புத்தகக் கண்காட்சியில் 2013 என் நூல் " வெற்றிச் சக்கரம்" " முதற் ப்ரசவம் "
நான் அனேக நாடகங்களை எழுதி இயக்கி உள்ளேன். ஒரு முறை உடலும் உள்ளமும் சிலிர்க்கும்படியாக கௌரவிக்கப்பட்டேன்.
என் நாடகத்துக்கு தலைமை தாங்கி நடத்தவந்த எழுத்தாளர் டாக்டர் திரிபுர சுந்தரி எழுத்தாளர் லக்ஷ்மி அவர்கள் மேடையிலே
என்னை அழைத்து மிக வாஞ்சையாக என் தோளிலே கைபோட்டுக்கொண்டு ஒரு தாய் போல் என் நாடகத்தைப் பாராட்டிவிட்டு
முதற் பரிசும் வழங்கி கௌரவித்து ஒலிபெருக்கியிலே அறிவித்தார்கள் இப்போதும் அந்தக் குரல் காதிலே ஒலிக்கிறது
"இதோ இந்தக் கிருஷ்ணமாச்சாரி, எழுத்தாளரும் , என்னுடைய பால்ய ஸ்னேகிதியுமான திருமதி கமலம்மாள் ரங்கசாமி
அவர்களின் புதல்வர், திருமதி கமலம்மாள் ரங்கசாமிஅவர்களுக்கு இந்தக் குழந்தை கிருஷ்ணமாச்சாரி அவர்கள் பிறக்கும்
போது ப்ரசவ வைத்தியம் பார்த்த மருத்துவச்சி நான் ஆகவே இந்தக் கிருஷ்ணமாச்சாரி " என் கையில் பூத்த மலர் "
என்று கவித்துவமாக அவர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது.
நான் பிறந்த போது ப்ரசவம் பார்த்தவர் எழுத்தாளர் லக்க்ஷ்மி அவர்கள். இப்போது நான் ப்ரசவித்த குழந்தை " வெற்றிச் சக்கரம் "
நூல் மணிவாசகம் பதிப்பகத்தாரால் ப்ரசவம் பார்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே மணிவாசகம் பதிப்பகத்தாருக்கு
என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மணிவாசகம் பதிப்பகத்தார் ப்ரசவ வைத்தியம் பார்க்க உதவியாக இருந்த
திரு தீபம் திருமலை அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
இந்த நூல் வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்திய அம்பத்தூர் சிரிப்பரங்க நிர்வாகிகள், திரு சிரிப்பானந்தா என்கிற
திரு சம்பத் அவர்களுக்கும், பெரும் உதவியாக இருந்த திரு சித்திரைச் சிங்கர் அவர்களுக்கும் நூலை வெளியிட்டு சிறப்புரை
ஆற்றிய எக்ஸ்னோரா நிறுவனர் உயர்திரு திரு எம் பி நிர்மல் அவர்களுக்கும், வல்லமை மின் இதழில்
என்கதைகளை வெளியிட்டு ஒரு நூலாக வெளிவர உதவி நூலைப் பெற்றுக் கொண்டு நூல் அறிமுகம்
செய்த வல்லமை திரு அண்ணா கண்ணன் அவர்களுக்கும், ஒய்எம்சீஏ திரு பக்தவச்சலம் அவர்களுக்கும்
விழாவைச் சிறப்பித்த சிரிப்பரங்க அங்கத்தினர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் எழுத்துத் திறமையை ஊக்குவித்த தினம் ஒரு கவிதை, மின்தமிழ், மழலைகள், இல்லம், அன்புடன். பண்புடன் ,
தமிழ் நண்பர்கள்,முத்தமிழ், வல்லமை, தமிழ்வாசல்,தமிழ்ப்ரவாகம், குழும நண்பர்கள் அனைவருக்கும்
என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே நான் பெற்ற இந்தக் குழந்தை " வெற்றிச்சக்கரம் " எனும் நூல் மணிவாசகம் பதிப்பகத்தார் கையில் பூத்த மலர்.
இந்த நூல் " வெற்றிச் சக்கரம் " என் முதற்ப்ரசவம் . முதற் ப்ரசவத்தில் பிறந்த இந்தக் குழந்தையை
என்னுடைய "வெற்றிச் சக்கரம் " நூலை வருகின்ற புத்தகக் கண்காட்சியில்(2013)
ஸ்டால் எண் 139, ஸ்டால் எண் 140 ஆகிய இரு இடத்திலும் காணலாம்.
வாசகப் பெருமக்களும் நண்பர்களும் இந்த வெற்றிச் சக்கரம் நூலுக்கு பெரும் ஆதரவு தந்து
என்னையும் என் படைப்பையும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
அன்புடன்
தமிழ்த்தேனீ

1 comment:
வாழ்த்துகள்!
Post a Comment