திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Monday, July 30, 2007

நெகிழ வைத்த சம்பவங்கள் 1.

திரு ஆண்டாளின் தோள்களிலே
கொஞ்ஜும் கிளிகள்
ரங்கா,ரங்கா,என்று கொஞ்ஜும்
ஸ்ரீரங்கம் ,திருவரங்கன் திருக் கோயில்
அமுதமான காவிரியால் சூழப்பட்ட
பொன்னி சூழ் திருவரங்கன் திருக் கோயிலின்,.
ராஜ கோபுரத்தை

பல வருடங்களாக , பலமுறை பல பேர்
நிர்மாணிக்க முயன்றும் , முடியாமல் நின்ற
ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை கட்டுவதற்காக
அப்போது இருந்த ஜீயர் 44வது பட்டம்,
ஸ்ரீவண் ஸடகோபஸ்ரீ வேதாந்த மஹா தேசிகன்
மிகவும் மிகவும் ப்ரயாசைப் பட்டு ,பலவிதமான
,முயற்சிகளை மேற்கொண்டார், அவருக்கு
வயது 70 க்கு மேல்
அந்த வயதிலும் அவர் பல பாடு பட்டு
நம்முடைய புராதனமான,
அமுதமான காவிரியால் சூழப்பட்ட
பொன்னி சூழ் திருவரங்கன் திருக் கோயிலின்
ராஜ கோபுரத்தை நிர்மாணித்தே ஆகவேண்டும்
என்று தீர்மானமாக முடிவெடுத்து
அதற்காக மொத்த தொகை எவ்வளவு
ஆகும் என்று தோராயமாக ஒரு திட்டமிட்டு
அத்தொகை பல நல்ல வழிகளில்
ஈட்டிவந்தார்,
இயல்பாகவே மிகவும் இரக்க மனம் கொண்ட
எடுத்த உன்னதமான பணியை
முடிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தினால்
மடத்தின் அனாவசிய சிலவுகளைக் குறைத்து
சிக்கனத்தை மேற்கொண்டு ஒவ்வொரு பைசாவையும்
ஒரு கோடி போல் எண்ணி சேர்த்துக் கொண்டே
தைரியமாக திருப் பணியை ஆரம்ப்பித்தும் விட்டார்

அப்போது ஆட்சியிலிருந்த திரு எம் ஜீஆர்
என்று அழைக்கப் படும் திரு எம் ஜீ ராமச்சந்திரன்
அவர்கள் ஒரு லக்க்ஷ ரூபாய் நன் கொடை
கொடுத்தார்,திரு இளைய ராஜா இன்னும்
பல நல்ல உள்ளங்கள், இந்த நல்ல திருப் பணிக்கு
பொருளுதவி செய்தனர்,
அப்படியும் பணம் போதாமல் இன்னும்
பணம்சேர்ப்பதற்கு பல நல்ல வழிகளில்
முயன்று கொண்டிருந்தார் ஜீயர் அவர்கள்

திருப்பணிகளும் நடந்து கொண்டே இருந்தது
சிக்கனத்தை மேற்கொண்டாரே தவிர
தினம் வரும் அன்பர்களுக்கு
திருவரங்கன்நாச்சியாரின் ப்ரசாதம் அளிப்பது,
உணவளிப்பது எதையும் நிறுத்தவில்லை

அந்த நேரத்தில்
ஒரு வயதான மூதாட்டி அங்கு வந்து
அவரிடம் ,
ஆச்சாரியனே எனக்கு ஒரு பத்து ரூபாய்
கொடுங்கள்,என்று கேட்டார்,
அச்சாரியனும் அந்த மூதாட்டியிடம்
ராஜ கோபுரம் கட்டுதற்க்கே
பொருள் போதாமையால் இன்னும்
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
என்னிடம் வந்து பணம் கேட்கிறாயே
இல்லை என்று பல முறை வற்புறுத்தி
சொல்லியும்
அந்த மூதாட்டி அங்கேயே நின்றுகொண்டு
மீண்டும் மீண்டும் அவரைத் தொந்தரவு
செய்து கொண்டிருந்தாள் பத்து ரூபாய்
கொடுக்கும் படி
அவளுடைய தொந்தரவு பொறுக்க முடியாமல்
உதவியாளரை அழைத்து அந்த மூதாட்டிக்கு
ஒரு பத்து ரூபாய் கொடுத்து அனுப்பும்படி
சொல்ல ,அவளுக்கு பத்து ரூபாய் கொடுக்கப் பட்டது

அந்த மூதாட்டி ஆசாரியனை மேலும் நெருங்கி வந்து
தன் தளர்ந்த குரலில் என்னை மன்னிக்க வேண்டும்
இந்த வயதிலும் நீங்கள் ராஜ கோபுர திருப்பணி செய்யும்
மகத்தான காரியத்துக்கு பல பெரிய மனிதர்கள்
பண உதவி செய்திருக்கிரார்கள்
ஆனால் என்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை
என்னிடம் பணம் இல்லை ஆனால் ராஜ கோபுர
த்ருப்பணிக்கு கொடுக்க மனம் மட்டும் உள்ளது
அதனால்தான் தங்களைத் தொந்தரவு செய்துவிட்டேன்
என்று கூறி
ஆச்சாரியனே இந்த அடியாளின் பங்காக
இந்தப் பத்து ரூபாயை ராஜகோபுர திருப்பணிக்காக
வைத்துக் கொள்ளுங்கள் என்று கதறினாள்
அங்கு திருவரங்கனும் நாச்சியாரும் ,ஆச்சாரியாரும்
நெக்குருகினர்
இந்தச் செய்திகேட்டு
அடியேனும் நெகிழ்ந்தோம்

மனமிருந்தால் வழியுண்டு

அன்புடன்
தமிழ்த்தேனீ

No comments: