திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Tuesday, July 24, 2007

(யோசிப்போம்) 1.அர்த்தநாரீ


யோசிப்போம்் ”

அர்த்தநாரீ

எல்லா ஆண்களிடமும் - தேவசக்தியும் , அசுர சக்தியும்

சாத்வீகமும்,மூர்க்கமும் ,எல்லாப் பெண்களிடமும்-
தேவசக்தியும் , அசுர சக்தியும்

சாத்வீகமும்,மூர்க்கமும்,
இயற்கையாகவே உண்டு

நாம் எதை வளர்க்கிறோமோ அதற்குண்டான

பலன்தான் அடைய முடியும்

ஆகவே நம் வாழ்க்கை நம் கையில்் தான்

"கல்யாணம் என்கிற ஒரு புது பந்தத்தினால்

வெவ்வேறுகுடும்பப் பாரம்பரியம் இயல்புகள்,பழக்கவழக்கங்கள்

கொண்ட இருவர், அதாவது ,ஒரு ஆணும் ,பெண்ணும்

ஒரு கூறையில் ,ஒரே இடத்தில், இணைந்து வாழ ஆரம்பிக்கிறார்கள்

ஒருவரை ஒருவர் புறிந்து கொண்டு திருமணம் செய்து கொள்வது

என்பது நிச்சயமாக இயலாது,

முழுமையாகப் புறிந்து கொள்ளல் நிச்சயமாக முடியாது.......

,சுக, துக்கங்களிலும்,பங்கு கொண்டு , பல வருடங்கள்

ஒன்றாக வாழ்ந்த்தும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலே

வாழ்க்கையை முடிப்பவர்கள்தாம் மிக அதிகம் என்பது என்

அனுபவ பூர்வமான கூற்று,,........

ஆகவே ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் காதலித்து

திருமணம் செய்தாலும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட

திருமணம் என்றாலும்

தவறு கண்ட இடத்தில் ,தைரியமாக ஆனால் மனம்

புண்படாத வகையில் எடுத்துக் கூறி, தங்களை

தாங்களே சரி செய்து கொண்டு, சமப்படுத்திக் கொண்டு,

வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றிக் கொள்ளலாம்

அப்படியில்லாமல் தவறாக நினைத்துக் கொள்ளப்

போகிறார்களேஎன்று எண்ணி யதார்த்தமான உண்மைகளை

சொல்வதற்கு கூட தைரியமில்லாமல் இருந்துவிட்டு பிறகு

காலம் கடந்து வருத்தப் படுவதில் அர்த்தமில்லை.

திருமணமான சில காலங்களுக்குள்ளேயே

விவாகரத்து ஏற்படும் சமீபகால நிகழ்வுகளுக்கு

மேற்கூறிய

தைரியமில்லாமைதான் மூல காரணம்

ஒரே கூறையின் கீழ் சேர்ந்து வாழ ஆரம்பிக்கும்பொழுதே

ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ ஆரம்பிக்கிறோம்

ஆதலினால் தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் ,

தனித் தனி அந்தரங்கம்,தனித் தனி சுதந்திரம்

எல்லாம் உண்டு என்று ஒப்புக்கொண்டாலும்

தனித் தனி சுய மரியாதை உண்டு

என்று ஒப்புக் கொண்டாலும்

பொதுவான மரியாதை,பொதுவான சுதந்திரம்

அன்பு, பாசம், நேசம்,எல்லாம்

ஏற்படும் காலம்தான் தாம்பத்தியக் காலம்

அதற்குப் பெயர்தான்

“தாம்பத்தியம்“-

தாம் பத்தியம் இருக்கும்

இனிமையான தாம்பத்தியம்

தாம்பத்தியங்கள் வெறும் ஒப்பந்த்தங்களாக மாறக் கூடாது

இதைப் புறிந்து கொள்ளாமல்

அவர் விஷயத்தில் நான் தலையிடமாட்டேன்

அவள் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன்

என்று மூன்றாம் மனைதர்களைப் போல ஒதுங்கி ஒதுங்கி

வாழ்வது,நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுவது

விபரீதமாகும்

அழ அழச் சொல்பவர் தமர் என்று ஒரு பழ மொழி உண்டு

அதற்குப் பொருள்

நாம் சொல்லும் போது அவர்களுக்கு கோபம் வந்தாலும்,

வருத்தம் வந்தாலும், அதற்காக நம்மை அவர்கள்

உதாசீனப் படுத்தினாலும் அவர்களுக்கும்

நமக்கும் நன்மை பயக்கக் கூடிய விஷயங்களை

தைரியமாக சரியான நேரத்தில் எடுத்துச் சொல்லி

புரியவைப்பது

தெரிந்தோ தெரியாமலோ, தவறான பாதையில்

செல்பவர்களை தட்டிக் கேட்கவும் ,

சரியான பாதையில் நடப்பவர்களை தட்டிக் கொடுக்கவும்

நிச்சயமாக தைரியம் வரவேண்டும், அல்லது

அந்த தைரியத்தை வரவழைத்துக் கொள்ளவேண்டும்

அப்போதுதான் அவர்களையும் அழிவிலிருந்து காப்பாற்றி

நம்மையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்

எவ்வளவு சொன்னாலும் கேட்காதவர்களை

யாரும் மாற்ற முடியாது காலம்தான் ,

அவர்களுடைய அனுபவந்தான்

அவர்களுக்கு புறிய வைக்கவேண்டும்

இச்சகம் பேசுவது என்று ஒன்று உண்டு

கேட்பவர்களுக்கு மிகவும் இதமாக,இனிமையாக இருக்கும்

சந்தோஷமாக இருக்கும் கேட்கும் பொழுது

ஆனால் சொல்பவர்களுக்கு உடனடியான லாபங்களையும்

கேட்பவர்களுக்கு பிற்காலத்தில் படு பயங்கரமான வீழ்ச்சியையும்

நஷ்டங்களையும் ஏற்படுத்தும் இச்சகம்

இந்த இரண்டிற்க்கும் உள்ள வேறுபாடுகளை உணர வேண்டும்

இதை உணராதவர்கள் தாம் அவசரத் திருமணங்கள் புரிதல்,

உடனடி விவாகரத்து புரிதல் என்கிற நிர்பந்த்தத்துக்கு ஆட்படுகிறார்கள்

அர்த்தநாரீ

அர்த்த என்றால் பாதி, நாரீ என்றால் பெண்

பாதி சக்தி ஆண்- சிவம், பாதி சக்தி பெண் -சக்தி

சிவன் பாதி சக்தி பாதி இணைந்து தான்

மொத்த சக்தியும்உருவாகிறது

இந்த சிவமும் சக்தியும் இணைந்ததுதான்

அர்த்தமுள்ள அர்த்த நாரீ

அர்த்தமுள்ள முழுமை பெறும் அர்த்த நாரீ

இதில் விக்ஞானப் ப்ரகாரமும்,ஆன்மீகப் ப்ரகாரமும்

நிறைய அர்த்தங்கள் உள்ளது

ஆணும் பெண்ணும் கலக்காவிட்டால் அங்கு

உயிர்கள் உருவாக முடியாது

உலகில் பிறந்த எந்தப் பிறப்பும் ஆண் தன்மையும்,

பெண்தன்மையும் கலந்து பிறந்ததே

ஆண் தன்மை உள்ள பெண்களும் உண்டு

பெண்தன்மை கொண்ட ஆண்களும் உண்டு

ஆண்மைகலக்காத பெண்ணும் ,பெண்மை கலக்காத ஆணும்

முழுமை பெறவே முடியாது

ஆணுக்குரிய தன்மை பெண்ணுக்குரிய தன்மை

இரண்டும் விகிதாசாரக் கலப்பில் வித்தியாசப் படலாம்

ஆனால் கலப்பு இல்லாமல் இருக்கவே முடியாது

அந்த விகிதாசாரம் எந்த அளவில் இருந்தால்

ஊனமில்லாமல் பிறக்கும் என்கிற

அளவு கோலைத்தான் ஆன்மீகத்தில்

“ஜாதகப் பொருத்தம்” என்றும்

விக்ஞானத்தில் ’’ உடற்கூறுப் பொருத்தம் “

என்றும் சொல்கிறார்கள்

ஆகவே ஆண்தன்மையோடு கலக்கும்

பெண் தன்மையின்,

அல்லது பெண்தன்மையோடு கலக்கும்

ஆண்தன்மையின்,

விகிதாசார மாறுதல், ஏற்றதாழ்வு, இவைகளினால்தான்

ஆண் என்றோ பெண் என்றோ

அல்லது இரண்டிற்க்கும் இடைப்பட்ட படைப்பான

அலி (அரவாணிகள்) என்றோ ஆகிறது

ஆகவே எந்த உயிரினமும் கேலிப் பொருளல்ல

ஜாதகத்தில்

ராசிப் பொருத்தம், நக்ஷத்திரப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம்,

யோனிப் பொருத்தம், தினப்பொருத்தம் ,மஹேந்திரப் பொருத்தம்,

இன்னும் பிற பொருத்தங்கள்

விக்ஞானத்தில் ரத்தத்திலுள்ள, வகைப் பொருத்தம் ,

அதாவது உடற்கூறின்மூலமாகிய,

மரபணுப் பொருத்தம்

குடும்ப பாரம்பரியப் பொருத்தம்

இன்னும் பிற பொருத்தங்கள்

இவைகளைக் கணக்கில் கொண்டுதான்

ஒரே கோத்திரத்தில் கல்யாணம் செய்யக் கூடாது

என்றும் பொருத்தங்கள் சரியாக இல்லையென்றால்

கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் சொல்கிறார்கள்

இந்த உலகமே கணித மயமானது ,இங்கு பெரியோர்களால்

வகுக்கப் பட்ட சாத்திரங்கள், விக்ஞானிகளால் உருவாக்கப்பட்ட

நவீன வழிமுறைகள் எல்லாமே பல

வகையான கணிப்புகள், கணக்குகள்தாம்,

நமக்குப் புரியவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக

எதையுமே ஒப்புக் கொள்ளாமல் ,

எந்த வழியில் பயணிக்கப் போகிறோம் என்னும் தெளிவில்லாமல்

நம்மை நாமே குழப்பிக் கொள்வதால் ஏற்படும்

விளைவுகள்தாம், தடுமாற்றங்கள்தான் இப்போதைய

விவாகரத்துகளுக்கு மூல காரணம்

இந்தப் ப்ரபஞ்ஜத்தில் தானே நாம் வாழுகிறோம்

இந்தப் ப்ரபஞ்ஜத்துக்கும் நம்முடைய உயிர்,ஆன்மா

உயிரணுக்கள் எல்லாவற்றிர்க்கும் தொடர்பு உண்டு

பஞ்ஜ பூதங்கள்,அல்லது இயற்கை எனும்

பூமி,ஆகாயம்,நீர்,நெருப்பு,காற்று

இவை அனைத்துதும் இணைந்ததுதான்

ப்ரபஞ்ஜமும் அதிலிருக்கும் எல்லா உயிரினமும்

யோசனை செய்து பார்த்தால் புரியும்

இந்த ஐந்து இயற்கையும் ஒன்று

சேராமல் நம்முடன் ஒத்துழைக்காமல்

நம்மால் எதையுமே செய்ய முடியாது

அதேபோல் ஒவ்வொரு ஜீவராசியும் மீண்டும்

இந்த பஞ்ஜ பூதங்களுடன் இணைந்துதான் மீண்டும் உருவாகிறது

இநத இயற்கைதான் அர்த்தநாரீ தத்துவம்

பெண்ணுக்குள்ளேஆணும் உண்டு ஆணுக்குள்ளே பெண்ணும் உண்டு

ஒன்றுக்குள் இரண்டும் ஒன்றாகி பின் இரண்டாகி

பின் பலவாகி மீண்டும் ஒன்றாக இணைவதுதான்

உலக நியதி, அதுதான் அர்த்தநாரீ தத்துவம்

“வானாகி மண்ணாகி,வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யான் எனது என்று அவர் அவரைக்

கூத்தாட்டுவானாகி நின்றாயை

என் சொல்லி வாழ்த்துவனே....?”

என்கிற

மாணிக்க வாசகப் பெருமானின் தெய்வ வாக்கு

சொல்லும் ரகசியமும் இதுதான்

வேதியல் படித்தாலும்,வேதம்படித்தாலும் தெரியும்,

வேதம் தான் வேதியலின் தந்தை

வேதம் வேதியலின் வர்க மூலம்

இங்கு உயர் திரு கண்ணதாசன் எழுதிய

முன்னோரெல்லாம் மூடர்களல்ல நமக்குண்டு பண்பாடு

என்கிற பாடல் வரிகள்தான் நினைவிற்கு வருகிறது

அர்த்தநாரீ போல் இணைந்து அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வோம்

ஆர்.கிருஷ்ணமாச்சாரி

அன்புடன்

தமிழ்த் தேனீ

www.thamizthenee.blogspot.com


No comments: