நிழலின் வெளிச்சம்
ஒரு பெரிய நிறுவனம் பெரிய மூலதனம்
முதலாய்ப் போட்டு திரைப்படமெடுக்க
திட்டமிட்டு என்னை அழைத்து
ஒப்பந்தம் செய்தது
ஒரு நடிகராகப் பங்கு கொள்ள-
நானும் இசைந்தேன் நடித்துக் கொடுக்க ,
என் தொழிலல்லவா அது
ஒப்பனையாளர் என்னை உரு மாற்றினார்
ஆடைகள் கொடுப்பவர் மேலும் பொருத்தினார்
என்னை அந்தப் பாத்திரத்துக்கு ஏற்றவனாக
உணவு உபசரிப்பாளர்கள் ஆதரவாய் உணவு கொடுத்தனர்
உதவி இயக்குனர் எளிதாக பொறுமையுடன் சொல்லிக்
கொடுத்து மேலும் கூட்டினார் என் பாத்திரத் தன்மையை
இயக்குனர் சொன்ன இடத்தில் நின்றேன்
சொல்லிக் கொடுத்தபடி பேசி, நடித்தேன்
தளப் பொறுப்பாளர் காட்சி ஜோடனைக்
கற்பனைத் தூரிகை கைவண்ணம் காட்டினார்
புகைப் பட நிபுணர் என்னை மேலும்
அழகாக,திறமைசாலியாக காண்பித்தார்
எழுத்தாளர் என் கதா பாத்திரத்துக்கு ஏற்ற
வசனங்களை இயல்பாக எழுதினார்
ஒரு பெருங் கவிஞ்ஞர் பாடலெழுதினார்
பல குரல் வளம் பாடியது ,நான் வாயசைத்தேன்
பல பொறியாளர்கள் பாடு பட்டனர்
திரைப் படம் வெற்றி பெற
அடடா என்னை சுற்றி எத்தனை பேர்
முத்தான வியர்வை கொட்ட உழைக்கிறார்கள்
அவர்கள் வெளியே தெரிவதே இல்லை
அத்தனை பேரும்-
புகைப் படக் கருவிக்குப் பின்னால்
என் வெளிச்சத்தின் பின்னே இத்தனை
இருட்டுக்களா, த்யாகங்களா
நான் மட்டும் மக்கள் மனதில்,
விளம்பர தட்டிகளில்,பத்திரிகைகளில்
தொலைக் காட்சிகளில் ,
மக்கள் மனதில் , வீடுகளில் ,
அனுமதி இல்லாமல் நுழைந்த
வலுக் கட்டாய சூரியன் நான்
ப்ரகாசிக்காத எத்தனயோ நக்ஷத்திரங்கள்
என் பின்னால்,தங்கள் த்யாகங்கள் புரியாமல்
என் ப்ரகாசத்தின் பின்னே இத்தனை
இருட்டுக்களா ?
உண்மையை ம்னம் திறந்து சொல்கிறேன்
எனக்குத் தெரிந்த வரை தன் ப்ராகசத்தின்
பின் இருக்கும் இருட்டுக்களின் வேதனையை
அறியாது அறிந்தாலும்
கண்டுகொள்ளாமல் தன்னால் தான் வெற்றிகள்
குவிகின்றன என்று ஆட்டம் ஆடியவர்கள்
பலபேர் காணாமல் போயிருக்கிறார்கள்
வெற்றியின் உச்சத்திலிருந்து பாதாளத்துக்கு
அதனால் தான் உணர்ந்து எழுதினேன்
நான் தொலைக் காட்சித் தொடரிலோ,திரைப் படங்களிலோ
நடித்தைப் பார்த்து பாராட்டிய பலபேருக்கு நான் சொன்ன
ஒரே வார்த்தை என் பலமே நீங்கள்தான்
நீங்கள் ரசிக்காமல் பார்க்காமல் இருந்தால்
என் திறமை விழலுக்கிறைத்த நீர்தான்
ஆகவே நீங்கள்தான் என் மூலதனம் என்று சொல்லி இருக்கிறேன்
அதே போல் நான் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில்
ஒரு இயக்குனருக்கு என்ன மரியாதை தருகிறேனோ
அதே அளவு மரியாதை எனக்கு தண்ணீர்
கொண்டுவந்து தரும் சேவகனுக்கும் தருகிறேன்
அதுதான் நிலைக்கும் என்று எண்ணுகிறேன்
நிச்சயமாக உணர்ந்த்ததைத்தான்
எழுதியிருக்கிறேன்
அனுபவபூர்வமாக புரிந்து கொண்டதை மட்டுமே
எழுதுகிறேன்
ஆனால் அதே போன்று உண்மையாக நடிக்கவேண்டும்
நடிப்பு ஒரு அருமையான தொல் கலை
அதற்கு மரியாதை கொடுத்து நம்மால் இய்ன்றவறை
அனைவருக்கும் ஒத்துழைப்பு கொடுத்து
நடிக்கவேண்டுமமென்கிற எண்ணத்துடன்
வரும் அருமையான நடிகர்களை
போலித்தனமான மரியாதையை ,அலட்டல்களை,மட்டும்
மதித்து உண்மையான கலைஞ்ஜர்களை அவமானப் படுத்தி
காயப் படுத்துகிறார்கள் என்பதையும் நேரிடையாகப்
பார்த்து மனம் வலித்திருக்கிறது எனக்கு
எங்கு போலிகள் அட்டகாசம் தொடர்கிறதோ அங்கெல்லாம்
இத் தமிழ்த் தேனீ என்னும் கலைஞ்ஞன் உள்ளம் குமுறுகிறான்
மனச்சாட்சியுடன்
அன்புடன்
தமிழ்த்தேனீ
1 comment:
உங்கள் எழுத்துக்கள் என்னையும் எழுத தூண்டுகின்றன.
நல்ல நல்ல சிந்தனைகள். நல்ல நல்ல ஆக்கங்கள்.
உங்கள் சினிமா அனுபவங்கள் எல்லாம் அறிந்து கொள்ளக்கூடியாதக
உள்ளது. என் வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு உண்டு
வாழ்க வளமுடன் வளர்க உங்கள் கலைத்துறை.
அன்போடு.
ராகினி
ஜோமனி.
Post a Comment