திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, July 24, 2008

பழமொழிகள் ஆய்வு எண் 11

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை


குற்றம் பார்க்க வேண்டும் ,குறை கண்டு பிடிக்க வேண்டும்
என்று நினைத்துவிட்டால்
நாராயணன் முதல்,ஏசு முதல் ,அல்லா வரையில்
காந்தி முதல் கண்ணதாசன் வரை,
மதங்கள் முதல் மனங்கள் வரை
அன்னை முதல் தந்தை வரை
குற்றம் கண்டு பிடித்துக் கொண்டே இருக்கலாம்
குறை சொல்லிக் கொண்டே இருக்கலாம்

ஒரு பெரிய வெள்ளைத்தாளில் ஒரு கருப்புப் புள்ளி
போன்றது குற்றம் ,குறைகள், எல்லாம்
அவைதான் முதலில் கண்ணுக்குத் தெரியும்,
அந்த மனோ நிலைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்
என்பதற்காக ஏற்படுத்தப் பட்ட பழமொழி இது என்று
தோன்றுகிறது

அது போன்ற தேவையில்லாத ,சற்றும் நன்மை பயக்காத
மனோ நிலைகளை சற்றே களைந்து நல்லதைப் பார்க்க
மனத்தை பழக்கிவிட்டால் நன்மை பயக்கும்
தரும புத்திரருக்கு கெட்டவர்களே கண்ணில்
படவில்லையாம்
துரியோதனனுக்கு நல்லவர்களே கண்ணில்
படவில்லையாம்
எல்லாவற்றிர்க்கும் மனோ நிலையே காரணம்
உலகில் ஒரு நல்லது இல்லாமல் கெட்டது
இல்லை,ஒரு கெட்டது இல்லாமல் நல்லது இல்லை
ஒரு முறை ஆதி சங்கரர் ஆழ்ந்த தியானத்தில்
இருந்து கண் விழித்தார்,
அங்கு ஒரு பல்லி ( Lichard ) தலை கீழாக விழுந்து
நிமிர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது
அதன்மேல் பரிதாபப்பட்டு அதை நிமிர்த்திவிட்டு
மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் ஆதி சங்கரர்,
மீண்டும் அவர் தியானம் கலைந்து பார்க்கையில்
அதே பல்லி புழு பூச்சிகளை பிடித்து உண்டு
கொண்டிருப்பதைப் பார்த்து தெளிந்தாராம்
உலகில் ஒருவருக்கு செய்யும் பரோபகாரம்
அடுத்தவருக்கு செய்யும் தீமையாகவும் இருக்கலாம்
ஆக கெடுதல் இல்லாமல் நல்லது இல்லை
நல்லது இல்லாமல் கெடுதல் இல்லை,
இரண்டும் கலந்ததே வாழக்கை,
அறியாமல் தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள்
அறிந்து கொண்டே தவறு செய்பவர்களும் இருக்கிறார்கள்
தவறே செய்யாத மனிதர்களைக் காட்ட முடியுமா..?
முடியாது ....?
இயற்கையான காற்று வேகமாக அடிக்கும் போது
பல கட்டிடங்கள் வீழலாம்,அதே சமையம் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த கப்பலை கரை சேர்க்கவும் செய்யலாம்

மழை அதிகமாகப் பெய்யும் போது பல இடங்களில்
வெள்ளத்தினால் பலர் அடித்துச் செல்லப்படலாம்,
பல இடங்களில் பயிர்கள் செழித்து வளரவும் கூடும்
ஒரு இடத்தில் அதிக வெய்யிலாக கருதப்படுவது
மற்றொரு இடத்தில் குளிர்போக்கப் பயன்படலாம்
ஒரு இடத்தில் பற்றி எரியும் தீ பலவற்றை அழிக்கலாம்
அதேபோல் அடுப்பில் எரியும் தீ பசியைப் போக்கலாம்
அதனால் ஒரு இடத்தில் குற்றம் என்று கருதப்படும்
சில விஷயங்கள் சில இடத்தில் குற்றமாக
கருதப் படாமல் இருக்கக்கூடும்,
கண்ணதாசன் எழுதாத பாடல்களா,
தொடாத இலக்கியங்களா


அப்படிப்பட்டவர் ஒரு பாடலில்
"உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி "
கலகத்தில் பிறப்பதுதான் நீதீ
கலங்காதே மதி மயங்காதே”

என்று எழுதி இருக்கிறார்
என்ன பொருளென்று பார்ப்போம்
உலகத்தில் இருக்கும் ஜீவ ராசிகளில்
பாதிப் பேர் திருடர்கள்
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
அதாவது உலகத்தில் இருக்கும் ஜீவராசிகளில்
மீதி இருக்கும் பாதிப்பேர் ஊமைகள் குருடர்கள்,
என்றும் பொருள் கொள்ளலாம்,
அல்லது திருடர்களில் பாதிப் பேர் ஊமைகள்
குருடர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்
ஆனால் அவர் எவ்வாறு பொருள் வரும்படி
எழுதி இருக்கிறார் என்று பார்த்தால்
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
என்றால் ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும்
திருட்டுத்தனம் பாதியும் நல்லகுணம் மீதியும்
இருக்கும் என்று சொல்லுகிறார்

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை
நான் என்று வைர முத்து எழுதியதைப் போல
திருடனும் நல்லவனும் கலந்தே மனிதன் இருக்கிறான்
என்று சொல்லுமாப் போல் எழுதி உள்ளார்
என்று நினைக்கிறேன்
மனிதர்களி ன் மனதில் இருக்கும் திருட்டுத் தனங்கள்,
பாதி , மீதி நல்ல எண்ணங்கள்
பேச வேண்டிய விஷயத்தில், பேச வேண்டிய நேரத்தில்
பேசி உண்மையை சொல்லாமல் சிலர் ஊமைகளாகவும் ,நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில்
தக்க நடவடிக்கை எடுக்காமல் ,கண்டும் காணாதது போல
குருடர்களாகவும் மனிதர்கள் இருக்கிறார்கள்

எத்தைகைய துன்பம் வரினும் உண்மையைத் தவிற மற்றதை பேசேன்... என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு
மற்றவர்களுக்கு துன்பம் வருமென்றால்
அதைக் களையும் நோக்கில் அங்கு என்
குரல் உரத்து ஒலிக்கும் என்னும் மனோ உறுதியுடன்
செயல்படும் நல்ல குணம் பாதி
இப்படிக் கலவையான மனிதர்கள்
இருக்கிறார்கள், அது மட்டுமல்ல ஒவ்வொரு மனிதருக்குள்ளும்
இரண்டும் கலந்தே இருக்கிறது என்று பொருள் படும்படி எழுதி இருக்கலாம் ........
என்று சுட்டிக் காட்டவே அப்படி எழுதினார் என்று
நாம் பொருள் கொள்ளலாம்.....

குருடு என்பது அறிவிலா...?
ஊமை என்பது நியாயத்திலா..?
செவிடு என்பது நல்லவற்றைக் கேளாமை என்பதிலா
ஆக மொத்தம் உடல் ஊனங்களை விட மன ஊனங்கள்
கெடுதி பயக்கும் என்பதை நாம் புறிந்து கொள்ளலாம்
யாரிடத்தில் குற்றமில்லை...?
புத்தன் செய்தது சரியா ...இன்னும் விவாதங்கள் தொடர்கின்றன
தன்னை நம்பி வந்த பெண்ணை நிர்க்கதியாக விட்டு விட்டு
வேறு மார்கத்துக்குப் போனது சரியா என்று...?

கண்ணன் செய்தது அத்தனையும் சரியா ...?
நோக்கம் வேண்டுமானால் தர்மத்தை நிலை நாட்ட
என்று இருக்கலாம், ஆனால் அவன் செய்த காரியங்கள்
100க்கு 99 சரியானதல்ல என்று விவாதிக்கிறார்கள்
மஹா பாரதம் படித்தால் தெரியும்...?

ராமன் செய்தது சரியா மக்களே பேசுகிறார்கள்
கட்டிய மனைவியை யாரோ சொன்னதற்காக
தீக்குளிக்க வைத்தான் என்று....

யேசு ஏற்படுத்திய கிறிஸ்தவ மதத்துக்கும்
பௌத்தத்துக்கும் சர்ச்சை இருந்து கொண்டே இருக்கிறது
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டினால்
விளைவு எப்படி இருக்கும் என்பதை நாம் அறியோமா...?
என்றெல்லாம் விவாதிக்கின்றார்


அல்லாவைப் பற்றி நினைத்தால்
“முகம்மதுவின் எதிரிகளோடு நடந்த போரில் அப்துல் முத்தலிபின் உடல் சிதிலப்படுத்தப்பட்டது. ஹம்சாவின் இறந்த உடலை இழிவு படுத்தியதற்காக எழுபது எதிரிகளின் உடலை அவ்வாறு சித்திரவதை செய்வதாக சூளுரைத்தான் முகம்மது. பிறகு ஏதோ தோன்றி, ஒரே ஒரு சடலத்தை அவ்வாறு சிதிலப்படுத்தினால் போதும் என்று சொல்லிக்கொண்டான்.
அப்படி சொல்லிக்கொண்டதுதான் மேற்கண்ட வரி.
“ அதனை அல்லா சொன்னார் “என்று சொல்லி
அது குரானில் இருக்கிறது. என்கிறார்கள்
இதன் படி முஸ்லீம்கள் இறந்த எதிரிகளை,
அவர்கள் இஸ்லாமிய கும்பலில் இல்லாமல் இருந்தால்
அந்த உடல்களை இழிவு செய்ய அனுமதி கிடைக்கிறது.
இந்த விஷயமும் விவாதத்தில் இருக்கிறது

ஆக யார் குற்றமில்லாதவர் .... யாருமில்லை
ஆகவே குற்றங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாலே
குணங்கள் மறைந்து விடும், குணங்கள் மறைந்து விட்டாலே
உறவுகள் குறைந்து விடும்
அதற்காகத்தான் சொன்னார்கள் பெரியவர்கள்
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று


அன்புடன்
தமிழ்த்தேனீ

No comments: