திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, August 9, 2007

சிறந்த பக்தன்

ஞானி என்பவன் யார்...?
முற்றும் துறந்தால்தான் முனிவனா...?
இதற்க்கும் ஒரு கதை உண்டு

நாரதர் தன்னைவிட பக்திமான் உலகிலே
யாருமில்லை என்று கர்வம் கொண்டு
நாராயணனிடம் போய் சொன்னாராம்
சதா சர்வ காலமும் நாராயணா நாராயணா
என்று உன் திருநாமம் உச்சரிக்கும் என்னைவிட
பக்திமான் யாராவது உல்கில் இருக்கிறார்களா?
என்று கேட்டாராம்
அதற்கு நாராயணனும் பூலோகத்தில் சென்று பார்ப்போம்
என்று கூறி அழைத்து வந்தாராம்

ஒரு ஏழை விவசாயி காலையில் கலப்பையை
எடுத்து கன்ணில் ஒற்றிக் கொண்டு
இறைவா அனைவரையும் காப்பாற்று
என்று சொல்லி விட்டு வயலுக்குப் போய் உழுதுவிட்டு
மதிய உணவுக்கு முன் அதே மாதிரி ஒரு முறை
இறைவனைத் தொழுதுவிட்டு பின் மீண்டும்
இரவு படுக்கப் போகும் போதும் அதே மாதிரி
தொழுதுவிட்டு படுத்துக் கொண்டானாம்

நாராயணன் நாரதரிடம்

இவர்தான் உம்மைவிட உயர்ந்த பக்தன்
என்று கூற நாரதர் எப்படி என்று வினவினாராம்
அதற்க்கு நாராயணன்
ஒரு கின்ணத்தில் தளும்பத் தளும்ப
எண்ணையை ஊற்றி ஒரு சொட்டு கூட
கீழே விழாமல்
மூவுலகமும் சுற்றி வா நாரதா அப்போது உன்னை
உயர்ந்த பக்தன் என்று ஒத்துக் கொள்கிறேன் என்றாராம்

நாரதரும் ஒரு சொட்டு எண்ணை கூட கீழே விழாமல்
மூவுலகும் சுற்றிவிட்டு நாராயணனிடம்
வந்து இப்போது ஒத்துக் கொள்கிறீரா என்று வினவ
நாராயணன் ஆமாம் இந்த மூவுலகப்
ப்ரயாணத்தில் எத்தனை முறை நாராயண நாமம்
உறைத்தீர் என்று கேட்க ஒருமுறைகூட
நாராயண நாமம் சொல்லாமலே மூவுலகும் சுற்றி வந்ததை
எண்ணி வெட்கப்பட்டாராம்
இப்போது சொல்லுங்கள்
எவ்வளவோ ப்ரச்சனைகள் இருக்கும் போதும்
அந்த மனிதன் மூன்று முறை
என்னை நினைத்தானே சிறந்த பக்திமான்
நீரா அல்லது அவனா ....?
என்று
நாரதர் வெட்கித் தலை குனிந்தாராம்

அதனால் சூழ்நிலைக் கைதிகளாய் நாம் இருந்தாலும்
அதற்கு நடுவே நம்மை சமன்ப் படுத்திக் கொண்டு வாழுகிறோமே
நாம் எவ்வளவோ பரவாயில்லை
என்பது என் கருத்து

அன்புடன்
தமிழ்த்தேனீ
Post a Comment