திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Monday, August 6, 2007

தமிழ் வலைபதிவர் பட்டறை

அன்புடன் நண்பர்களே கடந்த 5ம் தேதி ஞாயிற்றுக் கிழமை
சென்னை பல்கலக் கழக வளாகத்தில்
தமிழ்த்துறை அரங்கில் நடந்த
தமிழ் வலைப் பதிவுபட்டறை
விழாவுக்கு சென்றிருந்தேன்
அங்கு இணையத்தில் ஏற்படும் சந்தேகங்களை மிகத் தெளிவாக விளக்கினர்
புதிய மென்பொருட்களை உருவாக்கியவர்கள் அவர்களுடைய மென் பொருள்
பற்றிய செய்திகளுடன் .செய்முறை,விளக்கப் படங்களுடன் காட்டினர்
வந்திருந்த அனைவருக்கும் பேச விருப்பப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்கப்
பட்டது
அடியேனும் 2 நிமிடம் பேச் அனுமதி பெற்று
ஒரு வாழ்த்துபா படித்தேன்

மாயத் திரை

சாயப் பட்டறை கேள்விப் பட்டிருக்கிறேன்

தமிழ் நேயப் பட்டறை இங்குண்டு

என்று பறை அறிவித்தனர்

இக் குழாமின் நடத்துனர்கள்

ஆயுதப் பட்டறையிலே சாணை தீட்டுவார்கள்

இது மூளையை சாணை தீட்ட

வந்த தமிழ் நேயப் பட்டறைவலைப் பூக்கள்,வலைக் குழுமம்

வலைத் தளம் ,வலைஇணையம்

வலைத் தொடர்பு

எல்லாமே தெரிந்து கொள்ள

வலைப் பட்டறை நாடி வந்தோம்கையிலும் கொண்டு வரவில்லை

பையிலும் ஏதுமில்லை

மையிலும் எழுதவில்லை

பொய்யிலே வாழுகின்றோம்

பொய்யென்றால் கற்பனை

கற்பனைஎன்றால் பொய்

மெய்யைப் பொய்யாக்கி

பொய்யை மெய்யாக்கி

மொத்தமும் கணிணிக்குள்

ஏற்றி வைத்துவிட்டோம்

மறந்து போன மூளையின்

மறு அவதாரம் இந்தக் கணிணி

மாலிக்யூலில் உள்ள செய்தி

நினைவுக்கு வரமறுக்கிறது

கணிணியில் மொத்தமிருப்பதால்

சொந்த மூளைதனை அடகு வைத்தோம்

கணிணிப் பெட்டியிலும்

சின்னத் தொலை பேசியிலும்

மனக் கணக்கு மறந்துபோனது

கையெழுத்து மறந்துபோனது

மொழி பற்றிக் கவலையில்லை

எம்மொழியில் அடித்தாலும்

நம் மொழியில் மாற்று மிந்த

கணிணிப் பெட்டி

செய்யும் மாயத்தாலே

விலாசங்கள் தொலைதொடர்பு எண்கள்

நினைவுக்கு வரவில்லை

அத்தனையும் கணிணியிலே

நம் மூளைக்கு வேலை இல்லை

அது மட்டும் காலை வாராமலிருந்தால்

கணிணியே நம் கையில்

உலகமே நம் பையில்நாமெல்லாம் அதன் கையில்இது கணிணி யுகம்

அதனால் நாம் சுகம்

அன்புடன்

தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
Post a Comment