திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Wednesday, August 18, 2010

" B + " சிறுகதை





http://www.vallamai.com/?p=544



“B+” ( சிறுகதை)

வல்லமை இதழில் வெளியாகி உள்ளது, மேலே உள்ள சுட்டியை சொடுக்கி  படித்து உங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்



அன்புடன்

தமிழ்த்தேனீ

Monday, July 19, 2010

”அதிர்ச்சி” சிறுகதை வல்லமை இதழில் படிக்க

 http://www.vallamai.com/?p=272

”அதிர்ச்சி”  சிறுகதை வல்லமை இதழில் படிக்க மேற்கண்ட சுட்டியை சொடுக்கவும்

அன்புடன்’
தமிழ்த்தேனீ

Monday, July 5, 2010

”முகமூடிகள்” சிறுகதை

அன்புள்ள  நண்பர்களே  ”முகமூடிகள்” என்று நான் எழுதிய சிறுகதை   ”வல்லமை  என்னும் மின் இதழில் வெளி வந்திருக்கிறது

அந்தக் கதையைப் படிக்க
சொடுக்குங்கள்         http://www.vallamai.com/?p=200

அன்புடன்
தமிழ்த்தேனீ             

Wednesday, June 9, 2010

பக்தி ஒரு நிகழ்வு

செப்டம்பர் மாதம் 1990 ஆம் ஆண்டு அம்மன் தரிசனம் என்னும் பத்திரிகைக்காக என் தாயார் ஆர் கமலம்மாள் அவர்களால் எழுதப்பட்ட்து

                                              ”பக்தி”


பக்தி என்றாலே நம் கண் முன் வரும் தோற்றங்களுள் முதன்மையானது
கையில் தம்பூருடன் கண்களில் ஆனந்த பாஷ்பத்துடன்ஆன்மாவையே உருக்கும் தோற்றம் கொண்ட இருக்கும் தியாகைய்யர் என்கிற தியாகராஜன் என்கிற தியாகப் ப்ரும்மம்தான்,அவர் வீட்டு வாயில் திண்ணையில் அவர் அமர்ந்திருக்கிறார்நாம் அந்த மகானை தரிசிக்க அவர் வீடு நோக்கி செல்கிறோம்,நாம் நெருங்க நெருங்க அவர் பாடும் ராமநாமம், தம்பூரின் ஒலி நயத்தோடு நம் காதுகளில் கேட்க ஆரம்பிக்கிறது,
 சதா ராம நாமத்தில் மூழ்கியிருக்கும் அவர்அப்போதும் ராம நாமாமிருதத்தில்,ஸ்ரீ ராமனுடைய குண விசேஷங்களில் மனதை ஆழ்த்தி ராம நாம சங்கீர்த்தனத்தில் மூழ்கியிருக்கிறார், அந்த இடமே கறவைகள் கன்றுகள் முதற்கொண்டு உருகி நிற்கின்றன,மரங்கள் செடிகள்கூட இதமான தென்றலில் இளமையாக ஆடுகின்றன, அந்த மோனத்தவத்தில் அவர் மூழ்கியிருக்கும்போது அந்த மோனத்தவத்தைக் கலைக்கும் வலிமை யாருக்குமே கிடையாது,அப்படி அவர் ஆழ்ந்த பக்தியில் திளைத்திருக்கும்போது அன்று ஏனோ தெரியவில்லை இடையிடையே சிரு சலனம் மனதை ஆக்ரமித்துக்கொண்டிருந்தது,ஆம் அவர் ஆழ் மனத்தையும் மீறி சலங்கை ஒலி ,பொற்சதங்கை ஒலி அவரின் ராம நாம சங்கீர்த்தனத்திற்கு மெருகூட்டியது,

ஒரு நாள், மறு நாள் ,அதற்கும் மறு நாள்,அதே நேரத்துக்கு கடந்த மூன்று நாட்களாக அவருக்கும் அந்த பொற்சதங்கை ஒலி பழகியிருந்தது, மறுநாள் அவரின் ராம நாம சங்கீர்த்தனத்தை தொடங்கும் போதே அந்த சலங்கை ஒலிக்காக அவரே காத்திருப்பது போன்ற ஒரு தோற்றம் அவருள் விளைந்தது,கண்களை மூடி மனதில் ஸ்ரீ ராமனின் தோற்றத்தையே மனதில் நிறுத்தி நாம் சங்கீர்த்தனம் செய்யும் அவர் மனதும் கண்களும் விழித்துக்கொண்டன, அங்கே அவர் கண்ட காட்சி, உண்ணும் உணவு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே என்று ஈடுபட்ட ஆழ்வாரைப் போல
ராம நாமத்தில் மூழ்கியிருந்த தியாகையர் கண்களில் முதல் பட்டது இரு செந்தாமரை இதழ்கள் ,அல்ல அல்ல இரு திருவடிகள், செம்பஞ்சுக்கு குழம்பு பூசி தங்க்க் கொலுசுகள் மின்ன தகதகத்த பாதங்கள்,அந்தப் பாதங்கள் நகர நகர அந்தப் பாதங்களின் பின்னாலேயே தியாகையரின் மனதும் செல்ல அந்த திருவடிகள் இரண்டும் மெல்லடி நடந்து தியாகையரின் வீட்டினுள்ளே சென்றது,
தியாகையரின் கண்களில் கண்ணீர்? இது என்ன ஆனந்தக் கண்ணீரா?விரஜா நதியில் குளித்தது போல் உடல் லேசாகி ஆனந்த்த்தில் மிதந்தது,சில வினாடிகள் அப்படியே அந்த திருவடிகளில் லையித்திருந்த தியாகைய்யர் நினைவுக்கு மீண்டு தன் வீட்டுக்குள் நுழைந்த அந்தத் திருவடிகளை மீண்டும் காண்வேண்டும் என்னும் ஆசையால் ,அந்த செந்தாமரைப் பாதங்களுக்கு திருவடிகளுக்கு சொந்தக்காரி யார் என்று அறியும் ஆவல் மிஞ்ச தன் வீட்டிற்குள்ளேயே ஒரு அன்னியனைப் போன்ற உணர்வுடன் நுழைந்தார்,அங்கே..
அங்கே அவரின் மனைவி கமலா ! தூணில் சாய்ந்த படி கண்கள் திறந்தபடி, எங்கோ பார்த்தபடி தன் நிலை மறந்து உட்கார்ந்திருந்தாள், ஏதோ பரவசத்தில் ஆழ்ந்திருந்தாள், அவள் தவத்தைக் கலைக்க விரும்பாமல் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார் தியாகையர், கணவனைக் கண்டவுடன் எழுந்து மரியாதை செய்யும் அந்த உத்தமப் பெண்மணி தான் வந்ததையும் கவனிக்காமல் இருக்கிறாள் எப்படி? தனக்கும் மேலான அப்படி ஒரு சொர்க நிலையை அவள் அடைந்திருக்கிறாள், அப்படி ஒரு ஆனந்தமயமான ஆழ் நிலையை அவள் அனுபவித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை கண்டு அவர் மனம் பெருமித்த்தால் விம்மியது, எப்படிப்பட்ட பெண்மணி இவள்? இவளை மனைவியாக அடைய என்ன தவம் செய்திருக்கிறோம் நாம் என்று பரவசமடைந்தார் தியாகையர்,
திடீரென்று தன் சுய நிலைக்கு திரும்பிய கமலா திடுக்கிட்டு எழுந்திருக்க அவளை எழுந்திருக்க விடாமல் இதமாக அப்படியே உட்காரவைத்து தானும் அவளருகே உட்கார்ந்து அவளைப் பரிவோடு பார்த்து , கமலா என்று அன்போடு அழைத்தார் தியாகையர், கமலா அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள், நானும் சில நாட்களாக கவனித்துக்கொண்டே இருக்கிறேன், பொற்சதங்கை அணிந்த இரு திருப்பாதங்கள் தினமும் நம் வீட்டிற்கு வரக் காண்கின்றேன், அந்த செந்தாமரைப் பாதங்களைப் பார்த்தவுடன் என் மனமும் அப்படியே மயங்குகிறது ,அந்த்த் திருவடிகளுக்கு உரிய பெண்மணி யார் தெரியுமா ? என்று கேட்டார்

அதற்கு கமலா தினமும் அந்தப் பெண் இங்கே வருகிறாள்,என் எதிரே அமர்கிறாள், ஏதோ பேசுகிறாள், அவள் வந்துவிட்டால் நான் என்னையே மறந்துவிடுகிறேன், அவள் கண்களைப் பார்த்துவிட்டால் போதும் , அப்புறம் இந்த உலகமே மறந்து போய்விடுகிறது, அப்பா..!! அந்தக் கண்கள்! எத்தனை விசாலம், எவ்வளவு ஆழமான அழகான கருணையோடு இருக்கும் கண்கள்!அந்தக் கண்களைப் பார்த்துவிட்டால் பார்த்துக்கொண்டே இருக்கிறேன், பசி தாகம் எதுவுமே தெரிவதில்லை, நீங்கள் யாரம்மா என்று கேட்கவேண்டும் என்று தினமும் நினைக்கிறேன், ஆனால் என்னால் முடியவே இல்லை, ஆமாம் யார் அந்தப் பெண்மணி? என்றாள் கமலா

அவள் யார்..?

ஒரு கணத்தில் தியாகைய்யருக்கு உடம்பு சிலிர்க்கிறது..அவள் யார் என்று அவருக்கு புரிந்துவிட்டது! திரும்பிப் பார்த்தவுடன் தன் குஞ்சுகளின் பசியை தன் பார்வையாலேயே போக்கும் மீனைப் போன்றவள் அவள்!அவள்தான் மின்னாக்‌ஷி, அவள்தான் பராசக்தி, இதுவரை நான் அவளைப் பற்றிப் பாடவே இல்லையே! அதை நினைவூட்டவே அவள் இங்கே வந்திருக்கிறாள்,

அது மட்டுமல்ல என் பிரிய சகியே அவள் உனக்கு மட்டும் எதற்காக தரிசனம் தந்தாள் தெரியுமா? மஹா பதிவிரதையான உனக்கு மோட்ஷ சாம்ராஜ்யத்தை அளிக்கவே அவள் கருணையோடு இங்கே வந்தாள்!நான் அவளைக் கண்டு கொண்டேன்! என் தேவியை நான் தெரிந்து கொண்டேன்,என்றவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது!பக்திப் பரவசமாய்ப் பாட ஆரம்பித்தார்

”தாரிணி தெலுசு கொண்டி த்ரிபுரசுந்தரி”என்று அமிர்த வர்ஷமாக இன்றும் அவருடைய க்ருதி ஒலித்துக்கொண்டே இருக்கிறது

                                          சுபம்

அன்புடன்

தமிழ்த்தேனீ

Wednesday, June 2, 2010

கா(ஞ் ) சித்துண்டு சிறுகதை


கா(ஞ்) சித்துண்டு என்னும் சிறுகதை யூத்புல் விகடனில் வெளியாகி இருக்கிறது  படித்து மகிழுங்கள்   ,கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கினால் படிக்கலாம்
http://youthful.vikatan.com/youth/Nyouth/tamilthenistory010610.asphttp://youthful.vikatan.com/youth/Nyouth/tamilthenistory010610.asp


அன்பர்களே நான் எழுதிய கா(ஞ்)சித்துண்டு என்னும் சிறு கதை யூத்புல் விகடனில் வெளியாகி இருக்கிறது,மேலே அளிக்கப்பட்ட சுட்டியை சொடுக்கினால் படிக்கலாம்,
அன்புடன்
தமிழ்த்தேனீ--

மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது



http://youthful.vikatan.com/youth/Nyouth/tamilthenistory010610.asp





புஷ்பராகவ்-

இனி எதையாவது செய்ய வேண்டும் என்று நாம் முடிவெடுத்தால்

யாரிடமும் கூறாமல் நாமே செயல் படுத்த வேண்டும்.இந்த

கதை ஒரு நல்ல பாடம்.அருமை
ரா.புஷ்பா..

Priya பெறுநர் எனக்கு
nice pa :)

Tirumurti Vasudevan
:-)))

நல்லா இருந்தது.
Innamburan Innamburan
I told you, it is a good story.

Congratulations
meena muthu பெறுநர் mintamil

காஸ்ட்லி துண்டு! :)))))))))
kalvi Thulir


இந்த கதை .அருமைKavitha Prakash,
http://kalvithulir.blogspot.com/

http://kalvithulir.com

vishalam raman பெறுநர் mazalais


அன்பு தமிழ்த்தேனி அருமையான கதை கடை கூட்டம் என்றாலே எனக்கு அலர்ஜி ,,அதுவும் புடவைக்கடையா ?கேட்கவே வேண்டாம் என் வீட்டிலும் அந்தத்துண்டுதான் உபயோகிக்கிறோம்

---------------------------------------
பேஸ்புக்” பெறுநர் எனக்கு
Swaminathan Jayaraman commented on your தொடர்புச்சுட்டி:

மிகவும் நல்ல கற்பனை. ரசித்து படித்தேன். பாராட்டுக்கள்.
அன்புடன்
தமிழ்த்தேனீ

Tuesday, April 13, 2010

விக்ருதி வருடப் பிறப்பு

                                                            புதுவருடப்பிறப்பு


விரோதி வருடம் முடிந்து , தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி சித்திரை மாதம் ஒன்றாம் தேதி புதன் கிழமை காலை 5.15 மணிக்கு மீன லக்னமும் ,மீன ராசியும் கஜகேசரி யோகமும் கூடிய சுபவேளையில் சுக்கிர ஓரையில் பிறக்கிறது விக்ருதி வருடம்



”ப்ரக்ருதீம் விக்ருதீம் வித்யாம் சர்வ பூத ஹிதப்ரதாம்”

என்னும் வரிகள் மஹாலக்‌ஷ்மி அஷ்டோத்திரத்தில் வருகின்றன

இந்த விக்ருதீம் என்னும் சொல்லுக்கு மாறுதலை ஏற்படுத்துவது என்று பொருள், மாறுதலையைக் கொண்டவர் வினாயகர், அவரை ஓம்கார ஸ்வரூபி என்பர், அவரை வழிபட்டால் எல்லாக் காரியங்களும் தடையின்றி நடக்கும் எனபது நம்பிக்கை, இப்படி வினாயகர் பெயரும்

விக்ருதீம் என்னும் சொல்லுக்கு மஹாலக்‌ஷ்மியை வழிபடுவதால் நன்மையான முன்னேறங்கள் வரும் மாறுதல்கள் வரும் என்றும் பொருளுண்டு, திரு நாராயணனின் மார்பில் அல்லவா மஹாலக்‌ஷ்மி வாசம் செய்கிறாள் ,ஆகவே ஸ்ரீமன் நாராயணனையும் சேர்த்தே வணங்கினால் நன்மையுண்டு

இந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தின் தாக்கம் முழுவதுமாக இருப்பதால், செவ்வாயின் அதிபதியான முருகனையும் வழிபட்டால் செவ்வாயின் தாக்கத்திலிருந்து சற்றே விடுபடலாம் என்று ஜோதிடர்கள் கருத்து கூறுவர்

ஆகவே வினாயகரையும் ,மஹாலக்‌ஷ்மியையும்,ஸ்ரீமன் நாராயணனையும், முருகனையும் வழிபடுதல் நலம் விளைவிக்கும் ,

நாம் பொதுவாகவே சூரியனின் சுழற்சியைக் கொண்டுதான் காலங்களைக் கணிக்கிறோம், சூரியனின் தேர்ச்சக்கரம் சம்வத்திர ரூபம் என்று சொல்லுவார்கள், காலை ,நடுப்பகல், பிற்பகல், என்கிற தினப் பிரிவுகளாகிய மூன்றும் இருசுக் கோர்த்திருக்கும், இடமாயிருக்கும்,

சம்வத்திரம். பரிவத்சரம், இடா வஸ்திரம், அனுவஸ்தரம்,இத்வத்ஸரம்

ஆகிய் ஐவகை வருஷங்கள் அந்தச் சக்கரத்தின் ஆரக் கால்கள் ஆகும்

இளவேனில்,(வசந்தருது) ருதுவேனில் (க்ரீஷ்மருது),கார்காலம்(வர்ஷ ருது), குளிர்காலம் (சரத்ருது), முன்பனிக்காலம் (ஹேமந்த ருது), பின்பனிக்காலம் (சிசிர ருது) ,

ருதுக்கள் ஆறும் வட்டக் கால்கள், , காயத்ரீ,ப்ருஹ்ருதி,உஷ்ணிக், ஜகதீ,த்ருஷ்டுப்,அனுஷ்டுப்,பங்க்தி, ஆகிய ஸப்த சந்தஸ்ஸூகள் எழு குதிரைகளாகும்,, அவற்றை அடிப்படையாக க் கொண்டுதான் வாரத்தின் ஏழு நாட்கள் பெயரிடப்பட்டன,

துருவனை ஆதாரமாகக் கொண்ட சிறிய அச்சு தேரின் பெரிய அச்சுடன் இணைக்கப்பட்டிருக்கிறது,சூரியனே “ தேவயான மார்கம் ”” “ அது அர்ச்சராதி மார்கம் எனவும் சொல்லப்படும், புண்ணிய கர்மாக்கள் செய்பவர் சொர்கம் செல்லப் பயன்படும் வழி ””” “’’””பித்ருயாணம்” “என்றும் தூமாதி மார்கம் என்றும் அழைக்கபடும்,

வராஹமிஹிரர் என்னும் வானியல் நிபுணர் "ப்ருஹத் சம்ஹிதையில்“ மேஷ சங்க்ரமண காலத்திலே சூரிய பகவானை நமஸ்காரம் செய்வது மிகவும் விசேஷம் என்று சொல்லுகிறார். சைத்ர விஷு புண்ணியகாலம் என்பது சித்திரை மாதப் பிறப்பைக் குறிக்கும், அதாவது சூரியன் முதல் ராசியான மேஷத்தில் ப்ரவேசிப்பது. சித்திரை முதல் நாள்தான் ராமபிரான் ராவணனை வெல்ல அகஸ்திய முனிவரிடம் உபதேசம் பெற்று, ஆதித்ய ஹ்ருதயம் படித்தார். ஆகவே இந்தப் புனித சித்திரை நன்நாளில் காலையில் எழுந்து நீராடி, சுத்தமான மனதுடன் இறைவனைப் ப்ரார்த்தித்து, ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது மிகுந்த பலனைத் தரும்.

சித்திரை மாதத்து உதய சூரியனின் கதிர்கள் தொடர்ந்து பனிரெண்டு நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பா சமுத்திரம் பாபநாசம் கோயிலில் உள்ள பாபநாச ஸ்வாமியின் மீது படுவதால், அந்த நேரத்தில் அங்கு வந்து வணங்கும் பக்தர்களின் பாபங்களையெல்லாம் தீர்க்கீறார் என்பது ஐதீகம்.

இந்த தினத்தைக் கேரள மக்கள் “விஷுக்கனி“ என்று கொண்டாடுகிறார்கள். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற எந்த பேதமுமில்லாமல், முதல் நாள் இரவே குருவாயூர் கோயிலுக்குச் சென்று, அங்கேயே தங்கி, நள்ளிரவுக்குப் பின் சித்திரை மாதப் பிறப்பன்று விஷுக்கனி காணல் என்று வருஷ ஆரம்பத்திலே குருவாயூர் கிருஷ்ணனைக் கண்குளிரத் தரிசித்து, வருடம் முழுவதும் இனியதாக இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் மகிழ்வார்கள்.

நாமும் இந்த விக்ருதி வருஷப் பிறப்பன்று இறைவனைத் தரிசித்து இந்த வருஷம் நமக்கெல்லாம் இனியதாக இருக்கப் ப்ரார்த்தனை செய்வோம்.

அன்புடன்

தமிழ்த்தேனீ






Sunday, April 11, 2010

சென்னை ஆன் லைனில் என் கட்டுரைகள்

1.விஞ்ஞானத்தின் அடிப்படை மெய்ஞ்ஞானமே


சென்னை ஆன் லைனில் வெளி வந்த கட்டுரை

http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=2933c...



2.இளங்கன்று பயமறியாது

http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=893666ad-cac1-4812-ba40-8f407a5afaab&CATEGORYNAME=Thene



3. கட்டிடம் கட்டுவோர் கவனிக்கவும்

http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=a3ec2f63-0029-41a8-a76c-580f28a96acd&CATEGORYNAME=Thene



4. வாக்களித்தால் காக்கவேண்டும்

http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=fa0fc81d-c7a7-4209-b73a-1fa0bb9acb62&CATEGORYNAME=Thene



5.பொய்க்கால் மனிதர்கள்

http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=4681935e-50b4-4a50-9f0d-373f4d2cf0dc&CATEGORYNAME=Thene



6. ஆயிரம் வருத்தங்கள் இருந்தாலும்

http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=126a6a75-df0d-481b-9264-9bf1c30bda5b&CATEGORYNAME=Thene

Saturday, April 10, 2010

Use &Throw -உபயோகித்து தூக்கிஎறி

Use & Throw


உபயோகித்து தூக்கி எறி

என் மடிக்கணிணி கடந்த முப்பத்திஐந்து நாட்களாக என்னைவிட்டு யார் யாரிடமோ போய் உட்கார்ந்து கொண்டு என்னை எந்த வேலையையும் செய்யவிடாமல் நான் பட்ட அவதிகளையும், அந்த மடிக்கணிணியில் ஏற்பட்ட ப்ரச்சனயையும் நான் அடைந்த அனுபவத்தையும் அப்படியே எழுதுகிறேன், இதைப் படிக்கும் கணிணி உரிமையாளர்களுக்கு என் அனுபவம் ஒரு பாடமாக இருக்கும் என்பதே நோக்கம்

நான் துபாயில் மிந்தமிழ் மரபு சேகரத்துக்காக மின்பதிப்பாக்கம் செய்துகொண்டிருந்தேன், அப்போது ஒரு நாள் திடீரென்று என் கணிணியின் திரை பச்சை வண்ணம் கொண்டது, திரை முழுவதும் பச்சை நிறமாக மாறியது கண்ணன் மேல் ஆசைகொண்டாற்போல,

எழுத்துக்களும் , படங்களும் ஒன்றுமே தெளிவில்லாமல் கணிணியில் வேலையே செய்ய முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்தேன்

துபாயில் கணிணியை சரி செய்ய அதிகம் செலவாகும் என்று என் மாப்பிள்ளை கூறியதால் என்னுடைய மகளின் கணிணியை அவளுடைய அலுவலக வேலைகளை முடித்தபின்னர் வாங்கி சில பணிகளை மிகவும் ப்ரயாசைப்பட்டு முடித்தேன்,

சென்னை வந்ததும் முதல் வேலையாக என்னுடைய மேஜைக்கணிணியை சரி செய்யும் நண்பரை அழைத்து விவரம் சொன்னேன், அவர் சொன்னார்

Compaq Laptop Service center ரில் கொடுத்தால் அவர்கள் முக்கிய்மான பாகங்களை மாற்றுவர் அதனால் அதிகம் செலவாகும் எதனால் என்னுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார் அவரிடம் கொடுக்கலாம் என்றார்

அவர் கூறியதைக் கேட்டு மடிக்கணினியை அடையாரிலுள்ள அவருடைய கடைக்கு எடுத்துச் சென்றேன், நாலு மணி நேரம் உடகாரவைத்தார், நாலுமணிநேரம் கழித்து கணிணித் திரையின் (Cable) கெட்டுப் போயிருக்கிறது அது உடனே கிடைக்காது ,இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள் கிடைக்குமா பார்க்கிறேன் என்றார், சரி என்று மடிக்கணினியை எடுத்துவந்தேன், நான்கு நாட்களாகியும் அவரிடமிருந்து செய்தி எதுவும் வராததால், நானே தொலை பேசியில் அழைத்து கேட்டவுடன் ,அந்த(Cable) கிடைக்கவில்லை என்றார், சரி இதெல்லாம் சரிப்படாது என்று முடிவுக்கு வந்து கூகிளில் தேடு பொறியில் சென்று அந்தக் குறிப்பிட்ட நிர்வாகத்தின் பெயரை எழுதி தேடினதில் கிடைத்தது வடபழனியில் இருக்கும் ஒரு கணிணி சரி செய்யும் நிறுவனத்தின் ஒரு விலாசம், அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன், அவர்கள் மிகவும் மரியாதையாக பேசினர் , அவர்களே வந்து என் மடிக்கணிணியை வாங்கிச் சென்று சரி செய்து மீண்டும் எடுத்து வந்து வீட்டிலேயே அளிப்பதாகக் கூறியதால் அகமகிழந்தேன்

சொன்ன சொல் தவறாமல் அவர்களும் ஒரு பொறியாளரை அனுப்பி என்னுடைய கணிணியை வாங்கிச் சென்றனர்

அன்றிலிருந்து தினமும் அவர்களுக்கு தொலை பேசி வழியாக நான் தொடர்பு கொண்டு பேசி என்னுடைய தொலை பேசிக் கட்டணம் இரண்டு மடங்காக உயர்ந்தது,,ஆனால் அவர்கள் ஒரு முறை கூட தொலை பேசியில் என்னை அழைத்து என்னுடைய மடிக்கணிணியின் நிலை என்ன என்பதக் கூறவே இல்லை, அதோடு என் கணிணியில் சில பாகங்களை மாற்றவேண்டும் அதற்கு ரூபாய் பதினைந்தாயிரம் ஆகும் என்றும் எனக்கு செய்திஅளித்தனர்

ஒரு கட்டத்தில் மனம் மிகவும் வெறுத்து அவர்களைத் தொலை பேசியில் அழைத்து மரியாதையாக அன்றே என்னுடைய மடிக்கணினியை கொண்டு வந்து என்னிடம் ஒப்படைக்கும்படியாகவும் அப்படி இல்லையென்றால் தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என்று ஆதாரபூர்வமாக மிரட்டியதால் முப்பது நாட்களுக்குப் பிறகு என் மடிக்கணிணியை எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து என்னிடம் கொண்டு வந்து அளித்தனர்,

கடைசியில்தான் தெரிந்தது அந்த நிறுவனமும் உண்மையான அந்தக் குறிப்பிட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ள அலுவலகம் அல்ல என்று, எனக்கு குழப்பம் ஏன் கூகிள் தேடு பொறியில் கூட சரியான விவரங்கள் கிடைப்பதில்லை என்று, மீண்டும் பலரை விசாரித்து உண்மையான அந்தக் குறிப்பிட்ட நிர்வாகத்தை அண்ணாசாலையில் உள்ள பீட்டர்ஸ் சாலையில் இருக்கிறது என்று கண்டுபிடித்து அங்கே சென்று உட்கார்ந்தேன், ஒரு விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்து அளிக்க வேண்டினர், நானும் அவ்வாறே அளித்தேன், அவரிடம் கேட்டேன் கூகிள் தேடு பொறியில் உங்கள் நிறுவனத்தின் பெயரை எழுதி தேடினால் ஏன் உங்களின் உண்மையான விலாசம் கிடைக்கவில்லை என்று, அவர் மிகவும் சாதாரணமாக கூறினார் , இன்னும் வலையேற்றாமல் இருந்திருக்கும் என்று, அது சரி அவர்கள் வலையேற்றாமல் இருந்ததால் நாமல்லவோ மாட்டிக்கொண்டோம் வலையில் என்று எண்ணிக்கொண்டே இருக்கும்போது

எனக்கு ஒரு எண் வழங்கப்பட்டது அந்த எண்ணை அவர்கள் அழைக்கும் வரை உட்கார்ந்திருந்து மடிக்கணிணியை எடுத்துக்கொண்டு அந்த பொறியாளரிடம் அளித்தேன் அவர் திருப்பான் கொண்டு என்னுடைய மடிக்கணிணியை திறந்து பார்த்துவிட்டு ,சரி செய்து கொடுக்கிறோம் என்றார், நான் என்னுடைய கணிணியின் Hard Disk கை கழற்றிக் கொடுங்கள் ,அதிலே முக்கியமான விவரங்கள் இருக்கின்றன என்றேன், அதற்கு அவர் ,அப்படி முடியாது ,உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் Hard Disk க்கிலிலுள்ள விவரங்களை நீங்கள் எங்காவது சேமித்துக்கொண்டு பிறகு வந்து அளியுங்கள் என்றார், உடனடியாக சேமிக்க எங்கே போவது , அதனால் விழித்தேன், அவர் உடனே மாம்பலத்தில் உள்ள ஒரு கடையின் பெயரை சொல்லி அந்தக் கடையில் தனியாக வெளியில் வைத்து சேமிக்க Hard Disk விற்கிறார்கள், அதை வாங்கி உங்கள் விவரங்களை சேமித்து வைத்துகொண்டு உங்கள் வீட்டின் பக்கத்திலேயே எங்கள் அலுவலகம் அண்ணா நகரிலே இருக்கிறதே அங்கேயே நீங்கள் அளிக்கலாமே என்றார்

அதுவும் நல்ல ஆலோசனைதான் என்று மீண்டும் காரை ஓட்டிக்கொண்டு மாம்பலம் சென்று அந்தக் கடையில் External Hard Disk விலை கேட்டேன், அவர் சொன்னார் ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் என்றார், மனம் வெறுத்துவீட்டிற்கே திரும்பி வந்து உட்கார்ந்து கூடியவரையில் முக்கியமான கோப்புகளை, புகைப்படங்களை Rewriteble C D யில் எழுதிக்கொண்டு, என் வீட்டின் அருகே இருக்கும் அந்தக் குறிப்பிட்ட நிர்வாகத்தின் கிளைக்கு சென்று அங்கும் இதே போன்ற நடைமுறைகளைக் கையாண்டு கணிணியை அங்கிருந்த பொறியாளரிடம் ஒப்படைத்தேன்,முன் பணமாக ரூபாய் முன்னூறு கட்டச் சொன்னார்கள், நாம் அவர்கள் கூறும் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு அவர்களிடம் வேலையை ஒப்படைத்தால் நம் கணிணியை சரி செய்ய ஆகும் செலவில் அந்த முன்னூறு ரூபாயைக் கழித்துக்கொள்வதாகவும் , அப்படி இல்லையென்றால் அந்த முன்னூறு ரூபாய அவர்களின் அலுவலகத்துக்கு சேர்ந்துவிடும் என்று கட்டளை போட்டார்கள் , ஒப்புக்கொண்டு முன்னூறு ரூபாய் அளித்து ரசீது பெற்றுக்கொண்டேன், அவர் கணிணியை திறந்து முதலில் என்னுடைய Hard Disk ஐ கழற்றி என்னிடம் தந்துவிட்டு கணிணியை மட்டும் கொடுத்தால் போதும் என்று கணிணியை வாங்கி உள்ளே வைத்தார்,

மூன்று நாட்கள் சென்ற பின்னர் எந்த தகவலும் அவர்களிடமிருந்து வராத்தால் நானே நேரில் சென்று விசாரித்தேன், அப்போது அவர் ,ஐய்யா உங்கள் கணினியை பரிசோதனை செய்தோம் , அதன் விவரங்களை உங்களுக்கு இணையத்தில் மடலில் அனுப்புகிறோம் என்றார்கள், அதற்குப் பிறகு இணையத்தில் மடலில் விவரம் அனுப்பினார்கள், சில குறிப்பிட்ட பாகங்களின் பெயர்களை எழுதி அந்த பாகங்களின் விலையையும் எழுதி மொத்தம் 18 ஆயிரம் செலவாகும் என்றார்கள்,

என்னுடைய மகனுக்கு அவர்கள் அனுப்பிய மடலை முன்னுப்பினேன், அவன் ,, அப்பா நான் வேறு கணிணி வாங்கி அனுப்புகிறேன் வீணாக 18ஆயிரம் செலவழிக்க வேண்டாம் என்று கூறவே அந்த

அந்தக் குறிப்பிட்ட நிர்வாகத்தின் கிளைக்கு சென்று என் மடிக்கணினியை திருப்பித் தரும்படிக் கூறினேன் , அவர்கள் நீங்கள் இங்கே உட்கார்ந்து உங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம் நாங்களே கொண்டு வந்து வீட்டிலே கொடுக்கிறோம் என்றார்கள், நம்பி வீட்டுக்கு வந்தேன்

இரண்டு நாட்கள் அவர்களுக்கு தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு

மேலும் கொஞ்சம் பணம் தொலைபேசிக்கு செலவழித்து, கடைசியாக

ஒரு நாள் என் மடிக்கணிணியை எடுத்துக்கொண்டு ஒருவர் வந்தார் ,

அவர் என் மடிக்கணினியை என்னிடம் அளித்து விட்டு ஒரு கடிதத்தில்

பெற்றுக்கொண்டேன் என்று கையெழுதிடச்சொன்னார்,

என்னுடைய கணிணி திறக்க முடியவில்லை, மூடமுடியவில்லை

மூடித்திறக்கும் பகுதியில் உள்ள ஒரு தகட்டை உடைத்திருந்தார்கள்

நான் இப்படியே என் கணிணியை வாங்கிக் கொள்ள முடியாது நான் உங்களிடம் அளித்த அதே நிலையில் அளித்தால் வாங்க்கிக் கொள்கிறேன் என்று கூறி மீண்டும் அவர்களிடமே என் கணினியை ஒப்படைத்தேன்,

மீண்டும் அந்த அலுவலகத்துக்கு சென்று கேட்டால் அவர்கள் நான் இப்போது கணிணி இருக்கும் நிலையில்தான் அவர்களிடம் அளித்தேன் என்று வாக்குவாதம் செய்தார்கள், நான் மிகப் பொறுமையாக அவர்களிடம் நான் அண்ணா சாலையிலுள்ள பீட்டர்ஸ் சாலையில் உள்ள அவர்களின் இன்னொரு அலுவலகத்தில் அளித்ததையும் சுட்டிக் காண்பித்து ,அங்கே இருந்தவர் என் கணிணியை திறந்து பார்த்தார் ,அவரிடம் வேண்டுமானல் கேளுங்கள் நான் எப்படி உங்களிடம் கொடுத்தேன் என்று தெரியும் என்று வாதாடி நிரூபித்து

அவர்களையே சரி செய்து கொடுக்கும்படி வற்புறுத்தி மேலும் இரண்டு நாட்கள் காத்திருந்து சரி செய்து வாங்கினேன்

ஆக மொத்தம் நான் எந்தக் காரணத்துக்காக இப்படியெல்லாம் அலைந்தேனோ அந்த தவறு சரிசெய்யப்படவே இல்லை என்னுடைய கணினியில், என்பதுதான் முக்கியமான செய்தி



இதற்காகத்தான் மேலை நாடுகளில் Use And Throw என்னும் உத்தியைக் கடைப்பிடிக்கிறார்களோ என்று தோன்றியது

இந்தக் கலாச்சாரம் மேல் நாட்டுக் கலாச்சாரம் என்று நாம் நினைக்கிறோம் இல்லை நம் நாட்டுக் கலாச்சாரம்தான்,

இந்த Use And Throw உத்தியை நாமும் கடைப்பிடிக்கிறோம் நம்மைப் பெற்றவர்களிடம்,

அவர்களை உபயோகித்து நாம் முன்னுக்கு வந்த்தும் அவர்களை வெளியே துரத்தி விடுகிறோம்



ஆனால் இந்த Use And Throw உத்தியை நாம் வாங்கி உபயோகிக்கும்

மின்சாதனப் பொருட்களிடம் உபயோகிப்பதில்லை நாம்

பணம் பணம் பணம் அதுதானே காரணம்



அன்புடன்’

தமிழ்த்தேனீ











Wednesday, December 9, 2009

ஆசை மச்சான் சிறு கதை

அன்புள்ள  நண்பர்களே   ஆசை மச்சான் என்னும் சிறுகதை  யூத்புல் விகடனில் வெளியாகி இருக்கிறது  படித்துப் பாருங்கள்
கீழ்க்கண்ட  சுட்டியை சொடுக்கினால் படிக்கலாம்
http://youthful.vikatan.com/youth/Nyouth/tamilthenistory08122009.asp

அன்புடன்
தமிழ்த்தேனீ



Tuesday, December 8, 2009

http://youthful.vikatan.com/youth/Nyouth/thamiltheni2511.asp

அன்புள்ள நண்பர்களே  யூத்புல் விகடனில் வெளியான 
அஸ்தி (ர)வாரம்  என்னும் சிறுகதையை
மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சொடுக்கினால் படிக்கலாம்
படித்து மகிழுங்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

Monday, November 30, 2009

அஸ்தி(ர)வாரக் கதை

அஸ்தி (ர)  வாரம் சிறு கதை  யூத்புல் விகடனில் வெளியாகி இருக்கிறது
படித்து மகிழுங்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ



Wednesday, November 11, 2009

இந்து மனம்

ஆவடியில் ஒரு பள்ளியில் நான் உரையாற்றப் போயிருந்தேன்

அந்தப் பள்ளி ஒரு கிரித்துவப் பள்ளி
அங்கே மேடையில் நான் அமர்ந்திருந்தேன்

என் இடப்பக்கம் ஒரு இசுலாமியப் பெரியவர் இசுலாம் வேதத்தைப் பற்றிப் பேசக் காத்திருந்தார்

என் வலப்பக்கம் ஒரு கிரித்துவ பாதிரியார் கிரித்துவ வேதத்தைப் பற்றிப் பேசக் காத்திருந்தார்

என்னை இந்து மதம் பற்றிப் பேச அழைத்திருந்தனர்

நான் மேடையில் முதலாவதாகப் பேச அழைக்கப்பட்டேன்
எண்ணிப் பாருங்கள் என் நிலையை

ஆனால் நான் கவலைப்படவில்லை

ஒலிபெருக்கியைப் பிடித்தேன்

எதிரே இருந்த ஒரு ஆசிரியையிடம்

சகோதரி உங்கள் சாலையில் ஒரு பெரியவர் உங்கள் கண்முன்னே கீழே விழுந்து விடுகிறார்
நீங்கள் பதறிப் போய் உங்கள் வீட்டுக்காரரை உதவிக்கு அழைக்கிறீர்கள்
அவரிடம் என்ன சொல்லுவீர்கள் என்று கேட்டேன்

அந்த ஆசிரியை கூறினார்
ஒரு பெரியவர் கீழே விழுந்து விட்டார் அவருக்கு உதவி செய்வோம் ஓடி வாருங்கள் என்று அழைப்பேன் என்று கூறினார்

அந்த ஆசிரியை ஒரு பெரியவர் என்று கூறினார்களே தவிற
ஒரு இசுலாமியப் பெரியவர்,அல்லது ஒரு இந்துப் பெரியவர், அல்லது ஒரு கிரித்துவப் பெரியவர்
கீழே விழுந்து விட்டார் என்று கூறவில்லையே
பொதுவாக ஒரு பெரியவர் கீழே விழுந்து விட்டார் என்றுதானே கூறினார்கள்
என்று குறிப்பிட்டுவிட்டு என்னுடைய உரையை ஆரம்பித்தேன்

என் முதல் வார்த்தையே என்ன தெரியுமா...?

இந்து மதத்தைப் பற்றியோ
இசுலாமிய மதத்தைப் பற்றியோ

கிரித்துவ மதத்தைப் பற்றியோ
மற்ற எந்த மதத்தைப் பற்றியும் நான் பேசப்போவதில்லை

இந்து மனத்தைப் பற்றிப் பேசப் போகிறேன் என்றேன்
நாமெல்லோரும் இந்தியர்கள் ,நமக்குள் பேதமில்லை
ஆகவே மதத்தைப் பற்றியோ, தனிதனியாக வேதங்களைப் பற்றியோ
விவாதம் தேவையில்லை, எது உயர்ந்தது என்பதில் கருத்து வேறுபாடுகள் வேண்டாம்
அவரவர் தாய் அவரவர்க்கு உயர்வு,இங்கே யாரும் தாழ்வில்லை, யாரும் உயர்வில்லை,எல்லோரும்  சமமே,
ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய மதம் , வேதம் என்

பதெல்லாம் போய்ச்சேரும் இடத்துக்கு உண்டான   வாகனம்தான்,

அவரவர் வாகனம் அவரவர்க்கு உயர்வு
வாகனம்தான் வேறு வேறு, போய்ச்சேரும் இடம் ஒன்றுதான்

ஆகவே இந்து மனம் பற்றி யோசிப்போம், இந்து மனம் பற்றி பேசுவோம்
நாம் அனைவருமே இந்தியர்கள் என்று பெருமிதம் கொள்வோம்

வந்தே மாதரம் என்று கூறிவிட்டு உட்கார்ந்தேன்

இசுலாமியப் பெரியவரும் , கிரித்துவப் பெரியவரும் என் பேச்சை ஆமோதித்து   என்னைக் கட்டிக்கொண்டு  ஆனந்தக் கண்ணீர் சொறிந்து
 இந்தப் பொது மனம் இனி இந்தியர்கள் அனைவருக்கும் வரப் பாடுபடுவோம் என்றனர்

நாங்கள் மூவரும் ஒன்றாக உணவருந்திப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம்

வந்தே மாதரம்

அன்புடன்

தமிழ்த்தேனீ

Monday, November 2, 2009

புவி வெப்பமயமாவதைத் தடுக்க

தமிழ் வணிகம்காம்

என்னும் இதழில் வெளிவந்த  கட்டுரை

http://www.tamilvanigam.com/index.php/kt/811-2009-11-02-03-41-01.html

.  .