திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Sunday, August 12, 2007

துளசிப் பாவை

" துளசிப் பாவை "

துளசி வனத்தில் உதித்த,
தபசி திருவரங்கன் உபாசி
பெரியாழ்வார் கண்டெடுத்த
இளவரசி

திருவாடிப்பூர திரு நாளில் தேடி
எடுத்த அவதார லக்ஷ்மி இவள்
கோபால விலாசம் தேடிய திருப்பாவை
பகல் பத்து ராப்பத்து ,முப்பத்து நாளும்
முப்போதும் எப்போதும் முழுமையாய்த்
தவமிருந்தாள் விழித்திருந்தாள்
இப்பாவை நோன்பிருந்தாள் பாவை நோன்பிருந்தாள்
திரு பாவை நோன்பிருந்து திருப்பாவை தானெழுதி
முன்னைப் பயன் பெற விரதமிருந்தாள்

திருவரங்கன் அணைப்பாவை ,
என்றென்றும் துணைப்பாவை தானாக
விண்ணவர் போற்றும் திருவரங்கனை
அவ்வரங்கனை தான் மாலை சூட
தான் சூடிய பூமாலையை பாமாலையாய் அவனுக்களித்தாள், அவனும் களித்தான்
கிளி கொஞ்ஜும் தோள்கள் கொண்ட
கோதை திருமாலைத் தானடைந்து
தவழ்ந்த மாலை தவழும் மாலை
அவ்வரங்கனுக்கே தோள் கொஞ்ஜும்
கிளியானாள் துளசி மாலை போலானாள்

பெரியாழ்வார் விதிர் விதிர்த்தார் –
அடியாராய் தான் நினைத்த தன் மகள்
கோதை அரங்கனின் திரு அடியாளாய்
ஆனகதை அறியாரோ பெரியாழ்வார்


அபசார மென்ரெண்ணி அவர் துடித்தார்
அலைமேலே பள்ளி கொண்ட
திருமாலின் தாரமிவள் என்றவர் அறியாரோ?
அதனால்தான் தான் சூடிக் கொடுத்தாள்
சுடர்கொடி யாள் ஆண்டாள்
அரங்கனையும் ஆண்டாள்
அறியாரோ பெரியாழ்வார் அறியாரோ
ஆனாலும் அளவில்லா பக்தியது
அரங்கன்மேல்

திருப்பாவை தனை ஆண்ட
திருவரங்கன் தாரமிவள்
தனக்கேயாம் என்றுரைத்தான் திருமாலே
இவள் தொடுத்து தானணிந்த
ஒருமாலை தினமும் தன்
தோளின் திருமாலை என்றுறைத்தான்

தெளிந்தாண்டார் பெரியாழ்வார்
பெற்றெடுத்த பெண்பிள்ளை
இல்லை இவள் கண்டெடுத்த
துளசிக் கிள்ளை
பெரியாழ்வார் கண்டெடுத்த
பெண்ணாழ்வார் சின்னாழ்வார்


அன்புடன்

தமிழ்த்தேனீ

குழந்தைகள் ஜாக்கிறதை

" குழந்தை வளர்ப்பு "




குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கடினமான ஒரு காரியம்
அதிக கவனம் தேவை தாய்மார்களுக்கு


இது போல ஒரு சம்பவம் நடந்த்தது
அதை என் வருத்தம் சேர்த்து எழுத ஆரம்ப்பித்தேன்
அது கவிதையாய் த் தான் வந்தது
அப்படியே அளித்துள்ளேன்

ஒரு வயதுக் குழந்தை
அன்பாக தூளி கட்டி
ஆரிரோ பாடி தூங்கவைத்து
அலுப்பினால் கண்ணயர்ந்த்தாள்
அந்தத் தாயும்
அழுகை சத்தம் கேட்டது
அயர்வான தூக்கத்திலும்
எழுந்து வந்து தாய்மையுடன்
மேலும் கொஞ்ஜம் தாலாட்டி
கொஞ்ஜம் பாலுமூட்டி
தூங்கவைத்தாள் தாயவளும்
தானும் சேர்ந்த்து சோர்ந்து
தூங்கிப் போனாள்

தூக்கம் என்னும் கொடிய காலன்
துக்கத்தை அளித்தறியாமல்
துயில் கலைந்து தெழுந்து பார்த்தால்
தூளியிலே காலனவன் தேள் வடிவில்
குழந்தையினை தீண்டித் தீண்டி
குழந்தையின் அழுகைக் காரணம் புரியாமல்
தூங்கியதென்றெண்ணிக் துயில் கொள்ளப் போனாளே
குழந்தை மூச்சடக்கி விஷமேரி
நீங்காத் துயில் கொள்ள காரணமானாளே
அல்ட்ஷியமென்று சொல்ல மாட்டேன்
இறந்த்தை துயிலென்றெண்ணி

சேயதனைத் தவற விட்ட தாய்தானே
விதியின் மேல் பழி போட்டு பயனென்ன
வருமுன் காப்பதற்கு வழி கண்டு
காத்திடுவீர் குழவிகளை
ஜாக்கிறதை ஜாக்கிறதை ஜாக்கிறதை


அன்புடன்
தமிழ்த்தேனீ

மழையின் குழப்பம்

" மழையின் குழப்பம் "

மழைக்கு ஒரு குழப்பம்
பெய்வதா வேண்டாமா...?
பெய்தால் எப்போது பெய்வது
எங்கு பெய்வது ?
ஒருவன் வேண்டிக் கொள்கிறான்
இறைவா இன்று மழை பெய்யக் கூடாது
குப்பை அள்ளிப் பிழைப்பவன் நான்
குப்பைகள் நனைந்து விட்டால்
வயிறு காய்ந்துவிடும்

மற்றொருவன் வேண்டுதல்
இறைவா இன்றாவது மழை பெய்ய வேண்டும்
குடைகள் விற்கவே இல்லை
குடை தயாரிப்பவர் பட்டினி கிடக்கிறார்

விவசாயி வேண்டிக் கொள்கிறார்
நட்ட விதை முளைக்க மழை வேண்டும்

பயிர்கள் முற்றி வளர்ந்தவுடன்
மழை பெய்ய வேண்டாம் கதிர் அறுக்கும் வரை
விற்றால்தான் பிழைக்க முடியும்
குழ்ந்தை இன்னிக்கு மழை பெய்தால்
பள்ளிக்கூடம் விடுமுரை மழை பெய்யணும்

மாரி மாரி மக்கள் வேண்டுதல்
குழம்பிப் போனது மழை

வேண்டாத இடத்தில் மழை
வெள்ளப் பெருக்கு
வேண்டிய இடத்தில் இல்லை மழை
தன்ணீஈப் பஞ்ஜம்

என்னதான் செய்யும் மழை
எப்போது பெய்யும் மழை
மழைக்கு ஒரு குழப்பம்
அன்புடன்
தமிழ்த்தேனீ

அணைக்கட்டு

அணைக்கட்டு

மூளை அணைக் கட்டில்
முழுவதுமாய் நிரம்பி
வெளியேறத்துடி துடிக்கும்
கருத்து மழை
வான வெளியினிலே
வலம் வரும் பேறரிவு
பெய்திட்ட பெரு மழையால்
மூளை அணைக்கட்டில்
முழுவதுமாய் நிரம்பி
வெளியேறத் துடி துடிக்கும்
கருத்து மழை

இன்னுமோர் சொட்டு வீழ்ந்த்தாலு ம்
உடைத்துக் கொள்ளும் பக்க சுவர்
வெடித்து சிதறும் கனம் மிக்க
பக்க சுவர்
மடை திறக்க வழியில்லை
ஏற்கெனவே பெய்த மழை
வெள்ளம் நிரம்பிய ஊர்
வெளியேற்றியே ஆகவேண்டிய
அபாய நிலை அணைக் கட்டில்

தானமளிக்க தயார் நானென்றாலும்
தாங்குதற்கு தகுதியான தருமிகளை
தானம் வாங்தற்கு தகுதியான
தமிழ் விரும்பிகளை
தேடித் தேடி அலைகின்றேன்
சீக்கிறம் வாருங்கள்
அபாய அறிவிப்பு
கன அடி அளவு கோல்
காட்டுதிந்த்த பயங்கரத்தை
அணைக்கட்டு
அன்புடன்
தமிழ்த்தேனீ

மனோ கரம்

மனோ கரம்

மின்சாரம் தடைப் பட்டது
இருட்டிலும் எழுதிக் கொண்டிருந்தேன்
என் சாரம் தடைப்படவில்லையே
எண்ண வேகத்துக்கு ஈடு கொடுத்து
இருட்டிலும் எழுதிக் கொண்டே இருந்தேன்
எத்தனை வருட எழுத்துப் பழக்கம்
பார்த்து விடுவோம் ஒரு கை
இருட்டிலும் பிசகாது என் கையெழுத்து
ஒரு அசாத்ய தன்னம்பிக் கைதான்
இருட்டிலும் எழுதிக் கொண்டிருந்தேன்
எத்தனை தடைகள் வந்தாலும்
அத்தனையும் தகர்த்தெறிந்து
நான் சொல்ல வந்த ரகசியத்தை
நேரில் சொல்ல இயலாமையினால்
எழுதியே ஆகவேண்டுமென்ற
கட்டாயம் எனக்குண்டு
இருட்டிலும் எழுதிக் கொண்டிருந்தேன்
மின்சாரமென்ன யார் ,எவை,
தடுத்தாலும் சொல்லாமல்,
எழுதாமல் விடப் போவதில்லை
எத்தனை இடர்கள் எதிர்ப் பட்டாலும்
எடுத்த காரியம் முடித்தே தீருவேன்
என் மனவுறுதி யாருக்கும் தெரியாது
புறிந்து கொள்ள வேண்டும் எல்லோரும்
அதற்காகவே நிருத்தாமல்
இருட்டிலும் எழுதிக் கொண்டே இருக்கிறேன்
புறிந்து போனதோ என் உறுதி
மின்சாரம் தானாய் வந்தது
அதற்குள் எழுதி முடித்துவிட்டேன் நான்
பாராட்டு தமிழ்த்தேனீ மனவுறுதி
அதிகம்தான் உனக்கு பலமான குரலொன்று
எனக்குக் கேட்டது யாரது
என்னைப் புறிந்து கொண்டு பாராட்டுவது
வேறுயார் புறிந்து கொள்ளப் போகிறார்
பாராட்டப் போகிறார் அடேடே நானேதான்
,என் மனக் குரல்தான்
அது சரி மின்சார வெளிச்சத்தில்
எழுதியதை மீண்டும் படித்து சரிபார்க்க
படிக்க ஆரம்பித்தேன்
என்ன இது ஒரு எழுத்தும் தெளிவாக
புரியவில்லை எழுத்துரு மாறிவிட்டதா
என் கையெழுத்து எனக்கே புரியவில்லை
ஆமாம் நான் என்ன ரகசியம்
சொல்லவேண்டுமென்றிருந்தேன்
அதுவும் மறந்துவிட்டதே என் செய்வேன்…?

அன்புடன்
தமிழ்த்தேனீ