திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Friday, October 8, 2010

நவராத்திரி

 “ நவராத்திரி “

         






நவராத்திரி என்றதும் என் நினைவுகள் என்னுடைய சிறுவயதுக்காலத்துக்கு பின்னோக்கி ஓடிவிட்டன, அப்போது நாங்கள் சென்னையில் செண்ட்ரல் ரயில் நிலயம், ஒற்றைவாடை நாடக அரங்கம் போன்றவைகள் இருக்கும் வால்டாக்ஸ் சாலையும் உயர் நீதிமன்றம், கலங்கரை விளக்கம், போன்றவை இருக்கும் சைனாபஜார் என்று சொல்லப்படும் சுபாஷ் சந்திர போஸ் சாலையும் சந்திக்குமிடத்தில் 18 வெங்கட்ராயர் தெருவு, பீ ஆர் ஸ்கொயர், என்னும் பகுதியில் இருந்தோம் அந்தப் பகுதியில் நான் இருக்கும்போது எனக்கு வயது பதினொன்று

நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்தால் எங்களுக்கு ஆனந்தம் கரைபுரண்டோடும், பள்ளியில் விடுமுறைவிடுவார்கள், புது சொக்கா புது நிஜார், புது பாவாடை, புதுப் புடவை, பட்டாசுகள் இனிப்புகள் என்று ஆனந்தமாக பொழுதுகள் கழியும், ஊரே திமிலோகப்படும்,

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருவிழாபோன்று களைகட்டும், எங்கள் வீட்டில் என்னுடைய தகப்பனார் ஒன்பது படிகள் வைப்பார்,அந்த ஒன்பது படிகள் முழுவதும் விதம் விதமான பொம்மைகள் அலங்கரிக்கும்,

பரணிலிருந்து பெரிய பெரிய பெட்டிகளை இறக்கி அவைகளில் துணிகளிலும், காகித்த்திலும் பத்திரமாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளை எடுத்து கீழே அடுக்கி,மிக ஜாக்கிறதையாக அவைகளைப் பிரித்து, அந்தப் பொம்மைகளை அவற்றின் உயரம்,பருமன்,போன்ற வித்யாசங்களைக் கவனித்து, அந்தந்த பொம்மைகளை அந்தந்த தொடர்பான பொம்மைகளோடு அடுக்கி வைத்து ,அவைகளை எந்தப் படியில் வைக்கவேண்டும் என்று தீர்மானித்து, அதற்கேற்றார்ப்போல் அவைகளைப் படியில் வைத்து நேர்த்தியாக அடுக்கி வைப்பார் எங்கள் தந்தை,கூடவே என்னுடைய தாயாரும்,என்னுடைய சகோதரிகளும் உதவி புரிவார்கள்,அது ஒரு பொற்காலம்,

ஆமாம் உண்மையிலேயே அது ஒரு பொற்காலம்தான்,

மாலையானால் போதும் , சின்னஞ்சிறார்கள்,சிட்டுப் போன்ற குழந்தைகள் ராமனாகவும்,கிருஷ்ணனாகவும், சரஸ்வதியாகவும் ,மஹாலக்ஷ்மியாகவும், ஆண்டாளாகவும்,காமாக்ஷியாகவும் ,மீனாக்ஷியாகவும் வேடமிட்டு அவர்களின் வயதுக்கும் தோற்றத்துக்கும் சற்றும் பொருந்தாவிடினும் கூட, அவர்கள் கள்ளமில்லாத குழந்தை மனத்தினராய் தளுக்கி , மினுக்கி புன்னகையுடன் வலம் வருவதைப் பார்க்க முடியும், ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டமாய் வாழ்ந்த அந்நாளில் குழந்தைகள் கள்ளங்கபடமில்லாமல் குழந்தைகளாகவே இருந்தார்கள், பெண்மணிகளும் புதுப்புடவை சரசரக்க வந்து கூடத்தில் விரிக்கப்பட்டிருக்கும் விரிப்பில் அமர்ந்து, இயல்பான புன்னகையுடன் இதமான குரலில் பலவகையான பாட்டுக்களை தங்களுடைய இனிமயான குரலில் பாடுவதும், குழந்தைகளும் அவர்களுடன் சேர்ந்து கீதமிசைப்பதுமாக ஒவ்வொரு பண்டிகைகளும் களைகட்டும்,

ஒவ்வொரு வீட்டிலும் அளிக்கும் தின்பண்டங்கள், சுண்டல் போன்றவற்றை வாங்கவே கூட்டம் கூடும் சிறுவர்கள் கும்மாளமாக மகிழ்ழ்சியுடன் உலா வருவதைப் பார்க்கும் போது மனம் நிறையும்,

பெரியவர்களும் தங்களின் இயல்பான ஆர்ப்பாட்டம் ,கோவம், எல்லாவற்ரையும் மறந்து புது வேட்டி புது சொக்காய் சகிதமாக வீட்டில் உள்ள பெண்டிருக்கும் ,குழந்தைகளுக்கும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தும், மகிழ்ந்த அந்தக் காலங்கள் பொன்னானவை



அப்படிப்பட்ட பொன்னான தருணங்கள் நாட்டிலே சுபிக்ஷம் நிறைந்த அந்தப் பொன்னான காலம் , குழந்தைகளின் கபடமற்ற பொன்னான காலம்

அவையெல்லாம் திரும்பி வருமா நம் நாட்டில்?

பஞ்ச பூதங்களின்மகிமை உணர்ந்து அவைகளை இயற்கையை அரவணைத்துக்கொண்டு இதமாக பதமாக இனிமையாக வாழ்ந்த அந்தப் பொற்காலங்கள் திரும்பி வருமா? என்னும் எண்ணம் தோன்றி ஒரு பெருமூச்சு விட வைக்கிறது என்ன செய்ய?

மீண்டும் நாம் இழந்த அந்தப் ;பொற்காலத்தை மீட்டவேண்டும்,அதற்காக நம் பாரம்பரியங்களின், ,மரபுகளின் வளத்தை இனிமையை மீண்டும் தெளிவான மனநிலையுடன் மீண்டும் அனுபவிக்க மனம் துடிக்கிறது

மாறுமா மீண்டும் பொற்காலம் மலருமா என்னும் ஏக்கத்துடன் நான்

அன்புடன்

தமிழ்த்தேனீ

Tuesday, October 5, 2010

கடல் கடந்தும் கலை

அமெரிக்காவில் சியாட்டில் மாகாணத்தில் மைக்ரோசாப்ட் அலுவலகத்தில் பணிபுரியும் என் மகன் திரு கே வெங்கடநாதன் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் பல இளைஞர்கள்,யுவதிகள் ஆகியோரை இணைத்துக்கொண்டு சியாட்டில் தமிழ்ச்சங்கத்தின் வாயிலாக இண்டஸ் கிரியேஷன்ஸ் என்னும் பெயரில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தமிழ் நாடகங்களை நடத்திக்கொண்டிருக்கிறார், இதில் விசேஷமான செய்தி என்னவென்றால் இந்தக் குழுவை நடத்தும் இவர்களே நாடகம் எழுதுகிறார்கள், இயக்குகிறார்கள், நடிக்கிறார்கள், அதுகூட வியக்கத்தக்க செய்தி அல்ல, இவர்களே மேடை நிர்வாகமும் செய்கிறார்கள்,மேலும் மேடை அரங்கத்தையும் இவர்களே திட்டமிட்டு உருவாக்கி நிர்வகிக்கிறார்கள்,இசை இவர்களே அமைக்கிறார்கள், ஒலி ஒளி மற்றும் மேடை நிர்வாகம் உட்பட அனைத்து கலைகளையும் இவர்களே வடிவமைக்கிறார்கள் நேற்று கூட ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்,இந்த நாடகங்களுக்கு என்னுடைய மருமகள் திருமதி கவிதா அவர்களும் ஓவியம் வரைதல், போன்ற பல வர்ணம் பூசும் கலைகளை உருவாக்குகிறார், அரங்கில் உள்ள பல காட்சிகளில் இவரது கைவண்ணம் இருக்கிறது


கணிணிப் பொறியாளர்களான இவர்கள் தச்சு வேலை உட்பட அனைத்து வேலைகளையும் இவர்களே தங்கள் கைகளால் செய்து , மேடையில் அரங்கை நிர்மாணிக்கிறார்கள் என்பது மிகவும் பாராட்டத்தக்க செய்தி


தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மிக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள் ,கடல் கடந்தும் தமிழன் கலை மிளிர்கிறது

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பை சொடுக்கிப் பாருங்கள், இவர்களின் திறமை புரியும், வாழ்த்துவோம், பாராட்டுவோம்



http://www.youtube.com/watch?v=-4PhUFwBT0g



அன்புடன்

தமிழ்த்தேனீ





Sunday, October 3, 2010

விரஜா நதி ஓரம்

விரஜா நதி ஓரம் அந்த நதியைக் கடக்க காத்திருந்த பல பயணிகளில் ஒருவர் ராமசேஷன், அவருக்கு நினைவு வந்தது, திருமோகூர் காளமேகப் பெருமான் வந்து கையைபிடித்து அழைத்துச் செல்வாராமே, அதற்காக காத்திருந்தார், காத்திருந்த வேளையில் அவர் உடலை விட்டுவிட்டாலும் அவரை விடாத மனம் கூடவே இருந்து யோசித்துக்கொண்டிருந்தது,


இந்த பிறப்பை எடுத்தோமே ,இந்தப் பிறப்பில் என்ன செய்தோம், ,பாவம் செய்தோமா, புண்ணியம் செய்தோமா? நமக்கு நரகம் கிட்டுமா, சொர்கம் கிட்டுமா என்று தெரியாமல், பூமியிலும் இல்லாமல், ப்ரபஞ்ச வெளியிலும் இல்லாமல் நடுவே ஏதோ ஒரு வெட்ட வெளியில் நின்று கொண்டிருந்தார் ராமசேஷன், அவருக்கு சிரிப்பாய் வந்தது,

ஆமாம் இப்போதும் தமக்கு ராமசேஷன் என்று தான் பெயரா ,அல்லது யாராவது வந்து தனக்கு வேறு பெயர் வைப்பார்களா என்று யோசித்தார், சரி இனி பெயரில் என்ன இருக்கிறது, போய்ச்சேரும் இடமல்லவா முக்கியம், ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருப்பவராயிற்றே அவர்,

ஆமாம் ஆரியக் கூத்தென்றால் என்னது அது?
ஆரியனுக்கு ஏது கூத்து? என்று யோசிக்கும் போதே ஆரியன் ஆடாத கூத்தா? என்கிற கேள்வியும் முளைத்தது, எப்படி இந்தச் சொல்வழக்கு வந்தது என்று யோசிக்கலானார்,

இப்படியே காத்திருந்தால் கால்கள் வலிக்குமே எங்காவது உட்காரலாமா? அடேடே இந்த சூக்க்ஷும சரீரத்துக்கு கால்களும் இல்லை,கால்கள் இருந்தால்தானே வலிக்கும், உடல் இருந்தால்தானே வலி தெரியும், திடமான உருவமும் இல்லையே எங்காவது உட்கார்ந்தால் எப்படி உட்கார்ந்தாலும் அப்படியே காற்று போன பலூன் மாதிரி நைந்த துணி மாதிரி எதிலும் ஒட்டாமல் எப்படியும் இருக்கவிடாமல் அலைகிறதே இந்த சூக்ஷும சரீரம்?

அவருக்கு தன்னுடைய கடைசீக் காலம் நினைவுக்கு வந்தது, மனித உடல் இருந்த காலங்களில் அந்த உடலில் சர்க்கரை அதிகமாயிருக்கிறது,அரிசி சாப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று வைத்தியர்கள் சொன்னது ஞாபகம் வந்தது, கூடவே அவருடைய மகன் அவருக்கு திவசம் செய்யும்போது இதை ஞாபகம் வைத்திருப்பானா? அவன் யோசிக்காமல் அரிசி சாதத்தையே படைத்தால் எப்படி சாப்பிடுவது, மறுபடியும் சர்க்கரை அதிகமாகி விடுமே , என்று யோசித்து அவருக்குள்ளாகவே சிரித்துக்கொண்டார்,

இந்த சூக்ஷும சரீரத்துக்கு வியாதிகள் உண்டா? ரத்தமும் சதையும் கொண்ட மானுட சரீரத்துக்குதானே வியாதிகள் இந்த சூக்ஷும சரீரத்துக்கு கிடையாதே என்று யோசித்துவிட்டு மீண்டும் தனக்குள்ளே சிரித்துக்கொண்டார்

யாரோ ஒருவர் கைகொடுத்தார்,ஏன் உனக்கு நீயே யோசித்து சிரித்துக் கொண்டிருக்கிறாய் யாரேனும் பார்த்தால் பயித்தியம் என்பர் என்று ஒரு குரல் கேட்டது

நிமிர்ந்து பார்த்தார் ராமசேஷன் ,கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை

ஓ கண்ணே இல்லை பின் எது புலப்படும் ?

கை கொடுத்தவர் கேட்டார் நீ மீண்டும் பிறக்க விரும்புகிறாயா?

அட காதுகளும்தான் இல்லை பின் எப்படி அவர் பேசுவது கேட்கிறது

இல்லை..கேட்கவில்லை மனதுக்கு புரிகிறது

யோசித்தார் எனக்கு இனி பிறவி வேண்டாம் என்றார்,


உடனே அந்த அமானுஷ்யக் குரல் இன்னும் நீ அந்த நிலையை எட்டவில்லை ஆகவே இனியும் உனக்கு பிறவி உண்டு, ஆகவே எப்படி, யாராகப் பிறக்க விரும்புகிறாய் என்று மட்டும் சொல் என்றது,

ராமனாகப் பிறந்தால் கானகம் ஏகி மனையாளைப் பிரிந்து தவிக்க வேண்டும்

பரசுராமனகப் பிறந்தால் தாயின் தலையையே வெட்ட வேண்டும்,

கிருஷ்ணனாகப் பிறந்தால் நல்லதே செய்துவிட்டு கெட்ட பெயரும் சம்பாதித்து பின் குறைக் கொள்ளியாக ஒதுங்க வேண்டும்
சரி பூலோக வாசிகளான மானுடரில் பலரையும் யோசித்துப் பார்த்தார், மஹாத்மா காந்தியாகப் பிறந்தால் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்டுவார்

இப்படீ ஒவ்வொன்றாக யோசித்துக்கொண்டே வந்தார்

யாரை நினைத்தாலும் ஒவ்வொன்று தடுத்தது

சரி மீண்டும் ராமசேஷனாகவே பிறக்கலாம் என்றால் இப்படி அடுத்த ஜென்மம் யாராக எடுக்கலாம் என்று யோசிக்கும் நிலை வரும்

அவருடைய மனம் குழம்பியது

எனக்குத் தெரியவில்லை நீயே ஒரு முடிவெடுத்து ஒரு பிறப்பைக் கொடு என்று வேண்டினார்

இப்போது தெய்வம் குழம்பியது ,யோசித்தது, தனக்குத்தானே பேசிக்கொண்டது சிரித்துக்கொண்டது

அன்புடன்
தமிழ்த்தேனீ

Friday, September 17, 2010

”நெற்றிக்கண் “ சிறுகதை



 ” நெற்றிக்கண் “ சிறுகதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள் http://www.vallamai.com/?p=872




அன்புடன்

தமிழ்த்தேனீ

Sunday, September 12, 2010

ஆப்ரேஷன் சக்ஸஸ்

‘ஆபரேஷன் சக்ஸஸ்’ சிறுகதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள்


http://www.vallamai.com/?p=836



அன்புடன்

தமிழ்த்தேனீ



Thursday, August 26, 2010

“ மனோதத்துவம்“ சிறுகதை

 " மனோதத்துவம் " சிறுகதை வல்லமை இதழில் வெளியாகி உள்ளது


http://www.vallamai.com/?p=628



அன்புடன்

தமிழ்த்தேனீ

Sunday, August 22, 2010

" பணம் ‘ சிறுகதை

Categorized

சிறுகதைகள்Tags : தமிழ்த்தேனீ

”பணம்”  சிறுகதை

http://www.vallamai.com/?p=600


Posted on 22 August 2010



தமிழ்த்தேனீ



“அப்பா! காலங்காத்தாலே எழுந்து அலுவலகத்துக்கு போற அவள் கணவன் ரமேஷுக்குப் பல் தேய்க்கிற பேஸ்ட்டுலேருந்து, துண்டுலேருந்து, கர்சீப் வரைக்கும் எடுத்துக் கையிலே குடுத்து, இருக்கறது ரெண்டு குழந்தைங்கன்னாலும் பெரியவன் கிஷோர் பள்ளிக்கூடம் போறான், அவங்க ரெண்டு பேருக்கும் வேணுங்கறதையெல்லாம் எடுத்துக் குடுத்து, வயித்துக்குக் காலை உணவு குடுத்து, மதியம் உணவுக்கு வேண்டியதையெல்லாம் தயாரிச்சு டப்பாவிலே போட்டுக் குடுத்து, தலையை வாரி, சீருடை போட்டுவிட்டு, அனுப்பறதுக்குள்ளே மூச்சு முட்டிப் போகுது”, என்றபடியே புடவைத் தலைப்பால் நெற்றியைத் துடைத்தபடி, “இதோ இது இருக்குதே என் செல்லக் குட்டி. இவனுக்குக் கிட்டத்தட்ட ஒண்ணரை வயசாகுது. இடுப்பை விட்டுக் கீழே இறங்க மாட்டான். இன்னும் மழலையே மாறலை. ஆனா பேசற பேச்சு இருக்கே… யப்பா… செம வாலு, எப்பிடித்தான் அந்தக் காலத்திலே பத்து பதினொண்ணுன்னு பெத்து வளத்தாங்களோ? இதுக்கு வயித்துக்கு குடுத்துட்டு வரேன், அப்போதான் தூங்குவான், இல்லேன்னா நம்மளைப் பேச விடாம வம்பு பண்ணுவான்” என்றபடி பருப்புச் சாதத்தை ஊட்டி, அவன் தூங்க ஆரம்பித்ததும் கீழே விட்டுட்டு, “என்ன பண்றது எனக்கு காலம் இப்பிடியே போவுது” என்று சலித்துக்கொண்டே பெருமூச்சு விட்டாள் வசந்தா!



“ஏதோ மதிய வேளையாச்சே கொஞ்ச நேரம் உன்கிட்ட பேசிட்டுப் போலாம்னு வந்தா, தினோம் நீ செய்யிறதையெல்லாம் சொல்லிச் சொல்லிப் புலம்பியே பொழுதை ஓட்டற” என்றாள் சுசீலா!



“ஒரு மனுஷின்னா அவளுக்கும் கொஞ்சம் ஓய்வு வேணும், மனசுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும், சரி அதையே நெனைச்சிகிட்டு இருக்காதே, மனசை ப்ரீயா விடு”, என்றாள் சுசீலா.



‘பணம்’ தொலைக்காட்சித் தொடர் ஓடிக்கொண்டிருந்தது. இருவரும் ஹாலில் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தனர். அந்தத் தொடரில் ஒரு பெண், ‘எனக்குப் பணம் முக்கியமில்லே. ஆனா என்னை அவமானப்படுத்தின அந்தத் தியாகுவைப் பழி வாங்காம ஓயமாட்டேன், அவனை வாழ விடமாட்டேன், அவன் எங்க போனாலும் துரத்தித் துரத்திப் பழிவாங்குவேன்’ என்றாள், ஆண்பிள்ளைக் குரலில், வெறியோடு.



“இந்தப் பொம்பளையப் பார்த்தவொடனே ஞாபகம் வருது. உனக்குத் தெரியுமா, நம்ம தெருவிலே கோடீ வீட்டுலே இருக்காளே வத்சலா, அவ புருஷன் ராஜா வெஷம் குடிச்சிட்டானாம்”, என்றாள் சுசீலா.



“ஐயய்யோ ஏன், என்ன ஆச்சு?” என்றாள் வசந்தா!



“வத்சலாவோட புருஷன் ராஜா சீட்டு நடத்தினாரு இல்லே…. அதை ஒழுங்கா நடத்தி அதுலே லாபம் வந்தா பரவாயில்லே. அவங்க ஆடின ஆட்டம் இருக்கே, எல்லாருடைய பணத்தையும் வாங்கி வெளிநாட்டு டீவீ என்னா,நெக்லஸ் என்னா,அப்பிடியே மினுக்கினா, அது போதாக்குறைக்கு வீட்டை இடிச்சு பெரிய பங்களாவா மாத்திக் கட்டினாரு, கடைசீயிலே வரவேண்டிய பணமெல்லாம் வரலைன்னு சொல்லிட்டு யாருக்கும் பணம் குடுக்காம ஏமாத்தி இருக்காரு. எல்லாரும் போலீஸ்லே புகார் குடுத்துட்டாங்க. ஆனா அவராலே பணம் குடுக்க முடியலை. அவருக்கு ஏதோ நஷ்டமாம், என்ன செய்யிறதுன்னே தெரியலையாம், அதுனாலே அந்த ஆளு விஷம் குடிச்சிட்டான்” என்றாள் சுசீலா.



“ஐயய்யோ நான் கூட என் புருஷன் ரமேஷுக்கத் தெரியாம அவருகிட்ட சீட்டு கட்டி இருக்கேன், அப்போ என் பணமும் வராதா?” என்று அதிர்ந்தாள் வசந்தா.



“அதெல்லாம் கவலைப்படாதே. அவங்க கம்பெனிலேருந்து ஆளுங்கல்லாம் வந்திருக்காங்க, இவுரு இப்பிடிச் செஞ்சது அவரு வேலை செய்யிற கம்பனிக்கே தெரிஞ்சு போச்சாம். அதுனாலே அந்தக் கம்பனி இவரை வேலையை விட்டு எடுத்துட்டாங்களாம். வேலையை விட்டு அனுப்பும்போது அந்தக் கம்பனி இவருக்கு சேர வேண்டிய பெரிய தொகையைக் குடுத்தாங்களாம். அந்தப் பணத்திலே எல்லாருக்கும் திருப்பிக் குடுத்துடறேன்னு அந்த ஆளு ராஜா சொல்லி இருக்காரு.”



திடீர்ன்னு யாரோ மூச்சுத் திணறுவது போல் சத்தம் கேட்டு, வசந்தா எழுந்து ஓடிப் போய்ப் பார்த்தாள். அவளோட குழந்தை திருதிருன்னு முழிச்சிண்டு மூச்சுத் திணறிக்கொண்டிருந்தது. பக்கத்தில் மண் உண்டியல் கீழே விழுந்து நொறுங்கியிருந்தது.



“ஐயய்யோ குழந்தை இந்த உண்டியல்லேருந்து கீழே விழுந்த காசை எடுத்து வாயிலே போட்டுண்டான் போல இருக்கு… அது தொண்டையிலே மாட்டிண்டு அவனுக்கு மூச்சு திணறுது” என்று பதறினாள் சுசீலா. வசந்தா பதறிப்போய் குழந்தையின் வாயில் விரலை விட்டு எப்படியாவது காசை எடுத்து விடலாம் என்று முயன்றாள். குழந்தையின் வாயிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. மேலும் பதறிய வசந்தா, அழ ஆரம்பித்தாள்.



“நீ ஒண்ணும் பதறாதே. நான் ஆட்டோ கூப்படறேன், நாம ரெண்டு பேரும் டாக்டர் கிட்ட போயி எப்பிடியாவது குழந்தை தொண்டையிலே மாட்டிண்டு இருக்கற காசை வெளியே எடுத்துடுவோம்,” என்றபடி வாசலுக்கு ஓடிவந்து ஒரு ஆட்டோ பிடித்தாள் சுசீலா.

அதற்குள் வசந்தா குழந்தையை எடுத்துக்கொண்டு , வீட்டைப் பூட்டிவிட்டு, ஓடி வந்து ஆட்டோவில் ஏறினாள்.



ஆட்டோ அவர்கள் வீட்டுக்கருகே இருந்த மருத்துவமனைக்கு விரைந்தது. அங்கே, ” இதோ பாருங்க, இப்போ டாக்டரெல்லாம் பிசியா இருக்காங்க. நீங்க உடனடியா பெரிய ஆஸ்பத்திரிக்கு போயிடுங்க” என்றாள் நர்ஸ். ஆட்டோ பெரிய ஆஸ்பத்திரியை நோக்கி ஓடியது. உள்ளே டாக்டரிடம் ஓடினாள் வசந்தா.



வசந்தா சொன்ன விஷயத்தை கேட்ட அவள் கணவன் ரமேஷ், அலுவலகத்தில் விஷயத்தைச் சொல்லிவிட்டு உடனடியாகப் பெரிய ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.



முதலில் குழந்தையைப் பார்த்த டாக்டர், “இதோ பாருங்க, ஒண்ணும் பதறாதீங்க,” என்றபடி எக்ஸ்ரே எடுத்தார். “எக்ஸ்ரேவில் ஒண்ணும் தெரியலைம்மா. ஆமா உங்களுக்கு நிச்சயமா தெரியுமா, குழந்தை காசை வாயிலே போட்டுண்டானா?” என்றார்.



“தெரியவில்லை டாக்டர், நான் கூட தொண்டையிலே விரலை விட்டுப் பார்த்தேன். என் விரலுக்கும் ஒண்ணும் அகப்படலை. ஆனா வாயிலேருந்து ரத்தமா வந்துது” என்றாள் வசந்தா.



“சரி நாம் எதுக்கும் இன்னொரு முறை ஸ்கேன் பண்ணிப் பாத்துடலாம். பூந்தமல்லி நெடுஞ்சாலையிலே ஒரு ஸ்கேன் செண்டர் இருக்கு. நான் எழுதித் தறேன். மத்த இடங்கள்ளே அதிகமா பணம் வசூலிப்பாங்க, நீங்க இங்கே போயி ஸ்கேன் பண்ணிண்டு சீக்கிரம் வாங்க,” என்றபடி தன்னுடைய கைப்பேசியில் பேச ஆரம்பித்தார்.



மீண்டும் வாயிலில் நின்றிருந்த ஆட்டோவிலே ஏறி, “இதோ பாருங்க, உடனடியா இந்த ஸ்கேன் செண்டருக்குப் போங்க” என்றாள். அங்கே ஸ்கேன் எடுத்து, அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டைக் கொடுத்தவுடன் மீண்டும் பெரிய ஆஸ்பத்திரிக்கே வந்து ஆட்டோக்காரருக்கு 200 ரூபாய் பணம் கொடுத்துவிட்டு, டாக்டரிடம் ஸ்கேன் ரிப்போர்ட்டைக் காண்பித்தாள் வசந்தா.



ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்த டாக்டர், “ஸ்கேன்லே கூட ஒண்ணும் தெரியலையே என்னா செய்யிறது? எனக்கென்னவோ குழந்தை காசு தொண்டை வழியா வயித்துக்கு போயிருக்கும்னு தோணுது. நீங்க காசை எடுக்க, குழந்தை வாயிலே விரலை விட்டீங்க இல்லே… அதுனாலே தொண்டையிலே உங்க நகம் கீறி ரத்தம் வந்திருக்கும்” என்றார், டாக்டர்.



வசந்தா பதறினாள். “கவலைப்படாதீங்க. காசு தானாவே மோஷன் போகும்போது வெளியிலே வந்துடும். அது்க்கு நடுவுலே ஏதாவது ஆச்சுன்னா உடனே குழந்தையை மறுபடியும் அழைச்சிட்டு வாங்க பாப்போம்” என்றார் டாக்டர்.



குழந்தை கஷ்டப்பட்டு, “ம்ம்மா” என்றான். வசந்தா குழந்தையின் அருகில் வந்து பதறியபடி “என்னடா கண்ணா?” என்றாள் பொங்கி வந்த அழுகையை அடக்கியபடி.



குழந்தை ரமேஷை நோக்கி, “ப்பா” என்றது. ரமேஷ் கண்ணில் கண்ணீருடன் குழந்தையை நோக்கிக் குனிந்தான்.



குழந்தை வசந்தாவைப் பார்த்துக் கையை நீட்டியது. அதில் ஒரு முழு ஒரு ரூபாய் பளிச்சென்று மின்னியது.



“ம்மா… நானு பத்திரமா வெச்சிண்டு இக்கறேன், காசு, உனக்கு தரமாத்தேன் போ, காசு என்னுது” என்று சொல்லிவிட்டுச் சிரித்தது!

Friday, August 20, 2010

periyaazvaar vaarisu

http://www.youtube.com/watch?v=yfrWeDtVZMsபெரியாழ்வாரின் பரம்பரையில் வந்த திரு வேதபிரான் பட்டர் அவர்களின்பேட்டிய  மேற்கண்ட சுட்டியை சொடுக்கிப் பார்க்கலாம்,இந்தக் காணொளியில் ஆண்டாள் கோயிலில் ஆஸ்தான அர்ச்சகர் திரு கோவிந்தராஜ   பட்டர் அவர்கள் திரு வேதபிரான் பட்டரை அறிமுகப்படுத்துகிறார்,   இந்தப் பேட்டி மிகவும் இயல்பாக யதேச்சையாக அமைந்த பேட்டி  திரு கோவிந்தராஜ பட்டர் அவர்கள் ஆண்டாள் கோயிலின் உள்ளே அந்தக்  கோயிலின் பெருமைகளை கூற அப்படியே அதைப் பதிவு செய்துகொண்டே வந்தேன்,  கோயில் வாயிலுக்கு வரும்போது எதிரே வந்தார் திரு வேதபிரான் பட்டர்,  பெரியாழ்வாரின் வாரிசு என்று திரு கோவிந்தராஜ பட்டர் அவர்கள்  அறிமுகப்படுத்தினார்,அவர் எந்த முறையில் வாரிசு என்று அவர் வாயாலேயே கேட்போம்அன்புடன்தமிழ்த்தேனீ




பெரியாழ்வாரின் பரம்பரையில் வந்த திரு வேதபிரான் பட்டர் அவர்களின்

பேட்டிய  மேற்கண்ட சுட்டியை சொடுக்கிப் பார்க்கலாம்,
இந்தக் காணொளியில் ஆண்டாள் கோயிலில் ஆஸ்தான அர்ச்சகர் திரு கோவிந்தராஜ   பட்டர் அவர்கள் திரு வேதபிரான் பட்டரை அறிமுகப்படுத்துகிறார்,   இந்தப் பேட்டி மிகவும் இயல்பாக யதேச்சையாக அமைந்த பேட்டி  திரு கோவிந்தராஜ பட்டர் அவர்கள் ஆண்டாள் கோயிலின் உள்ளே அந்தக்  கோயிலின் பெருமைகளை கூற அப்படியே அதைப் பதிவு செய்துகொண்டே வந்தேன்,  கோயில் வாயிலுக்கு வரும்போது எதிரே வந்தார் திரு வேதபிரான் பட்டர்,  பெரியாழ்வாரின் வாரிசு என்று திரு கோவிந்தராஜ பட்டர் அவர்கள்  அறிமுகப்படுத்தினார்,
அவர் எந்த முறையில் வாரிசு என்று அவர் வாயாலேயே கேட்போம்

அன்புடன்

தமிழ்த்தேனீ

Wednesday, August 18, 2010

" B + " சிறுகதை





http://www.vallamai.com/?p=544



“B+” ( சிறுகதை)

வல்லமை இதழில் வெளியாகி உள்ளது, மேலே உள்ள சுட்டியை சொடுக்கி  படித்து உங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்



அன்புடன்

தமிழ்த்தேனீ

Monday, July 19, 2010

”அதிர்ச்சி” சிறுகதை வல்லமை இதழில் படிக்க

 http://www.vallamai.com/?p=272

”அதிர்ச்சி”  சிறுகதை வல்லமை இதழில் படிக்க மேற்கண்ட சுட்டியை சொடுக்கவும்

அன்புடன்’
தமிழ்த்தேனீ

Monday, July 5, 2010

”முகமூடிகள்” சிறுகதை

அன்புள்ள  நண்பர்களே  ”முகமூடிகள்” என்று நான் எழுதிய சிறுகதை   ”வல்லமை  என்னும் மின் இதழில் வெளி வந்திருக்கிறது

அந்தக் கதையைப் படிக்க
சொடுக்குங்கள்         http://www.vallamai.com/?p=200

அன்புடன்
தமிழ்த்தேனீ             

Wednesday, June 9, 2010

பக்தி ஒரு நிகழ்வு

செப்டம்பர் மாதம் 1990 ஆம் ஆண்டு அம்மன் தரிசனம் என்னும் பத்திரிகைக்காக என் தாயார் ஆர் கமலம்மாள் அவர்களால் எழுதப்பட்ட்து

                                              ”பக்தி”


பக்தி என்றாலே நம் கண் முன் வரும் தோற்றங்களுள் முதன்மையானது
கையில் தம்பூருடன் கண்களில் ஆனந்த பாஷ்பத்துடன்ஆன்மாவையே உருக்கும் தோற்றம் கொண்ட இருக்கும் தியாகைய்யர் என்கிற தியாகராஜன் என்கிற தியாகப் ப்ரும்மம்தான்,அவர் வீட்டு வாயில் திண்ணையில் அவர் அமர்ந்திருக்கிறார்நாம் அந்த மகானை தரிசிக்க அவர் வீடு நோக்கி செல்கிறோம்,நாம் நெருங்க நெருங்க அவர் பாடும் ராமநாமம், தம்பூரின் ஒலி நயத்தோடு நம் காதுகளில் கேட்க ஆரம்பிக்கிறது,
 சதா ராம நாமத்தில் மூழ்கியிருக்கும் அவர்அப்போதும் ராம நாமாமிருதத்தில்,ஸ்ரீ ராமனுடைய குண விசேஷங்களில் மனதை ஆழ்த்தி ராம நாம சங்கீர்த்தனத்தில் மூழ்கியிருக்கிறார், அந்த இடமே கறவைகள் கன்றுகள் முதற்கொண்டு உருகி நிற்கின்றன,மரங்கள் செடிகள்கூட இதமான தென்றலில் இளமையாக ஆடுகின்றன, அந்த மோனத்தவத்தில் அவர் மூழ்கியிருக்கும்போது அந்த மோனத்தவத்தைக் கலைக்கும் வலிமை யாருக்குமே கிடையாது,அப்படி அவர் ஆழ்ந்த பக்தியில் திளைத்திருக்கும்போது அன்று ஏனோ தெரியவில்லை இடையிடையே சிரு சலனம் மனதை ஆக்ரமித்துக்கொண்டிருந்தது,ஆம் அவர் ஆழ் மனத்தையும் மீறி சலங்கை ஒலி ,பொற்சதங்கை ஒலி அவரின் ராம நாம சங்கீர்த்தனத்திற்கு மெருகூட்டியது,

ஒரு நாள், மறு நாள் ,அதற்கும் மறு நாள்,அதே நேரத்துக்கு கடந்த மூன்று நாட்களாக அவருக்கும் அந்த பொற்சதங்கை ஒலி பழகியிருந்தது, மறுநாள் அவரின் ராம நாம சங்கீர்த்தனத்தை தொடங்கும் போதே அந்த சலங்கை ஒலிக்காக அவரே காத்திருப்பது போன்ற ஒரு தோற்றம் அவருள் விளைந்தது,கண்களை மூடி மனதில் ஸ்ரீ ராமனின் தோற்றத்தையே மனதில் நிறுத்தி நாம் சங்கீர்த்தனம் செய்யும் அவர் மனதும் கண்களும் விழித்துக்கொண்டன, அங்கே அவர் கண்ட காட்சி, உண்ணும் உணவு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே என்று ஈடுபட்ட ஆழ்வாரைப் போல
ராம நாமத்தில் மூழ்கியிருந்த தியாகையர் கண்களில் முதல் பட்டது இரு செந்தாமரை இதழ்கள் ,அல்ல அல்ல இரு திருவடிகள், செம்பஞ்சுக்கு குழம்பு பூசி தங்க்க் கொலுசுகள் மின்ன தகதகத்த பாதங்கள்,அந்தப் பாதங்கள் நகர நகர அந்தப் பாதங்களின் பின்னாலேயே தியாகையரின் மனதும் செல்ல அந்த திருவடிகள் இரண்டும் மெல்லடி நடந்து தியாகையரின் வீட்டினுள்ளே சென்றது,
தியாகையரின் கண்களில் கண்ணீர்? இது என்ன ஆனந்தக் கண்ணீரா?விரஜா நதியில் குளித்தது போல் உடல் லேசாகி ஆனந்த்த்தில் மிதந்தது,சில வினாடிகள் அப்படியே அந்த திருவடிகளில் லையித்திருந்த தியாகைய்யர் நினைவுக்கு மீண்டு தன் வீட்டுக்குள் நுழைந்த அந்தத் திருவடிகளை மீண்டும் காண்வேண்டும் என்னும் ஆசையால் ,அந்த செந்தாமரைப் பாதங்களுக்கு திருவடிகளுக்கு சொந்தக்காரி யார் என்று அறியும் ஆவல் மிஞ்ச தன் வீட்டிற்குள்ளேயே ஒரு அன்னியனைப் போன்ற உணர்வுடன் நுழைந்தார்,அங்கே..
அங்கே அவரின் மனைவி கமலா ! தூணில் சாய்ந்த படி கண்கள் திறந்தபடி, எங்கோ பார்த்தபடி தன் நிலை மறந்து உட்கார்ந்திருந்தாள், ஏதோ பரவசத்தில் ஆழ்ந்திருந்தாள், அவள் தவத்தைக் கலைக்க விரும்பாமல் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார் தியாகையர், கணவனைக் கண்டவுடன் எழுந்து மரியாதை செய்யும் அந்த உத்தமப் பெண்மணி தான் வந்ததையும் கவனிக்காமல் இருக்கிறாள் எப்படி? தனக்கும் மேலான அப்படி ஒரு சொர்க நிலையை அவள் அடைந்திருக்கிறாள், அப்படி ஒரு ஆனந்தமயமான ஆழ் நிலையை அவள் அனுபவித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை கண்டு அவர் மனம் பெருமித்த்தால் விம்மியது, எப்படிப்பட்ட பெண்மணி இவள்? இவளை மனைவியாக அடைய என்ன தவம் செய்திருக்கிறோம் நாம் என்று பரவசமடைந்தார் தியாகையர்,
திடீரென்று தன் சுய நிலைக்கு திரும்பிய கமலா திடுக்கிட்டு எழுந்திருக்க அவளை எழுந்திருக்க விடாமல் இதமாக அப்படியே உட்காரவைத்து தானும் அவளருகே உட்கார்ந்து அவளைப் பரிவோடு பார்த்து , கமலா என்று அன்போடு அழைத்தார் தியாகையர், கமலா அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள், நானும் சில நாட்களாக கவனித்துக்கொண்டே இருக்கிறேன், பொற்சதங்கை அணிந்த இரு திருப்பாதங்கள் தினமும் நம் வீட்டிற்கு வரக் காண்கின்றேன், அந்த செந்தாமரைப் பாதங்களைப் பார்த்தவுடன் என் மனமும் அப்படியே மயங்குகிறது ,அந்த்த் திருவடிகளுக்கு உரிய பெண்மணி யார் தெரியுமா ? என்று கேட்டார்

அதற்கு கமலா தினமும் அந்தப் பெண் இங்கே வருகிறாள்,என் எதிரே அமர்கிறாள், ஏதோ பேசுகிறாள், அவள் வந்துவிட்டால் நான் என்னையே மறந்துவிடுகிறேன், அவள் கண்களைப் பார்த்துவிட்டால் போதும் , அப்புறம் இந்த உலகமே மறந்து போய்விடுகிறது, அப்பா..!! அந்தக் கண்கள்! எத்தனை விசாலம், எவ்வளவு ஆழமான அழகான கருணையோடு இருக்கும் கண்கள்!அந்தக் கண்களைப் பார்த்துவிட்டால் பார்த்துக்கொண்டே இருக்கிறேன், பசி தாகம் எதுவுமே தெரிவதில்லை, நீங்கள் யாரம்மா என்று கேட்கவேண்டும் என்று தினமும் நினைக்கிறேன், ஆனால் என்னால் முடியவே இல்லை, ஆமாம் யார் அந்தப் பெண்மணி? என்றாள் கமலா

அவள் யார்..?

ஒரு கணத்தில் தியாகைய்யருக்கு உடம்பு சிலிர்க்கிறது..அவள் யார் என்று அவருக்கு புரிந்துவிட்டது! திரும்பிப் பார்த்தவுடன் தன் குஞ்சுகளின் பசியை தன் பார்வையாலேயே போக்கும் மீனைப் போன்றவள் அவள்!அவள்தான் மின்னாக்‌ஷி, அவள்தான் பராசக்தி, இதுவரை நான் அவளைப் பற்றிப் பாடவே இல்லையே! அதை நினைவூட்டவே அவள் இங்கே வந்திருக்கிறாள்,

அது மட்டுமல்ல என் பிரிய சகியே அவள் உனக்கு மட்டும் எதற்காக தரிசனம் தந்தாள் தெரியுமா? மஹா பதிவிரதையான உனக்கு மோட்ஷ சாம்ராஜ்யத்தை அளிக்கவே அவள் கருணையோடு இங்கே வந்தாள்!நான் அவளைக் கண்டு கொண்டேன்! என் தேவியை நான் தெரிந்து கொண்டேன்,என்றவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது!பக்திப் பரவசமாய்ப் பாட ஆரம்பித்தார்

”தாரிணி தெலுசு கொண்டி த்ரிபுரசுந்தரி”என்று அமிர்த வர்ஷமாக இன்றும் அவருடைய க்ருதி ஒலித்துக்கொண்டே இருக்கிறது

                                          சுபம்

அன்புடன்

தமிழ்த்தேனீ

Wednesday, June 2, 2010

கா(ஞ் ) சித்துண்டு சிறுகதை


கா(ஞ்) சித்துண்டு என்னும் சிறுகதை யூத்புல் விகடனில் வெளியாகி இருக்கிறது  படித்து மகிழுங்கள்   ,கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கினால் படிக்கலாம்
http://youthful.vikatan.com/youth/Nyouth/tamilthenistory010610.asphttp://youthful.vikatan.com/youth/Nyouth/tamilthenistory010610.asp


அன்பர்களே நான் எழுதிய கா(ஞ்)சித்துண்டு என்னும் சிறு கதை யூத்புல் விகடனில் வெளியாகி இருக்கிறது,மேலே அளிக்கப்பட்ட சுட்டியை சொடுக்கினால் படிக்கலாம்,
அன்புடன்
தமிழ்த்தேனீ--

மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது



http://youthful.vikatan.com/youth/Nyouth/tamilthenistory010610.asp





புஷ்பராகவ்-

இனி எதையாவது செய்ய வேண்டும் என்று நாம் முடிவெடுத்தால்

யாரிடமும் கூறாமல் நாமே செயல் படுத்த வேண்டும்.இந்த

கதை ஒரு நல்ல பாடம்.அருமை
ரா.புஷ்பா..

Priya பெறுநர் எனக்கு
nice pa :)

Tirumurti Vasudevan
:-)))

நல்லா இருந்தது.
Innamburan Innamburan
I told you, it is a good story.

Congratulations
meena muthu பெறுநர் mintamil

காஸ்ட்லி துண்டு! :)))))))))
kalvi Thulir


இந்த கதை .அருமைKavitha Prakash,
http://kalvithulir.blogspot.com/

http://kalvithulir.com

vishalam raman பெறுநர் mazalais


அன்பு தமிழ்த்தேனி அருமையான கதை கடை கூட்டம் என்றாலே எனக்கு அலர்ஜி ,,அதுவும் புடவைக்கடையா ?கேட்கவே வேண்டாம் என் வீட்டிலும் அந்தத்துண்டுதான் உபயோகிக்கிறோம்

---------------------------------------
பேஸ்புக்” பெறுநர் எனக்கு
Swaminathan Jayaraman commented on your தொடர்புச்சுட்டி:

மிகவும் நல்ல கற்பனை. ரசித்து படித்தேன். பாராட்டுக்கள்.
அன்புடன்
தமிழ்த்தேனீ