ஆசிரியர் தினமான இன்று
1. பசித்தால் அழவேண்டும், அழுதால்தான் பால் கிடைக்கும்உழைத்தால்தான் பலன் கிடைக்கும்அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்று உணர்த்தி,
அதன் பிறகு நான் சிணுங்கினாலே என் பசியறிந்து எனக்கு
அமுதம் உட்டி என் உடலில் உள்ள அத்தனை அணுக்களுக்கும்
உயிரும் , சக்தியும், அறிவும் ஊட்டி வளர்த்த
என் முதல் ஆசிரியையான என்
தாய் என்கிற முதல் குருவுக்கும்
2.என் அறிவுக்கண்ணைத் திறக்க நான் கற்க ஆரம்பித்த முதல்
நாள் , என் கையைப் பிடித்து பரப்பிய நெல் பரப்பில்
என்னை ஓம் என்று எழுத வைத்த என் தகப்பன், என்கிற
இரண்டாம் குருவுக்கும்
3. பள்ளியில் சேர்த்ததுவிட்டு சென்ற அன்னையையும்
அப்பனையும் நினைத்து பிரிவுத்துயர் தாங்காது , புதிய இடம்
புதிய நபர்கள், கண்டு மிரண்டு போய் அழ ஆரம்பித்த
என்னை , முதன் முதலாய் ஒரு தாய்மை உணர்வோடு
அழக்கூடாது, அம்மா ,அப்பா இருவருமே இங்கேதான்
வெளியே இருக்கிறார்கள். என்று எனக்கு ஆறுதல் சொல்லி
"அழ அழச் சொல்லுவர் தமர்" என்னும் முது மொழிக்கேற்ப
என்னை மடியிலே உட்காரவைத்துக்கொண்டு என்னைப்
போன்ற குழந்தைகளைக் காட்டி , அவர்களைப் போலவே
நானும் அழாமல் நல்ல பிள்ளையாக இருக்கவேண்டும் என்று
உணர்த்தி, எனக்கு பலூன், பொம்மைகள், இனிப்பு எல்லாம்
கொடுத்துகையைப் பிடித்து கல்வியை எனக்குள்ளே இனிய
விருந்தாக உள்ளேற்ற ஆரம்பித்த அந்த ஆசிரியை
ஆகிய மூன்றாம் குருவுக்கும்,
அதன் பிறகு என் கூடவே இருந்து ஒவ்வொருகணமும்
எனக்கு வாழ்க்கைப்பாடம் சொல்லித்தந்த என் வகுப்புத்
தோழர்கள் என்கின்ற குருமார்களுக்கும்,,
சற்றே வளர்ந்த நிலையில் நான் செய்த குறும்புகளுக்கு என்
காதைப் பிடித்து திருகி , காய்ச்சல் வந்தால் மருந்து கொடுத்து
குணப்படுத்தும் வைத்தியர் போல என்னை மிகச் சரியான
பாதையில் திசை திருப்பி என்னை முன்னுக்குக் கொண்டு
வந்த அத்துணை ஆசிரியர்களுக்கும்
அதன் பிறகு இன்று வரை, இன்னும் நான் இருக்கும் காலம்
வரை எனக்கு, ஒவ்வொரு அனுபவத்திலும் ஞான குருவாக
இருந்து வழிகாட்டிய, மற்றும் வழி காட்ட இருக்கிற
அத்துணை குருமார்களுக்கும் , ஆசிரியைகளுக்கும்,
ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தினமான இன்றைக்கும் இனி
வரும் எல்லாக் காலங்களிலும் என் நன்றி கலந்த , பக்தி
கலந்த குரு வணக்கத்தையும் தெரிவிக்கிறேன்
அன்புடன்தமிழ்த்தேனீ
1 comment:
ஆக மொத்தம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எல்லாருமே ஒரு வகையில் நமக்கு ஆசிரயர் தான்!
இந்த வரிசையில் தாரளமாக, சகோதரர் சகோதரி மற்றும் தோழர் தோழிகளுடன், தம் மனைவியையும் சேர்த்துக்கொள்ளலாமே!
Post a Comment