அன்புள்ள நண்பர்களே ,சகோதர சகோதரிகளே,
காலம் ஒரு அருமையான ஆசிரியன், அந்த ஆசிரியன் கற்றுக்கொடுக்கும் பாடங்களை உலகத்தில் வேறு யாராலும் கற்பிக்க முடியாது என்பது திண்ணம் . காலம் ஆட்டிவைக்கிறது, நம்மை தூங்க வைக்கிறது,விழிக்க வைக்கிறது, விழ வைக்கிறது , எழ வைக்கிறது. எல்லாச் செயல்களையும் செய்ய வைக்கிறது, நம்மைப் பண்படுத்துகிறது.
கால ஓட்டம் ,காலச் சுழற்சி கனவேகமாய் சுழன்று கொண்டிருக்கிறது. நிறுத்த முடியாத, மீண்டும் பெறமுடியாத காலங்கள்.அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது, மறந்து விடாதீர்கள் இப்போதும்,எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கணமாய்,
இந்த நிமிடத்திலிருந்தாவது ஏற்கெனவே செய்த தவறுகளைக் களைந்து இனி செய்யப்போகும் செயல்களை இன்னும் சிறப்பாய் செய்யப் பழகுவோம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.இனி வருங்காலம் இனிதே அமையட்டும். இனிய புத்தாண்டுக் காலம் தொடங்கிவிட்டது இனிமையானதாக நம் வாழ்வை மாற்றிக்கொள்ள நாமும் அதனுடன் ஓடுவோம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்புடன்
தமிழ்த்தேனீ

No comments:
Post a Comment