திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Friday, October 26, 2007

புதுக் கவிதைகள்

புதுக் கவிதைகள்

1. வசியம்

வார்த்தைகளில் தேன் தடவும் வசியம்
வாழ்க்கைக்கு என்றும் அவசியம்

2. நான்

உன்னை ஓட விட்டு உன் பின்னால்
நீ ஓடு உன்னை நீ உணர்வாய்

3. ரசிகன்

சகித்துக்கொண்டு வாழாதே
ரசித்துக்கொண்டு வாழ்

4. தர்க்கம்

கடவுள் இருக்கிறாரா இல்லையா
அது தேவைஇல்லை
நாம் இருக்கிறோம்
நம்முள் அவன் இருக்கிறான்

5. வேண்டுதல்

கடவுளே ஒரே ஒரு நிமிடம்
காட்சி கொடு
யாரிடமும் நிரூபிக்க என்னால்
முடியவில்லை

6. புனிதம்

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால்
காதல்- அது இன்னும் இதுவரை
ஏற்படவே இல்லை



7. கர்வம்

தற்பெருமை தேவை இல்லையாம்
பின் மலரே நீ ஏன் மணக்கிறாய்

8. நட்பு

நண்பனுக்குத் த்ரோகம்
செய்ய மாட்டேன் - ஆம்
அவன் மனைவி அழகாக இல்லை

9. ஏக்கம்

ஒரு புகைப் படத்திலும்
உன் அருகில் நான் இல்லையே
ஓ... ஓ... ஓ.... என்றுமே நான்
புகைப்படக்காரன்தான்

10. காபரே

நிர்வாணச்சரக்கை மலிவுச் சந்தையில்
தவணை முறையில்
விற்கும் மொத்த வியாபாரி
11. Å¢Õ

அம்மன் வேஷம் கலைத்துவிட்டு
அடுத்த வேளைச் சாப்பட்டுக்கு
ஐந்து நட்சதிர ஹோட்டலின்
படுக்கை அறை

12. பெருமிதம்

வறுமைக் கோட்டின் கீழே இருக்கிறாயா
கவலைப் படாதே-ஐ நா சபையின்
புள்ளி விவரத்தில் நீயும் சேர்க்கப் பட்டிரூக்கிறாய்


13. பொருமல்

அப்பனுக்கு எதிராய் அன்னிய மதத்தில்
காதலிக்கும் அத்தனை வாரிசுகளும்
தீவிரவாதிகளே

14. யதார்த்தம்

விரலுக்கு மை இட்டு அழகு பார்ப்பார்
பதவி வந்தவுடன் த்ரோணர் போல்
விரலைக் கேட்பார்

15. ஆர்வம்

புகைப் படக்காரரே சற்றுப் பொருங்கள்
உடனே பதிவு செய்து பார்க்க
இது புகைப் படமல்ல - கர்ப்பம்.......

16. மனவியல்

வெறித்த பார்வைகளுக்கு நடுவே
ஒரு தவிர்த்த பார்வை
அதனால் தவித்த பாவை....

17. போதை

போதைக்கும் எனக்கும் போட்டியொன்று
முளைத்தது
யாரை யார் முதலில் நிறுத்துவதென்று?

18. பிறப்பு

உலகிலேயே உயர்ந்தவன் தொழிலாளி -லேபர்
அதனால்தான் பிரசவ வலியை
லேபர் பெயின் என்கிறார்கள்


19 மகிழ்ச்சி

நான் முட்டாள் என்று நிரூபிக்கப் படும் போதெல்லாம்
மகிழ்கிறேன் ஏனென்றால்
பல அயோக்யர்களைபற்றிய
என் அனுமானம் சரியாகவே இருந்திருக்கிறது

20. ஆத்திகம்

என்னையும் படைத்து உன்னையே இல்லை
என்று சொல்லும் நா வன்மையும் எனக்களித்த
கடவுளே நீ இல்லை இல்லை இல்லவே இல்லை

21. படைப்பின் ரகசியம்

ஒரு முறை விதைத்தேன் உலகம் வளர்ந்தது
பல முறை அழித்தேன் ஒன்றும் ஆகவில்லை

22. கணவன்

ஒரு வேளை இவன்தானோ ....?
இது பதினெட்டாவது முறை....

23. வருத்தம்

என் வயது 55
35 வயது என்று சொன்னால்
நம்புகிறார்கள் வருத்தமாயிருக்கிறது
35 வயதுக்கரர்கள் என் போலவா
இருக்கிறார்கள் ?




24. வித்தை

பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவதாக
வெகு நாட்களாக ஏமற்றிக் கொண்டிருக்கிறான்
ஒரு வித்தைக்காரன்

பாம்புக்கும் பாம்புக்கும்
கீரிக்கும் கீரிக்குமே
சண்டை மூட்டிக்கொண்டிருக்கிறான்
அரசியல்வாதி

25. ஊழல்

ஊழல் பட்டியலில் இந்தியாவுக்கு 88 வது இடமா?
ஓஒ......அதிலும் முதல் இடம் இல்லையா?

26. முடியாது

என்னால் முடியாதென்று சொல்லிவிடத்தான்
நினைக்கிறேன்

ஹும் ........ என்னால் முடியவில்லை

27. நீதி தேவதை

"நீதிபதி தர்மலிங்கம்,!! நீதிபதி தர்மலிங்கம், !! நீதிபதி தர்மலிங்கம்,
கோர்ட் டவாலி மூன்று முறை கூப்பிட்டார் "

28. பொட்டு

என் மனைவி சுமங்கலி என்று
நிலைக்கன்னாடியிலும்,கதவுகளிலும்
இருக்கும் ஒட்டும் நெற்றிப் பொட்டை
வைத்து கண்டுபிடிக்கிறேன்




29. வேலைக்காரி

பார்த்துப் பார்த்து சமைத்தாயிற்று- நல்லவேளை
வேலைக்காரிக்கு பிடித்த உணவு வகைகள்
மீதமானலும் கவலை இல்லை

30. நாகரீகம்

ஸிந்து நதிக்கரை நாகரீகம்
காலமாற்றமடைந்தனால்
கூவம் நதிக் கரையில்
கொசுக்களுடன் வாழுகிறோம்

No comments: