அஸ்தி (ர) வாரம் சிறு கதை யூத்புல் விகடனில் வெளியாகி இருக்கிறது
படித்து மகிழுங்கள்
அன்புடன்
தமிழ்த்தேனீ
திரு ஆதனூர் படியளந்த பெருமான்
Monday, November 30, 2009
Wednesday, November 11, 2009
இந்து மனம்
ஆவடியில் ஒரு பள்ளியில் நான் உரையாற்றப் போயிருந்தேன்
அந்தப் பள்ளி ஒரு கிரித்துவப் பள்ளி
அங்கே மேடையில் நான் அமர்ந்திருந்தேன்
என் இடப்பக்கம் ஒரு இசுலாமியப் பெரியவர் இசுலாம் வேதத்தைப் பற்றிப் பேசக் காத்திருந்தார்
என் வலப்பக்கம் ஒரு கிரித்துவ பாதிரியார் கிரித்துவ வேதத்தைப் பற்றிப் பேசக் காத்திருந்தார்
என்னை இந்து மதம் பற்றிப் பேச அழைத்திருந்தனர்
நான் மேடையில் முதலாவதாகப் பேச அழைக்கப்பட்டேன்
எண்ணிப் பாருங்கள் என் நிலையை
ஆனால் நான் கவலைப்படவில்லை
ஒலிபெருக்கியைப் பிடித்தேன்
எதிரே இருந்த ஒரு ஆசிரியையிடம்
சகோதரி உங்கள் சாலையில் ஒரு பெரியவர் உங்கள் கண்முன்னே கீழே விழுந்து விடுகிறார்
நீங்கள் பதறிப் போய் உங்கள் வீட்டுக்காரரை உதவிக்கு அழைக்கிறீர்கள்
அவரிடம் என்ன சொல்லுவீர்கள் என்று கேட்டேன்
அந்த ஆசிரியை கூறினார்
ஒரு பெரியவர் கீழே விழுந்து விட்டார் அவருக்கு உதவி செய்வோம் ஓடி வாருங்கள் என்று அழைப்பேன் என்று கூறினார்
அந்த ஆசிரியை ஒரு பெரியவர் என்று கூறினார்களே தவிற
ஒரு இசுலாமியப் பெரியவர்,அல்லது ஒரு இந்துப் பெரியவர், அல்லது ஒரு கிரித்துவப் பெரியவர்
கீழே விழுந்து விட்டார் என்று கூறவில்லையே
பொதுவாக ஒரு பெரியவர் கீழே விழுந்து விட்டார் என்றுதானே கூறினார்கள்
என்று குறிப்பிட்டுவிட்டு என்னுடைய உரையை ஆரம்பித்தேன்
என் முதல் வார்த்தையே என்ன தெரியுமா...?
இந்து மதத்தைப் பற்றியோ
இசுலாமிய மதத்தைப் பற்றியோ
கிரித்துவ மதத்தைப் பற்றியோ
மற்ற எந்த மதத்தைப் பற்றியும் நான் பேசப்போவதில்லை
இந்து மனத்தைப் பற்றிப் பேசப் போகிறேன் என்றேன்
நாமெல்லோரும் இந்தியர்கள் ,நமக்குள் பேதமில்லை
ஆகவே மதத்தைப் பற்றியோ, தனிதனியாக வேதங்களைப் பற்றியோ
விவாதம் தேவையில்லை, எது உயர்ந்தது என்பதில் கருத்து வேறுபாடுகள் வேண்டாம்
அவரவர் தாய் அவரவர்க்கு உயர்வு,இங்கே யாரும் தாழ்வில்லை, யாரும் உயர்வில்லை,எல்லோரும் சமமே,
ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய மதம் , வேதம் என்
பதெல்லாம் போய்ச்சேரும் இடத்துக்கு உண்டான வாகனம்தான்,
அவரவர் வாகனம் அவரவர்க்கு உயர்வு
வாகனம்தான் வேறு வேறு, போய்ச்சேரும் இடம் ஒன்றுதான்
ஆகவே இந்து மனம் பற்றி யோசிப்போம், இந்து மனம் பற்றி பேசுவோம்
நாம் அனைவருமே இந்தியர்கள் என்று பெருமிதம் கொள்வோம்
வந்தே மாதரம் என்று கூறிவிட்டு உட்கார்ந்தேன்
இசுலாமியப் பெரியவரும் , கிரித்துவப் பெரியவரும் என் பேச்சை ஆமோதித்து என்னைக் கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொறிந்து
இந்தப் பொது மனம் இனி இந்தியர்கள் அனைவருக்கும் வரப் பாடுபடுவோம் என்றனர்
நாங்கள் மூவரும் ஒன்றாக உணவருந்திப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம்
வந்தே மாதரம்

Monday, November 2, 2009
Monday, October 26, 2009
Monday, October 5, 2009
கனவுப் ப்ரபஞ்சம்
நேற்று வழக்கமான பணிகள் முடிந்து
தூங்கப் போனேன், நல்ல தூக்கம்
அதன் நடுவே நாம் தூங்குகையில் நம் ஆத்மா லோக சஞ்சாரம் செய்யக் கிளம்பிவிட்டது போலும்
மனுஷன் கொஞ்சம் அசந்தா போதும்
அவனோட ஆத்மாவே அவனை விட்டுட்டு சுற்றுலா கிளம்பிவிடுகிறது,அப்படி இருக்க யாரை நம்புவது.?
அது போல ஆதமா சுற்றுலா செல்லும்போதுதான் கனவுகள் வரும், அந்த ஆத்மா எங்கெல்லாம் போகிறதோ, யாரையெல்லாம் பார்க்கிறதோ,
அந்த செயல்களின் தொடர்பாக நமக்கு கனவுகள் வரும் என்று நினைக்கிறேன்,
நேற்று என்னவோ தெரியவில்லை எனக்கும் என் தந்தையார் திருவாளர் ரங்கஸ்வாமி ஐய்யங்கார் அவர்களுக்கும் ஒரு சந்திப்பு,
ஏதேதோ பழைய நிகழ்வுகளின் சிந்தனைகள்
காலையில் கண் விழித்தேன்
காலைக்கடன்களை முடித்துவிட்டு கணிணியைத் திறந்தேன்
என்னுடைய கணிணியின் திரையில்,
எம் எஸ் என், யாஹூ, கூகுல்டாக், என்று ஒவ்வொன்றாக தோன்ற ஆரம்பித்தது, ஏதோ ஆகாயத்தில் நகஷத்திரங்கள் மின்னுவது போல ஒவ்வொன்றாக மின்னத் தொடங்கிற்று
எம் எஸ் என் மெசஞ்சர் தோன்றியது
அதில் ரங்கஸ்வாமி தொடர்பிலிருக்கிறார் என்று காட்டியது
ப்ரபஞ்சத்துக்கும் நம் கணினிக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்று புலனானது
என்பெயர் கிருஷ்ணமாச்சாரி ரங்கஸ்வாமி

Thursday, October 1, 2009
விஞ்ஞானத்தின் அடிப்படை மெய்ஞ்ஞானமே என்னும் கட்டுரை சென்னை ஆன் லைனில் வெளியிட்டிருக்கிறார்கள்
http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=2933c31a-15cf-40e4-a2b5-a76e292d5ad5&CATEGORYNAME=Thene
“ மெய்ஞானம் “
நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த ஒவ்வொரு செயல்களும், பழக்க வழக்கங்களும் மிகவும் ஆராய்ச்சி செய்து அறிவு பூர்வமாக ஏற்படுத்தப்பட்டவையே என்பதையும் ,
நம் முன்னோர்களால் ஏற்படுத்தப் பட்ட மெய்ஞானம் தான் இன்றைய விஞ்ஞானம் என்பதை வலியுறுத்துவதையே என் நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரையை வடித்திருக்கிறேன்,அப்படி நிரூபிக்க நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட பல நல் வழக்கங்களில் ஒன்றை மட்டும் உதாரணமாக இங்கே எடுத்துக்கொண்டு அலசுகிறேன், இதே போல்
அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து செயல்களிலும் பழக்கவழக்கங்களிலும் விஞ்ஞானம் கலந்தே இருக்கிறது என்பதை இந்த ஒரு உதாரணத்தினால் விளக்க முற்பட்டிருக்கிறேன்,
மெய்ஞானம்தான் விஞ்ஞானம் , விஞ்ஞானம்தான் மெய்ஞானம்,
என்பதை கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று ஒரு சொல் வழக்கு இருக்கிறது, அதை கண்ணேறு படுதல் என்று நம் முன்னோர்கள் கூறுவர், அந்த திருஷ்டி கழிய, சுற்றிப்போடுதல்,அல்லது திருஷ்டி கழித்தல் என்று ஒரு வழக்கத்தை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர்
அதை ஆராய்ந்தால் கொஞ்சம் கல் உப்பு எடுத்து அதோடு மிளகாய் வற்றலையும் கையில்வைத்துக்கொண்டு நம்மை நிற்க வைத்து அந்த உப்பை வைத்து நம்மைச் சுற்றிவிட்டு அந்தஉப்பையும், காய்ந்தமிளகாயையும், எரிகின்ற நெருப்பில்இடுவார்கள், அந்த உப்பு நெருப்பில் பட்டவுடன் வெடிக்கும், காய்ந்தமிளகாய் கருகி மிளகாய் நெடி மூக்கைத்தாக்கும்,
இந்த நிகழ்வில் உப்பும் ,காய்ந்த மிளகாயும் பஞ்ச பூதங்களாகிய நெருப்பில் இணைந்து ஒரு விதமான ரசாயனக் கலவை ஏற்பட்டு அந்த ,வேதிய மாற்றம்நமக்கு இருக்கும் வியாதிகளைப் போக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல, விஞ்ஞானப் ப்ரகாரம் உப்பும் காய்ந்தமிளகாயும் நெருப்பும் சேர்ந்த கலவையான மணம் நம் நோயைத்தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது
கொஞ்சம் சுண்ணாம்பு, மஞ்சள் இரண்டையும் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் கலக்கும்போது மஞ்சளும் ,சுண்ணாம்பும் சேர்ந்து ஒரு சிவப்பு நிறத்தை அந்த தண்ணீருக்கு அளிக்கும்,அந்த சிவப்புத்தண்ணீர் கலப்பதால் ஏற்படும் வேதிய மாற்ற விளைவுகளால் நம் நோய்கள் , தீரும் என்றும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர்,
அதேபோல இந்த இரண்டு செயல்களிலும் ஏற்படும் வேதிய ,மாற்றத்தால் விளையும் மணம் பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய காற்றில் கலந்து நம் நாசியில் புகுந்து நமக்கு கிருமி நாசினியாகப் பயன்படுகிறது
அதே போல கிராமங்களில் வீட்டு வாயிலில் மார்கழி மாதங்களில், அல்லது அனைத்து மாதங்களிலுமே சாணம் தெளித்து வைப்பர் பசுமாட்டின் சாணம் ஒரு உயர்தரமான கிருமி நாசினி , இந்தக் கிருமி நாசினி
பசுமாட்டின் சாணத்தை பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய பூமியின் மேல் தெளிப்பதால் ஏற்படும் வேதிய மாற்றங்களினால் ஏற்படும் வெளிப்பாடாகிய ஒரு விதமான மணம் கிருமிகளிடமிருந்து ஒரு கவசம் போல் நம்மைக் காக்கிறது
அதே போல பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய ஆகாயத்தில் காற்றின் மூலமாகக் கலந்து ஏற்படும் வேதிய மாற்றங்கள் நம்மை பாதிக்கின்றன, அல்லது காக்கின்றன என்பது எவ்வளவு உண்மை
ஆகாயத்தில் இருக்கும் மேகங்களிலிருந்து பெய்யும் மழை, நமக்கு மிகவும் சுத்தமான குடி நீரையும் அளிக்கிறது, பயிர் செழித்து வளரத்தேவையான இயற்கைச் சத்துக்களை பூமியிலிருந்து காற்றின் மூலமாகவும், சூரிய வெப்பத்தால் தண்ணீர் நீராவியாக மாறும்போது அந்த நீர் ஆவியாகி அந்த ஆவியோடு பூமியிலுள்ள இயற்கையான பல சத்துக்கள் தாமாகவே கலந்து அந்த சத்துக்களும் நீராவியோடு ஆகாயத்தில் சென்று மேகமாக உருக்கொண்டு , மீண்டும் அங்கே ஏற்படும் குளிர்ச்சியான சூழலால் மழையாக மாறும் வேதியல் விந்தையால் நீராக , சுத்தமான நீராக மாறி மழையாகப் பொழிகிறது,
ஆகவே பஞ்ச பூதங்கள் என்று மெய்ஞானிகளாலும்
ஐந்து வகை சக்திகள் என்று விஞ்ஞானத்தாலும் ஒப்புக்கொள்ளப்படும் இந்த பஞ்ச பூதங்களிலிருந்து உருவாகும் ஜீவராசிகளுக்கு இந்த பஞ்ச பூதங்களின் சக்திகள், எப்போதும் உதவுகின்றன என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த நம் முன்னோர்கள்
அந்தக் காலத்திலேயே மக்களுக்கு விஞ்ஞானம் என்று சொன்னால் புரியாது என்றுணர்ந்து விஞ்ஞானத்தையே மெய்ஞ்ஞானம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது , அவர்கள் பாமரர்களா அல்லது விஞ்ஞானம் வளர்ந்த இந்த நிலையிலும் இவைகள் எல்லாவற்றையும் அதாவது நம்முடைய மெய்ஞ்ஞானமே விஞ்ஞானம் என்றுணராமல் இருக்கும் நாம் பாமரர்களா என்று எண்ணி வியப்படைகிறேன்
ஆகவே இன்றைய முன்னேற்றமான விஞ்ஞானத்தின் அடிப்படை அன்றைய மெய்ஞ்ஞானமே என்பது அசைக்க முடியாத உண்மை
மெய்ஞ்ஞானம் எதை கடவுள் என்று சொல்லுகிறதோ அந்தக் கடவுளை விஞ்ஞானம் இயற்கை என்று சொல்லுகிறது
இயறகையோடு இணைந்து வாழ்வோம், அதே நேரத்தில் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த அனைத்து நல் வழக்கங்களையும் பழமை என்று ஒதுக்காமல் அவர்கள் கூறிய மெய்ஞ்ஞானத்தில் அந்தக் காலத்திலேயே எப்படி அவர்கள் அவற்றை முறையாக ஆராய்ந்து விஞ்ஞானத்தை உட்பொருத்தி வைத்திருந்தனர் என்பதை மீண்டும் ஒரு முறை ஆராய்ந்து அவைகளில் உள்ள நன்மைகளை அடைவோம்
ஆகவே கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றிக் கவலை கொள்ளாமல் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த நல் வழக்கங்களையும் இயற்கையையும் நம்பி வாழக் கற்றுக்கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது
அன்புடன்
தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com -- http://peopleofindia.net -- http://thamizthenee.blogspot.com

Wednesday, September 9, 2009
நாணயம்
செய்தி : பழங்கால நாணயங்களின் நிரந்தர கண்காட்சி !
400 அரிய வகை நாணயங்கள் காணவாய்ப்பு !
இந்தச் செய்தியைப் படித்தவுடன் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன
நாணயங்கள் காலத்துக்கு காலம் மாறுபடுகிறது
நாணயங்கள் என்றதும் என்னுடைய சிறு வயது நினைவுக்கு வருகிறது
என்னுடைய சிறு வயதில்
ஒரு ரூபாய்க்கு 16 அணா
ஒரு அணாவுக்கு இரண்டு அரையணா
ஒரு அரையணாவுக்கு இரண்டு காலணா
ஒரு அணாவுக்கு நாலு காலணா
அந்தக் காலணாவில் ஒட்டைக் காலணா உண்டு,
ஓட்டை இல்லாத காலணாவும் உண்டு
ஒரு காலணாவுக்கு மூன்று தம்பிடிகள்
ஆக ஒரு ரூபாய்க்கு 192 தம்பிடிகள்
அதே போல ஆயிரம் ரூபாய் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தின் அளவில் பாதி அளவு இருக்கும், அப்போதெல்லாம் உணவு விடுதிகள் சென்னை சுபாஷ் சந்திர போஸ் தெருவில் இருக்கும் ,அதற்கு தண்ணீர்ப் பந்தல் என்றும் பெயரிட்டு இருப்பார்கள்,அந்த உணவு விடுதியில் சென்று மணக்க மணக்க இருக்கும் சுவையான உணவு வகைகளை உண்ண ஆரம்பித்தால் ,உண்ண உண்ண கணக்கு தெரியாமல், வயிறு நிறைந்தாலும்,மீண்டும் உண்ணத் தோன்றும், வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு எவ்வளவு ஆயிற்று என்று கணக்கு கேட்டால் நாம் என்னென்ன சாப்பிட்டோம் என்று
மனக்கணக்கு போட்டே சொல்வார்கள், அவ்வளவு சாப்பிட்டும் ஒண்ணரை அணா என்பார்கள் ,அது ஒரு பொற்காலம் ,சுவையிலும் சரி, பணத்தின் மதிப்பிலும் சரி அது உண்மையாகவே ஒரு பொற்காலம்தான்,
உட்காருவதற்கு ஒரு நீளமான மர பென்ச் போட்டிருப்பார்கள்,
வைத்துக்கொண்டு உண்ணவும் ஒரு நீளமான பென்ச் போட்டிருப்பார்கள்
மந்தாரை இலையில் வைத்து உண்ணக் கொடுப்பார்கள்,
எனக்கு வயது 60 க்கு மேல் ஆகிறது, இன்னமும் அந்தச் சுவை நாவை விட்டு அகலவில்லை,
சமீபமாக கேரள மாநிலத்தில் இருக்கும் வர்க்கலா என்னும்
ஷேத்திரத்துக்கு சென்றிருந்தோம், அங்கே வர்க்கலா என்னும்
அந்தக் கடற்கரை மிகவும் அருமையாக இருக்கிறது,
அந்தக் கடற்கரையில் வெளி நாட்டவர் அனேகம் பேர் வருகிறார்கள்,அருமையான சுற்றுலாத்தலம் அது
அங்கே நம்முடைய கிங் ஜார்ஜ் உருவம் பொறித்த பெரிய ஒரு ரூபாய்,
விக்டோரியா மகாராணியின் உருவம் பொறித்த வெள்ளியினாலான ஒரு ரூபாய், காலணா, ஓட்டைக் காலணா, தட்டைக் காலணா, அரையணா,
மஞ்சள் அரையணா , மற்றும் பித்தளையில் செய்த தாமரைப் பூ உருவம் பொறித்த 20 பைசா போன்றவைகளை ஒரு பெரிய தட்டில் பரப்பி வைத்து
விற்றுக்கொண்டிருந்தார் ,
அவைகளை மிகவும் ஆர்வமாக வெளிநாட்டினர் வாங்கிச் செல்கின்றனர்
அந்த வெளி நாட்டவரிடம் நம்முடைய ஆட்கள் தட்டைக் காலணா, தற்போதைய முன்னூறு ரூபாய்,விலைக்கு விற்கிறார்,
ஓட்டைக் காலணா நானூறு ரூபாய், மற்ற நாணயங்கள் அவர்கள் மனதில் எவ்வளவு,தோன்றுகிறதோ அந்த தொகையை சொல்கிறார்கள், வெளிநாட்டவரும் மிக ஆர்வமாக வாங்கிச் செல்கிறார்கள்
ஒரு காலகட்டத்தில் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு ரூபாய்
நாணயம், 50 பைசா நாணயம்,25 பைசா நாணயம் 20 பைசா நாணயம், 10 பைசா
நாணயம், 5 பைசா நாணயம் என்று உரு மாறிற்று,
அதில் குறிப்பாக 20 பைசா நாணயங்களின் புழக்கம் திடீரென்று
முடங்கியது,கிடைக்காமல் போயிற்று என்ன காரணம் என்று ஆராய்ந்தால்
அந்த தாமரை உருவம் பொறித்த 20 பைசா நாணயத்தில் தாமரை உருவம்
பதித்திருந்ததால் சேமித்து வைத்து, இறைவனுக்கு சொர்ண புஷ்பம் என்று சொல்லி அந்த 20 பைசா (108)நாணயங்களை, அர்ச்சனை செய்ய உபயோகித்தார்கள், அது மட்டுமல்ல, மற்றும் அந்த 20 பைசா நாணயங்களை மோதிரம் செய்து விரலில் மாட்டிக்கொள்ளுதல் அந்தக் காலத்து நாகரீகமாக இருந்தது, அதையும் தாண்டி பித்தளையில் செய்த அந்த 20 பைசா நாணயங்களை சேர்த்து வைத்து பாத்திரக்கடையில் போட்டு, அண்டான், குண்டான், போன்றவைகளை செய்து வாங்கி வீட்டில்
வைப்பர், இது போன்ற காரணங்களால் அந்த 20 பைசா நாணயங்களுக்கு மதிப்பு அதிகமானது, தட்டுப் பாடு ஏற்பட்டது
கலிகாலம் என்பதற்கு இதை விட சாட்சியங்கள் வேண்டுமா என்றும் தோன்றியது
கேரள மாநிலத்தில் இருக்கும் அந்த வர்க்கலாஎன்னும் ஷேத்திரத்தில்கோயிலில் உள்ள விக்ரகம் பிராமணர்கள் ஆசமனம் செய்வது போல வடிக்கப் பட்டிருக்கும் அந்தப் பெருமானின் கைகள் ஆசமனம் செய்வது போல கையில் தண்ணீரை வைத்து வாயருகே வைத்து ஆசமனம் செய்வது போல இருக்கும் ,அந்த கை காலத்துக்கு காலம், அருகே தானாகவே நெருங்கிக் கொண்டே இருக்கிறது, எப்போது அந்தக் கை வாயின் மிக அருகே சென்று ஆசமனம் செய்ய முடியும் அளவுக்கு நெருங்குகிறதோ அப்போது
இந்த உலகத்தில் ப்ரளயம் வரும் ,ப்ரபஞ்சம் அழியும் என்பது பலருடைய
நம்பிக்கையான ஐதீகம்,
நாணயம் இப்போதெல்லாம் ஏமாற்றப் பயன்படுகிறது
நாணயமான மனிதர்களைப் பார்ப்பதும் அறிதாகி வருகிறது
நாணயம் சிலரின் நா - நயத்தினால் கவரப்பட்டு
அனைவரையும் ஏமாற்றுகிறது

Saturday, September 5, 2009
ஆசிரியர் தினமான இன்று
ஆசிரியர் தினமான இன்று
1. பசித்தால் அழவேண்டும், அழுதால்தான் பால் கிடைக்கும்உழைத்தால்தான் பலன் கிடைக்கும்அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்று உணர்த்தி,
அதன் பிறகு நான் சிணுங்கினாலே என் பசியறிந்து எனக்கு
அமுதம் உட்டி என் உடலில் உள்ள அத்தனை அணுக்களுக்கும்
உயிரும் , சக்தியும், அறிவும் ஊட்டி வளர்த்த
என் முதல் ஆசிரியையான என்
தாய் என்கிற முதல் குருவுக்கும்
2.என் அறிவுக்கண்ணைத் திறக்க நான் கற்க ஆரம்பித்த முதல்
நாள் , என் கையைப் பிடித்து பரப்பிய நெல் பரப்பில்
என்னை ஓம் என்று எழுத வைத்த என் தகப்பன், என்கிற
இரண்டாம் குருவுக்கும்
3. பள்ளியில் சேர்த்ததுவிட்டு சென்ற அன்னையையும்
அப்பனையும் நினைத்து பிரிவுத்துயர் தாங்காது , புதிய இடம்
புதிய நபர்கள், கண்டு மிரண்டு போய் அழ ஆரம்பித்த
என்னை , முதன் முதலாய் ஒரு தாய்மை உணர்வோடு
அழக்கூடாது, அம்மா ,அப்பா இருவருமே இங்கேதான்
வெளியே இருக்கிறார்கள். என்று எனக்கு ஆறுதல் சொல்லி
"அழ அழச் சொல்லுவர் தமர்" என்னும் முது மொழிக்கேற்ப
என்னை மடியிலே உட்காரவைத்துக்கொண்டு என்னைப்
போன்ற குழந்தைகளைக் காட்டி , அவர்களைப் போலவே
நானும் அழாமல் நல்ல பிள்ளையாக இருக்கவேண்டும் என்று
உணர்த்தி, எனக்கு பலூன், பொம்மைகள், இனிப்பு எல்லாம்
கொடுத்துகையைப் பிடித்து கல்வியை எனக்குள்ளே இனிய
விருந்தாக உள்ளேற்ற ஆரம்பித்த அந்த ஆசிரியை
ஆகிய மூன்றாம் குருவுக்கும்,
அதன் பிறகு என் கூடவே இருந்து ஒவ்வொருகணமும்
எனக்கு வாழ்க்கைப்பாடம் சொல்லித்தந்த என் வகுப்புத்
தோழர்கள் என்கின்ற குருமார்களுக்கும்,,
சற்றே வளர்ந்த நிலையில் நான் செய்த குறும்புகளுக்கு என்
காதைப் பிடித்து திருகி , காய்ச்சல் வந்தால் மருந்து கொடுத்து
குணப்படுத்தும் வைத்தியர் போல என்னை மிகச் சரியான
பாதையில் திசை திருப்பி என்னை முன்னுக்குக் கொண்டு
வந்த அத்துணை ஆசிரியர்களுக்கும்
அதன் பிறகு இன்று வரை, இன்னும் நான் இருக்கும் காலம்
வரை எனக்கு, ஒவ்வொரு அனுபவத்திலும் ஞான குருவாக
இருந்து வழிகாட்டிய, மற்றும் வழி காட்ட இருக்கிற
அத்துணை குருமார்களுக்கும் , ஆசிரியைகளுக்கும்,
ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தினமான இன்றைக்கும் இனி
வரும் எல்லாக் காலங்களிலும் என் நன்றி கலந்த , பக்தி
கலந்த குரு வணக்கத்தையும் தெரிவிக்கிறேன்
அன்புடன்தமிழ்த்தேனீ

Monday, August 17, 2009
உட்ப்ரயாணத்தின் மகிமை
ஒவ்வொரு உயிரிலும் சக்கராயுதமும்
சங்கும், வில்லும் வேலும்,கதையும், போன்ற பதினாறு ஆயுதங்களும்,ஆழிப்படைகளும், உள்ளடங்கி ஒரு சைதன்யம் இருப்பதை உலகிற்கு கண்ணன் உணர்த்திய நிகழ்வே மஹாபாரதம்
ஒவ்வொரு உயிரும் இந்த சக்தி இருப்பை தாமாக தம்மை உணர்ந்து அறிந்துகொண்டு தம் சக்தியை வெளிப்படுத்தவேண்டும் என்பதே இறைவன் கண்ணனின் கீதோபதேசம்
நம்முள்ளே ஒளிந்திருக்கும் அத்துணை சைதன்யத்தின்,ஆயுதங்களின் மஹா சக்தியின் முழுப்பரிமாணத்தையும் உணரும் நிகழ்வே ஆழ்வார்கள் ,நாயன்மார்கள் நமக்களித்த போதனைகள்
நம் சக்தியை முழுதாக உணர்ந்து தகுதியான இடத்தில் தகுதியான நேரத்தில் வெளிப்படுத்தி நம் ஆக்க சக்தியை நமக்கும் புரிகின்ற வகையிலே ஏற்படுத்தப்பட்ட கதா பாத்திரங்கள்தான்
இதிகாச புராணங்களின் உள் நோக்கம்,
நம்மிலிருந்து நாமே பிரிந்து கருடப் பார்வையாக நம்மையே உற்று நோக்கினால் நம் உள்ளே தினம் நடக்கும் குருக்ஷேத்திரப் போரை நாமே காணலாம், நம்மை உணர இதைவிடச் சாலச்சிறந்த வழி வேறேதும் இல்லை
அதனால் உட்ப்ரயாணம் மேற்கொள்ளுதலே உயரப்பறத்தலுக்கும், உள்ளுணர்வுகளுக்கும் வழி வகுக்கும்
கருடப் பார்வையில் ககனம் முழுவதும் நம் கண்ணுக்கும் எட்டும்

Friday, July 3, 2009
கட்டிடம் கட்டுவோமா
கட்டிடம் கட்டுவோமா
தமிழ்த்தேனீ
பக்கத்து நிலத்தில் வீடு கட்ட ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள், எத்தனை முறைகள் வீட்டைப் பெருக்குவது, எத்தனை முறைகள் வீட்டைச் சுத்தம் செய்வது? என்ன செய்தும் பலனே இல்லை. கால்வைத்து நடக்க முடியவில்லை. காலெல்லாம் மண்ணும் அழுக்கும் சேர்ந்த கலவை ஒட்டிக்கொண்டு நடக்க நடக்க வீடெல்லாம் அழுக்காகிறது. பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தூசியினால் ஏற்படும் இருமல் போன்றவற்றால் அடிக்கடி வைத்தியரிடம் போகும் நிலை. அதையும் தவிர்த்து தினமும் அங்கே நிற்க வைத்திருக்கும் வாகனங்களைச் சுத்தம் செய்வது அலுவலுக்குப் போகும் அவசரத்தில் மிகவும் கடினமான செயலாக இருக்கிறது.என்னதான் செய்வது என்று புலம்பிக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களே! ஆமாம், இந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்னும் அலுவலகம் செயல்படுகிறதா, இல்லையா என்று சந்தேகப்படும் பொது மக்களே!நம் நாட்டில் தான் இப்படியா? அனைத்து நாடுகளிலுமே இப்படித்தான் பல கட்டடங்கள் கட்டும் போது அந்தக் கட்டடத்தினால் ஏற்படும் தூசிகள், சிமென்ட் கலவைகள், எல்லாம் பக்கத்து வீடுகளின் மீதோ, அல்லது பக்கத்தில் இருக்கும் கட்டடங்களின் மீதோ விழுந்து அவர்களைத் துன்பப்படுத்துகிறதா?சில வெளிநாடுகளில் கட்டடங்கள் கட்டும் போது அவர்கள் கடைப்பிடிக்கும் முறை மிகவும் நேர்த்தியானதாக, அடுத்தவருக்குத் துன்பம் தராத வகையில் இருக்கிறது. அவற்றை நேரிலே பார்த்தவர்களின் நானும் ஒருவன். ஆகவே அவர்கள் கடைப்பிடிக்கும் முறையைப் பார்ப்போம்ஒரு முறை மலேசியாவுக்குச் சென்றிருந்தேன். அங்கே பெருநகரச் சாலைகளிலும் பல பெரிய கட்டடங்களைக் கட்டுகிறார்கள். அதே போன்று அடுக்குமாடிக் கட்டடங்களும் கட்டுகிறார்கள். கோலாலம்பூரில் நாங்கள் இருந்த கட்டடத்தில் மொத்தம் 29 மாடிகள். அதில் 26ஆம் மாடியில் இருந்தோம். அங்கிருந்து பார்க்கும் போது நகரமே மிக அழகாகத் தெரியும்.மேலும் அந்தக் கட்டடத்தின் மிக அருகே, நம் நாட்டின் கூவம் நதியைப் போன்று ஒரு ஆறு ஓடுகிறது. அதற்குப் பின்னால் பறக்கும் மின்சார ரயில் ஓடுவது பார்க்க, கண் கொள்ளாக் காட்சியாய் இருக்கும்.மழை நன்றாகப் பெய்யும் போது பார்த்தால் அந்த நதியில் வெள்ளமாய்க் கரை புரண்டு தண்ணீர் ஓடும். மழை விட்டுச் சில விநாடிகளில் சாலைகளும் அந்த நதியும் பழைய நிலைமைக்குத் திரும்பி, பளபளவென ஜொலிக்கும். எங்குமே தண்ணீர் தேங்கி நின்று நாங்கள் பார்க்கவில்லை.அந்த நகரத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு முன்னர் மாசுக் கட்டுப்பாடு அலுவலகத்தில் அனுமதி வாங்க வேண்டும். அப்போது ஒரு உறுதிமொழி அளிக்க வேண்டும். அதாவது மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நாங்கள் எங்கள் கட்டடங்களைக் கட்டி முடிப்போம் என்று. அந்த உறுதி மொழியைக் கடைப்பிடிப்பதற்கு அவர்கள் ஒரு உபாயம் செய்கிறார்கள். அவர்கள் கட்டும் கட்டடத்தின் மேலாக வெளிப்புறமாக இரும்பினாலான ஒரு வலை போடுகிறார்கள். அந்த வலை ஒரு சிறு தூசியையும் கூட வெளியே விடுவதில்லை. அதனால் அவர்கள் நெடுஞ்சாலைகளில் கட்டும் கட்டடங்கள் கூட எந்த ஒரு மாசையும் விளைவிப்பதில்லை. அந்தக் கட்டடங்களிலிருந்து விழும் கற்கள் சாலையில் ஓடும் வாகனங்களின் மீது விழுந்து விபத்துகள் ஏற்படுவதில்லை.அதே போல அமெரிக்காவில் அவர்கள் பெரும் குடியிருப்புப் பகுதிகளைக் கட்டுகிறார்கள்; பல அடுக்கு மாடிகள் கட்டுகிறார்கள்; அவர்களும் இதே போன்ற முறைகளைக் கையாளுகிறார்கள். அது மட்டுமல்ல, அங்கே வீடுகள் கட்டிவிட்டு அந்த வீடுகளுக்கு முன்னால் ஒரு சாய்மானமான புல் வெளியை ஏற்படுத்துகிறார்கள். அந்தப் புல் வெளியை அவர்கள் ஏற்படுத்தும் முறை மிகவும் நன்றாக இருக்கிறது. வேறு ஏதோ ஒரு இடத்தில் அந்த விலை உயர்ந்த புல்வெளியை அவர்கள் உருவாக்கி, அந்தப் புல் வெளிகளை சதுரம் சதுரமாக இரண்டு அல்லது நான்கு அங்குலம் கனத்துக்கு வெட்டி அவற்றை ஒரு மூடிய வாகனத்தில் வைத்து அங்கே கொண்டு வந்து அவற்றை அந்தச் சாய்வான பகுதியில் அடுக்கி அப்படியே வளர்க்கிறார்கள். அவற்றை அடுத்து ஒரு அகலமான நடைபாதை. அதற்கு அடுத்து மீண்டும் சமதரையில் புல்வெளி. அதற்கு அடுத்து மீண்டும் ஒரு நடைபாதை, அதற்கு அடுத்துதான் சாலைகள். ஆகவே வாகனங்கள் நடைபாதையில் நடப்போரின் மீது எதிர்பாராத பெரிய விபத்துகள் ஏற்பட்டாலொழிய மோத முடியாதுஇவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்கிறார்களே மனித உயிர்களின் மீது, அவர்களின் அடிப்படை உரிமைகள் மீது என்பதைப் பார்க்கும் போது உண்மையிலேயே நம் நாடும் அப்படியெல்லாம் வளரக் கூடாதா என்கிற ஏக்கம் வரத்தான் செய்கிறது.அது சரி, எப்பொழுது பார்த்தாலும் வெளிநாடுகளைப் புகழ்வதே சிலருக்கு வேலையாய்ப் போய்விட்டது என்று நினைப்பவர்களே நம் நாட்டையும் வீட்டையும் நாமும்தான் முயன்று சுத்தமாக வைத்துக்கொள்ள முயல்வோமே! சுத்தம் சோறு போடுகிறதோ, இல்லையோ! வியாதிகளை அண்டவிடாமல் தடுக்கும்; அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்க உதவும். அடடா! இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. நான் வீடு கட்டினேனே. அப்பொழுது இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லையே! அண்டை வீட்டுக்காரர்கள் எவ்வளவு அவதிப்பட்டிருப்பார்கள்! நான் நேரிடையாக பாதிக்கப்படும் போதுதான் இவ்வளவு ஞானமும் எனக்கு வருகிறது... என்ன செய்ய?
தமிழ்த்தேனீ
Jul 02, 2009

Thursday, July 2, 2009
Saturday, April 25, 2009
எனக்கென்ன ?
பொது இடத்தில் உங்கள் கண் முன்னே ஒரு தகாத செயல்
நடக்கிறதா..? பாதிக்கப்பட்டவர் கத்திக்கொண்டிருக்கிறாரா
அவரை பல விஷமிகள் பயமுறுத்திக்கொண்டிருக்கின்றனரா,
அதைப் பார்த்தும் நமக்கென்ன நாம் பாதிக்கப்படாமல்
இருந்தால் போதும் என்று ஒதுங்கிச் செல்பவரா நீங்கள்//
அங்கு பாதிக்கப்பட்டவர் தெரிந்தவராயினும் தெரியாதவராயினும்
நீங்களும்தான் ஓங்கிக் குரல் கொடுத்துப் பாருங்களேன்
நாளையே உங்களுக்கு இதே நிலை ஏற்படும்போது உதவ
மற்றவரையும் தயார் செய்யுங்களேன்
ஒரு முறை நானும் என் மனைவியும் சென்னையில் அண்ணா நகரில் உள்ள
புகழ்வாய்ந்த புடவைக் கடைக்கு சென்று அங்கே காரை நிறுத்திவிட்டு
கடைக்குள் போக யத்தனித்தோம், ஆனால் கடைக்குள் நுழையும் வழியில்
செல்ல முடியாமல் இரு சக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி
வைத்திருந்தனர் அதனால் அவைகளுக்கு நடுவே புகுந்து செல்லவேண்டிய
கட்டாயத்தால் முதலில் நான் அடுத்து யாரோ ஒரு பெண்,அடுத்து என் மனைவி என்னும் முறையில் செல்ல ஆரம்பித்தோம்
அங்கிருந்த சிறிய இடைவெளியில் வழியை மறைத்துக்கொண்டு
அந்தப் பெண்ணையே முறைத்துப்- பார்த்துக்கொண்டு ஒருவர் நின்றிருந்தார்,முதலில் நான் அவரைக் கவனிக்கவில்லை, கவனித்தவுடன் அவரை நோக்கி முன்னேறிச்சென்றேன்,அப்போதும் என்னை கொஞ்சமும் சட்டை செய்யாமலும் வழியை விடாமலும் என்னடா ஒரு ஒரு தம்பதிகள் நடுவே அந்தப் பெண் வருகிறாளே,கூட வருபவர்கள் பெற்றோராக இருக்கக் கூடுமே என்னும் உணர்வு கூட இல்லாமல் முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தார் அவர்,அவரை நெருங்கி நான் பாத்தது போதும் வழியை விடுங்க என்றேன்
உடனடியாக அவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா
என்னா உன் பொண்ணைக் கடத்திக்கிட்டா போயிட்டேன்..?
அவர் அந்தப் பெண்ணை என்னுடைய பெண் என்று நினைத்து இந்தக் கேள்வியைக் கேட்டார். யாருடைய பெண்ணாயிருந்தால் என்ன..?அவர் செய்தது சாதாரணமாக வாலிப வயதில் செய்யும் செயல்தான் என்றாலும்
அவருடைய கேள்வியிலே இருந்த வன்முறை என்னைக் கோபம் கொள்ள வைத்தது, இதைக் கேட்டவுடன் வந்தது கோபம்
ஓங்கி ஒரு அறைவிட்டேன் அவனை , கீழே விழுந்தான் அவன்
உரத்த குரலில் யாருய்யா கடையிலே வழியிலே இது மாதிரி காலிப்பசங்களை நிக்க வெச்சா யாரு உங்க கடைக்கு வருவாங்க என்று கத்தினேன். உடனே கடையிலிருந்து சிலர் ஓடி வந்தனர், பொது மக்களும் வழக்கம்போல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்,
அதற்குள் கடையிலிருந்து வந்தவர்கள் அவரை விலக்கி உடனே அங்கிருந்து போகும் படி அறிவுறுத்தினர். அவ்வளவு வீரமாகப் பேசிய அந்த நபர் தனக்கு எதிராக ஒரு கூட்டமே திரண்டதைப் பார்த்து மிரண்டு எதிர் பாராத தாக்குதலால் நிலை குலைந்து பயந்து நடுங்கி திரும்பிப் பார்க்காமல் எடுத்தார்
ஓட்டம்.. அப்போது புரிந்தது சிலருடைய வீரம் ,
ஆனால் இப்போது நினைத்தால் அந்த நபர் ,வாலிபர்.
நான் வயதானவன் , என்னை அவர் ஒரு அறை விட்டிருந்தால் தாங்கி இருப்பேனா என்பது சந்தேகமே, ஆனாலும் அசுர பலம் வந்தது எனக்கு அப்போது , அது நியாயத்தின் பலம், நியாயம் செய்யும் போது நம்மை அறியாமலே ஒரு சக்தி வருகிறது, அநியாயம் செய்யும் போது நம்மை அறியாமலே ஒரு பலகீனம் வருகிறது
நான் செய்தது சரியென்று நினைத்தால் இனி தவறாமல் தவறு நடக்கும் இடங்களில் தட்டிக் கேளுங்கள் அதட்டிக் கேளுங்கள். ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது. ஓடுகிற நாயைத்தான் துரத்துவார்கள்
நின்று எதிர் கொள்ளும் நாய்க்கு பயப்படுவார்கள். நாயிற்கே இந்த நிலைமை என்றால் மனிதருக்கு ?
சிந்திப்போம் நியாயத்தைக் கேட்க பயப்படவேண்டாம், அநியாயத்தை தட்டிக் கேட்க தயங்க வேண்டாம். தைரியம் கொள்ளுங்கள்
தறுதலைகள் சிதறி ஓடிப் போய்விடுவர்
அன்புடன்
தமிழ்த்தேனீ
Saturday, March 14, 2009
தமிழும் தரமும்
வள்ளுவனை எடைபோட்டோம், கம்பருக்கு சடைபோட்டோம்
தெள்ளிய தொல்காப்பியத்தையும்,கிள்ளிப் பார்த்தோம்
அகநானூறும் புறநானூறும் அவிழ்த்து முடிந்து ஆராய்ந்தோம்
ஔ வ்வை அலசினோம் அவையில் விவாதித்தோம்
இலக்கணமும் இலக்கியமும் வழக்கினிலே வரும்போது
கணிணியும் நாமும் செய்யும் தற்செயல் தவறுகளை
பதிப்பித்தே வாக்குவாதம் வளர்க்கிரதே
யாருக்கும் எண்ணமில்லை தமிழின் தரம் குறைக்க
தமிழ்வளர்க்க ஆர்வம் கொண்டே,அதன் தரம் ஆராய்ந்தோம்
கொட்டை வடி நீர் கேட்டால் கேட்டால் துவண்டு போய் விழிக்கின்றோம்
காப்பி வேண்டுமெறே உரைத்தால் என்றுரைத்தால் அளித்தே மகிழுகின்றோம்
தமிழென்ன கலப்பினமா, தனித்திருக்கும் தவமணியா
இனித் திருத்த அதிலென்ன ஏற்கெனவே குறைபாடா
இருக்கும் தமிழ் நற்தமிழே சந்தேகம் நமக்கு வேண்டாம்
திருத்துகிறோம் என்று சொல்லி அதன் தரம் குறைக்கவேண்டாம்
தமிழ்வளர்க்க நாமொன்றும் செய்யவேண்டாம்
நமைவளர்க்க தமிழொன்று போதும் போதும்
ஆரியமோ திராவிடமோ ஆதி தமிழுக்கு பேதமில்லை
நமக்குள்ளும் பேதமில்லை ,சொல்வழக்கில் பழகு தமிழ்
வளருமிங்கே புரிந்தோமில்லை
புரிந்து கொண்ட அழகுத்தாய் தமிழ்தானே ஏது எல்லை
அழைக்கின்ற கிள்ளை மொழி அவளுக்கோ மழலைதானே
அன்போடு ஓடிவந்து,தன் மடியில் தானிட்டு
நம் மேலே தலைப்பிட்டு அமுதம் தந்திடுவாள்
அன்னையவள் கருணை கொண்டு
பிறகென்ன பெருங்கவலை ,தமிழ் வளர்க்க இன்னொருவர் வரவேயில்லை,தமிழழிக்க இங்கொருவர் பிறக்கவில்லை
இத்தனை கோடி மாந்தர்களைப் பெற்றெடுத்து பேணிக்காத்து
அன்போடு அரவணைத்து அற்புதமாய் தன்னையும் தானே காத்து வளர்க்கும் தாந்தோன்றித் தமிழன்றோ தலைசிறந்த மொழியன்றோ ஆகையினால் தாயாய் நின்று நமை வளர்க்கும் தமிழ் தானே
ஆதவனின் பாதை தன்னை அறுதியிட ஆருண்டு
யாதுமாகி நின்ற தமிழ் எங்கும் நிறைந்த தமிழ்
தானாய் வழி நடக்கும் தரணியே தலை நிமிரும்
தமிழை வழிநடத்த நமக்கிங்கே தகுதியில்லை
மொழியொன்று எப்போதும் புறிந்து கொள்ள
அடுத்தவரின் மனதிருப்பை அறிந்து கொள்ள
பக்குவமாய் இதை உணர்ந்து மனிதம் காப்போம்
நம்மில் ஒரு பகுதி தமிழில்லை...
தமிழின் சிறு துகள்தான் நாமன்றோ
தமிழ்வளர்க்க நாமொன்றும் செய்யவேண்டாம்
நமைவளர்க்க தமிழொன்று போதும் போதும்
இருக்கும் தமிழ் கற்றிடவே நமக்கிங்கே போதாது இருக்கும் ஆயுள்
பாமரர்க்கும் புரிவதற்கு செய்வோம் செய்யுள்

\
Subscribe to:
Posts (Atom)