திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Tuesday, March 27, 2012

புதிய தலைமுறை

அன்பு நண்பர்களே நம் மதிப்பிற்குரிய திரு
மாலன் அவர்கள் புதிய தலைமுறை என்னும் பத்திரிகை நடத்தி வருகிறார், என்னுடைய  நண்பர் திரு கல்யாண்ஜீ  அவர்கள்  பொறுப்பாசிரியராக  அந்தப் பத்திரிகையிலே பணிபுரிகிறார்,

வருங்காலத் தலைமுறைகளை வழி நடத்தும் பத்திரிகை, நம் வருங்கால தலைமுறையினரைப் பற்றி, அவர்களின் வளமான  வருங்காலம் பற்றி யோசித்து  தொடங்கப்பட்டு அந்த நல்ல நோக்கிலே நடத்துகின்ற அந்தப் பத்திரிகையைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்,இந்தப் ” புதிய தலைமுறை” பத்திரிகையைப் போன்று தரமான  பத்திரிகைகள் அதிகம் வரவேண்டும்

வருங்காலத்தில் நம் புதிய தலைமுறைகள் எப்படி இருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன், அவர்களுக்கு நம் வழிகாட்டுதல் முறையாக இருக்கிறதா? நாம் கூறுவதை அவர்கள் கவனிக்கிறார்களா,
நாம் கூறுவது  அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா. அல்லது அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு  நாம் செய்திகளை அளிக்கிறோமா,

என்றெல்லாம் சிந்தித்த போது  இரு நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன
1, என்னுடைய மகள் வயிற்றுப் பேரன் மாஸ்டர் ஹயக்ரீவ்  முதல் வகுப்பில் படிக்கும்போது  அவனுடைய ஆசிரியை அவனை ஏ,பீ சீ டீ முழுவதையும் எழுதச் சொல்லி உள்ளார்கள், அவனும், எழுதினான், மறுபடியும் அவனுடைய ஆசிரியை அதே ஏபீசீடீயை தலைகீழாக எழுதச் சொல்லி இருக்கிறார்கள்
தன்னுடைய பலகையை நேராகப் பிடித்த படி டீச்சர் இப்போது
இது Assending Order என்று கூறிவிட்டு ,பலகையை தலைகீழாகப் பிடித்துக்காட்டி   இது desending Order என்று கூறியதைக் கேட்டு வகுப்பில் உள்ள அனைவரும், ஆசிரியையும்  சிரித்துவிட்டார்களாம்,

2, என் சிறிய பெண்ணுக்கு முதன் முதலாகப் பிறந்து ஐந்து மாதங்கள் ஆகியுள்ள “ஆரியன்”  என்னும் என்  பேரன் கவிழ்ந்து கொள்ளத் தெரிந்து கொண்டதை ஒட்டி அவனுக்கு முன்னால் ஒரு விளையாட்டு பொம்மையை வைத்து அவனுக்கு தவழ்வதற்கு ஊக்கம் அளித்திருக்கிறாள் என் மகள்,  ஆனால் அவன் என்ன செய்தான் தெரியுமா? இருந்த இடத்தை விட்டு நகராமல், அவன் படுத்திருந்த துணியைக் கையால் தன்னருகே இழுத்து அந்தப் பொம்மையை எடுத்துவிட்டான் !,

பெரிய பெண்ணின் மகன் மாஸ்டர் ஹரீஷ்   பத்து வயது  அவன் ஒருநாள் என்னிடம் வந்து  எதற்காக  எல்லா இடங்களிலும் கோயில் இருக்கிறது,ஒரு இடத்தில் இருந்தால் போதுமல்லவா  என்று கேட்டான், பிள்ளைகள் இப்போதெல்லாம் அப்பனுக்கு பாடம் சொன்ன முருகனைப் போல் யோசிக்கிறார்கள்,
அதற்கு நான் அவன் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு  யோசித்து பதில் கூறினேன்,   ஒரு பெரிய இடத்தில் அதாவது மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையம் இருக்கிறது, அது ஒரு பெரிய சக்தி ,அந்தப் பெரிய சக்தியை நாம் நேரிடையாக  நம் மின் விசிறியை ஓட்ட பயன்படுத்தினால் மின் விசிறி அதிக மின்சாரத்தின் சக்தி தாளாமல்  எரிந்து போய்விடும்,

ஆகவே மின்சாரத்தை  வேண்டிய  அளவு அளிக்க எல்லா இடங்களிலும் (Transformer)மின்சாரத்தை முறையாக பகிர்ந்தளிக்கும் கருவியைப் பொருத்தி இருக்கிறார்கள் அல்லவா  ,அது போல  ஒரு பெரிய மஹா சக்தியை எல்லோரும் நேரிடையாக போய் காண முடியாது, கண்டாலும் அதன் மொத்த சக்தியை தாங்கும் திறன் நமக்கு கிடையாது,   அனைவராலும் அந்தப் பெரிய சக்தி இருக்கும் ஆலையத்துக்கு  செல்லவும் முடியாது, அதனால்தான்  ஆங்காங்கே சிறிய கோயில்களை  (Transformer) போல கட்டியிருக்கிறார்கள்  என்று கூறினேன், அவனும் புரிந்துகொண்டு  ஒப்புக்கொண்டான்,

அமெரிக்காவில் இருக்கும் மகனின் பிள்ளை மாஸ்டர் நிகில் அவர்களை     குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள், அந்தப் பள்ளி இன்னும் பழகாத நிலையில்  தன் அப்பாவிடம் வியாழக்கிழமை காலையில் எழுந்து   அப்பா  இன்று வாரக்கடைசீ  அதனால் பள்ளி கிடையாது  என்கிறானாம், வெள்ளிக்கிழமைதான் வாரக் கடைசீ என்று அவனுக்கு புரியவைக்க என் மகன் படாத பாடு பட்டிருக்கிறான்,

யோசிக்க வைக்கிறார்கள் வருங்காலத் தலைமுறையினர்
நாம் ஜாக்கிறதையாக இருக்க வேண்டும் போலுள்ளது
கேள்விகள் கேட்பார்கள், அவர்களுக்கு அவர்கள் ஒப்புக்கொள்ளும்படி பதில் கூற நாம் தயாராய் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது புதிய தலைமுறைகள், யோசிப்போம்

அன்புடன்

தமிழ்த்தேனீ

3 comments:

சி.பி.செந்தில்குமார் said...

உண்மைதான்.10 ரூபாய்க்கு அதன் உள்ளடக்கம் அருமை

sinthikkama siringa said...

உண்மைதான்இளையதலைமுறைக்கு வழிகாட்ட

நாம் தான் நிறைய சிந்திக்கணும்

ராகம் ரமேஷ் குமார் திருச்சி

sinthikkama siringa said...

உங்கள் ப்ளோகின் மூலம்

புதுமைப்பித்தன் படித்தது சுகம்.

உங்கள் சேவையை எவ்வளவு

பாராட்டினாலும் தகும்

Ragam Ramesh kumar Trichy