திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, July 26, 2007

காதல்

பூக்கள்
பூக்கள் முகிழ்ப்பது போல காதலும்
முகிழ்க்கிறது ஒவ்வொரு வினாடியும்
பூக்களைப் போல காதலுக்கும்
ஆயுள் குறைவுதான் பூக்கள்
இதழ் மூடிக் காயாகி கனியாகி
மீண்டும் ஒரு மரத்தின் வித்தாக
மாறும் ஆனால் அது மீண்டும்
பூவாக முடியாது காதலும் அது போல
காதலிக்கும் பருவம் தாண்டி
கடி மணம் நிகழ்ந்த பின்
இல்லறத் தேன் அருந்தி
வம்ச விருத்தித் தவம் செய்யும்
மீண்டும் காதலாக , கன்னியாக ,
உருமாற முடியாது ,
பூக்களும் காதலும் ஒன்று
ஒரு முறை அன்புடன்
தோன்றுதல்தான் அழகு

அன்புடன்
தமிழ்தேனீ

பூக்களும் காதலும் ஒன்று
ஒரு முறை தோன்றுதல்தான் அழகு

நான் காதல் வேண்டாமென்று கூறவே இல்லை
காதல் நிச்சயமாக இருக்கிறது ,
உண்மையான காதலுக்கு ஆயுள் அதிகம்,
காதல் என்று மட்டும் இல்லையென்றால்
இந்தப் ப்ரபச்ஞ்ஜமே வளர்ந்திருக்காது


காதல் என்பது வேறு, பருவக் கிளர்ச்சி என்பது வேறு
இரண்டையும் சரியாகப் புறிந்து கொள்ளாமல்
பருவக் கிளர்ச்சியை காதல் என்று
எண்ணி ஏமாந்து போகவேண்டாம்
என்று தான் சொல்லுகிறேன்


இநத தவறான புறிந்து கொள்ளுதலால்
இயற்கையின் மாறுபாட்டால் உடற்கூறு
தன்மையால் , பாதிக்கப் படுவது பெண்களே
காதலித்த இருவருமே தங்கள் புனிதத்
தன்மையை கல்யாணத்துக்கு முன்னமே
இழக்கக் கூடாது,அப்படி இழந்த்தவர்கள்
அவர்களுக்கு குழந்தை பிறந்து
அது காதலிக்கும்போது பதறுகிறார்கள் ,

ஒவ்வொரு ஆணும்
(என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்)


தன் மனைவி பத்தினியாக இருக்க வேண்டும்
என்றுதானே நினைக்கிறான்


ஒவ்வொரு பெண்ணும் தன் கணவன் தன்னைத்
தவிற வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல்
இருக்க வேண்டும் என்று தானே நினைக்கிறாள்
அப்பொழுது கல்யாணத்துக்கு முன்னால்
நாம் எப்படி இருக்க வேண்டும் எனபதை
தீர்மானிக்க வேண்டுமல்லவா?
காதல் மிகவும் புனிதமானது
,
மாற்றான் தோட்டத்து மல்லிகை மணந்தாலும்
அவைகளின் மீது நமக்கு உரிமை கிடையாது
என்பதை நினைவில் வைத்துக் கொண்டு
காதலியுங்கள் ,கடைசீ வரை நன்றாக
இணைந்து வாழுங்கள் என்றுதான்
சொல்கிறேன்
மனிதர்களில் ஆணோ பெண்னோ
எல்லோருக்குமே நாலு நல்ல குணம்
இருக்கும், நாலு கெட்ட குணம் இருக்கும்
இதைப் புறிந்து கொண்டு அதற்குத் தகுந்தவாறு
பணிந்தோ,அல்லது இதமாகப் புரியவைத்தோ,
ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து
கடைசீவரை இணைந்து வாழுங்கள்
இதுதான் காதல்


காதலித்து
ஒருவருக்கு ஒருவர்தான் என்று தீர்மானமாக
முடிவு செய்து இணைந்து,இயைந்து வாழ்வோம்
இணை பிரியாமல் வாழ்வோம்


காதலிப்போம், காதல் உண்டு காதல் நிச்சயமாக உண்டு
காதலையே காதலிப்போம்

காதலை,காதல் கவிதைகளை இரசித்து

முடித்த பிறகு என்னுள் எழுந்த

சிந்தனையை அப்படியே வடித்துள்ளேன்

சற்று அதிகப் ப்ரசங்கித் தனமாக தோன்றினாலும்

பொறுத்துக் கொண்டு யோசிப்போமே

காதல்

இது எத்தனை பேரை இப்படி கவிஞ்ஞனாக

மாற்றுகிறது, !!!!!!!!!! நானும் பார்க்கிறேன்

வாலிப வயது வந்தவுடன்

அதுவும் , ஒரு பெண்ணைக் காதலிக்க

ஆரம்பித்தவுடன்தான்,கற்பனை வருகிறது,

குழப்பம் வருகிற்து ,தெளிவு வருகிறது,

சிந்தனை வருகிறது ,சிரிப்பு வருகிறது

எல்லாம் வருகிறது,

அப்புறம் தான் செந்தமிழ் என்று ஒன்று

இருக்கிறது என்கிற ஞாபகமே வருகிறது

அப்புறம்தான் அவரவர் மொழியே

ஞாபகம் வருகிறது,அதற்குப் பின்தான்

கவிதை வருகிறது

கவிதை எழுதினாலே காதலைப் பற்றிய கவிதை

எழுதினால் தான் கவிஞ்ஞன் என்று ஒப்புக்

கொள்வார்களோ...? என்று பயம் வருகிறது,

எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்

எழுதுவதற்கு எத்தனையோ விஷயங்கள்

இன்னும் கற்பனை செய்யாமல்

கருத் தரிக்காமல் இருக்கிறது

காதலியுங்கள்,கவிதை எழுதுங்கள்

ஆனால் சிந்தியுங்கள்

நாமாவது சற்று மாறுபட்டு

தெளிவான, பொலிவான,வளமான,

எதிர்காலத் தேவை உணர்த்த

நாம் வாழும் முறையை புதுப்பிக்கும் படியான ,

நல்ல சிந்தனைகளைத் தூண்டும் வகையில்

கருத்துக்கள் தோய்ந்த கருக்களை ,

சிந்தனைக் கருக்களை உருவாக்குவோம்

பின் குறிப்பு:

(நானும் என் வாலிப வயதில் இப்படி யெல்லாம் செய்தவன்தான்,)

இது காதலைப் பற்றி என் அபிப்ராயம்

இப்போது நான் சொல்வது சிலரைப்

புண்படுத்தினாலும் அவர்கள்

என்னை மன்னிக்கட்டும்

ஆனால் நான் ஒரு பொதுக் கவி

மனதில் பட்ட உண்மைகளை மறைக்காமல்

சொல்லவேண்டும் என்ற என்ணமுடையவன்

என் அம்மா சொல்வார்கள்

"அழ அழச் சொல்பவர் தமர்

இதம் பேசுபவர்கள் த்ரோகிகள்" , என்று

நான் இதம் பேசப் போவது இல்லை

காதலிக்க ஆரம்பித்த்வுடனே நம்முடைய

மனது நம்மை அறியாமலே

கதாநாயக அந்தஸ்துக்குப் போய் விடுகிறது

நாம் காதலிக்கும் பொழுதே நம்மை

நம் சுயத்தை மறைக்க ஆரம்பித்து விடுகிறோம்

எது இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது

தம்மை அலங்கரித்துக் கொண்டு போய்

காதலிக்கிறார்கள்

தம்முடைய் உண்மையான அந்தஸ்த்தை மறைத்து

போலியாக நடித்து ஒருவரை ஒருவர்

ஏமாற்றிக் காதலிக்கிறார்கள்

ஆனால் காரியம் முடிந்தவுடன்

கசந்து போகிறது வாழ்க்கை

காதல் என்பதே இப்போது எனக்குத் தெரிந்து

இல்லை இல்லை இல்லவே இல்லை

வாழ்க்கையில் இணையாமலே பிறிந்து

போகிற காதல்எவ்வளவோ பரவாயில்லை

இணைந்த பிறகு தாம்பத்யம் ,

புனிதமான தாம்பத்யம்

இரு கைகள் இணைத்துக் இனி பிறியோம்

எத்துணை துயர் வரினும் என்று உறுதி பூண்டு

அக்னி தேவனின் முன்னாலே அத்தனை

பெரியவர்கள் முன்னாலே சத்தியம்

செய்து விட்டு அத்தனை பேரையும் முட்டாளாக்கி

தம்மையும் முட்டாளாக்கிக் கொண்டு

விவாகரத்து புறிகிறார்களே என்னால்

பொறுத்துக் கொள்ளவே முடியாத அக்கிரமம்

இத்தனைக்கும் காரணம்

காமத்தை காதல் என்று புறிந்து கொள்ளுதலும்

இயல்பான வாழ்க்கை நடைமுறை ஆர்வத்தை

காதல் என்று தவறாகப் புரிந்து கொள்ளுதலும் தான்

என்னுடைய அகராதியில்

ஒருவரை ஒருவர் உண்மையாய்ப்

புறிந்து கொள்ளல் தான் காதல்

அது இது வரையில் ஏற்படவே இல்லை

எல்லா மனிதரிடமும் சில கெட்டவைகளும்

சில நல்லவைகளும் இருக்கும்

இந்த ரகசியம் புறிந்து கொண்டு இணைந்து

இணக்கமாய் வாழ்க்கையை ,இன்பமோ துன்பமோ

இருவரும் பகிர்ந்து கொண்டு வாழ்தலே காதல்

திருமணம் ஆகி முப்பது ஆண்டுகள் இணைந்து

வாழ்ந்தாலும் முழுமையாக ஒருவரை ஒருவர்

புறிந்து கொள்ளுதல் முடியாது

இப்போது காதலித்து திருமணம் ,சில மாதங்களிலேயே

எல்லாம் புறிந்தாற்போல் விவாகரத்து

சரியே இல்லை

காதலின் அடித்தளமே சரியில்லை

புரிந்து கொள்ளுதலே காதலின் அடிப்படை

ஒன்றாக வாழ வேண்டும் என்று தீர்மானமாக

முடிவெடுத்து முதலில் தங்களுடைய குறைகளை

தெரிய வைத்து பின் தெளிய வைத்து

தெளிவாக காதலித்தால் மட்டுமே

காதல் இனிக்கும்

காதலித்து பின் திருமணம் புரிந்தாலும்,

திருமணம் நடந்த பிறகு காதலித்தாலும்(மனைவியை)
ஒரே ஒரு சபதம் எடுக்க வேண்டும் இருவரும்

ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல்

வாழ்க்கைய தொடர,
காதலிக்கும் போது ஓரளவு புரிவது போல் இருக்கும்

ஆனால் புரியாது ,ஒருவரைப் பற்றி இன்னொருவருக்கு

திருமணம் ஆன பின்னர் ஓரளவு புரியும்

ஆனால் ஒன்றும் செய்ய முடியாது, எப்படி இருந்தாலும் அதற்கேற்றார்ப் போல் நடந்து கொண்டு வாழ்கையை இனிமையாக நடத்த வேண்டும் இத்தனைக்கும் மேலாக
பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப் பட்ட திருமணமாக இருந்தாலும், காதலித்து தானே செய்து கொண்ட திருமணமானாலும் இந்த தலைவிதி என்று

ஒன்று இருக்கிறதே அது தன் இஷ்டம் போலத்தான் நம்மைஆட்டுகிறது இதுதான் யதார்த்தம்

இது தலை விதியை நம்புபவர்களுக்கு

மட்டும் பொருந்தும்

இது என் எழுத்தல்ல குமுறல்

இளைஞ்ஞர்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்

கொள்ளவேண்டுமே என்கிற எதிர்காலக் கவலை

உண்மைக் காதல் பெருகட்டும்

இப்படிக்குத்

தமிழ்த் தேனீ

பண்ட மாற்று,தள்ளுபடி அனியாயம

அன்பர்களே பல காலமாக ஒரு அனியாயம் நடந்து கொண்டிருக்கிறது
பொது மக்களை எல்லோருமே சுரண்டுகிறார்கள்
சமீபத்தில் என் மனைவி அரிசி வேகும் குக்கர் பண்ட மாற்று முறையில்
தள்ளுபடி விற்பனை நட்க்கிறது ,நாமும் அதில் பழைய குக்கரை
போட்டுவிட்டு புதியது வாங்குவோம் எனறாள்
நாங்களும் அந்த ப்ரபலமான அரிசி வேகவைக்கும் பாத்திரக் கடைக்கு சென்றோம்
அஙகே எங்களுடைய பழைய அரிசி வேகவைக்கும் பாத்திரத்தை
அடிமாடு விலைக்கு எடுத்துக் கொண்டு அவர்களுடைய புதிய
அரிசி வேகவைக்கும் பாத்திரத்தை அநியாயமான விலைக்கு எங்களிடம்
விற்றார்கள்
இது போல ஒவ்வொரு கடைக் காரர்களும் அவர்கள் விற்க்கும் பொருளுக்கு
உத்திரவாதம் கொடுக்கிறார்கள் ஆனால் கெட்டுப் போனால் அந்த யந்திரத்தின்
எந்த்த எந்த பாகங்கள் அடிக்கடி உடையுமோ கெட்டுப் போகுமோ அவையெல்லாம்
தவிர்த்து மற்ற பாகங்களுக்குதான் உத்திரவாதம் என்று சொல்லி மீண்டும்
நம்ம்மிடம்
அதிகப் பணம் வசூலிக்கிறார்கள்ு
நாம் பல வகையிலும் நட்டப் படுகிறோம்
வருடாந்திர உத்திரவாதம் கொடுக்கும் அத்தனை உற்பத்தியாளர்களும்
அவை கெட்டுப் போனால் அவைகளுக்கு எந்த பரிகாரமும் செய்வதில்லை
பணம் வாங்காமல்
அப்படியே நகை ,பொன் நகை அவைகளை நேற்று வாங்கி
இன்று அவர்களிடம் போய் திருப்பிக் கொடுத்தாலும்
நாம் கொடுக்கும் போதும் , வாங்கும் போதும் செய் கூலி சேதாரம் என்று
எல்லா செலவுகளையும் நம் தலையிலே கட்டி நம்மைக் கொள்ளை அடிக்கிறார்கள்
ஒரு சவரன் மோதிரம் வாங்கி ஒரு மாதம் தான் ஆகிறது
அதை மாற்ற வேண்டி கடைக்குப் போனோம்
அதே ஒரு சவரன் மோதிரம் புதியது அந்தப் பழைய மோதிரத்தின்
விலையை விட இரண்டாயிராம் ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கி வந்தோம்
மக்கள் பணம் கொள்ளை அடிக்கப் படுகிறதே ,அனியாயமாய் மக்கள் ஏமாற்றப்
படுகிறார்களே இவற்றை எப்படித் தடுப்பது மிகவும் கொடுமை
அன்புடன்
தமிழ்த் தேனீ
http://www.thamizthenee.blogspot.com/

கெட்ட சக்திகளும்,நல்ல சக்திகளும்

கெட்ட சக்திகளும்,நல்ல சக்திகளும் உலகிலே நல்ல சக்திகள் எப்போதும் நம்மைக் காக்கின்றனஎன்னுடன் பணி புரிந்து கொண்டிருந்த திரு கமலநாதன்என்பவர் ஒரு சம்பவம் சொன்னார்அவர் இருசக்கர வண்டியில் பணிக்கு வந்து போவார் அவருடைய வீடு புதிய ஆவடி சாலைக்கு அப்பால்அவர் தினமும் இரவு பணி முடிந்து(அப்போது எங்களுக்கு பணி நேரம் மாலை4.45 முதல் இரவு 2.15 வரை)2.15 இரவு நேரம் அவர் புதிய ஆவடி சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது அந்த சாலையின் முடிவில் ஒரு திருப்பம் வரும் , அங்கு போய்க் கொண்டிருக்கும் போதுதிடீரென்று அவருடய தலையை யாரோ அப்படியே அழுத்திஇரு சக்கர வண்டியின் கைப் பிடியில் அழுத்தி கொள்வதைஅவரால் உணர முடிந்திருக்கிறது ,தலயைத் தூக்கவே முடியாமலும் வண்டியை ஓட்டுவதை நிறுத்தவே இல்லை அவர், தலையை அழுத்திக் கொண்டிருந்த எதோ ஒரு சக்தி அவரைதிடீரென்று விடிவித்திருக்கிறது, அவர் தலையை தூக்குவதற்க்கும்அவரை தாண்டி ஒரு கன ரக வாகனம் பெரிய பின் இணைப்பு கொண்டது ,போனதைப் பார்த்திருக்கிறார் கமலநாபன்அப்புறம் தான் அவருக்கு உறைத்திருக்கிறது, அங்கு தடுக்கப் பட்ட ஒரு பயங்கரத்தின் விபரீதத்தை ஆமாம் கன ரக, பின் பெரிய இணைப்பு கொண்ட வாகனங்கள்திருப்பத்தில் திரும்பும்போது பின் இணைப்பு சற்று தாராளமாகவளைந்து திரும்பும்ஏதோ ஒரு நல்ல சக்தி அந்தக் கமலநாபனின் தலையை மட்டும்சரியான நேரத்தில் அழுத்தாமலிருந்தால் அவருடைய தலை தனியாகப் போய் விடும் அபாயத்தில் சிக்கி இருப்பார் அவர் செய்த புண்ணியமோ அவர்களுடைய பெற்றோர்கள்செய்த புண்ணியமோ அன்று அவரை ஒரு நல்ல சக்தி காப்பாற்றி இருக்கிறதுஆகவே என் அன்னை சொன்னது போல நல்ல சக்திகளும்தீய சக்திகளும் நிறைந்ததுதான் இப் ப்ரபஞ்ஜம்பேய் இருக்கிறதோ இல்லையோ அதைப் பற்றிய கற்பனைகள் தாராளமாகஉலா வருகிறது ,உண்மையில் பேய் ,பிசாசு ,இவைகளைப் பற்றிபேச ஆரம்பித்துவிட்டாலே மக்களுக்குகற்பனை பெருக ஆரம்பித்து விடும்அவரவர் ஒரு கதையை பலபேர்முன்னால் சொல்லிவிட்டு தனியே போகும் போது அவர் சொன்ன கற்பனைக் கதையை நினைத்துஒருவேளை உண்மையாக இருக்குமோ என்றுபயப்படுபவர்கள்தான் அதிகம்பயம் தான் பேய்,மனக் கிலேசம் தான் பிசாசு,தன் நம்பிக்கை இல்லாமைதான் பூதம்,மனத் தெளிவுதான் வரப் ப்ராசதம் நம்பிக்கையோடு ,மனத் தெளிவோடு வாழ்வோம்

அன்புடன்
தமிழ்த் தேனீ

பயமும் ,தற்காப்பும்

சாதாரண நாம் செல்லமாக கொஞ்சி விளையாடும்
பூனை கூட ஒரு சந்தர்ப்பம் நேரும் போது புலியாக மாறும்

முய்ற்ச்சி செய்து பாருங்கள் ஒரு வீட்டில் வளர்க்கும் பூனையாக இருந்தாலும் சரி
அல்லது எங்கிருந்தோ நம் வீட்டுக்கு வந்து பாலைக் கவிழ்த்து
குடித்துவிட்டுப் போகும் பூனையாக இருந்தாலும் சரி

அந்தப் பூனனயை ஒரு அறைக்குள் போட்டு
பூட்டி விட்டு நிலைக் கதவு ,மற்றும் ஜன்னல்களை
தாழ்ப்பாள் போட்டுவிட்டு நீங்கள் அல்லது வேறு யார்
வேண்டுமானாலும் கையில் ஒரு குச்சியை வைத்துக்
கொண்டு மிறட்டிப் பாருங்கள்
சற்றே மிரளும் ,அப்புறம் ஒரு கட்டில் அல்லது மேஜை
அடியில் புகுந்து கொள்ளும், அங்கும் போய் அதை விறட்டும் போது
அதற்க்கு போக வேறு வழியே இல்லை என்னும் நிலை
உருவாகிவிட்டால் அது சற்றும் எதிர் பாராமல் நமக்கும் அத்ற்க்கும்
உள்ள சக்தி பேதங்களையும் மறந்துவிட்டு நம் மேல் பாயும்
அப்படி தப்பிக்கவே முடியாத நிலை உருவாகும் போது
பூனனயும் புலியாய் மாறும்
உண்மையில் அங்கு என்ன நடக்கும் தெரியுமா..?
தன்னை மிரட்டிய அந்த மனிதரை அந்தப் பூனை
தன் நகத்தாலும் பற்களாலும் கடித்துக் குதறிவிடும்
அம் மனிதன் பிழைப்பதே கடினம்
நம்ப்புவதற்க்கு சற்று கடினமாக இருப்பினும்
இதுதான் உண்மை
nessasity is the mother of invension என்பார்கள்
ஆமாம் தேவை,அவசியத் தேவை ,அவசரத் தேவை ,இவைகள் தான்
பல கண்டுபிடிப்புகளுக்கு மூலாதாரமாய் இருந்த்திருக்கிறது

ஆமாம் ஒரு பூனைக்கே இவ்வளவு பலம் வருகிறதே
இதே கருத்தை உதாரணமாகக் கொண்டு
தன்னைத் தாக்க வரும் ,அடாத வன் முறை செய்ய வரும்
ஆண் மிருகங்களை ஏன் பெண்கள் குத்தி கிழிக்கக் கூடாது..?
தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடாது..?

உயிருக்கு வரும் ஆபத்தை எதிர் கொள்ளவே பல்வீனமான
பூனை பலம் வாய்ந்த புலியாவ்து போல்
இயற்கையிலேயே சக்தி வடிவான பெண் ஏன் உயிரினும் மேலான
கற்பைக் காத்துக் கொள்ள புலியாகக் கூடாது..?



விசாலம் அவர்களே இறைவன் நம்க்கு பல உறுப்புகள்
அத்துடன் சிந்திப்பதற்க்கு மூளை எல்லாம் கொடுத்தாற்போல்
அந்தக் கறப்பான் பூச்சிக்கும் ,ஏன் எரும்புக்கும்,அத விட சிறிய
உயிர்களூக்கும் மூளை கொடுத்திருக்கிறான் இது படைப்பின் ரகசியம்
நீங்கள் அதைப் பார்த்து பயப் படுகிறீர்கள்
அதே நேரம் அது உங்களைப் பார்த்து பயப் படுகிறது
இதன் விளைவாகத்தான் விலகி ஓடும் எண்ணம் இருந்தாலும்
பயம் உங்களை அறியாமல் அதன் மீது உங்களையும்
உங்கள் மீது அதையும் வீழச் செய்கிறது
நீங்கள் பாட்டுக்கு சும்மா இருந்த்தால் பாம்பும் கடிக்காது
அசையாமல் இருந்தால் அது பாட்டுக்கு தன் வழியே நம் மீது ஊர்ந்து
போய்விடும் ,நீங்கள் பயந்த்து அசையும் போதுதான் அது பயந்து நம்மை கடிக்கிறது ,ஆகவே கடிப்பதும் கடிக்கப் படுவதும்
பயம், அல்லது தற்காப்பு உணர்ச்சியால்தான் என்பது என் கருத்து

அன்புடன்

தமிழ்த்தேனீ

உலகில் நல்ல சக்திகள்

கெட்ட சக்திகளும்,நல்ல சக்திகளும் உலகிலே நல்ல சக்திகள் எப்போதும் நம்மைக் காக்கின்றனஎன்னுடன் பணி புரிந்து கொண்டிருந்த திரு கமலநாதன்என்பவர் ஒரு சம்பவம் சொன்னார்அவர் இருசக்கர வண்டியில் பணிக்கு வந்து போவார் அவருடைய வீடு புதிய ஆவடி சாலைக்கு அப்பால்அவர் தினமும் இரவு பணி முடிந்து(அப்போது எங்களுக்கு பணி நேரம் மாலை4.45 முதல் இரவு 2.15 வரை)2.15 இரவு நேரம் அவர் புதிய ஆவடி சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது அந்த சாலையின் முடிவில் ஒரு திருப்பம் வரும் , அங்கு போய்க் கொண்டிருக்கும் போதுதிடீரென்று அவருடய தலையை யாரோ அப்படியே அழுத்திஇரு சக்கர வண்டியின் கைப் பிடியில் அழுத்தி கொள்வதைஅவரால் உணர முடிந்திருக்கிறது ,தலயைத் தூக்கவே முடியாமலும் வண்டியை ஓட்டுவதை நிறுத்தவே இல்லை அவர், தலையை அழுத்திக் கொண்டிருந்த எதோ ஒரு சக்தி அவரைதிடீரென்று விடிவித்திருக்கிறது, அவர் தலையை தூக்குவதற்க்கும்அவரை தாண்டி ஒரு கன ரக வாகனம் பெரிய பின் இணைப்பு கொண்டது ,போனதைப் பார்த்திருக்கிறார் கமலநாபன்அப்புறம் தான் அவருக்கு உறைத்திருக்கிறது, அங்கு தடுக்கப் பட்ட ஒரு பயங்கரத்தின் விபரீதத்தை ஆமாம் கன ரக, பின் பெரிய இணைப்பு கொண்ட வாகனங்கள்திருப்பத்தில் திரும்பும்போது பின் இணைப்பு சற்று தாராளமாகவளைந்து திரும்பும்ஏதோ ஒரு நல்ல சக்தி அந்தக் கமலநாபனின் தலையை மட்டும்சரியான நேரத்தில் அழுத்தாமலிருந்தால் அவருடைய தலை தனியாகப் போய் விடும் அபாயத்தில் சிக்கி இருப்பார் அவர் செய்த புண்ணியமோ அவர்களுடைய பெற்றோர்கள்செய்த புண்ணியமோ அன்று அவரை ஒரு நல்ல சக்தி காப்பாற்றி இருக்கிறதுஆகவே என் அன்னை சொன்னது போல நல்ல சக்திகளும்தீய சக்திகளும் நிறைந்ததுதான் இப் ப்ரபஞ்ஜம்பேய் இருக்கிறதோ இல்லையோ அதைப் பற்றிய கற்பனைகள் தாராளமாகஉலா வருகிறது ,உண்மையில் பேய் ,பிசாசு ,இவைகளைப் பற்றிபேச ஆரம்பித்துவிட்டாலே மக்களுக்குகற்பனை பெருக ஆரம்பித்து விடும்அவரவர் ஒரு கதையை பலபேர்முன்னால் சொல்லிவிட்டு தனியே போகும் போது அவர் சொன்ன கற்பனைக் கதையை நினைத்துஒருவேளை உண்மையாக இருக்குமோ என்றுபயப்படுபவர்கள்தான் அதிகம்பயம் தான் பேய்,மனக் கிலேசம் தான் பிசாசு,தன் நம்பிக்கை இல்லாமைதான் பூதம்,மனத் தெளிவுதான் வரப் ப்ராஸதம் நம்பிக்கையோடு ,மனத் தெளிவோடு வாழ்வோம்

அன்புடன்
தமிழ்த் தேனீ

"பேய்கள் "ஒரு சம்பவம்

என் வாழ்விலும் ஒரு சம்பவம் நடந்தது

லூகாஸ் டீ வீ ஸ் ஸில் நான் பணி புரிந்து
கொண்டிருந்த காலம்
வில்லிவாக்கத்திலிருந்து நடந்தே
பணிக்கு செல்வது அப்போதைய
என் பழக்கமாக இருந்தது

இரவுப் பணி
அப்போது இரவு 9.45 ல் இருந்து
காலை 7.15 வரையில்


ஒரு நாள் இரவு சற்று உடல் நலம் சரியில்லாத
காரணத்தால் அரை நாள் விடுப்பு எடுத்துக்
கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தேன்
வரும் வழியில் ஒரு சுடுகாடு உண்டு

இரவு நேரம் 2.15 நள்ளிரவு , கும்மிருட்டு
தனியாக நடந்துவரும் போது சுடுகாட்டிற்க்கு
சற்று முன்னால் சாலையின் மறு பக்கத்திலிருந்து
ஒரு பெண் உருவம் சாலையைக் கடந்தது
இந்த நேரத்தில் ஒரு பெண் தனியாக செல்கிறாளே
யாரது அப்படிப்பட்ட தைரிய சாலி என்று பார்க்கலாம்
என்று வேகமாக அவளை நெருங்கினேன்
அவளை நான் நெருங்கிய வேளை
அந்தப் பெண் அந்த சுடுகாட்டில் அடைந்து விட்டாள்
திடீரென்று அங்கு அவளைக் காண வில்லை
ஆனால் எப்போதும் காயத்ரி ஜபம் செய்து கொண்டே
இருக்கும் எனக்கு எந்த பயமும் தோன்றவில்லை
எங்கு தேடியும் ஒரு பெண் அங்கு வந்ததற்கு
எந்த ஒரு அடையாளமும் இல்லாமல்
மீண்டும் இயல்பாக ஒரு கருமை இருட்டு
மட்டுமே அங்கு குடியிருந்தது
நான் வீட்டுக்குவந்து கை கால்
கழுவிக் கொண்டு , தூங்க ஆரம்பித்தேன்
காலையில் என் அம்மாவிடம் ,நடந்ததைக் கூறினேன்
அதற்கு என் அம்மா முதலில்
என்னிடம் கேட்ட கேள்வி
உன் மனதில் பயம் வந்ததா? என்பதுதான்
இல்லை என்று பதில் கூறினேன்
அதற்கு என் அம்மா ,அதுதான் நல்லது
எந்த ஒரு கணம் உன் மனதில்
பயம் வருகிறதோ
அங்குதான் கெட்ட சக்திகள்
மனதை ஆக்ரமிக்கிறது
உலகில் கெட்ட சக்திகளும் உண்டு
நல்ல சக்திகளும் உண்டு
உலகமே கெட்ட சக்திக்கும் நல்ல சக்திக்குமான
போரில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது
நம்முடையம் மனம் தான் அந்தப் போர்க் களம்
ஆகவே மனதை கெட்ட எண்ணங்கள், அனாவசியமான பயங்கள் இல்லாமல் ,தூய்மையாக வைத்துக் கொண்டாலே ,பேயும் இல்லை பிசாசும் ,இல்லைஆண்டவன் என்னும் இயற்கைதான் என்றுமே நிலையானது என்று தெளிவு படுத்தினார்,
ஆகவே மனம் தெளிவாக இருந்தால்
பேய்கள் இல்லை என்பது தான் உண்மையோ
என்று தோன்றுகிறது,

பேய்கள் இல்லை
என்பதுதான் என் கருத்து

அன்புடன் தமிழ்த் தேனீ

Tuesday, July 24, 2007

(யோசிப்போம்) 1.அர்த்தநாரீ


யோசிப்போம்் ”

அர்த்தநாரீ

எல்லா ஆண்களிடமும் - தேவசக்தியும் , அசுர சக்தியும்

சாத்வீகமும்,மூர்க்கமும் ,எல்லாப் பெண்களிடமும்-
தேவசக்தியும் , அசுர சக்தியும்

சாத்வீகமும்,மூர்க்கமும்,
இயற்கையாகவே உண்டு

நாம் எதை வளர்க்கிறோமோ அதற்குண்டான

பலன்தான் அடைய முடியும்

ஆகவே நம் வாழ்க்கை நம் கையில்் தான்

"கல்யாணம் என்கிற ஒரு புது பந்தத்தினால்

வெவ்வேறுகுடும்பப் பாரம்பரியம் இயல்புகள்,பழக்கவழக்கங்கள்

கொண்ட இருவர், அதாவது ,ஒரு ஆணும் ,பெண்ணும்

ஒரு கூறையில் ,ஒரே இடத்தில், இணைந்து வாழ ஆரம்பிக்கிறார்கள்

ஒருவரை ஒருவர் புறிந்து கொண்டு திருமணம் செய்து கொள்வது

என்பது நிச்சயமாக இயலாது,

முழுமையாகப் புறிந்து கொள்ளல் நிச்சயமாக முடியாது.......

,சுக, துக்கங்களிலும்,பங்கு கொண்டு , பல வருடங்கள்

ஒன்றாக வாழ்ந்த்தும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலே

வாழ்க்கையை முடிப்பவர்கள்தாம் மிக அதிகம் என்பது என்

அனுபவ பூர்வமான கூற்று,,........

ஆகவே ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் காதலித்து

திருமணம் செய்தாலும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட

திருமணம் என்றாலும்

தவறு கண்ட இடத்தில் ,தைரியமாக ஆனால் மனம்

புண்படாத வகையில் எடுத்துக் கூறி, தங்களை

தாங்களே சரி செய்து கொண்டு, சமப்படுத்திக் கொண்டு,

வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றிக் கொள்ளலாம்

அப்படியில்லாமல் தவறாக நினைத்துக் கொள்ளப்

போகிறார்களேஎன்று எண்ணி யதார்த்தமான உண்மைகளை

சொல்வதற்கு கூட தைரியமில்லாமல் இருந்துவிட்டு பிறகு

காலம் கடந்து வருத்தப் படுவதில் அர்த்தமில்லை.

திருமணமான சில காலங்களுக்குள்ளேயே

விவாகரத்து ஏற்படும் சமீபகால நிகழ்வுகளுக்கு

மேற்கூறிய

தைரியமில்லாமைதான் மூல காரணம்

ஒரே கூறையின் கீழ் சேர்ந்து வாழ ஆரம்பிக்கும்பொழுதே

ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ ஆரம்பிக்கிறோம்

ஆதலினால் தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் ,

தனித் தனி அந்தரங்கம்,தனித் தனி சுதந்திரம்

எல்லாம் உண்டு என்று ஒப்புக்கொண்டாலும்

தனித் தனி சுய மரியாதை உண்டு

என்று ஒப்புக் கொண்டாலும்

பொதுவான மரியாதை,பொதுவான சுதந்திரம்

அன்பு, பாசம், நேசம்,எல்லாம்

ஏற்படும் காலம்தான் தாம்பத்தியக் காலம்

அதற்குப் பெயர்தான்

“தாம்பத்தியம்“-

தாம் பத்தியம் இருக்கும்

இனிமையான தாம்பத்தியம்

தாம்பத்தியங்கள் வெறும் ஒப்பந்த்தங்களாக மாறக் கூடாது

இதைப் புறிந்து கொள்ளாமல்

அவர் விஷயத்தில் நான் தலையிடமாட்டேன்

அவள் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன்

என்று மூன்றாம் மனைதர்களைப் போல ஒதுங்கி ஒதுங்கி

வாழ்வது,நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுவது

விபரீதமாகும்

அழ அழச் சொல்பவர் தமர் என்று ஒரு பழ மொழி உண்டு

அதற்குப் பொருள்

நாம் சொல்லும் போது அவர்களுக்கு கோபம் வந்தாலும்,

வருத்தம் வந்தாலும், அதற்காக நம்மை அவர்கள்

உதாசீனப் படுத்தினாலும் அவர்களுக்கும்

நமக்கும் நன்மை பயக்கக் கூடிய விஷயங்களை

தைரியமாக சரியான நேரத்தில் எடுத்துச் சொல்லி

புரியவைப்பது

தெரிந்தோ தெரியாமலோ, தவறான பாதையில்

செல்பவர்களை தட்டிக் கேட்கவும் ,

சரியான பாதையில் நடப்பவர்களை தட்டிக் கொடுக்கவும்

நிச்சயமாக தைரியம் வரவேண்டும், அல்லது

அந்த தைரியத்தை வரவழைத்துக் கொள்ளவேண்டும்

அப்போதுதான் அவர்களையும் அழிவிலிருந்து காப்பாற்றி

நம்மையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்

எவ்வளவு சொன்னாலும் கேட்காதவர்களை

யாரும் மாற்ற முடியாது காலம்தான் ,

அவர்களுடைய அனுபவந்தான்

அவர்களுக்கு புறிய வைக்கவேண்டும்

இச்சகம் பேசுவது என்று ஒன்று உண்டு

கேட்பவர்களுக்கு மிகவும் இதமாக,இனிமையாக இருக்கும்

சந்தோஷமாக இருக்கும் கேட்கும் பொழுது

ஆனால் சொல்பவர்களுக்கு உடனடியான லாபங்களையும்

கேட்பவர்களுக்கு பிற்காலத்தில் படு பயங்கரமான வீழ்ச்சியையும்

நஷ்டங்களையும் ஏற்படுத்தும் இச்சகம்

இந்த இரண்டிற்க்கும் உள்ள வேறுபாடுகளை உணர வேண்டும்

இதை உணராதவர்கள் தாம் அவசரத் திருமணங்கள் புரிதல்,

உடனடி விவாகரத்து புரிதல் என்கிற நிர்பந்த்தத்துக்கு ஆட்படுகிறார்கள்

அர்த்தநாரீ

அர்த்த என்றால் பாதி, நாரீ என்றால் பெண்

பாதி சக்தி ஆண்- சிவம், பாதி சக்தி பெண் -சக்தி

சிவன் பாதி சக்தி பாதி இணைந்து தான்

மொத்த சக்தியும்உருவாகிறது

இந்த சிவமும் சக்தியும் இணைந்ததுதான்

அர்த்தமுள்ள அர்த்த நாரீ

அர்த்தமுள்ள முழுமை பெறும் அர்த்த நாரீ

இதில் விக்ஞானப் ப்ரகாரமும்,ஆன்மீகப் ப்ரகாரமும்

நிறைய அர்த்தங்கள் உள்ளது

ஆணும் பெண்ணும் கலக்காவிட்டால் அங்கு

உயிர்கள் உருவாக முடியாது

உலகில் பிறந்த எந்தப் பிறப்பும் ஆண் தன்மையும்,

பெண்தன்மையும் கலந்து பிறந்ததே

ஆண் தன்மை உள்ள பெண்களும் உண்டு

பெண்தன்மை கொண்ட ஆண்களும் உண்டு

ஆண்மைகலக்காத பெண்ணும் ,பெண்மை கலக்காத ஆணும்

முழுமை பெறவே முடியாது

ஆணுக்குரிய தன்மை பெண்ணுக்குரிய தன்மை

இரண்டும் விகிதாசாரக் கலப்பில் வித்தியாசப் படலாம்

ஆனால் கலப்பு இல்லாமல் இருக்கவே முடியாது

அந்த விகிதாசாரம் எந்த அளவில் இருந்தால்

ஊனமில்லாமல் பிறக்கும் என்கிற

அளவு கோலைத்தான் ஆன்மீகத்தில்

“ஜாதகப் பொருத்தம்” என்றும்

விக்ஞானத்தில் ’’ உடற்கூறுப் பொருத்தம் “

என்றும் சொல்கிறார்கள்

ஆகவே ஆண்தன்மையோடு கலக்கும்

பெண் தன்மையின்,

அல்லது பெண்தன்மையோடு கலக்கும்

ஆண்தன்மையின்,

விகிதாசார மாறுதல், ஏற்றதாழ்வு, இவைகளினால்தான்

ஆண் என்றோ பெண் என்றோ

அல்லது இரண்டிற்க்கும் இடைப்பட்ட படைப்பான

அலி (அரவாணிகள்) என்றோ ஆகிறது

ஆகவே எந்த உயிரினமும் கேலிப் பொருளல்ல

ஜாதகத்தில்

ராசிப் பொருத்தம், நக்ஷத்திரப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம்,

யோனிப் பொருத்தம், தினப்பொருத்தம் ,மஹேந்திரப் பொருத்தம்,

இன்னும் பிற பொருத்தங்கள்

விக்ஞானத்தில் ரத்தத்திலுள்ள, வகைப் பொருத்தம் ,

அதாவது உடற்கூறின்மூலமாகிய,

மரபணுப் பொருத்தம்

குடும்ப பாரம்பரியப் பொருத்தம்

இன்னும் பிற பொருத்தங்கள்

இவைகளைக் கணக்கில் கொண்டுதான்

ஒரே கோத்திரத்தில் கல்யாணம் செய்யக் கூடாது

என்றும் பொருத்தங்கள் சரியாக இல்லையென்றால்

கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் சொல்கிறார்கள்

இந்த உலகமே கணித மயமானது ,இங்கு பெரியோர்களால்

வகுக்கப் பட்ட சாத்திரங்கள், விக்ஞானிகளால் உருவாக்கப்பட்ட

நவீன வழிமுறைகள் எல்லாமே பல

வகையான கணிப்புகள், கணக்குகள்தாம்,

நமக்குப் புரியவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக

எதையுமே ஒப்புக் கொள்ளாமல் ,

எந்த வழியில் பயணிக்கப் போகிறோம் என்னும் தெளிவில்லாமல்

நம்மை நாமே குழப்பிக் கொள்வதால் ஏற்படும்

விளைவுகள்தாம், தடுமாற்றங்கள்தான் இப்போதைய

விவாகரத்துகளுக்கு மூல காரணம்

இந்தப் ப்ரபஞ்ஜத்தில் தானே நாம் வாழுகிறோம்

இந்தப் ப்ரபஞ்ஜத்துக்கும் நம்முடைய உயிர்,ஆன்மா

உயிரணுக்கள் எல்லாவற்றிர்க்கும் தொடர்பு உண்டு

பஞ்ஜ பூதங்கள்,அல்லது இயற்கை எனும்

பூமி,ஆகாயம்,நீர்,நெருப்பு,காற்று

இவை அனைத்துதும் இணைந்ததுதான்

ப்ரபஞ்ஜமும் அதிலிருக்கும் எல்லா உயிரினமும்

யோசனை செய்து பார்த்தால் புரியும்

இந்த ஐந்து இயற்கையும் ஒன்று

சேராமல் நம்முடன் ஒத்துழைக்காமல்

நம்மால் எதையுமே செய்ய முடியாது

அதேபோல் ஒவ்வொரு ஜீவராசியும் மீண்டும்

இந்த பஞ்ஜ பூதங்களுடன் இணைந்துதான் மீண்டும் உருவாகிறது

இநத இயற்கைதான் அர்த்தநாரீ தத்துவம்

பெண்ணுக்குள்ளேஆணும் உண்டு ஆணுக்குள்ளே பெண்ணும் உண்டு

ஒன்றுக்குள் இரண்டும் ஒன்றாகி பின் இரண்டாகி

பின் பலவாகி மீண்டும் ஒன்றாக இணைவதுதான்

உலக நியதி, அதுதான் அர்த்தநாரீ தத்துவம்

“வானாகி மண்ணாகி,வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யான் எனது என்று அவர் அவரைக்

கூத்தாட்டுவானாகி நின்றாயை

என் சொல்லி வாழ்த்துவனே....?”

என்கிற

மாணிக்க வாசகப் பெருமானின் தெய்வ வாக்கு

சொல்லும் ரகசியமும் இதுதான்

வேதியல் படித்தாலும்,வேதம்படித்தாலும் தெரியும்,

வேதம் தான் வேதியலின் தந்தை

வேதம் வேதியலின் வர்க மூலம்

இங்கு உயர் திரு கண்ணதாசன் எழுதிய

முன்னோரெல்லாம் மூடர்களல்ல நமக்குண்டு பண்பாடு

என்கிற பாடல் வரிகள்தான் நினைவிற்கு வருகிறது

அர்த்தநாரீ போல் இணைந்து அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வோம்

ஆர்.கிருஷ்ணமாச்சாரி

அன்புடன்

தமிழ்த் தேனீ

www.thamizthenee.blogspot.com


Thursday, July 19, 2007

தினம் ஒரு கவிதை

dokavithai@yahoogroups.com

From: kris_chary

Date: Wed Oct 5, 2005 8:57 am )

தினம் ஒரு கவிதை

தினம் தினம் ஒரு ஆரம்பம்
தினம் தினம் ஒரு கவிதை
அனுபவம் என்னும் பாடம்-இதைவிடக்
கவிதை யாரால் எழுத முடியும்
இறைவன் எழுதும் கவிதை
இது ப்ரபஞ்ஜத்தின் ஆரம்ப விதை
முடிவில்லா ஆரம்பம்
முற்றுப் புள்ளி இல்லாத் தொடர் கவிதை
முடிவில்லா வானம் போல்
முயன்றாலும் தொட முடியாத
வெட்ட வெளி போல் ப்ரபஞ்ஜம்
இறைவன் எழுதும் கவிதை
தினந்தோறும் ப்ரசவம்


தமிழ்த் தேனீ

Saturday, July 14, 2007

அன்புடன் போட்டிக் கவிதைகள்

அன்புடன் குழுமத்துக்கு போட்டிக் கவிதைகளுக்கு
நான் அனுப்பிய கவிதைகள்

1.( T S C KOMATHI ) UNICODE

அன்புடன் படக் கவிதைப் போட்டி

புகைப் படக் கவிதை படம் 01


"ஆரம்பம் "


இது ஒரு நல்ல முடிவின் ஆரம்பம்
நம் கைகள் இணைந்தே இருக்கட்டும்
ஆயிரம் தேடல்கள்,ஆயிரம் ஊடல்கள்
நிலவினைத் தொடும் தேடல்கள்
உயிரினைத் தொடும் மவுனங்கள்
உறவுகள் சுடும் வார்த்தைகள்

கனவுகள் தரும் சுகங்கள்
நிழல்கள் தரும் நினைவுகள்
நினைவுகள் தரும் சுகங்கள்
நிஜங்கள் தரும் கசப்புகள்
கற்பனைத் தூரிகைக் கைவண்ணம்
கலையும் போதில் வருத்தம்

காலையில் விடியும் இயற்கை
மாலயின் இதத்தில் தோள்களின் சாய்ந்து
மறக்க முடியும் சோகங்கள்- செயற்கை
மௌனத்தில் புரியாத அர்த்தங்கள்
வார்த்தையிலும் புரியாத நிஜம்
ஆயிரம்
விழிகள் படிக்கும் காவியம்
மனது படைக்கும் ஓவியம்
அடையத் துடிக்கும் ஆசைகள்
மலரத் துடிக்கும் மொட்டுக்கள்
மலர்ந்து வளரும் மெட்டுக்கள்

ஆயிரம் இருக்கும் அதற்கு மேலும்
வாழ்க்கை இருக்கும்- அதனால்
இது ஒரு நல்ல முடிவின் ஆரம்பம்
நம் கைகள் இணைந்தே இருக்கட்டும்


புகைப் படக் கவிதை படம் 8

" அம்மா "

தேவதை போல் அவள் அம்மா
நம் தேவை அறிந்தவள் அம்மா
வாழ்வை நமக்களித்த அம்மா
நம் ஊழ் வினை போக்கிய அம்மா

ஊரும் உறவும் பேர் சொல்லி வாழ்த்திட
நம் பேரை வைத்தவள் அம்மா
யாவரும் போற்றிட தேவரும் வாழ்த்திட
உயிரை அளித்தவள் அம்மா

எந்தப் பிறப்புக்கும் பெற்றவள்தானே அம்மா
அழுவதை வைத்தே நம் குறை அறிந்தே
நம்மை வளர்த்தவள் அம்மா
எழுவதை விழுவதை ரசித்தவள் இருந்தும்
விழுவதைத் தடுத்து எழுவதில் இன்பம்
கண்ட ஞானி அம்மா -இடைக்கலசம்தனில் தாங்கி
அடைகாத்து மலைக்க வைத்து
தொப்புள் கொடிவழியே உணவூட்டி
இடிபோன்ற வலிதாங்கி முலைக் கலசப் பாலூட்டி
அப்பப்பா !!! உன்னதப் படைப்பாளி அம்மா

மாயப் பிறப்பெடுக்கும் நம் பாவ வினை
அறுக்க நேயமாய்க் கறுவிலே சுமந்து
நல் வினை நாம் பெற தூய
வேள்வி நடத்திய அம்மா
இறப்பெனும் தூக்கம் பிறப்பெனும் விழிப்பு
இடையிலே மலர்ந்த மெய் எனும் பொய்
அதில் உள்ளொளி பெருக்கி,உள்ளுக்குள்ளே
ஊறும் ஞானம் அளித்துக் காத்தவள் அம்மா
கற்பென்னும் தரத்தைக் கண்ணியமாய்க் காத்து
அப்பனின் விந்தை அற்புதப் பந்தில் அடைத்து
கருவாக்கி ,உருவாக்கி ,கை கால்
முளைக்க வைத்து, கவனமாய்க் காத்து
ஆன்மாவை உள்ளே வைத்து -அறிவும்
ஞானமும் ஆயுளும் அழகும்-நிறைவாய்
சேர்த்திட்ட அற்புதப் படைப்பாளி அம்மா

அம்மையாய் அப்பனாய் அரவணைத்து
அம்புலி காட்டி அமுதும் ஊட்டிய
அப்பனையும் நமக்கு அடியாளம் காட்டிய
அன்னைக்கு நன்றிக் கடனாய்

ஓர் முதியோர் இல்லம்



தமிழ்த் தேனீ

புகைப் படக் கவிதை படம் 03


" திரைகள் "

காற்று அம்மாவின் புடவைத்

தலைப்பை வைத்து
என் முகத்தை மறைக்கிறது-

திரையை விலக்கி
உலகம் பார்க்கிறேன்
ஆயிரம் திரைகள் எனை மூடினாலும்
விலக்கிப் எட்டிப் பார்ப்பேன்
வெற்றிக்கு வழி வகுப்பேன்
ஆயிரம் தடைகள் எதிர் வந்தாலும்
அடித்து உடைத்தெறிவேன்
வெற்றிக்கு வழி வகுப்பேன்

ஆயிரம் எதிரிகள் வந்தாலும்
வீரமாய்ப் , விவேகமாய்ப் போரிட்டு
வெற்றிக்கு வழி வகுப்பேன்
விதியே எனக்கு எதிராய் இருப்பினும்
என் மதியால் அவ்விதியை முறியடித்து
வெற்றிக்கு வழி வகுப்பேன்


எனக்கு யாராவது உதவுங்களேன்
நான் கல்வி கற்க ,
எனக்கு யாராவது ஒருவேளை
பசியாற்றுங்களேன்
எனக்கு யாராவது அ ன்பாய்
ஒரே ஒரு வார்த்தை
சொல்லுங்களேன் ஆயிரம் யானை
பலம் எனக்கு வரும்

எனக்கு ஆசையாய் ஒரு முத்தம் தாருங்களேன்
அம்மா ,அப்பா இல்லாத குறையும்
மறந்து போகும்

ஆமாம் நான் ஒரு குழந்தைத் தொழிலாளீ !!!!!!!!


.PUGAIP PADAK KAVITHAIP POOTTI
PADAM 4

" ரகசியம் "

இது பொம்மைகள் உலகம்
நாம் நிம்மதியாய் இணையலாம்
அன்பாய் வாழலாம், ஆசையாய்ப் பழகலாம்
சொந்தமும் ,பந்தமும்,ஆசையும்,காதலும்
நிறைந்த பொம்மைகள் உலகம்

வருந்த வைக்கும் மொழிகளும் இல்லை
வருத்தப் படுத்தும் த்ரோகங்கள் இல்லை
பொய்யும் இல்லை, புரட்டு இல்லை
திருட்டும் இல்லை,பாவமும் இல்லை
ஜாதிகள் இல்லை,மதமும் இல்லை
குற்றங்கள்,குறைகள் எதுவுமே இல்லை

முக்கியமாய் மனிதர்கள் இல்லவே இல்லை

இது பொம்மைகள் உலகம்

நாம் நிம்மதியாய் இணையலாம்

அன்புடன்

தமிழ்த் தேனீ

பிறந்த நாள்

உலகம்

அடேய் செல்லப் பயலே
இப்பதான் பொறந்தா மாதிரி இருக்கு
அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப் போச்சா
குட்டிப் பையா இன்னிக்கு நீ பொறந்து
ஒரு வருஷம் ஆயிடிச்சு

எதேதோ ம‌ந்திர‌ ச‌ப்த‌ங்க‌ள் நாதஸ்வ‌ர‌ இனிமை
ஒரே சிரிப்பு ,கும்மாளம் ,கொண்டாட்டம்
எல்லாம் காதில் விழுகிறது


நானும் பதில் சொன்னேன்
அவர்களுக்கு என் மொழி புரியவில்லை


முதல் வருஷ கொண்டாட்டங்களின்
சப்தங்கள் மீண்டும் காதில் ஒலிக்கிறது

ஒரு பிரியமான முத்தத்தில் கண் விழித்தேன்
க‌ண்விழித்து எழுந்தேன் ,
என் ம‌னைவி, என் குழ‌ந்தைக‌ள்
என் பேர‌ப் பிள்ளைக‌ள் அனைவரும்
பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் சொல்கிறார்க‌ள்
பல கவிதைக் குயில்களும் ,தமிழ்க் குயில்களும்
அன்புடன் வாழ்த்து சொல்கின்றன‌
இன்று காலை அறுபது வயது ஆரம்பம்

உல‌க‌ம் உருண்டைதான்

தமிழ்த் தேனீ

அறிமுகம்





அன்பு நண்பர்களே 1/7/1947
ஆர். கிருஷ்ணமாச்சாரி என்பது எனது பெயர்.
லுகாஸ் டீ வீ எஸ் நிறுவனத்தில் 34 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வு கொண்டவன்.
தமிழின் மேல் தணியாத தாகம் கொண்ட கவிஞன்.
தொலைக்காட்சிகளில், பல தமிழ் சினிமாக்களில்
நடித்துக் கொண்டிருப்பவன். 14 நாடகங்கள்
எழுதி இயக்கி பல முதல் பரிசுகளை வென்றவன்.
என்னுடைய ப்ரபலமான தொலைத் தொடர் சித்தி -
ராடன் நிறுவன தொடர், அதில் மேனேஜர் சாரங்கனாக நடித்தவன். சமீபத்திய தொடர்கள், கோலங்கள், ஆனந்தம்.
படங்கள்:சாமி, ஆறு, திருட்டுப் பயலே, அது ஒரு கனாக் காலம் மற்றும் பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறேன்.
சமீபத்தில் வெளிவந்த தமிழ்ப் படம் சிவாஜி
(இசைக் கருவிகளின் கூடத்தின் மேனேஜர்)
தமிழ் பால் கொண்ட பற்றின் காரணமாக
பல கவிதைகள் எழுதி வருகிறேன்.
என்னுடைய புனைப் பெயர் தமிழ்த்தேனீ.
மனம் சங்கமித்தால் மதம் மறைந்துவிடும்
மதம் சங்கமித்தால் ஜாதி மறந்துவிடும்
தமிழ் சங்கமித்தால், சங்கமத்தால்
கவிதை பிறந்துவிடும் தமிழில்
சங்கமிப்போம், சந்திப்போம்

என்னுடைய அறிமுகக் கவிதை இதோ


பொதுக்கவி

சந்தத் தமிழ்க் கவிதைத் தரணியாண்ட
தமிழ்ப் பாட்டி அவ்வை அவள்-
கந்தன் கருணையால் -கயிலாயமும்
ஆண்டாள் தமிழ் ஆண்டாள்,
தமிழ் மண்ணாண்டாள்,

கருங்காலிக் கட்டைக்கு, கோணாத கட்டாரி
கதலித் தண்டுக்கு உருகுமாம் என்றுரைத்து
மூவேந்தருக்கும் ஏழுலகுக்கும் கட்டுப்படாத
தமிழ் ஆண்டாள், தமிழ் மண்ணாண்டாள்

கந்தன் கருணைக்கு உருகி கயிலாயமும் ஆண்டாள்
வாலிபமே வயோதிகமாய் தமிழே மூச்சாய் தமிழ்க்கம்பூன்றி இந்த மண்ணூன்றி கயிலாயம் சென்றடைந்தும் தமிழ்க்கம்பு,
தமிழ்க் கரும்பு தரணி ஆண்டது

அருமையாய் ஆத்திச்சூடித் தமிழ் ஆத்தி
தமிழ் மகுடம்சூடி தமிழாண்ட தரணி
மாது கயிலாயமும் ஆண்டாள்
கொன்றை வேந்தன் தனை இன்றை
வேந்தன் வரை சொல்லி கயிலாயம்
சென்றடைந்த அந்த தமிழ்ப் பாட்டி
திருப்பதம் பணிந்து தமிழ் வழி நடக்க
புதுக்கவி படைக்க வந்த, புதுக்கவி -
அல்ல, அல்ல பொதுக்கவி நான்.

வார்த்தெடுத்த கவிதைகளில் வார்த்தைகளை
விதைக்க வேண்டும் செதுக்கிய சிலைகளெல்லாம்
சிற்பமாக மாற வேண்டும் எழுதுகின்ற
எழுத்தெல்லாம் கவிதையாக மலர வேண்டும்
விற்பனர் உள்ள அவையில் விருதுகள்
பெற வேண்டும் ,விலாசம் வேண்டும்
எனக்கொரு விலாசம் வேண்டும்
மணிமகுடம், மலர்க்ரீடம், பட்டயங்கள்
விருதுகளை ருதுவாக்கும் தகுதி வேண்டும் !!!
புதுக்கவி படைக்க வந்த, புதுக்கவி -
அல்ல, அல்ல பொதுக்கவி நான்.
யாப்பெடுத்து, சீர் அமைத்து அசை,
தளை, தொடை, எனும் இலக்கணம்
சமைத்து பா புனைய வந்த கவி அல்ல
நான் மனதின் பாதிப்பு அப்படியே சொல்ல வார்த்தைகளைக் கோர்த்து, கருத்துக்களைச்
சேர்த்து புதுக்கவி படைக்க வந்த புதுக்கவி,
அல்ல, அல்ல பொதுக்கவி நான்.
விலாசம் வேண்டும் எனக்கொரு
விலாசம் வேண்டும் நிச்சயமாய்!!!!!!
அன்புடன்
தமிழ்த்தேனீ

rkc1947@gamil.com   ----    http://thamizthenee.blogspot.com



என் படைப்புகள்

ஜ்யோதிடம் பொய்யல்ல