என்னுடைய கருத்துக்கள் ,நேர்மையாக
மனதின் அடித்தளத்திலிருந்து எழுத்ப் படுபவை
நான் உண்மையை எழுத முற்படும் போது
வார்த்தைகள் தாமாக விழுகின்றன
இந்த வார்த்தை ஜாலம் என்னும் சொல்லுக்காகவே
நான் ஒரு கவிதை எழுதினேன்
சொற்சிலம்பம்
வானத்து நக்ஷத்திரங்களை வாரி எடுத்து
வைரத்தோடு
விடிவெள்ளியை வடித்தெடுத்து மூக்குக் குத்தி
முழுமதியை எடுத்து வந்து சூடாமணீ
-சூரியனைத் துணிந்தெடுத்து ராக்கொடி
மேகக் கூட்டங்களை உருட்டி எடுத்து
திண்டு மெத்தை --மலர்களைக்
கூட்டி எடுத்து தூவிய மலரணை
வெட்டெ வெளியில் வளர்ந்த
முற்றிய சந்தன மரம்
வெட்டி எடுத்துச் செய்த கட்டில்
வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு
ஊட்டுகின்ற அன்னை-தங்கத்தொட்டிலில்
வைத்து தாலாட்ட ஒரு தந்தை.........
ஆகாய விமானத்தில் ஆனந்தமாய்
பயணம்.. திடீரென்று கோளாரு ஜனனம்
அந்தரத்தில் கா கா வென்று
கோளரு பதிகம்,கந்த ஷஷ்டி கவசம்
பந்தாவாய் பாரசூட்டில் பயணம்
கண்விழித்துப் பார்த்தேன்
கிடந்தேன் அரசுத் தொட்டிலில்அனாதையாய்
அது சரி -சொற் சிலம்பம் எனக்கது அத்துப்படி
ஆனால் சோற்றுக்கு வழி எப்படி..?
அன்புடன்
தமிழ்த்தேனீ
1 comment:
அது சரி -சொற் சிலம்பம் எனக்கது அத்துப்படி
ஆனால் சோற்றுக்கு வழி எப்படி..? <<
சாட்டையடி வரிகள்! இங்கு உண்மை எனும் முலாம் பூசி பொய்க்குள் நடக்குறது வாழ்க்கை!...
உங்களின் வரிகளில் வியந்து போனேன்.
Post a Comment