக்கிரார்கள்
ஆனால் என்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை
என்னிடம் பணம் இல்லை ஆனால் ராஜ கோபுர
த்ருப்பணிக்கு கொடுக்க மனம் மட்டும் உள்ளது
அதனால்தான் தங்களைத் தொந்தரவு செய்துவிட்டேன்
என்று கூறி
ஆச்சாரியனே இந்த அடியாளின் பங்காக
இந்தப் பத்து ரூபாயை ராஜகோபுர திருப்பணிக்காக
வைத்துக் கொள்ளுங்கள் என்று கதறினாள்
அங்கு திருவரங்கனும் நாச்சியாரும் ,ஆச்சாரியாரும்
நெக்குருகினர்
இந்தச் செய்திகேட்டு
அடியேனும் நெகிழ்ந்தோம்

மனமிருந்தால் வழியுண்டு

அன்புடன்
தமிழ்த்தேனீ