திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, August 2, 2007

திட்டமிடல்

அன்புடன் நண்பர்களே
ஒரு தேவையான யோசனை வந்தது

ஒரு பழைய திரைப் படத்தில்
ஒருவன் என் எஸ் கே எனப்படும் கலைவாணர்
ஒருவரிடம்
உன்னுடைய சட்டைப் பையில் இருக்கும்
மொத்தப் பணத்தையும் என்னிடம் கொடு என்பார்
உடனே அவன் மொத்தப் பணத்தையும் எடுத்து
கலைவாணரிடம் கொடுப்பார்
அதை தன் கையில் வைத்து மூடிக்கொண்டு
கலைவாணர் இதில் எவ்வளவு பணம் இருக்கிறது
என்பார் ,அதற்கு அவன் தோராயமாக சொல்லுவான்
,சரியாக சொல் தோராயமாக சொல்லாதே
என்பார்
அது அவனால் முடியாது

உடனே கலைவாணர் உன்னுடைய சட்டைப் பையில்
எவ்வளவு பணம் இருக்கிறது என்று உன்னாலேயே
சொல்லமுடியவில்லை நீ எதை சரியாக
சொல்லப் போகிறாய் என்பார்
இது மிகவும் யோசிக்கத்தக்க ஒரு கேள்வி
நாம் ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறோம்
ஆனால் ,எதையுமே மனதில் இருத்தாது
அதை அதை அப்படியே செய்துவிட்டு
ஓடிக் கொண்டிருக்கிறோம்
நமக்கு ஒரு கோப்பு, நாம் கேடவுடனே
கிடைக்காவிடில் கோபம் வருகிறது
அதை சரியான நேரத்தில் கொடுக்காதவரை
கண்டிக்கிறோம்,பொறுமை இழந்து கத்துகிறோம்,
நாம் சரியாக இருக்கிறோமா?
என்பதுதான் என் கேள்வி..?
நான் இப்போதெல்லாம் பார்க்கிறேன்
பெரியவர்கள் ,இளவட்டங்கள்,அனைவருமே
ஏதோ ஒரு அவசர கதியில் இயங்கிக் கொண்டிருக்கிறோமே
தவிற
ஒரு கணம் நிதானித்து,யோசித்து செயல் படுவதே இல்லை
நாம் நிதானிக்கும் ஒரு கணம் ,
நம்முடைய வாழ்விலே எத்தனையோ
நல்ல மாற்றங்களை கொண்டு வரக் காத்திருக்கிறது
பல கடைகளில்,,பொது இடங்களில் புழங்கும்
அனைவரையும் கவனிக்கிறேன்
கடைக்கு வந்த வுடன் அவர்களுடைய அவசரம்,
பொறுமைஇன்மை,எல்லவற்றிர்க்கும் மேலாக ,
சரியாகத் திட்டமிடாமைஅத்தனையும் சேர்ந்து
நம்மை ஆட்டுவிக்கிறது
கையிலுள்ள சின்னத் தொலை பேசியை ஒரிடத்தில்
வைக்கிறார்கள்,கடைக்காரர் கொடுத்த
விலைப் பட்டியலை ஒரிடத்தில் வைக்கிறார்கள்
கடன் வாங்கும் அட்டையை கடைக் காரரிடம் கொடுத்துவிட்டு ,
அதைத் திரும்ப வாங்க மறந்து விடுகிறார்கள்,
அப்படியே வாங்கினாலும் அது தன்னுடைய
கடன் வாங்கும் அட்டைதானா
என்று பார்க்க மறந்துவிடுகிறார்கள்
ஏன் இவ்வளவு பதட்டம்,வேகம்,
எல்லாவற்றிர்க்கும் மூல காரணம் சரியாகத் திட்டமிடாமை,
காலத்தே படுத்து உறங்கி ,காலத்தே எழாமை
தம்முடைய மூளைக்கு போதிய ஓய்வு கொடுக்காமை
இத்தனை ஆமைகளை நம்மிடம் வைத்துக் கொண்டால்
எப்படி தடுமாறாமல் இருக்க முடியும்
பெரியவர்கள் சொல்வார்கள்
ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று
இப்போதெல்லாம் நக்ஷ்க்ஷத்திர ஆமைகள் கூட
நல்ல விலைக்குப் போகிறது
பெரியவர்கள் சொன்ன ஆமை மேலே நான் சொன்ன
திட்டமிடாமை,போன்ற பல ஆமைகள்தான்
நாம் இன்னும் கொஞ்ஜம் கவனமாக செயல் பட்டால்
பல நஷ்டங்களை ,தவறுதல்களை,இழப்புகளை,
சரியாக்க முடியும் என்பது அடியேனின் கருத்து
சரியான உதாரணமாக
ஒரு போட்டி வைப்போம்

" W hy D o n' t a li e n s e a t c lo w n s ?
B e c a u s e t h e y ta s te fu n n y. "

இந்த வாசகம் தினமும் நாம் உபயோகிக்கும்
அவசியத் தேவையான ஒரு பொருளின் மீது
அச்சடிக்கப் பட்டு இருக்கிறது

சவால்,,,, கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு
ஒரு சபாஷ்......
இனாம்..........

இப்படிக்கு
அன்புடன்

தமிழ்த்தேனீ
Post a Comment