திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, July 26, 2007

காதல்

பூக்கள்
பூக்கள் முகிழ்ப்பது போல காதலும்
முகிழ்க்கிறது ஒவ்வொரு வினாடியும்
பூக்களைப் போல காதலுக்கும்
ஆயுள் குறைவுதான் பூக்கள்
இதழ் மூடிக் காயாகி கனியாகி
மீண்டும் ஒரு மரத்தின் வித்தாக
மாறும் ஆனால் அது மீண்டும்
பூவாக முடியாது காதலும் அது போல
காதலிக்கும் பருவம் தாண்டி
கடி மணம் நிகழ்ந்த பின்
இல்லறத் தேன் அருந்தி
வம்ச விருத்தித் தவம் செய்யும்
மீண்டும் காதலாக , கன்னியாக ,
உருமாற முடியாது ,
பூக்களும் காதலும் ஒன்று
ஒரு முறை அன்புடன்
தோன்றுதல்தான் அழகு

அன்புடன்
தமிழ்தேனீ

பூக்களும் காதலும் ஒன்று
ஒரு முறை தோன்றுதல்தான் அழகு

நான் காதல் வேண்டாமென்று கூறவே இல்லை
காதல் நிச்சயமாக இருக்கிறது ,
உண்மையான காதலுக்கு ஆயுள் அதிகம்,
காதல் என்று மட்டும் இல்லையென்றால்
இந்தப் ப்ரபச்ஞ்ஜமே வளர்ந்திருக்காது


காதல் என்பது வேறு, பருவக் கிளர்ச்சி என்பது வேறு
இரண்டையும் சரியாகப் புறிந்து கொள்ளாமல்
பருவக் கிளர்ச்சியை காதல் என்று
எண்ணி ஏமாந்து போகவேண்டாம்
என்று தான் சொல்லுகிறேன்


இநத தவறான புறிந்து கொள்ளுதலால்
இயற்கையின் மாறுபாட்டால் உடற்கூறு
தன்மையால் , பாதிக்கப் படுவது பெண்களே
காதலித்த இருவருமே தங்கள் புனிதத்
தன்மையை கல்யாணத்துக்கு முன்னமே
இழக்கக் கூடாது,அப்படி இழந்த்தவர்கள்
அவர்களுக்கு குழந்தை பிறந்து
அது காதலிக்கும்போது பதறுகிறார்கள் ,

ஒவ்வொரு ஆணும்
(என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்)


தன் மனைவி பத்தினியாக இருக்க வேண்டும்
என்றுதானே நினைக்கிறான்


ஒவ்வொரு பெண்ணும் தன் கணவன் தன்னைத்
தவிற வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல்
இருக்க வேண்டும் என்று தானே நினைக்கிறாள்
அப்பொழுது கல்யாணத்துக்கு முன்னால்
நாம் எப்படி இருக்க வேண்டும் எனபதை
தீர்மானிக்க வேண்டுமல்லவா?
காதல் மிகவும் புனிதமானது
,
மாற்றான் தோட்டத்து மல்லிகை மணந்தாலும்
அவைகளின் மீது நமக்கு உரிமை கிடையாது
என்பதை நினைவில் வைத்துக் கொண்டு
காதலியுங்கள் ,கடைசீ வரை நன்றாக
இணைந்து வாழுங்கள் என்றுதான்
சொல்கிறேன்
மனிதர்களில் ஆணோ பெண்னோ
எல்லோருக்குமே நாலு நல்ல குணம்
இருக்கும், நாலு கெட்ட குணம் இருக்கும்
இதைப் புறிந்து கொண்டு அதற்குத் தகுந்தவாறு
பணிந்தோ,அல்லது இதமாகப் புரியவைத்தோ,
ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து
கடைசீவரை இணைந்து வாழுங்கள்
இதுதான் காதல்


காதலித்து
ஒருவருக்கு ஒருவர்தான் என்று தீர்மானமாக
முடிவு செய்து இணைந்து,இயைந்து வாழ்வோம்
இணை பிரியாமல் வாழ்வோம்


காதலிப்போம், காதல் உண்டு காதல் நிச்சயமாக உண்டு
காதலையே காதலிப்போம்

காதலை,காதல் கவிதைகளை இரசித்து

முடித்த பிறகு என்னுள் எழுந்த

சிந்தனையை அப்படியே வடித்துள்ளேன்

சற்று அதிகப் ப்ரசங்கித் தனமாக தோன்றினாலும்

பொறுத்துக் கொண்டு யோசிப்போமே

காதல்

இது எத்தனை பேரை இப்படி கவிஞ்ஞனாக

மாற்றுகிறது, !!!!!!!!!! நானும் பார்க்கிறேன்

வாலிப வயது வந்தவுடன்

அதுவும் , ஒரு பெண்ணைக் காதலிக்க

ஆரம்பித்தவுடன்தான்,கற்பனை வருகிறது,

குழப்பம் வருகிற்து ,தெளிவு வருகிறது,

சிந்தனை வருகிறது ,சிரிப்பு வருகிறது

எல்லாம் வருகிறது,

அப்புறம் தான் செந்தமிழ் என்று ஒன்று

இருக்கிறது என்கிற ஞாபகமே வருகிறது

அப்புறம்தான் அவரவர் மொழியே

ஞாபகம் வருகிறது,அதற்குப் பின்தான்

கவிதை வருகிறது

கவிதை எழுதினாலே காதலைப் பற்றிய கவிதை

எழுதினால் தான் கவிஞ்ஞன் என்று ஒப்புக்

கொள்வார்களோ...? என்று பயம் வருகிறது,

எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்

எழுதுவதற்கு எத்தனையோ விஷயங்கள்

இன்னும் கற்பனை செய்யாமல்

கருத் தரிக்காமல் இருக்கிறது

காதலியுங்கள்,கவிதை எழுதுங்கள்

ஆனால் சிந்தியுங்கள்

நாமாவது சற்று மாறுபட்டு

தெளிவான, பொலிவான,வளமான,

எதிர்காலத் தேவை உணர்த்த

நாம் வாழும் முறையை புதுப்பிக்கும் படியான ,

நல்ல சிந்தனைகளைத் தூண்டும் வகையில்

கருத்துக்கள் தோய்ந்த கருக்களை ,

சிந்தனைக் கருக்களை உருவாக்குவோம்

பின் குறிப்பு:

(நானும் என் வாலிப வயதில் இப்படி யெல்லாம் செய்தவன்தான்,)

இது காதலைப் பற்றி என் அபிப்ராயம்

இப்போது நான் சொல்வது சிலரைப்

புண்படுத்தினாலும் அவர்கள்

என்னை மன்னிக்கட்டும்

ஆனால் நான் ஒரு பொதுக் கவி

மனதில் பட்ட உண்மைகளை மறைக்காமல்

சொல்லவேண்டும் என்ற என்ணமுடையவன்

என் அம்மா சொல்வார்கள்

"அழ அழச் சொல்பவர் தமர்

இதம் பேசுபவர்கள் த்ரோகிகள்" , என்று

நான் இதம் பேசப் போவது இல்லை

காதலிக்க ஆரம்பித்த்வுடனே நம்முடைய

மனது நம்மை அறியாமலே

கதாநாயக அந்தஸ்துக்குப் போய் விடுகிறது

நாம் காதலிக்கும் பொழுதே நம்மை

நம் சுயத்தை மறைக்க ஆரம்பித்து விடுகிறோம்

எது இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது

தம்மை அலங்கரித்துக் கொண்டு போய்

காதலிக்கிறார்கள்

தம்முடைய் உண்மையான அந்தஸ்த்தை மறைத்து

போலியாக நடித்து ஒருவரை ஒருவர்

ஏமாற்றிக் காதலிக்கிறார்கள்

ஆனால் காரியம் முடிந்தவுடன்

கசந்து போகிறது வாழ்க்கை

காதல் என்பதே இப்போது எனக்குத் தெரிந்து

இல்லை இல்லை இல்லவே இல்லை

வாழ்க்கையில் இணையாமலே பிறிந்து

போகிற காதல்எவ்வளவோ பரவாயில்லை

இணைந்த பிறகு தாம்பத்யம் ,

புனிதமான தாம்பத்யம்

இரு கைகள் இணைத்துக் இனி பிறியோம்

எத்துணை துயர் வரினும் என்று உறுதி பூண்டு

அக்னி தேவனின் முன்னாலே அத்தனை

பெரியவர்கள் முன்னாலே சத்தியம்

செய்து விட்டு அத்தனை பேரையும் முட்டாளாக்கி

தம்மையும் முட்டாளாக்கிக் கொண்டு

விவாகரத்து புறிகிறார்களே என்னால்

பொறுத்துக் கொள்ளவே முடியாத அக்கிரமம்

இத்தனைக்கும் காரணம்

காமத்தை காதல் என்று புறிந்து கொள்ளுதலும்

இயல்பான வாழ்க்கை நடைமுறை ஆர்வத்தை

காதல் என்று தவறாகப் புரிந்து கொள்ளுதலும் தான்

என்னுடைய அகராதியில்

ஒருவரை ஒருவர் உண்மையாய்ப்

புறிந்து கொள்ளல் தான் காதல்

அது இது வரையில் ஏற்படவே இல்லை

எல்லா மனிதரிடமும் சில கெட்டவைகளும்

சில நல்லவைகளும் இருக்கும்

இந்த ரகசியம் புறிந்து கொண்டு இணைந்து

இணக்கமாய் வாழ்க்கையை ,இன்பமோ துன்பமோ

இருவரும் பகிர்ந்து கொண்டு வாழ்தலே காதல்

திருமணம் ஆகி முப்பது ஆண்டுகள் இணைந்து

வாழ்ந்தாலும் முழுமையாக ஒருவரை ஒருவர்

புறிந்து கொள்ளுதல் முடியாது

இப்போது காதலித்து திருமணம் ,சில மாதங்களிலேயே

எல்லாம் புறிந்தாற்போல் விவாகரத்து

சரியே இல்லை

காதலின் அடித்தளமே சரியில்லை

புரிந்து கொள்ளுதலே காதலின் அடிப்படை

ஒன்றாக வாழ வேண்டும் என்று தீர்மானமாக

முடிவெடுத்து முதலில் தங்களுடைய குறைகளை

தெரிய வைத்து பின் தெளிய வைத்து

தெளிவாக காதலித்தால் மட்டுமே

காதல் இனிக்கும்

காதலித்து பின் திருமணம் புரிந்தாலும்,

திருமணம் நடந்த பிறகு காதலித்தாலும்(மனைவியை)
ஒரே ஒரு சபதம் எடுக்க வேண்டும் இருவரும்

ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல்

வாழ்க்கைய தொடர,
காதலிக்கும் போது ஓரளவு புரிவது போல் இருக்கும்

ஆனால் புரியாது ,ஒருவரைப் பற்றி இன்னொருவருக்கு

திருமணம் ஆன பின்னர் ஓரளவு புரியும்

ஆனால் ஒன்றும் செய்ய முடியாது, எப்படி இருந்தாலும் அதற்கேற்றார்ப் போல் நடந்து கொண்டு வாழ்கையை இனிமையாக நடத்த வேண்டும் இத்தனைக்கும் மேலாக
பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப் பட்ட திருமணமாக இருந்தாலும், காதலித்து தானே செய்து கொண்ட திருமணமானாலும் இந்த தலைவிதி என்று

ஒன்று இருக்கிறதே அது தன் இஷ்டம் போலத்தான் நம்மைஆட்டுகிறது இதுதான் யதார்த்தம்

இது தலை விதியை நம்புபவர்களுக்கு

மட்டும் பொருந்தும்

இது என் எழுத்தல்ல குமுறல்

இளைஞ்ஞர்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்

கொள்ளவேண்டுமே என்கிற எதிர்காலக் கவலை

உண்மைக் காதல் பெருகட்டும்

இப்படிக்குத்

தமிழ்த் தேனீ

No comments: