திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Wednesday, November 11, 2009

இந்து மனம்

ஆவடியில் ஒரு பள்ளியில் நான் உரையாற்றப் போயிருந்தேன்

அந்தப் பள்ளி ஒரு கிரித்துவப் பள்ளி
அங்கே மேடையில் நான் அமர்ந்திருந்தேன்

என் இடப்பக்கம் ஒரு இசுலாமியப் பெரியவர் இசுலாம் வேதத்தைப் பற்றிப் பேசக் காத்திருந்தார்

என் வலப்பக்கம் ஒரு கிரித்துவ பாதிரியார் கிரித்துவ வேதத்தைப் பற்றிப் பேசக் காத்திருந்தார்

என்னை இந்து மதம் பற்றிப் பேச அழைத்திருந்தனர்

நான் மேடையில் முதலாவதாகப் பேச அழைக்கப்பட்டேன்
எண்ணிப் பாருங்கள் என் நிலையை

ஆனால் நான் கவலைப்படவில்லை

ஒலிபெருக்கியைப் பிடித்தேன்

எதிரே இருந்த ஒரு ஆசிரியையிடம்

சகோதரி உங்கள் சாலையில் ஒரு பெரியவர் உங்கள் கண்முன்னே கீழே விழுந்து விடுகிறார்
நீங்கள் பதறிப் போய் உங்கள் வீட்டுக்காரரை உதவிக்கு அழைக்கிறீர்கள்
அவரிடம் என்ன சொல்லுவீர்கள் என்று கேட்டேன்

அந்த ஆசிரியை கூறினார்
ஒரு பெரியவர் கீழே விழுந்து விட்டார் அவருக்கு உதவி செய்வோம் ஓடி வாருங்கள் என்று அழைப்பேன் என்று கூறினார்

அந்த ஆசிரியை ஒரு பெரியவர் என்று கூறினார்களே தவிற
ஒரு இசுலாமியப் பெரியவர்,அல்லது ஒரு இந்துப் பெரியவர், அல்லது ஒரு கிரித்துவப் பெரியவர்
கீழே விழுந்து விட்டார் என்று கூறவில்லையே
பொதுவாக ஒரு பெரியவர் கீழே விழுந்து விட்டார் என்றுதானே கூறினார்கள்
என்று குறிப்பிட்டுவிட்டு என்னுடைய உரையை ஆரம்பித்தேன்

என் முதல் வார்த்தையே என்ன தெரியுமா...?

இந்து மதத்தைப் பற்றியோ
இசுலாமிய மதத்தைப் பற்றியோ

கிரித்துவ மதத்தைப் பற்றியோ
மற்ற எந்த மதத்தைப் பற்றியும் நான் பேசப்போவதில்லை

இந்து மனத்தைப் பற்றிப் பேசப் போகிறேன் என்றேன்
நாமெல்லோரும் இந்தியர்கள் ,நமக்குள் பேதமில்லை
ஆகவே மதத்தைப் பற்றியோ, தனிதனியாக வேதங்களைப் பற்றியோ
விவாதம் தேவையில்லை, எது உயர்ந்தது என்பதில் கருத்து வேறுபாடுகள் வேண்டாம்
அவரவர் தாய் அவரவர்க்கு உயர்வு,இங்கே யாரும் தாழ்வில்லை, யாரும் உயர்வில்லை,எல்லோரும்  சமமே,
ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய மதம் , வேதம் என்

பதெல்லாம் போய்ச்சேரும் இடத்துக்கு உண்டான   வாகனம்தான்,

அவரவர் வாகனம் அவரவர்க்கு உயர்வு
வாகனம்தான் வேறு வேறு, போய்ச்சேரும் இடம் ஒன்றுதான்

ஆகவே இந்து மனம் பற்றி யோசிப்போம், இந்து மனம் பற்றி பேசுவோம்
நாம் அனைவருமே இந்தியர்கள் என்று பெருமிதம் கொள்வோம்

வந்தே மாதரம் என்று கூறிவிட்டு உட்கார்ந்தேன்

இசுலாமியப் பெரியவரும் , கிரித்துவப் பெரியவரும் என் பேச்சை ஆமோதித்து   என்னைக் கட்டிக்கொண்டு  ஆனந்தக் கண்ணீர் சொறிந்து
 இந்தப் பொது மனம் இனி இந்தியர்கள் அனைவருக்கும் வரப் பாடுபடுவோம் என்றனர்

நாங்கள் மூவரும் ஒன்றாக உணவருந்திப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம்

வந்தே மாதரம்

அன்புடன்

தமிழ்த்தேனீ