திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Monday, August 4, 2008

பூமிக்கு ஆபத்து -விழிப்புணர்வு கட்டுரை

“ வீடுயர நாடுயரும் “

வரப்புயர நீர் உயரும் நீர் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்
என்று அவ்வைப்பாட்டி சொன்னதுபோல்
“ வீடுயர நாடுயரும் “
இதை சரியாக உணர்ந்துதான் அன்றே சொன்னாள் அவ்வை

அருமை சகோதர சகோதரிகளே
மனிதர்களே

“” சமீபத்தில் நில நடுக்கம் ஏற்பட்டபோது நம்மில் பலர்
தம்முடைய நகைகள், பணம் ,அத்தனையும் பாதுகாப்பாக
எடுத்துக் கொண்டு கடற்கரையில் சென்று
உட்கார்ந்து கொண்டோம்...ஏனென்றால் அங்குதான்
நில நடுக்கத்தின் பாதிப்பு இருக்காது என்பது நமது வாதம்

நில நடுக்கம் ஏற்படும்போது கடற்கரையில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது போது ,பேரலை என்னும் சுனாமி வந்தால்
எங்கே போய் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்...?

இன்னும் ஒரு மணி நேரத்தில் நாம் வாழும் பகுதி
உள்ளே வைக்கப் பட்டிருக்கும் அதி பயங்கர நாசம் செய்யும் வெடி குண்டினால் தகர்க்கப் படும் என்று அறிந்தால் நம் நிலைமை எப்படி இருக்குமோ,அதை விட மோசமாக நாம் வாழும் உலகம்
சீக்கிறம் அழியப் போகிறது என்னும் பயங்கரத்தை
அறியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்

இதை நம் மக்களுக்கு அறிவுறுத்தும் விஷயமாக
நாம் அனைத்து மின் சாதனங்களையும் ,அணைத்துவிட்டு குத்து விளக்கு ,அல்லது மெழுகு வர்த்தி வெளிச்சத்தில்
மிக இயற்கையாக வாழப் போகிறோம்,
ஆமாம் அதற்காக 2008ம் ஆண்டு,
8 வது மாதம்(ஆகஸ்ட்) 8ம் தேதி ,
இரவு 8 மணியிலிருந்து,8.08 மணி வரை
8 நிமிடங்களுக்கு சென்னையில்
மின்சாரத்தை நிறுத்தி வைக்கப் போகிறோம்
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த
அதற்காக எக்ஸ்னோரா தலைவர் எம் பீ நிர்மல் அவர்கள்
பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்
அவை
1. விழிப்புணர்வு வீதி நாடகங்கள்
2 . இரு சக்கரவாகன ஊர்வலம்
3, யோகா பயிற்சிகள் விளக்கம்
4. வீணாகப் போகும் குப்பைகளை உபயோகித்து
உரம் தயாரிக்கும் முறை
5. மரம் நடுதலின் உபயோகங்கள், மரம் நடுதல்
6. இசைக் கச்சேரிகள்

நாம் வாழும் வாழ்க்கையில் அன்றாடம் நாம் சந்திக்கும்
பல நிகழ்வுகள் நம்மை சந்தோஷப்பட வைக்கின்றன
துக்கப் பட வைக்கின்றன,அதிர்ச்சி அடைய வைக்கின்றன
கொண்டாட வைக்கின்றன,
இந்த உலகில் நாம் வாழுகிறோம் இப்போது வாழ்கிறோம்
வருங்காலத்தில் இந்த உலகம் நாம் வாழ இருக்குமா
இல்லை அழிந்து விடுமா என்று யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்
நாம் வாழும் வீட்டை நாம் சுத்தமாக பாதுகாப்பாக
வைத்துக் கொள்ளாமல்
நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியாது
அதே போல் நாம் வாழும் இப் பூமியை சுத்தமாக
பாதுகாப்பாக வைத்துக் கொள்ளாமல் நாம் நிம்மதியாக
வாழ முடியாது

சமீபத்தில் பல நிகழ்வுகள் நம்மை சோதித்தன
அதில் ஒன்று முக்கியமாக பூகம்பம்
இந்த பூகம்பம் என்னும் நில அதிர்ச்சி வந்த போது
நாமும் நம்மைச் சார்ந்த பலரும் வீடுகள்,
பல அடுக்குமாடிக் கட்டிடங்கள்,இடிந்து பலர் காயப் பட்டு,
பலர் இறந்தும் போயினர்

அதே போல் சுனாமி என்னும் பேரலை கடலைத்தாண்டி
நாட்டுக்குள் வந்து நம்மில் எத்தனையோ பேர் காணாமல் போயினர்,
பல வீடுகள் மூழ்கின,இது போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து
நம்மை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது....?
இது ஒரு மகா கேள்வி இதற்கு பதில் உண்டா..
.....................உண்டு

தலைவலி வந்தால் உடனே தலை வலி போவதற்கு
மாத்திரை சாப்பிடுவது போலத்தான் இந்த செயலும் ,
இது தவறு,ஆகவே தலைவலிக்கு காரணம் கண்டுபிடித்து
அதைச் சரி செய்ய,அதன் மூல காரணத்தைக் கண்டு பிடித்து ,
அதற்கு வேண்டிய தீர்வைசெய்தால் வாழ்நாள் முழுவதும்
தலைவலி இல்லாமல் இருக்கலாம்,, இதுதான் சிறந்த வழி

நான் உங்களை பயமுறுத்தவில்லை நாம் வாழும் பகுதி
இன்னும் சற்று நேரத்தில் தூள் தூளாகப் போகிறது
என்று கேள்விப்பட்டால்…என்ன செய்வோம்
பதறுவோம் ,வேறு பகுதிக்கு செல்வோம்,
அங்கும் அதே நிலைதான் என்று தெரிந்தால் என்ன செய்வோம்
ஒன்றும் செய்ய முடியாது ....
அது போன்ற நிலைமைதான் இப்போது உருவாகி இருக்கிறது,
என்கிறார் உலக சுற்றுச் சூழல் பற்றி திரு அல்கோர் அவர்கள்,
ஆகவே இது வரை உலகம்
நமக்கு இருக்க இடம் ,உண்ண உணவு ,உடுக்க உடை
என்று எல்லா வளங்களையும் வாரி வழங்கி இருக்கிறது
அப்படிப்பட்ட பூமிக்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது
நாம் வசிக்கும் பூமிக்கே ஆபத்து என்றால் நாம் வேறு
கிரகத்துக்கா போக முடியும்...யோசித்துப் பாருங்கள்
நாம் இப்போது பூமியைக் காப்பாற்றவேண்டிய
முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் பூமியைக்
காப்பாற்றாவிட்டால் நாம் எங்கும் வாழ முடியாது
அப்படி பூமிக்கு என்ன ஆயிற்று நாம் அதைக்
காப்பாற்ற வேண்டிய அளவுக்கு என்று
கேளுங்கள் சொல்கிறேன்....?


நாம் வசிக்கும் பூமி முக்கால் பாகம் நீரால் சூழப்பட்டுள்ளது
கால் பங்குதான் நிலம் அந்த நிலம் முக்கால் பாகம் சூழப்பட்ட
நீரை விட உயரமான பகுதியாக இருப்பதால்தான்,
நாம் பூமியில் வாழ முடிகிறது,பூமி தாழ்ந்து விட்டால்,
சூழ்ந்துள்ள நீரின் மட்டம் உயர்ந்து விட்டால் ,
பூமி மொத்தமே முழுகிப் போகும் அபாயம் வரும்
இப்போது புவி இயல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்

பூமியின் உஷ்ணம் அதிகரித்து விட்டது,
அதனால் இப்போதே அன்டார்டிகா போன்ற பனிப்ரதேசங்களில்
இருக்கும் பனி மலைகள் உருக ஆரம்பித்து விட்டது,
வடக்கே உள்ள ஹிமாசலப் ப்ரதேசத்தில் உள்ள
பனி மலைகள் பூமியின் வெப்பம் தாங்காமல்
உருக ஆரம்பித்து விட்டன,இன்னும் சிறிது காலத்தில்
கங்கை பொங்கும் ,கடல் பொங்கும்,ஆகவே பனி மலைகள்
உருகி கடலில் கலந்து கடல்நீரின் அளவு அதிகரிக்க,
அதிகரிக்க பூமியை விட நீரின் மட்டம் அதிகரிக்கும்,
நீரின் மட்டம் அதிகரிக்க,அதிகரிக்க பூமி நீரினால் மூழ்கடிக்கப்படும்
அபாயம் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறது
என்று புவி இயல் நிபுணர்கள் சொல்கிறார்கள்,
ஓசோன் படலம் கிழிந்திருக்கிறது,
உலகத்தின் ஒட்டுமொத்த வெப்பம் அதிகரித்திருக்கிறது,
அதனால் பனிமலைகள் உருகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது,
பனிமலைகள் உருகினால்,முக்கால் பங்கு நீரால் சூழப்பட்ட பூமியைவிட நீரின் மட்டம் உயரும் ,அப்படி நீரின் மட்டம் உயர்ந்தால்
உலகம் காணாமல் போகும், கடலிலிருந்து வெளி வந்த சில பெரிய அலைகளையே சமாளிக்கமுடியவில்லையே,
கடலே பூமிக்குள் வந்தால்,அது எவ்வளவு பெரிய பயங்கரம்
என்பதை யோசிக்கச்வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்

அதனால் விஞ்ஞானிகள் இப் பூமியின் வெப்பத்தைக்
குறைக்க வேண்டிய கட்டடயத்தை உணர்த்துகிறார்கள்
அப்படி பூமியின் வெப்பத்தைக் குறைக்க நாம் என்னென்ன
செய்யவேண்டும் என்று கூறுகிறார்கள் .....
அவர்கள் கூறும் உபாயங்களால் நாம் நம் பூமியைக்
காப்பாற்றி அதில் வாழப் போகிறோமா.... ?
அல்லது பூமியை அழியவிட்டு நாமும் அழியப் போகிறோமா .?
என்பதுதான் தற்போதைய பயங்கர நிலை ......
என்ன செய்யப் போகிறோம் நாம்...........?

நாம் நம்முடைய பூமியை காப்பாற்றிக் கொள்ள
நம் அனைவரின் நன்மைக்காக தன்னுடைய சொந்த
சுகங்களை விட்டு விட்டு,நாட்டின்மேல்,அல்ல அல்ல
இந்த உலகத்தின் மேல் அக்கறை கொண்டு பலப்பல
தேசத்து விக்ஞானிகளை கலந்து ஆலோசித்து
அதன் பயனாய் தான் பெற்ற வழிமுறைகளை நம்மிடையே
பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார், நம்முடைய
உலகை அழிவிலிருந்து காப்பாற்றி
நம்முடைய வருங்கால சந்ததிகள் நன்றாக வாழ
வழிகள் எக்ஸ்னோரா அமைப்பின்
தலைவர் உயர் திரு எம் பீ நிர்மல் அவர்கள்
பல வழிகள் சொல்கிறார் சொல்லப் போகிறார்,

மனிதர்களாகிய நமக்கு காய்ச்சல் வந்தாலே
வைத்தியரிடம் ஓடுகிறோமே நாம் வாழும்
உலகத்துக்கே காய்ச்சல் வந்திருக்கிறதே,
அந்தக் காய்ச்சலின் விளைவாக ஏற்பட்ட வெப்பத்தை
உடனடியாக தணிக்காவிட்டால் உலகத்திலுள்ள
அனைத்து பனிமலைகளும் உருகி உலகமே தண்ணீரில்
மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறதே ,
இதை நாம் உடனடியாக கவனிக்க வேண்டாமா?
நாம் வாழும் உலகம் நன்றாக இருந்தால்தானே
நாம் நன்றாக வாழமுடியும்,
நம் உலகத்தின் வெப்பத்தைக் குறைக்க பலவிதமான
முயற்சிகள் செய்யலாம்
இயற்கையாக பூமி வெளிவிடும் வெப்பத்தை
தாங்கள் க்ரகித்துக் கொண்டு நமக்கு குளிர்ச்சியைத்
தருகின்ற மரங்களை வெட்டாமல் இருக்கலாம்,
மேலும் பல மரங்களை நட்டு வளர்க்கலாம்
மரங்கள் இந்த பூமியில் ஏற்படும் வெப்பத்தை வாங்கிக் கொண்டு குளிர்ச்சியை வெளி விடுகின்றன,
உலகிற்கு வெப்பத்தை ஏற்படுத்தும் கரியமில வாயுவை
உற்பத்தி செய்யும் உபகரணங்களின் உபயோகத்தை குறைத்துக் கொண்டு
மாற்று வழி கண்டுபிடிக்கலாம்,
உலகத்தை வெப்பமாக்கும் ஒவ்வொரு சாதனங்களுக்கும்
மாற்று ஏற்பாடுகள் செய்யலாம்
(உதாரணமாக நாம் உபயோகிக்கும்,குளிர் சாதனக் கருவிகள்,
புகை கக்கும் வாகனங்கள்,சுற்றுப் புற சூழலை மாசுபடுத்தும்
நல்ல காற்றை அசுத்தக் காற்றாக மாற்றும் கரியமில வாயு
வெளியேற்றும் கருவிகளுக்கு மாற்று வழிகள்,)
சீனாவில் அதனால்தான் என்றுமே இருசக்கர வாகனமாகிய
துவிச்சக்கர வண்டியை அதிகம் உபயோகிக்கின்றனர்
பெட்ரோல் டீசல் போன்றவை உபயோகிக்கும் போது
அவைகள் வெளியிடும் கரியமில வாயுக்கள் நம் உலகை
மிகவும் மாசுபடுத்துவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்
அது போல இப்போது நாம் உபயோகிக்கும் மின்சார பல்புகள்
அவற்றுக்குப் பதிலாக ( Light emitting diode ) என்னும்
மின்சார பல்புகளை உபயோகிக்கலாம்

(Bulbs:
Light emitting diode
CFL Vs LED
CFL had mercury in it but LED doesn have mercury
Life span of LED- 60,000 hrs life span of CFL- 10,000hrs
ADVANTAGES OF USING LED:
LED-less maintainence cost
The key strength of LED lighting is power consumption)
For orders please Contact:
Mr.Stalin
mob no-00 91 9941007066

நம் வீட்டிலேயே அனைத்து வகையான காய்கறிகளையும்
பயிரிட்டுக் கொள்ளலாம், மிகக் குறைந்த செலவிலே
உரங்கள் போடாத இயற்கையான ,காய்கறிகள் உபயோகிக்கலாம்
நோய்களை தடுக்கலாம் நல்ல தரமான ஆரோக்கியமான
உணவு வகைகளை உபயோகிக்கலாம்


2. TERRACE GARDENS:
Advantages of Terrace Gardens:
1.To grow organic vegetables
2.to make good use of limited space
3.it cools the house
4.ornamental
For assistance please contact:
Mr.Indra Kumar
Mob no- 00 91 9841007057
OFF: 00 91 44 22486494
மேலும் விவரங்களுக்கு: www.homeexnora.org, www.88888.co.in

ஆர்.கிருஷ்ணமாச்சாரி
என்கிற
தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com
http;//thamizthenee.blogspot.com
http://www.peopleofindia.net
Contact us at: contact@peopleofindia.net or peopleofindia.net@gmail.com

1 comment:

Anonymous said...

congrulation very nice tamil site visit my tamil site also http://tamilparks.50webs.com