திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Friday, October 26, 2007

யூனிகோட் இணையக் கவிதைகள்

1. " கவிதை உறவு "

உடன்பாடு இல்லாமல் திணிப்பது
என் உணர்வுக்கு ஒத்து வராது
தினந்தோறும் அனுபவிக்கும் எல்லாமே
தினமும் ஒரு கவிதை தானே
தினம் ஒரு கவிதை படைக்கும்
நிர்பந்தம் எனக்கில்லை .... வலுக்கட்டாயமாக
என் மனத்தினுள்ளும் எதையும்
நான் திணிப்பதும் இல்லை, மற்றவரை
அனுமதிப்பதும் இல்லை வலுக்கட்டாயத்
திணிப்பில் எனக்கு சம்மதமும் இல்லை
கற்பனை சிறகடித்தாலும் கவிதையில்
வார்த்தைகளை திணிப்பதில்ல நான்
ஒரு கவிதை அனுபவித்துப் படிக்கிறேன்,
ஆஹா அருமையான கவிதை
படைத்தவரைப் பாராட்ட மனம் துடிக்கிறது...
ஆமாம் நானும் ஏன் கவிதை எழுதக் கூடாது....?

தமிழ்த்தேனீ

2 ." நிழல் துரத்தும் நிஜங்கள் “
பூக்கடையில் கால் வைத்தேன்
சாக்கடை வாசம்
சாக்கடை ஓரம் பூக்கடை உபயத்தால்
சாக்கடை மீறிய பூக்கடை வாசம்
சுயநலம் ஒரு நாறும் மலம்
நாற்றமென்றால் மணம்
மணம் என்றால் நாற்றமாம் ?
நல் நாற்றமா..? துர் நாற்றமா..?
நாரோடு கூடிய பூக்களும் மாலையாகும்,
இறையின் தோளுக்கு சேலையாகும்
பொதுநலத்தோடு கூடினால்
மனிதற்க்கு விடிவுகாலம்


ஒவ்வொரு ஜனனமும் மலம் தானே
தன் மலத்தை தானே அள்ளும்- த்யாகம்
என்றால் அது தாய்மை ஒன்றுதானே
தன்னலமில்லாத தாய்மைக்கு மட்டும்
தானது கிட்டுமென்றால் நாமும்
ஏன் விடக்கூடாது தன்னலத்தை…?

மலம் உண்ணும் பன்றியதை.
குளிர்சாதன அறையில் வைத்து
பக்குவமாய் பரிந்தூட்டி
கொழுக்க வைத்து தாமுண்ணும்
சாகசங்கள் புறிகின்ற மானுடரே

நமக்காய் வேண்டுமென்றால்
வராக அவதாரமென்போம்
தானெடுத்த வாந்தியை தானே உண்ணுகின்ற
நாயினையும் பைரவர் என்போம்
பரிமேலமர்ந்து பயணிக்கும் மனிதர்
பக்தி வந்தால் ஹயக்ரீவரென்பார்
வளைஎலி, கடும் புலி,கொடுஞ் சிங்கம்,
அத்தனையும் கடவுள்களின் வாகனமென்போம்
கடலிலே வாழுகின்ற கொழுத்த
கொழுமீன் கொடு மீனை நாமுண்போம்
வலை போட்டு வளைத்தெடுத்து
வற்றவைத்து பொறிய வைத்து
வகை வகையாய் நாமுண்போம்
மச்சாவதாரமும் அது தானென்போம்,
மனிதரையே குரங்குகளின்
மாறு கால வளர்ச்சியென்போம்
பால் கொடுக்கும் பசுவினையும்
கொடுக்கும் வரை லக்ஷ்மியென்போம்
குலம் காக்க வந்த கோமாதா
குலமாதா வென்போம் பால்மடி
வற்றிப் போனால் அடிமாடென்போம்

நடப்பன ,ஊர்வன ,பறப்பன
அத்தனையும் நாமுண்போம்
நம்பிக்கை எனும் விதையை
நயமாய் நாம் தூவி நாடகமாய்
தெய்வமென்போம், வாகனமென்போம்

இனி இல்லை உபயோகம் என்றுணர்ந்தால்
அன்னையென்ன ,தந்தையென்ன,அண்ணனென்ன
தம்பியென்ன, மனைவியென்ன,கணவனென்ன
மக்களென்ன ,பாசமென்ன ,நேசமென்ன
அன்பு என்ன பண்பு என்ன
அத்தனையும் பட்டுப் போகும்
அடிமாடாய் ஆகிப் போகும்

தமிழ்த்தேனீ

3. " உரிமை "

பகலில் ஒரு நிலவு இரவில் ஒரு சூரியன்
இரண்டும் இணைந்தாற்போல்ஒரு
ப்ரகாசமான பேரழகுஅழகு கண்டு
மோகித்துஅருகில் வரலாமென்ரால்
சுடுகிறாய் சூரியனைப் போல
சுடுகிறதே என்று விலகினால்
குளிர் நிலவாய் அழைக்கிறாய்
புரிந்து கொள்ள முடியவில்லை
என்னால்அன்பிலே நிலவு ,
உரிமையில்லாமல் உறவாட நினைத்தால்
சூரியன்என்று ஒரு பதில் வேறு
சொல்கிறாய்ஏதோ புறிவது போல்
இருக்கிறதுஎன்ன செய்வது ஆமாம்
சாத்திரத்தில் நிலவும் சூரியனும்
இணைந்தால்அமாவாசை என்கிறார்களே
நிலவில்லா வானம் என்கிறார்களே
நீ யாரென்று சொல்ல மாட்டாயா
உன்னிடம் உரிமை எப்படி பெருவது..?
ரகசியம் சொல்லித் தர மாட்டாயா
ஏக்கத்துடன் நான்.............

4. " இயற்கை "

ஒன்பது வழிகள் வைத்தான்
உடல்விட்டு உயிர் போக‌

ஒரு வழியும் வைக்கவில்லை
உயிர் வந்து உடல் சேர‌

இறைவனிடம் நான் கேட்டேன்
இது என்ன ஓர வஞ்ஞனை ?

அவனளித்தான் பல பதில்கள்
அத்தனையும் புரியவில்லை

ஆனாலும் ஒரு பதில்
ஓரளவு புரிந்ததெனக்கு

ரகசியமாய் முணுமுணுத்தான்
என் காதில் மட்டுமதை

இயற்கையின் சாகசமே
அதிலிடங்கும் அதிசயமே
இயற்கையை வெற்றி கொள்ள
என்னாலும் முடியவில்லை
இயற்கைதான் கடவுள் ,
நான் கூட அதன் பிடியில்
தவிக்கிறேன் மீளாமல்
சொன்னால் நம்ப மாட்டாய்
ஒரே ஒரு முறை விதைத்தேன்
ப்ரபஞ்ஜம் வளர்ந்த்தது

பல முறை அழித்துப் பார்த்தேன்
உஹூம் ஒன்றுமே பலனில்லை
இனி இப் ப்ரபஞ்ஜம் நானே
நினைத்தாலும் அழிக்க முடியாது ,
இயற்கையை வெல்ல என்னாலும்
முடியவில்லை !!!!!!!
நீ கேட்ட கேள்விக்கு விடை
தெரியுமா உனக்கு ?
கேள்விகள் கேட்பது சுலபம்
உயிர் வந்து உடல் சேர ,
இயற்கையை வெற்றி கொள்ள‌
வழி எதேனும் இருக்கிறதா ?
என்னைக் கேட்டான் இறைவன்
என்ன ப‌தில் நான் சொல்ல‌ ?

உங்க‌ளுக்கு தெரிந்தால்
ரகசியமாய் என்னிட‌ம்
சொல்லுங்க‌ள்
அவனிடம் சொல்லுகிறேன் நான் .. .. ...!!!!!!!!

தமிழ்த்தேனீ

5. " வாய்மை "
த‌ண்ணீரில் நீந்தும் மீனின் க‌ண்ணீரும் தெரியாது
வென்னீரில் வேகும் போதும் வ‌லிக‌ளும் புரியாது
சிறு மீனின் துய‌ர‌ங்க‌ள் பெரு மீனும் அறியாது
இற‌ந்தாலும் அவை த‌ன்னைத் தானுண்ண‌த் த‌ய‌ங்காது

இய‌ற்கைதான் ஆனாலும் பெருமீனும் ஒரு நாளில்
வ‌லை மாட்டித் த‌வித்தாடும் நாமுண்ணும் உண‌வாகும்
பன்னீரில் குளித்தாலும், க‌ங்கையில் குளித்தாலும்
செய்கின்ற‌ த்ரோக‌த்தின் பாவ‌ங்க‌ள் தொலையாது

என்னென்ன‌ ப‌ரிகார‌ம் எத்த‌னைதான் செய்தாலும்
எங்கேதான் போனாலும் ஊள்ள‌த்தை விட்டு விட்டு
நினைவுக‌ள் போகாது, உயிரேதான் போனாலும்
த‌ப்பிக்க‌ முடியாது உட‌ல் விட்டுச் சென்றாலும்

உள்ள‌த்தை விட்டுச் செல்ல‌ உன்னாலும் முடியாது
பாவ‌ங்க‌ள் தொலையாம‌ல் ஆன்மாவும் அழியாது
வைக்கின்ற‌ ஒவ்வொரு அடியும் யோசித்து வையுங்க‌ள்
வ‌ருகின்ற‌ ப‌ல‌னெல்லாம் அடி தொட்டுத் தான் வ‌ருமே

ப‌ல‌னெல்லாம் ப‌ட்ட‌ பின்தான் ப‌ரிகார‌ம் தான் வ‌ருமே
த‌ப்பிக்க‌ முடியாது தள்ள‌வும் வ‌ழியேது
இத்துணைப் பேர்க‌ளையும் காக்கின்ற‌ ஒரு க‌ட‌வுள்
யோசித்து யோசித்து வழி ஒன்று கண்டிட்டான்

தன் வேலைச் சுமை தாங்க முடியாமல் ‍
‍தானாக இயங்கும் பொறி ஒன்று படைத்திட்டான்
அத்தனை உயிர்களுக்கும் அவரறியாம்ல் அவர் உடலில்
தானியங்கிக் கருவியதை தவராமல் பொருத்திட்டான்


இட்டார்க்கு இட்டபடி தப்பாக வைத்த அடி
தவரான தப்படிகள் தவராமல் கெடு பலன் தருமே
நாடாளும் மன்னர்களும் நடைபாதை வாசிகளும்
அவ‌ன் வரையில் ச‌ம‌ம் தானே அவ‌ன் ப‌டைத்த‌ உயிர்தானே

ஆயிர‌ம் தான் இருந்தாலும் த‌ர்ம‌ வ‌ழி அக‌லாமல் ந‌ட‌ந்திடுவோம்
கால‌ங்க‌ள் மாறிவிடும் ,காட்சிக‌ள் மாறிவிடும் மாறாது என்றென்றும்
த‌ர்ம‌த்தின் வ‌ழிதானே,நாம் க‌ர்வ‌ங்க‌ள் கொண்டாலும்
க‌டைசியிலேவெல்வ‌து வாய்மையின் வ‌ழிதானே

தமிழ்த்தேனீ
6. " ஏன் இப்படி "

திருமணம் ஆன புதிது, இணை பிரியாத மனது
உன் பெயர் சொல்லி என் அம்மா அழைத்தவுடன்
ஒன்றுமே நடவாதது போல்அனைத்தையும்
சரி செய்து கொண்டுகுரலில் ஒரு எளிமையை
வரவழைத்துக் கொண்டு இதோ வந்துவிட்டேன்
அம்மா என்று வெகு இயல்பாக அம்மாவிடம்
சென்று ,கூப்பிடீர்களா அம்மா ? .......சரியான கள்ளி நீ
எத்தனை முக்கியமாய் இருந்தாலும்
ஒன்றுமில்லை நீ அவனைக் கவனி
என்று உன்னை மீண்டும் அறைக்கு
அனுப்பிவிட்டுமுகத்தில் புன்னகையோடு
தன் காரியத்தை தொடர்வாள் என் அம்மா,
நம் வயதைத் தாண்டித்தானே வந்திருக்கிறாள்
நம் அம்மாவும், அவளுக்குத் தெரியாததா..?
அம்மா எத்தனை அனுபசாலி,
அன்பான அம்மாகொடுத்து வைத்தவர்கள்
நாம் என்று நீ விமர்சிக்கும் போது கூட
அதைவிட முக்கியமாய் உன் அருகாமை
என்னை மூழ்கடித்தது மோகம்
திருமணம் ஆன புதிது
இணை பிரியாத மனது
மருமகளாய் நினைக்காமல் தன் மகளாய்
அம்மா உன்னை நடத்துகையில்
நானே அம்மாவுக்குஅன்னியப் பட்டுப் போனேன்,
சில நேரங்களில்என்னையே பொறாமைப் பட
வைத்தது உங்கள் அன்னியோன்னியம்
கண்களில் காதலைத் தேக்கி சீக்கிரம்
வந்துவிடுங்கள் என்கிற அழைப்பையும்
அதில்தேக்கி புன்சிரிப்போடு நீ கை அசைக்கையில்
பணிக்கு செல்லக் கூட மனம் வருவது இல்லை
மனமில்லாமல் பணிக்குச் சென்றாலும்
அத்தனை பக்கங்களிலும் உன் முகம்
எப்படி வேலை செய்வேன் நான்
அறை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு
அம்மாவிடம் என்ன காரணம் சொல்லுவது
என்று யோசித்துக் கொண்டே வீடு வந்தவுடன் ,
என்னடா கண்ணா தலை வலியா என்று
அம்மா கேட்டவுடன்--,ஆ...ஆமாம் தலை வலி
என்று சமாளித்தேன், நமட்டுச் சிரிப்புடன் நீ!!!
ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல்
பரிசு வாங்கிய நான்,உள்ளுக்குளே மனசாட்சி உறுத்தல்,
திருமணம் ஆன புதிது, இணை பிரியாத மனது
நாட்டு மருந்துக் கடையில் வாங்கி வைத்திருந்த
சுக்கை எடுத்து கல்லில் உரசிபத்து போட்டாள் அம்மா,
ஒரு நல்ல காபி கொடுத்தனுப்பினாள்
உன்னிடம் என்னையே பார்த்துக் கொண்டிருந்த
அம்மா கண்ணா அவளயும் அழைத்துக்
கொண்டு எங்காவது வெளியே போய்விட்டு வா
எல்லாம் சரியாகி விடும் கவனமாகப் போய்விட்டு
வாருங்கள்என்று அம்மா சொன்னவுடன்
சரிம்மா என்று அப்பாவியாய் முகம் காட்டி
இருவரும் புறப்பட்டோம் வெளியே
திருமணம் ஆன புதிது, இணை பிரியாத மனது
அம்மா எத்தனை அனுபசாலி,
அன்பான அம்மாகொடுத்து வைத்தவர்கள் நாம்
என்று நீ விமர்சிக்கும் போது
கூட அதைவிட முக்கியமாய் உன் அருகாமை
என்னை மூழ்கடித்தது மோகத்தில்
திருமணம் ஆன புதிது இணை பிரியாத மனது
சிலு சிலுவென்ற காத்து மீண்டும் மீண்டும்
வந்து போகும் கடலலைகடலை விற்பவன்
தொந்தரவு இத்தனையும் நம்மை எதுவுமே
செய்ய முடியாமல் கனவுலகில் நாம்
வாசலில் ஒரு அழைப்பு மணீ
ஒரு நல்ல தூக்கம் கலைந்த எரிச்சலில்
யாரது என்று கேட்டுக் கொண்டேவாசற்கதவைத்
திறந்தேன்என் பேரு கல்யாணம்
இவ என் பொண்ணுநேத்து கோயிலில்
எங்களை பார்த்து அம்மா இன்னிக்கு
வரச்சொன்னாங்க என்றார் உன் அப்பா
கண்ணா அவங்களை வலது காலெடுத்துவைத்து
உள்ளே வரச் சொல்லு என்றாள்என் அம்மா...!!!!
உனக்குத் தெரியுமா !!!!!அம்மாவுக்கும் தெரியுமா ,!!!!
என் கனவுக் கன்னி நீதானென்று!!!!.?
நம் வயதைத் தாண்டித்தானே வந்திருக்கிறாள்
என் அம்மாவும், அவளுக்குத் தெரியாததா..?
தமிழ்த்தேனீ
7. " நிழலின் வெளிச்சம் '
ஒரு பெரிய நிறுவனம் பெரிய மூலதனம்
முதலாய்ப் போட்டு திரைப்படமெடுக்க
திட்டமிட்டு என்னை அழைத்து
ஒப்பந்தம் செய்தது ஒரு நடிகராகப்
பங்கு கொள்ள- நானும் இசைந்தேன்
நடித்துக் கொடுக்க ,என் தொழிலல்லவா அது
ஒப்பனையாளர் என்னை உரு மாற்றினார்
ஆடைகள் கொடுப்பவர் மேலும் பொருத்தினார்
என்னை அந்தப் பாத்திரத்துக்கு ஏற்றவனாக
உணவு உபசரிப்பாளர்கள் ஆதரவாய்
உணவு கொடுத்தனர்
உதவி இயக்குனர் என் பாத்திரத் தன்மையை
மேலும் கூட்டினார் எளிதாக பொறுமையுடன்
இயக்குனர் சொன்ன இடத்தில் நின்றேன்
சொல்லிக் கொடுத்தபடி பேசி, நடித்தேன்
தளப் பொறுப்பாளர் காட்சி ஜோடனைக்
கற்பனைத் தூரிகை கைவண்ணம் காட்டினார்
புகைப் பட நிபுணர் என்னை மேலும்
திறமை சாலியாக காண்பித்தார்
எழுத்தாளர் என் கதா பாத்திரத்துக்கு
ஏற்ற வசனங்களை இயல்பாக எழுதினார்
ஒரு பெருங் கவிஞ்ஞர் பாடலெழுதினார்
பல குரல் வளம் பாடியது ,நான் வாயசைத்தேன்
பல பொறியாளர்கள் பாடு பட்டனர்
திரைப் படம் வெற்றி பெற

அடடா என்னை சுற்றி எத்தனை பேர்
முத்தான வியர்வை கொட்ட உழைக்கிறார்கள்
அவர்கள் வெளியே தெரிவதே இல்லை
அத்தனை பேரும்-புகைப் படக் கருவிக்குப்
பின்னால்என் வெளிச்சத்தின் பின்னே
இத்தனைஇருட்டுக்களா, த்யாகங்களா
நான் மட்டும் மக்கள் மனதில்,விளம்பர
தட்டிகளில்,பத்திரிகைகளில்
தொலைக் காட்சிகளில் ,மக்கள் மனதில் ,
வீடுகளில் , அனுமதி இல்லாமல் நுழைந்த
வலுக் கட்டாய சூரியன் நான்
ப்ரகாசிக்காத எத்தனயோ நக்ஷத்திரங்கள்
என் பின்னால்,தங்கள் த்யாகங்கள் புரியாமல்
என் ப்ரகாசத்தின் பின்னே இத்தனைஇருட்டுக்களா ?

தமிழ்த்தேனீ

8. "வான வேடிக்கை "

தேவ லோகத்திலிருந்து தேவர்கள்
வேடிக்கை பார்க்க பூலோகம் வந்தனர்
பூமியிலே
பாலத்திலிருந்து ஒரு வாகனம்
ஆற்றில் விழுந்தது
கபடமறியா சிறுமியை ஏமாற்றி
கற்பழித்தனர் நால்வர்

குடிசைக‌ள் ப‌ற்றி எறிகின்ற‌ன‌,
வெள்ள‌த்தில் ப‌ல‌பேர் அடித்துச் செல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்
வித்தைக் கூடம் பணப் பற்றாக் குறையால்
மூடப் பட்டது
வேடிக்கை காட்டிப் பிழைக்கும் கோமாளி
பசியால் சுருண்டு கிடக்கிறான்
ஆளில்லா போக்குவரத்தில் அலட்சியத்தால்
பேருந்தும் புகை வண்டியும் மோதிக் கொண்டன‌

மக்கள் வேடிக்கை பார்த்தனர்
துவிச் சக்கர விசை வாக‌ன‌த்திலிருந்து
தூக்கி எறியப்பட்டான் ஒருவன்
முதலுதவி தேவை அவனுக்கு
செய்தால் பிழைத்துக் கொள்ளுவான்
குருதி ஆறாய்ப் பெருகியது
மக்கள் வேடிக்கை பார்த்தனர்

தேவ‌ர்க‌ள் ம‌ன‌ம் ப‌தைத்த‌ன‌ர்
தேவ‌ர்க‌ளில் ஒருவ‌ன் விப‌த்துக் குள்ளான‌வ‌னை
ம‌டியிலே கிட‌த்தி முத‌ல் உத‌வி செய்தான்
காவ‌ல் கார‌ர்க‌ள் வ‌ந்த‌ன‌ர் உத‌வி
செய்த‌தேவ‌னை காவ‌ல் நிலைய‌த்துக்கு
வ‌ந்து புகார் எழுதிக் கொடுத்துவிட்டுப்
போக‌ச் சொல்லி காவ‌ல் நிலைய‌த்துக்கு
அழைத்துப் போனார்க‌ள்
வெகு நேரமாகியும் புகார் கொடுக்கப் போன
தேவன் திரும்பி வரவில்லை
தேவ‌ர்க‌ள் தேடிப் பார்த்துவிட்டு
காணாம‌ல் ம‌ன‌ம் ப‌தைத்த‌ன‌ர்

காவ‌ல் நிலைய‌த்தில் புகார் ப‌திவு செய்த‌ன‌ர்
காவ‌ல் நிலைய‌த்துக்கு சென்ற‌அந்த‌
தேவ‌ன் இது வ‌ரை திரும்ப‌வில்ல‌யாம்
யாராவ‌து வேடிக்கை பார்க்கும் போது
அவ‌னைப் பார்த்தால்
விவ‌ர‌ம் சொல்ல‌வும்
த‌குந்த‌ச‌ன்மான‌ம் கிடைக்கும்
தேவ‌ர்க‌ள் காத்திருக்கிறார்க‌ள் ம‌க்க‌ள்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்க‌ள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

9... " மீண்டும் சுதந்திரம் "
பழைய ஞாபகம் மனதிலே
பாரதத் தேசக் கொடி கையிலே
வீர முழக்கம் வாயிலே
விடுதலை வேட்கை நெஞ்ஜிலே
வாருங்கள் மறியல் செய்து
மனம் மகிழ்ந்திட வாருங்கள்
வந்தே மாதரம்,
வீசட்டும் விடுதலை காற்றின்
சுதந்திர வாசம்
வீழட்டும் அன்னியர் மோசம்
மலரட்டும் விடுதலை தேசம்

கதிரவனின் கதிர் இயக்கம் தாக்கும்
ஆனாலும் இந்தியனின் கதர் இயக்கம் வீசும்
வரண்ட நாக்கு, வரளாத தேசப் பற்று
சுதந்திர வேள்வி, சுதந்திரமே கேள்வி
ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை அவன் கூட
பொதுச் சொத்தாய் மாறிப் போனான்
பாரதத் தாயின் அடிமைத் தளை தெறிக்க

அன்னையை பாதிக்கும் அன்னியர் ஆதிக்கம்
தாய் திரு நாட்டின் பொறுமையை சோதிக்கும்
அத்தனை விலங்கினையும் அடியோடு
பெயர்த்தழிக்க உடல் ,பொருள் ,ஆவி
அத்தனையும் போனாலும் சரியென்று
பாச மழை பொழிந்து தேச விடுதலைக்கு
நேசசமாய் ,வீரமாய்,த்யாகமாய்
தம் மக்களை அனுப்பிவைத்த தாய்மார்கள்
இப்போதெங்கு போனார்கள்
தன்னுயிர் நீத்தும் தாய் நாடு
காப்பேன் சூளுரைத்த வாலிபர்கள்
இப்போதெங்கு போனார்கள்
தாய் நாட்டுக் காதல் அப்போது
எங்கே போனது இப்போது.. ?
அன்று அன்னியர்தாம் ஆண்டுவந்தார்
அடிமைகளாய் நாம் மாண்டு வந்தோம்
இன்று நம்மவரே நம்மை ஆளுகின்றார்
அடிமைகளாய் நாம் மாளுகிறோம்
சுதந்திரம் கிடைத்ததே இப்போது
பழைய ஞாபகமாய்

அப்போது மீண்டோம் அன்னியரிடமிருந்து
எப்போது மீள்வோம் நம்மவரிடமிருந்து
ஹூம்ம்ம்... பெற்றே ஆக வேண்டும்
மீண்டும் சுதந்திரம்10. நல் விதை

புறம் பற்றி ஒரு நூறு கவிதை
அகம் பற்றி ஒரு நூறு கவிதை
எதைப் பற்றியும் எழுதவும் வேண்டும் ......விதை
தாருங்கள் ஒரு நல் விதை
ஏருழுது களையெடுத்து, தமிழ் நீர் பாய்ச்சி
நல்விதை ஒன்று மன வயலில் போட்டால்
கவிதை தானாய் வரும் ,கவிதை யது தேனாய்
வரும் ,துள்ளும் மானாய் வரும்
தமிழ்ப் பற்றினால் தமிழ்ப்பற்று
பற்றிக் கொள்ளும் தகைசார்ந்த
தமிழ்ப் பண்பு அது ,நம் மனது ,
பற்றியது மிகச் சரியாகப்
பற்றினால் விளையும் கொள்முதலே
அனைத்துக்கும் விதை , அதுவே தமிழ் விதை

உள்ளதையும் உள்ளத்தையும்
இல் அதையும், இல்லாததையும்
சொல் அதையும் சொல்லாததையும்
கற்றதையும் ,கல்லாததையும்
சொன்னதையும் சொல்லாததையும்
எழுத முனைந்திட்டால் ,தமிழை நினைந்திட்டால்
கவிதை புனைந்திட்டால் ,புறம் நான் நூறு ,
அகம் நான் நூறு அத்தனையும் சொன்னாலும்
புற நானூறுக்கும் அக நானூறுக்கும்..?
தமிழுக்கும் ஈடாகுமா வேறு .. .. ..?

அன்புடன்
தமிழ்த்தேனீ

11. அணைக்கட்டு
அணைக்கட்டு மூளை அணைக் கட்டில் முழுவதுமாய்
நிரம்பி வெளியேறத்துடி துடிக்கும் கருத்து மழை
வான வெளியினிலே வலம் வரும் பேரறிவு பெய்திட்ட
பெரு மழையால்மூளை அணைக்கட்டில் முழுவதுமாய்
நிரம்பி வெளியேறத் துடி துடிக்கும் கருத்து மழை
இன்னுமோர் சொட்டு வீழ்ந்தாலு... ம்உடைத்துக்
கொள்ளும் பக்க சுவர்வெடித்து சிதறும்
கனம் மிக்கபக்க சுவர் மடை திறக்க
வழியில்லைஏற்கெனவே பெய்த மழைவெள்ளம்
நிரம்பிய ஊர்வெளியேற்றியே ஆகவேண்டிய
அபாய நிலை அணைக் கட்டில்
தானமளிக்க தயார் நானென்றாலும் தாங்குதற்கு
தகுதியான தருமிகளை தானம் வாங்தற்கு தகுதியான
தமிழ் விரும்பிகளை தேடித் தேடி அலைகின்றேன்
சீக்கிரம் வாருங்கள் அணைக்கட்டு
அடி அளவு கோல் காட்டுதிந்த பயங்கரத்தை
...அபாய அறிவிப்பை
அன்புடன்
தமிழ்த்தேனீ
Post a Comment