சிறு கவிதை
1. மஹான்கள்
யேசு அவதரித்தார்
அல்லாஹ் தோன்றினார்
காந்தி பிறந்தார்
மஹான்கள் அவதரித்தனர்
அவர்களை துன்புறுத்தவே
தீவிரவாதமும்
தோன்றியது
ஆதலினால் தீவிரவாதத்தை
அழிக்கவேண்டித் தானோ
இப்பொதெல்லாம்
மஹான்கள் அவதரிப்பதே இல்லை
3
. தினம் ஒரு கவிதை
தினம் தினம் ஒரு ஆரம்பம்
தினம் தினம் ஒரு கவிதை
அனுபவம் எனும் பாடம்
இதை விடக் கவிதை யாரால்
எழுத முடியும்
இறைவன் எழுதும் கவிதை
இது ப்ரபஞ்சத்தின் ஆரம்ப விதை
முடிவில்லா ஆரம்பம்
முற்றுப் புள்ளி இல்லா தொடர் கவிதை
முடிவில்லா வானம் போல்
முயன்றாலும் தொடமுடியாத
வெட்டவெளி இதுதான் ப்ரபஞ்சம்
இறைவன் எழுதும் கவிதை
5. அவதாரம்
நீ பார்த்து வளர்ந்தவன் தானே
நான் பார்க்க வளருவேன் நானே
வான் பார்த்து வளருவேன் நானே
கம்சன் கதை முடிக்க வான் பார்த்து
உயர்ந்த சக்தியவள் சூள் முடிக்கத்தானே
நான் பார்க்க வளருவேன் நானே
கூன் பார்க்க ராமாவதாரம் அதுவும் நானே
மான் பார்த்து மயங்கிய மங்கை அவளால்
ஊண் பார்த்து மயங்கிய
தென் இலங்கை கோன் முடிக்க
பிறந்தவன் தானே அதனால்
நான் பார்க்க வளருவேன் நானே
வான் பார்த்து வளருவேன் நானே
6 தைரியம்
காவல்காரன் தூங்காமல் காவல் செய்யும்
முதலாளி நான்
அரசாங்கம் தவறும் நேர்மை அவ்வப்போது
சுட்டிக் காட்டும் குடிமகன் நான்
அதிகாரியின் தவறு அதட்டிக் கேட்கும்
தொழிலாளி நான்
பூசாரி தவறும் நியமங்கள்
உணர்த்துகின்ற பக்தன் நான்
ஞானிகளின் வர்ண பேதம்
உணர்த்துகின்ற அடியவன் நான்
மேதைகளின் சருக்கல்கள்
கண்டுபிடிக்கும் பேதை நான்
என்னைத் தட்டிக் கேட்க
மறந்துவிட்ட நான் !!!!
காலச் சக்கரம்
7
8
காலச்சக்கரம் சுழலும் வகையை
கண்டு பிடிக்க முடியுமா?
அதன் கோலம் வரையும்
கோடுகளைத்தான் அறிய நம்மால் முடியுமா
ஞாலச் சக்கரம் சுழலும் வகையை
கண்டு பிடிக்க முடியுமா?
வட்டச் சக்கரம் -இறைவன் விட்ட சக்கரம்
சக்கரத்தை சுழற்றிவிட முடியுமா
இறைவனையே கழற்றிவிட முடியுமா?
ஆரம்ப புள்ளி அறிந்துவிட்டால் போதுமே
முடிவுப் புள்ளி தெறிந்து போகுமே
புள்ளிகளை அறியத்தான் முடியுமா
அதன் பூதாகார வடிவம்தான் தெரியுமா
ஆன்ம யோகச்சக்கரம்
சுழலவைக்காமல் அன்றிஇயலுமா
இவையெல்லாம் நாம் உணர
முடியுமா?
. புரட்சி
அசை, புரளு, கவிழாதே, நிமிரு, இயங்கு,
இயக்கம் கொள், பேரியக்கம் கொள்,
பெரு மலை பிளக்கும், சிறு உளி நீ,
முடங்காதே, முயற்சி செய், செயல்படு,
துள்ளு, துடி, துயில்நீக்கு ,விழி, எழு,
போரிடு , தலையை நிமிர்த்து,
புறப்படு ,சாதிக்க வேண்டியது நிறைய
இருக்கு ,கருவரை உன் கல்லரையல்ல,
முழங்கிப் புறப்படு , தடைகளை தகர்த்து
இயக்கம் கொள், அப்போதுதான்
நீ கருவரையிலிருந்தே வெளிவர முடியும்.!
9. நாயகன்
மணக்கும் சந்தனம்,மயக்கும் பூவாசம்,
சொந்தம் எல்லாம் சந்தோஷம்,ஆசீர்வாதம்
குழந்தைகளின் குதூகலம்,குளிர் பானம்,
நண்பர்களின் கும்மாளம் நாதஸ்வரம்
மங்கள வாத்யம், மலர்கள் அலங்கரித்த
மணமேடை,வாழைமரம், வாண்டுகள் அட்டகாசம்,
ஜாதகத்தில் அதிசயமாய் பத்துப் பொருத்தம்
மந்திரகோஷம் மனதெங்கும் உல்லாசம்
அள்ளித் தெளித்த,அட்ஷதையும்,
மலர் மாரியும்,
அத்தனை நடுவிலே நாயகனாய் நானிருக்க
அவள் பார்வை....... அடுத்தவன் மேல் ???
10. கனவு
கவிதைகள் படைக்கிறேன் ப்ரசுரிக்க யாருமில்லை
கண்டுபிடிப்புகள் கழ்த்துகிறேன் அங்கீகரிக்க நாதி இல்லை
ஓவியங்கள் எழுதுகிறேன் வாங்க ஆட்களில்லை
சிற்பம் வடிக்கிறேன் கர்பக் க்ரஹம் கிடைக்கவில்லை
நடிப்பு நாட்டியம் பாட்டு தெரியும்
அரங்கேற்ற யாருமில்லை
உதவி செய்கிறேன் நன்றி சொல்ல யாருமில்லை
கர்பமாயிருக்கிறேன் கழுத்திலே தாலியில்லை
காலையில் விழித்துப் பார்த்தேன்
எல்லாம் எதிர்மறையாய்.......
யாரோ பெண் பார்க்க வருகிரார்களாம்
13. சந்தேகம்
குயிலின் கூவலில் ஒரு சோகம் கிளியின் அழைப்பில்
ஒரு மருகல்
புறாவின் குரலில் ஒரு குமுறல் ,மைனாவின் குரலில் ஒரு பயம்
மயிலின் அகவலில் ஒரு துக்கம், ஆந்தையின் அலறலில்
ஒரு கடூரம்
கழுகின் குரலில் ஒரு கொடூரம் ,கோழியின் கூவலில்
ஒரு எதிர்பார்ப்பு
பருந்தின் குரலில் ஒரு பரிதவிப்பு
ஆனால் இந்த சிட்டுக் குருவியின்
கிசுகிசுப்பில் மட்டும் !!!!
ஆனந்தம்,குதூகலம்,!!!!!!
இப்படிஎல்லாம் எனக்கு மட்டும்தான்
தோன்றுகிறதா !! ? அல்லது
உங்களுக்குமா!!!!!!!!!! ?
14. சிவப்பு
ஹோமாக்னி வளர்க்க வேண்டியவர்கள்
காமாக்னி வளர்க்கிறார்கள்
பால்ய ஸ்னேகிதர்கள்
பாலியல் ஸ்னேகிதர்களாகின்றனர்
வித்தைகள் விபசாரம் செய்கிறது
குழந்தைகள் குரூரமாய் விட்டன
அழகு நிலயங்கள் ஆபத்தாகிவிட்டன
மரம் செடி கொடி மிருகங்கள் இயல்பு நிலை
கெடாமல்
மனிதம் மட்டும் ஏன் இப்படி சிவப்பாய் ?
11. த்ருப்தி
பிறந்து மூன்று மாதம் ஆகிறது
முகம் பார்த்து சிரிக்கிறேனாம் நான்
பல குரல் காதிலே கேட்குது
நான் மாமா டா என்னை பார்
நான் அத்தை டா என்னை பார்
நான் சித்தி டா என்னை பார்
நான் பெரியப்பாடா என்னை பார்
அடாடா யாரை திருப்தி படுத்த
இவர்களீடம் எப்படி காலம் தள்ளூவது
கண்ணை மூடிக்கொண்டேன்.
15. சுமை
மணப்பெண் கோலத்தில் என் மகள்
என் மடியில்
மாப்பிள்ளை மஹா விஷ்ணுவின் அம்சமாம்
திருமாங்கல்ய தாரணம் செய்து
கன்னிகா தானம் செய்ய வேண்டும்
அப்பப்பா என் மகள் இவ்வளவு கனமா?
மாங்கல்ய தாரணம் முடிந்தது மங்கள
வாத்யம் முழங்க என் மகள்
மஹாலக்ஷ்மி ஆனாள்
இப் போது என் மகள் கனமாக தெரியவில்லை
16. புயல்
வெற்றிடம் நோக்கி தான் எல்லா காற்றும்
போகின்றன அதுதான் புயல்
நம்மை வெற்றிடமாக ஆக்குவோம்
எல்லோரும் நம்மை நோக்கி
வருவர்
நாம் நம்மை உணர்வோம்
பிறர் தானாகவே நம்மை
உணர்வார்கள்
17. ஞ்நானோதயம்
ஈக்களோடு ஈக்களாய் குப்பை தொட்டியில் வாசம்
ஒரு திடீர் ஞ்நானோதயம்
தேனீயாய் மாரி பூக்களோடு வாசம்
தமிழ்த் தேனீயய் மாரி தமிழ்ப் பூக்களோடு வாசம்
தமிழ்தான் என் ஸ்வாசம்
18. பஞ்ச பூதம்
நகர்ந்து நகர்ந்து நழுவிப் போகும்
மேகங்கள் தான் நாமெல்லாரும்
கூடியவரை உரசாமல் நகர்ந்து செல்வோம்,
இடிக்காமல் நழுவிச் செல்வோம்
உரசினாலும் இடித்தாலும் மழைதான்
கண்ணீர் மழை......................
படர்ந்து பரவி தவழ்ந்து செல்லும்
தென்றல் காற்று தான் நாமெல்லாரும்
கூடியவரை சீறாமல் தவழ்ந்து செல்வோம்
மீறாமல் அமைதி காப்போம்
சீறினாலும் மீறினாலும் புயல்தான்
துயரப் புயல்...................
19. சூரியன்
சூரியனை சிறைப்பிடிக்க முடியுமா?
அதைச் சுற்றிவர கூட நம்மால் முடியுமா?
சந்திரனின் ஒளி மறைக்க முடியுமா?
அதை ஈடுசெய்ய நம்மால் முடியுமா?
சூரியனும் சந்திரனும் மோதிக் கொள்ளலாமா?
அவை மோதிக் கொண்டால் நட்ஷத்திரம் ஒளிருமா?
அவை சேர்ந்துவிட்டால் நட்ஷத்திரம் பிழைக்குமா?
20. விடுமுறை
பள்ளியில் படித்த போதும்,
பணியில் இருந்த போதும்,
விடுமுறை எனும் வார்த்தை
செய்தது எத்தனையோ மாயம்
அதிகமாகனது விடுமுறை ஆசை,
ஆசை முற்றின நிலையில்
படிப்பும்,பணியும் போதும்,போதுமென்று
விருப்ப ஓய்வு கொண்டேன்
அதிகமானது விடுமுறை
ஆசையை விடும் முறை-
ஆசையும் விடுமுறையும்
போதும் போதும்!!!!!! விடுமுறை !
இப்போது தண்டனையாய்!!!!!
21. ஏன்..?
சமாதானப் புறாக்களூக்கு இடையே கூட
சண்டை உண்டு
பருந்துகளூக்கு இடையே கூட பாசம் உண்டு
கழுகுகளூக்கு இடையே கூட நேசம் உண்டு
புலிகளூக்கு இடையே கூட கருணை உண்டு
பாம்புகளூக்கு இடையே கூட இணக்கம் உண்டு
நரிகளூக்கு இடையே கூட ஞ்யாயம் உண்டு
நாய்களூக்கு இடையே கூட இரக்கம் உண்டு
இந்த மனிதர்களூக்கு இடையே மட்டும் ஏன்....???????
. நீதி
போலீஸ்காரர்களுக்கு அரசாங்கம் சம்பளம்
கொடுக்கிறது, அதனால் அரசாங்கம் முதலாளி
ஆனால் நாங்கள் தான் வேலை கொடுக்கிறோம்
அதனால் நாங்கள்தான் அவர்களுக்கு அதிகாரிகள்"
இப்படிக்கு குற்றவாளிகள்!!!!!!
அசை
துள்ளிக் குதித்து ஓடுவேனாம் நான்
குழந்தையாய் இருந்தபோது
வாலிபப் பருவத்தில் பார்த்தவர்
மேலெல்லாம் பாய்வேனாம்
இப்போது இயலாமல் உட்கார்ந்திருக்கிறேன்
எண்ணங்களையும் உணவையும்
அசை போட்டபடி
எல்லாரும் மாடு தானோ ?
தளை
தத்தித் தத்தித் தவழும் போது
அன்னையின் ஜாக்கிறதை உணர்வு
துள்ளிக் குதித்து ஓடும் வயதில்
பயம் என்னும் உணர்வு
வாழ்க்கையில் உயர நினைக்கும் போது
நேர்மை என்னும் உணர்வு
சுயநலமாய் வாழ்ந்த்துவிட்டுப்
போய்விடலாம் என்று முடிவுக்கு
வந்த போது அடுத்தவர்
வாழ்க்கை ஒரு பாடமாய்
என்னதான் செய்வது எல்லாமே
தாமதமாய் வந்த விழிப்புணர்வுகள்
எல்லாமே ஒரு தளை தான்
22. பேச்சுத் திறமை
எதைப் பற்றி வேண்டுமானாலும்
பேசும் திறமை எனக்குண்டு
பேச அழையுங்களேன்
கடைப் பிடிக்க என்னால் முடியாது
அழைக்காதீர்கள்
23. பட்டாம்பூச்சிகள்
பட்டாம் பூச்சி கடித்தது-அதன் பல் பட்ட
இடம் வலித்தது
பூவால் அடித்தால் வலிக்குமா?
புண்ணாகி உடல் துடிக்குமா?
மேகக் கூட்டம் இடிக்குமா?
என் தேகம் எங்கும் வலிக்குமா?
சிறு பறவை ஒன்று பறந்ததால்
சில மலைகள் உடைந்து தெறிக்குமா?
சின்னச் சின்ன விஷயம் தான்
இந்த உலகை ஆட்டும் விஷயம்தான்
பட்டாம் பூச்சி கடிக்கையில்
நாம் பூவாய் இருந்தால் வலிக்குமே!!!
24. காதல்
அவளுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ
என நானும்
எனக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ
என்று அவளும்
பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதிப்பதாக
எண்ணி
உண்மையாக காதலிப்பதாக எண்ணி
சொல்லாமலே இருந்தோம்
கடைசீவரை
அங்கு மனித நேயம் பிழைத்தது
ஆமாம் அவள் கணவனிடம்
அவளும்
என் மனைவியிடம் நானும்!!!!
24. பிறந்த நாள்
தினம், தினம், தினத்துக்கு
பிறந்த நாள்!!
வாரா வாரம் வாரத்துக்குப்
பிறந்த நாள்!!
மாதம் தவறாமல் ஒருமுறை
மாதத்துக்கு பிறந்த நாள்!!
வருடத்துக்கு கூட வருடா வருடம்
தமிழ்ப் புத்தாண்டு,ஆங்கிலப் புத்தாண்டு
என்று இரு முறை
பிறந்த நாள்!!!
இது என்ன ஓரவஞ்சனை?
எனக்கு மட்டும் , நான்கு வருடத்துக்கு,
ஒரு முறை தான், பிறந்த நாள்
நான் பிறந்தது லீப் வருடமாம்!!!!!
25. குப்பைத்தொட்டி
கதை, கவிதை,
எச்சில்கள், குப்பைகள்கழிவுகள்
விவாகரத்து கடிதம்
கல்யாணப் பத்திரிகை
வேர்க்கடலை மடித்த காகிதம்
வேறு சில வேண்டாத பொருட்களும்
எல்லாம் விழுகிறது
சலனமே இல்லாமல் ஜடமாய் நான்!!!!
26. மர்மம்
வெகு நாட்களாக பேசிக் கொண்டிருந்தனர்
அப்படி என்னதான் பேசுவார்களோ?
பல முறை கேட் டிருக்கிறேன் தோழியிடம்
அவனிடமும் தான் ,
இருவரும் ஒற்றுமையாய் ஒரே பதில்,
ஒன்றுமில்லை சும்மாதான்......
இந்த ஒன்றுமில்லை சும்மாதான்...
இதற்குள்ளே...
எத்தனையொ பொதிந்திருக்கும்
ஆனாலும் இது ஒரு வெளி வராத
காவியம்.....
27. த்யாகம்
அப்பா நீங்கள் த்யாகம் செய்து
என்னை ஆளாக்கினீர்கள்
நான் நன்றி மறக்கவில்லை
நானும் த்யாகம் செய்து என் மகனை
ஆளாக்குவேன்
என் கடமை நான் செய்ய
நீங்கள் உதவுங்கள் தயவு செய்து
இருங்கள் முதியோர் இல்லத்தில்
28 கடவுள்
சிற்றெரும்பின் காலடி சத்தம் கூட
உனக்குக் கேட்குமாம்
என் சித்தத்தின் மனவெளிக் குகையில்
நான் செய்யும் ப்ரார்த்தனைகள்
உன் காதில் விழவில்லையா?
மனதிற்குள்ளே மருகி மருகி
நான் மயங்கும் வேளையிலும்
மருபடி மருபடி உன்னிடமே அடைக்கலம்
நீ தெய்வம், மஹா சக்தி, உலகரட்ஷகன்
உனக்கு நேர்ந்து கொண்ட நேர்த்திக் கடன்
நிறைவேற்றாவிட்டால் தண்டிப்பாயாம்
மனிதனே மன்னித்தால் மஹாத்மாவாகிறான்
நீ தண்டித்தால் கடவுளா?
29. இரசாயனம்-
மனதுக்குள்ளே ஒத்திகை பார்க்கும் நாடகம்
மணம் ஆனபின்னே தினந்தோறும் மோகனம்
கண்ணுக்குள்ளே கண் கலக்கும் சாகசம்-இளம்
பெண்ணுக்குள்ளே எத்தனையெத்தனை காவியம்
உடலுக்குள்ளே உருவாகும் காமரசம்
உயிருக்குள்ளே உயிராகும் இரசாயனம்
கருவுக்குள்ளே திரு வாகும் வாத்சாயனம்
சிறு அணுவுக்குள்ளே பள்ளி கொள்ளும்
அனந்த சயனம் !
30. மரியாதை
அம்மா கண்ணன் வந்துட்டான்
கண்ணா ஷூவை அது எடத்துலெ வையி
ஹெல்மெட்டை பத்திரமா வையி
இந்தா டிபன் சாப்பிடு
நாளைக்கு என்னா வெணுமோ
இப்பவே எடுத்து வெச்சுக்கோ
காத்தாலெ என் உயிர எடுக்காதே
நேரத்தோட படுத்து சீக்கிரமா
எழுந்துக்கோ
என்றாள் கண்ணனின் மனைவி
எல்லாம் சரி இந்த ஷூவை மட்டும்
அது எடத்துலெ வையீ அப்பிடீன்னான்
கண்ணன்
31. கல்வி
சீக்கிரம் டிரஸ் போட்டுக்கோ நேரமாச்சு
ஸாக்ஸ் போடுநேரமாச்சு ஷூ போடு நேரமாச்சு
டை கட்டிக்கோ நேரமாச்சு
டிபன் சாப்பிடு நேரமாச்சு
ஒருவாட்டி சொல்லும்போதே மனப்பாடம்
பண்ணிக்கோ புரியுதா?
கிளம்பு கிளம்பு நேரமாச்சு
ஷாட் ரெடி இயக்குனர் வந்துட்டார்
32. சிரிப்பெனும் நெருப்பு
ராவணன் ராமணைப் பகைத்தான்
அனுமன் சிரித்தான்
ப்ரகலாதனை ஹிரண்யன் பகைத்தான்
நரசிம்மம் சிரித்தது
சக்தியை மகிஷன் பகைத்தான்
அகிலமே சிரித்தது
பச்மாசுரன் சிவனைப் பகைத்தான்
சக்தி சிரித்தாள்
நரகாசுரன் க்ருஷ்ணனை பகைத்தான்
தேவர்கள் சிரித்தனர்
பாஞ்சாலி சிரித்தாள் பாரதம் முளைத்தது
மனிதர்கள் நியாயத்தை பகைத்தனர்
விதி சிரித்தது
33. தேக்கம்-
பள்ளிகள் வேண்டாம், கோவில்கள் கட்டவேண்டாம்,
பாலங்கள் வேண்டாம்,அணைகள் கட்டவேண்டாம்,
தொழிற்சாலைகள் வேண்டாம்,மருத்துவ மனை வேண்டாம்,
கப்பல்கள் கட்டவேண்டாம் ,விமானம் வேண்டாம்,
அவை கட்டிடங்களைஇடித்து, மூண்றாம்
உலக யுத்தத்துக்குவழி வகுக்கும்,
வானளாவும் கட்டிடங்கள் வேண்டாம்,
அவை பூமியிலே மறையும்,
நிறைய,...... நீதி மன்றங்கள் கட்டுங்கள்,
வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன!...
கூவத்தை சுத்தம் செய்யுங்கள்
கொசுக்களை ஒழியுங்கள்
மக்கள் பிழைத்துக் கொள்வார்கள்
34. ஞானம்
என்னை ஞானியாக்கியவர்கள்
என் அம்மாவும், என் மனைவியும்
இன்னும் இருவரும் புரிந்து
கொள்ளவில்லை- நான் ஞானியென்று
ஆம் ஒவ்வொரு வெற்றி பெற்றவர்
பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்
புரிந்து கொள்ளாமல்
35. சுனாமி
தண்ணி அடிச்சு தண்ணி விலகாது
நல்ல பழமொழி ,
தண்ணி அடிச்சா எல்லாமே விலகிடும்
அதுதான் சுனாமி
தண்ணி அடிக்காதீங்கோ
37. தைரியம்
காவல்காரன் தூங்காமல் காவல் செய்யும்
முதலாளி நான்
அரசாங்கம் தவறும் நேர்மை அவ்வப்போது
சுட்டிக் காட்டும் குடிமகன் நான்
அதிகாரியின் தவறு அதட்டிக் கேட்கும்
தொழிலாளி நான்
பூசாரி தவறும் நியமங்கள்
உணர்த்துகின்ற பக்தன் நான்
ஞானிகளின் வர்ண பேதம்
உணர்த்துகின்ற அடியவன் நான்
மேதைகளின் சருக்கல்கள்
கண்டுபிடிக்கும் பேதை நான்
என்னைத் தட்டிக் கேட்க
மறந்துவிட்ட நான் !!!!
38. கண் தானம்
பிறப்பும் இறப்பும் இயற்கைதான் தடுக்கமுடியுமா
ப்ரபஞ்சத்தில் இயற்கை தனை மாற்றமுடியுமா
பிறந்ததனால் என்ன பயன் நமக்குத் தெரியுமா
இறந்த பின்னும் வாழும் வகை செய்ய முடியுமா
இறந்த பின்னும் வாழுகின்ற சிரஞ்ஜீவிகள்
முத்து முத்தாய் வழிகள் பல உறைத்தார்
செத்தும் கொடுத்தவன் சீதக்காதி,
தானம் கொடுத்தான் தன் தலையையே
தானத்தில் பலவுண்டு பலனடைய
தலையான தானமது கண்தானம்
பஞ்ச பூதம் ப்ரம்மத்தில் இணைவதுதான்
ப்ரபஞ்ச விதி தடுக்க முடியுமா?
சாகா வரம் பெற்றவர்தாம் யாரோ
தம் உறுப்பு தானம் அளிப்பவர்தானோ
சிறந்த தானம் அன்னதானம்,அறிவுதானம்
அதனினினும் சிறந்தது கண் தானம்
சாகா வரம் பெற சிரஞ்சீவியாய் நாம் வாழ
கருணை மனம் கொண்டிடுவோம்
கண்தானம் செய்திடுவோம்
39. காலம்
காலச்சக்கரம் சுழலும் வகையை
கண்டு பிடிக்க முடியுமா?
அதன் கோலம் வரையும்
கோடுகளைத்தான் அறிய நம்மால் முடியுமா
ஞாலச் சக்கரம் சுழலும் வகையை
கண்டு பிடிக்க முடியுமா?
வட்டச் சக்கரம் -இறைவன் விட்ட சக்கரம்
சக்கரத்தை சுழற்றிவிட முடியுமா
இறைவனையே கழற்றிவிட முடியுமா?
ஆரம்ப புள்ளி அறிந்துவிட்டால் போதுமே
முடிவுப் புள்ளி தெறிந்து போகுமே
புள்ளிகளை அறியத்தான் முடியுமா
அதன் பூதாகார வடிவம்தான் தெரியுமா
ஆன்ம யோகச்சக்கரம்
சுழலவைக்காமல் அன்றிஇயலுமா
இவையெல்லாம் நாம் உணர
முடியுமா?
40. குண்டலினி
குண்டலினி யோகம் கற்க -திருவருளும்
குரு அருளும் வேண்டுமென்பர்
அதி தேவதை- வினாயகர்,
அருளும் வேண்டுமென்பார்
யமம்,நியமம்,ஆசனம்,பூரகம்,கும்பகம்,
ரேசகம்,எனும் ப்ராணாயாமம்
,ப்ரயத்யாகாரம்,தாரணை,
த்யானம்,எனும் அஷ்டாங்க யோகமும்-
மந்த்திர, லய, ஷட, ராஜ எனும்
சிவயோகமும் வேண்டுமென்பார்
ஞான யோகம்,கர்மயோகம்,பக்தியோகம்,
எனும் த்ரியோகமும் வேண்டுமென்பார்
தாடாசனம்,திரிகோண ஆசனம்,கருடாசனம்
பச்சிமோத்தாசனம்,பத்மாசனம்,
உத்தானபாதாசனம்,பவனமுக்தாசனம்
சிரசாசனம்,விருட்சாசனம் ,ஸ்வஸ்திகாசனம்
சுகாசனம்,எனும் ,ஆசனங்கள்
அத்தனையும் வேண்டுமென்பர்
அதல,விதல, சதல ,தலாதல,ரசாதல,
மஹாதல,பாதாள,ஏழுலக தொடர்பும்
இடை,பிங்கலை,சுஷும்னை-ஹஸ்தகிஹ்வை,குஹு
காந்தாரி,ஸரஸ்வதி பூசை,சங்கினி,பயஸ்வினி,வாருணி
அலம்பூசை,விச்வோதரை,யஸவினி,வஜ்ரை,இட,பிங்கலை,
நாடிகள் கட்டுப்பட வேண்டுமென்பார்
மூலபந்தம்,ஜலந்தர பந்தம்,,உட்டீயண பந்தம்
மஹா,மஹாபந்தம்,மஹாதேவதை,,யோக
விபரீதகரணி ,கேசரி ,வஜ்ரோலி
ஸக்திசீலன்,யோனி, பந்தங்களும் ,முத்திரைகளும்
கட்டுப் படவேண்டுமென்பர்
அணிமா,மஹிமா,வகிமா,கரிமா,ப்ராப்தி,ப்ராகாம்யம்,
வஸித்துவம், ஈஸத்துவம், எனும்
அஷ்ட மஹா ஸித்திகளும் கிட்டுமென்பார்
கோபம்,காமம்,த்வேஷம்,பற்று விலகுமென்பார்
மூலாதாரம்-ஸ்வாதிஷ்டானம்,மணிபூரகம்
அனாஹதம்,விசுத்தி,ஆக்ஞா
பிர்ம ரந்திரம்- ஸஹஸ்ராரசக்கரம்
நம்மை நாமறியும் நற் குணமும்
,யாகமும்,ப்ராணாயாமமும்,
நேமமும், நிஷ்டையும், தவமும்-அருளும்
உட்ப்ரயாணமும் வேண்டுமென்பர்
இத்தனயும் வேண்டுமென்றால்
உன்னை அறி
41. வேஷதாரிகள்
வேஷம் கலைத்து வாருங்கள்
வெகுளியாகப் பேசலாம்
ரோஷம் கலைத்து வாருங்கள்
வினயமாகப் பேசலாம்
கோபம் தவிர்த்து வாருங்கள்
ஆசையாகப் பேசலாம்
த்ரோகம் தவிர்த்து வாருங்கள்
பாசமாக பேசலாம்
மோகம் தவிர்த்து வாருங்கள்
காதலாகப் பேசலாம்
வன்மம் தவிர்த்து வாருங்கள்
அன்பாகப் பேசலாம்
பொய்மை தவிர்த்து வாருங்கள்
உண்மையாகப் பேசலாம்
44. மோதிரம்
மானுடர்க்கு வாழ்க்கை தரும் மோதிரம் ,
கல்யாண மோதிரம் ஒரு போதிமரம்
கொல்லர்கள் தயாரித்த மோதிரம்-பல
முத்திரைகள் பதித்து வைத்த மோதிரம்
அரசாங்க முத்திரை மோதிரம்
உண்டா ஆட்டிவைக்காத ராஜ்ஜியம்
கணையாழி என்கின்ற மோதிரம்,
ராம காதையையே ,படைத்திட்ட மோதிரம்
சீதையையே நம்பவைத்த மோதிரம்
வானில் மாருதியை எழும்ப வைத்த
பல கலைஞர்களை வளர்த்துவிட்ட மோதிரம்
எழுத்து வித்தகரை படைத்திட்ட மோதிரம்
மாயக் கண்னனவன் தவற விட்ட மோதிரம்
விதுரரயே பதற வைத்த மோதிரம்
கவுரவரை வீழ வைத்த மோதிரம்
கற்பனைக்கு -எட்டாத பல வடிவ மோதிரம்
விற்பனைக்கு எளிதான மோதிரம்
காதலுக்கு அடயாள மோதிரம்
காலத்தால் அழியாத மோதிரம்
மோதிரம் ஒரு போதி மரம்
45. நாகம்
பள்ளி கொண்டால் பரம ஸாது
துள்ளி எழுந்தால் வெறியாய் மோதும்
அள்ள முடியாமல் சினந்து சீரும்
வெள்ளம் போல் நுரை கக்கிப் பாயும்
குகையலிருந்து தன் முகம் காட்டும்
தி மூலமும் பள்ளி கொள்ளும்
அனந்த ஸயனமும் கும்
பள்ளிகொள்ளும் பாடமும் கும்
மலையை சுற்றி கயிறாய் படரும்
அகிலம் சுழற்றும் யுதமாகும்
மாலையாய் சிவனின் கழுத்திலிருக்கும்
கணபதி வயிற்றில் கங்கணமாகும்
முருகன் வாகன காலடியாகும்
தானே சக்தி வடிவாய் மாறும்
46. ͨÁ
ஒரு தாய் போதும்,ஒரு தந்தை போதும்
ஓரு பிறப்பு போதும்,
ஒரு வீடு போதும் ,ஒரு ஒரு வாசல் போதும்
ஒன்பது வாசல் வேண்டாம் ,
ஒரு மனைவி போதும், ஒரு திருமணம் போதும்
ஒரு குழந்தை போதும் ,
சம்சாரிக்கு இல்லறம் போதும்,
சன்யாசிக்கு துறவறம் போதும்,
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
எனக்கும் புரிகிறது என்ன செய்ய...?
அப்பப்பா இத்தனை போதும்கள் இருக்கிறதா,
இது தாங்காது "போதும்" "போதும்" "போதும்"
ஒரு போதும் இந்த " போதும் "
என்பதே போதும் .
47. சின்ன கல்
ஒரு சின்னக் கல் என்னைத் தடுக்கி விட்டது-
தலைகுப்புறக் கீழே விழுந்தேன்
ஒரு சின்ன கல்லா என்னை கீழே தள்ளுவது
ஆத்திரம் அறிவை மயக்கியது
சின்னக் கல்லை தூக்கி எரிய
கையைஉயர்த்தினேன்
சின்னக் கல் என் கண்களுக்கு நேரே
வந்த போது உலகையே மறைத்தது
ஒரு சின்னக் கல்லுக்கு இத்தனை
சக்தியா?....மீண்டும் நிமிர்ந்தேன்
என்னுள் ஏதோ மாற்றம்
புத்தருக்கு ஒரு போதி மரம்
எனக்கு ஒரு சின்னக் கல்
ஞானோதயத்தின் சின்ன கல்
பெண்
நீ கணபதி என்றால்
சித்தி புத்தி நானாக வேண்டும்
நீ முருகனென்றால் நான்
வள்ளி தேவானையாக நானாக வேண்டும்
நீ க்ருஷ்ணனென்றால்
பாமா,ருக்மணி,ராதா, அத்தனை கோபியராகவும் நானே ஆக வேண்டும்
நீ ராமனென்றால் சீதையாக நானாகவேண்டும்
நீ ராவணனாகி விட்டால் நான் மண்டோ தரியாக ஆக மாட்டேன்
அப்பொழுதும் சீதையாகத் தானிருப்பேன்
No comments:
Post a Comment