உலகம்
அடேய் செல்லப் பயலே
இப்பதான் பொறந்தா மாதிரி இருக்கு
அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப் போச்சா
குட்டிப் பையா இன்னிக்கு நீ பொறந்து
ஒரு வருஷம் ஆயிடிச்சு
எதேதோ மந்திர சப்தங்கள் நாதஸ்வர இனிமை
ஒரே சிரிப்பு ,கும்மாளம் ,கொண்டாட்டம்
எல்லாம் காதில் விழுகிறது
நானும் பதில் சொன்னேன்
அவர்களுக்கு என் மொழி புரியவில்லை
முதல் வருஷ கொண்டாட்டங்களின்
சப்தங்கள் மீண்டும் காதில் ஒலிக்கிறது
ஒரு பிரியமான முத்தத்தில் கண் விழித்தேன்
கண்விழித்து எழுந்தேன் ,
என் மனைவி, என் குழந்தைகள்
என் பேரப் பிள்ளைகள் அனைவரும்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்கிறார்கள்
பல கவிதைக் குயில்களும் ,தமிழ்க் குயில்களும்
அன்புடன் வாழ்த்து சொல்கின்றன
இன்று காலை அறுபது வயது ஆரம்பம்
உலகம் உருண்டைதான்
தமிழ்த் தேனீ
No comments:
Post a Comment