திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Monday, July 30, 2007

குரு

குரு
குரு என்பவர் எந்த தோற்றத்தில் வருகிறார்
என்பது முக்கியமே அல்ல
அவர் எப்படிப் பட்டவர் என்பதும் முக்கியமல்ல
ஒரு சரியான தருணத்தில் நம் அகக் கண்களைத் திறந்து
ஒரு சரியான வழிகாட்டுதல் மூலம் நம்மை ஆட் கொள்ளுபவர்கள் அனைவருமே குருஸ்தானத்தை அடைகிறார்கள்

ஒரு கதை ஞாபகம் வருகிறது

ஒரு பாமரன் கர்ப்பிணியாய் இருக்கும்
தன் மனைவியை விட்டுவிட்டு ஒரு ஆற்றின் அக்கரைக்குச் சென்று ,தன்னுடைய பணியை முடித்துவிட்டு திரும்பும் போது ,ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது
அக்கரையிலிருந்து அவசரச் செய்தி ,
கர்ப்பிணி மனைவிக்கு ப்ரசவ வலி
எடுத்து விட்டதாக.
இறைவா என் மனைவியையும்
குழந்தையையும் காப்பாற்று ,
என்னை எப்ப்டியாவது அக்கரைக்கு
அழைத்துப் போ என்று வேண்டிக் கொண்டிருந்தான்

ஆனால் ஆற்றின் சுழல் வேகத்தில் அக்கரைக்கு
செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த போது
ஆபத் பாந்தவன் போல்
ஒரு சிறுவன்அங்கு வந்து ...என்ன அக்கரைக்குப் போக வேண்டுமா...? வாருங்கள்
என்று அக்கரையோடு அழைத்தான் சிறுவன்

நம்மாலேயே இந்த வெள்ளப் பெருக்கில்
அக்கரை போக முடியாதே
இந்தச் சின்னஞ்சிறுவன் எப்படி அழைத்துப் போவான் ...?
நம்பிக்கை இல்லாவிடினும் நேர அவசரம்
கருதி ஆமாம் உதவி செய்ய முடியுமா?
என்று கேட்டான் பாமரன்

அதற்கு அச்ச் சிறுவன் வாருங்கள் அழைத்துப் போகிறேன்
என்று கன கம்பீரமாய் கூறிவிட்டு
என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்,
என் பெயர் ஆயன் ,ஆயன் ,ஆயன் என்று
என் பெயரைச் சொல்லியபடியே வாருங்கள்
என்று சொல்லி நாராயணா நாராயணா
என்று கூறிக் கொண்டே
ஆற்றின் மேல் நடக்க்த் துவங்கினான்,இருவரும்
பாமரன் ஆயன் ,ஆயன் என்று கூறிக் கொண்டே
அந்த வெள்ளப் பெருக்கில் தன்ணீரின்
மேல் நடந்து போகத் துவங்கினர் மூழ்காமலே
முதலில் ஆச்சரியப் பட்ட பாமரன் பாதி வழியில்
திடீரென்று ,,யோசித்தான் சின்னஞ் சிறு இப்பாலகனே
நாராயணா ,நாராயணா என்று சொல்லும் போது தண்ணீரின் மேல் நடக்க முடிகிறதே ,
ஏன் நாமும் நாராயணா என்றே
சொல்லிக் கொண்டு நடக்கலாமே என்று எண்ணி
நாராயணா என்றான் ,உடனே தன்ணீரில் மூழ்கினான்
அப் பாமரனைப் பிடித்து தூக்கிய ஆயன்
என் பெயரை விட்டு விட்டு ஏன்
நாராயணன் பெயரைச் சொன்னீர்கள்
என்று கேட்க பாமரன் பதில் சொல்லத்
தெரியாமல் விழித்தான்

உடனே ஆயன் என்னும் அச்சிறுவன்

"எனக்கு நாராயணனைத் தெரியும்"
நான் அவன் பெயரைச் சொன்னேன்
உங்களுக்கு என்னைத் தானே தெரியும் ,
நான் தானே காப்பாற்றி
அழைத்துப் போகிறேன்
ஆகவே என் பெயரையே சொல்லுங்கள்
என்று சொல்ல பாமரன் ஆயன் ,ஆயன்
என்று சொல்லி அக்கரையை அடைந்தனர்
அவன் மனவிக்கு சுகப் ப்ரசவம் தாயும் சேயும் நலம்
அச்சிறுவன் அவர்களை ஆசீர்வதித்து

,யார் உனக்கு உதவி செய்கிறார்களோ அவர்களை நம்பு
அவரைத் தாண்டி அவருக்கு மூலம் எது என்று பாராதே
என்று சொல்லி விடை பெற்றான் ஆயன்

ரிஷி மூலம் நதி மூலம் பார்க்கக் கூடாது
என்பதன் அர்த்தமும் இதுதான்
குரு எப்படி இருக்க் வேண்டும் என்று
நீ முடிவு செய்யாதே
உருவு கண்டு எள்ளாதே
உன்னை மாணவனாக ஏற்றுக் கொள்ள நீ பக்குவப் படு

குருப் ப்ரம்மா ,குரு விஷ்ணு, குரு தேவோ
மஹேச்வரஹ:குருஸ் சாஷ்ஷாத் பரப் ப்ரும்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ:

அன்புடன்
தமிழ்த்தேனீ

No comments: