திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Tuesday, July 31, 2007

தண்ணீரும் அசோக சக்ரவர்த்தியும்

" உயிர்த் தண்ணீர் "

டேய் தணிகாசலம் , எதுலெ வேணா வெளையாடு
ஆனா தண்ணீலெ மட்டும் வெளையாடதே
"இவ்வளவு போதையிலும்"
அம்மாவின் குரல் காதிலே ஒலித்துக் கொண்டே இருக்கிறது
எங்கோ தூரத்தில் இருந்து'
"கடவுள் பாதி மிருகம் பாதி,
கலந்து செய்த கலவை நான் "
பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது,

ஆனா நான் இப்போ தினம் தினம் தண்ணீரிலேயே
தான் விளையாடிக்கிட்டு இருக்கேன்,
என்ன செய்யறது? மனுஷனுக்கு ஆயிரம் கவலை,


அடபோடா ! குடிக்கவே தண்ணி இல்லை ,ஆனா
நீங்க நீச்சலுக்கு தண்ணி வீணடிக்கிறீங்க
சாராயம் காச்சறீங்க,
"குடிக்க கூழ் இல்லையாம், கொப்பளிக்க
பன்னீர் கேக்கறாங்க"
தண்ணியை பாட்டில்ல பிடிச்சு விக்கறீங்க!!
அசரீரியாய் என் அம்மாவின் குரல்.

ஆமாம் !!! காவிரிக் கரையிலே எங்க ஊரு,
விடியற்காலமே எழுந்து, கையிலெ வேப்பங்
குச்சியோட போய் ,காலைக்கடன் எல்லாம்
முடிச்சுட்டு, அப்பிடியே காவிரியிலே தொப்புன்னு
குதிச்சி ,நீந்திக் கரையேரி மருபடியும் ,
தொப்புன்னு குதிச்சு .......அது ஒரு தொடர் கதை
சொல்லிகிட்டே போகலாம்,

ம்ம்ம்ம்... அது ஒரு காலம் ,
இப்போ போய்க் காவிரியிலே தொப்புன்னு
குதிச்சோம்னு வெச்சுக்கோ, அவளோதான் ஆளே க்ளோசு,
ஒரே கல்லும் மண்ணுமா தான் இருக்கு ...காவிரியிலே,

குடிக்கக்கூட தண்ணி இல்லாமே நாட்டுல மக்கள்,
கையில குடத்தோட அலையுற அவலத்தப் பாத்துட்டும் ,
தண்ணிப் ப்ரச்சனைய கவனிக்காம தேர்தல்ல,
மும்மரமா இருக்கிற அரசியல்வாதிகளை நெனைச்சு, வருத்தப்
பட்டுபேசறோமான்னு, தெரியாமெ புலம்பிக் கொண்டு,
இருந்தான் தணிகாசலம் ,இந்த நாட்டின் குடிமகன்.
அசோகர் சாலை இருமருங்கிலும் நிழல் தரும்
மரங்களை நட்டார். ஆங்காங்கே குளங்களை
வெட்டினார்,
என்று கத்தி படித்தபடி மனப்பாடம் செய்து
கொண்டிருந்த, அவனின் செல்ல வாரிசு ஓடிவந்து,
அப்பா . அப்பா , எதுக்குப்பா அசோகர் மரம் நட்டாரு?
எதுக்குப்பா குளம் வெட்டினாரு?
அவரு ராஜாதானே அவுருபாட்டுக்கு
ஜாலியா இருக்கவேண்டியதுதானே,


ஐந்து வயதுக் குழந்தை ரிஷி கேட்ட கேள்விக்கு,
என்ன பதில் சொல்றதுன்னு யோசித்தான்
தணிகாசலம்,

போப்பா உனக்குத் தெரியலை ,நான் பாட்டிகிட்டே
கேட்டுக்குறேன், என்று சொல்லிவிட்டு,
பாட்டி தங்கி இருக்கும் முதியோர்இல்லத்து ,
தொலைபேசி எண்ணைச் சுழற்றி,
என் பாட்டி கமலம்மாளை கூப்பிடுங்க
என்றான் ரிஷி,
பாட்டீ... எதுக்கு பாட்டி... அசோகர் குளம் வெட்டினாரு,
எதுக்குப் பாட்டி மரம் நட்டாரு?

பாட்டி சிரித்தாள் தொலைபேசியில்,

டேய் கண்ணா இந்தக் கேள்விக்கு உங்கப்பனுக்கு
மட்டும் இல்லே, யாருக்கும் பதில் தெரியாது,

அசோகர் ஒரு ராசா
ராசாவுக்கு எப்பவும் தன்னோட நாடு. நாட்டு ஜனங்களோட
வசதி, இதுதான்முக்கியம் ,அதனாலெ
மக்கள் நல்லா இருக்கணும்னா,
நாடு வளமா இருக்கணும் ,
நாடு வளமா இருக்கணும்னா, விவசாயம்
நல்லா நடக்கணும் அப்பொதான் இப்பொ
நாமெ சாப்படுறோமே அந்த அரிசி, விளையும்
எல்லா தானியமும், வளரும் காய், கனி ,எல்லாம்
நிறைய கிடைக்கும், அப்போதான் நாட்டுலெ
பஞ்சம் இல்லாமெ இருக்கும்,
பஞ்சம் இல்லாமெ நாடு இருந்தாதான்,
மக்கள் சொகமா இருப்பாங்க , அதுக்கு ,

நீர்இன்றி அமையாது இவ்வுலகம்'ன்னு
பெரியவங்க சொன்னா மாதிரி.தண்ணி வேணும் தண்ணி இருந்தாதான்
விவசாயம் பண்ண முடியும்
விவசாயம் பண்ணி செழிப்பா எல்லாம்
விளைஞ்சாதான் ,
விவசாயி சந்தோசமா இருப்பான்.,

ஆமாண்டா விவசாயி எந்த நாட்டுலெ
சந்தோசமா இருக்கானோ, அந்த நாட்டிலெ
தான் மக்கள் சந்தோசமா இருப்பாங்க,
நீர் உயர வரப்புயரும், வரப்புயர நெல்
உயரும் , நெல் உயரக் குடி உயரும்,
குடிஉயரக் கோன் உயர்வான்,
அப்பிடீன்னு அவ்வைப் பாட்டி சொன்னா
மாதிரி
மக்கள் சந்தோசமா இருந்தாதான் ,எல்லாருக்கும்
நல்லது, அப்பிடீன்னு அசோகர் அந்தக் காலத்திலேயே
உணர்ந்திருந்தாரு,
அதுனாலெதாண்டா மரம் நாட்டாரு,
குளம் வெட்டினாரு,
நம்ம நாகரீகமெல்லாம் வளர்ந்ததே நதிக்கரையிலேதாண்டா....
இப்போ புரியுதாடா கண்ணா என்றாள் பாட்டி?
புரிஞ்சுதோ இல்லையோ,
தலையை மட்டும் வேகமா ஆட்டிட்டு தொலைபேசியை
வைத்தான் ரிஷி,

மறு நாள் காலையில் பாட்டி சொன்னதையே
நினைத்துப் பார்த்துகொண்டிருந்த ரிஷி
வாசலில் கேட் அழைப்பு மணியைக் கேட்டு
வாசலுக்கு ஓடினான்,
வாசலில் நாலைந்துபேர் கும்பலாக நின்றிருந்தனர்
அதில் ஒருவன், தம்பி உங்க அப்பாவைக் கூப்பிடு,
என்றான்,
அப்பா ,அப்பா ...வாசல்லெ யாரோ வந்திருக்காங்க,
உன்னைப் பாக்கணுமாம் ரிஷியின் குரல்,
தணிகாசலம் எட்டிப் பார்த்தான்,யாரு?

சார் ...நாங்க மெட்றோ வாட்டர்
லேருந்து வரோம்,
நீங்க வாட்டர் டாக்ஸ் கட்டலை அதனாலெ
கனக்ஷன் கட் பண்ணப் போறோம் என்றார்கள்
வந்தவர்கள்,

என்ன இது அநியாயமா இருக்கு நீங்க தண்ணியே
குடுக்கறது இல்லே குடுக்காத தண்ணிக்கு எதுக்கு
டாக்ஸ் அப்பிடீன்னா தணிகாசலத்தின் சகதர்மிணி
வசந்தா,
ச்சு சும்மாஇரு நான் பாத்துக்கரேன் அப்பிடின்னுட்டு,
ஏன் சார் ,என் பொண்டாட்டி கேக்கறது ஞாயம்தானே,
அதுமட்டுமில்லே, இது என் பொண்டாட்டி யோட
குரல் மட்டும் இல்லை இந்த நாட்டு மக்களின் குரல்
அதுனாலெதான் இவ்வளவு உரக்க கேக்குது?
என்று கிண்டலடித்தான் தணிகாசலம்,

அதுக்கு வந்தவர்கள் சார் நாங்க வொர்க்கர்ஸ்,
எங்களை கேட்டா நாங்க என்னா பண்ணுவோம்,
நீங்க அரசாங்கத்தை கேளுங்க? என்றார்கள்.

சரிப்பா இப்பொ கனக்ஷன் இருக்கறதும்
இல்லாததும் ஒண்ணுதான்,
நீங்க கட் பண்ணிக்கோங்க ,என்றான் தணிகாசலம்

பாவம், அவர்கள் கவலை அவர்களுக்கு,
வர வர மக்கள் முழிச்சுகிட்டாங்க,
நம்மை எல்லாம் நம்ப மாட்டேங்கராங்க,
ஹும்.. சரி வா இன்னிக்கு ,ஒண்ணும் தேறாது,
முணுமுணுத்துகொண்டே, படியிறங்கிச் சென்றனர்
அவர்கள்,

என்னா நெனைச்சுண்டு இருக்காங்க இவங்க
அவவனுக்கு இருக்கிற ப்ரச்சனையெல்லாம்
போதாதுன்னு இவங்க வேற எரிச்சலைக்
கிளப்பறாங்க இன்னிக்கு குடிநீர் வாரியத்துக்கு
போய் ஒரு வழி பண்ணிட்டு வரேன்னு கிளம்பினான்
தணிகாசலம்,

ஏங்க, இவங்க குடிநீர் வாரியத்திலேருந்து
தான் வராங்கன்னு தெரியுமா?
இவங்க பேச்சை கேட்டுகிட்டு,நீங்க அங்க போய்
வீண் சண்டையை இழுத்துகிட்டு வராதீங்க,

அது இருக்கட்டும் முதல்ல தண்ணி லாரிக்காரனுக்கு
போன் பண்னி தண்ணி கொண்டுட்டு வரச்சொல்லுங்க
பணம் சாயங்காலம் வந்து வாங்கிக்க சொல்லுங்க
இல்லைன்னா நாளைக்கு தண்னி இல்லாமெ
கஷ்டப் படணும்" என்றாள் வஸந்தா!!!


அம்மாவின் அசரீரிக் குரல்!!!

"டேய் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
ஆத்திரப்படாதே அவங்களும் அரசாங்கத்த
போய் கேளுன்னுதான் சொல்லுவாங்க!!!

நீ குடிதண்ணிப் ப்ரச்சனைக்கு இந்த நாட்டுக்
குடிமகனா என்னா பண்ணே, சும்மா அரசாங்கத்தை
குறை சொல்லி ப்ரயோசனம் இல்லை,
ஏரியெல்லாம் அரசாங்கம் தான் தப்பான,
திட்டம் போட்டு குடியிருப்பு கட்டிக் கொடுத்தாங்கன்னா,
நீயும் அதை வாங்கி இங்கதானே வாழறே?
ஏரியை பாழ்பண்ணி அங்க வீடு கட்டினா நான்
வாங்கமாட்டேன்ன்னு, சொல்லி வாங்காமெ இருக்கறதுதானே?"

அம்மாவின் கேள்வி அசரீரியாய், சம்மட்டி அடியாய் விழுந்தது!!!

நாடென்ன செய்தது நமக்கு என்ற கேள்விகள்
கேட்பது எதற்கு,
நாம் என்ன செய்தோம் அதற்கு என்று
உணர்ந்தால் நன்மை உனக்கு!!!!
கண்ணதாசன் பாட்டு தான்
ஞாபகத்துக்கு வந்தது, உண்மைதானே?
நாமெ என்னா செய்தோம்?!!!சரி நாமெ நம்ம வேலையைப் பாப்போம்,
அப்பிடியே வசந்தாவைக் கொண்டுபோய்,
அவ ஆபீசுலெ விட்டுட்டு வேலைக்கு போகணும்.
கிளம்பினான் தணிகாசலம் !!

சரி ..சரி.. ஜாக்கிறதையா போய்ட்டு வா என்றது அம்மாவின்
அசரீரிக்குரல் ஆமாம்!!
அம்மா எப்பவும் வாசல்லெ வந்து வழிஅனுப்புவா
ஆண்டவனை வேண்டிகிட்டு!!

அம்மான்னா அம்மாதான்...

வண்டி ஓட்டிக்கொண்டிருந்தாலும் மனம்
அம்மாவைப் பத்தியே, அம்மா சொன்னதைப்
பத்தியே, அசை போட்டுக்கொண்டு இருந்தது,
நாம் எல்லாருமே நாட்டுக்கும் எதுவும்
செய்யிறது ,இல்லை பெத்த அம்மாவுக்கும்
எதுவும் செய்யிறது இல்லை,
அது சரி தாயே மதிச்சாதானெ தாய்நாட்டை
மதிப்போம்!!!!
அம்மாக்களுக்கு முதியோர் இல்லம் கட்றோம்,
இல்லை.. இல்லை ...கட்றது கூட இல்லை ,
காட்றோம்.!!

தாய் நாட்டுக்கு நாமெ என்ன செய்யப் போறோம்?
ஒண்ணும் செய்ய மாட்டோ ம், நம்மாலெ
முடிஞ்சதெல்லாம் அடுத்தவனை குறை சொல்றதுதான்,
மனமும் வண்டியும் ஓடிக்கொண்டிருந்தது!!!

ஒரு வாரம் கழித்து, என் சி சி கேம்ப்பிலிருக்கும்
பெரிய மகன் க்ருஷ்ணனிடமிருந்து ,ஒலிநாடா ஒன்று
பார்சலில் வந்தது- அதன் மேலே
அப்பா இந்த ஒலிநாடாவைக் கேட்கவும்,
உங்கள்
அன்பு மகன்
கிருஷ்ணன்

என்று எழுதி இருந்தது
தணிகாசலம் பதறிப்போய்
அதை டேப் ரெகார்டரில் போட்டு
கேட்க ஆரம்பித்தனர்......
அதில்.....


அப்பா இங்க பூங்குடின்னு ஒரு
கிராமத்திலெ எங்க கேம்ப் போட்டு இருக்காங்க,
நம்ம பாட்டி அடிக்கடி சொல்றது போல,
நானும் நம்ம நாட்டுக்கு ஏதாவது செய்யணும்னு
தோணிகிட்டே இருந்தது,


அந்தப் பூங்குடி கிராமத்திலெ ஊர் மக்கள் எல்லாம்
சேர்ந்து குளம் வெட்றாங்க,
எவ்வளோ தோண்டியும் தண்ணி வரல,
அங்க ஒரு பெரியவர் ,
இப்பிடியெல்லாம் பூமியைத் தோண்டினா மட்டும்
தண்ணி கிடைச்சுருமா?கிடைக்காது...

மனுஷன் மனசுலெ இரக்கம் , மனிதாபிமானம் எல்லாம் போச்சு ,
மனசுலெ ஈரம் இருந்ததானே மண்ணுலெ இருக்கும்?
எங்க காலத்துலெ இப்பிடி தோண்டி, தண்ணி வரலையின்னா,
ஒரு உசிரை பலி கொடுத்தா தண்ணி கிடைக்கும்னு சொல்லுவாங்க,
இப்பொல்லாம் யாரு அடுத்தவனுக்காக இரக்கப் படரான்?
யாராச்சும் ஒருத்தன் தானே முன்வந்து தன்னை த்யாகம்
செய்யத் தயாரா இருந்தா? தண்ணி தானே வரும்னு ....

சொன்னதைக் கேட்டேன்!!! ஏன் இந்த நாட்டுக்காக
நாமே இந்த த்யாகத்தை செய்யக் கூடாதுன்னு,
தோணிச்சு , அதுனாலெ என்னை மன்னிச்சுருப்பா,
இந்த ஒலிநாடா உன் கைக்கு கிடைக்கும்போது,
நான் ஒரு நல்ல காரியத்தை செய்தோம்கிற ,
த்ருப்தியோட போறேன் ,எப்பிடியாவது நம்ம நாட்டுக்கு
உதவணும்கிற நல்ல எண்ணம்தான்
நாட்டுலெ ஏதாச்சும் ஒரு மூலைலெ கொஞ்சம்
தண்ணீ கிடைச்சா கூட எத்தனையோ மக்களுக்கு
தாகம் தணியும்,
"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்" ன்னு
பாரதியார் சொன்னது ஞாபகத்துக்கு வருதுப்பா

ராமருக்கு சேது அணை கட்டும்போது அணில்
உதவினாமாதிரி நானும் நாட்டுக்கு உதவ
ஒரு சந்தர்ப்பம் கொடுத்த
உங்களுக்கும் அம்மாவுக்கும் நன்றி

அப்பா ஒண்னு மட்டும் சொல்றேன்
அசோகர் மாதிரி ராஜா வெல்லாம் முட்டாள் இல்லை
நாமெல்லாம் புத்திசாலியும் இல்லை...


இப்படிக்கு
உங்கள்
அன்பு மகன்
க்ருஷ்ணன்

டேய் செல்லமே கதறினர் தணிகாசலமும் , வசந்தாவும்

வீடே இருளில் மூழ்கிக்கிடக்க தணிகாசலமும் , வசந்தாவும்
பூங்குடி கிராமத்துக்கு புறப்பட்டனர்,
அங்கு போய் காம்ப் இருக்கும் இடத்துக்கு
ஓடினர்.
அங்கே.....
கொளுத்துகிற வெய்யிலில் மாணவர்கள் எல்லாம்
சேர்ந்து கிணறு வெட்டும் வேலையில் ஈடுபட்டு இருந்தனர்

அதில் க்ருஷ்ணனும் இருந்தான் !!!!!

டேய் க்ருஷ்ணா.. கதறிக்கொண்டே ஓடிபோய்
கட்டிக்கொண்டனர் இருவரும்....
தழுதழுத்தான் தணிகாசலம் டேய் உனக்கு என்னாடா
ஆச்சு ? நாங்க உன்னை மறுபடியும் உயிரோட பாக்கறமா?
இது உண்மை தானா?கதறினர் இருவரும்...

அப்பா எனக்கு ஒண்ணுமில்லை
அயம் ஆல் ரைட்
கவலப் படாதீங்க!!

நான் எடுத்த முடிவு சரிதான் ஆனா
கடைசீ நேரத்துலெ என் முடிவை
மாத்திகிட்டேன்,
உலகத்துலெ விலை மதிக்க முடியாதது
மனிதாபிமானம் ,ரெண்டாவது உயிர்
ஆனா உயிர் இருந்தா மனிதாபிமானத்தை
நம்ப மனசுலே வளர்த்துக்கொண்டு
மகத்தான சேவை எல்லாம் செய்யலாம்
அப்பிடீன்னு அடிக்கடி உங்கம்மா அதான்
என் பாட்டி சொன்னது ஞாபகத்துக்கு
வந்தது ,அதனாலெ என் முடிவை நான்
மாத்திகிட்டேன் ,
அப்பா நான் இப்போ உயிரோடதான் இருக்கேன்
ஆனா நான் உயிரோட இங்கேருந்து திரும்பி வரணூம்னா
ரெண்டு உதவி கேட்கப் போறேன்,,,,,,,,

1. முதியோர் இல்லத்துலெ இருக்குற எங்க
பாட்டி நம்ப வீட்டுக்கு வரணும்,நம்மோடயே
தங்கணும்

2. நாம நமக்கு ஊருலெ இருக்கிற நிலத்துலெ
பெரிய கிணறு எடுத்து எல்லாருக்கும்
உதவற மாதிரி செய்யணும்
செய்வியாப்பா?

டேய் க்ருஷ்ணா எங்களுக்கு நீ வேணும்டா
அது மட்டுமில்லை அப்பனுக்கு பாடம் சொன்ன
முருகன் மாதிரி நீ எங்களுக்கு ஒரு நல்ல
பாடம் சொல்லிக்குடுத்துட்டெ

நாமெ எல்லரும் போய் பாட்டியைக் கூட்டிகிட்டு
வரலாம்,இனிமே நாங்க உங்க பாட்டியை,
அதான் என் அம்மாவையும் மறக்க மாட்டோ ம்
நம்ம நாட்டையும் மறக்க மாட்டோ ம் ,

நிச்சயமா நம்ம நிலத்திலெ நீ சொன்னா மாதிரி
கிணறு வெட்டி நல்லது செய்யலாம்!!!!

மீண்டும் எல்லொரும் ஒரு முறை
பள்ளிக்கூடம் போகலாம் , அசோகரைப் பத்தி
படிக்கலாம் தப்பில்லே!!!!
என்று சொன்ன தணிகாசலம்
மனைவியையையும் அழைத்துக்
புறப்பட்டான்,


அப்பா நாமெ இப்போ பாட்டியை பாக்கத்தானெ போறோம்,
பாட்டிக்கு ஒரு பாட்டில் தண்ணீ வாங்கிகிட்டு போகலாம்
பாட்டி அடிக்கடி தாகம் எடுக்குதுன்னு சொல்லுவாங்க
என்றான் குழந்தை ரிஷி
மீண்டும் எல்லோரும் ஒரு முறை
பள்ளிக்கூடம் போகலாம் , அசோகரைப் பத்தி
படிக்கலாம் தப்பில்லே!!!!
அன்புடன்

தமிழ்த்தேனீ
Post a Comment