திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Tuesday, May 1, 2018

உண்மையில் உலகிற்கே கல்விபோதித்த இந்தியா இன்று தன்னுடைய அடையாளத்தை இழந்து நிற்க முக்கிய காரணமே ஆங்கிலேயர்கள் தான்.

இன்றைக்கு உலகின் டாப் 500 யூனிவர்சிட்டிகளில் ஒன்று கூட இந்தியாவில் இல்லை என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? ஆனால் 2500 ம் வருசத்துக்கு முன்பே உலகின் முதல் யூனிவர்சிட்டியை வைத்து உலகிற்கே பாடம் கற்ப்பித்த நம்மிடம் வைரமுத்து ஆங்கிலேயர்கள் வந்ததால் தான் இந்தியாவில் கல்வி தோன்றியதாக கூறுவதை பார்க்கும் போது அவ னெல்லாம் தமிழ் இலக்கியங்களை படித்து இருப்பானா என்று நினைக்கதோன்றுகிறது.

தன்னு டைய அடையாளத்தை கலாச்சாரத்தை இழ க்கும் நாடுகள் இறுதியில் தங்களின் சுய அறிவையும் இழந்து நிற்கும் என்பதற்கு இந்தியாதான் மிக சிறந்த உதாரணம்.அதன் அடையாளம்தான் வைரமுத்து மாதிரிஆட்களின் உளறல்கள்.

உலகின் 4 வது வல்லரசு நாடாகவும் பொருளாதார நாடாகவும் உயர்ந்துவரும் இந்தியா தன்னுடைய கல்வி அமைப்பில் கோட்டைவிட்டது எனபது உண் மை யே..ஆங்கிலேய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட\ மெக்காலேயின் கல்விகொள்கை க்கு இரையானது இந்தியாவின் கலாச்சாரம் மட்டுமல்ல. அதனோடு பயணித்த வந்த இந்தியாவின் உயர்கல்வியும் தான்.

உலகின் முதல் பல்கலைகழகம் தக்சசீலம் தெரியுமா?

காந்தார நாடு தெரியும அல்லவா..நம்ம மஹாபாரத சகுனி பிறந்த இடம். இந்த தக்சசீலம் ஊர் அந்த காந்தார நாட்டில்தான் உள்ளது. ராமனின் தம்பி பரதன் இந்த நாட்டை கைப்பற்றி தன்னுடைய மூத்தமகன் தக்சன் பெயரில் நிர்மாணித்த நகரமே தக்சசீலமாகும். அதனாலே இந்த பல்கலைகழகத்தின் பெயரும் தக்சசீல பல்கலைகழகம் என்றே அழைக்கப்பட்டது.

தட்சசீலம் அன்றைய இந்தியாவில் இன்றைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் டேக்ஸிலா என்ற ஊர் உள்ளது.இதுதான் 2700 ஆண்டுகளுக்கு முன் உல கி ல் முதன் முதலில்தோன்றிய பல்கலைக்கழகமான தக்சசீலா தோன்றிய இடம்.இதனுடைய காலம் கிமு ஏழாம் நூற்றாண்டிலிருந்து கிபி ஐந்தாம் நூற்றாண்டுவரை என்கிறார்கள் சரித்திர ஆய்வாளர் கள்.
.
2700 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பல்கலையில் குறைந்தது பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கிரீஸ், பாரசீக ம்,சீனா,அரேபியா போன்ற வெளிநாடுகளில் இருந்தெல் லாம் வந்து தங்கி படித்திருக்கிறார்கள் என்றால் பாரதநாட்டின் புகழ் அப்பொழுதே உலகமெ ங்கும் கொடி கட்டி பறந்ததை அறிந்து கொள்ளலாம்.

இந்த பல்கலைகழகத்தில் வேதங்கள்,மருத்துவம், அறிவியல், கணிதம், இசை,சட்டம், விவசாயம், அரசியல், போர் பயிற்சிகள் போன்ற 65க்கும் மேற்பட்ட பாடங்களில் உயர்கல்வி போதிக்கபட்டுள்ளது. தக்ச சீலா பல்கலை கழகத்தில் சும்மா காசு கொடுத்து சீட் வாங்கிவிட முடியாது.அரசியல் தலையீடு காரண மாக சீட்கிடைக்காது,

ஏன்.சாதி பெயர் சொல்லி எல்லாம் இங்கு சீட் வாங்கிவிட முடியாது..ஒன்லி மெரிட்தான்..அந்த காலத்திலே யே என்டரென்ஸ் எக்ஸாம் நடத்தி தான்மாணவ ர்களை தேர்வு செய்துள்ளார்கள்.என்றால் அங்கு படிப்பு எப்படி இருந்திருக்கும்.. யோசித்து பாருங்கள்..

இந்த பல்கலை கழகத்தில் ஆசிரியராக இருந்தவர்கள் யார் தெரியுமா… உலகமே வியந்து கவனிக்கும் அர்த்த சாஸ்த்திரம் எழுதிய நம்மசாணக்கியர் இங்கு தான் வேலை பார்த்திருக்கிறார் இன்றைக்கும் ஒரு நாட்டின் ஆட் சி எப்படி இருக்க வேண்டும், சட்டங்கள்,நிதி மேலாண்மை,போர் தந்திரங்கள் என்று ஒரு நாட்டின் ஆட் சிக்கு தேவையான அனைத்து விசயங்களையும் கொண்டு உலகிலேயே ஒரே ஒரு நூல் இருக்கிறது என்றால் அது அர்த்த சாஸ்திரம்தான்..

இங்கு வேலை பார்த்த இன்னொரு பேராசிரியர் பாணினி.. இன்றைக்கு நாம் தட்டு தடுமாறி படிக்கி றோமோ. இலக்கணம்.அந்த இலக்கணத்தை சமஸ் கிருத மொழிக்கு எழுதி உலகிலேயே முதல் இலக்கண நூல் என்ற பெருமைபெற்றது இவர் எழுதிய அஷ்டாத்யாயி தான்.

சரி வாத்தியார்களே..இப்படியென்றால் அங்கு படித்தவர்கள் இவர்களை விட ஒரு படி மேலே தானே இருப் பார்கள்..அதுவும் நிஜம்தான்.ஜீவகன் என்று இங்கு படி த்த மாணவர் ஒருவர் தான் உலகிலேயே நாடிதுடிப்பை வைத்து வைத்தியம் பார்க்கும் முறையை உலகிற்கு சொன்னவர்..இவர் தாங்க நம்ம புத்தரின் ஆஸ்தான மருத்துவராக இருந்துள்ளார்.

இன்றைக்கு கார்ட்டூன் படங்களை பார்க்கிறார்களே நம்ம பசங்க..இதுக்கு பிள்ளையார் சுழிபோட்டதும் இந்த தட்சசீல பல்கலை கழகமே..இங்கு படித்த மாணவரான விஷ்ணு ஷர்மாதான் சிறுவர்களுக்கு அறிவுவளர்க்க மிருகங்கள் பேசுகிற மாதிரி பஞ்சதந்திர கதைகளை உருவாக்கி முதல் கார்ட்டூன் எபிசோடை தயாரித்தவர்.

அடுத்து பீகாரில் இருக்கும் நாளந்தா பல்கலை கழகம். இது 5-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட து இந்தியாவின் கல்விப் பெருமையை உலகறியச் செய்த யூனிவர் சிட்டி. பாடம் என்பதை புத்தகத்திலிருந்து கற்க வேண்டும் என்பதைத் தாண்டி, ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவித்து வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டது.

இந்த பல்கலைக்கழகத்தில் சேருவதும் அவ்வளவு சுலபமானது அல்ல, மாணவர்கள் மூன்று நிலை நுழைவுத் தேர்வு எழுதவேண்டும். மூன்றிலும் வெற் றி பேரும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த பல்கலைக் கழகத்தில் சீட் கிடைக்கும்.சீனர்கள், கிரேக்கர்கள், பெர்ஷியர்கள், திபெத்தியர்கள் என பல நாடுக ளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கே படித்து அறிஞர்களாக திகழ்ந்தனர்.

உலகின் முதல் கணிதவியலாளர் ஆரியபட்டா இந்த பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்தார்.இங்கிருந்து தான் உலகின் முதல் கணித நூலே உருவானது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.இங்கே 10000 மாண வர்கள் வரை பாடம்கற்கும் வசதி இருந்துள்ள து .அவர் க ளுக்கு 2000 ஆசிரியர்கள் வரை பாடம்சொல்லிக் கொடுத்து இருந்தார்கள்.என்றால் இந்தியாவின் உயர்கல்வி எப்படி இருந்தது என்று அறிந்து கொள்ளலாம்.

இப்படி பெருமைவாய்ந்த நாளாந்தா பல்கலை கழகத்தை இந்தியா மீது படையெடுத்து வந்த அந்நிய ஆக்கி ரமிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு அழித்துள்ளார்கள் என்பதை நினைத்தால் கல்வியையே அழித்த கொடூரர்கள் நம்முடைய கலாச் சாரத்தை விட்டு வைக்க நினைப்பார்களா?

கிபி 1193 ல் ஆப்கானிஸ் தானை சேர்ந்த முகம்மது பின் பக்தியார் கில்ஜி என்கிற மூதேவிக்கு ஒருதட வை உடல்நலம் சரியில்லாமல் போகவே உடன் இருந்தவர்கள் பாடலிபுத்திரத்தில் இருக்கும் நாலந்தா பல்கலை கழகத்தின் மருத்துவர் ராகுல் ஸ்ரீ பத்ரா என்பவர் கை வைத்தால்தான் இந்த நோய் குணமாகும் என்று கூற அந்த மூதேவியும் பத்ராவை அழைத்து நோயை குணமாக்கி கொண்டார்.
.
பிறகு நம்முடைய மதத்தில் இல்லாத மருத்துவ அறிவு இந்து மதத்தில் இருக்கிறதே என்று பொறாமை கொண்டு நாலாந்தா பல்கலை கழக லைப்ரரியையே தீ வைத்து கொளுத்தி இருக்கிறான் என்றால் நம்முடைய பாரம்பரி யத்தின் மீது அந்நிய ஆக்கிரமிபாளர்கள் கொண்டிருந்த வெறுப்பை அறிந்து கொள்ளலாம் .வரலாற்றின்படி நாளாந்தா பல்கலை கழகம் மூன்று முறை இஸ்லாமிய மன்னர்களால் அழிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மன்னர்கள் நேரடியாக இந்தியாவின் கல்வியை அழித்தார்கள் என்றால் ஆங்கிலேயர்கள் மறைமுகமாக இந்தியாவின் கல்வியை சிதைத்தார் கள்.அதனுடைய தாக்கம்தான் இன்றும் இந்திய மாணவர்கள் ஆய்வு திறன் பற்றிய அறிவு இல்லாமல் ஏட்டு சுரைக்காயை மட்டும் படித்து வருகிறார்கள்.

மெக்காலே கல்வி முறை இந்தியாவில் அமலுக்கு வரும் வரை இந்திய மாணவர்கள் வேதங்கள், , யோகா, தர்க்கம், அரசியல், அரசதந்திரம், இதிகாசம், புரா ணம் மற்றும் ஜோதிடம், வானவியல், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் பொதுஅறிவு போன்ற பல கலை களை குருகுல் கல்வியின் மூலம் கற்றுவந்தார்கள்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கூறும் இந்துமதம் தெய்வத்துக்கு அடுத்தபடியில் குருவையே வைக்கிறது. அதாவது மனிதர்களில் உயர்ந்தவர் குருவே. இந்த குருவின் மூலம் காலம்காலமாக எடுத்துசெல் ல ப்பட்ட ஞானங்களே இந்திய கல்வியை உலகளவில் அடையாளம் காட்டியது.

இப்படி பெருமை வாய்ந்த இந்திய கல்வியை அழித்தால் தான் நாம் அங்கே வேரூன்ற முடியும்.அதற்கு முதலில் இந்தியாவின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் வாதாடி ஆங்கில கல்வி முறையை 1835ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி இந்தியாவில் தினித்தான் மெக்காலே.

குருகுல கல்வி முறையில் கல்வியானது ஞானம் சம்பந்தப்பட்டது.ஆனால் மெக்காலே கல்விமுறையில் கல்வியானது வியாபாரம் சம்பந்தப்பட்டது.

நன்றி திரு Natraj Kalyan அவர்களுக்கு

அன்புடன்
தமிழ்த்தேனீ

Sunday, May 15, 2016

2016 ஐயாண்டுத் தேர்தல் நையாண்டிகள்




2016  தமிழகத் தேர்தல்

தேசப்பற்றுடன் வாழ்ந்த குடும்பம் எங்கள் குடும்பம் என்பதை அறிந்து நானும் அவ்வழியே இன்று வரை இருக்கிறேன்.கடந்த 69 ஆண்டுகளாக நம் நாட்டை ஆளுவோர் என்னதான் செய்தார்கள்.என்று எண்ணிப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
ஏதாவது செய்திருந்தால் ஏன் மக்கள் இன்னமும் அடிப்படைத் தேவைகள் கூடக் கிடைக்காமல் சாலையில் வந்து நின்று கொண்டு கதறுகிறார்கள். பாதுகாப்பில்லாமல் தவிக்கிறார்கள்.  என் மனதில் தோன்றிய கேள்விகளையும் சந்தேகங்களையும் இங்கே தமிழ்த்தேனியின் ஐயாண்டுத் தேர்தல் நையாண்டிச் சிந்தனைகள் என்று முகநூலிலே அளித்துக் கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொன்றையும் ஆழ்ந்து படித்து விடை தெரிந்தவர் சொல்லுங்கள் எல்லாவற்றையும் என் முகநூல் பக்கத்திலே படிக்கலாம் வாருங்கள் என் முகநூல் பக்கத்துக்கு நியாயத்தின் பக்கத்துக்கு  https://www.facebook.com/Thamizthenee    
அன்புடன்
தமிழ்த்தேனீ


ஐயாண்டுத் தேர்தல் நையாண்டிகள்


1.  விரலிலே மையிட்டு அழகு பார்க்கிறார் பதவி
வந்தவுடன் த்ரோணர் போல  விரலைக் கேட்கிறார்

2.  வாக்காளர் யார் பக்கம் என்று கருத்துக் கணிப்பு நடத்துபவர்களே யார் மக்கள் பக்கம் என்று கருத்துக் கணிப்பு எடுத்து விடையைச் சொன்னால் தேர்தலில் வாக்களிக்க உதவியாய் இருக்குமே


3.  தேர்தல் விழிப்புணர்வு ன்னு மேடையிலே
பேசிக்கிறாங்களே அப்பிடீன்னா என்னாப்பா அது
அது ஒண்ணும் இல்லேடா கண்ணா அந்தப் பொதுக் கூட்டத்துக்கு போனா ரூபா குடுப்பாங்க சாப்பாடு குடுப்பாங்க அப்பிடிப் போகலைன்னா அதுவும் கிடைக்காது அதுதான் தேர்தல் விழிப்புணர்வு

4.   இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று சொல்கிறார்கள்
வாக்காளர்களின் இறுதிப் பட்டியல் என்று சொல்லலாமே
இறுதி வாக்காளர் என்று சொன்னால் பயமாக இருக்கிறது



5.  எல்லாக் கட்சிகளும் பணம் கொடுக்கக் கூடாது பணம் வாங்கக் கூடாது என்றே போராட்டம் நடத்துகிறது. மக்களும் போராட்டம் நடத்துகிறார்கள்
காவல் துறையும் போராடுகிறது.
அப்படியானால் பணம் கொடுப்பதும் பணம் வாங்குவதும் இரண்டுமே மக்களா . பணப்பட்டுவாடா யாரால் பணப்பட்டுவாடா யாராள் 
ஒன்றும் புரியவில்லை





6.  கோடி கோடியாய் பணம் சேர்த்து வைத்திருப்போர் கோடி கோடியாய் சொத்துக்கள் சேர்த்திருப்போர்
வேட்பாளர்களாய்
கோடி கோடியாய் வாக்காளர்கள் ஏழைகளாய்.


7.  நாட்டிலுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் தெரிகிறது அவர்களுக்கு எந்த ஊர் எந்த மாவட்டம் எந்த தொகுதி என்று
ஆனால் இந்த ரூபாய் நோட்டுக் கட்டுக்களுக்கு மட்டும் தெரியவில்லை எந்த ஊர் எந்த மாவட்டம் எந்த தொகுதி என்று. பாவம் அல்லாடிக் கொண்டிரு க்கிறது  போக்கிடம் இல்லாத நோட்டுக்கட்டுகள் போவதெங்கே

8.   
அசோகர்   சாலை இரு மருங்கிலும் மரங்களை நட்டார்  ஆறுகள் குளங்கள் வெட்டினார்
ஆட்சியாளர்கள்  சாலை இரு மருங்கிலும்   மக்களை  நடுகிறார்கள்
ஆறுகளை   வெட்டுகிறார்கள்    வெட்டி  வெட்டி  மணலை எடுத்து விற்கிறார்கள்   ஏரிகள்  குளங்களையெல்லாம் வெட்டி வெட்டி  சதுரமாக்கி  நீள் சதுரமாக்கி    பொதுமக்களுக்கு   சேவை செய்ய  நிலங்கள் அளித்து   வீடுகட்ட   மணல் அளித்து   பணம் ஈட்டுகிறார்கள்

9.  முதுகு வலி தாங்க முடியாமல் வாலினி தெளிப்பான் அடித்துக் கொண்டேன். எரிச்சல் முதுகைப் பிளந்தது.சற்று நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள் வலி போய்விடும் என்றார்கள். சற்று நேரம் போனதும்  எரிச்சல் பழகிவிட்டது.
இன்னும் சற்று நேரம் போனதும் எரிச்சல் அடங்கியது மீண்டும் முதுகு வலிக்க ஆரம்பித்தது.
வாழ்க்கையில் எல்லாமே அப்படித்தான் தேர்தலும் ஆட்சி மாற்றமும் கூட என்று புரிந்தது

10.      இதுவரை நானே உங்களை ஆண்டேன் இனியும் நான்தான் ஆளுவேன் . நான் ஆளுகின்ற காலத்திலே உங்களுக்கு என்ன செய்தேன் என்பது முக்கியமல்ல
இனி ஆளப்போகும் காலங்களில் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதும் முக்கியமல்ல
என்னைத் தவிர யார் கேட்டாலும் ஆளும் பொறுப்பைத் தராதீர்கள் . ஏனென்றால் நாட்டை ஆண்டு ஆண்டே பழக்கப்பட்டுவிட்டேன் என்னால் இந்த நாட்டை ஆளாமல் இருக்க முடியாது என்பதுதான் முக்கியம்

அது மட்டுமல்ல பொதுமக்களே ஒரு ரகசியத்தையும் சொல்கிறேன் எனக்கு நாட்டை ஆள்வதைத் தவிர வேறு தொழில்களே எதுவும் தெரியாது . ஆகவே நான் உயிரோடு இருக்கும் வரையில் தயவு செய்து எனக்கே ஆளும் பொறுப்பினைத் தாருங்கள்


நீங்கள் யார் பேச்சையும் கேட்டு ஏமாறும் முட்டாள்களல்ல யாராலும் உங்களை ஏமாற்ற முடியாது என்பதை நான் அறிவேன் . ஆகவே இந்த நாட்டை ஆளும் பொறுப்பை எனக்குத்தான் தரவேண்டும் நிச்சயம் தருவீர்கள் நிச்சயம் தந்தே ஆகவேண்டும் என்று உங்களை அன்போடு மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்


11.   அடங்காமலிருப்பது என்னும் கொள்கை எல்லா இடத்துக்கும் சரிப்படாது அடங்கி நடப்பது நல்லது  என்பதை அறியாத சில எதிர்க் கட்சிக்காரர்கள்  கேட்கிறார்கள்  ஏன் காலில் விழுகிறீர்கள்  என்று அவர்கள்  ஒதைப்பேன் என்று கைகாட்டினாலும்  பதிலுக்கு  கைகூப்பினால்  அதுக்கு தனி மரியாதை கிடைக்கும் என்று புரியாத எதிர்க்கட்சிக்காரர்கள்

12. .  சுதந்திரத்துக்காக போராடிய நாம்  பணம் செய்யும் தந்திரத்துக்காக போராடுகிறோம் என்கிறார்கள்  அதைப் பாதுகாப்பது எவ்வளவு கடினம்  சுதந்திரத்தை போராடி மீண்டும் பெறலாம் ஆனால் பணத்தை இழந்தால் அதைமீண்டும் பெறவே முடியாது என்பது என்னைப் போன்ற அரசியல்வாதிகளுக்குத்தான் தெரியும்.
13.  இந்த  நாட்டின் நிதி மந்திரியாகிய நான் நம் நாட்டின் நிதி நிலமை இவ்வளவு சீரழிந்து போய்விடும் என்று  கனவுகூடக் காணவில்லை-
என் ஆட்சியில் மக்கள் இவ்வளவு கஷ்டப் படுகிறார்களாஅதற்கு என் ஆட்சிதான் காரணமாநான் நினைக்கவே இல்லை   முதன் மந்திரி
14.     . கற்பனையைச் சொன்னேன் கரகோஷம் விண்ணைப் பிளந்தது உண்மையைச் சொன்னேன்  கரங்கள் என்னைப் பிளந்தன
.
15.      கோயிலில்  இருக்கும்  தெய்வத்தின் தரிசனம் காணக் கூட வேண்டுமாம் மந்திரியிடம் சிபாரிசுக் கடிதம்

.16..      ஒரு ரூபாய் தர்மம் கொடுத்தேன் வாயாரத்  திட்டினான் பிச்சைக்காரன்   ஒரே ஒரு ஓட்டு போட்டேன் நாட்டையே  வீடாக்கிக் கொண்டார் அரசியல்வாதி

16.     மீன் விலையும் அதிகரிக்கிறது மின் விலையும் அதிகரிக்கிறது ஆனால் தேர்தல் ப்ரசார அலைகள் மட்டும் இரண்டையுமே தயாரிக்காமல் வெட்டியாய் ஓயாமல் வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறது ஆனால் கடலிலே கொந்தளிப்பே காணவில்லை அமைதியாய் இருக்கிறது


17.         யார்  ஜெயிப்பார் இந்த தேர்தலில்  நமக்கு நிச்சயமாகத் தெரியும்  கதாநாயகன்தான் ஜெயிப்பான் என்று
மக்கள் கண்ணுக்கு  எல்லோருமே  வில்லனாகத் தெரிகிறார்கள்.யார் ஜெயித்தாலும்   அவர்களே   வில்லன்  அவர்களே கதாநாயகன்   என்னும் முடிவுக்கு  மக்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டுவிட்டார்கள்

18.    மதுப்பாட்டில்களிலும்  சிகரெட் அட்டையின் மீதும்   அது ஆபத்தானது உயிரைக் குடிக்கும் புற்று நோய் வரும் சற்று நாட்களில்  விஷம்  உயிரைக்  குடிக்கும் என்று எழுதி விற்கிறார்கள்    இதைப் போல     எச்சரிக்கை  வாசகத்தை   மேலே எழுதிவிட்டு  விஷத்தையும்  விற்பார்களா வாங்குவோர்   அதை  வாங்கி  உபயோகப்படுத்தினால்  நடவடிக்கை  எடுப்பாமல்  இருப்பார்களா

19.       மேலிடத்திலே இருந்து வரும் தலைவர்கள் தமிழ் நாட்டிலே தமிழர்களிடம் இந்தி மொழியிலே பேசுகிறார்கள் தமிழ் மக்களுக்கு எப்படி புரியும் என்பது விவாதிக்கப்படுகிறது
எனக்கு ஒரு சந்தேகம் தமிழ் நாட்டிலே தமிழர்களிடம் தமிழிலே பேசுகிறார்கள் பல தலைவர்கள் அதெல்லாம் மட்டும் மக்களுக்கு புரிகிறதா என்ன ? என்று

20.        அனைத்துக்  கட்சித் தலைவர்களும்  வேட்பாளர்களும்     தங்களின்     கடந்த  காலத்தில் நடந்த  நடத்தப்பட்ட  தவறுகளை   அலசி  ஆராய்ந்து தங்களையே  ஆராய்ச்சி செய்து கொண்டு   தமக்குத் தாமே திருத்தி்க் கொள்ள  அமைந்த    ஒரு  அருமையான  நேரம் இந்தத் தேர்தல் களம் .  யார்  திருத்திக் கொள்கிறார்கள்   யார்   தங்கள்  தவறுகளை நியாயப் படுத்துவதி்லேயே  குறியாக இருக்கிறார்கள்  என்று கூர்மையாக  கவனியுங்கள்  வாக்காளர்களே .

21.    விலை உயர்ந்த  நான்கு சக்கர  வாகனத்தையும்  தங்களோடு புதைக்கச்  செய்யலாமா என்று யோசிக்கிறார்கள் செல்வந்தர்கள்   ஆனால்  போகுமிடத்தில் பெட்ரோல் அல்லது  டீசல் கிடைக்குமா   தெரியவில்லை
22.      கப்பலை  நிலை நிறுத்தப் பயன்படும்  நங்கூரமும்  கப்பலிலேயே  பயணிக்கிறது   வாகனங்களை நிறுத்த பயன் படும்  ஓட்டத் தடை  எனப்படும்   Break   வாகனத்தோடே  பயணிக்கிறது ஊழலைத் தடுக்க  மட்டும்  எதாலும் முடிவதில்லை

23.  ஹரிகேன்  என்றால் புயல்    புயல் அடித்தாலும் அணையாத  விளக்கு  என்று சொல்வார்கள் . அந்த  விளக்கின்  வடிவம் அப்படி  அது போல் புயலடித்தாலும் இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டாலும் அவை மக்களைப் பாதிக்காத வண்ணம்  சுற்றுச் சூழலை ஏற்படுத்தி  மக்களைப் பாதுகாப்பதே  ஆளுவோர் செய்ய வேண்டிய  கடமைகளில் முக்கியமான ஒன்று
24.     நான் சிறுவனாக  இருந்த போது இவ்வளவு மக்கள் தொகை பெருகாத  அந்தக் காலத்திலேயே  1960  ஆண்டு  சென்னை வால்டாக்ஸ் சாலையில்  சாக்கடை வடிகால் குழாய்கள் ஆளுயரத்துக்கு  வட்ட வடிவமாக இருக்கும்  அதிலே இறங்கி  மாநகராட்சி துப்புறவுப் பணியாளர்கள்  சுத்தம் செய்வார்கள். எட்டிப் பார்த்து  அந்தக் குழாய்களின் ஆழத்தை நினைத்து பயந்தி்ருக்கிறேன். ஆனால் இவ்வளவு மக்கள் தொகைப் பெருக்கத்துக்குப் பின்
ஒப்பந்ததாரர்களை பணக்காரர்களாக்க  இரண்டடி விட்டமுள்ள  சிறு குழாய்களையே பதிக்கிறார்கள்.  அதையும்   நகரின் பல பாகங்களில் இன்னமும் பதிக்காமல்   சாலையிலேயே சாக்கடைகளை ஓடவிடுகிறார்கள்.  சாலைகளா  சாக்கடைகளா  என்றே தெரியாமல்  மக்கள் அல்லாடுகிறார்கள்

25.    வேட்பாளரை மாற்றக் கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் ஒரு பக்கம் மக்களின் விழிப்புணர்வைக் காட்டினாலும் அறிவித்த வேட்பாளரின் எதிர்ப்பாளர்கள் செய்கின்ற ஆர்ப்பாட்டமோ எனும் சந்தேகமும் வருகிறதுப் பாவம் வாக்காளர்கள் அவர்களுக்கு எப்போதும் குழப்பமே


26.    தேர்தல் அதிகாரிகள் இயன்றவரை சிறப்பாக செயல்பட்டு நேர்மையான முறையை தேர்தலை நடத்துகிறார்கள் . அவர்களுக்குத்தான் தெரியும் அவர்களின் கஷ்டங்கள்.
தேர்தல் முடிந்தவுடன் வேட்பாளர்கள் பதவி பெறுகிறார்கள்
வாக்காளர்கள் எந்தப் புதுமையும் இன்றி பழைய வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள் .
அவ்வளவு மாதங்கள் உழைத்த தேர்தல் அதிகாரிகளை
இனி வரும் தேர்தல் நேரத்தில் நினைவுகொண்டால் போதும் என்று மக்களும் அதிகாரிகளும் அவரவர் வேலையைத் திறம்படச் செய்கிறார்கள்


27..   உழைப்பவர் உழைக்கட்டும் திறமையாக உழைப்பவருக்கு உழைப்பை அளியுங்கள் தகறாரு செய்பவருக்கு பதவி உயர்வு அளியுங்கள் எனும் கொள்கை தீவிரமாக கடைப் பிடிக்கப்படுகிறது

28.    நங்கூரத்தின் அளவைக் கொண்டு  கப்பலின் அளவை ஓரளவு  அறிய முடியும்  உறைக்கேற்ற கத்தி  அல்லது கத்திக்கேற்ற  உறை போல் விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல் கப்பலுக்கேற்ற  நங்கூரம் அது போல் மக்களுக்கேற்ற  மன்னன்தான் அமைகிறான்

29.   வெட்கமாகத்தான் இருக்கிறது !
அவரவர் கடமையை அவரவரர் செய்வதற்கு பணம் கொடுப்பது தான் நியாயமான செயல்
ஆனால் அவரவர் கடமையை அவரவர் வேலையைச் செய்யாமலிருக்க சாலைகளை விரிவாக்கம் செய்யாமலிருக்க ஏரிகளை ஆக்ரமிக்க நிலங்களை அபகரிக்க பணம் கொடுப்பது அநியாயமான செயல்
அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்


சாலைகளை விரிவாக்கம் செய்யாமலிருக்க சாலையோரக் கடைகள் நடத்துவோர் பெரும் தொகை கொடுக்கத் தயாராய் இருக்கிறார்கள். அப்போதுதான் அவர்கள் கடைகள் இடிக்கப்படாமல் இருக்கும்.
ஏரிகளை ஆக்ரமித்தால்தான் அந்த நிலங்களை பட்டா போட்டு விற்க முடியும் அதனால் பலர் ஏரிகளை ஆக்ரமிக்க பெருந்தொகை கொடுக்கத் தயாராய் இருக்கிறார்கள்
அரசு அதிகாரிகள் அவர்கள் கடமைகளை செய்யாமல் இருக்க பெருந்தொகை அளிக்க பலர் தயாராய் இருக்கிறார்கள் அப்போதுதான் சட்டவிரோதமாக பலர் சம்பாதிக்க முடியும்  இப்படிச் செய்வோரெல்லாம் பொதுமக்களாகிய நம்முடனேயே கலந்திருக்கிறார்கள் .
நிலமை இப்படி இருக்க அரசையோ அரசியல்வாதிகளையோ குறை சொல்ல நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்று யோசித்தேன். வெட்கமாகத்தான் இருக்கிறது.


30.        உற்பத்தி  விளைச்சல் அதிகமானால் பொருட்களின் விலை குறைகிறது
விலை குறைந்தால் வியாபாரிகளுக்கு  லாபம் குறைகிறது
உற்பத்தி  குறைந்தால் தேவை  அதிகமாகிறது  தேவை அதிகமானால் விலை உயர்கிறது
விலை உயர்ந்தால் உற்பத்தியாளர்களுக்கும்  வியாபாரிகளுக்கும் லாபம் அதிகமாகிறது



31.   நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
நலத் திட்டங்களை செயல் படுத்துவோம்
என்று வாக்குறுதி அளிப்போரே ஏற்கெனவே ஆட்சியில் இருந்த போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீகளா? இன்னும் இல்லையா !
ஓ ! அவைகளையும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் நிறைவேற்றுவீர்களா இப்போதுதான் புரிகிறது


32.  வேண்டுகோள் :
வில்லிவாக்கம் வழியாக பாடி அம்பத்தூர் தொழில் நகரம் போன்றவைகள் இருக்கும் திருவள்ளூர் நெடுஞ்சாலையை இணைக்கும் ஒரே பாலம் டீ ஐ சைக்கிள் அருகே இருக்கும் பாலம்தான். . அந்தப் பாலத்தை அகலப்படுத்தி உறுதிப்படுத்தினால் அம்பத்தூர் ஆவடி பட்டாபிராம் திருவள்ளூர் முதல் திருப்பதி வரை வாகனங்களில் செல்வோருக்கு உதவியாக இருக்கும்.
அந்த ஒற்றைப் பாலம் உறுதியாக இருக்கிறதா? அதை முதலில் கவனியுங்கள் ஆட்சியாளர்களே


பாலம் இடிந்து மக்கள் ஒடிந்து போனபின் ஆறுதல் சொல்வதை விட, ஈட்டுத் தொகை வழங்குவதற்கு செல்வழிக்கும் தொகையைக் காட்டிலும் குறைவாகவே செலவாகும் . மக்களும் காப்பாற்றப்டுவார்கள்


33.   நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று எல்லோருமே பேசுகிறார்கள்.
ஆக மொத்தம் யாருக்குமே நம்பிக்கை இல்லை ஆட்சிக்கு வருவோம் என்று


34.  ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியிலிருந்து புறவிலைப்படி வரையில் உயர்த்திக் கொடுக்கிறீர்களே பாராட்டுக்கள்
ஆமாம் அரசு ஊழியர் அல்லாத மற்ற ஊழியர்கள் யாரும் இந்த நாட்டு மக்கள் இல்லையா என்று ஒரு சந்தேகம் எழுகிறது.
பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சைக்கிள் இலவச கணிணி எல்லாம் கொடுக்கிறீர்களே.
படிக்க இயலாத பிள்ளைகளுக்கு இலவச படிப்பைக் கொடுப்பீர்களா


35.   ஆங்கிலேயர் காலத்திலே மதுவைக் கொடுத்து அடிமையாக வைத்திருக்கும் நுணுக்கத்தை கற்றுக் கொடுத்தார்கள் நம்மவர் எப்போதுமே கற்றுக் கொண்ட நுணுக்கங்களை
மறக்க மாட்டார்கள்

அதனால்தான் இன்னமும் அதே நுணுக்கத்தைப் பயன்படுத்துகிறோம். நன்றி மறவாதவர்கள் நாம்


36.   ஊழலை ஒழிப்போம் ஊழலை ஒழிப்போம் என்கிறார்களே
குழந்தைகள் மேல் பாசமே இல்லாதவர்கள்.
பெற்ற தாயே குழந்தையைக் கொல்லலாமா
பெற்றவர்களே இப்படிச் செய்தால் அந்த ஊழல் குழந்தை
பாவம் எங்குதான் போகும்
குழந்தையை அனாதையாக விடலாமா?


37.  நல்லவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு அரசியல் செய்யத் தெரியாது. அப்படி அரசியல் செய்யக் கற்றுக்கொண்டு விட்டால் அவர்களால் நல்லவர்களாக இருக்க முடியாது

38.   நாட்டிலே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அதிகமாகிவிட்டனர் எங்கு குற்றம் நடந்தாலும் அடையாளம் தெரியாத சிலரால் நடத்தப்பட்டது என்கிறார்கள்.. ஒரு வேளை வேற்றுக் கிரகவாசிகளாக இருப்பரோ.
இந்த நாட்டில் உள்ளோரையே அடையாளம் தெரியவில்லை என்றால் வேற்று கிரக வாசிகளை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்ள முடியும்
அதனால் வேற்று கிரக வாசிகளைக் கண்டு பிடித்து முதலில் அவர்களுக்காவது அடையாள அட்டை கொடுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


ஏனென்றால் தேர்தல் வாக்குறுதிகளில் மக்களுக்காக மக்கள் நலன் கருதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களைக் கண்டு பிடித்து நிச்சயமாக அடையாள அட்டைகள் வழங்கும் திட்டத்தை ஏற்படுத்துவோம் என்பது உறுதி ஆகவே எங்களுக்கே வாக்களியுங்கள் என்று மேடையிலே முழங்கும் அபாயம் ஏற்படும்

39.  ஆங்கில வழித் தனியார் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்து கல்வி கற்க வைத்து இந்த நாட்டிலே வாழவைக்க பள்ளியின் வாசலிலே இரவெல்லாம் நடைபாதையில் காத்திருக்கின்றனர்  தமிழ்ப் பெற்றோர்கள். எப்போது கதவு திறக்கும் ?
நான் பள்ளிக் கதவைப் பற்றி கேட்கவில்லை.
கல்விக் கதவைப் பற்றிக் கேட்கிறேன்
தமிழ்மொழிக் கதவைப் பற்றிக் கேட்கிறேன்


40.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று வாக்களிக்கும் தலைவர்களை
அப்படி நிறைவேற்றாவிட்டால் உங்களை என்ன செய்யலாம் என்று வாக்காளர்கள் யாரும் கேட்டுவிடாதீர்கள்

எங்களை அடுத்த முறை தேர்ந்தெடுக்காதீர்கள் என்று எந்தத் தலைவராலும் சொல்லவும் முடியாது, சொல்லவும் மாட்டார்கள்..
அதையும் தவிர இந்தக் கேள்விக்கு இன்னமும் யாருக்குமே பதில் தெரியாது .

41.  இன்று 2016  ஏப்ரல் 25 ஆம் தேதி
பாச மழை பொழிகிறது கோடைக்கால மழையென்றால் அதிலே ஒரு தனிக் கவர்ச்சி இருக்கிறது. கொளுத்தும் வெய்யிலில் குளிர்விக்கும் பாச மழை நேச மழை வாக்கு மழை இப்போது சுகமாய்த்தான் இருக்கிறது ஆனால் அடுத்து வரப்போவது அக்னி நக்‌ஷத்திர வெய்யில் அப்போது தெரியும் தேர்தல் முடிவுகள். அப்போது பார்க்கலாம் பாசமழை குளிர்விக்கிறதா அல்லது இன்னும் அனலைக் கிளப்பப் போகிறதா என்று


42. நிருபர் :


நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நலத்திட்டங்கள் செய்வீங்கன்னு கேட்டா இப்பிடி கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாம நாங்க ஆட்சிக்கு வரமாட்டோம் . எதுவும் செய்ய மாட்டோம்னு பதில் சொல்றீங்களே எந்த நம்பிக்கையிலே இப்பிடி சொல்றீங்க


ஒருவர் :  நாங்கதான் தேர்தல்லேயே நிக்கலையே அந்த நம்பிக்கைலேதான் சொல்றோம்


43.   கொய்யாக் கனிகளாக இருந்தாலும் கொய்யா கனியாக இருந்தால்  கல்லடி படும்
கோடி கோடியாய்ப் பணமிருந்தாலும்  முறையாக செலவழிக்காவிட்டால்  கொள்ளையர்களுக்குத்தான் பயன்படும்.

44.  வாக்காளர் யார் பக்கம் என்று கருத்துக் கணிப்பு நடத்துபவர்களே 
யார் மக்கள் பக்கம் என்று கருத்துக் கணிப்பு எடுத்து விடையைச் சொன்னால் தேர்தலில் வாக்களிக்க உதவியாய் இருக்குமே

45.  நுகர்வோர்  பயன் படுத்தும்  மின்சாரக்  கட்டணத்தைக் குறைக்க எளிதான பல வழிகள் உள்ளன . அவற்றில் சிறந்த வழி மின்சாரம் அளிப்பதைக் குறைப்பது ஒன்று
அப்போது மின் கட்டணம் அதிகமாகக் கட்டவேண்டிய அவசியம் இராது.



46.   இலவசங்களை அள்ளிக் கொடுத்து அதுவும் நம் பணத்திலே அவர்கள் கொடுப்பது போல் கொடுத்து அவர்களை ஆளுவோர்களாக அடையாளம் காட்ட வைக்கிறார்கள் அதுதான் ஆள் காட்டி விரல் . அந்த ஆள்காட்டி விரலில் மை போட்டு நம்மை மயங்க வைத்து
அதை உணராமல் மந்திரச் சாவியைியும் கொடுத்துவிட்டு பொக்கிஷப் பெட்டியை திறக்க அவர்களை அனுமதியும் கொடுத்துவிட்டு மீண்டும் அவர்களை நோக்கி கையேந்துகிறோம்
சிந்தியுங்கள் வாக்காளர்களே
நம்மை ஆள்காட்டிகளாக ஆக்கு்வோரோ் அவர்கள்தான்


நாம் ஆள் காட்ட வேண்டாம் தகுதியானவரை ஆளுவோராக அனுமதிக்க வேண்டும் . நம்மை திறம்பட ஆள, நாட்டை முன்னேற்ற நமக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்க அவர்களை நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம். ஆகவே நம் மனமே மந்திரச் சாவி
புரிந்து கொள்ளுங்கள்



47.   டீ வீ மிக்ஸீ க்ரைண்டர் போன்ற எதுவானாலும் இயன்றவரை பணம் செல்வழித்து சரிபார்த்துவிட்டு இனியும் ஓடாது என்று தெரிந்தாலே தூக்கி வீசுகிறோம்

ஆனால் பெற்றோர்களை இதெல்லாம் செய்யாமல் உடனடியாக தூக்கி வெளியே வீசுகிறோமே பெற்றோர்களுக்கு வாரண்டியும் இல்லை கியாரண்டியும் இல்லை


48.  அதிர்ஷ்டசாலிகளுக்கு திறமை தேவையில்லை திறமை சாலிகளுக்கு அதிர்ஷ்டம் வருவதில்லை
உழைப்பாளிகளுக்கு ஊதியம் கிடைப்பதில்லை ஊதியம் கிடைப்போர் உழைப்பதில்லை

49.  ஏமாற்றுவோருக்கு ஏமாளிகள் கிடைக்கிறார்கள் ஏமாறுவோருக்கு ஏமாற்றுகிறவர்களே அமைகிறார்கள்

ஆக மொத்தத்தில் திறமையாக ஏமாற்றுவோரே வெற்றி பெறுகிறார்கள். ஏமாற்றுவோரெல்லாமே திறமைசாலிகள் என்று அவர்களே நினைத்துக் கொள்கிறார்கள்
ஏமாளிகள் என்றுமே ஏமாந்துகொண்டே இருக்கிறார்கள்



50.  மனைவி :ஏங்க நீங்க நியாயமா செய்ய வேண்டிய வேலைக்கு எதுக்காக இப்பிடி லஞ்சப் பணம் வாங்கறீங்க

புருஷன் : நம்ம பிள்ளையை பள்ளிக் கூடத்திலே சேக்க அவங்களுக்கு பணம் குடுக்கணும்,
எந்த வேலை நடக்கணும்னாலும் பணம் குடுத்தாதான் நடக்கும்தேர்தல்லே நிக்கணும்னா பணம் வேணும். வாக்காளர்களுக்கு பணம் குடுக்கணும், விளம்பரம் செய்யணுன்னா பணம் வேணும்.


எல்லாரும் வாங்கறாங்க நானும் வாங்கினாத்தானே குடுக்க முடியும்இப்பிடி வாங்கினாத்தான் கேக்கறவங்களுக்கு குடுத்து எல்லாத்தையும் செய்ய முடியும்
உனக்கு அப்பப்போ தங்க நகை வாங்கணும் காஞ்சீவரம் போயி பட்டுப் புடவை வாங்கணும் .
பொண்ணுக்கு கல்யாணம் செய்ய மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதக்‌ஷணை குடுக்கணும். கார் வாங்கிக் குடுக்கணும் மாப்பிள்ளைக்கு , வீடு வாங்கிக் குடுக்கணும்
இதுக்கெல்லாம் நான் இப்பிடி வாங்கினாத்தான் குடுக்க முடியும் அப்பிடியே நாம வாங்காம இருந்தா பயித்தியக் காரன்னு திட்றாங்கநான் வாங்கித்தான் ஆகணும் வேற வழியில்லேஇதுக்கெல்லாம் பணம் உங்க அப்பாவா குடுப்பாரு வாயை மூடிக்கிட்டுப் போவியா?

51..  வேட்பாளர் :எங்களுக்கேஉங்க ஓட்டைப் போடுங்க

வாக்காளர் : சாக்கடைத் தண்ணியிலே குண்டும் குழியுமா கல்லும் முள்ளுமா இருட்டா இருக்கற எங்க சாலையிலே நடந்து வந்து ஓட்டுக் கேக்கறீங்களே உங்களைப் பாத்தா நல்லவராத் தெரியுது அதுனாலே உங்களுக்கே எங்கள் ஓட்டு

52.  மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்போரே  அது ஆணவத்தின்  உச்சமாக மாறும்   அபாயம் இருக்கிறது   .கீழே விழாமல்  இருக்க கொஞ்சம் மட்டுப் படுத்திக் கொள்ளுங்கள்   நிரந்தரமான மகிழ்ச்சிக்கு  அதுவே  வழி
விரக்தியின் உச்சத்தில் இருப்போரே  மீண்டும் வாழத் தலைப்படுங்கள்  அதுதான் ஒரு  முடிவின் ஆரம்பம்

53.     ஊழல் நாடுகள் பட்டியலில் எழுவத்தி ஆறாவது  இடத்தில் இந்தியா உள்ளது.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு தரவரிசைப் பட்டியல் கணக்கீட்டுக்காக 168 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
ஓ அதிலும் முதல் இடம் இல்லையா வருத்தமாகத்தான் இருக்கிறது இன்னும் முன்னேறினால்தான் முதல் இடத்தைப் பிடிக்க முடியும்

54.   வேட்பாளர் : ட்ரைவர் எல்லாத்தையும் வேன்லே ஏத்திட்டியா பத்திரமா கொண்டு போயி வாக்காளர்கிட்டே சேக்க வேண்டியது உன் பொறுப்பு . அப்போதான்யா நமக்கு ஓட்டு கிடைக்கும்
ட்ரைவர் : நான் பாத்துக்கறேங்க நீங்க கவலைப்படாம இருங்க
வேட்பாளர் : அதுக்கில்லே போற வழியிலே ஏதாவது ப்ரச்சனைன்னா எப்பிடி சமாளிப்பே
ட்ரைவர் : நான் பாத்துக்கறேங்க நீங்க டென்ஷனாகாதீங்க
வேட்பாளர்: எதுக்கும் நம்ம ஆளுங்களை உஷாரா இருக்கச் சொல்லு
ட்ரைவர் : ஏங்க தேர்தல் வாக்குறுதி அச்சிட்டு எல்லாருக்கும் குடுக்கறீங்க அதுக்கு ஏன் இவ்ளோ பதட்டப் படறீங்க. வர வர நாட்டிலே ஒண்ணுமே புரியமாட்டேங்குது

55.   ஓட்டுப் போட பணம் தருகிறோம் என்று யார் வந்தாலும் அவர்களிடம் பணம் வாங்காமல் அவர்களை விரட்டி அடியுங்கள் என்றார் ஒரு நண்பர்

இன்னொரு நண்பர் ஏய்யா தேர்தலுக்கு தேர்தல் நமக்குன்னு கிடைக்கறதே அது ஒண்ணுதான் வேற எதுவும் கிடைக்காது அதையும் வாங்காதே அப்பிடீன்னா எப்பிடி ?

56.  தேங்காய்க்கு மேல் கடினமான ஓடு அதன் மேல் தென்னை நாறால் ஒரு கவசம், அதன் மேல் காய்ந்த தேங்காய் நாறின் கடினமான மேல் பகுதி இத்தனையையும் வைத்து இளநீரையும் தேங்காயையும் பாதுகாத்து அளிக்கிறான் இறைவன் ஆனால் கடினமான அவைகளை நீக்கி தேங்காயையும் இளநீரையும் நம்மால் அடைய முடிகிறது
ஆனால் லஞ்சம் ஊழல் பொய்கள் ஏமாற்று போன்ற கவசங்களை வைத்திருக்கும் அரசியல்வாதிகளிடமிருந்து அவைகளை நீக்கி நேர்மையான நாணயமான மனிதரை அடைய வழி ஏதும் வைக்கவில்லை அதே இறைவன்

57.  ஒரு வேட்பாளர் வீட்டிற்கு வந்தார் அவருடன் கூட வந்தவர்கள் ஐய்யா வணக்கம் நீங்க நம்மளுக்குதான் ஓட்டு போடுவீங்கன்னு தெரியும் இருந்தாலும் வீடு தேடி வந்து கேக்கறதுதானே முரை என்றார் சாமர்த்தியமாக நான் மிருதுவான குரலில் உங்களுக்குதான் ஓட்டு போடணும்னு நீங்க கேக்கறதுக்கு ஏதாவது வலுவான காரனம் இருக்கா அப்ப்டீன்னு கேட்டேன். உடனே அவர் சார் நீங்க போடுவீங்கன்னு நம்பிக்கையா வந்தோம் என்றார் நான் ஐயா நான் உங்களுக்கு ஓட்டு போடமாட்டேன்னு சொல்லவே இல்லே உங்களுக்குத்தான் போடணும்கிறதுக்கு ஏதாவது வலுவான காரனம் இருக்கானுதான் கேட்டேன் என்றேன் . உடனே மற்றவர்கள் இவரு நமக்கு ஓட்டு போடமாட்டாரம் வாங்க அடுத்த வீட்டுக்கு போகலாம் என்றார். வீட்டுக்கு வீடு கட்சிக்கு கட்சி மாறிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் வலுவான காரணம் மட்டும் சொல்ல முடியவில்லை ஒருவராலும்.

58.     கடற்கரையிலுள்ள உழைப்பாளர் சிலைகள்   கற்களை நெம்பியவண்ணம் இல்லை.  நெம்புவது போலவே  நம் நாட்டு  அரசியல்வாதிகள் போல  நடிகர்கள் போல  காட்சி அளிக்கின்றன அவ்வளவே  அதை ஒரு மாதிரி்யாக எடுத்துக் கொள்ளலாம்  மந்திரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது
59.   ஏய்யா உனக்கெல்லாம் எதுக்கு கௌன்சிலர் ஆகணும் எம் எல் ஏ ஆகணும் மந்திரி ஆகணும்னு இந்த வேண்டாத ஆசை

என்னண்ணே அப்பிடிக் கேட்டுட்டீங்க மக்கள் மேலே எனக்கு மட்டும் அக்கறை இல்லையா
நானும் நாலு எழுத்து படி்ச்சவன்தானே
நானும் ஒரு முறையாவது சட்டசபைக்கு , பார்லிமெண்டு்க்கு எல்லாம் போயி அந்த மைக்கு நாற்காலி எல்லாத்தையும் தூக்கி அடிச்சு


அன்-பார்லிமென்ட் வார்த்தையெல்லாம் பேசணும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா?


60.   வங்கி மோசடியில் ஈடுபட்டால் தேர்தலில் நிற்க தடை மசோதா கொண்டு வரப் போகிறது மத்திய அரசு

மற்ற ஊழல்களில் ஈடுபடுபவர்கள் தேர்தலில் நிற்கலாமா? ஒரு சந்தேகத்துக்குதான் கேட்டேன் தப்பா எடுத்துக்காதீங்க

61.   நான் சிலரிடம் நகைச்சுவை சொல்லிவிட்டு அவர் சிரிக்கப் போகிறார் என்று காத்திருப்பேன் அவர் சற்று நேரம் கழித்து ஏதோ நகைச்சுவை சொல்றேன்னு சொன்னியே அதை எப்போ சொல்லப் போற என்பார்

62.  வாகனத்தை சோதனை போட்டு  காரை ஓட்டிவந்த  மர்ம நபரிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாத  100 ரூபாயை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துவிட்டு உரிய ஆவணங்களை அளித்தால் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்  என்று  அறிவித்தனர் 
அந்த  நேரடித் தொலைக் காட்சிகளை ஒலிபரப்பும்    தொலைக் காட்சி நிருபர் அந்த  நூறு ரூபாயை பல முறை போட்டுக்காட்டி  மக்களுக்கு பரபரப்பாக விளக்கிக் கொண்டிருந்த போது அந்த நூறு ரூபாய் நோட்டு காற்றில் அடித்துச் செல்லப்பட்டதையும் அதைப் பிடிக்க  காரோட்டுனரும் காவல் துறையிலுள்ள பல அதிகாரிகளும் பாய்ந்து ஓடுவதை நேரிடைக் காட்சியாக காட்டிக் கொண்டிருந்ததை மக்கள் பார்த்து  ரசித்து மகிழ்ந்தனர்


63.  மக்களைச் சந்தித்து குறை கேட்காதவர் எதிர்க் கட்சித் தலைவர் என்று குற்றம் சாட்டுகிறார்கள் மக்களுக்கு குழப்பம் இது வரை எந்தத் தலைவருமே மக்களைச் சந்தித்து குறை கேட்டதில்லையே என்று.
மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்கவேண்டாம்.

தேர்தல் நேரத்தி்ல் மட்டும் மக்கள் நினைவு வரும் தலைவர்களே அதிகமாக இருக்கும் நாடு நம் நாடு.
மந்திரியாரே மாதம் மும்மாரி பொழிகிறதா என்று கேட்கும் மன்னன் நாட்டு நடப்பையே அறியாதவன்
அப்படி இருக்க வேண்டாம் தலைவர்கள் .
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்னும் வள்ளுவன் வாக்குப்படி தாமாகவே தெரிந்துகொண்டு தகுந்த நேரத்தில் குறைகளைக் களையும் தலைவர் யாரென்று சிந்தியுங்கள் மக்களே


64.   பட்டுவாடா செல்லமே வாடா என் கண்ணே வாடா முத்தே வாடா பவழமே வாடான்னு கொஞ்சுவாங்க அந்தக் காலத்திலே


இப்போ என்னடான்னா பட்டுவாடாவையே தடை செய்யறாங்களாமே
அது சரி பணப்புழக்கமே பணப்பட்டுவாடாவே இல்லேன்னா அப்புறம் எப்புடி பணப்புழக்கமும் பணப்பட்டுவாடாவும் இருந்தா தானே அது நாட்டோட வளர்ச்சி

ராப்பகலா உழைச்சு பணப்பட்டுவாடா செய்யலாம்னு பாத்தா அவங்க ராப்பகலா உழைச்சு பணப்பட்டுவாடாவைத் தடுக்கறாங்களே இந்த அநியாயத்தை எங்க போயி சொல்றது


65.    தேர்தல் களம் சூடு பிடித்துவிட்டது ஒவ்வொரு மேடையும் ஒவ்வொரு கட்சியும் கொதிக்கிறது . நம்பிச் சேர்பவர்களெல்லாம் விலகி ஓடுகிறார்கள் எதிர்பாராமல் யார் யாரோ வந்து சேர்கிறார்கள்
யாருடன் போரிட்டு யாரை தோல்வி அடையச் செய்யவேண்டும் என்பதே மறந்து போய்விட்ட நிலையில் யாரை ஆதரிக்கிறோம் யாரை எதி்ர்க்கிறோம் என்றே தெரியாத நிலையில் மேடையிலே மாற்றி மாற்றி ஆதரித்து எதிர்த்து குழப்பி மக்களின் மூளையும் மனமும் கொதித்தே சூடாகிவிட்டது
இதில் அக்னி நக்‌ஷத்திரத்தின் கொதிப்பும் சேர்ந்து நாடும் மக்களும் கொதி நிலையை அடைந்துவிட்டார்கள்.
மக்களுக்கு குழப்பமோ குழப்பம் எந்தக் கட்சிக்கு யார் பொதுச்செயலாளர் எந்தக் கட்சி பொருளாளர் யாரு யார் வேட்பாளர் யாருக்கு ஓட்டுப் போடப் போறீங்க என்கிற கேள்விகளை வைத்துக் கொண்டு நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க தெரியாது தெரியாது என்றே பதிலளிக்கும் அறிவார்ந்த ஓட்டுப் போடறது போறாதுன்னு இவங்க கேள்விக்கு வேற பதில் சொல்ல முடியலைப்பா என்று அலுத்துக் கொள்ளும் மக்கள்
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் பின்னும் இது போன்ற பலவிதமான அலுப்பினாலும் கொதிப்பினாலும் மக்கள் வியர்வை வெள்ளத்தில் வாடி வதங்குகிறார்கள் எப்போது வாட்டம் தீரும் கொதிப்பு அடங்கும் தென்றல் எப்போது வீசும் என்று காத்திருக்கிறார்கள்


66.  எதிர்க்கட்சித் தலைவர் இது வரை மக்களை சந்திக்கவே இல்லை. மக்களோடு கலந்துரையாடியதில்லை மக்களுக்காக எதையும் செய்ததில்லை அப்படிப்பட்ட தலைவருக்கா உங்கள் வாக்கு நான் இப்போது நேரிலே வந்து உங்களைச் சந்திக்கிறேன். கலந்துரையாடுகிறேன் இது போல எதிர்கட்சித் தலைவர் என்றாவது செய்ததுண்டா
அதெல்லாம் சரிங்க நீங்க யாருங்க நம்ம தொகுதிலே இதுவரைக்கும் உங்களைப் பாத்ததே இல்லையே

67.  ஒரு தேர்தலை நடத்தி அதில் பங்கு கொண்டு மக்கள் மனதில் ஆசைவிதைகளைத் தூவி வருங்காலத்தில் நறுமணம் கமழும் ஒரு பூந்தோட்டத்திலே அவர்களை குடியேற வைப்பது போன்ற கனவுகளை அவர்கள் மனதில் ஏற்படுத்தி அவர்களை மயக்கி அவர்கள் மனதை வசியம் செய்து வாக்களிக்கச் செய்து வெற்றி பெறுவது என்பது உண்மையிலேயே கடினமான செயல்தான்


அந்தப் பூந்தோட்டத்தில் தேனெடுப்பவர்களே நீங்கள் தேனெடுக்கும் போது புறங்கையில் இருக்கும் தேனை சுவைக்கலாம் தவறில்லை மொத்தத் தேனையும் மக்களுக்கு கொடுக்காமலே புறங்கைத் தேனையும் சேர்த்து நீங்களே அனுபவிக்க நினைத்தால் அது தவறு அல்லவா

ஆகவே மக்களுக்கும் சிறிது தேனை அளியுங்கள் காலமெல்லாம் உங்களுக்கு விஸ்வாசமாய் இருப்பார்கள் என்பதே என் வேண்டுகோள்

68.              இருநூற்று    தொகுதியிலே நாங்கள்தான் வெற்றி பெறுவோம் நானே முதலமைச்சராக வருவேன் மற்ற கட்சிகள் தோல்வியைத் தழுவும் ஆகவே மக்களே அந்த நல்ல நாளை எதிர் நோக்கி காத்திருங்கள்
எப்பிடி நம்ம தலைவர் இவ்ளோ தைரியமா அடிச்சு விடறாரு தன்னம்பிக்கையோட பேசறாரு

ஒரு இடத்திலேயும் வெற்றி கிடைக்காதுங்கற நம்பிக்கையிலேதான்

69.  ஏண்டா நாம தேர்தல் விழிப்புணர்வு ப்ரசார கூட்டம் போட்டபோதெல்லாம் மக்கள் அலைகடலென திரண்டு வந்து கையைத் தட்டி ஆரவாரம் செஞ்சு மகிழ்ந்தாங்களே
எதிர்க்கட்சியைப் பத்தி நாம் சொன்ன புள்ளி விவரமெல்லாம் கேட்டு ஆமா ஆமா ன்னு கோஷம் போட்டாங்களே. அப்புறம் ஏண்டா நம்ம கட்சிக்கு ஒருத்தன் கூட ஓட்டே போடலே . மக்களுக்கு நாம பேசினதெல்லாம் புரியலையா?

அவங்களுக்கு நாம பேசினது மொத்தம் புரிஞ்சு போச்சுண்ணே அதான் ஓட்டு போடலே

70.  மக்களை சந்திப்பேன் மக்களை சந்திப்பேன் நானே நேரிடையாக மக்களைச் சந்திப்பேன் என்று அடிக்கடி அறைகூவல் விடும் தலைவர்களே நீங்கள் நியாயமாக எல்லா நேரங்களிலுமே மக்களைச் சந்திக்க வேண்டும்
அல்லது உங்களை சந்திக்க வரும் மக்களை அனுமதித்து அவர்களுடன் அளவளாவி அவர்கள் குறைகளைக் கேட்டு நிவாரண நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அதற்காகத்தானே மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல எப்போதும் நீங்கள் மக்களைச் சந்திக்க வேண்டும் அதுதான் உங்கள் கடமை

71.  உன்னைப் பார்த்தவுடன் எங்கள் மனம் பதறும்
நீ எங்களைக் கடித்துவிடுவாயோஎன்று
எங்களைப் பார்த்தவுடன் உன் உடலே பதறும்
நாங்கள் உன்னை அடித்துவிடுவோமோ என்று
பிறகெப்படி நட்பாக இருக்க முடியும்
எம்மைப் பார்த்தவுடன் பல்லிலே விஷமூறும்
 
எங்களுக்கு கையிலே தடியேறும்
அடிக்க வேண்டாம் என்றே குழாயை நீட்டினேன்
உள்ளே தலை நுழைத்து வந்துவிட்டால் உயிரோடு கொண்டு போய் எங்கேனும் விட்டு விடலாமென்று
துள்ளிக் கடிக்க வருகிறாய் நானென்ன செய்ய
அப்படியே விடலாமென்றால் எங்கே இருப்பாயோ
எப்போது வருவாயோ என்றே தெரியாத பயம்
அப்போது முடிவெடுத்தேன் உனை அடித்தேன்
 
பிடிபட்ட நாகத்தை விட்டுவிடலாம் அடிபட்ட
 
நாகத்தை விடக்கூடாது என்றார் பெரியார்
அடிபட்ட நாகமாய் மீண்டும் நீ கடிக்க 
வந்தாய் அதனாலே கொளுத்தினேன்
 
அப்போதும் துள்ளுகிறாய் நீ
பயந்து தள்ளி நின்று வேடிக்கை
பார்த்த நல்ல மனிதரொருவர் 
அடித்துவிட்டேன் என்றே தெரிந்தவுடன்
தைரியமாய் அருகிலே வந்து எட்டிப் பார்த்து
 
நல்ல பாம்பல்ல சாரைதான் என்றார்
அதென்ன நல்ல பாம்பிற்கொரு உயிர் 
சாரைக்கு ஒரு உயிரா
 
இரண்டுமே உயிர்தானே
என்றவுடன் அசடு வழிந்தார்.
பாம்பென்றால் படையே நடுங்குமே 
அடியேன் கடையேன் எனக்கு மட்டும்
 
தைரியம் எங்கிருந்து வரும் அதனால்
 
அடித்தேன் எந்த உயிரானாலும்
போவது ஒரு முறையே போன உயிர் நீ
உனக்கு பல்லிலே விஷம்
மனிதருக்கு உடம்பெல்லாம் விஷம்
எங்கள் மனிதர்கள் பொல்லாவர்கள்
 
இனி எங்கள் கண்களில் படாதே நாங்களும்
உன் கண்ணில் படமாட்டோம் உறுதி
இதற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை

72.  மூத்த குடிமக்கள் நாட்டின் மேல் அக்கறை இருந்தால் தங்கள் அனுபவங்களை பகிர்தலில் தவறு இல்லை. இந்த நாட்டின் இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்த் நிச்சயமாய் அவர்கள் முனையவேண்டும். 69 வருடங்களாக அரசியல்வாதிகள் செய்யும் அக்ரமங்களை எடுத்துச் சொல்ல வேண்டும் நானும் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். தொடர்ந்து சொல்லுவேன் அதுவே இந்த நாட்டுக்கு நாம் செய்யும் தொண்டு. தொண்டு கிழமானாலும் இருக்குமிடத்திலேயே இருந்துகொண்டு செய்ய வேண்டிய தொண்டு இதுவே

73.  மதுவிலக்கு கொண்டுவருவோம் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று எல்லாத் தலைவர்களுமே சூளுரைக்கிறார்கள்
பொது மக்களே நன்றாக உற்றுக் கவனித்துக் கேளுங்கள்

ஏற்கெனவே மது விலைக்கு இருப்பதைக் கவனியாமல்

மது விலைக்கு கொண்டு வருவோம் என்று சொல்கிறார்கள்


74.  வாக்களிப்பது மக்கள் கடமை அளித்த வாக்கை காப்பாற்றுவது வேட்பாளர்கள் கடமை அல்லவா அவற்றை நிறைவேற்றாத வேட்பாளர்களை என்ன செய்யலாம் ?


75.  மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று இங்கிருப்பவர்களெல்லாம் சொல்லி சொல்லி தொண்டை வரண்டு விட்டார்கள் மேலிடத்திலிருந்து வந்தவரும் அதையே சொல்லி மக்களை தொண்டை வரண்டு போகச் செய்துவிட்டார்

மதுவைக் கொண்டு வருவானேன் அதன் பின்னர் ஒழிப்பானேன் இத்தனை ஆண்டுகளாக தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கூட கவனியாமல் மேலிடத்திலே என்ன செய்து கொண்டிருந்தார்கள்

76.  ஜெயிக்கிற குதிரைமேல் பணம் கட்டியே பழக்கப்பட்டுவிட்டோம் நாம்  இல்லையென்றால்  நம் பணமும் பறி போய்விடுமே என்கிற பயத்தில்

ஆனால் அரசியல் அப்படியல்ல  ஜெயிக்கிற கட்சிக்கு  வாக்களித்தாமேற்கெனவே  பறி போன   நம் பணமும் இனி வருங்காலங்களில்  நாம் ஈட்டும் பணமும் இரண்டும் சேர்ந்து  போய்விடும்  

ஆகவே ஜெயிக்கிற கட்சி என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு  வாக்களிக்காமல்  ஜெயிக்க வேண்டிய   கட்சிக்கு வாக்களியுங்கள்


77.   மூத்த குடிமக்கள் நாட்டின் மேல் அக்கறை இருந்தால் தங்கள் அனுபவங்களை முகநூல் போன்றவைகளில் பகிர்தலில் தவறு இல்லை. இந்த நாட்டின் இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்த நிச்சயமாய் அவர்கள் முனையவேண்டும்.
    அறுபத்தி ஒன்பது வருடங்களாக அரசியல்வாதிகள் செய்யும் அக்ரமங்களை எடுத்துச் சொல்ல வேண்டும் நானும்  சொல்லிக்கொண்டு இருக்கிறேன். தொடர்ந்து சொல்லுவேன்.

 அதுவே இந்த நாட்டுக்கு நாம் செய்யும் தொண்டு.  .
தொண்டு கிழமானாலும் இருக்குமிடத்திலேயே இருந்துகொண்டு செய்ய வேண்டிய தொண்டு இதுவே. இதைவிட மகத்தான தொண்டு ஒன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆகவே தொண்டு செய்யும் கிழமாக இருப்போம்.

78.  ஆட்சிக்கு வந்தால் அனைத்து நதிகளைையும் இணைப்போம் என்கிறார்கள். நீரே இல்லாமல் இருக்கும் நதிகளை எப்படி இணைப்பார்கள் ?
ஓ அனைத்து நதிகளையும் வீடு கட்டும் நிலமாக ஆலைகள் கட்டுமிடமாக மாற்றிவிட்டால் இணைத்துவிடலாமே இந்த யோசனைகூட பாமரனாகிய எனக்கு வரமாட்டேன் என்கிறது . அதனால்தான் அவர்கள் மந்திரிகளாக இருக்கிறார்கள் நான் மக்களில் ஒருவனாகவே இருக்கிறேன்.


தமிழ்த்தாய்க்கு கோடி கோடியாய் செலவழித்து ஒரு சிலை வைத்துவிட்டால் அவள் மகிழ்ந்து போய்விடுவாள் அவ்வளவுதானே.


79.   நாட்டின் முதுகெலும்பு தொழிலாளர்கள் அந்தத் தொழிலாளிகளுள் முக்கியமான தொழிலாளி விவசாயி அப்படிப்பட்ட விவ்சாயியைக் கடன் வாங்க வைத்து வட்டி கட்ட வைத்து விட்டு இப்போதென்ன திடீர் அக்கறை விவசாயிகளின் கடனை முழுவதுமாக நீக்க

தேர்தல் காலத்தில் மட்டுமே வருகிறதா விவசாயிகளின் நினைவு ?

"வரப்புயர நீர் உயரும், நீர் உயர
நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்,
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்  --
என்னும் ஔவையின்


மொழியிலே குடி உயரக் கோன் உயர்வான் என்பதை தவறாகப் புரிந்து கொண்டுதான் குடியை உயர்த்துகிறார்களோ ?


80.  பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என்கிறார்களே


அரசுக்கு மதுவினால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறதே அப்படிப்பட்ட Revenue அதாவது அரசுக்கு வரக் கூடிய வருமானத்தை இழந்தால் அதைச் சரிக்கட்ட என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை இது வரை எந்த கட்சியோ தலைவர்களோ திட்டம் சொல்லவே இல்லையே

ஆகவே மக்களே இப்படிப்பட்ட கோடி கோடியான வருவாயை சரிக்கட்ட உருப்படியான திட்டத்தை வெளியிடும் தலைவருக்கே நம் வாக்கை அளிக்கவேண்டும் அல்லவா சிந்திப்பீர்
சொல்வதையெல்லாம் செய்ய முடியாமல் போவதற்கு காரணமே உருப்படியான திட்டங்கள் இல்லாமைதான் என்பதை உணருங்கள்.

அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று சொல்லுவோரிடம் கேளுங்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் எப்படிச் செய்வார்கள் என்று

81.   லஞ்சம் ஊழல் இவைகளால் நாடு கெட்டுக் குட்டிச்சுவராகப் போகிறது. எந்த ஒரு வேலை நடக்க வேண்டுமானாலும் அதற்குரிய லஞ்சத்தைக் கொடுக்காமல் காரியம் நடப்பதில்லை
என்ன செய்யலாம் இந்த லஞ்சத்தையும் ஊழலையும் தடுக்க என்று சிந்தித்து சிந்தித்து மூளை குழம்புகிறது.
வேறு வழியே இல்லை எப்பாடு பட்டாகிலும் இந்த லஞ்சம் ஊழல் ஆகியவற்றை ஒழித்தே ஆகவேண்டும்
ஆகவே எவ்வளவு பணம் கொடுத்தால் இந்த உழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க முடியும் என்று யாரேனும் ஒருவர் தீர்வு சொன்னால் அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்க தயாராகவேண்டும் ஆனால் அந்தப் பணத்தை அன்பளிப்பாக கொடுக்கவேண்டும் அதையும் லஞ்சமாகவே கொடுத்துவிடாதீர்கள்

82.   திடீரென்று வானம் இருட்டிக் கொண்டு வந்தது    சரி கோடை மழை பெய்யப் போகிறது என்று மகிழ்ந்தேன் 
மின்சாரத்தை அணைத்துவிட்டார்கள்
வெய்யில் அடித்தாலும் மழை பெய்தாலும் மழைபெய்யப்போவது போல் இருந்தாலும் மின்சாரம் தடை செய்யப்படும் போல் உள்ளது


83.  பால் கூட வாங்க முடியலே படிக்கவும் முடியலே மின்சாரமும் இல்லே , படிச்சும் வேலை கிடைக்கலே என்றெல்லாம் யாரையோ நடிக்க வைத்து அவர்களைப் பேசவைத்து அதை வெளியிடுகிறார்களே.
உண்மையான மக்களை சந்தித்தாலே நடிக்க வைக்க வேண்டும் எனும் அவசியம் இல்லாமலே மக்களே உண்மையை் பேசுவார்களே. எதற்கையா இந்த நடிப்பும் வேஷமும் எல்லாவற்றையுமே நடிப்பால்தான் வெளிப்படுத்த முடியும் என்று நினைத்துவிட்டீர்களா.


ஆமாம் நடித்தால்தானே நம்புகிறார்கள் மக்கள்


84.  ஒருவர்: டாக்டர் இந்த ஆள்காட்டி விரலாலே கழுத்திலே தொட்டா வலிக்குது

டாக்டர்: சரி எதுக்கும் கழுத்திலே ஒரு ஸ்கேன் எடுத்துட்டு வாங்க

ஒருவர்: டாக்டர் இந்த ஆள்காட்டி விரலாலே முதுகைத் தொட்டாலும் வலிக்குது

டாக்டர் : சரி எதுக்கும் முதுகிலேயும் ஸ்கேன் எடுத்திட்டு வாங்க
ஒருவர்: இல்லே டாக்டர் இந்த ஆளக்காட்டி விரலாலே எங்கே தொட்டாலும் வலிக்குது

டாக்டர்: அப்பிடியா ஏன்யா அதை மொதல்லேயே சொல்லக் கூடாது, ஆள்காட்டி விரல்லேதான் புண்ணு அதான் எங்கே தொட்டாலும் வலிக்குது

ஒருவர்: ஆமாம் டாக்டர் தேர்தல்லே ஓட்டு போட்டுட்டு வந்ததிலேருந்துதான் இப்பிடி இருக்குது

டாக்டர் : அதுக்குதான்யா யோசிச்சு ஓட்டு போடணும்கிறது இல்லேன்னா உடம்பெல்லாம் வலிக்கத்தான் செய்யும். ப்ரச்சனை எங்கேன்னு தெரியாம வாக்கும் குடுக்கக் கூடாது வாக்களிக்கவும் கூடாது

85.  ஏண்ணே கள்ள ஓட்டு கள்ள ஓட்டு அப்பிடீங்கறாங்களே அப்பிடீன்னா என்னா
இதுகூடத் தெரியாமத்தான் நீயும் பட்டணத்திலே வாழுறியா,
இருக்கற ஒரு ஓட்டையும் தகுதி இல்லாதவனாப் பாத்துப் பாத்து தேர்ந்தெடுத்து இந்த தடவையும் போடப் போறோமே அதுதாண்டா கள்ள ஓட்டு
நல்ல ஓட்டுன்னா என்னண்ணே
அது இது வரைக்கும் பொறக்கவே இல்லேடா

86.  ஸ்கூட்டர் விலையிலே பாதி தருவதை விட ஒண்ணு செய்யலாம் பாதி ஸ்கூட்டர் இந்த தேர்தலிலேயும் மீதி ஸ்கூட்டர் அடுத்த தேர்தலிலேயும் தரலாம் முழுக் கிணறு ஆகிவிடும் ஏற்கெனவே கிண்றுகளாகப் பார்த்து பார்த்துதான் ஸ்கூட்டரெல்லாம் விழுந்து கொண்டிருக்கிறது

87.   வாக்காளருக்கு இலவசங்கள் அறிவிப்பதை விட வேட்பாளருக்கு பதவியின் சீட்டை இலவசமாக கொடுத்தால் ஒரு வேளை அவர்கள் பதவிக்காக அளிக்கும் லக்‌ஷங்களை சம்பாதிக்கும் எண்ணம் குறைந்து மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்யலாம் என்னும் மனமாற்றம் வேட்பாளருக்கு வந்தாலும் வரலாம் ஒரு நப்பாசைதான். முயன்றுதான் பாருங்களேன் தலைவர்களே

88.   கணக்கிலே கடன் வாங்கிக் கழிக்கலாம்  கூட்டலாம்  கணக்கில்லாமல் கடன் வாங்கக் கூடாது
அதே போல் கணக்கில்லாமல்  இலவசங்களை வழங்கக் கூடாது
அதுதான் இன்றைய இந்திய அரசியல் நிலமை. பொருளாதார மேதைகள் செய்ததெல்லாம்  இந்த்த் தவறுதான்
அதனால்தான் பொருளாதாரம் நலிந்துகொண்டே  வருகிறது

89.   எங்கே அடைப்பிருக்கிறதோ அங்கேயுள்ள அடைப்பைக் கண்டு பிடித்து அந்த அடைப்பை நீக்கினால் சாக்கடை நீர் தேங்கி நிற்காமல் தானாகப் போய்விடும்
இது சாக்கடைக்கு மட்டுமல்ல இருதயத்தின் ரத்தக் குழாய்களுக்கும் பொருந்தும்
அப்படி தங்கு தடையின்றி ஓடினால் நாட்டின் வளம் பெருகும் என்பதால் பொருளாதார சாக்கடையில் அவ்வப்போது ஏற்படும் லஞ்சம் ஊழல் போன்ற அடைப்புகளைை நீக்கி சரி செய்ய வேண்டியது அரசின் கடமை,
அதனால் முதலில் சாக்கடைகளிலிருந்து தொடங்கி ஆறுகள் வரை அடைப்பை நீக்கி சுத்தம் செய்து ஓடவிட்டாலே நாடு வளம் பெறும்

விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும் இத்தனை கோடி மக்களுக்கேற்ற சாக்கடைகள் வேண்டும் நீர்வழித் தடங்கள் வேண்டும் அப்போதுதான் நாற்றமின்றி கொசுக்களின்றி வியாதிகளின்றி மக்கள் சுபிக்‌ஷமாக வாழ முடியும்


ஊழல் லஞ்சம் என்னும் இரு அடைப்புகளை நீக்க முயலுங்கள் அரசியல்வாதிகளே.


90.  பல ஆண்டுகளாக ஜாதிகளைத் தூண்டிவிடுவோரும் குறிப்பிட்ட ஜாதியினரை இழிவு செய்வோருமே ஜாதிக்கு ஜாதி வெறுப்பை வளர்த்து சண்டை மூட்டி மனித நேயத்தை மறக்க வைத்து அதிலே குளிர் காய்கின்ற கட்சிகளும் , இறையை வணங்காதே இறை தரிசனம் செய்யாதே , ஆலையங்களைக் கொள்ளையடி என்றெல்லாம் அட்டகாசங்கள் செய்தோரும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை இந்த நாட்டில் நாம் வாழ முடியாது ஆகவே மற்ற நாடுகளுக்கே சென்று வாழலாம் என்று மனம் வெறுக்கவைத்த கட்சிகள் ஆட்சிக்கு வந்து நாட்டின் ஆன்மீகப் பாதையை அடைத்து , நல்ல சொற்களே காதிலே விழாமல் நாராசமான சொற்களை ப்ரயோகம் செய்து நாட்டையும் மக்களையும் வீழ்ச்சியின் பாதைக்கு இட்டுச் சென்ற கட்சிகள்.

இனியாவது நாட்டை வளர்ச்சிப் பாதையில் உண்மையான ஆன்மீகப் பாதையில் மனித நேயத்தை வளர்க்கும் பாதையில் கொண்டு சென்று நாட்டின் மேன்மையை வளர்க்கும் கட்சி எதுவோ அதற்கே வாக்களிக்க சிந்தியுங்கள்

91.   தமிழகத்தை காப்பாற்றப்போவது யாரென்று உயர் திரு மோடி அவர்கள் ஆவேசப்படுவது நியாயமே .
அப்படியானால் திரு மோடி அவர்களின் ஆவேசம் தமிழகத்தை காப்பாற்ற வேண்டுமே
தமிழகத்தைக் காப்பாற்ற முதல் நடவடிக்கையாக 
தமிழகத்தை இந்த அளவுக்கு மோசமாக்கியது யாரென்று கண்டு பிடிக்க வேண்டும்
கண்டு பிடித்து தமிழகத்தி்ன் இந்த மோசமான நிலமைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்
திருடர்களையும் கொள்ளையர்களையும் கண்டு பிடித்து அவர்களை நாட்டை விட்டு விலக்கினாலே நல்லது
அப்போதுதானே மோசமான நிலையிலிருக்கும் தமிழகத்தை காப்பாற்ற எடுக்கப் படும் நடவடிக்கைகளை யாரும் தடுக்காமல் தமிழகத்தைக் காக்க முடியும்
92.   முன்பெல்லாம் வாக்குச் சாவடிக்கு வாக்காளர்களை மரியாதையாக காரிலே அழைத்துச் சென்று வாக்களிக்க வைப்பார்கள். வாக்களித்தவுடன் மறந்துவிடுவார்கள் வீட்டுக்கு நடந்துதான் வரவேண்டும்
இப்போது வாக்களிக்கச் சென்று பாதுகாப்புடன் வீட்டுக்குத் திரும்ப முடிகிறது என்பது மனதுக்கு ஆறுதலான விஷயம்

ஆனாலும் இப்போதும் வாக்களித்த மறுகணமே வாக்காளர்களை மறந்துவிடுகிறார்களே வேட்பாளர்கள் என்பதுதான் வருத்தப்படுத்தும் விஷயம்

93.   உலகில் உள்ள எல்லா மக்களுமே மொழி மதம் இனம் ஜாதி போன்ற எல்லாவற்றையும் கடந்து நமக்கு என்ன கிடைக்கும் என்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள்
அதுதான் மனித இயல்பு , மனிதர்மட்டுமல்ல எல்லா உயிருக்கும் அதுதான் அடிப்படை இயல்பு
இதைப் புரிந்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்று பார்க்கவே வரும் பொது மக்களை பலவிதமான சலுகைகளை அறிவித்து அவர்களின் மனதி்லே இடம் பிடித்து பதவியைக் கைப்பற்றுகிறார்கள்

மக்களே உங்களுக்கு வாக்குறுதிகள் கொடுத்து பதவியை அடைபவர்கள் அவற்றை தராமல் ஏமாற்றினால் அவர்களிடமிருந்து உங்களுக்குத் தேவையானவற்றை பெற ஏதேனும் வழி இருக்கிறதா உங்களிடம் சிந்தித்துப் பாருங்கள்
இல்லை என்றால் உங்கள் பொன்னான வாக்குகளை நமக்கு எதுவும் கிடைக்காது என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு அளியுங்கள்
ஏமாற்றத்தையாவது தவிர்க்கலாம்


94.  அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்றும் பலவிதமான இலவசங்களை அளிக்கிறேன் என்றும் வாக்கு கொடுக்கும் தலைவர்களில் யாராவது ஒரு தலைவர்
தரமான சாலைகளை போட்டுத் தருவேன்.
தரமான பொருட்களை நுகர்வோர் அங்காடியில் அளிப்பேன்


கல்வியை மேம்படுத்துவேன் , வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவேன் நாட்டை மேம்படுத்துவேன் ஆரோக்கியமான சுற்றுச் சூழலை ஏற்படுத்துவேன்
வியாதிகளே இல்லாத நாடாக மாற்றுவேன் வறுமை இல்லாத நாடாக மாற்றுவேன்
உலக நாடுகளின் தரத்துக்கு ஈடான நாடாக மாற்றுவேன்
லஞ்ச ஊழலை ஒழிப்பேன் என்றெல்லாம் நியாயமான மேம்பட்ட கொள்கைகளை அறிவிக்கிறார்களா என்று பார்த்தேன் மேலும் மேலும் போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களை அதாவது நமக்கே லஞ்சம் கொடுத்து ஊழலை வளர்க்கவே பாடுபடுகிறார்கள் .
ஏமாற்றமே மிஞ்சுகிறது.
நாம் கட்டும் வரிப்பணத்திலிருந்து நமக்கே இலவசமா
நம் பணத்திலே இருந்தே நமக்கே தானமா    யோசிப்பீர் வாக்காளர்களே

95.  தமிழக மக்களைக் காப்பாற்றுங்கள் என்று எல்லாத் தரப்பினரும் அறைகூவல் விடுக்கிறார்கள்
இதில் தமிழக மக்களும் அடக்கம்
ஆனால் இன்னமும் எந்தத் தொகுதியில் யார் வேட்பாளர்
எந்தக் கட்சிக்கு யார் தலைவர்
எந்தக் கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை


அவர்கள் தொகுதியிலே போட்டியிடும் வேட்பாளர்கள் யாரென்றும் தெரியவில்லை.
எப்படிக் காப்பாற்றுவது தமிழக மக்களை


96.  இந்தத் தேர்தலில் நிற்க எனக்கு என்ன தகுதி இருக்கிறதென்று கேட்கிறார்கள் இப்போதைய எதி்ர்க் கட்சிக்காரர்கள்.
இது வரை நான் அடிப்படை உறுப்பினராக இல்லாத எந்தக் கட்சியுமே இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
அது மட்டுமல்ல எந்தக் கட்சி இருந்தாலும் எல்லாக் கட்சியையும் ஆதரித்தவன் நான் என்பது என்னுடைய முக்கியமான தகுதி .
எந்தக் கட்சிக்கு தாவினால் ஆதாயமாக இருக்குமோ அந்தக் கட்சி எந்தக் கட்சியானாலும் எப்போது வேண்டுமானாலும் பாகுபாடின்றி தாவும் தகுதி உடையவன் நான்.
நமக்கு நாமே திட்டத்தை முதன் முதலாக தொடங்கியவன் நான் என்று பெருமையுடன் அறிவிக்கிறேன்.
எந்தக் கட்சி நாட்டுக்காக என்ன செய்தது என்பதை இது வரை நான் கேட்டதே இல்லை. இதை் விட மேலாக என்ன தகுதி வேணடும் தேர்தலில் நிற்க என்றே புரியாத சிலர் என்னை வேண்டுமென்றே அவமானப்படுத்து்கிறார்கள்
இவற்றை விட முக்கியமான தகுதியாகிய ஒன்றைக் குறிப்பிட்டு என் சிற்றுரையை முடிக்கிறேன்
எவ்வளவு வயதானாலும் நடக்கவோ பேசவோ முடியவில்லை என்றாலும் நம் நாட்டின் மேன்மை மக்களின் மேன்மை இவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பேன் .என் நலனே குறிக்கோளாய் இருப்பேன். எப்போதும் அரசியலிலிருந்து விலகமாட்டேன் என்றும் உறுதி கூறுகிறேன்.
மக்கள் விசிலடித்து ஆரவாரம் செய்து கைதட்டி மகிழ்கிறார்கள் பாருங்கள் என்னை ஆதரிக்க பொதுமக்களாகிய நீங்கள் இருக்கும் வரை நான் யாருக்குமே பயப்படமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்

97.   இறை நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ஜோதிட நம்பிக்கை மட்டும் யாரையுமே விடுவதில்லை
ஜோதிடர்களும் இறையை விட அவர்கள் பெரியவர்கள் என்று நினைத்துக் கொண்டு ஏதேனும் சொல்லிவைக்கிறார்கள்.
அதை நம்பி எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்னும் ஆர்வமுள்ளவர்கள் கெட்ட கிரகங்களின் பார்வையிலிருந்து விடுபடவேண்டும் என்றெல்லாம் வேண்டிக்கொண்டு கோயிலிலே கொள்ளையடித்தாகிலும் அந்தப் பணத்திலே கொஞ்சம் ஜோதிடருக்கும் அள்ளிக் கொடுத்துவிட்டு அவர் சொல்படியெல்லாம் ஆடுகிறார்கள்
வெள்ளைத் துண்டு, மஞ்சள் துண்டு பச்சைத் துண்டு என்றெல்லாம் கலர் கலராக துண்டுகளை போர்த்திக் கொண்டும் தலையில் கட்டிக் கொண்டும் ரவிக்கையாகத் தைத்துப் போட்டுக்கொண்டும் ப்ரசாரம் செய்கிறார்கள். கலர்க் கனவுகள் நிறைந்த தேர்தலப்பா இது
துண்டுப் ப்ரசாரம் கேள்விப்பட்டிருக்கிறேன் சிறு சிறு காகிதத்திலே அச்சிட்டு அதைக் கொடுப்பார்கள்.
இது வித்யாசமான துண்டுப் ப்ரசாரமாக இருக்கிறது
யார் வேண்டுதலை நிறைவேற்றுவதென்றே தெரியாமல் தடுமாறுகிறார்கள் இறைவனும் மக்களும். குழப்பமோ குழப்பம்


98.  எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது உங்கள் உரிமை
உங்கள் விருப்பம் அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்பது உண்மைதான்
வீடு தேடி வந்து வாக்களிக்கக் கோரும் வேட்பாளர்களின் ஆட்களும் மனிதர்களே , வேட்பாளரும் மனிதரே

ஆகவே வருபவர் யாராக இருந்தாலும் அவர்களை இன்முகத்தோடு வரவேற்று அன்போடு உபசரித்து வெய்யிலில் வரும் அவர்களுக்கு குடிக்க நீர் வேண்டுமா என்று கேட்டு குறைந்த பக்‌ஷம் குடிக்க தண்ணீராவது கொடுத்து மரியாதையாக வழி அனுப்புங்கள்

அதற்கு மேல் காப்பி தேனீர் போன்ற பானங்களைத் தருவது உங்கள் விசால மனதைப் பொறுத்தது

அதற்குப் பிறகு நன்கு ஆலோசித்து உங்கள் மனசாட்சிப்படி யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள்


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா உயர்ந்தது ஜாதி

மதம் கட்சிகள் எதிர்கட்சி நம் கட்சி எதுவுமே முக்கியம் இல்லை ,. ஆகவே மனிதம் காப்போம்

99.    வேட்பாளர்களே தேர்தல் நேரத்தில் நீங்கள் பேசுவதையெல்லாம் உற்றுக் கவனிக்கிறார்கள் பொது மக்கள் . மற்ற நேரங்களில் நீங்கள் பேசுவதே இல்லையே என்னும் ஏக்கத்தில்
ஆனால் எப்போது மக்களைப் பேசவிட்டு நீங்கள் கேட்கப் போகிறீர்கள் அந்த ஏக்கம் உங்களுக்கு வராதா?

100..    மனநலக் காப்பகங்கள் அனாதைக் குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்கள்,விதவைகள் இல்லம் ஆதரவற்றோர் இல்லங்கள் ஊனமுற்றோர் இல்லங்கள் ஊதியமற்றோர் இல்லங்கள் இவை எல்லாவற்றையும் மூடவேண்டுமா ?
டாஸ்மாக் கடையை முதலில் மூடுங்கள்

101.  நாட்டின் அருமை , மக்களின் அருமை உணர்ந்த மக்களின் மேல் நாட்டின் மேல் அக்கறை கொண்டநாட்டின் பொருளாதாரம் ,மேன்மை நீர் நிலைகளின் பராமரிப்பு விவசாயநிலங்களின் விவசாயிகளின் மேன்மை இயற்கை வளங்களின் பராமரிப்பு தெரிந்த் படித்த பண்பான அன்பான நாகரீகம் தெரிந்த கருணை மிக்க வேட்பாளர்களை எப்போது பெறுகிறோமோ அப்போது வரும் நம் உயர்வு நம் நாட்டின் உயர்வு

102.  சாராய வியாபாரம், காடுகளைை சீரழித்து மர வியாபாரம்,கள்ளக் கடத்தல், நிழல் உலக தாதாக்கள், காலித்தனம் செய்வோர்,பெண்களை இழிவு படுத்துவவோர், ஆலயங்களைக் கொளையடிப்போர்,நாட்டின் வளங்களைச் சுறண்டுவோர்,போன்ற மனசாட்சியே இல்லாதவர்களை அகற்றுங்கள்,,குடும்ப அரசியல் செய்வோர்தம் குடும்பத்துக்கு நாட்டைக் கொள்ளையடித்து சொத்து சேர்ப்போர்,நம் நாட்டை மதிக்காமல், நம் மக்களை மதிக்காமல் இருப்போர்களை இனங்கண்டு ஒதுக்குங்கள். .களையெடுத்தாலே பயிர் வளரும்

103.   இந்த தேர்தலில் இல்லாவிட்டாலும் அடுத்த தேர்தலிலாவது மக்கள் விழிப்புணர்வு பெற்று பொங்கி எழுவார்கள் என்று நானும் 13 தேர்தல்களாக காத்திருக்கிறேன்
அனேகமாக வெகு விரைவில் நிகழும் என்று நம்பிக்கை வருகிறது இப்போதெல்லாம் நட்க்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது

104.  மனித உயிர் என்பது மிகவும் மலினமாகிவிட்டது மனிதர்களே ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்க்க்கிறார்கள் எல்லையோரப் போர்க்களத்தி்ல் அல்ல நகரத்தின் மத்தியில்
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதரை மனிதரே கடிக்கும் அளவுக்கு மக்களுக்கு வெறி பிடித்திருக்கிறது
வெறி பிடிக்க வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை


தொலைக் காட்சியில் பார்த்தேன் ஒரு காட்சியை ஒரு மனிதரை பல பேர் சேர்ந்து வெட்டித் தளுகிறார்கள்.
மிருக வெறி கூட அடங்கிவிடும் மனித வெறி எப்போது அடங்கும் கவலையாய் இருக்கிறது
மர்ம நபர்கள் அதிகரித்து விட்டார்கள்

105.   கோடி கோடியாய்ப் பணம் இருந்தால் பெரும் பணக்காரர்கள் கோடிப் பணம் என்றாலே அதன் மதிப்பே தனி 
அப்படிப்பட்ட கோடிகள் தங்களின் சுயமரியாதையை இழந்து பரம் ஏழைபோல் காரின் டிக்கியிலேயும், உட்காரும் இருக்கையின் அடியிலும் ஆட்டோக்களிலும் குப்பை அள்ளும் கூடைகளிலும் குற்றவாளிபோல் மறைந்து மறைந்து பயணிக்கிறது காவல் துறைக்கு பயந்து.
நோயாளி போல் மருத்துவ ஊர்திகளிலும் பயணிக்கிறது

மர்ம நபர்கள் போல் மறைந்து மறைந்து பயந்து பயந்து வாழ்கிறது . தீவிரவாதிகள் போல் தலைமறைவாய் வாழ்கிறது . என்ன ஒரு கொடுமை கோடிகளுக்கு சகவாசம் சரியில்லை அதனால் சுக வாசம் போய்விட்டது


106.  வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் கொடுக்க முறையாகத் திட்டமிடுகிறார்களே வேட்பாளர்கள்
எவ்வளவு பணம் மொத்தமாக கொடுக்கவேண்டும் எந்தத் தொகுதியில் எவ்வளவு வாக்காளர்கள் இருக்கிறார்கள் அத்தனை பேருக்கும் அந்த தொகுதியில் யார் மூலமாக எப்படி தேர்தல் துறையினர் அறியாமல் பணத்தை பங்கீடு செய்ய வேண்டும் எப்படி பணத்தை மறைத்து எடுத்துப் போகவேண்டும் எப்படி கொடுக்க வேண்டும் என்றெல்லாம் முறையாகத் திட்டமிட்டு பணத்தை அளிக்கிறார்களே அடடா எவ்வளவு திட்டங்கள் எவ்வளவு புத்திசாலித்தனம் நிறைந்த அறிவாளிகள் செயல் படுகிறார்கள்
இந்த அறிவாளித் தனத்தை புத்திசாலித்தனத்தை உபயோகித்து அதே வாக்காளர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்று சேரவேண்டும் என்று ஏன் திட்டமிட மாட்டேன் என்கிறார்கள் புரியவே இல்லையப்பா

107.   விலைவாசி ஏற்றத்துக்கு எதிர்க் கட்சித் தலைவரே காரணம் என்று எல்லாக் கட்சித் தலைவர்களுமே சொல்கிறார்கள்
நல்ல வேளை மக்களே காரணம் என்கிற உண்மையைச் சொல்லவில்லை
பேரமே பேசாமல் பேரம் பேசுவதே அவமானம் என்று நினைத்துக்கொண்டு பணம் இருக்கிறது என்கிற ஒரே காரணத்தால் வியாபாரிகள் சொல்லும் விலையைக் கொடுத்து வாய் பேசாமல் வாங்கிக் கொண்டு செல்லும் பணக்காரர்களே காரணம் என்பதை எப்போது கண்டு பிடிப்பார்கள் என்றே தெரியவில்லை


108.   எதுக்கு போறவரவங்ககிட்ட எல்லாம் யாருக்கு வாக்களிப்பீங்கன்னு கேக்கறீங்க கருத்துக் கணிப்பா


அட நீ வேற யாருக்கு வாக்களிக்கறதுன்னே குழப்பமா இருக்கு நாலு பேரைக் கேட்டாலாவது தெளியுமான்னு பாக்கறேன்       அடேடே உங்களுக்கும் அதே குழப்பமா?

109.    பறக்கும் படை அதிகாரிகள் பறந்து பறந்து பணம் கொடுப்பதைத் தடுக்கிறார்கள்

வேட்பாளர்கள் பணத்தை அளிக்கவும் ,மக்கள் பணத்தை வாங்கவும் பறக்கிறார்கள்.அதிகமாய்ப் பணம் இருப்பவர்கள் சாலையிலே பணத்தைப் பறக்கவிடுகிறார்கள்

1965 ஆம் ஆண்டு வெளிவந்த
இரவும் பகலும் என்னும் திரைப்படத்தில்

பறந்து பறந்து பணம் தேடி பாவக் குளத்தில் நீராடி
பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி
இறந்தவனைச் சொமந்தவனும் இறந்திட்டான் அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்துட்டான்


என்று ஆலங்குடி திரு சோமு இயற்றி திரு டி.ஆர். பாப்பா இசையமைத்து திரு எஸ்.ஏ. அசோகன் பாடி நடித்த அந்தப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது

110.  யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்த ஒரு பெரிய மாற்றமுமில்லை என்றே நொந்து போன மக்கள் யார் வேட்பாளர் யார் தலைவர் எந்தக் கட்சிக்கு என்ன சின்னம் எந்தத் தொகுதியிலே யார் நிற்கிறார்கள் யார் வெற்றி பெறுவார்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ளும் ஆவலையே துறந்துவிட்டார்கள்
அதனால் அவர்களுக்கு தெரியாது தெரியாது என்கிற பதிலைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை
யார் காரணம் மக்களின் இந்த மன நிலைக்கு

111.
கட்டிட வேலைக்கு  வந்து கொண்டிருந்தவர்கள் திடீரென்று வராமல் நின்று போனார்கள்

அவர்களில் ஒருவரை சந்தித்து  ஏன் வேலைக்கு வர மாட்டேங்கறாங்க   என்றேன் 

ஆமாம்  வேலை செஞ்சாலும் என்னா பெரிசா குடுத்துடப் போறே . சும்மா உக்காரவெச்சு பிரியாணி குடுத்து சொகமா வெச்சிக்க எங்களுக்கு இடம் இருக்கும் போது எதுக்கு அனாவசியமா வேலை செய்யணும் என்றார் அவர்.,
அடடா வேலை செய்து பிழைக்கும் வர்கத்தினரையும் சோம்பேறிகளாக்கியது யார் ?

இப்போது வேலை செய்பவர்களுக்கு இப்படி தற்காலிக உற்சாகத்தை அளித்து தேர்தலில் வெற்றை பெற்ற பின்னர் இவர்களைக் கண்டுகொள்ளாமல் போய்விடுவார்கள் அப்போது இவர்களுக்கு வேலை கொடுக்க யாரும் தயாராக இருக்க மாட்டார்கள் இவர்களுக்கும் வேலைக்கு போகும் உற்சாகம் வராது
என்றே புரியாமல் விழிக்கிறேன் உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா ?

அரசியல் ஏதுமில்லையா      உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்கள் நன்றி சொல்கிறேன்


112.     நடப்பு நிலமையிக் கூர்ந்து கவனித்தால் மக்களுக்கு விழிப்புணர்வு வந்துவிட்டது அவர்கள் அரசியல்வாதிகளை நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டார்கள் என்று புரிகிறது


நல்ல பிள்ளையாக பொதுக்கூட்டங்களுக்கு சென்று நன்றாக அவர்கள் அளிக்கும் உணவு வகைகளை உண்டுவிட்டு ஏதோ பேருக்கு கையைத் தட்டிவிட்டு மாலையில் கொடுக்கும் அனைத்தையும் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக காலம் கழிக்கிறார்கள்

வீட்டிலே சமையல் இல்லை மின்சாரம் செலவு இல்லை செலவே இல்லை அவர்களே சொகுசாகக் கூட்டிச் செல்கிறார்கள் கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள்

வருமானமும் வருகிறது சரி அனுபவிக்கும் வரையில் அனுபவிப்போம் என்னும் புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்திருக்கிறார்கள் மக்கள்

113.   அறுவது ஆண்டுகளாய்

மீனவப் பெண்கள் கடற்கரையில் கதறுகிறார்கள்

மாணவப் பெண்கள்  உடற்கறையில் கதறுகிறார்கள்

படிதாண்டாப் பத்தினி ஆடுகள் பலி கொடுக்க  எடுத்துச் செல்லப் படுகின்றன

வேலி தாண்டிய  வெள்ளாடுகள் வேட்டையாடுகின்றன கொழுக்கின்றன  கொழிக்கின்றன

ஆணவக் காரர்கள் சிரிக்கிறார்கள் ரசிக்கிறார்கள் ருசிக்கிறார்கள்


ஆனால் அரசியல் மட்டும் ஐந்தாண்டுக்கு ஒருமுறை
தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது உத்வேகமாய்
மீண்டும் அரசியல் செய்ய மட்டுமே

114.  நான் உங்கள் சகோதரன் உங்கள் நண்பன் மக்கள் சேவகன் மக்களின் நண்பன் மக்கள் பாதுகாவலன்
பொதுநலத்துக்காகவே சேவைக்காகவே உங்கள் நலவாழ்வுக்காகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன்
நீங்களே நான் நானே நீங்கள். நாம் இருவரும் வேறல்ல


உங்கள் தாய் உங்கள் தந்தை உங்கள் உறவினர் உங்கள் சகோதரன் உங்கள் சகோதரி எல்லாமே நான்தான் ஆகவே மக்களே இனி என் மகிழ்ச்சியே உங்கள் மகிழ்ச்சி என் வளர்ச்சியே உங்கள் வளர்ச்சி


உங்கள் நலனே என் நலன் உங்கள் வளர்ச்சியே என் வளர்ச்சி உங்கள் உழைப்பு என் உழைப்பு உங்கள் சாலைகள் என் சாலைகள் உங்கள் நாடு என் நாடு உங்கள் தேசம் என் தேசம் . உங்கள் சொத்துக்கள் என் சொத்துக்கள்

115.    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம் என்று எல்லாத் தலைவர்களுமே சொல்கிறார்கள்
ஆனால் என்னை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினால் நான் நிச்சயமாக மதுவை ஒழிப்பேன் என்று உறுதி கூறுகிறேன். அதற்கு சாட்சியாக இப்போதே ஒரு செய்தியைச் சொல்கிறேன் .  

நமது இந்தியா நமது தேசம் நமது தமிழகம் நமது சென்னை நமது சொத்துக்கள் என்கிற சொல்லையே நான் இது வரை உபயோகித்ததே இல்லை ஏன் தெரியுமா அந்தச் சொற்களில் நமது என்னும் சொல்லிலேயே    - -----  மது இருக்கிறது

ஆகவேதான் எனது இந்தியா எனது தமிழகம் எனது சென்னை எனது சொத்துக்கள் என்றெல்லாம் சொற்களை உபயோகிக்கிறேன்
ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை எனது கட்சிக்கே அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்

116.   பண ப் பட்டுவாடாவை  ஏன் தடுக்கிறீர்கள்
இதுவரை சுரண்டியதைத்தானே கொடுக்கிறோம்
இது மக்களின் பணம்தானே அவர்களுக்கே திருப்பிக் கொடுக்க நினைத்தால் தடுக்கிறீர்களே நியாயமாக அவர்களுக்கு போய்ச்சேரவேண்டிய பணம்தானே

இப்படி நல்ல திட்டங்களை எல்லாம் தடுத்துவிட்டு மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொன்னால் நாங்கள் என்ன செய்ய முடியும் ஆகவே பணப்பட்டுவாடாவை தடுக்காமல் இருக்க வேண்டுகிறோம்..

அன்புடன்
தமிழ்த்தேனீ
117.  மது ஆலைகள் திறந்து நடத்துவோராலேயே அந்த மதுவை ஆலைகளை மூடமுடியவில்லை


அப்படி இருக்க மது ஆலைகளே இல்லாத மற்றக் கட்சிகள் எப்படி மது ஆலைகளை மூடும் மதுவை ஒழிக்கும்


ஆகவே பொது மக்களே முதலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மது ஆலையை திறக்க அனுமதியுங்கள் அப்போதுதான் மூட முடியும் மதுவை ஒழிக்க இதைவிட சிறந்த யோசனையை எங்களைத் தவிர யாரும் சொல்லிவிடமுடியாது

118. பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுக்காதே மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள் என்கிறார்கள் எதிர்க்கட்சிகள் நாங்களும் வலை சகிதமாக சென்று மீன் பிடிக்க கற்றுத் தருகிறோம் வாருங்கள் என்று அழைத்தால் வர மறுக்கிறார்கள்


அவர்கள் மீன் பிடிக்கக் கற்றுக் கொண்டு மீன் பிடிக்கச் சென்றால் இலங்கை அரசால் சுடப்பட்டு இறப்போம் ஆகவே எங்களுக்கு மீனே போதும் மீன் பிடிக்க கற்றுக் கொள்ள வேண்டாம் என்கிறார்கள் மக்கள்


நாங்கள் என்னதான் செய்வது ஒருவழிக்கும் போகவிடாவிட்டால் எப்படி நாங்கள் எங்கள் கொள்கைகள் என்ன என்பதை சொல்ல முடியும்

119. எப்படியாவது வெற்றி பெற்று விடவேண்டும் என்று விளையாட்டுக் காரர்கள் முயல்வது வழக்கம். அதற்காக அவர்கள் தீவிர பயிற்சி மேற்கொள்ளுதலே சிறந்த வழி. ஊக்க மருந்துகளை உபயோகித்து வெற்றி பெற முயல்பவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள் அப்படியே தப்பித்து வெற்றி பெற்றாலும் வெற்றியின் பரிசை அனுபவிக்க முடியாமல் தகுதி இழக்கிறார்கள்
விளையாட்டுக்கே இப்படி என்றால் தேர்தல் என்னும் வாழ்க்கைப் போராட்டத்துக்கு எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் நம்மை
1957 ஆம் ஆண்டு வெளிவந்த மஹாதேவி என்னும் திரைப்படத்தில் திரு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களால் எழுதப்பட்டு திரு எம் எஸ் விஸ்வநாதன் திரு டீ கே ராமமூர்த்தி அவர்களால் இசையமைக்கப்பட்டு திரு டீ எம் எஸ் அவர்களால் பாடப்பட்ட பாட்டுக்கு நடிப்பு திரு எம் ஜீ ஆர் அவர்கள் அந்தப் பாடல் தான் நினைவுக்கு வருகிறது
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா
இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா - வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா
அன்புடன்
தமிழ்த்தேனீ

120.  நம்ம நாட்டு அரசியல்வாதிகள் போல உலகத்திலே எங்கேயுமே நல்லவங்களைப் பாக்க முடியாது


நல்லா யோசிச்சுப் பாருங்க எந்தக் கடைக்கு போனாலும் எவ்ளோ ரூபாய்க்கு பொருள் வாங்கினாலும் அரசு பிளாஸ்டிக் பையை உபயோகிக்கக் கூடாதுன்னு சொல்றாங்க அதுனாலே ஐஞ்சு ரூபா கொடுத்தா பை தறோம் என்கிறார்கள் பிளாஸ்டிக் பைகூட இலவசமா தரதில்லே


உணவகத்துக்கு போனாலும் உள்ளே ஐயாயிரம் செலவழிச்சாலும் வயித்தெறிச்சலோட வெளியே வந்து நம்ம வண்டியைப் பாத்துக்கறாங்களோ இல்லையோ அவங்களுக்கு ஐந்து ரூபாய் இலவசமா கொடுத்தா மரியாதை இல்லேன்னு பத்து ரூபாய் கொடுத்துட்டு வரோம்இப்பிடி எல்லா இடத்திலேயும் நாமதான் கொடுக்கறோமே தவிர நமக்கு குடுக்க ஆளில்லே


இந்த அரசியல்வாதிகள் நம்மோட வரிப்பணத்திலே இருந்துதான் குடுக்கறாங்க ஆனாலும் இலவசம்னு சொல்லிட்டு தராங்களே அப்போ நம்ம மனசு துள்ளுதே அதைவிட ஒரு மகிழ்ச்சி வேணுமா


நமக்கு இலவசமா கொடுக்கறதுக்கும் ஆளிருக்கு என்கிற பெருமையோட தமிழன் தலை நிமிர்ந்து நிக்கிறான் அதை எண்ணிப் பாருங்கள்


இப்போ ஒப்புக்குவீங்களே நம்ம அரசியல்வாதிகள் நல்லவர்கள் என்று

121.  மக்கள் எனும் மாப்பிளைக்கு 16/05/2016 அன்று திருமணம். 
பொண்ணு பாக்கற நாளிலேருந்து திருமண நாள் வரையில் மாப்பிள்ளைதான் கதாநாயகன் . தேர்தல் முடிவன்று முதல் இரவு. இனி அடுத்த பிறவியில்தான் மீண்டும் கிடைக்கும் மரியாதை.
இன்றோடு தொண்டைகளுக்கும் தொண்டர்களுக்கும் ஓய்வு. தற்காலிக சண்டைகள் ஓய்வு. விரலிலே மையிட்டு அழகு பார்க்கும் வைபவம் மட்டுமே மிச்சம் இருக்கிறது.
வெய்யிலிலும் தேர்தல் வெளிச்சத்திலும் மண்டை காய்கிறது யார் யார் யார் வருவார் பதவிக்கு என்றே கனவுகள் வருகிறது . கனவுகள் ஆயிரம் வரும் உண்மை தெரியும் போது கனவும் தூக்கமும் விடை பெறும். .
கொண்டையில் க்ரீடம் ஏறும் வைபவம் மட்டுமே மீதி உள்ளது. பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரட்டும் மக்களின் உதவிக்கு யார் வரப் போகிறார்கள் யாருமில்லை.
மீண்டும் ஐந்தாண்டுத் திட்டங்கள் அஞ்சாத சட்டங்கள் 
வெற்றி பெற்றோரின் வாண வேடிக்கைகள் காதையும் கண்ணையும் பறிக்கும் .
மாப்பிள்ளைகளின் மண்டைகள் காய்ந்து கொண்டே இருக்கும். காய்ந்து சருகாகி இலவம் பஞ்சாய் பறக்கவிருக்கும் பொதுமக்களின் பொது வான வாடிக்கைகள் . காத்திருப்போம் அஞ்சாமல் ஐந்தாண்டுகளில் மீண்டுமொரு தேர்தல் வரும் வாய்திறந்து காத்திருக்கும் வாக்குப் பெட்டிகளுக்கும் வாக்காளர்களுக்கும் வாழ்வு வரும்

122.  கடலில் மீனவருக்கு எல்லைகள் உண்டு எல்லையைத் தாண்டக் கூடாது . மீன்களுக்கு எல்லை இல்லை கடலில் அவை தாண்டலாம் தவழலாம் நீந்தலாம்


இந்த எல்லையில் மீனவர் வந்தால் அந்த எல்லையில் நீந்துகிறது அந்த எல்லையில் மீனவர் வந்தால் இந்த எல்லையில் நீந்துகிறது.


எல்லை தாண்டும் உரிமைகளின் எல்லை
தொல்லைகளே இவைகளின் எல்லை
மீன்களுக்கு ஏதையா எல்லை
நான் யாரையும் குறிப்பிடவில்லை

123.  கள்ள ஓட்டு கள்ள வாக்காளர் கள்ளப்பணம் எல்லாம் பழசு
இபோதெல்லாம் நாம் இன்னமும் முன்னேறிவிட்டோம் கள்ள வாக்கு இயந்திரம் கூடத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டோம்


இந்தியா தொழில் துறையில் வெகுவாக முன்னேறியிருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் அடையாளம்



124.          அரசுப்பள்ளி மாணவன் ஒருவன் 234 தொகுதிகளின் பெயரையும் மனப்பாடமாக சொல்கிறான்


தமிழகம் தலைநிமிரும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது


ஆண்டவரும் ஆள்பவரும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தமிழகம் தலை நிமிரட்டும் என்றே சொல்கிறார்கள் . இப்படி அனைவரும் தமிழகம் தலை நிமிரவேண்டும் என்று இரு கரம் கூப்பி வேண்டிக்கொள்ளும் படி

தமிழகத்தை ஏன் தலைகுனிய வைத்தார்கள்

யார் தலைகுனிய வைத்தார்கள் மக்களா ?

125.  வெற்றி பெற்றவுடன் முதல் கையெழுத்தே மதுவை ஒழிக்கத்தான் என்று முழங்குவோரே முதல் கையெழுத்து பதவி ஏற்க உங்கள் கையெழுத்தாக இருக்க வேண்டும் அதனால் இரண்டாம் கையெழுத்தாக மது ஒழிப்பை வைத்துக் கொள்ளுங்கள்


ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் கூத்தாடிகள் ரெண்டுபட்டால் ஊருக்கு திண்டாட்டம்


உழுபவனுக்கே நிலம் சொந்தமென்றார்கள் ரியல் எஸ்டேட்காரர்கள் எல்லாம் அந்த நிலத்திலே உழுந்து எல்லாம் எங்க நிலம் என்கிறார்கள்

126.    14/05/2016     தமிழ் தமிழ் என்று முழங்குவோரெல்லாம் ப்ரசாரம் என்றே சொல்கிறார்கள் . ப்ரசாரம் என்பது தமிழ்ச்சொல்லா ?
நமக்கேன் வம்பு நாம் பரப்புரை என்று சொல்வோம் 
இன்றோடு தேர்தல் பரப்புரை முடிகிறது . இது வரை அனைத்துக் கட்சிகளும் தங்கள் கொள்கைகளை விளக்கிச் சொன்னவற்றைக் கேட்டோம்
நாளை ஒரு நாள் இடை வேளை
மூன்று மணி நேர திரைப்படத்தை நாம் கொடுத்த பணத்திற்கு மதிப்பளித்து கடைசீ வரை பார்ப்பது நம் வழக்கம். கடைசியில் எனக்கு அப்போதே தெரியும் இப்படித்தான் முடிப்பார்களென்று என்று பேசும் மன நிலையில் உள்ளவர்கள் நாம் .
ஆனாலும் இடைவேளை வரை பார்த்தாலே அதற்குப் பிறகு அந்தத் திரைப்படம் எப்படி இருக்கும் என்பதை உணர்கிற புத்திசாலிகள் நாம்
அதைப் போல் இடைவேளை என்பது சிந்திக்க நமக்கு அளிக்கப்பட்ட நேரம் இந்த இடைவேளையைப் பயன்படுத்தி நன்றாகச் சிந்தித்து வாக்களித்தால் ஐந்து வருடங்களை நாம் அமைதியாகக் கழிக்கலாம்
ஆகவே நன்கு சிந்தித்து மனம் சொல்வதைக் கேளாமல் மூளை சொல்வதைக் கேட்டு அதன்படி வாக்களியுங்கள் வாக்காளர்களே

127.    கதாநாயகனாக நடிக்கும் நடிகரை அந்தக் கதாநாயகனின் எல்லாத் திறமையும் இருப்பதாக எண்ணி தலைவனாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உள்ளவர்கள் நாம் கடந்த காலங்களில் நாம் அவ்வாறுதான் செய்திருக்கிறோம்
ஆகவேதான் நடிகர்களும் ஆட்சி அமைக்க வருகிறார்கள்.
நடிகர்களும் நம்மோடு இருக்கும் மனிதர்களே தலைவராக வர.அவர்களுக்கும் தகுதிகள் உண்டு நடிகரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளலாம்
ஆனால் நடிக்கும் தலைவர்களை ஏற்றுக் கொள்ள யோசிக்க வேண்டும் தலைவர்களும் நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். இப்போது தேர்தல் பறக்கும் படையினரால் பிடிக்கப்பட்ட இத்தனை கோடிகளை மக்கள நலனுக்காகவும் நலத் திட்டங்களுக்காகவும் பயன்படுத்தி இருந்தாலே 
தேர்தல் பரப்புரை தேர்தல் நடிப்புரை போன்றவைகள் தேவையில்லாமல் போயிருக்கும் .
எல்லாம் செய்தது போலவும் இனியும் எல்லாவற்றையும் செய்வோம் என்றும் நடித்து மக்களுக்கோ நாட்டுக்கோ எதையும் செய்ய மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கும் தலைவர்களை இனங்கண்டு கொள்ளுங்கள்

128.   மே பதினாறு தேர்தல் வேட்பாளர்களின் தலையெழுத்தை வாக்காளர்கள் நிர்ணயிக்கப்போகும் நாளா? அல்லது வாக்காளர்களின் தலையெழுத்தை வேட்பாளர்கள் நிர்ணயிக்கப் போகும் நாளா


இரண்டுமே ஒன்றுதான் மொத்தத்தில் தமிழ் நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகும் நாள் என்பதே நிதர்சனமான உண்மை.


ஏற்கெனவே இறைவன் நம்ம தலையிலே என்ன எழுதியிருக்கிறானோ அதுதான் நடக்கும் என்று எண்ணும் ஆன்மீக வாதிகளே


என்னதான் தலையெழுத்துன்னு ஒண்ணு இருந்தாலும் மனுஷன் நினைச்சா முயற்சி செஞ்சா அதை மாத்த முடியும்னு நெனைக்கிற நாத்திக பகுத்தறிவு வாதிகளே


ஏற்கெனவே நாம் இன்னாருக்குதான் வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தா்லும் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்கும் நேரத்தில் மனம் ஒன்று சொல்லும் மூளை ஒன்று சொல்லும் அப்போது ஏற்படும் மனப்போராட்டத்தில் ஏற்கெனவே செய்து வைத்த முடிவுகள் மாறவும் வாய்ப்பு உண்டு .

சீட்டுக்கட்டு விளையாடும்பொழுது ஒரு சீட்டைப் போடவேண்டாம் போட்டால் மற்றவன் வெற்றி அடைவான் என்று மனமும் மூளையும் சொல்லும் ஆனாலும் கை தானாகவே அந்த சீட்டை எடுத்துப் போடும்படிச் செய்யும்


ஆகவே நிதானமாக யோசித்து நல்ல முடிவோடு வாக்குச் சாவடிக்கு சென்று எடுத்த முடிவினை பரிசீலித்து வாக்களித்துவிட்டு மன நிம்மதியோடு திரும்பி வாருங்கள் . வாக்களித்த பின்னும் உங்கள் மனம் நிம்மதியாய் இருந்தால் நீங்கள் சரியான நபருக்கு வாக்களித்திருக்கிறீர்கள் என்று பொருள்

129.  எவ்ளோதான் அடக்கி அடக்கி வெச்சாலும் பிச்சிகிட்டு போறது பணமும் மானமும் மட்டுமே
எதாலேயும் அடக்க முடியாத சக்தி பணம்
எதாலேயும் மறைக்க முடியாதது மானம்
பொதுவாகவே மானம் போனதால் தற்கொலை என்பது ஒரு சதவிகிதமே மாட்டிக்கொண்டால் தப்பிக்க வழியில்லாமலோ வாங்கிய கடனைக் கட்ட முடியாத காரணத்தாலோ ஏற்படும் தற்கொலைகள்தான் அதிக சதவிகிதம்
அட மானமாவது ஒண்ணாவது பணம் இருந்தா இழந்த மானத்தையும் எல்லாத்தையுமே மீட்டுவிடலாம் என்பதே நடைமுறையாக இருக்கிறது

130.  தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு இன்னும் பலவிதமான காட்சிகளைக் கண்டு மகிழ நாம் தயாராக வேண்டும் நம் மனதைத் தயார் செய்து கொள்ள்ள வேண்டும்
எத்தனை கட்சிகள் தாவலோ எத்தனை பேரங்களோ எத்தனை பணப் பரிமாற்றமோ எத்தனை கூட்டணிகள் மாறுமோ .எங்கெல்லாம் சேருமோ எல்லாவற்றையும் உற்றுக் கவனித்தாலும் ஆச்சரியமாய் இருக்கிறது யாருடைய உண்மை முகமும் வெளியே தெரிவதில்லை
அப்படியே தெரிந்தாலும் வெகு விரைவில் நாம் அந்த உண்மை முகத்தை மறந்துவிட்டு அரிதாரம் பூசிய முகத்தையே மனதில் பிம்பமாக வைத்திருப்போம்
என்பது அதைவிட ஆச்சரியமான ஒன்று
ஆனாலும் நமக்கு நகைச்சுவையாக பொழுது போக்க தமிழகத்தை விட வேறு இடம் கிடைப்பது அரிது

131.  அடாது மழை பெய்தாலும் விடாது செயல்கள் தொடரும் என்று தேர்தல் ஆணையம் திறமையாக செயல்படுகிறது
நேர்மையான அதிகாரிகள் அயராது உழைக்கிறார்கள்
இப்படி தேர்தல் ஆணையம் செயல்படும் நேர்த்தியைக் கண்டு நமக்கு நம்பிக்கை வருகிறது
நேர்மையான முறையில் வாக்குப் பதிவுகள் நடைபெற்று முறையாக எண்ணப்பட்டு நியாயமான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று
இதனிடையே தோல்வி பயத்தால் சிலர் பல குழப்பங்களை ஏற்படுத்த முயல்வர் என்பது இதுவரை நாம் கண்ட அனுபவம்


ஆகவே தேர்தல் அதிகாரிகளும் மிக எச்சரிக்கையாக செயல்படவேண்டும் இந்த நேரத்தில் தேர்தல் அதிகாரிகளின் வீட்டில் உள்ள பெற்றோர் துணையார் பிள்ளைகளின் மன நிலை எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களும் மனிதர்களே அவர்களுக்கும் பந்தம் பாசம் எல்லாம் உண்டு
ஆகவே வேட்பாளர்களும் வாக்காளர்களும் கூடியவரையில் நேர்மையாக நாணயமாக நடந்துகொண்டு அனைவரின் பாதுகாப்பையும் நாட்டின் அமைதியையும் வளத்தையும் மனதில் கொண்டு தங்கள் கடமைகளை நினைவில் கொண்டு நடந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்அப்படியே நடக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்


அன்புடன்
தமிழ்த்தேனீ

132.    கலாச்சார சீரழிவு என்பது நேர்மை தவறுதலே


ஏனென்றால் நம் முன்னோர்கள் வாழ்ந்த நேர்மையான நாணயமான ஒழுங்கான வாழ்க்கை முறையைத்தான் நாம் கலாச்சாரம் என்று இது வரை போற்றி வந்திருக்கிறோம்.


என்ன விதை போடுகிறோமோ அந்த பயிர்தான் முளைக்கும். கள்ளிச்செடி நட்டுவிட்டு குலைவாழையை எதிர்பார்ப்பது அறிவீனம்


மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது முதியோர் வாக்கு . ஆகவே நாட்டை வழிநடத்தும் ஆட்சியாளர்கள் அவர்கள் நடந்து கொள்ளும் முறையினால் மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் அவர்களே தடம்புரண்டால் மக்கள் எப்படி தடம் புரளாமல் வாழ்வார்கள்


நல்ல நேர்மையான நியாயமான மனிதாபிமானமுள்ள திறமை வாய்ந்த முன் மாதிரியாக இருக்க முயலுங்கள் ஆட்சியாளர்களே

133.   கரூர் : அரவக்குறிச்சி (ஆங்கிலம்:Aravakurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு இருக்கும் வட்டங்கள் : அரவக்குறிச்சி வட்டம் கரூர் வட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் குளித்தலை வட்டம் கடவூர் வட்டம் மண்மங்கலம் வட்டம்
ஊராட்சி ஒன்றியங்கள் : கரூர் கே.பரமத்தி அரவக்குறிச்சி குளித்தலை தாந்தோணி தோகைமலை கிருஷ்ணராயபுரம் கடவூர்
பேரூராட்சிகள் அரவக்குறிச்சி கிருஷ்ணராயபுரம் மருதூர் நங்கவரம் பள்ளபட்டி பி. ஜே. சோழபுரம் புலியூர் புஞ்சை புகலூர் புஞ்சை தோட்டகுறிச்சி புகலூர் (காகித ஆலை) உப்பிடமங்கலம்
நகராட்சிகள் கரூர் சிறப்புநிலை நகராட்சிகுளித்தலை இரண்டாம் நிலை நகராட்சி இனாம் கரூர் தேர்வு நிலை நகராட்சி தாந்தோணி முதலாம் நிலை நகராட்சி


இங்கு இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் அனைவரும் அனைவரும் சமூக ஒற்றுமையுடன் இங்கு இணக்கமாக வசிப்பது சிறப்பு. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,273 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அரவக்குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரவக்குறிச்சி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
அரவக்குறிச்சி அருகில் உள்ளது பூலாம்வலசு. இங்கு பொங்கல் தினத்தில் நடை பெரும் சேவல் சண்டை மிகவும் பிரசித்தம். சேவல்கள் கத்தி கட்டப்பட்டு களத்தில் இறக்கப்படும் தோல்வி அடைந்த சேவல் கோச்சை என்று வெற்றி பெற்ற சேவல் உரிமையாளரிடம் கொடுக்கப்படும்.
அருகில் உள்ள ரங்கமலையில் ஒரு புகழ் பெற்ற சிவன் கோவில். இங்கு ஆடிப்பெருக்கு விழா மிகவும் பிரசித்தம்.
அருகில் உள்ள வெஞ்சமாங்கூடலூர் ஒரு பாடல் பெற்ற சிவதலமாகும்.
அரவக்குறிச்சியில் முருங்கைக்காய் மாற்றும் செம்மறி ஆடுகள் மிகவும் பிரபலம்;


நன்றி விக்கி பீடியா




இப்படிப்பட்ட பெருமைகள் வாய்ந்த அரவக் குறிச்சியில் பணப்பட்டுவாடா காரணமாக
தேர்தல் தள்ளிவைக்கப்படிருக்கிறது


மற்ற இடங்களில் தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகி வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டால் அரவக் குறிச்சியில் வாக்காளர்களின் வேட்பாளர்களின் மன நிலை மாறும்


இப்படிப்பட்ட நிலமை இனி ஏற்படாமல் இருக்க வேட்பாளரும் வாக்காளர்களும் உறுதி மொழி எடுக்க வேண்டும்


134.    ஐயாயிரத்து சொச்சம் வாக்குச் சாவடிகள் பதற்றமானவை . அவைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்


மற்ற வாக்குச் சாவடிகளில் நிலமை எப்படி

அவை மேலும் பதற்றமானவை  

சிரிப்பு வருகிறதா

ஏன் இந்தப் பதற்றம் ? எல்லாவற்றையும் தாமே அடையவேண்டும் என்னும் பேராசையினால் விளைகின்ற பதற்றம்

மற்றவர்கள் யாருமே வெற்றி பெறக்கூடாது என்கிற பதற்றம்

இப்படிப்பட்ட பதற்றங்கள் தேவையா என்று நினைத்தால் நம் நாட்டின் வருங்காலத்தைப் பற்றிய பதற்றம் நமக்கும் வருகிறது

135.  வெள்ளைக் காகிதத்தில் இருக்கும் கரும்புள்ளி மட்டுமே கண்ணில் படுவது போல்


நேர்மையான முறையில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க முயற்சிகள் மேற்கொண்ட தேர்தல் ஆணையத்தை நீங்கள் ஏன் சில இடங்களில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கவில்லை என்று கேட்பது   
எவ்வளவு முயன்றாலும் நாங்கள் திருந்த மாட்டோம் என்பவர்களை எவ்வளவு தடுத்தாலும் எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தாலும் அதையும் அவர்கள் சில இடங்களில் அத்துமீறுவது வழக்கமே 
அத்து மீறுபவர்களைக் கண்டிக்காமல் தடுப்பவர்களைக் கண்டிப்பது நியாயமான செயலா

136. தேர்தலைத் தள்ளி வைத்து நேர்மையான தேர்தல் அதிகாரியினால் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். 
கோடிகோடியாக பணத்தை வாரியிறைத்து தேர்வுக் களத்தை உருவாக்கியாயிற்று .மாப்பிள்ளை திருடன் என்று நிருபிக்கப்பட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம், நிரூபிக்கப்பட வேண்டுமே. மாப்பிள்ளையின் உறவினர் ஒருவர் திருடர் என்பதற்காக திருமணத்தையே நிறுத்தலாமா  ? நேர்மையான ஐயர் இருந்தால்தான் திருமணத்தை நடத்துவோம்  என்பதைப் போல் இருக்கிறது இது
இதுவரையில் தேர்தலுக்காக செலவழித்த பணமும் மக்களின் வரிப்பணத்திலிருந்துதானே செலவழித்தார்கள் அப்படி இருக்க இந்தச் செலவை எப்படிச் சரிக்கட்டுவார்கள் .. இந்தச் செலவும்
மீண்டும் மக்கள் தலையிலே வரிப்பணமாக  சுமையாக இறங்கும்.

மாணவர்கள் தேர்வெழுதத் தயாராக உள்ளார்கள். மாணவர்களில்  சிலர்  எப்படியோ வினாத்தாள்களை லஞ்சம் கொடுத்து  பெற்றுவிட்டார்கள்  என்பதற்காக எல்லா மாணவர்களுக்கும் பொதுவான தேர்வைத் த்ள்ளி வைப்பது எப்படி ?  வினாத்தாள்களை திருத்தி மதிப்பெண் அளிக்க ஆசிரியர்கள் தயாராக இருக்கிறார்கள் இந்த நிலையில் தேர்வு வினாத்தாள் சற்றுமுன் வெளியாகிவிட்டது அதனால் தேர்வைத் தள்ளி வைக்கிறோம் என்றால் எப்படி ?
நேர்மையான மாணவர்கள் இல்லாத  தேர்வறையில் நேர்மையான தேர்வதிகாரி இருந்து என்ன பயன் என்பதே புரியவில்லை.

137.  வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளாகவே சமூதாயக் கூடங்களாகவோ உள்ளன அப்படி இருக்க இந்த தேர்தலை ஒட்டியாவது அந்த அரசுப் பள்ளிகளை சமூதாயக் கூடங்களை வாக்குச் சாவடிகளில் பணி செய்ய வரும் ஆண் பெண் அதிகாரிகளுக்கு வசதியாக சரி செய்திருக்கலாமே. பாவம் அந்த அதிகாரிகள் தேர்தல் முடியும் வரை வெளியேயும் செல்ல முடியாது

அப்படி இந்த அரசுப் பள்ளிகளை சமூதாயக் கூடங்களை தேர்தலைக் காரணம் காட்டியாவது சரிப்படுத்தி இருந்தால் அதற்குப் பிறகு உபயோகிக்க பள்ளிப் பிள்ளைைகளுக்காவது பயனாக இருந்திருக்குமே



138.  வாக்காளனாக என் முக்கியமான கடமை முடிந்துவிட்டது
இனி வேட்பாளரின் கடமைகள் தொடரவேண்டும்
வெற்றி பெறுவோரின் கடமைகள் தொடரவேண்டும்
தொடரும் ! ஆனால் பழையபடியேவா, அல்லது புதிய நல்ல பாதையில் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
இந்தத் தேர்தலாவது நம் நாட்டின் வளத்துக்கும் முன்னேற்றத்துக்கும் வளமான எதிர்காலத்துக்கும் மக்களின் நலத்துக்காகவும் நாட்டின் மேன்மைக்காகவும் வளமான நாடாகவும் நல்ல பாரம்பரியத்தைக் காக்கும் நாடாகவும் உலக நாடுகளின் வரிசையில் முதல் இடத்தை பிடிக்கும் அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். நம் தேசம் நம் நாடு நம் மொழி நம் முன்னோர்கள் நம் பாரம்பரியம் நம் கலைகள் எல்லாமே உலக நாடுகளின் தரத்தில் ஒப்பிடும்போது முதன்மையாகவே இருக்க வேண்டும் . முதன்மையாக இருக்க வேண்டிய ்தகுதிஉடைய நாடுதான் நம் நாடு. லஞ்சம் ஊழல் இல்லாத மக்களாட்சியாக மலரட்டும் .பாரதமாதா தலை நிமிரட்டும் தமிழகம் தலை நிமிரட்டும் நம் தலைகள் நிமிரட்டும் நிமிரும் . நம்பிக்கைதானே வாழ்க்கை
அன்புடன்
தமிழ்த்தேனீ



139.   16/05 / 2016 இன்று தேர்தல் நடக்கிறது வாக்களிக்க வரும் தலைவர்களிடம் ஊடகயிவியலாளர்கள் பேட்டி எடுக்கிறார்கள் . 
அனைத்து தலைவர்களும் வெற்றி நிச்சயம் என்று சொல்கிறார்கள் , " வெற்றி நிச்சயம் " என்று சொல்கிறார்களே தவிர    " யாருக்கு " என்பதை சொல்வதே இல்லை நம் தலைவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள்
கொட்டும் மழையானாலும் கொளுத்தும் வெய்யிலானாலும் கடமையை உணர்ந்து வாக்களிக்க காத்திருக்கும் மக்களே
குறைந்த சதவிகிதமே வாக்களிப்பு நிகழ்ந்திருக்கிறது என்று ஒரு மணி செய்தியில் சொல்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாது நம் வாக்காளர்களைப் பற்றி 
நாம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்னு
ஆகவே 100 சதவிகித வாக்களிப்பை பெற இப்போதே ஆர்வத்துடன் கிளம்புங்கள் . மாலை ஆறு மணிக்குள் 100 சதவிகித வாக்குகளைப் பதிவு செய்து தலைவர்களை விட வாக்காளர்கள் அதி கெட்டிக்காரர்கள் என்பதை நிரூபிப்போம் .
" மக்கள் முட்டாள்கள் " என்று சொல்லும் பலருக்கு உணர்த்துவோம் இந்த முறை அரசியல்வாதிகளை விட " மக்கள் புத்திசாலிகள் " என்று
வாழ்க ஜனநாயகம் அமையட்டும் மக்களாட்சி
அன்புடன்
தமிழ்த்தேனீ


140.   எல்லாக் கட்சித் தலைவர்களும் சொல்கிறார்கள் தேர்தல் ஆணையம் தோல்வியுற்றுவிட்டது என்று
பணப்பட்டுவாடாவை தவிர்க்க எடுத்த முயற்சியில் தோற்றுவிட்டது என்று
அப்படியானால் என்ன பொருளென்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது



141.  இரண்டு நாட்கள் காத்திருந்தால் மக்கள் தீர்ப்பு வெளியாகும்
மகேசன் தீர்ப்பு எப்போது வரும் என்று ஒருவர் கேட்டார்
நான் சொன்னேன் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று
ஆகவே இரண்டு நாட்களில் வரப் போவதை மகேசன் தீர்ப்பாக எடுத்துக் கொள்வார்களா வெற்றி பெற்றவர்களும் தோல்வி பெற்றவர்களும் ?

142.  தேர்தலில் வாக்களிக்க கடலிலே இருந்து புறப்பட்டு வானமே வருகிறது  
வீட்டிலிருந்து புறப்பட்டு வர நம்மால் முடியாதா 
கோடையில் கொதிப்பின் தாக்கத்தில் இருக்கும் நாம் ஜனநாயகத்தின் முழுப்பலனை அனுபவிக்க
இந்த இன்ப மழையிலே நனைந்தால் நல்லதுதானே

வாக்குச்சாவடிக்கு வர மின்சாரம் மட்டுமே பயப்படுகிறது மின்சாரம் எப்போவரும் எப்போ போகும்னே தெரியாமே இருட்டிலேருந்து வந்து இருட்டுக்கே போயிடும்

மழை வெய்யிலிலும் பெய்யும் இரவிலும் பெய்யும் பகலிலும் பெய்யும்      “  நீரின்றி அமையாது இவ்வுலகம் .வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோன் உயர்வான்
  
நாம் மின்சாரமா மழையா


143.  மூத்த குடிமக்கள் உடல் நலம் சரியில்லாதவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோரும் பலரும் தம் கடமை உணர்ந்து தள்ளாடிக்கொண்டே வந்து நடுங்கும் கரங்களால் வாக்களிிக்கிறார்கள்
நாம் இங்கிருந்துகொண்டே வாக்களித்து அல்லது வாக்களிக்காமல் வீட்டிலிருந்துகொண்டே மகிழ்கிறோம்
ஆனால் பலர் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரவும் முடியாமல் வாக்களிக்கவும் முடியாமல் வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

144.  தேர்வெழுதிவிட்டு தேர்வு முடிவுகளுக்கு காத்திருக்கும் மன நிலையில் மாணவர்கள் இருப்பதைப் போல
தேர்தலின் முடிவுக்கு காத்திருக்கிறார்கள் வேட்பாளர்கள்
அங்கே ஆசிரியர்கள் வினாத்தாள் அளித்தார்கள்
இங்கே வாக்காளர்கள் விடைத்தாள் அளித்தார்கள்

மதிப்பெண்களை முறையாக எண்ணி முடித்தவுடன் தானே ஆசிரியருக்கே தெரியும் யார் முதல் மாணவர் யார் இரணடாம் மாணவர் என்றுஅதன் பிறகுதானே மாணவர்க்குத் தெரியும்

தேர்தல் களத்தில் மக்கள்தான் ஆசிரியர்கள் வேட்பாளர்கள் மாணவர்களே . இப்போது புரிகிறதா வாக்காளர்களின் பெருமை. ஆசிரியர்களை மதிக்காத கல்வியை மதிக்காத மாணவர்களின் நிலமை நாம் அறிந்தது தானே

காத்திருப்போம் இங்கே ஆசிரியர்களாகிய நமக்கும் இனிமேல்தான் முடிவுகள் தெரியும் . இப்படி படபடக்கும் மனதோடு முடிவுகளுக்கு காத்திருப்பது ஒரு விதத்தில் வரம் ஒரு விதத்தில் சாபம் அது முடிவுகளைப் பொறுத்து வரமாகவோ அல்லது வேறு விதமாகவோ மாறும். காத்திருப்போம்

145. 
வாக்களிக்க தாமே தம் சொந்த செலவில் தங்களது ஊர்களுக்குப் போய் வாக்களித்த வாக்காளர்களுக்கு தகுந்த வாகன வசதிகள் அரசுதான் செய்து கொடுக்க வேண்டும்.
அவர்கள் அளிக்கும் வாக்குகள் முக்கியம் அவர்கள் முக்கியம் இல்லையா?

146.  பேனா முனை மிகவும் கூர்மையானதுதான் ஆனால் இப்போதெல்லாம் அது உபயோகத்தில் இல்லாததால் மழுங்கிவிட்டது


கணிணியின் தட்டச்சுப் பலகையில் நடனமாடும் விரல்கள் தட்டச்சி தட்டச்சி பேனா முனையை விடக் கூர்மையானதாக ஆகிவிட்டது


இப்போதெல்லாம் விரல்களுக்குத்தான் மதிப்பதிகம்
விவரம் அறிந்தோர் விரல் நுனியில் மை போடுகிறார்களே

147. 
படிக்கும் காலத்தில் அக்கம்பக்கம் பாராமல் இரவு பகலாக உழைத்துப் படித்து கல்வியைத் தவிர மற்ற சிந்தனைகளில் மனதைச் செலுத்தாது கவனமாகப் படித்து தேர்வெழுதி காத்திருந்த பல மாணவர்கள் மதிப்பெண்களில் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறார்கள்


ஆனால் அவர்கள் தேர்வுக்கு முன் நான் நன்றாகத் தேர்வெழுதுவேன் என்றோ தேர்வெழுதிவிட்டு நான் நன்றாகத்தான் படித்தேன் நன்றாகத் தேர்வெழுதினேன் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்ளவே இல்லை
அவர்கள் உழைத்த உழைப்புக்கேற்ற பலன் பெற்றார்கள்


ஆனால் செய்ய வேண்டிய காலத்தில் மக்களுக்கு எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டு தேர்தல் காலத்தில் மட்டும் நாங்கள் அதைச் செய்தோம் இதைச் செய்தோம் இனியும் செய்வோம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்களே இவர்கள்!


உழைப்பிற்கேற்ற பலன் தானாகவே கிடைக்கும் பார்ப்போம் யார் முதலிடத்தைப் பிடிக்கிறார்களென்று

148.    மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு அடைப்பான்கள் வைக்கிறார்கள். அந்த இயந்திரங்களில் உள்ள அடைப்பான்களை நீக்கித்தான் உள்ளே இருக்கும் வாக்காளர்களின் முடிவுகளை எண்ணி அறிவிப்பார்கள்


அந்த அடைப்பான்களை நீக்கும் போது தெரியும் ஜனநாயகத்துக்கு வைக்கப்பட்ட அடைப்பான்களா அல்லது ஜனநாயகத்துக்கு நீக்கப்பட்ட அடைப்பான்களா என்று


நம் தலையெழுத்தை நிர்ணயிக்கபோகும் அந்த அடைப்பான்கள் நாட்டின் பல அடைப்புகளை நீக்கும் என்று நம்புவோம் . சில நேரங்களில் விஷமே மருந்தாகும் வாய்ப்பும் உண்டு

149.  இத்தனை கோடி மக்கள் பிறந்து இவ்வளவு வருடங்களாக பலவிதமான இனிப்பான பழங்களை உண்டிருக்கிறோம்
நமக்குப் பின்னால் வரும் நம் வழித்தோன்றல்களும் அது போல் இனிப்பான  கனிகளைச் சுவைக்க வேண்டும்என்னும் எண்ணம் கொண்டு 
அந்தப் பழங்களின் விதையை  அல்லது கொட்டையை  நட்டு வைக்கவேண்டும்  என்று எத்தனை பேருக்கு    தோன்றியது

அது போலத்தான் நமக்கு பின்னால் வரும் இளைய தலைமுறைகள் நன்றாக நலமோடு இருக்க வேண்டுமானால்  நல்ல பழக்க வழக்கங்களை நற் சிந்தனைகளை விதைக்க வேண்டும்

150.    நாளை வாக்குப் பதிவுகள் எண்ணிக்கை முடிந்து வெற்றி யாருக்கு என்று அறிவித்த பின் வெற்றி பெற்றவர் எடுக்க வேண்டிய முதல் உறுதி மொழி.
எனதருமை வாக்காளப் பெருமக்களே நம் நாட்டின் மேலும் என்மேல் பற்றும் பாசமும் வைத்திருக்கும் அன்பான எனதருமை மக்களே ஐம்பது ஆண்டுகளாக முறையாக கவனிக்கப்படாமல் பல தவறுகளைச் செய்து மக்களைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ கவலைப்படாமல் லஞ்சம் ஊழல் குற்றங்கள் ஆகியவற்றை வளர்த்து சீரழிக்கப்பட்ட நம் நாட்டை வருகின்ற ஐந்து ஆண்டுகளிலே சரிப்படுத்திவிட முயல்கிறோம்.. அழிப்பது எளிது ஆக்குவது கடினம் என்பது நீங்கள் அறியாததல்ல
பத்து மாதம் சுமந்தாலே பிள்ளை பெற முடியும்.பருவத்திலே பயிர் செய்து அதற்குரிய நேரத்தை அளித்து காத்திருந்தாலே பயிர் அறுக்க முடியும்
ஐம்பதாண்டுகளாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அளித்தவர்கள் நிறைவேற்றி இருந்தாலே இந்த தேர்தலில் அளிப்பதற்கு வாக்குறுதிகளே இல்லாமல் தவித்திருப்பார்கள் எல்லாக் கட்சிகளும்.
அப்படி இருக்க நீங்கள் எனக்களித்த வாய்ப்பிலே என்னால் இயன்ற அளவு நாட்டைச் செப்பனிட முயல்கிறேன் நிச்சயமாக இந்த முயற்சியில் நாம் வெற்றி பெற உங்களின் ஒத்துழைப்பும் அவசியம். 
ஆகவே நம் நாட்டை ஆக்கபூர்வ பாதைக்கு அழைத்துச் செல்ல நீங்கள் அளித்த ஐந்தாண்டுக் காலத்துக்குள் மனசாட்சிக்கு உண்மையாக முயல்வேன் ஆகவே நான் ஆக்க பூர்வமான திட்டங்களை தீட்டி செயல் படுத்த தொடங்குவேன் . அவற்றைத் தொடர்ந்து செய்தால்தானே பலன் கிடைக்கும்
அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போதுமான ஆண்டுகள் அவகாசம் அளித்தும் ஏற்கெனவே இருந்தவர்கள் ஒன்றையும் நிறைவேற்றாமல் இருந்திருக்கிறார்கள். அதனால்தான் நம் நாட்டு பொருளாதாரம் மின் ஆதாரம் விவசாயம் நெசவுத் தொழில் மற்றும் பல ஆலைகளின் மேன்மை போன்றவற்றை இப்போது மீட்டெடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது எங்கள் ஆட்சி இந்த நிலையிலிருந்து நம் நாட்டை மீட்டெடுக்க பாடுபடும் என்பதை உறுதி மொழியாக அறிவிக்கிறேன்
முறையான திட்டங்களை சிறப்பாக முடிக்க பொருளாதாரம் திறமையான நிர்வாகம் போன்றவற்றை தெளிவாக அறிந்த பொது மக்களாகிய நீங்கள் இந்த முறை எங்கள் கட்சியையே ஆட்சி செய்ய அனுமதித்ததற்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
ஆளும் கட்சியான நாங்கள் வேண்டிக்கொள்வது என்னவென்றால் போட்டியிட்டோம் நாங்கள் வென்றோம் ஆகவே எதிர்கட்சிகளும் எங்களோடு இணைந்து நம் நாட்டின் வளர்ச்சிக்காக ஒத்துழைப்பு தருமாறு வேண்டிக் கொள்கிறோம்.
எங்கள் கடமைகளை உணர்ந்து நீங்கள் எங்கள் மேல் கொண்ட நம்பிக்கையின் மதிப்பை உணர்ந்து இரவு பகல் பாராமல் நம் நாட்டுக்காகவே உழைப்போம் என்று உறுதி கூறுகிறோம்