திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Saturday, February 28, 2009

ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 7

கணிணியைப் பற்றி அறிந்து கொண்டு கணிணியில் எப்படி செயல்பாடுகளை புகுத்த முடியும் என்று
உணர்ந்தவர்கள் தான் இவைகளை அறிய முடியும்
கணிணியைப் பற்றி ,மனிதனால் உருவாக்கப்பட்ட
கணிணியைப் பற்றி அறியவே இவ்வளவு தகுதி தேவைப் படுகிறதென்றால்
இந்தப் ப்ரபஞ்ஜத்தை படைத்த இறையைப் பற்றி அறிய
எவ்வளவு சக்தி , தகுதி ,தேவை
அத்தனையும் நாம் அடைந்து அதற்குப் பிறகு
விளங்கமுடியாக் கடவுள் ,விளக்கமுடியாக் கடவுள்
என்றெல்லாம் சொல்வோமானால் அது சரியான முறை
எங்கு சென்றடைய வேண்டுமோ அங்கு செல்லும் பாதையைக் கண்டுபிடித்து அந்தப் பாதையில் பயணம் செய்து, அப்போதும் அந்த இடத்தை அடைய முடியாவிட்டால் அப்போது சொல்லலாம்
விளங்க முடியாத ,அல்லது விளக்க முடியாத
என்றெல்லாம்
இன்னும் நாம் போகவேண்டிய இடத்தையும்
புறிந்துகொள்ளவில்லை ,அதற்குண்டான பாதையையும்
நிர்ணயிக்கவில்லை
ஆகவே முதலில் போகவேண்டிய இடத்தை நிர்ணயித்துக் கொண்டு அதற்குண்டான பாதையை
கண்டுபிடித்து அந்த வழியில் நம் ப்ரயாணத்தை
மேற்கொண்டால் எதையும் காணலாம்
கடவுளையும் காணலாம்
பாகம் 8
திரு விவேகானந்தர்(நரேந்திரன்) முதலில் திரு ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்
சொல்லுவதைக் கவனிக்காமல்
அவ்ர் ஏதோ செய்து கொண்டிருப்பாராம்
ஒரு நாள் ராம க்ருஷ்ணபரமஹம்சர்
நரேந்திரனை அழைத்து நான் சொல்லுவதைக்
கவனிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்
என்று வினவ அதற்கு நரேந்திரன் தாங்கள்
இறைவனைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்
ஆனால் கண்ணால் காணமுடியாத ஒன்றை எப்படி நம்புவது என்ர்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்
என்றாராம் ,அதற்கு ராமக்ருஷ்ணபரமஹம்சர்
நான் உனக்கு இறைவனைக் காட்டுகிறேன்
என்று கூறி தன்னுடைய தயான சக்தியால்
நரேந்திரனை தன்கையால் தொட்டு அவருக்கு
இறைவனைக் காட்டும் முயற்ச்சியில் இறங்கினார்
அப்போது தேஜோமயமாக தாங்கவொண்ணா ஒளியாக
இறைவன் நரேந்திரனுக்கு காட்சி அளித்தாராம்
அந்த அற்புத ஜோதிச்வரூபனை ,அந்த ஒளியின்
விஸ்வரூபத்தை தாங்க முடியாமல் நரேந்திரன் திகைத்துப் போனாராம்

அதற்குப் பிறகு திரு ராமக்ருஷ்ணபரமஹம்ஸர்
இறைவனைப் பார்க்க உனக்குள் சக்தியை ஏற்படுத்திக் கொள் அப்போதுதான் இறைவனைப் பார்க்கமுடியும் என்னும் தத்துவத்தை போதித்தாராம்
அப்போதுதான் நரேந்திரன் விவேகானந்தராக மாறினார் என்பர்



ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 6

ஒரு மஹா சக்தியை அல்லது ஒளியை ,
உதாரணமாக சூரியனை வெறும் கண் கொண்டு பார்க்க
முடியாது ,பார்த்தால் அதன் உருவம் நம் கண்ணின் சக்திக்கு சரியாக விளங்காது, அதனால் ஒரு கருப்புக் கண்ணாடியை ஒரு சாதனமாகக் கொண்டு பார்க்கும் போது அந்தச் சூரியனின் ஒளி நம் கண்ணைக் கூசாமல் ,இதமாக இருக்கிறதல்லவா,அது போல
ஒரு மஹா சக்தியை நாம் உணரவேண்டுமென்றால்
அதன் சக்தியை நாம் தாங்கிக் கொண்டு இதமாக
இறைவனை தரிசிக்க வேண்டுமென்றால்
அதற்க்கு ஏற்ப பக்தி, த்யானம் ,போன்ற பல சாதனங்களை உபயோகித்து இறைவனை விளங்கிக் கொள்ள நாம் வகை செய்து கொள்ளவேண்டும்


வானிலே செவ்வாய்க் க்ரகம் தோன்றப் போகிறது அதைக் காண விரும்புவோர் தொலை நோக்கி கொண்டு பாருங்கள் ,
சூரியக் க்ரகணம் இன்று வானிலே தெரியும் அதை வெறும் கண் கொண்டு பார்க்காதீர்கள்,கண்ணுக்கு
பாதகம் விளையும் என்றெல்லாம்
விக்ஞானிகள் சொல்கிறார்கள்
ஏற்றுக் கொள்கிறோம் அல்லவா
அது போல வெறும் கண் கொண்டு இறைவனைப்
பார்க்க முயலாதீர்கள்,
தியானம் , யோகம் போன்ற சாதனங்களைக் கொண்டு
இறைவனைப் பாருங்கள் அப்போதுதான் இறைவனை
விளங்கிக் கொள்ள முடியும் என்று சொல்லும்போது
ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது நாமும் அவர்கள் கூறும் சாதனங்களை உபயோகித்து முயன்றுதான் பார்ப்போமே

பாகம் 6.
2. விளங்க முடியாக் கடவுளா ..?அல்லது சக மனிதனா
இந்தக் கேள்விக்கு
ஒரு பதில் உண்டு
கடவுள் விளங்க முடியாதவனல்ல
விளக்க முடியாதவனும் அல்ல
விளக்கவும் முடியும் ,விளங்கவும் முடியும்
ஆனால் நமக்கு அதற்குண்டான பொறுமையும்
ஞானமும் வேண்டும்

தமிழ் மறை நூல்களில்
“ கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் “
என்று ஒரு கூற்று உண்டு
அதற்குப் பொருள்
மெய்ஞ்ஞானம் என்னும் வழியில் சென்ற பலர்
கடவுளக் கண்டிருக்கின்றனர்,
அதாவது அவர்கள் கடவுளை கானும் அளவுக்கு
தங்களுடைய ஆன்ம பலத்தைப் பெருக்கி
அதன் மூலமாகக் கடவுளைக் கண்டிருக்கின்றனர்
சாதாரணமாக நாம் உலகில் எப் பொருளைப்
பார்க்கவேண்டும் என்றாலும் கண் இமைகளைத்
திறக்க வேண்டும் ,அப்போதுதான் பார்க்க முடியும்
கண்களை மூடிக் கொண்டே அங்கு எதையும் என்னால்
பார்க்க முடியவில்லை என்று சொல்வது எப்படியோ
அது போலத்தான் கடவுளும்
அந்த மஹா சக்தியை நாம் பார்க்க வேண்டுமென்றால்
அதைப் பார்க்குமளவுக்கு நம் உடலை,மனதை ,நம் சக்தியைப் பெருக்கிக் கொள்ளவேண்டும்

கணிணியில் மென்பொருளைத்தாக்கும் கிருமிகள்
இருக்கிறது என்பதை நம்முடைய கணினியின்
செயல்பாட்டை வைத்து அறிய முடியும்
ஆனால் அந்த கிருமியைக் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்றால் இது குதர்க்க வாதம்
அதுபோல நம் கணிணியை கிருமிகளிடமிருந்து
காப்பாற்ற எதிர்ப்பு சக்தியை நாம் இந்தக் கணிணிக்குள்
செலுத்தி அதைப் போக்க முடியும்
ஆனால் கணிணிக் கிருமிகளை எதிர்க்கும்
சக்தியை நான் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்பதும் குதர்க்கவாதம்



ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 5

சற்றே நினைத்துப் பாருங்கள் உண்மையான,மனப்பூர்வமான வேண்டுதலுக்கு வழிபாட்டுக்கு இப்படிப்பட்ட அரிய சக்தி இருப்பதை என் வாழ்விலேகண்கூடாகக் கண்டவன் நான்
ஆகவே ஆத்ம சுத்தியான பக்திக்கும் ,ப்ரார்த்தனைக்கும் இறைவன் மனமிறங்குகிறான்,அருள் புறிகிறான் என்பது சத்தியமான உண்மை
ஆகவே நம்முடைய உண்மையான ஆத்மசுத்தியான பக்தி ,ப்ரார்த்தனை, வேண்டுதல்கள்,வழிபாடுகள் நாம் கல்லில் வடிக்கும் இறைவனுக்கும் நம்முடைய சக்தியாக உள்ளே சென்றடையும் ,மீண்டும் அதே சக்தி நமக்கு ஏற்படும் இன்னல்களை களையும் சக்தியாக உருவெடுக்கும் என்பது பரிபூரணமான உண்மை
இறைவனை நாம் நம்முடைய சாதாரண சக்தியை உபயோகப் படுத்தி பார்க்க முடியாது என்பதனால்தான் ஒரு விக்ரகமாக அவரை வடித்து அந்த வடிவத்தை இறைவனாக ஏற்று ,வழிபட ஆரம்பித்தோம் உருவ வழிபாடுகள் இப்படித்தான் தோன்றின


இதுதான் ஒரு ஆலயத்தில் ஒரு கடவுளை
ப்ரதிஷ்ட்டை செய்யும்போதும்
இதே தத்துவத்தில்தான் ஆலய நிர்மாணமும்
விக்ரகப் ப்ரதிஷ்ட்டையும் நடக்கிறது
அங்கு ஒரு இறைவனை கல்லில் வடித்து
அந்தக் கல்விக்ரகத்துக்கு சக்தி கொடுக்கும் விதமாக
பலபேர் சேர்ந்து அங்கு வந்து மந்திர உச்சாடனங்கள்
செய்து அத்தனைபேரின் சக்தியையும் ஒன்றாகத் திரட்டி
ஒரு குடத்திலே மந்திர உச்சாடனத்தின் சக்தியை
அந்தக் குடத்து நீரில் இறக்கி அந்தக் குடத்து நீரை
அந்தக் கல் விக்ரகதின் மேல் பொழிந்து அந்தக் கல் விக்ரகத்துக்கு அத்தனை பேரின் திரண்ட சக்தியை அளித்து அந்தக் கல் விக்ரகத்தை இறைவனாக
சக்தி உள்ளவனாக மாற்றி,பிறகு தினமும் அந்தக் கல் விக்ரகத்துக்கு ,மந்திர உருவேற்றி
அத்தனை பேரின் திரண்ட சக்தியாகிய அந்தக் கடவுளை
எல்லோரும் வழிபட்டு தங்கள் கோரிக்கைகளை அந்த தெய்வத்திடம் வேண்டி பெறுதல் வழக்கமாக இருக்கிறது

இதே தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் மனிதன் தன்னைவிட சக்தி வாய்ந்த ஒரு சக்தியை
நம்பி தனக்கென்று ஒரு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஆலயங்கள் உருவாகின
இறைவனை விளங்கிக் கொள்ள நாம் நம்மை
தகுதியானவர்களாக ஆக்கிக் கொள்ளவேண்டும்
அப்போதுதான் இறைவனை விளங்கிக் கொள்ளமுடியும்


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 4

எந்த ஒன்றும் கிடைக்காத போதுதான் அதன் அருமை தெரியும்அருகிலே இருக்கும்போது நமக்கு அருமை தெரியாது,

இங்கு என்னுடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைக்
குறிப்பிட்டே ஆகவேண்டும்

எல்லா இறைவன் மேலும் எனக்கு பக்தி இருக்கிறது
ஆனாலும் என் தாயார் மேல் அளவுகடந்த,பாசம் வைத்திருந்தவன் நான் ,தந்தைமேலும் பாசம் வைத்திருந்தேன் ,என் தந்தை என்னுடைய பதினொன்றாவது வயதில் இறைவனடி சேர்ந்து விட்டார்
அதனால் அந்த பக்தியும் பாசமும் இணைந்து,என் தாயாரின் மேல் செலுத்த ஆரம்பித்தேன்,ஆகவே இப்போது எல்ல தெய்வத்தையும் விட என் தாயை நான் தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறேன்,
அது தவிர என் பூஜை அறையில் இறைவனின் படங்களுடன் என் பெற்றோர் படங்களும் இருக்கும் ,கூடவே என்னுடைய சகோதரி ராஜாமணி அவர்களின் படமும் இருக்கும், அதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு, ராஜாமணி என்கிற என் சகோதரியை வணங்காமல் நான் எந்தச் செயலையும் செய்வதில்லை, தெய்வம் மனித உருவானது என்னும் சொல்லை மிக உண்மையாக என் வாழ்வில் சந்தித்து உணர்ந்தேன்


என்னுடைய ஏழாவது வயதில் எனக்கு நிமோனியா என்னும் காய்ச்சல் வந்தது, மருத்துவர்கள் நான் பிழைக்க மாட்டேன் என்று கை விட்டுவிட்டனர்,
அப்போது என்னுடைய மூத்த (சகோதரி)ராஜாமணி அவர்கள் என்னை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு கண்களில் நீர் தாரை தாரையாக வழிய மனமுருகி இறைவனிடம்
“ இறைவா என்னை எடுத்துக் கொள்,என் சகோதரனைக் காப்பாற்றிக் கொடுத்துவிடு, இறைவா என்னை எடுத்துக் கொள்,என் சகோதரனைக் காப்பாற்றிக் கொடுத்துவிடு “ என்று வாய் விட்டு மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தாள்
என் காதில் அவள் வேண்டுதல் வார்த்தைகள் என் காதிலும் கேட்டுக்கொண்டிருந்தது, என் உடலில் அவள் கண்ணீர் விழுந்து கொண்டிருந்தது, வாழ்வின் கடைசீ நேரத்தில் இருந்த நான் அன்று தெளிவானேன், மருத்துவர்களே ஆச்சரியப் படும் அளவுக்கு என் உடல் நிலை ஒரே நாளில் தேறியது, இறைவன் என் சகோதரி ராஜாமணியின் வேண்டுகோளுக்கு இறங்கிவிட்டான் போலும், மிகச் சாதாரணமான ,ஆரோக்கியமான உடல் நலத்தோடு இருந்த என் சகோதரி ராஜாமணி திடீரென்று உடல் நலம் குன்றி அன்றே வலிப்பு கண்டு இறந்து போனாள், நான் பிழைத்தேன்,
என் சகோதரி அவள் இன்னுயிரை எனக்குக் கொடுத்துவிட்டு அவள் இறந்து போனாள்…
“ உயிரை, ஆயுளைக், கூட ஒரு உடலிலிருந்து தான் நேசிக்கும் மற்றொருவருக்கு மாற்ற முடியும் வல்லமை உண்மையான மனமொத்த வழிபாட்டுக்கு உண்டு என்று அன்று உணர்ந்தேன்
இன்று வரை என் உடலில் ஓடிக் கொண்டிருப்பது என் பிரிய சகோதரி ராஜாமணியின் உயிர்தான் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை
அதனால் என் தாய்க்கு அடுத்த படியாக எனக்கு மீண்டும் ஒரு பிறப்பைக் கொடுத்த என் பிரிய சகோதரி ராஜாமணிதான் எனக்கு இன்னொரு தாய் அதனால் அவள் படத்தையும் வணங்காமல் எந்த ஒரு வேலையையும் நான் செய்வதில்லை


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 3.

ஏற்றுக் கொள்பவர்களின் மனோபாவத்துக்கு ஏற்றவாறு எல்லாம் மாறுகிறது என்பதற்குதான் இதை உதாரணமாக,சொன்னேன்

நாம் சிறு வயதில் ஒரு கதை கேட்டிருப்போம்
ஒரு மெலிந்த மரக் கிளையை ஒருவனிடம் கொடுத்து அதை உடைக்கச் சொன்னார் ஒருவர்,அந்த மெலிந்த மரக் கிளையை வெகு எளிதாக உடைத்தான் அவன்,பிறகு அதே போன்று பல மெலிந்த மரக் கிளைகளை ஒன்றாக கயிறால் இணைத்து கட்டி அதே மனிதனிடம் கொடுத்து உடைக்க சொன்னார், ஆனால் அவனால் இப்போது அந்த மெலிந்த மரக் கிளைகள் கொண்ட அந்த மொத்த கட்டை உடைக்க முடியவில்லை, இதனால் தான் பல சாதாரண சக்திகள் ஒன்றாக இணைந்து செயல் படும்போது அது ஒரு சக்தி வாய்ந்த பெரிய சக்தியாக மாறுகிறது என்பது அங்கு நிரூபணமாகிறது,இதே தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் மனிதன் தன்னைவிட சக்தி வாய்ந்த ஒரு சக்தியை நம்பி தனக்கென்று ஒரு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஆலயங்கள் உருவாக்கினான் ,ஒருமித்த மனதோடு கூடிய கூட்டு வழிபாடுகளை உருவாக்கினான்

பொதுவாக ஒருமித்த மனதோடு கூடிய கூட்டு வழிபாட்டிற்கு சக்தி அதிகம் என்று நாம் எல்லோரும் உணர்ந்திருக்கிறோம்,அதனால்தான் யாருக்கு எந்தத் துன்பம் வந்தாலும், நாம் எல்லோரும் கூட்டாக வழிபாடு செய்கிறோம், ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் ஒரு சக்தி இருக்கிறது , கூட்டாக முயற்சி செய்யும்போது,அத்தனை சக்தியும் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய சக்தியாக உருவாகி அந்த வழிபாட்டை நிறைவேற்றி வைக்கிறது
பெற்றோர்கள், மனைவி ,குழந்தைகள்,அத்தனை பேரையும் ஒரு தேசத்திலே விட்டுவிட்டு பிழைப்புக்காக வேறு ஒரு தேசத்திலே போய் வேலை செய்யும்போது ,தன்னுடைய பெற்றோர், குழந்தைகள், ஆசை மனைவி, இவர்களை நேரிலே பார்க்க வசதி இல்லாதவர்கள், அவர்களின் புகைப் படங்களை தன்னிடம் வைத்துக் கொண்டு அதைப் பார்த்தாவது ஆறுதல் அடைகிறோம் நாம்,பூவுலகத்தில் நம்மோடு வாழும் உறவினர்களிடமிருந்து வெகு தூரம் விலகி இருக்கும்போதே நாம் அவர்களின் புகைப்படங்களையாவது பார்த்து ஆறுதல் அடைகிறோமே, தற்காலத்தில் விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக எப்போது நினைத்தாலும் அவர்களுடன் பேசலாம் இணையப் புகைப்படக் கருவி மூலமாக பார்த்துக்கொண்டே பேசலாம்
ஆனால் எந்தவித விஞ்ஞான உபகரணங்களும் இல்லாத காலத்திலே மக்கள் எப்படி துன்பப்பட்டிருப்பார்கள் என்று யோசித்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 2.

மேலும் அறிவார்ந்து சிந்திப்பவர்கள், விவரமறிந்துவர்கள்,எப்போதும் நல்ல சக்தி ஒன்று,கெட்ட சக்தி ஒன்று ஆக மொத்தம் இரு சக்திகள் உண்டு,கெட்ட சக்திகள் நம்மை ஆட்டிவைக்கின்றன என்று ஒப்புக்கொள்வர்
கெட்ட சக்திகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே நாம் இறைவனை (அதாவது)நல்ல சக்தியை தொழுகிறோம் என்று சொல்வார்கள்
சக மனிதர்கள் முக்கியம் என்றால், சக மனிதர்களின் உணர்வுகளும் முக்கியமானவைதானே அதனால்தான் சொல்லுகிறேன், திட்டமிட்டு ஒரு கட்டுப் பாட்டோடு செய்யும்போது எதுவுமே சிறக்கிறது
நாம் நம் மனதுக்குப் பிடித்தவற்றை செய்யலாம், தவறில்லை, அடுத்தவர்க்கு துன்பம் தராமல் இருக்க கூடிய கட்டுப்பாடு வேண்டும் அதை விட்டு விட்டு உண்மையில் எது மிக முக்கியம்? விளங்க முடியா கடவுளா..?அல்லது சக மனிதனா?
என்கிற கேள்வியே தேவை இல்லையோ என்று தோன்றுகிறது, விளங்க முடியாத பல விஷயங்களை விளங்கிக்கொண்டுதான் எல்லாம் செய்ய வேண்டுமென்றால், நாமெதையுமே செய்யமுடியாது, சக மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரவர் மரியாதையை காப்பாற்றி ஆகவேண்டும் அதுதான் ஜனநாயகம், கடவுள் மட்டுமல்ல, மனிதன் கூட விளங்கமுடியாதவன்தான், கட்டுப்பாடு என்பது எல்லாவித மனிதரையும்,அவர்களின் உணர்ச்சிகளையும் மதிப்பது என்பதுதான் மனிதம்

அவரவரை அப்பப்படியே ஏற்றுக் கொள்ளும், மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால்தான் மனிதம் வளரும்

" குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்று பெரியவர்கள் சொல்வார்கள், சக மனிதர்கள் ஒரு பொதுவான மன நிலைக்குவரவேண்டும் , அனைவரும் ஒற்றுமையாக ,இயல்பாக, சகமனிதர்களிடம் அன்பாக, சகோதர மனப்பான்மையுடன் இனிமையாக பழகி வாழ்நாட்களை இனிமையாக கழிக்கவேண்டும் என்கிற என்னுடைய நியாயமான ஆவல் நிறைவேறத்தான் இதை எழுதுகிறேன்

இதில் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்,தவறுகள் இருந்தால் எனக்கு உணர்த்தலாம், நான் தவறு என்று உணர்ந்தால் திருத்திக் கொள்ளத் தயாராய் இருக்கிறேன்,
ஒரு வேண்டுகோள் என்னுடைய கருத்துக்களும், உங்களுடைய சார்ந்த கருத்துக்களும்,மாற்றுக் கருத்துக்களும் இனிமையான,இதமான சொற்களோடு வரட்டும் வரவேற்கிறேன், கூடிய வரையில் அடுத்தவர் மனம் நோகாமல், நாம் எழுத முற்படுவோம்,அதற்கும் மேலாக யாராவது மனம் புண்பட்டால், அவர்கள் என்னை மன்னிக்குமாறு இப்போதே வேண்டிக் கொள்கிறேன்
ஏனென்றால் நான் சொல்ல வருவதை அழுத்தமாக, திடமாக சொல்லுவேன் ,இந்த மடல் நம் அனைவரையும் என்னையும் உட்படச் சொல்லுகிறேன், ஏதாவது சிறிதளவாவது நல்ல கருத்துக்களைக் கற்றுக் கொள்ள உதவினால் மகிழ்வேன்,நாம் அனைவருமே பழக்க வழக்கங்களினால்,அதாவது நாம் பழக்கப் பட்ட விதத்தால் அதற்கேற்றவாறு வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அதனால் நாம் எப்போதும் சரியாகத்தான் நடந்து கொள்கிறோம் என்பதும் இல்லை,எப்போதும் தவறாக நடந்து கொள்கிறோம் என்பதும் இல்லை

என் அம்மா என்னுடைய அம்மாவின் தாயாரை அம்மா என்று அழைப்பதைக் கேட்டு எனக்கு பழக்கம்,அதனால் அதே பழக்கத்தால் என்னுடைய தாயாரின் தாயாரை பாட்டி என்று ஒரு நாளும் நான் அழைத்ததில்லை மாறாக அம்மா என்றே அழைத்திருக்கிறேன், இதை தவறு என்று சொல்பவர்களும் உண்டு, சரி என்று ஏற்றுக் கொண்டவர்களும் உண்டு


Tuesday, February 24, 2009

ஆன்மீகம்-- 1. கடவுளும் மனிதனும்

“ஆன்மீகம்”


ஆன்மீகம் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். அதற்கு எனக்குத் தூண்டுகோலாயிருந்தது ஒரு நண்பர் என்னைக் கேட்ட ஒரு கேள்விதான். அந்தக் கேள்வி, "விளங்க முடியாக் கடவுளா? அல்லது சக மனிதனா? உண்மையில் எது முக்கியம்?" என்கிற கேள்வியே. என்னை மிகவும் சிந்திக்க வைத்தது அதற்கு எனக்குத் தெரிந்த வரையில் பதில் எழுதி இருக்கிறேன்.

நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயம் கடவுளைப் பற்றியதாக இருந்தாலும் சக மனிதரைப் பற்றியதாக இருந்தாலும் புரிந்து கொள்ள வேண்டும் என்று உண்மையாகச் செயல் பட்டால் நிச்சயமாகப் புரிந்து கொள்ள முடியும். புரிந்து கொள்ளக் கூடாது என்று நினைத்துவிட்டால், புரிந்தாலும் மனது ஏற்றுக் கொள்ளாது. நாம் புரிந்து கொள்வோம் வாருங்கள்.

உங்கள் எல்லோருடைய முழு மனதோடு கூடிய சம்மதத்தையும் எம்மதமாயிருந்தாலும் சரி, அனைத்து சகோதரகளும் "மனிதம்" என்னும் ஒரே கொள்கையோடு முயற்சி செய்வோம் முழு மனதோடு. கடவுள் நம்பிக்கை, மதம், கோவில், திருவிழா, தேரோட்டம் எல்லாமும் மனிதனால் உருவாக்கப்பட்டவை. மனிதனாலேயே விஸ்தரிக்கப்பட்டவை. அவற்றை மனிதன் தான் செப்பனிட வேண்டுமே தவிர, கடவுள் முக்கியமா மனிதன் முக்கியமா என்று ஆராய்வு அவசியமற்றது என்று தோன்றுகிறது.

"கண்ணுக்குத் தெரியாத கடவுளை விட புலனுக்கு தெரியும் மனிதன் முக்கியம் தான் என்றால் அந்த மனிதன் தன் வாழ்கையில் மிக முக்கியமான பங்காகக் கடவுளை வைத்திருக்கிறானே“ என்கிற பதில் நம்மை யோசிக்க வைக்கிறது. இவைகள் என்னை ஆன்மீகத்தைப் பற்றி ஓரளவு எழுதலாம் என்று எண்ண வைத்திருக்கிறது. மனிதர் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருப்பினும் உலகிலே நம்மை மீறிய சக்தி உண்டு என்று ஒப்புக்கொள்வார். மேலும் விஷயமறிந்தவர்கள், எப்போதும் நல்ல சக்தி ஒன்று, கெட்ட சக்தி ஒன்று, ஆக மொத்தம் இரு சக்திகள் உண்டு இரு சக்திகளும் நம்மை ஆட்டிவைக்கின்றன, கெட்ட சக்திகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே நாம் இறைவனை (அதாவது) நல்ல சக்தியை தொழுகிறோம் என்று சொல்வார்கள்.

சக மனிதர்கள் முக்கியம் என்றால், சக மனிதர்களின் உணர்வுகளும் முக்கியமானவைதானே அதனால்தான் சொல்லுகிறேன், நீங்கள் சொல்லியபடி திட்டமிட்டு ஒரு கட்டுப்பாட்டோடு செய்யும்போது எதுவுமே சிறக்கிறது, நாம் நம் மனதுக்குப் பிடித்தவற்றைச் செய்யலாம் தவறில்லை, அடுத்தவர்க்குத் துன்பம் தராமல் இருக்கக் கூடிய கட்டுப்பாடு வேண்டும் அதை விட்டு விட்டு உண்மையில் எது மிக முக்கியம்? விளங்க முடியாக் கடவுளா? அல்லது சக மனிதனா? என்கிற கேள்வியே தேவை இல்லை. விளங்க முடியாத பல விஷயங்களை விளங்கிக் கொண்டுதான் எல்லாம் செய்ய வேண்டுமென்றால் நாமெதையுமே செய்ய முடியாது. சக மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரவர் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஆக வேண்டும், அதுதான் ஆன்மீகம். கடவுள் மட்டுமல்ல, மனிதன் கூட விளங்க முடியாதவன்தான். கட்டுப்பாடு என்பது எல்லாவித மனிதரையும், அவர்களின் உணர்ச்சிகளையும் மதிப்பது என்பதுதான்.

அவரவரை அப்பப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால்தான் மனிதம் வளரும், மனிதம் காப்பாற்றப்பட்டாலே ஆன்மீகம் காப்பாற்றப்படும்.நான் பொதுவாக எங்கு சென்றாலும் அங்கிருக்கும் மனிதர்களிடத்தில் பொதுவாக கேட்பேன் ”யார் உறவுக்காரர்கள்” என்று பலர் பலவிதமாக விளக்கம் சொல்வார்கள், ஆனால் நான் கடைசியாக சொல்வேன் இப்போது இங்கிருக்கும் நாம்தான் உறவுக்காரர்கள், ஏனென்றால் இப்போது இந்தக் கணத்தில் இங்கு என்ன நடக்கிறதோ அந்த நடபுக்கேற்ப நனமையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் முதலில் நமக்கு உதவப் போவது இங்கிருக்கும் நம்மில் ஒருவர்தான், பிறகுதான் மற்ற உறவுக்கோ, நண்பர்களுக்கோ செய்தி அனுப்புவோம்,ஆகவே நாம் தான் உறவுக்காரர்கள் என்று

கடவுள் நம்பிக்கை,உருவ வழிபாடு,அருவ வழிபாடு, மதம், கோவில், திருவிழா,தேரோட்டம், எல்லாமே மனிதனால் உருவாக்கப்பட்டவை. மனிதனாலேயே விஸ்தரிக்கப்பட்டவை, அவற்றை மனிதன் தான் செப்பனிட வேண்டுமே தவிர, கடவுள் முக்கியமா மனிதன் முக்கியமா என்று ஆராய்வே அவசியமற்றது என்றுதான் தோன்றுகிறது,ஆனாலும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டால் மனிதம் என்னும் ஆணிவேருக்கு சரியான விளக்கம் என்ன என்பதை அறியலாம் என்னும் முயற்சியால் இக்கட்டுரையை எழுதுகிறேன்

கண்ணுக்கு தெரியாத கடவுளை விட புலனுக்கு தெரியும் மனிதன் முக்கியம் தான்.என்றால் அந்த மனிதன் தன் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்காக கடவுளை வைத்திருக்கிறானே “என்கிற பதில் என்னை ஆன்மீகத்தைப் பற்றி ஓரளவு எழுதலாம் என்று எண்ண வைத்திருக்கிறது, மனிதர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும்,உலகிலே நம்மை மீறிய சக்தி உண்டு என்று ஒப்புக்கொள்வர்,



குளிக்கலாம் வாரீகளா

' ஆரோக்கியக் குளியல் '

தினமும் குளிப்பது எதற்கு என்று ஒரு குழந்தை தன்னுடைய தாயாரைப் பார்த்துக் கேட்டதாகவும், அதற்கு அந்தப் பெண்மணி எப்படிப் பதில் கூறினால் அந்தக் குழந்தைக்கு ஏற்புடையதாக இருக்கும் என்பது தெரியாமையினால் பதில் கூறத் தயங்கியதாகவும் ஒரு செய்தியை மழலைகள் தளத்தில் திரு கல்பட்டு நடராஜன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். இன்னும் பல பெரியவர்களுக்கே அந்த சந்தேகம் இருக்கிறது. அவர்களுக்கும் புரியும் வகையில் குளையலைப் பற்றி யோசிப்போமா?
குறத்தி மகன் என்னும் திரைப்படத்தில் சுருளிராஜன் என்னும் நகைச்சுவை நடிகர் குறவர் கூட்டத்தில் ஒருவராக வருவார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன, "படிக்கச் சொன்னா பரவா இல்லேப்பா குளிக்கச் சொல்றாங்கோ" என்பார். அதைக் கேட்டவுடன் நமக்குத் தானாக சிரிப்பு வரும்.

எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தைகள், குறவர்கள் குளிப்பதே கிடையாது. அவர்களைக் குளி என்றால் எவ்வளவு கடினமாயிருக்கும் அவர்களுக்கு? சமீபத்தில் அன்பே சிவம் என்னும் ஒரு திரைப்படத்தில் கமல்ஹாசன் ஏதோ சொல்ல முயல இடைமறித்து, "போதும் சார், எனக்கு குளிக்கக் கூடத் தெரியாதா? அதுக்குக் கூட நீங்க சொல்லித் தரணுமா? போய் வேலையைப் பாருங்க" என்பார் மாதவன்.

நம்மில் பலர் இப்போதும் இரவு தாமதமாகப் படுக்கப் போகும் நேரத்தினால் காலையில் சிறிது தாமதமாக எழுகிறோம். அப்படி தாமதமாக எழும்போது நேரமின்மையினால் வேகவேகமாகக் குளித்துவிட்டு, ஏதோ காலையில் கிடைத்த உணவை ருசியும் அறியாமல் அள்ளிப் போட்டுக்கொண்டு அவதி அவதி என்று அலுவலகத்துக்குச் செல்கிறோம். சிலர் அதற்கும் நேரமில்லாமல் குளியலறைக்குச் சென்று சிறிது சிறிது தண்ணீரில் முகத்தைக் கழுவிக்கொண்டு, சிறிது தண்ணீரைத் தலையிலும் தெளித்துக்கொண்டு வருவோம். அப்போது கேட்பார்கள், "என்ன இன்று காக்காய்க் குளியலா?" என்று. ஏன் அப்படிக் கேட்கிறார்கள் என்று யோசித்தால், காக்காய் திடீரென்று குளிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு நீர்நிலைகள் அருகிலே வரும். எப்போதுமே காக்காய்க்கு சந்தேகம் அதிகம். அதனால் யாராவது வந்துவிடப் போகிறார்களே, யாராலாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்றெல்லாம் நினைத்துக்கொண்டு தலையை ஒரு முக்கு தண்ணீரில் முக்கிவிட்டு, பலமுறை தலையை சிலுப்பிக்கொள்ளும். அதுபோல அரைகுறைக் குளியல் போட்டுவிட்டு வரும் நம்மை அப்படித்தான் கேட்பார்கள்.

என்னடா ஒரு சாதாரணக் குளியலுக்கு இவ்வளவு வியாக்யானங்களா என்று யோசிப்போருக்கு இன்னும் ஏன் குளிக்க வேண்டும் என்று நான் சொல்லவே இல்லையே. இப்போது சொல்கிறேன்.

நாம் ஒவ்வொரு நாளும் இரவில் தூங்கப் போகிறோம். நாம் தூங்கும்போது நம் புலன்கள் அனைத்தும் ஓய்வெடுக்கின்றன. சில முக்கியமான உறுப்புகளைத் தவிற, நம் உறுப்புகள் அனைத்தும் பல கழிவுகளை நம் உடலில் உற்பத்தி செய்கின்றன. அந்தக் கழிவுகள் நம் உடலில் சேரும்போது நம் உடலில் ஒரு துர்நாற்றம் ஏற்படுகிறது, அந்தக் கழிவுகளை சுத்தம் செய்யாமல் அப்படியே சேரவிட்டால் அந்தக் கழிவுகள் நம் உடலுக்கு நோயை விளைவிக்கும். ஆகவேதான் குளிக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, ஒவ்வொரு நாள் நாம் தூங்கும்போதும் விஷயம் தெரிந்த பெரியவர்கள் சொல்லுவார்கள் அது ஒரு தற்காலிக மரணம் என்று. ஆகவே நாம் பிறந்த போது நம்மைச் சுற்றி இருந்த வேண்டாத அழுக்குகளை நீக்க நம்மைக் குளிப்பாட்டுகிறார்கள். அது போல நாம் ஒவ்வொரு நாளும் இறந்து பின் மீண்டும் பிறக்கிரோம். அப்படிப் பார்க்கும்போது தினமும் நம்மைச் சுத்தம் செய்து கொள்ள குளித்துதானே ஆகவேண்டும், அதனால்தான் குளிக்கிறோம்.

குளிப்பது என்னும் வழக்கம் ஏன் ஏற்பட்டது, சுத்தமும் சுகாதாரமும் புரிய ஆரம்பித்தபோது, நீரினால் நம் உடலைக் கழுவினால் அசுத்தங்கள் நீங்கிவிடும் என்று உணர்ந்த போது, ஏற்பட்ட ஒரு நடைமுறைதான் குளியல் என்பது.

குளிப்பதில் எத்தனை வகைகள் இருக்கிறது என்று பார்ப்போம்.

முதலில் ஏற்பட்டது ஆற்றுக் குளியல். நாம் நதிக்கரையில்தான் நம் நாகரிகத்தை தொடங்கினோம். ஆற்றுக் குளியலில் பலவகையான அபாயங்கள் உண்டு. காவிரியில் நீர் ஓடிக்கொண்டிருக்கும், பெண்டிரும் ஆடவரும் குளித்துக் கொண்டிருப்பார்கள், திடீரென்று நீர் ஏகத்துக்குப் பெருகி வெள்ளமாய் வந்து பலரை அடித்துக்கொண்டு போயிருக்கிறது. அது மட்டுமல்ல ஆற்றில் குளிக்கும் போது எந்த இடத்தில் ஆழம் அதிகம், எங்கு குளித்தால் நீரோட்டம் நம்மை அடித்துகொண்டு போகாமல் இருக்கும் என்பது தெரிந்து குளிக்க வேண்டும். சில இடத்தில் பாறைகள் நீட்டிக் கொண்டிருக்கும். நாம் குளிக்கும்போது அந்தப் பாறைகள் நம் கையையோ காலையோ கிழித்துவிடக்கூடும். ஆக அந்த ஆற்றில் ஏற்கெனெவே குளித்துப் பழக்கப்பட்டவர்களிடம் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு பிறகு ஆற்றில் குளித்தால் நல்லது.

அடுத்ததாக கிணற்றுக் குளியல். பல கிராமங்களில் விவசாயத்தை முன்னிட்டுப் பெரிய கிணறுகளை வெட்டி வைத்திருப்பார்கள். அந்தக் கிணறுகளில் பல சிறுவர்கள் மேலிருந்து சத்தம் வரும்படியாக குதித்து நீரைக் கிழித்துக்கொண்டு நீந்திக் குளிப்பார்கள். அவர்களுக்குத் தெரியும் அந்தக் கிணற்றின் பக்கவாட்டுச் சுவரில் எங்கு பள்ளமாய் இருக்குமென்று. அங்கு போகும் போதுமிகவும் எச்சரிக்கையுடன் போவார்கள். அதுமட்டுமல்ல கிணற்றில் சில சமையம் தவளை, மீன்கள் பாம்பு போன்றவை இருக்கக் கூடும். அவைகள் வந்தால் எப்படி சமாளித்து மேலே வரவேண்டும் என்று அவர்களுக்கு இயல்பாகவே பயிற்சி வந்துவிடும்.

அடுத்ததாக குளங்களில் குளித்தல். இது மிகவும் ஆபத்தானது, ஏனென்றால் குளங்களில் பாசி போன்ற தாவரங்கள் நம்மை வழுக்கி விட்டுவிடும். அதுமட்டுமல்ல, தாமரை, அல்லி போன்ற மலர்களின் கொடிகள் குளங்களில் கீழே வேரூன்றி இருக்கும். அந்தத் தாவரத்தின் தண்டுகள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு இருக்கும். நாம் கீழே சென்று நீந்தும் போதோ, அல்லது பாசியின் வழுக்கலாலோ உள்ளே விழுந்து கீழே சென்று மேலே வர முயலும் போது நம் கால்கள், கைகள் அந்தத் தாவரத்தின் பின்னலில் சிக்கிக்கொண்டு நம்மை மேலே வரமுடியாமல் செய்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் மூச்சுத்திணரி இறக்கும் வாய்ப்பு அதிகம்.



அடுத்ததாக கடல் குளியல். மாசிமகம் அன்று கடலில் குளித்தால் புண்ணியம் என்னும் நம்பிக்கை இருக்கிறது, அப்படிக் கடலில் குளிக்க ஆசை கொண்டோர் கவனிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருக்கின்றன. கடல் அலைகள் கடலின் ஓரத்திலேதான் இருக்கும். அந்த அலைகளில் லாவகமாக இறங்கி நீந்தி நடுக்கடலுக்கு செல்ல வேண்டும். அப்படிச் செல்லும்போது நம்மால் எவ்வளவு தூரம் நீந்த முடியும் என்று நம்மை, நம்முடைய திறனை எடைபோடாமல் அதிக தூரம் கடலுக்குள் செல்லக் கூடாது. நீந்தத் தெரியாதவர்கள் கடலில் இறங்கவே கூடாது, ஏனென்றால் அலைகள் கரைக்கு வரும்போதே சீற்றத்துடன்தான் வரும். வந்துவிட்டுப் பின்னுக்குத் திரும்பும்போது மிகவேகமாகத் திரும்பும். அப்படித் திரும்பும் கடலலை என்னதான் எச்சரிக்கையுடன் செயல்பட்டாலும் காலை வாரி இழுத்துக்கொண்டு போய்விடும்.

நீந்தத் தெரிந்தவர்களா யிருந்தாலும் கடலுக்குள் போகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனென்றால் நீந்தத் தெரிந்தால் மட்டும் போதாது. கடல் நீருக்கு இயல்பாகவே ஒரு அழுத்தம் உண்டு. அந்த அழுத்தத்தை சமாளிக்கப் பழக வேண்டும். அதுவுமன்றி சுறா, திமிங்கிலங்கள் போன்ற பெரிய வகை மீன்கள் கடலில் உண்டு, அவைகளிடம் மாட்டிக்கொண்டால் தப்பிப்பது கடினம்.

சரி ஆறு, குளம், கிணறு இவைகளில் குளிப்பதற்கு இவ்வளவு தெரிந்திருக்க வேண்டுமா நமக்கெதற்கு வம்பு என்று வீட்டிலேயே குளியலறையில் குளிக்கலாம் தவறில்லை, ஆனால் குளிக்க வேண்டும்.

ஆமாம் ஏன் குளிக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டோம் எப்படிக் குளிக்க வேண்டும் என்று பார்க்கலாமா? என் தாயார் எனக்கு சொல்லிக்கொடுத்த ஒரு ரகசியத்தை இப்போது சொல்லப் போகிறேன்.

எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊர் நீர்நிலைகளில் குளிக்கும்போது அந்த நீர்நிலை குளிப்பதற்கு ஏற்றதுதானா என்று தெரிந்து கொண்டு குளிக்க வேண்டும். அப்படிக் குளிப்பதற்கு முன்னால் அந்த நீர் நிலையிலிருந்து சிறிதளவு தண்ணீரை வலது கைகளின் உள்ளங்கை அளவு எடுத்து மூன்று முறை குடித்துவிட்டு, பிறகு குளித்தால் அந்த நீர் நம்மை பாதிக்காமல் இருக்கும் என்பார்கள், ஏனென்றால் உள்ளே இருப்பதும் அந்த நீர்நிலையின் தண்ணீர், வெளியே நம் உடலில் படுவதும் அந்த நீர்நிலையின் தண்ணீர் எனும்போது இரண்டும், அதாவது உள்ளும் புறமும் சமனப்பட்டு எவ்வித எதிர் விளைவுகளும் ஏற்படுத்தாமல் இருக்கும் என்பார்கள் என் தாயார். இன்று வரை நான் அதைக் கடைபிடித்து இருக்கிறேன். நாடகம், திரைத்தொடர்கள், திரைப்படம் போன்றவைகளில் நடிக்க நான் பல ஊர்களுக்கு சென்றிருக்கிறேன். பல நீர் நிலைகளில் குளித்திருக்கிறேன், ஆனால் எந்த நீர்நிலைகளும் என்னை பாதித்தது இல்லை.

வீட்டில் நாம் குளிக்கும்போது நீரை அதிகம் செலவழிக்காமல், ஆனால் சுத்தமாகக் குளிப்பதற்கு ஒரு முறை இருக்கிறது. நீரால் முதலில் உடலை நனைத்துக்கொண்டு நாம் உபயோகிக்கும் சோப்பை எடுத்து முதலில் முகத்தை சுத்தம் செய்துவிட்டு, நீரால் கழுவிவிட்டு பிறகு உடலை சுத்தம் செய்ய ஆரம்பித்தால் கண்களில் சோப்பு உள்ளே சென்று கண்கள் எரிவதை தடுக்கலாம். மற்றும் நாம் கண்களால் நன்றாகப் பார்த்து மற்ற பாகங்களை சுத்தம் செய்ய வசதியாய் இருக்கும். சோப்பைக் கைகளில் தடவிக்கொண்டு கைகளால் உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டு பிறகு நீரைத் திறந்து குளிக்க ஆரம்பித்தால் குறைவான அளவு தண்னீரிலேயே சுத்தமாகக் குளித்து விடலாம். பிறகு தலையில் தண்ணீரை ஊற்றி ஷாம்பூவோ, அல்லது சிகைக்காயோ தேய்த்துக்கொண்டு உடனே தண்ணீரால் தலையைக் கழுவிவிட்டு உடனடியாக முதலில் தலையைத் துடைத்துக் கொண்டால் சளிபிடிப்பது, தலை வலி போன்ற தொந்தரவுகளிலிருந்து தப்பித்துவிடலாம். பிறகு உடலை சுத்தமாகத் துடைத்துக்கொண்டு வெளியே வந்து கன்னடியில் முகம் பார்த்துத் தலை சீவும் நேரத்துக்குள் தலை முடி காய்ந்து பதமாகவும் இருக்கும்.

முக்கியமான ஒரு செய்தி இருக்கிறது. தூங்கும் போது நம் உறுப்புகள் இளைப்பாறுகின்றன. அப்படி இளைப்பாறும் போது அந்த தசைகள், இறுகிவிடுகின்றன. அப்படி இறுகிவிட்ட தசைகளைத் தளர்த்தி எளிதாக செயல்படுத்த நம் உள்ளங்கைகளினால் நன்றாகத் தேய்த்து விடுவதால் அத்துணை தசைகளும் மீண்டும் புத்துணர்வு பெற்று இயல்பாக இயங்கத் தொடங்கும்.

இதைத்தான் அழகு நிலையங்களில் மசாஜ் என்று சொல்லுகிறார்கள். மருத்துவமனைகளில் ஹீட் தெரப்பி என்றும் சொல்கிறார்கள். நம் பணத்தையும் வீணடித்து இவ்வாறெல்லாம் செய்வதை விட தினமும் குளிக்கும்போது நம் உள்ளங்கைகளால் நாமே நம் உடலை நன்கு தேய்த்துப் புத்துணர்வு பெறச் செய்யலாமே. என்ன தினமும் குளிப்பது எவ்வளவு நல்லது என்று புரிகிறதா? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமன்றோ?

மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ


தாழம்பூவே தங்க நிலாவே

” தாழம்பூவே தங்க நிலாவே ‘




மார்கழி மாதம் பிறந்த நாளிலிருந்து, அருகிலிருக்கும் ஆலயத்திலிருந்து ஒலிபெருக்கி மூலமாக ஒலிக்கும் திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பக்திப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே விடியற்காலையில் என் பெண் எங்கள் வீட்டு வாசலில் போடும் கோலங்களையும் ரசித்துக் கொண்டும், உபன்யாசங்கள், முடிந்த போது இசைவிழாக் கச்சேரிகள் கேட்டுக்கொண்டும்,நம் அறிஞர்கள் எழுதிய இசைமறுவறல்கள் படித்தும், இத்தனை நாட்கள் எங்கள் ஆழ்வார் ஆண்டாளைப்பற்றி அனைத்து அறிஞர்களும் எழுதிய அமிர்தம் போன்ற விளக்கங்களப் படித்தும், முழுவதும் அனுபவித்து ஆனந்தமடைந்தேன்.

நாளை வைகுண்ட ஏகாதசி, எல்லா வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட வாசல் திறக்கும்,வைகுண்ட வாசல்திறக்கும் அந்த சுபமுகுர்த்த வேளையில் மானுடர்களாகிய நாம் மனதும் உடலும் சுத்தமாக, அந்த வாயிலின் வழியே நுழைந்து அங்கு இறைவனை தரிசனம் செய்தால் வைகுண்டம் செல்லலாம் என்னும் ஆத்திக அன்பர்களின் நம்பிக்கையின் படி அனைத்து மக்களும் ஆலயங்களுக்கு சென்று வழிபடும் நாள்,

உத்திரமேரூரிலிருந்து ஒரு உறவுக்காரப் பெண் என் மனைவிக்கு தாழம்பூவை அனுப்பி இருந்தாள் தாழம்பூ வாசனைக்கு பாம்பு வரும் என்று சொல்லுவார்கள்,மின்னல் தெறிக்கும் வேளையிலே தாழை மடல் விரியும் என்றும் தாழம்பூ பூக்கும் என்றும் சொல்லுவார்கள், அது மட்டுமல்ல தாழம்பூவில் சிறு நாகம் என்று சொல்லக்கூடிய சிறு பாம்பு இருக்கும்,அந்தப் பூநாகம் கடித்தால் பிழைப்பது கடினம் என்றும் சொல்லுவார்கள் ஆகவே தாழம்பூவை நன்கு சோதித்துப் பிறகே கூந்தலில் சூடவேண்டும் என்று என் அன்னையார் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பொதுவாக என் வீட்டில் இறைபக்தி உண்டு என்னும் காரணத்தால் புதிய துணிமணிகள், நகைகள், வீட்டிலே சமைக்கும் உணவுப் பொருட்கள் அனைத்தையுமே ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து விட்டு அதன் பின்னர் உபயோகிப்பது வழக்கம். அதேபோல் தாழம்பூவையும் ஸ்வாமிக்கு அணிவித்து பிறகு வீட்டில் உள்ள பெண்மணிகள் சூடிக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். ஆகவே என்னுடைய இயல்பான எச்சரிக்கையான குணத்தினால் அந்த தாழம்பூவை பிரித்து அதில் நன்கு சோதனையிட்டு பிறகு என் மனைவியிடம் கொடுத்தேன்.

பாசத்தோடு தாழம்பூவை அனுப்பி இருக்கும் அந்தப் பெண்ணின் அன்பில் எனக்கு சந்தேகமில்லை, ஆனால் அந்தப் பெண்ணிற்கு தாழம்பூவின் இயல்புகள் தெரியுமோ தெரியாதோ என்னும் எண்ணத்தில்தான் சோதனை செய்தேன். ஒரு எச்சரிக்கைதான் இதற்கும் காரணம், ஆனால் இந்த எச்சரிக்கைக்குப் பின்னால் இருக்கும் என் சுயநலத்தை எண்ணிப் பார்த்தேன் வெட்கமாக இருந்தது.

நான் என் மனைவியிடம் சொன்னேன் எதற்கும் தாழம்பூவை ஸ்வாமிக்கு சார்த்தி அணிவித்த பிறகு நீ சூடிக்கொள் என்று.

எப்பொருளையும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு பிறகு நாம் உபயோகிப்பது என்ன காரணத்தால் என்று எண்ணிப் பார்க்கையிலே அனேக காரணங்கள் தோன்றினாலும் நமக்கு ஒரு பிறப்பையும் தந்து நமக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் அளித்த இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக அவருக்கு நிவேதனம் செய்து விட்டு உபயோகிக்கிறோம் என்பது ஒரு காரணம்.

பொதுவான நம்பிக்கை என்னெவென்றால் நாம் உபயோகிக்கும் பொருட்களில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் அவைகளை ஸ்வாமி நீக்கிவிட்டு நமக்கு நன்மை அளிக்கக் கூடிய ப்ரசாதமாக மாற்றித் தருவார் என்னும் ஆன்மீகவாதிகளின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாம் எல்லாவற்றையும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்கிறோம் என்பது பொதுக் கருத்து.

இப்படிப் பார்க்கும் போது இறைவனை தோஷங்கள் எதுவும் தாக்காது, அவன் சர்வ வல்லமை படைத்தவன் என்று நாம் மதிக்கிறோம் என்று தோன்றினாலும், நாம் செய்வது சரியா என்று ஒரு எண்ணம் தோன்றுகிறது, ஏனென்றால் என் தாயார் குளித்து சுத்தமாக தன் கையாலே சமைத்த உணவுப் பொருட்களை ஸ்வாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு பிறகே எங்களுக்கு அளிப்பார்கள். அது வரை என்னதான் பசித்தாலும் காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்னும் வழக்கத்தை எங்களிடையே விதைத்தார்கள்.

அந்த வழக்கத்தினால், பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்னும் மூன்று சொற்களின் பயன் என்னவென்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது, நல்ல வேளை என் மனைவியும் அதே வழக்கத்தை கடைபிடிக்கிறாள்.

ஆனால் புதியதாக திருமணம் ஆன என் மகள் சமைத்துக் கொண்டிருக்கும் போது அவள் சமைக்கும் ஒவ்வொரு உணவுப் பண்டத்தையும் முதலில் கொஞ்சம் ருசி பார்த்துவிட்டு வைப்பதைப் பார்த்து அவளிடம் கேட்டேன், முதலில் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யாமல் இதுபோல நீ ருசித்துப் பார்க்கிறாயே இது நியாயமா என்று.

அதற்கு அவள் சாமர்த்தியமாக என்னிடம் சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது, அப்பா நானே சமையல் கலைக்கு புதியவள் ஏதோ ஒரு தைரியத்தில் சமைக்கிறேன், அதன் ருசி சரியில்லாமல், என் கணவருக்கு அளிப்பதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை. நாம் மரியாதை அளிக்க நினைப்பவருக்கு பதமான சுவையோடு கூடிய குற்றமில்லாத உணவை அளிப்பதுதானே நியாயம். அதனால்தான் நான் ருசித்து விட்டு அந்த உணவுப் பொருட்களில் இருக்கும் குறைகளைக் களைந்து சுவையாக மாற்றி பிறகு அவருக்கு அளிக்கிறேன் என்றாள்.

சாதாரண மானுடப் பெண்ணிற்கே தான் காதலிக்கும் தன் கணவன் மேல் உள்ள மரியாதையாலும் தன்னுடைய அக்கரையினாலும் கணவனுக்கு எந்த விதத்திலும் ஒரு குறையும் வந்துவிடக் கூடாது என்று, தான் ருசி பார்த்துவிட்டு குற்றம் களைந்து பிறகு கணவனுக்கு அளிக்கவேண்டும் என்னும் நல்லெண்ணம் இருக்கிறதே!!

அப்படியானால் ஆண்டாள் எப்படியெல்லாம் அரங்கனை போற்றி இருப்பாள் என்று நினைக்கையிலே மனம் தழுதழுக்கிறது.

ஆத்மார்த்தமாக காதலித்து, பக்தி செய்த அடியவர்களான ஆழ்வார்கள் இறைவனை, மூலப்பொருளை எவ்வளவு உயர்வாக வைத்திருந்தார்கள், என்பதைக் காட்டும் இலக்கியங்கள் நமக்கு பக்தியை உணர்த்துகின்றன.

தான் கடித்துப் பார்த்துவிட்டு குற்றம் நீக்கி ஸ்ரீராமனுக்கு வண்ணமாகவே, சபரி அவைகளை அளித்தாள் என்பதில் வியப்பேதுமில்லை, குற்றமும் இல்லை என்றே தோன்றுகிறது. இச்செய்கை சபரியின் அளவிடமுடியாத பக்தியைக் காட்டுகிறது.

அனைவரும் என் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தும், நம் வீட்டுக்கு வா கண்ணா, என்று பக்தியுடன் அழைத்த விதுரரின் அழைப்பை ஏற்று, அவர்தம் குடிலுக்கு சென்ற பகவான் கிருஷ்ணனைக் கண்ட விதுரர் தன்னை மறந்த நிலையில் வாழைப்பழத் தோல்களை கிருஷ்ணனுக்கு அளித்து பழத்தை கீழே போட்டுவிட்டு நெக்குருகி ஆனந்தக் கண்ணீர் வழிய பரவச நிலையிலிருந்த விதுரரின் நிலையை எண்ணிப்பார்த்து பரவசமடைந்தேன், அப்படி பக்தியோடு அடியவன் அளித்த பழத்தோல்களை சற்றும் முகம் சுளிக்காமல், திருப்தியோடு உண்ட வெண்ணையுண்ட வாயன் கிருஷ்ணனின் லீலை நம்மை வியக்க வைக்கிறது.

சுய நிலை அடைந்து பதறிப்போய் தான் செய்த தவறுக்கு வருந்தி விதுரர் பூரண உணர்வோடு பழத்தை அளித்த போது அதை மறுத்து, தன்னை மறந்த நிலையில் விதுரர் அளித்த வாழைப்பழத்தோலே தனக்கு உவப்பானது என்று அருளி, அடியவர்களின் பக்தி எப்படி இருக்க வேண்டும் என்று நமக்குணர்த்திய பரமன் கிருஷ்ணனின் லீலையை அனுபவிக்கிறேன்.

அப்படி இருக்க ஸ்ரீரங்கன் மேல்பக்தியும், அளவிடமுடியாத காதலும் கொண்ட ஆழ்வார் ஆண்டாள் திருவரங்கனுக்கு எந்த ஒரு தீங்கும் வந்து விடக் கூடாது என்று எண்ணம் கொண்டதால்தானோ தான் சூடி மாலை அவனுக்களித்தாளோ என்று தோன்றுகிறது.

என்னதான் பெரியாழ்வார் பக்தியோடு சுத்தம் செய்த மலர்களைக் கொண்டு மாலை கட்டி இருந்தாலும் அம்மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சற்றும் உறுத்தல் இல்லாமல் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்து பிறகு ஸ்ரீரங்கனுக்கு அளிக்கலாமே என்னும் எண்ணத்தால் தான் சூடி மாலை தந்தாளோ கோதை என்று தோன்றுகிறது.

இன்னமும் அந்த மாலைகளில் ஏதேனும் குற்றம் இருந்து விடப் போகிறதே, அந்தக் குற்றங்கள் தன்னை பாதித்தாலும் பரவாயில்லை, அரங்கனைப் பாதித்து விடக்கூடாது, அதனால் குறைகளைக் கண்டுணர்ந்து களைய வேண்டுமே என்று நினைத்து குறை ஒன்றுமில்லாத கோவிந்தனுக்கு குறை களைந்து தான் சூடி மாலைதனை அளித்தாளோ ஆண்டாள் என்று தோன்றுகிறது.

ஸ்ரீரங்கனுக்கு ஆண்டாள் ஆழ்வாரா,இரண்டறக் கலந்த பாகம் பிரியாளா, அல்லது தாய்மையோடு கூடிய பாசத்தோடு கூடிய தாயாகவும் ஆனாளா?

அவன் மடியில் தழும் சேயாகவும் ஆனாளா?

அடடா என்னே பெரியாழ்வார் கண்டெடுத்த சின்னாழ்வார் ஆண்டாளின் பெருமை?

அதனால்தான் தாய்க்குப் பின் தாரம் என்னும் சொல்வழக்கு ஏற்பட்டதோ என்று தோன்றுகிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ





Sunday, February 22, 2009

சிறு வயதில் என்னுடைய பாட்டியும் ,தாயாரும்
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாயக் கிளியே சாய்ந்தாடு, என்று பாடியும் ,
ஆனை ஆனை அழகர் ஆனை, அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை,
குட்டியானைக்கு கொம்பு முளைச்சுதாம் ,பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சாம், என்று சொல்லும் தமிழ் வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு வளர்ந்தோம், மார்பிலே அம்பைத் தாங்கிய தன் பிள்ளையின் வீரம் கண்டு நெக்குருகி மார்பிலே பால் பீரிட்டெழ பிள்ளை இறந்த துக்கத்தையும் மறந்து,புறமுதுகு காட்டாத பிள்ளையைப் பெற்றெடுத்ததற்காக பெருமை கொண்ட வீரத்தமிழ்த் தாயின் கதைகள் கேட்டு வீரம் கொண்டோம்,

நம்முடைய பாரதியாரின் கனல் தெறிக்கும் பாடல்களை நம்மைப் பெற்றவர்கள் வாயாலேயே பாட அதைக்கேட்டு தேசப்பற்றும், ஞானமும் அடைந்தோம், தீராத விளையாட்டுப் பிள்ளை என்னும் கண்ணனின் திருவிளையாடல் கேட்டு இளமை இனிமையென கண்டோம்,கொட்டடடா ஜெய பேரிகை கொட்டடா என்னும்பாடலைக் கேட்டு வீர முழக்கமிட்டோம்,ஓடி விளையாடு பாப்பா என்கிற பாட்டைக் கேட்டு வாழ்க்கையில் எந்தஎந்த பருவத்தில் எப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்று கற்றுக் கொண்டோம், ”சகலகலாவாணியே சரணம் தாயே சங்கீத வீணா பாணியே”

என்னும் பாடலைக் கேட்டு தமிழில் துதி செய்யக் கற்றுக் கொண்டோம்

அந்த சுந்தரத்தமிழ் இருக்க ,
லிட்டில் லிட்டில் ஸ்டார் பாட்டு எதற்கு ?

இதை நம் மக்கள் புரிந்து கொண்டு குழந்தைகளுக்கு நல்ல செய்திகளை தமிழிலே ,சுந்தரத் தமிழிலே அளிக்கவேண்டும்,முதலில் பெரியவர்களுக்கு ஆங்கில மோகம் தீரவேணும்,எல்லா மொழியையும் கற்றுக் கொள்ளலாம், ஆனால் தாய் மொழியை முதலில் அறிதல் அவசியமன்றோ,?
எனக்கு ஒரு ஆச்சரியம், ஆங்கிலம் தெரியாமலே இத்துணை நாட்கள் நமக்கு தமிழிலேயே எல்லாவித வாழ்க்கை முறைகளையும் பெற்றோர்கள் முறையாக கற்றுக் கொடுத்தனரே, இப்போது அந்த ஞானம் எங்கு போயிற்று

விலங்குகள், பறவைகள், கூட எந்த தேசத்திலிருந்தாலும் அதன் தாய் மொழியிலேயே தன் குட்டிகளுக்கு கற்பிக்கிறது,
அன்னிய நாட்டில் இருக்கும் பசுக்கள் கூட அம்மா என்றே தமிழை உச்சரிக்கின்றன,நாம் விலங்குகளை, பறவைகளை விட கீழானவராய் ஆகிவிட்டோமா?



சிரிப்புத்தான் வருகுதையெ-உலகைக்கண்டால்

சிரிப்புத்தான் வருகுதையே என்னும்பாடல் ஷண்முகப்ரியா ராகத்திலும்,

அகத்தியர் தருந் தமிழை அன்னைபோல் வளர்த்தனை

சகத்திலே உனைப்போலுண்டோ தாய்மொழிக்குழைத்தவர்

இகத்திலே தமிழ்த்தவம் இயற்றிச் சங்க நூல்களின்

சுகத்திலே குளித்தனை சுவாமிநாத வள்ளலே என்னும் பாடல் காமாஸ் ராகத்திலும்


தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும்-இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்,

முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்-இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்

என்னும் மஹாகவி பாரதியாரின் பாட்டுகள் ஒலித்த நாட்கள்,

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்- மிடிப் பயம் கொல்லுவார் துயர்ப் பகைவெல்லுவார்
என்னும் பாடல் புன்னாக வராளி ராகத்திலே ஒலித்த அந்த நாட்கள்

வந்தே மாதரம் என்போம்- எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்என்னும் ஆனந்தக் களிப்பு ராகத்திலே பாடல் கேட்ட அந்த நாட்கள்

தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

என்னும் தாயுமானவர் ஆனந்தக் களிப்பு வர்ணமெட்டில் கேட்ட அந்த நாட்கள் இவையெல்லாம் மீண்டும் வாராதோ என்று ஏக்கமாய் இருக்கிறது

அந்தநாள் இனி வருமோ-சொல்லடீ அம்பலப் பசுங்கிளியே

என்னும் சுத்தானந்த பாரதி அவர்களின் பாடல் ஆரபி ராகத்திலே காதில் ஒலிக்கிறது,

என்ன செய்ய?

அன்புடன்

தமிழ்த்தேனீ


Thursday, February 19, 2009

நிலப்பிரண்டை

சமீபத்தில் நான் நடித்துக்கொண்டிருக்கும் கோகுலத்தில் சீதை என்னும் தொலைக் காட்சித் தொடரில் நடிப்பதற்காக சென்ற ஒரு இடத்தில் எனக்கு மனைவியாக நடிக்கும் ஒரு பெண்மணியின் தகப்பனார் சேலத்து ஆசாமி,சுமார் 80
வயது இருக்கும், அவரிடம் அவரிடம் ஆத்மஞானம், இந்துமதம், நம் நாட்டின் பெருமைகள், என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கடைசியாக அவருடைய ஊரான
சேலத்தைப் பற்றி கேட்டேன், அப்போது அவர் கூறிய விவரங்களை வீட்டுக்குவந்து எழுதினேன்’அந்த விவரங்கள்:


சேலத்தில் மிகவும் விசேஷமான
கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)

மலைமேல் அர்தநாரீச்வரர் திருக் கோயில்
ஆங்கே ஆணும் பெண்ணும் சமம் என்பதை நிருப்பிக்கும் வகையில் இறைவன் ஆண்பாதி,பெண்பாதியாய் அர்தநாரீஸ்வரராய்க் திருக் கோலம் கொண்டுள்ளார்

ஆங்கே மலைமேலே உள்ள கருப்பக்கிரகத்தில்
அந்த அர்தநாரீஸ்வரர் பெருமானின் திருவடியின் கீழே
ஒரு சுனை இருக்கிறது எப்போதும் வற்றாத சுனை அது
அருச்சகர் அர்ச்சனை முடித்த பின் அந்தச் சுனையிலிருந்து நீரை எடுத்து பக்தர்கள் மேல் தெளிப்பர், பக்தர்களும் அந்த நீரை அருட் ப்ரசாதமாய் வணங்கி ஏற்றுக் கொள்வர்

அதே சேலத்திலே கஞ்ச மலை என்றொரு மலை இருக்கிறது, ஆங்கே சித்தர் கோயில் ஒன்றும் இருக்கிறது, இன்றும் அங்கே சித்தர்கள் வலம் வருகிறார்களாம்,
அந்த மலையின் அடிவாரத்திலே தடையாண்டி ஊற்று என்றொரு ஊற்று இருக்கிறது, ஈரோடு ,சீரகாபாடி பக்கம் வருகிற இந்த ஊற்றுத்தண்ணீர் பல வியாதிகளுக்கு,
குறிப்பாக மேகரோகம்,போன்ற சரும வியாதிகளை குணமாக்கும் மூலிகைத்தண்ணீர் என்பது நம்பிக்கை
ஆனால் உடலில் சோப்பு போன்றவைகளை தடவிக் கொண்டு குளிக்கக் கூடாது,என்கிறார்கள் அங்கிருப்பவர்கள்
கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)

கொங்குநாட்டுத் தலம். இத்தலம் சங்ககிரிதுர்க்கம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 9 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஈரோட்டி லிருந்தும் நாமக்கல், சேலம் ஆகிய ஊர்களிலிருந்தும் பேருந்து மூலமாகவும் இத்தலத்தை அடையலாம். மலைமேல் கோயில் வரை செல்லப் பேருந்து வசதி உள்ளது.இத்தலம் திருச்செங்கோடு, திருச்செங்குன்றூர், நாகாசலம் என வழங்கப்பெறும். மேலவீதியிலிருந்து பார்த்தால் மலை, நாகம் போல் தோன்றுவதால் நாககிரி எனப்பெற்றது. சுப்பிரமணிய சுவாமி சந்நிதி தனியே அமைந்துள்ளது. சுவாமி சந்நிதி மேற்குப் பார்த்தது. முருகன் சந்நிதி கிழக்குப்பார்த்தது. விஷ்ணுகோயில் கோயிலுக் குள்ளேயே தனியேயிருக்கிறது. சுவாமி அர்த்தநாரீசுவரர். அம்மை பாகம்பிரியாள்; அர்த்தநாரீசுவரி. விஷ்ணுவுக்கு ஆதிகேசவப் பெருமாள் என்று பெயர். அர்த்தநாரீசுவரர் பாதத்தில் ஒரு சிறு ஊற்று இருக்கிறது. இது விறல்மிண்ட நாயனாருடைய அவதாரஸ்தலம். தீர்த்தம் பிரமதீர்த்தம் முதல் 16 தீர்த்தங்கள் உள்ளன. முழுநிலவு நாளிலும் , மறை நிலவு நாளிலும் பக்தர்கள் அந்த மலையின்மேல் சென்று இரவு தங்குவார்கள்,உண்பதற்கு வேண்டிய,உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துச் சென்ரால் போதும், சுத்தமான குடிதண்ணீர் ஆங்கே மலைமேல் கிடைக்கிறது ஆங்கே மலைமேல் கிணறு மற்றும்,சுத்தமான ஓடை இருக்கிறது, அடிவாரத்தில் உணவு விடுதிகள் இருக்கின்றன,ஆனால் சைவ உணவு மட்டுமே கிடைக்கும் ,அசைவ உணவு விடுதிகளுக்கு அங்கே தடை விதித்திருக்கிறார்கள், ஒவ்வொரு முழுநிலவு நாளிலும்,மறை நிலவு நாளிலும்,குறைந்தது ஐம்பதாயிரம் பேர் வருகிறார்கள், அதேபோல கொல்லி மலையிலும்,இன்னும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக மக்கள் நம்புகின்றனர்

கொல்லி மலையில் இந்தியாவிலேயே பெரிய மூலிகைப் பன்ணை அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது, மற்றும் செம்மேடு, சுவாலக்காடு, அரபளீஸ்வரர் திருக்கோயில்,
கொல்லி மலை நீர்விழுச்சியில் நீராடி அரபளீஸ்வரரை தரிசனம் செய்வார்கள்,இந்தியாவிலேயே கரடிகள் இந்த பகுதியில் மிக அதிகம்ம் அந்த மலையிலே வாழும் பூர்வகுடிகள் மலைவாழ் மக்கள் என்றும், மலைக்
கௌண்டர்கள் என்றும் அழைக்கப் படுகின்றனர்,அந்தக் கொல்லி மலையில் மரங்களில் பாம்புகள் தலை கீழாகத் தொங்கிய படி இருக்கும் காட்சியை காணலாம், பலாப்பழம்,அன்னாசி,,பேரிக்காய்,கொய்யா, மாம்பழம், காப்பி,அதிகம் விளைகிறது,மான்களும் மயில்களும் அங்கே சுற்றித் திரியும் அந்தக் கொல்லி மலையின் அடிவாரத்திலே

வசிய மை விற்போர் அதிகம்பேர் இருக்கிறார்கள்,அவர்கள் விக்ஸ் டப்பா என்று சொல்லும் ஒரு டப்பாவிலே மையை நிரப்பிக் கொடுத்துவிட்டு அதற்கு வசிய மை என்று பெயர் சொல்லுவார்கள், அவற்றை நம்பி 300, 400 ரூபாய் கொடுத்து வாங்கி ஏமாறுவோர் பலர், அந்த கொல்லி மலையில்
குறிப்பாக இரண்டு வேர்களைப் பற்றி கூறுகிறார்கள்

1.தலைவணங்கி வேர்

இந்தத் தலைவணங்கி வேரை வைத்திருப்பவர்களை யாரும் எதிர்க்க மாட்டார்கள் ,பணிந்து போவார்கள் எதிரிகள் என்று சொல்லுகிறார்கள்,

2,மலைமுழுங்கி வேர்

இந்த மலை முழுங்கி வேரை வைத்திருப்பவர்களுக்கு எப்படிப்பட்ட கடினமான
காரியங்களையும் அனாயாசமாக செய்யும் ஆற்றல் வந்து விடும் என்று சொல்லுகிறார்கள்,அது மட்டுமல்ல அவர் என்ன காரியங்கள் செய்கிறார், எப்படிச் செய்கிறார்,என்னும் ரகசியங்களை மற்றவர் கண்ணிலிருந்து மறைக்குமாம் அந்த
வேர்,எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டாலும், அதிலிருந்து மீண்டு வர இந்த மலைமுழுங்கி வேர் உபயோகப்படும் என்று சொல்லுகிறார்கள்,இவற்றையெல்லாம் விட அதிசியமாய் ஒரு செய்தி சொல்லுகிறார்கள், அந்தக் கொல்லி மலையில் தரையிலே ஒரு செடி தன்னைத்தானே சுற்றிக்கொண்டே இருக்குமாம், அந்தச் செடிக்குப் பெயர் நிலப்பிரண்டை என்று சொல்கிறார்கள், நிலத்திலே பிரண்டு கொண்டே இருக்குமாம், அந்த நிலப்பிரண்டைச் செடி பல நோய்களைத் தீர்க்கும் சஞ்சீவினி ,மூலிகை என்றுசொல்லுகிறார்கள், மூலிகைகளைப் பற்றிய விவரங்கள் தெரிந்தோர் கண்ணுக்கு மட்டுமே தென்படுமாம்,அந்த நிலப்பிரண்டை செடியை அவர்கள் மூலிகை எடுக்கும் விதமாக காப்புகட்டி மந்திர உச்சாடனம் செய்து பிறகு ஒரு குறிப்பிட்ட வேளையில்தான் எடுப்பார்களாம்,அப்படி எடுத்து வந்த நிலப்பிரண்டை செடியை சுத்தமானஇடத்தில் வைத்து, அதற்கு வேண்டிய பூசைகளை செய்து பத்திரமாக பாதுகாத்தால் அந்த செடி மிக நன்மை பயக்குமாம்சமீபத்தில் கொல்லி மலைக்கு சென்றிருந்த ஒரு நண்பர் கூறினார் , அவர் நடந்து வரும் போது செடிகளே இல்லாத சமதரையில் திடீரென்று அவர் கண்ணில் பட்டிருக்கிறது அந்தச் செடிகள், அவை தன்னைத்தானே சுற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து வியந்த அவர் அந்தச் செடிகளின் அருகிலே சென்றவுடன் அவை சுழலுவதை நிருத்தி விட்டனவாம், அதன் இலையைப் பறித்து முகர்ந்து பார்த்திருக்கிறார்,அவருக்கு எந்த ஒரு மணமும் கிடக்கவில்லை ,அவ்வழியாக வந்த ஒரு பெரியவர் இவரிடம் வந்து என்ன பார்க்கிறாய் என்று கேட்க இவர் அந்தச் செடியைக் காண்பிக்க கையை அங்கே நீட்டிய போது அந்தச் செடிகள் இருந்த சுவடே தெரியவில்லையாம்

மீண்டும் அந்தப் பெரியவர் கையைக் காட்டியவுடன் அந்தச் செடிகள் பரவலாக கண்ணுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது,அப்போது அந்த பெரியவர் கூறினாராம் அந்தச் செடிக்குப் பெயர் நிலம் பிரண்டை ,அது ஒரு மூலிகை என்று சாதாரணமாக நம் வீட்டில் வைத்திருக்கும் துளசி, வேப்பிலை,கருவேப்பிலை, போன்ற செடிகளில் இருந்து கூட அந்தச் செடிகளின் அனுமதியை மனதாரக் கேட்டு பின்தான் பறிக்க வேண்டும் என்பர், அப்படி இருக்க அபூர்வ மூலிகைகளை பறிக்கும் போது காப்பு கட்டி மந்திர உச்சாடனம் செய்து எடுத்தால்தான் பலன் தரும்,அதிலும் குறிப்பாக அந்த மந்திர உச்சாடனங்கள் ஒவ்வொரு மூலிகைக்கும் ஏற்றவாறு நாட்கள், நேரங்கள், மாறு படும் , உருவேற்றும் பொழுது உருவேற்றுபவரின் மனதிலேயே ஒரு அறிகுறி காட்டுமாம், உச்சாடனங்களின் நிறைவை.


அன்புடன்
தமிழ்த்தேனீ



Wednesday, February 18, 2009

கணிணியும் தமிழும்

அன்புள்ள மின்தமிழ் நண்பர்களே

இப்போது நான் கூறப் போவது என் சுயப் பரதாபம்
ஆனாலும் இதைப் படிப்பவர்களுக்கு கணிணிப் பயன்பாடு எவ்வளவு உயர்வானது, தேவையானது
என்பது ஓரளவு புரியும் , புரியவேண்டும் என்னும் நோக்கில் எழுதுகிறேன்

ஆர் கிருஷ்ணமாச்சாரி யாகிய என்னை இயந்திரங்களோடு இயந்திரமாய் 34 வருடங்கள் இரவு பகலாய் வெயில் படாமல் லூகாஸ் டீவீஎஸ் என்னும் நிறுவனம் எனைப் பொத்தி வளர்த்தது போற்றி வளர்த்தது, இயந்திரமே எனக்கு போதிமரமாய் உயர்ந்து நின்றது
அந்த போதி மரத்தை விட்டு 2002 ம் ஆண்டு விலகி வீட்டுக்கு வந்தேன்,
என் மகனுக்கு ஒரு கணிணி வாங்கி அளித்துவிட்டு அவன் அதிலே வேலை செய்யும் பொழுது தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என்னை அருகிலே இழுத்தது காந்தமாய்க் கணிணி,முயன்றுதான் பார்ப்போமே என்று முடிந்த வரை தட்டினேன், தட்டினால் திறக்கும் என்பார்களே,அடேடே எனக்கும் அருள் புரிந்தது கணிணி,   தட்டச்சு கூடத் தெரியாத என்னை கணிணியும் தமிழும் இணைந்து இன்று தமிழ்த்தேனியாய் மாற்றிய விந்தையை நினைத்துப் பார்த்தால் அது இறைவனின் சிந்தை என்று புரிகிறது,

ஏற்கெனெவே நான் கையெழுத்தாய் எழுதி வைத்திருந்த படைப்புகளை முரசு அஞ்சலென்னும் முறையை உபயோகித்து தட்டச்சு செய்தேன் , மீண்டும் அவைகளைப் படிக்க எண்ணி திறந்து பார்த்தால் அவை எழுத்துரு உருமாறி கேள்விக் குறியாய் நான் எழுதியது என்னவென்று எனக்கே புரியாமல் நான் தடுமாறும் நிலையை கேலி செய்தது .அவற்றை சரி செய்ய என் எச் எம் உருமாற்றியை கண்டு பிடித்து எழுதியதெல்லாம் அதிலிட்டு எழுத்துருமாற்றி, மீண்டும் வெட்டி ஒட்டி கோப்பாக்கி அவற்றையெல்லாம் யூனிகோட் முறையில் எழுதி வைத்தேன் . அன்றுதான் வெகு நாட்கள் கழித்து நிம்மதியாய் உறங்கினேன்.

அழகி என்றொரு மென்பொருளை இலவசமாகவே திரு அழகி விஸ்வநாதன் அவர்களும் , மழலைகள்.காம் தளம் நடத்தும் திரு ஏகேஆர் அவர்களும் எனக்களித்து என்னை அழகிக்கு பழக்கிவிட்டனர் அழகி மற்ற மென் பொருட்களைவிட தட்டச்சு செய்ய மிகவும் சுலபமாக இருக்கிறது.
மற்ற மென்பொருட்களில் நா என்றொரு எழுத்தை தட்டச்சு செய்ய w என்னும் எழுத்தை தட்டச்சு செய்து பிறகு a அடிக்க வேண்டும் ,ஆனால் அழகியில் என் எச் ஏ அடித்தாலே போதும். நாம் இயல்பாக எழுத முடிகிறது. ஆகவே இப்போதெல்லாம் நான் அழகி மென் பொருளை உபயோகிக்கிறேன்,நீங்களும் உபயோகித்துப் பாருங்கள் அழகியின் அழகு புரியும்,


மறுநாள் காலையில் முதல் நாள் பதித்த என் படைப்புகளைக் காண ஆவலுடன் கணிணியைத் திறந்தேன், விஞ்ஞான விந்தைகள் அத்தனையையும் அதுகாட்டி சரம் சரமாய் ஒளிகாட்டி இறுதியாய் திறந்தது கணிணி,என் கோப்புகளைத் தேடினேன்,
அது போன்ற கோப்பெதுவுமில்லை என்னிடத்தில் என்றே கையை விரித்து என்னை ஏளனம் செய்தது கணிணி, ஏமாந்தேன், என் படைப்புகள் அத்தனையும் காணவில்லை. மகவை திருவிழாவில் தொலைத்த தாய் போல் பரிதவித்தேன், ஆமாம் சேமிக்க மறந்திருக்கிறேன்.

கோப்புகளை சேமிக்கத் தெரியாத ஒரே காரணத்தால் முன்னூறு கவிதைகள், இருநூறு கட்டுரைகள், பல படைப்புகள் அத்தனையையும் மறைத்தது கணிணி என் கண்ணிலிருந்து, எத்துணை நாள் உழைப்பு,ஒரு நொடியில் காணாமல் போனது, அப்போதுதான் கற்றுகொண்டேன் சேமிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்று ,வாழ்க்கையில் சேமிக்காதவர் எவ்வளவு பாடு படுவாரென்று.

அப்பனுக்கே பாடம் சொன்ன கந்தனாய் என் மகனை
நான் நினைத்து அவனிடம் வெட்கம் விட்டு கேட்டுக் கேட்டுக்
சேமிக்கவும் கற்றுக் கொண்டேன்.  அதன் பிறகு என் விரல்கள்
 தமிழா.காம்  மூலமாக ஈ கலப்பை என்னும் ஒரு மென்பொருளை அறிமுகம் செய்து கொண்டன, மீண்டும் நான் கணிணியில் தங்லீஷில் தட்டச்சு செய்யத் தொடங்கி  தட்டச்சு செய்தேன் அத்தனையயும்.

 சலிக்காமல், சேமித்தேன்!.என்ன ஆச்சரியம் தட்டச்சே தெரியாத எனக்கும்
அதற்கு உதவிய பலர் மூலமாக கணிணியில் தட்டச்சுசெய்ய ,. அதுவும் தமிழிலே சரளமாய் வேகமாய் தட்டச்சு செய்ய பழக்கம் வந்திருந்தது என்விரல்களுக்கு.  கேட்டுக் கேட்டுக் கற்றுக் கொண்ட தமிழ்
தட்டச்சு,  சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம் நடையும் நடைப்பழக்கம், தட்டச்சும்  விரல்பழக்கம்  என்பது புரிந்தது.


கணிணியே மன்னித்துக்கொள் என்னைப் படுத்துகிறாய் என்று உன்னை நான் திட்டியதுண்டு, இப்போதுதான் புரிகிறது நீ என்னைப் பண்படுத்தி இருக்கிறாய், படுத்தவில்லை என்பது,  வேலையிலிருந்து ஓய்வு பெற்றவுடன் எப்படிப் பொழுது போகப் போகிறதோ என்று பயந்து கொண்டிருந்தேன், ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் பெரியோர்களே
கணிணி கற்றுக் கொள்ளுங்கள் எவ்வளவோ நற் காரியங்கள் செய்ய வாய்ப்பிருக்கிறது.

ஒரு உண்மையை சொல்லுகிறேன் இப்போதெல்லாம் எனக்கு பொழுது போதவில்லை, நான் மனதால் உலகையே உலா வருகிறேன் என்றால் அதற்கு கணிணியல்லவா காரணம் ! அனைவருமே கணிணி கற்றுக்கொள்ளுங்கள், பறவைப் பார்வையாய் ப்ரபஞ்சத்தை பார்க்கலாம்,உலகை உலா வரலாம், தமிழிலே உலா வரலாம்

“ நான் ஒரு தொழிலாளி”

இரும்போடு உழைத்திட்ட தொழிலாளி நான்
தமிழ்க் கரும்போடு செயலாற்ற எழுத்தாளியாய்
அமிழ்தான தமிழ்தன்னின் பொறுப்பாளியாய்
தரமற்ற செயல் தமக்கே மறுப்பாளியாய்
அமர்கின்ற மலரெல்லாம் தமிழாகவே அமர்ந்திங்கு
மகரந்தம் தனை நாடியே வழிகண்டு வந்திணைந்த
தமிழ்த்தேனி நான் ,ஊன் உயிர் தழுவுதல்போல்
நான் தமிழ் தழுவினேன்,உற்றதொரு தமிழ்நாடி
தேன்தேடி சுந்தரத் தமிழ்சூடி மகிழ்கின்ற தமிழ்த்தேனி நான்
உமிழ்கின்ற உமிழ்நீரும் தேனாகவே தமிழ்த்தேனாகவே
அருஞ்சுவையான தமிழ்தந்து எனை ஏற்றியே
சிறு இறக்கைகள் தந்தருளி பறக்கின்ற அணிலாக
எனை மாற்றியே மகிழ்கின்ற கலைவாணி தமிழ்வாணியே,
அவளுக்கே குருவான ஹயக்ரீவனின் தாள் பணிந்தே
தமிழ்த் தொண்டு நான் செய்ய மனம் கொண்டதால்
அடிபோற்றி நல்அறம் பாடும் தமிழ்த்தேனியாய்
புலம்பெயர்ந்து மின்தமிழின் மரபணிலாகவே
உளம் கனிந்த தமிழ்த்தேனியாய் எனை மாற்றி
வகை செய்த அறிஞர்கள் மகிழ்கின்ற தமிழோடு இனிதாகவே,
இணைகின்ற தமிழ் வாழ்க தமிழ் வாழ்கவே
ஒரு கணநேரமதில் நம்மை உலகெங்குமே உலாவிடவே
வகை செய்யும் எளிதான புதிதான வாகனமாகவே
திகழ்கின்ற கணிணிதனை நாம் வாழ்த்தியே தமிழ் வளர்க்கவே
நாமெல்லோரும் கரம் சேர்த்து உலகாளுவோம்,

அன்புடன்
தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com
http://thamizthenee.blogspot.com
http://peoplofindia.net



Friday, February 13, 2009

பழமொழி-11. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை ஆஹா என்ன அருமையான பழமொழி
சொல்வழக்கு,


குற்றம் பார்க்க வேண்டும் ,குறை கண்டு பிடிக்க வேண்டும்
என்று நினைத்துவிட்டால்....நாராயணன் முதல்,ஏசு முதல் ,அல்லா வரையில்
காந்தி முதல் கண்ணதாசன் வரை,மதங்கள் முதல் மனங்கள் வரை
அன்னை முதல் தந்தை வரை,குற்றம் கண்டு பிடித்துக் கொண்டே இருக்கலாம்
குறை சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

ஒரு பெரிய வெள்ளைத்தாளில் ஒரு கருப்புப் புள்ளிபோன்றது குற்றம் ,குறைகள்,
எல்லாம் அவைதான் முதலில் கண்ணுக்குத் தெரியும்,
அந்த மனோ நிலைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்,
என்பதற்காக ஏற்படுத்தப் பட்ட பழமொழி இது என்று
தோன்றுகிறது

அது போன்ற தேவையில்லாத ,சற்றும் நன்மை பயக்காத
மனோ நிலைகளை சற்றே களைந்து நல்லதைப் பார்க்க
மனத்தை பழக்கிவிட்டால் நன்மை பயக்கும்

தரும புத்திரருக்கு கெட்டவர்களே கண்ணில்
படவில்லையாம் துரியோதனனுக்கு நல்லவர்களே கண்ணில்
படவில்லையாம், எல்லாவற்றிர்க்கும் மனோ நிலையே காரணம்
உலகில் ஒரு நல்லது இல்லாமல் கெட்டது இல்லை,ஒரு கெட்டது இல்லாமல்
நல்லது இல்லை

ஒரு முறை ஆதி சங்கரர் ஆழ்ந்த தியானத்தில் இருந்து கண் விழித்தார்,
அங்கு ஒரு பல்லி ( Lichard ) தலை கீழாக விழுந்து, நிமிர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது,அதன்மேல் பரிதாபப்பட்டு அதை நிமிர்த்திவிட்டுமீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் ஆதி சங்கரர், மீண்டும் அவர் தியானம் கலைந்து பார்க்கையில்
அதே பல்லி புழு பூச்சிகளை பிடித்து உண்டு கொண்டிருப்பதைப் பார்த்து தெளிந்தாராம்
உலகில் ஒருவருக்கு செய்யும் பரோபகாரம்,அடுத்தவருக்கு செய்யும் தீமையாகவும் இருக்கலாம், ஆக கெடுதல் இல்லாமல் நல்லது இல்லை,நல்லது இல்லாமல் கெடுதல் இல்லை, இரண்டும் கலந்ததே வாழக்கை, அறியாமல் தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள், அறிந்து கொண்டே தவறு செய்பவர்களும் இருக்கிறார்கள்,

தவறே செய்யாத மனிதர்களைக் காட்ட முடியுமா..?முடியாது!

உங்களில் யார் உத்தமரோ அவர்கள் இந்தப் பெண்மணியின் மீது கல்லெறியுங்கள் என்று யேசுபிரான் கூறியதைப் போல,,

இயற்கையான காற்று வேகமாக அடிக்கும் போது, பல கட்டிடங்கள் வீழலாம்,அதே சமையம் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த கப்பலை கரை சேர்க்கவும் செய்யலாம், மழை அதிகமாகப் பெய்யும் போது பல இடங்களில் வெள்ளத்தினால் பலர் அடித்துச் செல்லப்படலாம்,பல இடங்களில் பயிர்கள் செழித்து வளரவும் கூடும், ஒரு இடத்தில் அதிக வெய்யிலாக கருதப்படுவது,மற்றொரு இடத்தில் குளிர்போக்கப் பயன்படலாம்,ஒரு இடத்தில் பற்றி எரியும் தீ பலவற்றை அழிக்கலாம், அதேபோல் அடுப்பில் எரியும் தீ பசியைப் போக்கலாம்,அதனால் ஒரு இடத்தில் குற்றம் என்று கருதப்படும் சில விஷயங்கள் சில இடத்தில் குற்றமாக கருதப் படாமல் இருக்கக்கூடும்,

கண்ணதாசன் எழுதாத பாடல்களா,தொடாத இலக்கியங்களா

அப்படிப்பட்ட மேதை ஒரு பாடலில்

"உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி "
கலகத்தில் பிறப்பதுதான் நீதீ
கலங்காதே மதி மயங்காதே”

என்று எழுதி இருக்கிறார்,என்ன பொருளென்று பார்ப்போம்

உலகத்தில் இருக்கும் ஜீவ ராசிகளில் பாதிப் பேர் திருடர்கள்
ஊமைகள் குருடர்கள், அதில் பாதி..அதாவது உலகத்தில் இருக்கும் ஜீவராசிகளில் மீதி இருக்கும் பாதிப்பேர் ஊமைகள் குருடர்கள், என்றும் பொருள் கொள்ளலாம்,
அல்லது திருடர்களில் பாதிப் பேர் ஊமைகள்,குருடர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்
ஆனால் அவர் எவ்வாறு பொருள் வரும்படி எழுதி இருக்கிறார் என்று பார்த்தால், உலகத்தில் திருடர்கள் சரி பாதி என்றால் ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் திருட்டுத்தனம் பாதியும் நல்லகுணம் மீதியும் இரண்டும் கலந்தே இருக்கும்இருக்கும் என்று சொல்லுகிறார்

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை
நான் என்று வைர முத்து எழுதியதைப் போல
திருடனும் நல்லவனும் கலந்தே மனிதன் இருக்கிறான்
என்று சொல்லுமாப் போல் எழுதி உள்ளார் என்று நினைக்கிறேன்
மனிதர்களின் மனதில் இருக்கும் திருட்டுத் தனங்கள் பாதி ,மீதி நல்ல எண்ணங்கள்,
பேச வேண்டிய விஷயத்தில், பேச வேண்டிய நேரத்தில்
பேசி உண்மையை சொல்லாமல் சிலர் ஊமைகளாகவும் , நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில்,தக்க நடவடிக்கை எடுக்காமல் ,கண்டும் காணாதது போல குருடர்களாகவும் மனிதர்கள் இருக்கிறார்கள்,எத்தைகைய துன்பம் வரினும் உண்மையைத் தவிற மற்றதை பேசேன்... என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு, மற்றவர்களுக்கு துன்பம் வருமென்றால்
அதைக் களையும் நோக்கில் அங்கு என் குரல் உரத்து ஒலிக்கும் என்னும் மனோ உறுதியுடன் செயல்படும் நல்ல குணம் பாதி, இப்படிக் கலவையான மனிதர்கள் இருக்கிறார்கள், அது மட்டுமல்ல ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இரண்டும் கலந்தே இருக்கிறது என்று பொருள் படும்படி எழுதி இருக்கலாம்...என்று சுட்டிக் காட்டவே அப்படி எழுதினார் என்று நாம் பொருள் கொள்ளலாம்.....

குருடு என்பது அறிவிலா...? ஊமை என்பது நியாயத்திலா..?
செவிடு என்பது நல்லவற்றைக் கேளாமை என்பதிலா

ஆக மொத்தம் உடல் ஊனங்களை விட மன ஊனங்கள்
கெடுதி பயக்கும் என்பதை நாம் புறிந்து கொள்ளலாம்
யாரிடத்தில் குற்றமில்லை...?
புத்தன் செய்தது சரியா ...இன்னும் விவாதங்கள் தொடர்கின்றன
தன்னை நம்பி வந்த பெண்ணை நிர்க்கதியாக விட்டு விட்டு
வேறு மார்கத்துக்குப் போனது சரியா என்று...?

கண்ணன் செய்தது அத்தனையும் சரியா ...?
நோக்கம் வேண்டுமானால் தர்மத்தை நிலை நாட்ட
என்று இருக்கலாம், ஆனால் அவன் செய்த காரியங்கள்
100க்கு 99 சரியானதல்ல என்று விவாதிக்கிறார்கள்
மஹா பாரதம் படித்தால் தெரியும்...?

ராமன் செய்தது சரியா மக்களே பேசுகிறார்கள்
கட்டிய மனைவியை யாரோ சொன்னதற்காக
தீக்குளிக்க வைத்தான் என்று....

யேசு ஏற்படுத்திய கிறிஸ்தவ மதத்துக்கும்,சமண மதத்தினருக்கும்
பௌத்தத்துக்கும், சர்ச்சை இருந்து கொண்டே இருக்கிறது
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டினால்
விளைவு எப்படி இருக்கும் என்பதை நாம் அறியோமா...?
என்றெல்லாம் விவாதிக்கின்றார்


அல்லாவைப் பற்றி நினைத்தால்
“முகம்மதுவின் எதிரிகளோடு நடந்த போரில் அப்துல் முத்தலிபின் உடல் சிதிலப்படுத்தப்பட்டது. ஹம்சாவின் இறந்த உடலை இழிவு படுத்தியதற்காக எழுபது எதிரிகளின் உடலை அவ்வாறு சித்திரவதை செய்வதாக சூளுரைத்தான் முகம்மது. பிறகு ஏதோ தோன்றி, ஒரே ஒரு சடலத்தை அவ்வாறு சிதிலப்படுத்தினால் போதும் என்று சொல்லிக்கொண்டான்.
அப்படி சொல்லிக்கொண்டதுதான் மேற்கண்ட வரி.
“ அதனை அல்லா சொன்னார் “என்று சொல்லி, அது குரானில் இருக்கிறது. என்கிறார்கள்
இதன் படி முஸ்லீம்கள் இறந்த எதிரிகளை, அவர்கள் இஸ்லாமிய கும்பலில் இல்லாமல் இருந்தால் ,அந்த உடல்களை இழிவு செய்ய அனுமதி கிடைக்கிறது.இந்த விஷயமும் விவாதத்தில் இருக்கிறது

திரு கண்ணதாசன் ஒரு பாடலில்

”மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்” என்று எழுதி இருக்கிறார்

யோசித்துப் பார்த்தால்
ஆண்மயில்தான் தோகை விரிக்கும்

அப்படியானால் மயிலாள் என்று எப்படி எழுதினார் கண்ணதாசன்

ஆக யார் குற்றமில்லாதவர் .... யாருமில்லை
ஆகவே குற்றங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாலே
குணங்கள் மறைந்து விடும், குணங்கள் மறைந்து விட்டாலே
உறவுகள் குறைந்து விடும்
அதற்காகத்தான் சொன்னார்கள் பெரியவர்கள்
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று


அன்புடன்
தமிழ்த்தேனீ



!-- ADDTHIS BUTTON BEGIN -->