(அழகி.காம் இணையதளத்துக்கு எழுதியது)
என் தாயார் ஆர் கமலம்மாள் அவர்கள்
ஒரு தமிழ் எழுத்தாளர்
அவர்கள் எழுதிய "க்ருஷ்ணதீர்த்தம் " என்னும் சிறுகதை
உயர் திரு சங்கராச்சரியார் அவகளின் ஜன் கல்யாண்
என்னும் அமைப்பும் ,அமுத சுரபி பத்திரிகை ,மற்றும்
பாரத ஸ்டேட் வங்கியும் , இணைந்து நடத்திய கதைப் போட்டியில் முதற் பரிசு பெற்று
திரு சங்கராச்சாரியார் அவர்களால் பாராட்டப் பட்டு
அவருடைய திருக் கரங்களால்
தங்கக் காசு பரிசு பெற்றது,
அவர்கள் எழுதிய பாடல்கள்
" தெய்வீகப் பாமாலை "என்னும் பெயரில்;
மும்பை சகோதரிகளால் பாடப் பட்டு,
திரு எல் கிருஷ்ணன் அவர்களால் இசையமைக்கப் பட்டு
சங்கீதா ஒலி இழை அமைப்பாளர்களால்
வெளியிடப் பட்டது
என் தாயார் ஆர் . கமலம்மாள் அவர்களின்
திருவருளால் நானும் இணையத்தில் பல் கவிதைகள்,
கட்டுரைகள் ,புதினங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன்
மேலும் பல திரைப் படங்கலிலும் ,தொலைக்காட்ச்சி
தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
அன்புள்ள விஸ்வநாதன் அவர்களே
எனக்கு என்னுடைய தாயார் தான் நண்பன்,
மந்திரி, நல்லாசிரியன்,குரு எல்லாமே
என் தாயார் அடிக்கடி சொன்ன விஷயங்களை
என் மன அடித்தளத்தில் அசை போட்டுக்
கொண்டிருக்கும் கன்று நான்
மன மடி கனத்ததால் சுறக்கும் தமிழ்ப் பால்
தனை சுவைப் பாலாக அளிக்க விரும்பும்
தமிழ்த்தேனீ நான்
என்னுடைய இயற் பெயர் ஆர்.கிருஷ்ணமாச்சாரி
கண்ணன் என்று என் தாயாரால் யசோதையின் பாசத்தோடு அழைக்கப் பட்ட நான் என்
பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தேன்,
அதனால் க்ருஷ்ணன் என்று பெயரிட்டனர் ,
என் தந்தையார் ஆர் ரங்கஸ்வாமி அய்யங்கார்
மிகுந்த பொது நலமும் நேர்மையும்
சக மனிதர்களிடையே நேசமும் கொண்ட
மனித நேயம் உணர்ந்த ஒரு மஹா மனிதர்
அவர் எனக்கு ஞான குருவாய் இருந்து
சொல்லிக் கொடுத்த பல விஷயங்கள்
எனக்கு மனதில் மிக ஆழமாய்ப் பதிந்தது
அவர் சொல்லிக் கொடுக்கும் முறையின்
விசேஷம் அது
" சொல்வதெல்லாம் கீதை என்று
நினைப்பவன் அல்ல
ஆனால் கீதையை சொல்ல வேண்டும்
என்று நினைப்பவன் "
நல்லது இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள்
தவறு இருந்தால் திருத்துங்கள்
கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது
கற்றுக் கொள்ள தயாராய் இருக்கும்
நிரந்தர " மாணவன் " நான்
பெரியோர்கள் ஏற்படுத்தி வைத்த பல நல்ல விஷயங்கள்
அவைகளின் தாத்பரியங்கள் நம்மால் புறிந்துகொள்ள
முடியாமையினால் புறக்கணிக்கப் படுகின்றன
என்பது என் எண்ணம்
1. நாம் எதை அதிகமாக உபயோகிக்கிறோமோ
அது தான் நமக்குப் ப்ரச்சனையாக ஆகிறது
அது எதுவாயிருந்தாலும் சரி ,அன்பு ,பாசம், நேசம்,
"அளவுக்கு மிஞ்ஜினால் அமிர்தமும் விஷம் "
இறைவன் நம்முடைய உடலிலும்,உள்ளத்திலும்
என்ன தகுதிகள் வேண்டுமோ அத்தனையும்
சரியான விகிதாசரத்திலே வைத்து
தரப் பரிசோதனை செய்து தான் அனுப்புகிறான்
இறைவன் என்றுமே தன்னுடைய படைப்பில்
குறையான படைப்புகளை தயாரிப்பதில்லை
நாம் செய்யும் காரியங்களினாலோ,
பாவ புண்ணியங்களினாலோ
நம்முடைய தரத்தின் விகிதாசாரம்
மாறு படுகிறது என்பது என்னுடிய
தாயார் ஆர் .கமலம்மாள் அவர்களின்
பொன் மொழிகளில் ஒன்று
அதைப் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்
அதில் எதைப் பற்றி முதலில் எழுதலாம்
என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்
ஆரம்பித்து வையுங்கள்
அன்புடன்
தமிழ்த்தேனீ
அன்புள்ளங்களே
எவ்வளவு வேண்டினாலும் எத்தனை
வேண்டுதல்களைப் பரிகாரம் என்று செய்தாலும்
தீராத கர்மா ,அனுபவித்துத் தீர்க்கவேண்டியதே ,
கர்மா அப்படி இல்லையெனில்
ஏன் பிறக்கப் போகிறோம்...?
மறு பிறப்பில்லாத முக்தி என்பது
எல்லோருக்கும் கிடைத்துவிடக் கூடியது அல்ல,
காலம் காலமாய் எல்லாவித நிகழ்வுகளும், சுழற்ச்சிதான், மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கிறது.
எதையுமே மாற்ற முடியவில்லை, நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் எல்லாமே மாறிவிட்டதாய் ,
இல்லை எதுவுமே மாறவில்லை,
ஒவ்வொரு யுகத்திலும் என்னென்ன
நிகழ்ச்சிகள் நடந்ததோ அதே நிகழ்ச்சிகள்
ஒவ்வொரு யுகத்திலும் தொடர்ந்து கொண்டே
இருக்கிறது ,யுகங்கள் மாறுகிறது,
நிகழ்ச்சிகளின் வடிவமும் மாறுகிறது
ஆனால் நிகழ்ச்சிகள் மாறுவதே இல்லை
என் சிந்தனையில் எப்போதுமே இறைவன் என்பவன்
நாம் நினைதுக் கொண்டிருப்பது போல உருவமாகவோ ,
அரூபமாகவோ,கற்பனைச் சொரூபமாகவோ இருக்கிறானா,? இல்லை நம் நினைப்புக்கு
கொஞ்ஜமும் சம்பந்தமில்லாதவனாக
இருக்கிறானா...?
என்பது என்னுடைய முதல் கேள்வி...?
கண்டவர் விண்டிலர்,விண்டவர் கண்டிலர்
இதுதான் இன்றுவரை நடை முறை உண்மை
நான் இறைவனிடம் ஒரு கவிஞ்ஜன் என்கிற
முறையிலே ஒரு விண்ணப்பம் வைத்தேன்
இறைவா ஒரே ஒரு முறை தரிசனம் கொடு
யாரிடமும் நீ இருக்கிறாய் என்று
நிரூபிக்க முடியவில்லை என்று
அதற்கு இறைவன் நான் இருக்கிறேன் என்று
நிரூபிக்க வேண்டிய அவசியம் உனக்கில்லை
முதலில் நீ உணர் ,உன்னை உணர்
என்றான் (சூசகமாய் )
அன்புடன்
தமிழ்த்தேனீ
உயர் திரு வெங்கட்ராமன் அவர்களே
சகோதரி திரு விசாலம் அவர்கள் ஏற்கெனவே
என பால் அன்பு கொண்டவர்கள்
இப்போது (உயர் திரு விஸ்வநாதன்,ஆசிரியர், 'அழகி' தமிழ் மென்பொருள்)
அவருடைய தகப்பனார்,மேலும் அன்புள்ளம் கொண்ட நீங்கள்
இத்தனை பேர் எனக்கு முகமன் கூறி வரவேற்பது
எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது
சாதாரணமாக வாலிபப் பருவத்தில் திருமணம் நிச்சயமானவுடன்
"எவ்வளவு தகுதிகள் இருந்தாலும் தன்னை மதித்து பெண் கொடுக்கிறாகளா,
திருமணம் நிச்சயமாகிவிட்டதா தன்க்கும், என்று ஒரு முறையேனும் தன்னையே
கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் வாலிபனின் மன நிலையில் நான் இருக்கிறேன் "
எனக்குத் தகுதிகள் இருக்கிறதோ இல்லையோ எனக்குத் தெரியாது
அப்படி ஏதேனும் தகுதிகள் இருக்குமானால் அது அந்தப்
பரப்ரும்மத்தின் அருளே தவிற வேரு ஒன்றுமில்லை
எனறு நான் பரி பூரணமாக உணர்ந்திருக்கிறேன்
அவன் பணிக்கிறான் நான் இயங்குகிறேன்
நானும் ஒரு சாயீராம் பக்தன் தான்
இதை நான் எந்த வித இச்சகத்துக்கும் ,
அல்லது உங்களை த்ருப்திப் படுதவும் சொல்லவில்லை
நான் பிறப்பால் வைஷ்ணவன் , அடிப்படையில் சைவத்தையும் விரும்புபவன், ஏனென்றால் சைவம் ,வைணவம் ,சாக்தம் ,
எதுவாக இருந்தாலும் அவைகள் அனைத்துமே
நாம் ப்ரும்த்தை அடையும் வாகனங்களே
என்று தெளிவாக இருக்கிறேன்
மனதால் சாக்தம் என்று சொல்லக் கூடிய
சக்தி வழிபாடு மிகவும் விரும்புபவன்
எனக்கு அன்னை என்றால் மிகவும் பிடிக்கும்
நான் வாயைத் திறந்தால் முருகா என்பேன்
திருவண்ணாமலை என்னும் ஒரு கிராமம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது
அங்கு மலைமேல் குடிகொண்டிருக்கும்
ஸ்ரீனிவாசன் தான்,என் குல தெய்வம்
வருடத்துக்கு ஒரு முறை அங்கு போய்
அவரை தரிசிப்பது என் வழக்கம்,
எனக்கு எந்த ஒரு ப்ரச்சனை என்றாலும்
நேராக அம்மன் கோயிலுக்குப் போய்
அவள் எதிரில் நின்று கொண்டு
மானசீகமாக அவளிடம் என் குறைகளை
கூறிவிட்டு ஆத்ம சமர்ப்பணம் செய்துவிட்டு
வந்துவிடுவேன்
அவ்வளவுதான் மற்ற எல்லாவற்றையும்
அவள் என் அன்னை எனக்கு என் தாயாரின்
ஆர் .கமலம்மாள் ரூபமாவே காட்சி அளித்து
என் ப்ரச்சனைகளை சரி செய்துவிடுவாள்
வேறு என்ன வேண்டும் எனக்கு...?
உங்களுடன் சேர்ந்து நானும் கொஞ்ஜம்
ஆன்மீகம் கற்றுக் கொள்ளும் முயற்சியாக
இங்கு எழுத வந்தேன்
அன்புடன்
தமிழ்த்தேனீ
No comments:
Post a Comment