திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Wednesday, October 3, 2007

மந்திரமும் தந்திரமும்

மந்திரமாவது

மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம்,துளசி வேப்பிலை, மஞ்ஜள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான் ஆகவே நாம் அவைகளை கையில் வைத்துக் கொண்டு மனமார ப்ரார்த்தனை செய்து அவகளை வணங்கிவிட்டு உபயோகித்தால் எப்படிப்பட்ட வியாதியும் ,த்ருஷ்டிகளும் விலகும் என்பது நான் கண்கூடாகப் கண்டவன் நான்
என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்....?
மானசா என்கிர ஜரத்காரு தேவி என்கிற சக்தியின் ஸ்லோகம் ஒன்று இருக்கிறது
" ஓம் ஐம் ஹரீம் ஸ்ரீரீம் க்லீம் ஜம் மனஸா தேவ்யை நமஹ: "
கையில் கொஞ்ஜம் திரு நீரு வைத்துக் கொண்டு இந்த ஸ்லோகத்தை மானசீகமாக ,ஜரத் காரு தேவியைப் ப்ரார்த்தித்து 108 தடவைகள் உச்சரித்து
பயத்தால் ,அல்லது த்ருஷ்டியால் அழும் குழந்தைகளுக்கு நெற்றியில் இந்த திருநீற்றினை இட்டுப் பாருங்கள் உடனே பலன் கிடைக்கும் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு விளையாடத் துவங்கும்
இது என் அனுபவ பூர்வமான உண்மை

" மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம்,துளசி வேப்பிலை, மஞ்ஜள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான் "

மந்திர ஒலிகள்
அமைதி,சாந்தம்,ஆழ்நிலை உட்ப்ரயானம்,இவை அத்தனைக்கும்
முந்தைய படிதான் ஒலி,சப்தம்,மொழி,எல்லாமே
ஒவ்வொரு மனிதனும் பிறப்பதிலிருந்து
பயபக்தி, இறை கானங்கள்,உச்சாடனங்கள் இவைகள் போதிக்கப் பட்டு வளர்க்கப் படுகிறான்
இறைவனை நம்புவோர்கள் மட்டுமே இதை நம்புவார்கள் ஆனால் இவை எல்லாமே ஒவ்வொரு படிக்கட்டுக்கள் ஒவ்வொன்றாக தாண்டவேண்டும், அமைதியாக, சாந்தமாக, ஆழ்நிலை உட்ப்ரயாணம் செய்ய,
மந்திர உச்சாடனத்துக்கு நிச்சயமாக பலன் இருக்கிறது அதன் ஒலி அதிர்வுகள் ஏற்படுத்தும் ஒன்று கூடிய மஹாசக்தி, எப்படிப்பட்ட நல்ல விளைவுகளையும் மிக எளிதாக ஏற்படுத்தும் நம்முடைய விஞ்ஜானிகள் கண்டுபிடித்த அத்தனை விஞ்ஞான முன்னேற்றமும்
"கண்டு பிடிக்கப் பட்டவையே, உருவாக்கப் பட்டவை அல்ல "
ஆக ஏற்கெனெவே இந்தப் ப்ரபஞ்ஜத்தில் இருப்பதை விக்ஞானிகள் அல்லது மெய்ஞானிகள் கண்டு பிடிக்கிறார்கள் அவ்வளவே
ஒவ்வொரு விக்ஞானி ஒவ்வொருகண்டுபிடிப்பை நிகழ்த்தும் போதும் அவர்களுடைய அறிய செயல் திறன் அதிர்வுகளும் ப்ரபஞ்ஜத்தின் இயற்கையான அதிர்வுகளும் அல்லது அலை வரிசைகளும் ஒரு இணையாக சந்திக்கும் போது நிகழ்வதுதான் கண்டுபிடிப்புகள்
அல்லது மெய்ஞானிகள் தங்களுடைய ஆசார அனுஷ்டான வழிமுறைகளால் தம்மை உணர்ந்து உள்ளுக்குள்ளே இருக்கும் ஆன்ம சக்தியை அடைந்து அந்த ஆத்ம சக்தியின் மூலமாக ப்ரபஞ்ஜத்தின் உன்னதமான சக்தியின் அலைவரிசையை தொட்ர்பு கொண்டு தம்முடைய ஆத்ம சக்தியை அந்த அலைவரிசையோடு ஒத்துப் போகச் செய்து அதன் மூலமாக தாம் உணர்ந்த அற்புதங்களை கண்டு பிடிப்பாக மக்களுக்கு சொல்லி அவர்களை உய்யச்செய்வது இவை தான், மந்திர அல்லது தந்திர அல்லது விக்ஞான அல்லது, மெய்ஞான வழிகள்

ப்ரசாதம்

இறைவனை நம்புகிறவர்கள் மட்டுமே ப்ரசாதம் என்னும் சொல்லையே நம்புவர்
ப்ரசாதம் என்பது நாம் அதாவது மானிடர்களாகிய நாம் நம்மைப் படைக்கும் முன்னரே நாம் உயிர் வாழ்வதற்காக, பிணியில்லாமல் இருப்பதற்காக,அப்படியும் மீறி பிணிகள் வந்தால் அவற்றைப் போக்கிக் கொள்வதற்காக அனைத்து வழிகளையும் படைத்த இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்தான்
அதிலும் குறிப்பாக ப்ரசாதம் என்கிற வார்த்தையை நம்புகிறவர்களிடம் நான் நகைச் சுவையாக ஒரு கேள்வி கேட்பதுண்டு
ப்ரசாதமாக படைக்கும் உணவை நீங்கள் எந்த தெய்வத்துக்குப் படைக்கிறிர்களோ அந்த தெய்வம் உண்மையிலேயே உண்டு மிகுதியை உங்களுக்கு ப்ரசாதமாக தருகிறது என்று நம்புகிறீர்களா.......? என்று
ஆமாம் நம்புகிறோம் என்று பதில் சொன்னவர்களிடம் நகைச்சுவையாக மீண்டும் அப்படியானல் சரி நீங்கள் படைக்கும் உணவுப் பொருட்களை உண்மையிலேயே இறைவன் உண்பதானால் நீங்கள் அளித்த உணவின் அளவு கொஞ்ஜமாவது குறைந்திருக்க வேண்டுமே என்று அதற்க்கு இதுவரை பதிலளித்தவர்கள் இல்லை, நட்ட கல்லும் தெய்வமே நம்முள் நாதன் இருந்தால் ,நம்பிக்கைதான் வாழ்க்கை மேலும் நாம் அளிக்கும் எதுவாக இருந்தாலும் சரி நம்மைப் படைத்த இறைவனுக்குநாம் செலுத்தும் நன்றிக் கடனாக நாமே ஏற்படுத்திக் கொண்ட விஷயங்கள்தான் ப்ரசாதம் படைப்பது என்பது உண்மையிலேயே நாம் படைப்பதை இறைவன் ஏற்றுக் கொண்டு இறைவன் அதை உண்ண ஆரம்பித்து விட்டால் நாம் அடுத்தமுறை படைப்போமா என்பது சந்தேகமே
ப்ரசாதம் என்பதன் தாத்பரியமே நாம் செலுத்தும் நன்றிக் கடன் ,மேலும் நம் நம்பிக்கை சர்வ வல்லமை படைத்த இறைவனுக்கு படைத்துவிட்டு நாம் சாப்பிட்டால் அந்த உணவு வகைகளில் ஏதேனும் தோஷங்கள்,அல்லது மருத்துவ நிபுணர்கள் கூறுவது போல ஏதேனும் ஒவ்வாமையான விஷயங்கள் இருக்குமானால் அவைகளை இறைவன் நீக்கிவிடுவான் என்னும் நம்பிக்கை இவ்வவளவே
"மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம்,துளசி,வேப்பிலை, மஞ்ஜள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான் "
அதே இறைவன் இவை எல்லாவற்றையும் உபயோகித்து பலன் அடையும் சக்தியையும் நமக்களித்திருக்கிறான்
ஆகவே நம்பிக்கை உள்ளவர்கள், அல்லது இறைவன் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் யார் உபயோகித்தாலும் இவை நிச்சயமாக பலன் தரும் வண்ணம் அருள் செய்திருக்கிறான் கருணை மனம் கொண்ட இறைவன்

திரு நீறு + திருநாமம்

திரு நீறு என்பதே பசுமாட்டின் சாணம் அதைக் காய வைத்து அதை நெருப்பிலிட்டு அதன் மூலமாக வரும் சாம்பல் பசுமாட்டின் சாணம் ஒரு கிருமி நாசினி என்று விக்ஞான பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம் அதனால்தான் நம் முன்னோர்கள் சுகாதாரம் கருதி பசுமாட்டின் சாணத்தை தண்ணீரிலே கலந்து தாங்கள் வாழும் பகுதிகளில் தெளித்து நோய்க் கிருமிகளிடமிருந்து ஓரளவு தப்பித்து வாழ்ந்தனர் நம்முடைய மூத்தோர்களால் மெய்ஞ்ஞானம் என்று சொல்லப் பட்ட அனைத்துமே விக்ஞானம்தான் அக்காலத்தில் மக்களுக்கு விக்ஞானம் என்றால் புரியாது அதனால் மெய்ஞானம் என்று சொல்லி வைத்தனர் நான் ஒரு கவிதையில்
" வேதியல் படித்தால் தெரியும், வேதம் படித்தாலும் புரியும், வேதியல் விந்தை, -வேதம் தான் வேதியலின் தந்தை, வேதம், வேதியலின் வர்க மூலம், "
என்று எழுதி உள்ளேன் இயற்கையாகவே கிருமி நாசினியாக செயல் படும் விபூதி,திருநீறு இவைகளை நாம் கையில் வைத்துக் கொண்டு மந்திர உருவேற்றினால் இன்னும் கூடுதலாக சக்தி பெற்று நம்மை பல நோய்களிலிருந்து காப்பாற்றும் என்பதில் சந்தேகமே இல்லை
அதே போல் வைணவர்கள் தரிக்கும் நாமம் என்று சொல்லப் படும் வெள்ளை கட்டி அதைக் குழைத்து நெற்றியிலே இட்டுக் கொள்ளும் போது நாமக்கட்டி என்று சொல்லப் படுகின்ற அதில் சுண்ணாம்பும் கலந்திருக்கின்ற காரணத்தால் நாமமும் அதன் நடுவிலே இட்டுக் கொள்ளும் ஸ்ரீ சூர்ணம் என்னும் சிவப்புக் கோடு மஞ்ஜள் என்னும் கிருமி நாசினியை உபயோகித்து உருவாக்கப் பட்டிருப்பதால் நாம் நம் நெற்றியில் இவைகளைத் தரிக்கும் போது நெற்றியின் நடுப் பகுதியான முக்கியமான சைனஸ் என்னும் நரம்புகளில் அனாவசியமாக சேரும் தண்ணீர் ந்மக்கு ஏற்படுத்தும் தலைவலி கழுத்து வலி போன்ற நோய்களை தடுக்கும் கிருமி நாசினியாக செயல் படுவதால் நம் முன்னோர்கள் முன்னரே அறிந்து தீர்கதரிசனத்துடன் கண்டு பிடித்து வைத்திருக்கும் இவைகளை இறைவன் ப்ரசாதமாக நாம் நினைத்து அணிவதனால் செயற்கையாக தயாரிக்கும் மாத்திரைகளை உபயோகிக்கும் நிலை நிச்சயமாக குறையும்
வில்வம் அரசமரம் ,வில்வ மரம் இவைகள் வெளியிடும் காற்று இயல்பாகவே மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்க வல்லது என்று விக்ஞானிகளே ஒத்துக் கொண்டுள்ளனர்
புற்று நோய் என்னும் கொடிய நோய் வில்வ இலைகளை தினமும் சேர்த்துக் கொண்டால் தீர்ந்துவிடும் என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்வர்
சூட்டுக்கு சூடு தான் நல்வினை பயக்கும் மருந்து, ஆகவே நம் உடல் சூடுஅதிகமாகும்போது வில்வ இலையின் சூடு நம் உடலில் சேரும்போது இயல்பாகவே நாம் சமனப் பட்டு நோய் தீரும் அதை இறைவனுக்கு அவன் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டு ப்ரசாதமாக சேர்த்துக் கொண்டால் அவன் அருளும் சேர்ந்து நாம் பூரண குணமடைவோம் எனபதில் என்ன சந்தேகம்....?
அரச மரத்தின் காற்று பெண்களின் கர்பஸ்தானத்தில் இருக்கும் பல ஒவ்வாமைகளை சரி செய்து அவர்களுக்கு மகப் பேறு அளிக்க வல்லது அதனால்தான் பெரியவர்கள் மகப் பேறு கிட்டாதவர்களை அரச மரத்தை ப்ரதட்ஷனமாக வரச் செய்வர் .அவர்கள் ப்ரதட்ஷணமாக வரும்போது அந்த அரச மரக் காற்றில் இருக்கும் நல்ல விளைவுகள் ஏற்படுத்தக் கூடிய வாசம் அப் பெண்களுக்கு குறைகளை களைந்து புத்திரபாக்கியத்தை ஏற்படுத்தும் என்று சொல்லுகிறார்கள்


துளசி வேப்பிலை, மஞ்ஜள்,

சைவ ஆலயங்களில் திருநீறு,மற்றும் வில்வ இலைகள் அவைகளை ப்ரசாதமாக கொடுக்கும் வழக்கமும் வைணவ ஆலயங்களில் துளசிகலந்த தீர்த்தமும் மஞ்ஜள் கலந்த குங்குமமும் ப்ரசாதமாக அளிக்கும் வழக்கமும் மிகவும் யோசித்து பெரியோர்களால் ஏற்படுத்தப் பட்டது "முன்னோரெல்லாம் மூடர்களல்ல நமக்குண்டு பண்பாடு "என்கிற கண்ணதாசனின் கவிதை வரிகள் நமக்கு வலுவூட்டுகிறது சைவம் ,வைணவம் அதன் பின்னே சாக்தம் என்று சொல்லக்கூடிய சக்தி வழிபாட்டுக் காரர்கள் வேப்பிலையில் மஞ்ஜளைப் பூசி அதை அம்மனாகிய சக்திக்கு அணிவித்து அதையே ப்ரசாதமாக வாங்கி தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள்
நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் வேப்ப மரத்தை நட்டு வளர்ப்பார்கள் நல்ல வெய்யில் காலத்தில் வேப்ப மரத்தடியின் கீழ் அமர்ந்து பாருங்கள் எவ்வவளவு குளிர்ச்சியாய் இருக்கிறதென்று மஞ்ஜளும் வேப்பிலையும் குளிர்ச்சி ஆகவேதான் வேனல் காலங்களில் வரும் கட்டிகள் அம்மை போன்ற நோய்கள்தீர வேப்பிலையை யும் மஞ்ஜளையும் அரைத்து தடவுகின்றனர் வேப்பிலையும் மஞ்ஜளும் கருணையோடு நம்மைக் காக்கும் உலகமாதா வான அன்னையின் அருளும் அதில் சேரும்போது நோய்கள் தீரும் என்பதில் என்ன சந்தேகம்....?
சிவன்

சிவன் அபிஷேகப் பிரியன் ஏனென்றால் ஒரு கையில் அக்னி உடல் முழுவதும் சுடுகாட்டுச் சாம்பல் என்று நம்முடைய பாபங்களைத் தீர்க்க பெற்ற தாய் போல அவன் தாங்கிக் கொண்டிருக்கிறான் அத்தனை வெப்பத்தையும். அந்த வெப்பம் தணிய அவன் அபிஷேகப் பிரியனாயும் வில்வ இலை தரித்தும் பசுஞ்சாணத்தல் செய்யப்பட்ட திருநீறையும், குளிர்ச்சியான சந்திரனையும் கங்கையையும் தலையிலே அணிந்து கொண்டு பனிமலையிலே,அதாவது கையிலாயத்திலே வாசம் செய்கிறான்

மஹாவிஷ்ணு

மஹாவிஷ்ணு படுத்துக் கொண்டிருப்பதே பாற்க்கடலில் அவன் மிகக் குளிர்ச்சியானவன் ,இல்லையென்றால் எப்படி அவன் நாபிக் கமலத்திலிருந்து தாமரை முளைக்கும் அதில் எப்படி நான்முகன் அமரமுடியும்....? அதனால்தான் பக்தர்களின் குளிர் கால நோய்கள் தீர்க்க எல்லாக் குளிரையும் தான் தாங்கிக் கொண்டு இருப்பதால் அதைச் சமன் செய்ய அவன் திருமகளை மார்பிலே தாங்கிக் கொண்டு ஆடை ஆபரணங்கள் பூண்டு, சுகவாசி போல் தோற்றமளித்துக் கொண்டு நம் பாவங்கள் ,பிணிகள் இவைகளைப் போக்க நெய்,தேன் ,பால் ,பலகாரங்கள் இன்ன பிற வசதிகளைச் செய்து கொண்டு நம்மைக் காத்துக் கொண்டிருக்கிறான் ஆம் விஷ்ணு அலங்காரப் பிரியன் என்று சொல்வார்கள்

சக்தி


அது மஹா விஷ்ணுவாக இருக்கட்டும் ஈசன் சிவனாக இருக்கட்டும் அனைவருக்கும் சக்தியாய் ஒளிர்பவள் சக்தி அதனால்தான் சக்தியானவள் அனைவருக்கும் அருள்பாலிக்கும் படியாக மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம்,துளசி வேப்பிலை, மஞ்ஜள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான் என்று சொல்லக் கூடிய இறைவனுக்கே சக்தி கொடுப்பவள் அன்னை ஆதலால் தான் அவள் திருநீறு, வில்வம்,துளசி வேப்பிலை, மஞ்ஜள், ,குங்குமம் இவைகள் அனைத்துக்கும் சக்தி கொடுப்பவளாக அத்தனையையும் தான் தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு ப்ரசாதமாக அளித்துக் காக்கிறாள்
என்னை இந்த உன்னதமான கட்டுறைய எழுதவைத்த சக்தி,அன்னையின் அருள் அவள் திருவடி தொழுது இக் கட்டுரையை அளிக்கிறேன் அன்னை அருள் பாலிக்கட்டும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2 comments:

Maraboor J Chandrasekaran said...

Even though I dont read much of blogs nowadays and hate mongers swear by writing hatred against God and believers, your essay on prasadam was really good. I think I have seen you in TV serials. We can work together on many projects on spreading the might of Hinduism and its goodness.
Pls read www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com and http://reachhistory.blogspot.com and join our yahoo group: temple_cleaners. Sorry foir writing this comment in English due to paucity of time. I will reply next time in Tamil.

Krishnamachary Rangasamy தமிழ்த்தேனீ said...

06/02/2008 அன்புள்ள ஜெய.சந்திரசேகரன் அவர்களுக்கு , இனிய வணக்கம்
நான் இன்றுதான் உங்கள் கருத்தைப் படித்தேன்,நிச்சயமாக சேர்ந்து நாம் ஆன்மீகத்தைப் பற்றி எழுதலாம்
வரவேற்கிறேன்,அதே போல் உங்கள் பதிவுகளையும் படித்து கருத்துக்கள் எழுதுகிறேன்,ஆம் நான் தொலைக்காட்சித் தொடர்களிலும்,திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ