திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Tuesday, September 18, 2012

வினாயக சதுர்த்தி


விக்னங்கள் தீர்க்கும் விக்ன வினாயகா

சங்கடங்கள் தீர்க்கும் சங்கட ஹரநாயகா

மடைதிறந்த வெள்ளம்போலுன் அருள் தந்து

தடைகள் அகற்றி தாமதம் நீக்கி காப்பதுன் கருணை

 

வேழமுகனே மோதகஹஸ்தனே  வித்தைக்கு அதிபதியே

ஆழ உன்னை மனதில் நினைத்தேன் மூப்பு தளை

அறுக்கும் முந்தி வினாயகா  காப்புகள்பாடித்

தோப்புக்கரணம் போட்டு துதித்தே வணங்குகின்றேன்

 

அருகம்புல்லில் அர்ச்சித்தே அருள் வேண்டியே

இரு கை இணைத்தே கூப்பித் தொழுதேன்

மோனத்தவம் இருந்து மோதகம் செய்து வைத்தேன்

ஞானத்தை அருளவேணும் ஞான வினாயகா

 

தொழுகையில் துதிக்கையில் நம்பிக்கை

கொண்டே நானும் உந்தன் தும்பிக்கை

வேண்டினேன் வெற்றியை அருள்வாய்

வெற்றி வினாயகா உன் தும்பிக்கை தூக்கி ஆசியருள்வாய்

அன்புடன்

தமிழ்த்தேனீ

No comments: