திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Sunday, March 8, 2015

திருக்கார்த்திகை தீபம் 2015

கார்த்திகை  என்றாலே  இளம் பனி சூழ்ந்த  சுற்றுச் சூழலும், ஆங்காங்கே  ,மாட விளக்குகளும், திருவண்ணாமலை தீப ஜோதியில்   உண்ணாமலை அம்மன்  தன் துணையான  திருவண்ணமலையாருடன்  ஜகத் ஜோதியாக எழுந்தருளி  பக்தர்களின் கண்ணுக்கு  விருந்தாக  காட்சி அளித்தும்    தொலைக் காட்சியிலாவது   அனைத்து பக்தர்களும் கண்டு மகிழும் வண்ணம்
கையிலே  வேர்கடலை உருண்டை, முந்திரி உருண்டை ,அப்பம்  போன்ற  இனிப்பான  தின்பண்டங்கள்.

வாசற்படிக்கு சென்றால்  எல்லா வீட்டின்   முன்பக்க பின்பக்க  சுவர்களில்  அலங்காரமாய் விளக்குகள்ஆஹா  இந்திர லோகமாய்க் காட்சி அளிக்கிறது

கார்மேகம் சூழ்ந்து மாரி பெய்த ஐப்பசி
மாதமும் தான் முடிந்து சீர் மேகமாய்
வானும் தெள்ளத் தெளிவாக முழு மதி
வானிலே தோன்றிடும் வேளையிலே

கார்த்திகை மாத வரவேற்பு கையிலே
தீபமேந்தி மெய்யிலே பட்டுடுத்தி
ஞான விளகேற்றும் மோன தேவதைகள்
தீப விளக்கேற்றி ஆங்காங்கே வைக்கின்றார்

கிழக்கு நோக்கி, திருவண்ணாமலையிலே
பெருந்தீபம் ஜோதியாத் தான் தெரிய
சூரியனும் பூமியிலே தானிறங்கி ஒளிர்கிறானோ
என்றெண்ணித் திகைக்கின்றார் தேவருமே

பூமியிலே நக்ஷத்திரங்கள் தாம் இறங்கி
பூப் பூவாய் ஒளிர்கிறதோ என்றெண்ணி
வான் வெளியிலே அதிசயிக்கின்றார்
முப்பத்து முக்கோடி தேவருமே!

நம் குலப் பெண்டிர் ஏற்றுகின்ற
தீபமெலாம் குலம் காக்க வேண்டித்தானே
குலவிளக்காய்  வந்த அவர் குளித்து
புத்தம் புது மலராய்  புத்தாடை

தாமணிந்து திரு விளக்கை  ஏற்றுதல்
நலமேயாம் தேவர்களும் மகிழ்ந்தே
ஆசீர்வாதங்களை கார் முகிலின் தூரல்களாய்த்
தூதனுப்பி மகிழ்வாரே கார்த்திகைப் பெருநாளில்

அன்புடன்
தமிழ்த்தேனீNo comments: