திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Monday, October 5, 2009

கனவுப் ப்ரபஞ்சம்

நேற்று வழக்கமான பணிகள் முடிந்து
தூங்கப் போனேன், நல்ல தூக்கம்

அதன் நடுவே நாம் தூங்குகையில் நம் ஆத்மா லோக சஞ்சாரம் செய்யக் கிளம்பிவிட்டது போலும்
மனுஷன் கொஞ்சம் அசந்தா போதும்
அவனோட ஆத்மாவே அவனை விட்டுட்டு சுற்றுலா கிளம்பிவிடுகிறது,அப்படி இருக்க யாரை நம்புவது.?

அது போல ஆதமா சுற்றுலா செல்லும்போதுதான் கனவுகள் வரும், அந்த ஆத்மா எங்கெல்லாம் போகிறதோ, யாரையெல்லாம் பார்க்கிறதோ,
அந்த செயல்களின் தொடர்பாக நமக்கு கனவுகள் வரும் என்று நினைக்கிறேன்,

நேற்று என்னவோ தெரியவில்லை எனக்கும் என் தந்தையார் திருவாளர் ரங்கஸ்வாமி ஐய்யங்கார் அவர்களுக்கும் ஒரு சந்திப்பு,
ஏதேதோ பழைய நிகழ்வுகளின் சிந்தனைகள்

காலையில் கண் விழித்தேன்
காலைக்கடன்களை முடித்துவிட்டு கணிணியைத் திறந்தேன்

என்னுடைய கணிணியின் திரையில்,
எம் எஸ் என், யாஹூ, கூகுல்டாக், என்று ஒவ்வொன்றாக தோன்ற ஆரம்பித்தது, ஏதோ ஆகாயத்தில் நகஷத்திரங்கள் மின்னுவது போல ஒவ்வொன்றாக மின்னத் தொடங்கிற்று

எம் எஸ் என் மெசஞ்சர் தோன்றியது

அதில் ரங்கஸ்வாமி தொடர்பிலிருக்கிறார் என்று காட்டியது

ப்ரபஞ்சத்துக்கும் நம் கணினிக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்று புலனானது

என்பெயர் கிருஷ்ணமாச்சாரி ரங்கஸ்வாமி

அன்புடன்
தமிழ்த்தேனீ


Post a Comment