அன்பு நண்பர்களே 1/7/1947
ஆர். கிருஷ்ணமாச்சாரி என்பது எனது பெயர்.
லுகாஸ் டீ வீ எஸ் நிறுவனத்தில் 34 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வு கொண்டவன்.
தமிழின் மேல் தணியாத தாகம் கொண்ட கவிஞன்.
தொலைக்காட்சிகளில், பல தமிழ் சினிமாக்களில்
நடித்துக் கொண்டிருப்பவன். 14 நாடகங்கள்
எழுதி இயக்கி பல முதல் பரிசுகளை வென்றவன்.
என்னுடைய ப்ரபலமான தொலைத் தொடர் சித்தி -
ராடன் நிறுவன தொடர், அதில் மேனேஜர் சாரங்கனாக நடித்தவன். சமீபத்திய தொடர்கள், கோலங்கள், ஆனந்தம்.
படங்கள்:சாமி, ஆறு, திருட்டுப் பயலே, அது ஒரு கனாக் காலம் மற்றும் பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறேன்.
சமீபத்தில் வெளிவந்த தமிழ்ப் படம் சிவாஜி
(இசைக் கருவிகளின் கூடத்தின் மேனேஜர்)
தமிழ் பால் கொண்ட பற்றின் காரணமாக
பல கவிதைகள் எழுதி வருகிறேன்.
என்னுடைய புனைப் பெயர் தமிழ்த்தேனீ.
மனம் சங்கமித்தால் மதம் மறைந்துவிடும்
மதம் சங்கமித்தால் ஜாதி மறந்துவிடும்
தமிழ் சங்கமித்தால், சங்கமத்தால்
கவிதை பிறந்துவிடும் தமிழில்
சங்கமிப்போம், சந்திப்போம்
என்னுடைய அறிமுகக் கவிதை இதோ
பொதுக்கவி
சந்தத் தமிழ்க் கவிதைத் தரணியாண்ட
தமிழ்ப் பாட்டி அவ்வை அவள்-
கந்தன் கருணையால் -கயிலாயமும்
ஆண்டாள் தமிழ் ஆண்டாள்,
தமிழ் மண்ணாண்டாள்,
கருங்காலிக் கட்டைக்கு, கோணாத கட்டாரி
கதலித் தண்டுக்கு உருகுமாம் என்றுரைத்து
மூவேந்தருக்கும் ஏழுலகுக்கும் கட்டுப்படாத
தமிழ் ஆண்டாள், தமிழ் மண்ணாண்டாள்
கந்தன் கருணைக்கு உருகி கயிலாயமும் ஆண்டாள்
வாலிபமே வயோதிகமாய் தமிழே மூச்சாய் தமிழ்க்கம்பூன்றி இந்த மண்ணூன்றி கயிலாயம் சென்றடைந்தும் தமிழ்க்கம்பு,
தமிழ்க் கரும்பு தரணி ஆண்டது
அருமையாய் ஆத்திச்சூடித் தமிழ் ஆத்தி
தமிழ் மகுடம்சூடி தமிழாண்ட தரணி
மாது கயிலாயமும் ஆண்டாள்
கொன்றை வேந்தன் தனை இன்றை
வேந்தன் வரை சொல்லி கயிலாயம்
சென்றடைந்த அந்த தமிழ்ப் பாட்டி
திருப்பதம் பணிந்து தமிழ் வழி நடக்க
புதுக்கவி படைக்க வந்த, புதுக்கவி -
அல்ல, அல்ல பொதுக்கவி நான்.
வார்த்தெடுத்த கவிதைகளில் வார்த்தைகளை
விதைக்க வேண்டும் செதுக்கிய சிலைகளெல்லாம்
சிற்பமாக மாற வேண்டும் எழுதுகின்ற
எழுத்தெல்லாம் கவிதையாக மலர வேண்டும்
விற்பனர் உள்ள அவையில் விருதுகள்
பெற வேண்டும் ,விலாசம் வேண்டும்
எனக்கொரு விலாசம் வேண்டும்
மணிமகுடம், மலர்க்ரீடம், பட்டயங்கள்
விருதுகளை ருதுவாக்கும் தகுதி வேண்டும் !!!
புதுக்கவி படைக்க வந்த, புதுக்கவி -
அல்ல, அல்ல பொதுக்கவி நான்.
யாப்பெடுத்து, சீர் அமைத்து அசை,
தளை, தொடை, எனும் இலக்கணம்
சமைத்து பா புனைய வந்த கவி அல்ல
நான் மனதின் பாதிப்பு அப்படியே சொல்ல வார்த்தைகளைக் கோர்த்து, கருத்துக்களைச்
சேர்த்து புதுக்கவி படைக்க வந்த புதுக்கவி,
அல்ல, அல்ல பொதுக்கவி நான்.
விலாசம் வேண்டும் எனக்கொரு
விலாசம் வேண்டும் நிச்சயமாய்!!!!!!
அன்புடன்
தமிழ்த்தேனீ
rkc1947@gamil.com ---- http://thamizthenee.blogspot.com
என் படைப்புகள்
ஜ்யோதிடம் பொய்யல்ல
8 comments:
வாழ்த்துக்கள் ஐயா!
திரு ஜே கே அவர்களே உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
உங்கள் (about me )படித்தேன் உங்கள் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
எதற்காகவும் இயல்பு நிலை கெடாமல் இருங்கள்
அண்ணன் ,தம்பி, கணவன் ,தகப்பன்
என்று ஆயிரம் வேடமணிந்தாலும் உள்ளே இருப்பது நீங்கள்தானே
உங்கள் எழுத்துக்கள் படித்தேன்,புகைப் படங்கள் பார்த்தேன்
உங்கள் ரசனை மிகவும் அருமை
தமிழ் வார்த்தைகளை நீங்கள் லாவகமாகக் கையாண்டாலும்
இயல்பு நிலை கெடாமல் கருத்துக்களை கூறுகிறீர்கள்
ஆசீர்வாதம்
தமிழ்த் தேனீ
அன்புள்ள ஐயா,
உங்கள் பிளாக் எளிமையாகவும் உண்மையை விளக்குவதாகவும், நகைச்சுவையோடும் , எங்களுக்கு வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது...
மேலும் மேலும் படைக்க வாழ்த்துக்கள், வாழ்த்த வயதில்லாவிடினும்...
அன்பு மகள்,
சாந்தி ஜெயசிங்...
thamizh - wherever I am, yes thousands of miles away from Tamil Nadu, when it comes to me, that too from a learned people like you, indeed it pours honey in my ears as said by Mahakavi Bharathiyar. Live long your service with your noble thoughts. Best wishes,
Muthu
t's such a important site. fabulous, extraordinarily stimulating!!!
-------
[url=http://oponymozgowe.pl]Opony Mozgowe[/url]
[url=http://pozycjonowanie.lagata.pl]Pozycjonowanie[/url]
[url=http://www.dopalarka.pl/zdrowie,i,uroda/opony,s,9335/]opony[/url]
top [url=http://www.c-online-casino.co.uk/]uk online casino[/url] brake the latest [url=http://www.realcazinoz.com/]casino games[/url] free no deposit perk at the leading [url=http://www.baywatchcasino.com/]easy casino
[/url].
Post a Comment