என் வாழ்விலும் ஒரு சம்பவம் நடந்தது
லூகாஸ் டீ வீ ஸ் ஸில் நான் பணி புரிந்து
கொண்டிருந்த காலம்
வில்லிவாக்கத்திலிருந்து நடந்தே
பணிக்கு செல்வது அப்போதைய
என் பழக்கமாக இருந்தது
இரவுப் பணி
அப்போது இரவு 9.45 ல் இருந்து
காலை 7.15 வரையில்
ஒரு நாள் இரவு சற்று உடல் நலம் சரியில்லாத
காரணத்தால் அரை நாள் விடுப்பு எடுத்துக்
கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தேன்
வரும் வழியில் ஒரு சுடுகாடு உண்டு
இரவு நேரம் 2.15 நள்ளிரவு , கும்மிருட்டு
தனியாக நடந்துவரும் போது சுடுகாட்டிற்க்கு
சற்று முன்னால் சாலையின் மறு பக்கத்திலிருந்து
ஒரு பெண் உருவம் சாலையைக் கடந்தது
இந்த நேரத்தில் ஒரு பெண் தனியாக செல்கிறாளே
யாரது அப்படிப்பட்ட தைரிய சாலி என்று பார்க்கலாம்
என்று வேகமாக அவளை நெருங்கினேன்
அவளை நான் நெருங்கிய வேளை
அந்தப் பெண் அந்த சுடுகாட்டில் அடைந்து விட்டாள்
திடீரென்று அங்கு அவளைக் காண வில்லை
ஆனால் எப்போதும் காயத்ரி ஜபம் செய்து கொண்டே
இருக்கும் எனக்கு எந்த பயமும் தோன்றவில்லை
எங்கு தேடியும் ஒரு பெண் அங்கு வந்ததற்கு
எந்த ஒரு அடையாளமும் இல்லாமல்
மீண்டும் இயல்பாக ஒரு கருமை இருட்டு
மட்டுமே அங்கு குடியிருந்தது
நான் வீட்டுக்குவந்து கை கால்
கழுவிக் கொண்டு , தூங்க ஆரம்பித்தேன்
காலையில் என் அம்மாவிடம் ,நடந்ததைக் கூறினேன்
அதற்கு என் அம்மா முதலில்
என்னிடம் கேட்ட கேள்வி
உன் மனதில் பயம் வந்ததா? என்பதுதான்
இல்லை என்று பதில் கூறினேன்
அதற்கு என் அம்மா ,அதுதான் நல்லது
எந்த ஒரு கணம் உன் மனதில்
பயம் வருகிறதோ
அங்குதான் கெட்ட சக்திகள்
மனதை ஆக்ரமிக்கிறது
உலகில் கெட்ட சக்திகளும் உண்டு
நல்ல சக்திகளும் உண்டு
உலகமே கெட்ட சக்திக்கும் நல்ல சக்திக்குமான
போரில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது
நம்முடையம் மனம் தான் அந்தப் போர்க் களம்
ஆகவே மனதை கெட்ட எண்ணங்கள், அனாவசியமான பயங்கள் இல்லாமல் ,தூய்மையாக வைத்துக் கொண்டாலே ,பேயும் இல்லை பிசாசும் ,இல்லைஆண்டவன் என்னும் இயற்கைதான் என்றுமே நிலையானது என்று தெளிவு படுத்தினார்,
ஆகவே மனம் தெளிவாக இருந்தால்
பேய்கள் இல்லை என்பது தான் உண்மையோ
என்று தோன்றுகிறது,
பேய்கள் இல்லை
என்பதுதான் என் கருத்து
அன்புடன் தமிழ்த் தேனீ
1 comment:
well said..
keep writing these kind of good blogs..
Thanks.
Post a Comment